Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஒரு சுழியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அடோ என்ன ரோட்டில நிக்குது ஒடு ஒடு வீட்டுக்கு"என்று பொலிஸ்க்காரன் அரை குறை தமிழில் திட்டி பொல்லால் அடிப்பது போல கிட்ட வர எடுத்தோம் ஒட்டம்.அவன் போனபிறகு மீண்டும் ஒன்று கூடினோம்.இவன் சிங்களவன் எங்கன்ட இடத்தில வந்து சண்டித்தனம் காட்டுறான் ,உவங்களுக்கு வெடி வச்சாத்தான் சரி என்று வீரவசனம் பேச கூட நின்ற எனையவர்களும் சேர்ந்து சம்மதிப்பது போல உசார் ஏத்தினார்கள்.

நாங்கள் ஒன்றுகூடுவதும் பொலிஸ் ஜீப்பை கண்டால் ஒடி ஒழிப்பதுமாக காலங்கள் சென்றன.சிவாவை சில நாட்களாக காணவில்லை,என்ன நடந்தது என்று புரியாமல் இருந்தோம்,அவன் இயக்கத்தில சேர்திட்டானாம் என்று குமார் சொன்னான் ,ஆனால் நணபர்களால் நம்பமுடியவில்லை.

ஒருநாள் இரவு 9 மணியளவில் வீட்டை வந்தான்,உந்த சிங்களவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும்,அதற்கு நாங்கள் ஒரு இயக்கமாக இயங்க வேண்டும் முதலில் ஆட்கள் ஒன்று சேரவேணும் பின்பு ஆயுதம் வாங்கி எம்மை பலப்படுத்த வேணும் என்றவன்,என்னை வந்து இயக்கத்தில் இணையும் படி கேட்டான்.

போராட வந்திடுவேன் ஆனால் பல்கலைகழகத்திற்கு அனுமதி கிடைச்சிருக்கு மச்சான் போய் படிப்பை முடித்துவிட்டு கட்டாயம் இயக்கத்தில் வந்து இணைந்து கொள்வேன் எனசொல்லி அவனை சுழிச்சு விட்டேன்.பிறகு அவனை சந்திப்பதை கூடியளவு தவிர்த்தேன்.நான் அவனை புறக்கணிப்பது அவனுக்கு புரிந்தபடியால என்னை சந்திக்க வாராதை தவிர்த்திக்கொண்டான்.

யாழ் பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாரத விதமாக சிவாவை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.மச்சான் நீ நேற்று மேடையில் விடுதலை,சமதர்மம் போன்ற விடயங்களைபற்றி மேடையில் பேசினாய் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் மிகவும் நல்லாய்யிருந்தது.அவற்றை நடைமுறை படுத்துவதற்கு செயல் வடிவம் கொடுக்க வேணும்,மேடை பேச்சுகளால் ஒன்றும் செய்ய முடியாது என விளக்கம் கொடுக்க தொடங்க ,மச்சான் எனக்கு விரிவுரைக்கு நேரமாகுது என்று பொய் சொல்லி அவனை மீண்டும் சுழிச்சுப்போட்டேன்.

இவனுடன் தொடர்புகளைவைத்திருக்கக்கூடாது என்று கொழும்பு பல்கலைகழகத்திற்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மாற்றலாகி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது,மச்சான் நீ சுழியண்டா என்ற குரல் கேட்டு திரும்பினேன் ,சிவா நின்றான்.ஏன்டாப்பா அப்படி சொல்லுகிறாய்,கொழும்புக்கு போகிராயாம்,ஒம்டாப்பா இங்கு இருந்தா படிச்சு முடிக்கஏலாது,ஒரே பகிஷ்கரிப்பும் ஒரே பிரச்சனையாக இருக்குது அதுதான் கொழும்புக்கு போய் படிப்பை முடித்துவிட்டு இங்கு திரும்பி வந்து எங்கன்ட சனத்திற்கு உதவலாம் என்று நினைக்கிறேன்.சிவா தான் அடுத்தகிழமை இந்தியாவுக்கு போவதாக சொல்லி விடை பெற்றான்.

