Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து விடுதலை இயக்கங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் ஆயுதவிடுதலைப்போர் தொடங்கிய காலத்தில் இலங்கையரசிற்கு எதிரான உணர்ச்சி வேகத்தில் ஈழத்தில் 33 போராட்ட இயக்கங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அவை எல்லாமே அன்றைய காகட்டத்தில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். அதனாலேயோ தமிழகத்தில் புலிகள் அமைப்பு பல சந்கடங்களை சந்தித்தது. அப்படி தொடங்கிய இயக்கங்களின் பெயர்களை எனது நினைவில் வந்தவற்றை இங்கு தருகிறேன்.

1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.( P.L.O.T )தலைவர் உமாமகேஸ்வரன். வறுத்தலைவிளான் யாழ்ப்பாணம்

2)தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O )தலைவர் சிறீ சபாரத்தினம். கல்வியங்காடு யாழ்ப்பாணம்.

3)ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி '(E.P.R.L.F. )தலைவர் பத்மநாபா .காங்கேசன்துறை யாழ்ப்பாணம்.

4)தமிழீழ விடுதலைப்புலிகள்(L.T.T.E ) தலைவர் பிரபாகரன்.வல்வெட்டித்துறை .யாழ்ப்பாணம்.

5)ஈழமக்கள் புரட்சிகர மாணவர் இயக்கம்( E.R.O.S. ) அமைப்பாளர் இரட்ணசபாபதி. இணுவில் யாழ்ப்பாணம்.

மேலேயுள்ள இயக்கங்கள் தான் ஆரம்பகாலத்தின் முதல் முக்கிய குழுக்களாகவும் இந்தியாவிடம் பயிற்சி மற்றும் உதவிகள் பெற்றதும். மற்றும் வேறு வெளிநாட்டு விடுதலைப்போராட்ட அமைப்புக்களிடம் தொடர்புகளையும் பயிற்சிகளையும் கொண்டிருந்த இயக்கங்களும் ஆகும். அவைகளை 84ம் ஆண்டளவில் உறுப்பினர் தொகைகளை அடிப்படையாக வைத்து வரிசைப்படுத்தியுள்ளேன். இனி மற்றையவை.

6)தமிழீழ இராணுவம்.( T.E.A ) தலைவர். மகேஸ்வரன்.புங்குடுதீவு.யாழ்ப

்பாணம்.

7)தமிழீழ விடுதலை இராணுவம்.(T.E.L.A ) தலைவர் ஒபறோய் தேவன். கோண்டாவில்.யாழ்ப்பாணம்.

8)தமழீழ விடுதலை இராணுவம் 7 ( 7.T.E.L.A ) இராஜன். ஊர்பெயர் தெரியாது.யாழ்ப்பாணம்.இது T.E.L.A. இயக்கத்திலிருந்து 7 பேர் பிரிந்து போய் தொடங்கியது.

9)தமிழீழ விடுதலை அமைப்பு.( T.E.L.E )தலைவர்.ஜெகன்.அராலி .யாழ்ப்பாணம்.

10)தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(N.L.F.T )தலைவர்.விசுவானந்த தேவன். கல்லுவம் .யாழ்ப்பாணம்.

11)மக்கள் தேசிய விடுதலை முன்னணி(P.L.F.T)

12)தமிழர் பேரவை

13) R.A(செம்படை)

14) C.A(நாகபடை)

15)R.E.N.A

16)R.E.L.E

17)T.E.N.A

18)புதியபாதை. .(தலைவர் பெயர் சுந்தரம்.யாழ். மூளாய்)

19)R.E.L.O

20)தீப்பொறி

21)T.E.D.F(தமிழீழ பாதுகாப்புப்படை)

22)T.P.S.O.(தமிழ் மக்கள் பாதுகாப்பு அமைப்பு

23)T.E.E.F.(தமிழீழ கழுகுகள் முன்னணி)

24)T.E.C. (தமிழீழக் கொமாண்டோக்கள்)

25.)E.F.(கழுகுப்படை)

26) S.R.S.F (சமூகப் புரட்சிப்படை)

27) தமிழ் மாணவர் பேரவை . இது 1970 ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆரம்பத்தில் அரசியல் ரீதியான போராட்டஙகளையே நடாத்தியது. பின்னர் இந்த அமைப்பும் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆயுதப்போராட்டமே தீர்வு என முடிவெடுத்தனர். இதன் அமைப்பாளர்.சத்தியசீலன்.உரும்

பிராய் யாழ்ப்பாணம்.

