Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 09:13, கந்தப்பு said:

இதுக்கேன் மன்னிப்பு கேட்கிறீர்கள் 😄

Expand  

தவறுதலான தகவலை, கொடுத்தால்... ஜேர்மனியில் மன்னிப்பு கேட்பார்கள். 😂
அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றி விட்டது. 🤣

  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 00:51, குமாரசாமி said:

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம்

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம்

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம்

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம்

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம்

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம்

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம்

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம்

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம்

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம்

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம்

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்

வினா 27 - 34 வரை

பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 3
28) வன்னி தமிழரசு கட்சி 3
29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 2
30)திருமலை தமிழரசு கட்சி 1
31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2
32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4
33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 6
34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 5

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள்  முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? அருச்சுனா இராமநாதன் ( 2 புள்ளிகள்) 

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய் தமிழரசு கட்சி
39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி
40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி
41) கிளிநொச்சி தமிழரசு கட்சி
42) மன்னர் தமிழரசு கட்சி
43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி
44) வவுனியா தமிழரசு கட்சி
45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி
46) பட்டிருப்பு தமிழரசு கட்சி
47) திருகோணமலை தமிழரசு கட்சி
48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 2
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 4

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2
54)தமிழரசு கட்சி 8
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 15
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 100
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
 

Expand  

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் தாத்தா.......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்கவும், இந்த போட்டியில் நான் கலந்து கொள்ளமாட்டேன்.

நான் அங்கு வாழவில்லை. 

அங்குள்ளவர்களின் பிரதிபலிப்பு (மக்களும், வேட்பாளர்களும்), உணர்வுகளை இங்கிருந்து கொண்டு எடை போடுவது கூடாது, முடியாது.


கட்சி தேர்வில், தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே எனது  தெரிவு. 

தமிழ் மக்களின் நலன்களில் நான் தெளிவாக இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டி நேரம் முடிவடைந்து விட்டது. 

போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்
2) கந்தையா 57
3) வசி
4) சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்
7)alvayan
8 ) சுவி
9) வீரப்பையன்
10)புலவர்
11) அகஸ்தியன்
12) ஈழப்பிரியன்
13) புரட்சிகர தமிழ் தேசியன்
14)goshan_che
15) நுணாவிலான்
16)வில்லவன்
17)புத்தன்
18)தமிழன்பன்
19)வாதவூரான்
20)நிழலி
21)பிரபா
22)வாலி
23)நிலாமதி
24)ரசோதரன்
25)குமாரசாமி
26)சசி வர்ணம்

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 6/11/2024 at 04:57, கந்தப்பு said:

சிலரது விடைகளை பார்க்கும் போது ‘விகிதாசார அடிப்படையில் நடைபெறும் இலங்கை தேர்தலில் தேர்தல் மாவட்டமொன்றில் கட்சி ஒன்றில் வெற்றி பெரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை எவ்வாறு தேர்தல் திணைக்களம் தெரிவு செய்கிறார்கள் என்பது’  அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது .  

போட்டி முடிவு நாளுக்கு பிறகு சொல்கிறேன்.  

Expand  

தேர்தல் மாவட்டமொன்றில் அதிக வாக்குகளை பேரும் கட்சிக்கு முதலில் ஒரு இடம் வழங்குவார்கள் ( போனஸ்இடம்).    உதாரணம்யாழ்ப்பாணத்தில் இம்முறை 6 இடங்கள் . முதலிடம் வரும் அணிக்கு ஓரிடம் வழங்கப்பட மிகுதி 5 இடங்கள் விகிதாசார முறைப்படி விழும் வாக்குகள் அடிப்படையில் வழங்கப்படும்.  செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவாக வாக்குகள் பெற்ற கட்சிகளை நீக்கிவிட்டு ( இம்முறை பல கட்சிகள்சுயேட்சை அணிகள் யாழில் 5% க்கு குறைவான வாக்குகள் பெரும்) மிகுதியான வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் . மிகுதியான வாக்குகளில் ஒவ்வொரு 20% க்கும் ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்கள் (100 % இனை போனஸ் இடம் போக, இருக்கும் தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கையாக வரும் 5 இனால் வகுக்கும் போது 20% வரும்).