`படிப்பு முடிந்தவுடன்,ஏன் யாழ்ப்பாணத்திற்கு இந்த பிரச்சனகளுக்கு மத்தியில் போவான் கொழும்பில் ஒரு வேலையை பார்ப்போம் என்ற முடிவுடன் ,வேலை தேடும் படலம் ஆரம்பமானது.வேலையும் கிடைத்தது.கொழும்பு பல்கலைக்கழகத்தில் பழகிய சிங்கள பெண்னின் நட்பு காதலாக மாற இருவரும் நெருங்கி பழகும் வாய்ப்புக்கள் அதிகமாகினது.பஸ்கள்,ரயில்கள் ,பீச்,சினிமா என ஒன்றாக திரிந்தோம்.இதை கண்ட ஊர்காரன் ஒருவன் எனது பெற்றொருக்கு சொல்ல,அப்பா ரயில் பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தார்.

அண்ணை உன்னை நோர்வேக்கு கூப்பிடுகிறானாம் நீ பாஸ்போர்ட் எடுத்து ரெடியாக இரு ,அடுத்த கிழமை நோர்வே எம்பசிக்கு இன்டர்வீயுக்கு போகவேணும் உனது போஸ்ட் கிரயுவேட்டை அங்க போய் செய் என்றார்.இப்ப என்ன அவசரம் இங்க வேலை செய்யிறன் இங்கயே செய்து முடிக்கலாம் என்றேன் .எனக்கு தெரியும் நீ ஏன் இங்க இருக்க விரும்புகிறாய்யென,இங்கு இருக்கிற கதையை விட்டுப்போட்டு வெளிநாடுபோய் உருப்படுகிற அலுவலை பார் என்றார்.

அப்பா வந்த நாளில் இருந்து மாலினியை சந்திப்பதை தவிர்த்தேன்.அப்பாவும் ஒரேபிடியாக இருந்து என்னை நோர்வேக்குஅனுப்பி விட்டார்.போகும் பொழுது கூட மாலினியை சந்திக்காமல் சுழிச்சுப்போட்டேன்.

புதிய இடம் மொழி வேறு படிக்க வேண்டும் ஒரு மாதிரியாக மொழியை நன்றாக கற்றுக்கொண்டேன்.நான் சுழியன் எங்க போனாலும் சுழிச்சுப்போடுவேன். என்னுடைய மண்வாசனை அப்படியுங்கோ.வெள்ளைத்தோல் பெண்களை கண்டவுடன் ஒரு சபலம் ஏற்பட அதற்கு உடந்தையாக ஒருத்தியை நண்பியாக்கிக் கொண்டேன்.காதல் பண் ணிகல்யாணம் செய்யலாம் என நினைத்தேன்,காமம் பின்பு ஒன்றாக வாழ்ந்து பார்ப்போம் அதன்பின்பு ஒத்து வந்தால் கல்யாணம் என்றாள்.நானும் மனதில் இவளை சுழிச்சிப்போடலாம் என்ற எண்ணத்துடன் சம்மதித்தேன்.அவள் கல்யாணத்திற்கு சம்மதித்தாள் நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.

புது நாடு,ஜயா புது மாப்பிள்ளை.உறவுக்காரருக்கு எதுவும் தெரியாது. தமிழ் கலாச்சரத்துடன் பெண் வேணும் என்று சொல்ல பெற்றோர் தேடிப்பிடித்து பிளேன் ஏத்திவிட்டார்கள்.கல்யாயாணமும் ந்டந்து முடிந்தது

கதை ,கட்டுரை என்று எழுத தொடங்கினேன் முதலில் புலி எதிர்ப்பாக எழுதினேன் வாசகர்கள் படிப்பதாக தெரியவில்லை,உடனே புலி ஆதரவாகவும் தேசியம் சார்பாக இரண்டு கட்டுரை எழுதினேன் பாராட்டுக்கள் குவிந்தன மேடையில் ஏறும் வாய்ப்புக்களும் தானாக தேடிவந்தன.தொடர்ந்து புலி ஆதரவு முகமூடியுடன் எழுதினேன் . பயம் காரணமாக புலிகளை சுழிக்க முடியாமல் போய்விட்டது.

முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள் புலிகளுக்கு என்றவுடன்,புலிகளை இனி சுழிச்சு போடலாம் என்ற துணிவு ஏற்பட்டது.அப்பே லங்கா என்ற கோசத்துடன் எழுத தொடங்கினேன்.பெரும்பான்மையினரின் ஆதரவும் கிடைக்க தொடங்கியது.

23 வருடங்களின் பின்புகுடும்பம் சகிதமாக யாழ் மண்னை தரிசிக்க சென்றேன்.ஊர் கோவிலுக்கு முதலில் சென்றேன்.

