Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Printable November 2021 Calendar

2021´ம் ஆண்டு கார்த்திககை  29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்...
நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான்,
15 மாத தொடர் சிகிச்சை,  தெரப்பியின் பின்...
இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂

வைத்தியரின் அறிவுரைப்படி... 
முதல் இரண்டு கிழமைகள்  தினமும் 3 மணித்தியாலமும்,
மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும்,
ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால்,
தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார்.

இன்று முதல் நாள்  என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. 
இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள்.  

இருவருக்கு...  ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்.
அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால்  கால் கழட்டியதாம்,
மற்றவர்.... பல வருடமாக அதிக  சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம்.

எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் 
எனக்கு கிட்ட வர  இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. 
நான் பார்த்தவுடன், ஒளித்து  விட்டார்.  
குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது  என நினைத்தாரோ தெரியவில்லை. 😎

Bathroom-scale GIFs - Get the best GIF on GIPHY

எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள்.
ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂
உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன்.
வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. 
இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋

விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை  
அவ்வப்போது  தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன்.
உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃

பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா  என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம்.  😂 🤣

  • Like 19
  • Thanks 1
  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கோ சிறியண்ணை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள் சிறியர் .......அதிக ரிஸ்க் எடுக்காமல் மெது மெதுவாக வேலை செய்து முன்னேறவும் ........வாழ்த்துக்கள்.......!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லது.

15 மாதமா விடுப்பு கதைச்ச மனுசன் எண்டு கின்னஸில வரவில்லையா🤣.

தொடருங்கள். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலைக்கு சென்றால் உடலுக்கும்  மனநிலைக்கும்  நன்று .டாகடர் சொன்ன படி அதிகம் உடலுக்கு சிரமம் கொடுக்காமல் படிப்படியாக முன்னேறுவது தான் நன்று. வேலைக்குசெல்வதால் யாழ் கள வரவும் கலகலப்பும் பகிடியும்  குறையாது தானே ?😃  

மனதுக்கு சோகம் தருபவற் றை  மறந்து நல்லவைகளை , அறிவு பூர்வமான மற்றவர்களுக்கு பயன் தருவதை பதியுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலைக்கு போவது சந்தோசம். :thumbs_up:
உடல் நிறையில் கவனமாக இருக்கவும். உலகிலை இப்ப அதுதான் பெரிய பிரச்சனை.ஆ...ஊ எண்டால் கால களட்டி எடுக்கிறாங்கள் 😡

6 hours ago, தமிழ் சிறி said:

இன்று முதல் நாள்  என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. 
இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள்.  

இருவருக்கு...  ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்.
அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால்  கால் கழட்டியதாம்,
மற்றவர்.... பல வருடமாக அதிக  சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம்.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் 
எனக்கு கிட்ட வர  இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. 
நான் பார்த்தவுடன், ஒளித்து  விட்டார்.  
குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது  என நினைத்தாரோ தெரியவில்லை. 😎

வாழ்நாள் பூரா அந்த உணர்வு இருந்துகிட்டே இருக்கும்.

நீங்களாவே கூப்பிட்டு கதைக்கவில்லையா?

மீண்டும் வேலைக்கு போவது மிகவும் சந்தோசம்.

சில வேலையிடங்களில் இப்படி விபத்துக்களில் அகப்பட்டுக் கொண்டோரை மீண்டும் வேலையில் சேர்க்க மாட்டார்கள்.

ஒரு தொகை பணத்தைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

நல்லது நாளாந்த அனுபவங்களை எழுதுங்கள்.

  • Thanks 1
Posted

தொடருங்கள் தமிழ் சிறி.

ஒரு டவுட்டு, காலுக்கும் கியூட்டெக்ஸ் போடுகின்றீர்களா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10 கிலோ என்பது மிகவும் அதிகம்.

நாளாக நாளாக முழங்கால் வலிகள் ஏற்படலாம்.

உங்களுக்கு வீட்டிலேயே டாக்ரர் உள்ளதால் நாங்கள் எழுத தேவையில்லை.

இருந்தும் ஏதோ எழுத வேண்டும் போல இருந்தது.