சில தேர்தல் மாவட்டங்களில் முதலிடம் வரும் அணி எத்தனை இடங்களை பிடிக்கும் என்று கேட்டிருந்தேன். சிலர் சில விடைகளுக்கு 1 இடம் என்று பதில் அளித்திருக்கிறார்கள். இது தவறான பதில். முதலிடம் பெரும் அணிக்கு போனஸ் இடம் கிடைப்பதினால் குறைந்தது 2 இடங்களை அவ்வணி பிடிக்கும்.  

ஓரு போட்டியாளர் தேர்தல் மாவட்டமொன்றில் முதலிடத்தில் இரண்டு கட்சிகள் தலா 2 இடங்களை பிடிக்கும் என முதலில் விடையளித்திருந்தார். போனஸ் இடம் முதலிடம் வரும் அணிக்கு வழங்கப்படுவதினால்  ஒரு அணி மட்டும்தான் அதிக இடங்களை பிடிக்கும். ( இரண்டு கட்சிகள் சரியாக சமனான வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வந்தால் சமமான இடங்கள் கிடைக்கும்.  ஆனால் இது 99.99%  சாத்தியமில்லை).

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Contact Us :: அய்யனார் இணையம்

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்...
பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு 
தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள 
பிரபல அரசியல் ஆய்வாளர்களே கணிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் நிலையில்... 

கந்தப்பு அவர்களால் மிக நுணுக்கமாக தயாரிக்கப் பட்ட 60 கேள்விகளுக்கு... 
யாழ்.கள வாசகர்களாகிய  நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று 
துணிந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த....

@வாத்தியார், @Kandiah57, @vasee, @சுவைப்பிரியன், @தமிழ் சிறி@கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலவர், @Ahasthiyan, @ஈழப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @goshan_che, @nunavilan, @villavan, @putthan, @தமிழன்பன், @வாதவூரான், @நிழலி, @பிரபா, @வாலி, @நிலாமதி, @ரசோதரன், @குமாரசாமி, @Sasi_varnam

ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள், ❤️
இந்தப் போட்டியை நடத்தி தரும்படி... கந்தப்பு அவர்களிடம் கேட்ட போது,
மறுப்பேதும் சொல்லாமல்... குறுகிய காலத்தில் கேள்விக் கொத்தை தயாரித்து 
போட்டியை நடத்திக் கொண்டிருக்கும் கந்தப்பு அவர்களுக்கும் விசேட நன்றிகள். 🙏 
 

  • Like 10
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@நீர்வேலியான்

என்ன‌ அண்ணா நீங்க‌ள் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லையா...................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 14:05, தமிழ் சிறி said:

Contact Us :: அய்யனார் இணையம்

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்...
பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு 
தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள 
பிரபல அரசியல் ஆய்வாளர்களே கணிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் நிலையில்... 

கந்தப்பு அவர்களால் மிக நுணுக்கமாக தயாரிக்கப் பட்ட 60 கேள்விகளுக்கு... 
யாழ்.கள வாசகர்களாகிய  நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று 
துணிந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த....

@வாத்தியார், @Kandiah57, @vasee, @சுவைப்பிரியன், @தமிழ் சிறி@கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலவர், @Ahasthiyan, @ஈழப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @goshan_che, @nunavilan, @villavan, @putthan, @தமிழன்பன், @வாதவூரான், @நிழலி, @பிரபா, @வாலி, @நிலாமதி, @ரசோதரன், @குமாரசாமி, @Sasi_varnam

ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள், ❤️
இந்தப் போட்டியை நடத்தி தரும்படி... கந்தப்பு அவர்களிடம் கேட்ட போது,
மறுப்பேதும் சொல்லாமல்... குறுகிய காலத்தில் கேள்விக் கொத்தை தயாரித்து 
போட்டியை நடத்திக் கொண்டிருக்கும் கந்தப்பு அவர்களுக்கும் விசேட நன்றிகள். 🙏 
 

Expand  

புலவர் சொல்படி, போட்டியை சகலரிடமும் கொண்டு சேர்த்த தண்டோரா_சிறி உங்களுக்கும் நன்றி.
 

அது சரி சந்தடி சாக்கில் உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிப்போட்டியள். இதுவும் ஜேர்மனியில் கற்றதோ🤣.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 15:18, goshan_che said:

புலவர் சொல்படி, போட்டியை சகலரிடமும் கொண்டு சேர்த்த தண்டோரா_சிறி உங்களுக்கும் நன்றி.
 