மேலும் ஆறு இயக்கங்களின் பெயர் எனக்கு நினைவில் இல்லை.. யாருக்காவது நினைவிலிருந்தால் தெரிவியுங்கள்.

இனி தமிழ் மற்றும் தமிழீழம் என்கிற பெயர்களை வைத்துக்கொண்டு இலங்கை மற்றும் இந்திய அரசுகளிற்கு தொண்டு செய்வதற்காகவே அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள்.

1.E.P.D.P........ ஈ.பி.ஆர்.எல்.எவ்..அமைப்பிலிருந

இன்று பொதுமக்கள் இறந்து கொண்டுள்ளார்கள் என்றும் இல்லாதவாறு... இந்த இருகிழமையாய்... நீங்கள்... :(:) :)

(ஒருமையில் உங்களை சொல்லவில்லை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பொதுமக்கள் இறந்து கொண்டுள்ளார்கள் என்றும் இல்லாதவாறு... இந்த இருகிழமையாய்... நீங்கள்... :(:) :)

(ஒருமையில் உங்களை சொல்லவில்லை)

பரவாயில்லை வலைநண்பனே இந்த இரண்டு கிழைமைகளாய் நான் என்னசெய்கிறேன் என்பதனை ஒருமையிலும் நீங்கள் கேட்கலாம். என்ன கேட்கப்போகின்றீர்கள்?????

  • கருத்துக்கள உறவுகள்

PROTEG என்று ஒன்று இருந்ததாக ஞாபகம்..! [Protection of Tamil Eelam from Genocide] :):)

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் வலைப்பதிவில் இடம்பெறும் ஆக்கங்களை சாத்திரி தமிழ் மணத்தில் இணைப்பதுண்டு. இதனால் தமிழகத்தமிழர்கள் வாசிப்பதுண்டு. காசுக்காக காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்கள், காங்கிரஸ் ஆதரவாளார்கள், புலி எதிர்ப்பு இந்தியர்கள் தமிழ் நாட்டில் மற்றைய இயக்கங்கள் செய்த வன்முறைகளை எல்லாம் புலி செய்தது என்று செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.

வன்னியில் தற்பொழுது கொல்லப்படும் செய்திகளை வெளியிடுவோரை புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் ஏற்படும் குழப்பத்தினைத் தவிர்க்கத்தான் சாத்திரி இவ்வாக்கத்தை எழுதுகிறார் என நினைக்கிறேன். யாழில் வரும் செய்திகளை பல தமிழ்நாட்டு தமிழர்களும் வாசிப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி '(E.P.R.L.F. )தலைவர் பத்மநாபா .காங்கேசன்துறை யாழ்ப்பாணம்

இவர் இணுவிலை சேர்ந்தவர் என நினைக்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இணுவிலை சேர்ந்தவர் என நினைக்கிறேன். :)

இல்லை காங்கேசன் துறை.

தமழீழ விடுதலை இராணுவம் 7 ( 7.T.ஏ.ள்.ஆ ) இராஜன். ஊர்பெயர் தெரியாது - புன்னாலைக்கட்டுவனாக இருக்கலாம்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெனா (TENA)- தலைவர் அமிர்தலிங்கம் பகீரதன் (ரவி), பண்ணாகம் (தந்தை) அல்லது குரும்பசிட்டி (தாய்), யாழ்ப்பாணம்

மக்கள் தேசிய விடுதலை முன்னணி(P.L.F.T) -தமிழ்மாறன், கரவெட்டி, யாழ்ப்பாணம்

Edited by MI7

எனக்கும் அது தெரியும் கந்தப்பு... நான் அந்த இயக்கங்களும்... நம்ம இயக்கமும்... நாமும்... இப்படியே இயலாமல் பார்த்துக்கொண்டுள்ளோமே என்ற இயலாமையின் வருத்தத்தில் அப்படி எழுதினேன் மன்னிக்க... ( உலகமும்.... நாமும்... அரசும்... மக்களின் உயிர்களில் இப்போ போராட்டம் நடத்துகிறோம்... அதை எம்மால் மறுக்கவும்... மறைக்கவும் .... முடியவில்லையே....) :icon_idea::)