1 minute ago, நிழலி said:

தொடருங்கள் தமிழ் சிறி.

ஒரு டவுட்டு, காலுக்கும் கியூட்டெக்ஸ் போடுகின்றீர்களா?

ஏன் தம்பி காலில் நகம் இல்லையா?

  • Thanks 1
  • Haha 1
Posted

தமிழ் சிறி மீண்டும் வேலைக்கு போனதை இட்டு மகிழ்ச்சி.  வேலைக்கு போனால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது தான். உங்களுக்கு தான் உங்களின் நிலை தெரியும்.  உடலின் எடை கூடினால் கால்களுக்கு தான் (முழங்காலுக்கு) அழுத்தம் கூட. ஆகவே முயற்சி செய்து எடையை குறைக்க முயலுங்கள். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி.👌

வயசு போன காலத்தில், "அங்கே ..இங்கே"ன்னு பராக்கு பார்க்காமல், சிரத்தையுடன் அலுவலக அறைக்குள் வேலையில் கவனம் செலுத்தவும். 😜

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு போட்டோவ இணைச்சா குறைஞ்சா போவியள்😍😍 நாங்களும் பார்த்து ரசிப்புத தானே தவிர 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி மீண்டும் எழுந்து நின்று காட்டியதற்கு 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததை ஒரு பெரும் சாதனையாகவே நான் பார்க்கிறேன்! தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு போட்டோவ இணைச்சா குறைஞ்சா போவியள்😍😍 நாங்களும் பார்த்து ரசிப்புத தானே தவிர 

கியூடெக்ஸ் போட்ட காலை இணைத்துள்ளார்.

@நிழலி யின் கண்களுக்கு தெரிந்தது எப்படி உங்களுக்கு தெரியவில்லை.

உடலின் ஒவ்வொரு பகுதியாக இணைப்பாரோ?

18 hours ago, நிழலி said:

ஒரு டவுட்டு, காலுக்கும் கியூட்டெக்ஸ் போடுகின்றீர்களா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

 உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று.

 தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!

ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் மறபடியும் வேலைக்கு திரும்பி சென்றதில் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 10:44, தமிழ் சிறி said:

Printable November 2021 Calendar

2021´ம் ஆண்டு கார்த்திககை  29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்...
நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான்,
15 மாத தொடர் சிகிச்சை,  தெரப்பியின் பின்...
இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂

வைத்தியரின் அறிவுரைப்படி... 
முதல் இரண்டு கிழமைகள்  தினமும் 3 மணித்தியாலமும்,
மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும்,
ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால்,
தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார்.

இன்று முதல் நாள்  என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. 
இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள்.  

இருவருக்கு...  ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்.
அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால்  கால் கழட்டியதாம்,
மற்றவர்.... பல வருடமாக அதிக  சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம்.

எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் 
எனக்கு கிட்ட வர  இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. 
நான் பார்த்தவுடன், ஒளித்து  விட்டார்.  
குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது  என நினைத்தாரோ தெரியவில்லை. 😎

Bathroom-scale GIFs - Get the best GIF on GIPHY

எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள்.
ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂
உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன்.
வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. 
இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋

விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை  
அவ்வப்போது  தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன்.
உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃

பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா  என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம்.  😂 🤣

மீண்டும் வழமைக்கு திரும்புவதையிட்டு மிகவும் சந்தோசம் சிறியண்ண..என்ன றீகாப்பிலயா காலுக்கு நிறம் தீட்டப் பழக்கி விட்டவே.✍.அப்பிடியான இடங்களில் நேரத்தை போக்காட்ட ஏதாவது பழக்கு வீனம்.👋😆

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 16:52, ஏராளன் said:

தொடருங்கோ சிறியண்ணை.

நன்றி ஏராளன். 🙂

On 13/2/2023 at 17:19, suvy said:

நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள் சிறியர் .......அதிக ரிஸ்க் எடுக்காமல் மெது மெதுவாக வேலை செய்து முன்னேறவும் ........வாழ்த்துக்கள்.......!  👍

ஆம் சுவியர், ரிஸ்க் எடுக்கிறது… ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்ற கதைகளை இனி மூட்டை கட்டி வைக்க வேண்டியதுதான். 🙂 
பட்ட சிரமங்கள் போதும். 