அது சரி சந்தடி சாக்கில் உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிப்போட்டியள். இதுவும் ஜேர்மனியில் கற்றதோ🤣.

Expand  

நன்றி கோசான்.

அந்த 26 பேரையும்,  தவற விட்டு விடப் படாது என்ற நோக்கில்... 
எனது பெயரையும் சேர்த்துக் கொண்டேன். 😂

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 15:23, தமிழ் சிறி said:

நன்றி கோசான்.

அந்த 26 பேரையும்,  தவற விட்டு விடப் படாது என்ற நோக்கில்... 
எனது பெயரையும் சேர்த்துக் கொண்டேன். 😂

Expand  

ஒம. மிகசரியானது    சிறப்பாக விளம்பரங்கள் செய்து  மூலை  முடுக்கியுள்ள  அனைவரையும் போட்டியிட வைத்த ஜேர்மன் தமிழ்சிறிக்கு    நன்றிகள் பல 🙏.  மேலும் வாக்களித்தபடியே    பரிசையும்.   வெற்றி பெறுபவருக்கு   பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்குவார். என. நம்புகிறேன்    🤣🤝.  

இருந்த இடத்தில் இருந்தபடி  உலகளாவிய போட்டியை. துணிவுடன். நேர்மையாக நடத்திய கத்தப்பு அண்ணைக்கும் இருகரம்  🙏குப்பி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிந்திக் கிடைத்த தகவல்களின் அடைப்படையில் என்பிபிக்கு 2 ஆசனங்கள் கிடைக்கும்போல இருக்கு,  கஜே-கயே குழுவுக்கு ஆப்புபோலத் தான் இருக்கு!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 18:48, வாலி said:

பிந்திக் கிடைத்த தகவல்களின் அடைப்படையில் என்பிபிக்கு 2 ஆசனங்கள் கிடைக்கும்போல இருக்கு,  கஜே-கயே குழுவுக்கு ஆப்புபோலத் தான் இருக்கு!😂

Expand  

ஒரு வேளை டக்கிளஸ், அங்கயன், விஜயகலாவின் முந்தைய வாக்காளர் பெருவாரியாக என் பி பிக்கு போட்டால் இது சாத்தியம்.

ஆனால் கஜே-கஜே க்கு யாழில் ஒரு சீட்டும் இல்லாது போவது - அடிப்படையையே அசைக்கும் paradigm shift. நம்பும்படியாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 19:46, goshan_che said:

ஒரு வேளை டக்கிளஸ், அங்கயன், விஜயகலாவின் முந்தைய வாக்காளர் பெருவாரியாக என் பி பிக்கு போட்டால் இது சாத்தியம்.

ஆனால் கஜே-கஜே க்கு யாழில் ஒரு சீட்டும் இல்லாது போவது - அடிப்படையையே அசைக்கும் paradigm shift. நம்பும்படியாக இல்லை.

Expand  

கஜே-கயே கோஷ்டி யாழ்கள ஆதரவாளர்களை ஒரு 30 மணிநேரமாவது ஒரு கிலிகொள்நிலையில் வைத்திருப்பம் எண்டால் விடுறீங்கள் இல்லையே கோசான் சார்!😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 19:46, goshan_che said:

ஒரு வேளை டக்கிளஸ், அங்கயன், விஜயகலாவின் முந்தைய வாக்காளர் பெருவாரியாக என் பி பிக்கு போட்டால் இது சாத்தியம்.

ஆனால் கஜே-கஜே க்கு யாழில் ஒரு சீட்டும் இல்லாது போவது - அடிப்படையையே அசைக்கும் paradigm shift. நம்பும்படியாக இல்லை.

Expand  

TNPF  இன் வாக்கு வாங்கி நிரந்தரமானது எந்தக் கட்சியாலும் பிரித்தெடுக்க முடியாது  எனக் கூற முடியாது.
இன்றைய நிலையில் சுயேட்சைக் குழுக்களால் சில ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட இருக்கின்றன.
அதன் தாக்கத்தினால் குறைந்தது  ஒரு வேட்பாளர் வெல்லும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 21:44, வாத்தியார் said:

TNPF  இன் வாக்கு வாங்கி நிரந்தரமானது எந்தக் கட்சியாலும் பிரித்தெடுக்க முடியாது  எனக் கூற முடியாது.
இன்றைய நிலையில் சுயேட்சைக் குழுக்களால் சில ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட இருக்கின்றன.
அதன் தாக்கத்தினால் குறைந்தது  ஒரு வேட்பாளர் வெல்லும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது

Expand  

நீங்கள் சொல்வதும் சரிதான்.