Edited by Netfriend

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் வலைப்பதிவில் இடம்பெறும் ஆக்கங்களை சாத்திரி தமிழ் மணத்தில் இணைப்பதுண்டு. இதனால் தமிழகத்தமிழர்கள் வாசிப்பதுண்டு. காசுக்காக காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்கள், காங்கிரஸ் ஆதரவாளார்கள், புலி எதிர்ப்பு இந்தியர்கள் தமிழ் நாட்டில் மற்றைய இயக்கங்கள் செய்த வன்முறைகளை எல்லாம் புலி செய்தது என்று செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.

வன்னியில் தற்பொழுது கொல்லப்படும் செய்திகளை வெளியிடுவோரை புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் ஏற்படும் குழப்பத்தினைத் தவிர்க்கத்தான் சாத்திரி இவ்வாக்கத்தை எழுதுகிறார் என நினைக்கிறேன். யாழில் வரும் செய்திகளை பல தமிழ்நாட்டு தமிழர்களும் வாசிப்பதுண்டு.

கந்தப்பு நீங்கள் சொன்னது போல இது தமிழகத்து உறவுகளிற்காகவே எனது வலைப்பூவில் எழுதினேன். ஏனெனில் இன்னமும் தமிழகத்து உறவுகள் பலர் புலிகளிற்கும் மற்றைய இயக்கங்களிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள். உதாரணமாக பல காலங்களாக தமிழகத்து கருத்தளர்கள் தொடர்ந்து புலிகள்தான் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு குண்டு வைத்தனர் என்று தொடர்ச்சியாக எழுதி வந்தனர்.பின்னர் நான் அதை புலிகள் செய்யவில்லையென விபரமாக எழுதிய பின்னர் இப்பொழுது யாரும் அது பற்றி கருத்து எழுதுவதில்லை. அதுபோலத்தான் இன்னொருத்தர் எழுதினார் ரெலோ செய்த விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்று. அதற்கும் தகுந்த பதில் கொடுத்திருந்தேன்.அதற்கு பிறகு அவரது பதிவில் அதைப்பற்றி எழுதவேயில்லை. எனவேதான் இதுவும் தமிழகத்து உறவுகளிற்கான ஒரு பதிவுதான் அதனை இங்கும் இட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியாரின் கருத்துப் படி பார்த்தால் போராப் புறப்பட்ட 33 இயக்கத் தலைவர்களும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர்கள் போல தெரிகிறது.இந்த ஆக்கம் தொடர்பாக சாத்திரியாரிடம் எனது சந்தேகத்தை கேட்கலாமா?

சாத்திரியின் ஆக்கம் வரவேற்கப்பட வேண்டியதே. நாங்கள் அந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்தாலும் சிறுவயதென்பதால் எல்லா விபரங்களௌம் தெரியாது. மேலும் புலத்தில் பிறந்தவர்களுக்கும் தமிழ்நாட்டு அன்பர்களுக்கும் இது ஒரு விளக்கத்தை கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் படையென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதுவும் இந்த பட்டியலில் அடங்குமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியாரின் கருத்துப் படி பார்த்தால் போராப் புறப்பட்ட 33 இயக்கத் தலைவர்களும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர்கள் போல தெரிகிறது.இந்த ஆக்கம் தொடர்பாக சாத்திரியாரிடம் எனது சந்தேகத்தை கேட்கலாமா?

உண்மைதான் ரதி போராட்ட இயக்கங்களில் நாகபடையைத் தவிர மற்றையவையெல்லாமே யாழ்குடாநாட்டு இளைஞர்களால்தான் தொடங்கப்பட்டது. நாகபடை மட்டக்களப்பில் தாராகி சிவராமும் வேறு சிலரும் தொடங்கினார்கள். பின்னர் புளொட்டில் இணைந்தனர்.இதுபற்றி விபரமாக எழுதப்போனால் சாத்திரி பிரதேசவாதத்தை கிழப்புறாணென்டு பிரச்சனை வரும். அதாலை அமுக்கி வாசிப்பம். :wub:

