Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும்  செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய    Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில்  எழுதி இருக்கின்றார்.  

thuminsubuch

2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும்  பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில்,  நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன்  இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி  தரையில் கிடந்த  விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது  என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன்  இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

3335f5c9-9a34-4bff-8a34-61abbc53a9b7

ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்,  "குருடாகப்  பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award     12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும்  தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட  அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது.

Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின்  மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில்நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லைஎன்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார்

116a1350-4e04-4891-a516-53e2e4d66116

நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது.

Stern சஞ்சிகை  இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தேபுதனும் புதிரும்என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின்  26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில்  நான் எழுதியிருந்தேன்.

-கவி அருணாசலம்

Edited by Kavi arunasalam
சில வரிகள் சேர்க்கப்பட்டன
  • Like 12
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, Kavi arunasalam said:

துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும்  செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

thuminsubuch

2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும்  பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில்,  நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன்  இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி  தரையில் கிடந்த  விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது  என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன்  இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

3335f5c9-9a34-4bff-8a34-61abbc53a9b7

ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்,  "குருடாகப்  பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award     12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும்  தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட  அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது.

Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின்  மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில்நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லைஎன்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார்

116a1350-4e04-4891-a516-53e2e4d66116

நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது.

Stern சஞ்சிகை  இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தேபுதனும் புதிரும்என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின்  26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில்  நான் எழுதியிருந்தேன்.

-கவி அருணாசலம்

தகவல்களுக்கு நன்றிகள் பல.  ஜேர்மனியில் ஒரு தமிழனின் திறமையை  பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துமிலனின் தைரியத்தை மிகவும் போற்றுகின்றேன் ..........!  👍

நன்றி கவி அவர்களே.......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூனா அண்ணாவின் மகன் துமிலனுக்கு Stern Award விருது கிடைத்ததில் நாங்களும் பெருமைப்படுகின்றோம்🙌

துணிச்சல் மிக்க துமிலனுக்கு பாராட்டுக்கள்👏👏👏

spacer.png

  • Like 2
Posted

நல்வாழ்த்துக்கள் துமிலனுக்கு. 

all-the-best.jpg

Posted

துமிலனுக்கும் அவரது அப்பா மூனா வுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தந்தை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழ்த்துகளும் பாராட்டுகளும் துமிலனுக்கு!!

Posted

துமிலனுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்  Stern Award விருது கிடைத்ததில் நாங்களும் பெருமைப்படுகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துமிலனுக்கும் அவர் பெற்றோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kavi arunasalam said:

வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில்,  நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன்  இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி  தரையில் கிடந்த  விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது  என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன்  இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இத்தனையும் நீங்களும் எழுதியிருந்தீர்களே.

துமிலனுக்கு பாராட்டுக்கள்.

மேலும் சாதனை படைக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துமிலனுக்குப் பாராட்டுகள்👏👏

4 hours ago, Kavi arunasalam said:

தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும்  செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்

அவரது ஆர்வத்தை தடுக்காமல் ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் பாராட்டுகள்.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துமிலன் செல்வகுமாரனுக்கு பாராட்டுக்கள்.
ஊடகத்துறையில் அதுகும் பெருமை மிக்க “Stern Award“ பெறுவது சாதனையான விடயம். 👍🏽
பத்திரிகை ஆசிரியர் + எழுத்தாளர் துமிலனுக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். 💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துமிலன் செல்வகுமாரனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Posted

துமிலனுக்கு எனதும் யாழ் இணையத்தினதும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துகள் துமிலன் செல்வகுமாரன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி,

உங்கள் அனைவரது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் துமிலனுக்கும் தெரியப்படுத்துகிறேன்🙏

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழுத்தாளர் துமிலனுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.  தொடர்க அவர் பணி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழுத்தாளர் துமிலனுக்கும், பெருமைக்குரிய அவர் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்!

ஆசியப் பெற்றோர் வெளிநாடுகளில் "மருத்துவர், பொறியியலாளர், முதலீட்டு வங்கியாளர்" என்ற தடங்களில் மட்டும் தங்கள் குழந்தைகளைத் தள்ளி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பத்திரிகைத் துறையில் பிள்ளையை அனுமதித்து, பிரகாசிக்க விட்டிருக்கிறீர்கள். எழுத்தாளர் முத்துலிங்கத்தின் மகன், ஒரு National Geographic ஒளிப் படக்கலைஞராக ஒளிர்கிறார் என்று அவரது தந்தையின் ஒரு கட்டுரையில் அறிந்தேன். எல்லாத் துறைகளிலும் எங்கள் ஆட்கள் கொடி நாட்ட வேண்டும்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா….? அதுவும் தந்தை ஆண்புலி, தாய் பெண்புலி, இருவருமே எழுத்துலகிலும் கால்பதித்துப் பாராட்டுப் பெற்றவர்கள். குட்டி 16அடி பாய்ந்து அதுவும் Stern Award பெற்றதில் வியப்பேதும் இல்லை. குட்டி துமிலனை மனசார வாழ்த்துகிறோம்.🙌

நெஞ்சில் நின்றவை’ என்ற தொகுப்பில் தாயகத்தின் நினைவுகளை மூனா என்ற புனைப்பெயரில் பதிந்திருந்த துமிலனின் தந்தை செல்வகுமாரன் அவர்கள், ‘மறக்க மறுக்கும் மனசு’ தொகுப்பில் புலத்தின் வாழ்வையும் பதிந்துள்ளார். அவரது சித்திரங்கள், கேலிச்சித்திரங்களை யாழ்களமே வியந்து பாராட்டியுள்ளது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

தாய் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் எழுத்துக்களை ஐபிசி தமிழ் வானொலி உற்சாகமாக வரவேற்றுக் கொண்டுள்ளது. அவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் எனப் பலதரப்பட்டவைகள் வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் எனப் பலவற்றிலும் பரவி நிற்கின்றன.

தன் குடும்பத்திற்கு  மேலும் பெருமை சேர்த்த துமிலனுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.😀

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்ப் பெற்றோர் பெரியளவில் ஆர்வம்காட்டாத மற்றும் ஊக்குவிக்காத துறையான ஊடகத்துறையிலே யேர்மனியில் துணிச்சலான ஒரு ஊடகவியலாளராகச் சாதனைபடைத்திருப்பதோடு, பெற்றோருக்கு மட்டுமல்லத் தமிழனத்துக்கே பெருமை சேர்த்துள்ள  துமிலன் செல்வக்குமரன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துகள் துமிலன் செல்வகுமாரன்🌹.உங்கள் பணி மேலும் தொடரட்டும்.🌺

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 

எம்பிள்ளைகள் அனத்துத்துறைகளிலிலும் சிகரம் தொட வேண்டும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.