 

Posted

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1978 இல் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறை ஆகும். இலங்கை அரசியல் சட்டத்தின் 14 ஆவது அத்தியாயம் இது தொடர்பான விடயங்கள் பற்றிக் கூறுகின்றது. இலங்கையில், நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம் முறைப்படியே நடைபெறுகின்றன.

தொடக்கத்தில் இலங்கையில் இது ஒரு மூடிய கட்சிப் பட்டியல் முறையாகவே அறிமுகப்படுத்தபட்டது எனினும், பின்னர் தேர்தல்கள் எதுவும் நடைபெற முன்னரே உடனடியாக இது ஒரு திறந்த கட்சிப் பட்டியல் முறையாக மாற்றப்பட்டது.

தேர்தல் மாவட்டங்கள்

[தொகு]

இலங்கையில் தேர்தல்கள் தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களைப் பெறுகின்றன. நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 20 தேர்தல் மாவட்டங்கள் நாட்டின் நிர்வாக மாவட்ட எல்லைகளையே தங்கள் எல்லைகளாகவும் கொண்டுள்ளன. ஏனைய இரண்டு மாவட்டங்களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களையும், வன்னித் தேர்தல் மாவட்டம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களையும் தம்முள் அடக்கியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு உள்ளூராட்சிச் சபைகளினதும் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒரே அலகாகக் கொள்ளப்படுகின்றது.

வேட்பாளர்கள்

இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் கட்சிப் பட்டியல் மூலம் அல்லது சுயேச்சைக் குழுக்களின் பட்டியல் மூலமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் அங்கீகாரம் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் தாங்கள் நியமிக்கும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களுடன் தங்கள் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வார்கள். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கும் தனித்தனியாக நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு குழுவின் பட்டியலிலும், அந்தந்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை விட மூன்று மேலதிக வேட்பாளர்கள் அடங்கியிருக்கவேண்டும்.

வாக்களிப்பு முறைமை

இலங்கையில் வாக்களிப்பு திறந்த கட்சிப் பட்டியல் முறையில் நடைபெறுவதால், கட்சியிலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் ஒழுங்குவரிசையைக் கட்சிகள் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு வாக்காளரும், தாங்கள் விரும்பிய கட்சி அல்லது குழுவுக்கும், அக் கட்சி அல்லது குழுவினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் குறைந்தது மூன்று பேருக்கும் வாக்களிக்க முடியும். இவ்வாறு தனிப்பட்ட வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களினதும் ஒழுங்கு வரிசை தீர்மானிக்கப்படுகின்றது.

கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கைகளைத் தீர்மானித்தல்

முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவுக்குரிய போனஸாக அக்கட்சியிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார்.

உறுப்பினர்களை ஒதுக்குவதற்காகத் தகுதி பெறும் ஒரு கட்சியோ அல்லது குழுவோ குறைந்த பட்சம் மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பகுதியையாவது (5%) பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு பெறாத கட்சிகளும், குழுக்களும் நீக்கப்படும்.

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து தகுதி பெறாத கட்சிகளும் குழுக்களும் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும். மிகுதி, அத்தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து ஒன்றைக் குறைத்து வரும் எண்ணினால் பிரிக்க வரும் ஈவு, ஆரம்பச் சுற்றில் ஒரு உறுப்பினரைப் பெறுவதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கையாகும். மேற்படி ஈவினால் தகுதிபெற்ற கட்சிகளும், குழுக்களும் பெற்ற வாக்குகளை வகுக்கும் போது கிடைக்கும் ஈவுகளுக்குச் சமனான எண்ணிக்கையில் முதற் சுற்றில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள்.

முதற் சுற்றின் பின்னர் இன்னும் ஒதுக்குவதற்கு இடங்கள் இருப்பின் முதற் சுற்றில் வகுக்கும்போது கிடைத்த மிச்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். கூடுதலாக மிச்சம் கிடைத்த கட்சிக்கு மிகுதியாகவுள்ள இடங்களில் முதலாவது இடம் வழங்கப்படும். முற்றாக ஒதுக்கி முடியும் வரை ஏனைய இடங்களும் இவ்வாறே கூடிய மிச்சம் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படும்.