படு கவனமாகத்தான் இருக்கிறியள் :D

புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலின் முதல் பாகத்தில் ஈழத்து இயக்கங்களும் அதன் தலைமைகளின் பெயர்களும் விபரமாக குறிக்கப் பட்டு இருக்குது. புஸ்பராஜாவிடம் இருந்த அரசியல் பார்வையிலும் நிலைப்பாட்டிலும் நான் வேறுபட்டு இருந்தாலும், விடுதலை இயக்கங்களின் ஆரம்ப காலம் பற்றி தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படு கவனமாகத்தான் இருக்கிறியள் :wub:

புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலின் முதல் பாகத்தில் ஈழத்து இயக்கங்களும் அதன் தலைமைகளின் பெயர்களும் விபரமாக குறிக்கப் பட்டு இருக்குது. புஸ்பராஜாவிடம் இருந்த அரசியல் பார்வையிலும் நிலைப்பாட்டிலும் நான் வேறுபட்டு இருந்தாலும், விடுதலை இயக்கங்களின் ஆரம்ப காலம் பற்றி தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது

நிழலி அந்தப் புத்தகம் நானும் படித்தேன் அதில் பலவற்றை திரித்து எழுதியுள்ளார். அதே நேரம் தானே ஈழப:போராட்டத்தின் முக்கியகாரண கர்த்தா என்பதைபோலவும் தானே பலரிற்கு வழிகாட்டியாக இருந்தது போலவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறார்.அவரத

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='sathiri' date='Feb 17 2009, 10:19 PM' post='491153'

9)தமிழீழ விடுதலை அமைப்பு.( T.E.L.E )தலைவர்.ஜெகன்.அராலி .யாழ்ப்பாணம்

கந்தப்பு நீங்கள் சொன்னது போல இது தமிழகத்து உறவுகளிற்காகவே எனது வலைப்பூவில் எழுதினேன்.

தமிழகத்து உறவுகளை விட இந்த விபரங்களை அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் நாங்களே. சிங்கள பேரினவாதம் என்ற ஒரே ஒரு சக்தி எம்மை ஒடுக்கிய போது அதை எதிர்க்க ஏன் இத்தனை பிரிவுகளாக எம்மவர் புறப்பட்டனர், இதற்குரிய அடிப்படை என்ன, ஏன் எம்மால் ஒன்று பட முடியவில்லை, ஏன் இதன் ஆணி வேர்கள் எல்லாம் யாழை மையம் கொண்டிருந்தது, ஐக்கியப் பட முடியாத மன இறுக்கத்துக்கு என்ன காரணம், இதன் விழைவுகள் என்ன, போராட புறப்பட்ட தலைமுறை இப்படி இருந்ததெனில் அதற்கு முந்திய தலைமுறையின் வழித்தடம் என்ன வழிகாட்டல் என்ன, இதன் ஒட்டு மொத்த விழைவு என்ன, எமது அடிப்படை பிரச்சனை என்ன, இனி எமது இனம் எவ்வாறு இருக்க வேண்டும், இல்லாவிடில் என்ன நடக்கும், இப்படி நூறு கேள்விகளுக்கான விடையின் வெற்றிடத்தை தான் இன்று வன்னி மக்களின் சதைகளும் உயிர்களும் குருதியும் நிரப்புகின்றது. இன்றும் சிங்களம் என்ற ஒரே ஒரு பேரினவாத சக்தி தான் அன்றும் அது தான் .நாம் தான் என்றும் சிதைந்து கிடக்கின்றோம். எதிலும் சிதைந்து கிடக்கின்றோம். எமது இனத்தின் தவறுகளின் பாவங்ளுக்காக வன்னி மக்கள் சிலுவையில் அறைப்படுகின்றனர். இனியும் எமக்குள் ஐக்கியம் இல்லை எனில் இனம் மட்டுமில்லை மனிதன் என்ற அடயாளமே எமக்கு கேள்விக்குறியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து உறவுகளை விட இந்த விபரங்களை அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் நாங்களே. சிங்கள பேரினவாதம் என்ற ஒரே ஒரு சக்தி எம்மை ஒடுக்கிய போது அதை எதிர்க்க ஏன் இத்தனை பிரிவுகளாக எம்மவர் புறப்பட்டனர், இதற்குரிய அடிப்படை என்ன,

எங்கள் வீட்டுச்சந்தியில் நின்று போவோர் வருவோருக்கு சண்டித்தனம் பண்ணல், கூலிக்கு அடிபடல், கூலிக்கு கொலை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுவொன்று திடீரென்று காணாமல் போனது. இயக்கம் ஒன்று இனிமேல் உங்களை இந்தப்பக்கம் காணக்கூடாது என்று மிரட்டியதாகவும் அதனாலேயே இவர்கள் காணாமல் போனார்கள் என்ற வதந்தி உலாவியது.