ஆண்டாவா நீ என்னை விட சுழியன்,இவ்வளவு பிரச்சனைளுக்கும் தாக்குப்பிடித்து இப்ப வெளிநாட்டுக்காரன் அந்த மாதிரி ஒரு கட்டிடம் கட்டிதந்திருக்கிறான் அனுபவி ராசா அனுபவி என கும்பிட்டு போட்டு திரும்பும் பொழுது,ஒருவர் என்னை விட 10 வயது கூடிய தோற்றத்துடன் காலை நொண்டியபடி சென்றவர் என்னை 2,3, தடவை பார்த்துபோட்டு என்னருகே வந்து உங்களுடைய பெயர் கண்ணன் தானே , ஒம் என தலையாட்டினேன்.உள்ளே ஒரு பயம் ,வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் கடத்தப் போறாங்களோ தெரியவில்லை என முழித்தேன்.என்னை தெரியவில்லையடாப்பா வடிவாக பார் என்றவன் ,கோவிலை சுற்றி கும்பிட்டுபோட்டு வாரன் யோசிச்சு பாருடாப்பா என்று சொல்லி சுற்ற சென்றுவிட்டான்.

சுற்றி முடிந்து அருகே வந்தவன் மச்சான் நீ சுழியண்டாப்பா என்னை தெரியாத மாதிரி நல்லாய் நடிக்கிறாய்,பயப்பிடாதே போராட உன்னை குப்பிடமாட்டேன் நான் சிவா என்றான்.கட்டி அனைத்து நட்பு கொண்டாடினோம்.காலுக்கு என்ன நடந்ததுடாப்பா என்றேன்.10 வருடங்களுக்கு முதல் தாக்குதலோன்ரின் பொழுது காலை இழக்க நெரிட்டத்தா சொன்னான். நல்ல வேளை இவனை சுழிச்ச்சுப்போட்டு வெளிநாடு போனது என்று மனதில் நினைத்து கொண்டு அவனிடமிருந்து விடை பெறும் பொழுது, கோயில் தர்மகர்த்தா ஒடி வந்து புணர்நிர்மான பணிகளுக்கு இயன்றளவு உதவி செய்யும்படி கேட்டார். உடனே 20 ஆயிரம் என்று சொல்ல பக்கத்தில் நின்ற மனைவி கோயிலுக்கு தானே கேட்கினம் கொஞ்சம் கூடவா கொடுங்கோவன் என்றாள்.50 ஆயிரம் கொடுங்கோ உங்களுடைய 2 மணித்தியால சம்பளம்தானே என பில்டப் கொடுக்க நானும் சம்மதம் என தலையை ஆட்டினேன்.

ஆண்டவனுக்கு ஒரு அஸ்டாங்க நம்ஸ்காரம் செய்து போட்டு எழுந்தேன் சிவா நொண்டியபடியே நடந்து சென்றான் ....

  • கருத்துக்கள உறவுகள்

சிவாவைப்போல் சிலர்

என்னையும் தங்களையும்போல் சுழியர்கள் பலர்

பெரும்பான்மை வென்றது

சிறுபான்மை தோற்றது

நன்றி தங்களது நேரத்துக்கும் எழுத்துக்கும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிவாவைப்போல என்னையும்தாண்டி கனக்கப்பே; நொண்டிக்கொண்டு போறவையள் ஆனால் நான் கண்டுகொள்வதில்லை காரணம் இவையளை போராடச்சொல்லி யார் சொன்னவை எண்டுகேக்கும் தமிழர்களுடன் நானும் சேர்ந்திட்டன் இல்லையெண்டால் விடமாட்டான்கள்.

யாழுக்குள்ளும் பல சுழியர்கள் இன்னமும் சுழித்துக்கொண்டிருக்கினம்.

உண்மையை சொன்னதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்க்காற்றிலை எச்சில் துப்புவது போல இருக்கு புத்தன் அண்ணா

:D

கதையை வாசிக்க குற்ற உணர்வு தான் கூடுது :D :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்குள்ளும் பல சுழியர்கள் இன்னமும் சுழித்துக்கொண்டிருக்கினம்.

உண்மையை சொன்னதற்கு நன்றி.

அதிலும் ஒரு காலத்தில் புலிக்கு ஆதரவாக எழுதின என்ற இடம் இன்னுமு; சுவாரஸ்யம் நான் ரசித்தேன் நீங்களும் ரசித்திருப்பீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு உண்மையை முகத்தில் அடித்த மாதிரி எழுதி உள்ளீர்கள் ஆனால் எப்படி எழுதினாலும் எங்களுக்கு உறைக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பத்திய நிலையில் புலிகளை தாக்க வேண்டும், தொடர்ந்து குற்றம் குறை புதுசு புதுசா கண்டு பிடிக்க வேணும், முகாமில இருகிற சனத்தில அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேணும், சிறிலங்காவுக்கு நமோ நமோ பாட வேணும் அவயள்தான் இப்ப நல்ல சுளியன்கள், :D:D:)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,

எல்லா விசயத்திலையும் சுழிச்சுக் கொண்டு வந்து கடைசியிலை குடும்பம் எண்ட கடலுக்குள் விழுந்து விட்டீர்கள்.