உறுப்பினர் தெரிவு

ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு கட்சி அல்லது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அக்கட்சி அல்லது குழுவில் கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

எடுத்துக்காட்டு

ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டம் ஒன்றின் தேர்தலில் வாக்களிப்பு விபரங்கள் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம்-X
  • உறுப்பினர் தொகை - 7
  • அளிக்கப்பட்ட வாக்குகள் - 288,705
கட்சி பெற்ற வாக்குகள் வீதம்
கட்சி-A 111747 38.71%
கட்சி-B 76563 26,52%
கட்சி-C 55533 19.24%
கட்சி-D 42121 14.59%
சுயேச்சை-1 1611 0.56%
சுயேச்சை-2 1130 0.39%

மேலே காணப்படும் தேர்தல் முடிவுகளின்படி கட்சி A கூடிய வாக்குகள் பெற்றிருப்பதால் இத் தேர்தல் மாவட்டத்துக்குரிய போனஸ் இடம் கட்சி-A க்கு வழங்கப்படும்.

இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 5% இலும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் அவை உறுப்பினரைப் பெறும் தகுதியை இழக்கின்றன.

அவ்விரு குழுக்களும் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளிலிருந்து கழிக்கப்படும்.

288,705 - 1,611 - 1,130 = 285,964 வாக்குகள்

தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை = 7, ஒரு உறுப்பினர் ஏற்கனவே கட்சி A இற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மிகுதி = 6. எனவே:

ஒரு உறுப்பினருக்குரிய வாக்குகள் = 285,964 / 6 = 47,661

கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒரு உறுப்பினருக்குரிய வாக்கினால் வகுக்க:

கட்சி - ஈவு மிச்சம்
கட்சி-A 111,747 / 47,661 2 16,425
கட்சி-B 76,563 / 47,661 1 28,902
கட்சி-C 55,533 / 47,661 1 7,872
கட்சி-D 42,121 / 47,661 0 42,121

இப்பொழுது கட்சி நிலைவரம்:

கட்சி போனஸ் சுற்று மொத்தம்
1 2
கட்சி-A 1 2 - 3
கட்சி-B 0 1 - 1
கட்சி-C 0 0 - 1
கட்சி-D 0 0 - 0

மொத்தம் 5 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 2 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இனி ஒவ்வொரு கட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும். கட்சி-D ஆகக்கூடிய மிச்சமாக 42,121 வாக்குகளையும், கட்சி-B அடுத்ததாக 28,902 வாக்குகளையும் கொண்டுள்ளன. இதனால் கட்சி-D க்கும், கட்சி-B க்கும் தலா ஒரு உறுப்பினர் கிடைக்கும்.

முடிவில் கட்சி நிலைவரம்:

கட்சி போனஸ் சுற்று மொத்தம்
1 2
கட்சி-A 1 2 0 3
கட்சி-B 0 1 1 2
கட்சி-C 0 1 0 1
கட்சி-D 0 0 1 1

 

https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_விகிதாசாரப்_பிரதிநிதித்துவத்_தேர்தல்_முறை

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

General Election 2024 Sri Lanka 🇱🇰: 🧭 NPP - 124 (+/- 7) ☎️ SJB - 53 (+/- 5) 🐘 NDF - 24 ( +/- 5) 🏠 ITAK - 11 (+/- 3) 🌷 SLPP - 2 (+/- 2) ⭐️SB - 2 (+/- 2) 🏳️Others - 9 (+/- 3) The results are based on an online survey conducted from November 7th to 11th, 2024, involving a sample of 870 Sri Lankan adults. The turnout model used in these findings was developed by analyzing differences in voter turnout from the 2010 and 2020 general elections, each of which was held shortly after a presidential election. This poll has a margin of error of ±5% at a 95% confidence level.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  On 13/11/2024 at 18:48, வாலி said:

பிந்திக் கிடைத்த தகவல்களின் அடைப்படையில் என்பிபிக்கு 2 ஆசனங்கள் கிடைக்கும்போல இருக்கு,  கஜே-கயே குழுவுக்கு ஆப்புபோலத் தான் இருக்கு!😂