மூன்று மாதங்களின் பின் அவர்கள் திரும்பி வந்தார்கள். ஒவ்வொரு நாளும் அயலில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரி முடியும் போது அந்த பாடசாலைக்கு முன் நிற்பார்கள். இப்போது அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் தானியங்கி துப்பாக்கி இருந்தது. அவர்களுக்கு நடுவில் அவர்கள் வாகனம் நிற்கும். இவர்கள் 7TELA என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்

.

Edited by Jude

  • 2 years later...

உண்மைதான் ரதி போராட்ட இயக்கங்களில் நாகபடையைத் தவிர மற்றையவையெல்லாமே யாழ்குடாநாட்டு இளைஞர்களால்தான் தொடங்கப்பட்டது. நாகபடை மட்டக்களப்பில் தாராகி சிவராமும் வேறு சிலரும் தொடங்கினார்கள். பின்னர் புளொட்டில் இணைந்தனர்.

பரமதேவாவும், பொத்துவில் எம்பி கனகரத்தினத்தின் மகன் ரஞ்சனும் ஒரு இயக்கம் நடத்தியுருந்தார்கள். 1977 என நினைக்கிறேன். அவர்கள் செங்கலடி வங்கிக் கொள்ளையில் பிடிபட்டு, சிறை மீண்டபின் புலிகளில் இணைந்தார்கள்.

'பாதுகாப்பு பேரவை' எனும் இயக்கத்தினரும் செயற்பட்டார்கள். இவர்களின் பெயர்கள் தெரியவில்லை. ஒரு போலிஸ் நிலையத் தாக்குதல், வெல்லாவெளி பொலிசாரின் வண்டியின் மீதான தாக்குதல், களுவாஞ்சிக்குடி பொலிசாரின் வண்டியின் மீதான தாக்குதல் ஆகியன மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களில் நிறைய போலீசார் பலியானதுடன் ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டன.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

TEA தமிழீழ இராணுவம் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைத் தலைவராகக் கொண்டது. என்பதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

TEA தமிழீழ இராணுவம் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைத் தலைவராகக் கொண்டது. என்பதாக ஞாபகம்.

அவரை பின் நாளில் பனாங்கொட மகேஸ்வரன் என்று அழைத்தனர்....பனாங்கொட இராணுவமுகாமிலிருந்து தப்பி ஒட முயற்சித்தமையால்

யாழ்நகரில் அதிர்ஸ்டலாப சீட்டு வித்து பணம் சம்பாதித்தார்கள்

எனக்குத் தெரிந்த, தமிழ்ஈழ தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு சமராடிய 41 போராளிகள் அமைப்புகளை வகைப்படுத்துகின்றேன்.தவ்வல் பிழை விட்டால் திருத்துங்கள் சாத்திரி.

தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)

தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)

தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)

இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (TPDF)

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO)

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (EROS)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (EPRLF)

ஈழ தேசிய விடுதலை முன்னணி TELO.EROS.EPRLF.LTTE (ENLF)

தமிழர் மக்கள் விடுதலைக் கழகம் (PLOT)

தமிழீழ விடுதலை இராணுவம் (TELA)

தமிழீழ இராணுவம் (TEA)

புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (RELO)

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT)

மக்கள் தேசிய விடுதலை முன்னணி (PLFT)

தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (TPSO)

த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (TELE)

தமிழீழ புரட்சி அமைப்பு (TERO)

தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)

த‌மிழீழ‌ செம்ப‌டை (RFTE)

த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (TENA)

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF)

ஈழமக்கள் ஜனநாயக முன்னணி (EPDP))

த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (TEDF)

ஈழ விடுத‌லை புலிகள் (ELT)

த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)

தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (NDPT)

த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (TEEF)

இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)

ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)

த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (TERPLA)

தீப்பொறி

க‌ழுகு ப‌டை (EM)

த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை

த‌மிழீழ‌ விடுத‌லை கோப்ராக்க‌ள் / நாகம் ப‌டை (TELC)

த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)

ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (SRSL)

தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri TELO).