On 13/2/2023 at 18:26, goshan_che said:

நல்லது.

15 மாதமா விடுப்பு கதைச்ச மனுசன் எண்டு கின்னஸில வரவில்லையா🤣.

தொடருங்கள். 

நன்றி கோசான். 
இது யாழ்ப்பாணத்தில் பாவிக்கும் விடுப்பு இல்லை.
சுகயீன விடுப்பு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 18:36, பெருமாள் said:

தொடருங்கோ சிறியண்ணை.

நன்றி பெருமாள். 🙂

On 13/2/2023 at 18:36, நிலாமதி said:

வேலைக்கு சென்றால் உடலுக்கும்  மனநிலைக்கும்  நன்று .டாகடர் சொன்ன படி அதிகம் உடலுக்கு சிரமம் கொடுக்காமல் படிப்படியாக முன்னேறுவது தான் நன்று. வேலைக்குசெல்வதால் யாழ் கள வரவும் கலகலப்பும் பகிடியும்  குறையாது தானே ?😃  

மனதுக்கு சோகம் தருபவற் றை  மறந்து நல்லவைகளை , அறிவு பூர்வமான மற்றவர்களுக்கு பயன் தருவதை பதியுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.

கருத்து பகிர்விற்கு நன்றி நிலாமதி அக்கா.
இவ்வளவு காலமும் சும்மா இருந்திட்டு,
இப்போ காலையில் தெரப்பியை முடித்துக் கொண்டு வேலைக்கும் போக..
நீண்ட நேரம் எடுப்பது மாதிரி ஒரு உணர்வு. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 23:30, குமாரசாமி said:

வேலைக்கு போவது சந்தோசம். :thumbs_up:
உடல் நிறையில் கவனமாக இருக்கவும். உலகிலை இப்ப அதுதான் பெரிய பிரச்சனை.ஆ...ஊ எண்டால் கால களட்டி எடுக்கிறாங்கள் 😡

நன்றி குமாரசாமி அண்ணை.
முக்கியமாக உடல் நிறை அதிகரிக்காமல் இருக்கவும்,
தினமும் நேரத்தை ஒழுங்கு முறையில் கடைப் பிடிப்பதற்காகவுமே…
எவ்வளவு கெதியில் வேலையை ஆரம்பிக்க முடியுமோ,
அவ்வளவு கெதியில் வேலைக்குப் போக விரும்பினேன். 🙂

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 23:38, ஈழப்பிரியன் said:

வாழ்நாள் பூரா அந்த உணர்வு இருந்துகிட்டே இருக்கும்.

நீங்களாவே கூப்பிட்டு கதைக்கவில்லையா?

மீண்டும் வேலைக்கு போவது மிகவும் சந்தோசம்.

சில வேலையிடங்களில் இப்படி விபத்துக்களில் அகப்பட்டுக் கொண்டோரை மீண்டும் வேலையில் சேர்க்க மாட்டார்கள்.

ஒரு தொகை பணத்தைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

நல்லது நாளாந்த அனுபவங்களை எழுதுங்கள்.

வேலைக்கு போக முதல்… விபத்தை ஏற்படுத்தியவனுடன்
சாதாரணமாக கதைக்கலாம் என்ற மன உணர்வுடன்தான் சென்றேன்.
ஆனால்… அவன் என்னை கண்டு ஒளித்த போது,
அவனை கூப்பிட்டு கதைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டது.
தவறு செய்தவன் தானே… என்னிடம் வந்து கதைக்க வேண்டும்.
நானாக போய் கதைப்பது… சரியல்ல என்பது எனது அபிப்பிராயம். 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல். 🙂
 
On 13/2/2023 at 23:41, நிழலி said:

தொடருங்கள் தமிழ் சிறி.

ஒரு டவுட்டு, காலுக்கும் கியூட்டெக்ஸ் போடுகின்றீர்களா?

நன்றி நிழலி.
முதலே சொன்ன பின்பும்.. கடுப்பேத்துறார், மை லாட். 😂

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.