Expand  

ஆசைப்படுங்க வாலி தப்பேயில்லை.இன்று இரவுக்குள் முடிவுகள் ஒலளவுக்கு வந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைத் தேர்தல் முறை ஒரு சிறப்பான தேர்தல் முறை என்று நினைக்கிறேன். தொகுதி வாரி முறையில் ஒருவர் 51 வீதமான வாக்குகளையும் அடுத்தவர் 30 வவீதமான வாக்குகளையும் அடுத்தவர் 19 வீதமான வாக்குகளையும் (5 வீதத்துக்கு குநைவான வாக்குகளை எடுத்தவர்களைக்கழித்த பின்) எடுத்தால் 3 கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும் விகிதாசாரப்படி பிரதிநிதிகள் கிடைக்கும். இது நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி ஆட்சி என்ற ஏகபோகத்தைக் குறைக்கும் நினைத்தபடி சட்டங்களை இயற்ற முடியாது. சிறந்த ஜனநாயகத் தேர்வு முறை.விருப்பு வாக்கு முறையில் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டாலும் கட்சிக்குள் பிழைவிடுபவர்களை மக்களே தண்டிக்கும் முறையும் இதில் இருப்பதால் வீருப்பு வாக்கு முறையும் ஏற்கத்தக்கதே.)கட்சித்தலமை தனது விருப்புக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெுடக்க முடியாது. ஆகால் வேட்பாளர்களைத் தெரிவதில் கட்கட்சித் தலமையின் வீருப்பு வெறுப்யுகனள முன்னிலப்படுத்தப்படும். இருந்தாலும் வாக்களிக்கும் மக்கள் அதனையும் சீர்தூக்கிப் பார்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைத் தேர்தலில் முக்கியமான குறைபாடு ஒன்றுள்ளது. தொகுதிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் என எவரும் இல்லை, மாவட்டத்திற்கு குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே  இருப்பர். இதனால் தொகுதிக்குரிய பிரச்சனைகளை எந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிடுவது எனத் தெரியாது. தொகுதியின் வளர்ச்சி பாதிக்கப்படும், மாவட்டம் முழுவதும் வாக்குக் கேட்டுச் செல்ல வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா 40 ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஊர்காவற்றுறை தொகுதியில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 

16 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) சுவைபிரியன் - 2 புள்ளிகள்
2) தமிழ்சிறி - 2 புள்ளிகள்
3) alvayan - 2 புள்ளிகள்
4)வீரப்பையன் - 2 புள்ளிகள்
5)புலவர் - 2 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 2 புள்ளிகள்
7) புரட்சிகர தமிழ் தேசியன் - 2 புள்ளிகள்
😎 goshan_che - 2 புள்ளிகள்
9) நுணாவிலான் - 2 புள்ளிகள்
10)வில்லவன் - 2 புள்ளிகள்
11)புத்தன் - 2 புள்ளிகள்
12)நிழலி - 2 புள்ளிகள்
13) பிரபா - 2 புள்ளிகள்
14)வாலி - 2 புள்ளிகள்
15)நிலாமதி - 2 புள்ளிகள்
16)ரசோதரன் - 2 புள்ளிகள்
17) வாத்தியார் - 0
18)கந்தையா 57 - 0
19)வசி - 0
20) கிருபன் - 0
21) சுவி - 0
22) அகத்தியன் - 0
23)தமிழன்பன் - 0
24) வாதவூரான் - 0
25)குமாரசாமி - 0
26)சசி வர்ணம் - 0

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா 41 தமிழரசு கட்சி
கிளிநொச்சி தொகுதியில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 

24 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) தமிழ்சிறி - 4 புள்ளிகள்
2) alvayan - 4 புள்ளிகள்
3) வீரப்பையன் - 4 புள்ளிகள்
4) புலவர் - 4 புள்ளிகள்
5) ஈழப்பிரியன் - 4 புள்ளிகள்
6) புரட்சிகர தமிழ் தேசியன் - 4 புள்ளிகள்
7) goshan_che - 4 புள்ளிகள்
😎 நுணாவிலான் - 4 புள்ளிகள்
9) வில்லவன் - 4 புள்ளிகள்
10) புத்தன் - 4 புள்ளிகள்
11) நிழலி - 4 புள்ளிகள்
12) பிரபா - 4 புள்ளிகள்
13) வாலி - 4 புள்ளிகள்
14) நிலாமதி - 4 புள்ளிகள்
15) ரசோதரன் - 4 புள்ளிகள்
16)வாத்தியார் -  2 புள்ளிகள் 
17) கந்தையா 57 - 2 புள்ளிகள்
18) வசி -  2 புள்ளிகள்
19) சுவைபிரியன் - 2 புள்ளிகள்
20) கிருபன் - 2 புள்ளிகள்
21) சுவி - 2 புள்ளிகள்
22) அகத்தியன் - 2 புள்ளிகள்
23) வாதவூரான் - 2 புள்ளிகள்
24) குமாரசாமி - 2 புள்ளிகள்
25) சசி வர்ணம் - 2 புள்ளிகள்
26) தமிழன்பன் - 0