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து உறவுகளை விட இந்த விபரங்களை அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் நாங்களே. சிங்கள பேரினவாதம் என்ற ஒரே ஒரு சக்தி எம்மை ஒடுக்கிய போது அதை எதிர்க்க ஏன் இத்தனை பிரிவுகளாக எம்மவர் புறப்பட்டனர், இதற்குரிய அடிப்படை என்ன, ஏன் எம்மால் ஒன்று பட முடியவில்லை, ஏன் இதன் ஆணி வேர்கள் எல்லாம் யாழை மையம் கொண்டிருந்தது, ஐக்கியப் பட முடியாத மன இறுக்கத்துக்கு என்ன காரணம், இதன் விழைவுகள் என்ன, போராட புறப்பட்ட தலைமுறை இப்படி இருந்ததெனில் அதற்கு முந்திய தலைமுறையின் வழித்தடம் என்ன வழிகாட்டல் என்ன, இதன் ஒட்டு மொத்த விழைவு என்ன, எமது அடிப்படை பிரச்சனை என்ன, இனி எமது இனம் எவ்வாறு இருக்க வேண்டும், இல்லாவிடில் என்ன நடக்கும், இப்படி நூறு கேள்விகளுக்கான விடையின் வெற்றிடத்தை தான் இன்று வன்னி மக்களின் சதைகளும் உயிர்களும் குருதியும் நிரப்புகின்றது. இன்றும் சிங்களம் என்ற ஒரே ஒரு பேரினவாத சக்தி தான் அன்றும் அது தான் .நாம் தான் என்றும் சிதைந்து கிடக்கின்றோம். எதிலும் சிதைந்து கிடக்கின்றோம். எமது இனத்தின் தவறுகளின் பாவங்ளுக்காக வன்னி மக்கள் சிலுவையில் அறைப்படுகின்றனர். இனியும் எமக்குள் ஐக்கியம் இல்லை எனில் இனம் மட்டுமில்லை மனிதன் என்ற அடயாளமே எமக்கு கேள்விக்குறியாகும்.

இன்றும் எங்கள் மனதில் வேதனையுடன் நிழலாடுவது இவ்வெண்ணம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரிந்த, தமிழ்ஈழ தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு சமராடிய 41 போராளிகள் அமைப்புகளை வகைப்படுத்துகின்றேன்.தவ்வல் பிழை விட்டால் திருத்துங்கள் சாத்திரி.

தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)

தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)

தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)

இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (TPDF)

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO)

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (EROS)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (EPRLF)

ஈழ தேசிய விடுதலை முன்னணி TELO.EROS.EPRLF.LTTE (ENLF)

தமிழர் மக்கள் விடுதலைக் கழகம் (PLOT)

தமிழீழ விடுதலை இராணுவம் (TELA)

தமிழீழ இராணுவம் (TEA)

புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (RELO)

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT)

மக்கள் தேசிய விடுதலை முன்னணி (PLFT)

தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (TPSO)

த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (TELE)

தமிழீழ புரட்சி அமைப்பு (TERO)

தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)

த‌மிழீழ‌ செம்ப‌டை (RFTE)

த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (TENA)

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF)

ஈழமக்கள் ஜனநாயக முன்னணி (EPDP))

த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (TEDF)

ஈழ விடுத‌லை புலிகள் (ELT)

த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)

தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (NDPT)

த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (TEEF)

இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)

ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)

த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (TERPLA)

தீப்பொறி

க‌ழுகு ப‌டை (EM)

த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை

த‌மிழீழ‌ விடுத‌லை கோப்ராக்க‌ள் / நாகம் ப‌டை (TELC)

த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)

ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (SRSL)

தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri TELO).

உந்த இயங்கங்களுக்குள்ளை எந்த இயக்கம்?

பள்ளிக்கூடபெட்டையளுக்கு....சட்டையைதூக்குங்கோடி எண்டு சொல்லிப்போட்டு .....

குண்டியிலை..

:(

கேட்டியாலை அடிபோட்டது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.