இதுவரை 40,41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

வினா 38 தேசிய மக்கள் சக்தி
 மானிப்பாய்தொகுதியில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 

சுவைபிரியன் சரியாக பதில் அளித்திருக்கிறார்.

1)சுவைபிரியன் - 4 புள்ளிகள்

2)தமிழ்சிறி - 4 புள்ளிகள்
3) alvayan - 4 புள்ளிகள்
4) வீரப்பையன் - 4 புள்ளிகள்
5) புலவர் - 4 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 4 புள்ளிகள்
7) புரட்சிகர தமிழ் தேசியன் - 4 புள்ளிகள்
8 )goshan_che - 4 புள்ளிகள்

9)  நுணாவிலான் - 4 புள்ளிகள்
10) வில்லவன் - 4 புள்ளிகள்
11)புத்தன் - 4 புள்ளிகள்
12)நிழலி - 4 புள்ளிகள்
13)பிரபா - 4 புள்ளிகள்
14)வாலி - 4 புள்ளிகள்
15) நிலாமதி - 4 புள்ளிகள்
16)ரசோதரன் - 4 புள்ளிகள்
17)வாத்தியார் -  2 புள்ளிகள் 
18)கந்தையா 57 - 2 புள்ளிகள்
19)வசி -  2 புள்ளிகள்
20) கிருபன் - 2 புள்ளிகள்
21) சுவி - 2 புள்ளிகள்
22) அகத்தியன் - 2 புள்ளிகள்
23) வாதவூரான் - 2 புள்ளிகள்
24) குமாரசாமி - 2 புள்ளிகள்
25) சசி வர்ணம் - 2 புள்ளிகள்
26) தமிழன்பன் - 0

இதுவரை 38,40,41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்

 
  •  
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுர சகோதரயவின் (சகாவு) அலையில் என்னுடைய புள்ளிகளும் கரைந்துவிட்டன😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வினா 39 தேசிய மக்கள் சக்தி
 உடுப்பிட்டி முதல் இடம் பிடித்திருக்கிறது. 

சுவைபிரியன், தமிழ்சிறி , வீரப்பையன் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1)சுவைபிரியன் - 6 புள்ளிகள்
2)தமிழ்சிறி - 6 புள்ளிகள்
3) வீரப்பையன் - 6 புள்ளிகள்
4) Alvayan - 4 புள்ளிகள்
5) புலவர் - 4 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 4 புள்ளிகள்
7) புரட்சிகர தமிழ் தேசியன் - 4 புள்ளிகள்
8 )goshan_che - 4 புள்ளிகள்
9)  நுணாவிலான் - 4 புள்ளிகள்
10) வில்லவன் - 4 புள்ளிகள்
11)புத்தன் - 4 புள்ளிகள்
12)நிழலி - 4 புள்ளிகள்
13)பிரபா - 4 புள்ளிகள்
14)வாலி - 4 புள்ளிகள்
15) நிலாமதி - 4 புள்ளிகள்
16)ரசோதரன் - 4 புள்ளிகள்
17)வாத்தியார் -  2 புள்ளிகள் 
18)கந்தையா 57 - 2 புள்ளிகள்
19)வசி -  2 புள்ளிகள்
20) கிருபன் - 2 புள்ளிகள்
21) சுவி - 2 புள்ளிகள்
22) அகத்தியன் - 2 புள்ளிகள்
23) வாதவூரான் - 2 புள்ளிகள்
24) குமாரசாமி - 2 புள்ளிகள்
25) சசி வர்ணம் - 2 புள்ளிகள்
26) தமிழன்பன் - 0

இதுவரை 38 - 41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 8. )

Edited by கந்தப்பு
  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.