அதிலையும் நீங்கள் தப்பி விடுவீர்கள்.ஏனெண்டால் நீங்கள் உண்மையிலேயே சுழியன். :D:D

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

கதை சிம்பிள்.. சூப்பர்.

பல பேருக்குள் குற்ற உணர்வை தூண்டி இருக்கும். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நச்சென்று குத்துகிறது கதை.பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுழியன் பிடித்து கொண்டது.எமது தோல்விக்கு இந்த சுழியன்களும் ஒரு காரணம். யாழுக்கு மே 19 ற்கு பிறகு வந்து புலிகளை பற்றி விமர்சிக்க வேணும், எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என்று பம்மாத்து விடுபவர்களுக்கு இக்கதை சமர்பணமாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"சுழியன்" கதைக்கு ஏற்ற பொருத்தமான தலைப்பு.

பல பேருக்குள் குற்ற உணர்வை தூண்டி இருக்கும்.

பல பேருக்கு குற்ற உணர்வை தூண்டி இருக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுக்கு குற்ற உணர்வு வந்திச்சிதோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

பல பேருக்கு குற்ற உணர்வை தூண்டி இருக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுக்கு குற்ற உணர்வு வந்திச்சிதோ? :D

நாங்க என்ன பிழைப்பு வழியில்லாம அலையிற கூட்டமே ஊரைச் சுழிக்க...! ஊரில சந்தில நிண்டதுகள் தான் இப்ப வெளிநாட்டில.. கள்ளப் பொய் சொல்லி அசைலம் அடிச்சு போராட்டத்தையும் நாசம் பண்ணிறது. :D:)

போராடாமல் தப்பித்ததை பெருமையாக சொல்ல ஒன்றும் இல்லை... உங்களை விட உங்கள் நண்பர் சிவா தான் மனதில் நெளிகிறார். அடிமையாய் வாழ முடிவெடுத்த பிறகு புலிகள் என்ன பெற்ற அன்னையே சொன்னாலும் உங்களுக்கு சிங்களவன் தெய்வம் தான்... உங்கள் குடும்ப சகிதமாய் அரோகரா பாடுங்கள் ராஜபக்ஷேவுக்கு.

தமிழன் என்று சொல்லடா...தலை குனிந்து நில்லட....

Edited by ராசராசசோழன்

நன்றிகள் புத்தன். பெரும்பான்மையான தமிழர்களின் சுய சரிதையை எழுதியதிற்கு. இந்த சுளிப் புத்திதான் எங்கட இனத்தையே சுழிச்சி நாசமாக்கியது.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

சரி சுழிச்சதுதான் சுழிச்சாச்சு இனியாவது ஊருக்கு போகும் போது சும்மா பிலிம் காட்டுறதுக்கு காசை செலவளிக்காமல் சிவா மாதிரி ஆக்களுக்கு உதவி பியாசித்தம் தேடலாம்.

குத்துமத்திப்பில கருத்துக்கள் எழுதிக் கொண்டிருந்த பலருக்கு நல்லாத்தான் உறைத்துவிட்டது.அவர்களுக்கு உறைத்ததே ஒழிய குற்ற உணர்வுவரவில்லை ஏனேனில் அவர்கள் தம்மை தாமே எமாற்றுகின்றோம் என தெரிந்துதான் செய்கின்றார்கள்.

புலம் பெயர்ந்த பலர் போராட்டம் நடாத்தியதே வாயாலும்,எழுத்தாலும் தானே.அவர்களுக்கு அப்பப்ப வாய்க்கு தீனி கிடைத்தால் சரி மென்றுகொண்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்ல வேண்டிய செய்தியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் புத்தன். :unsure:

உங்களுக்கு ஒரு பச்சை குத்தியிருக்கிறேன்.அதற்கு நன்றிக்கடனாக நீங்களும் எனக்கு ஒரு பச்சை குத்தவிரும்பினால் குத்தவும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தமாக இம்மியளவுகூட குற்ற உணர்வு ஏற்படவில்லை . ஒருவேளை சிறிலங்காவிலிருந்து (கவனிக்கவும் தமிழீழம் அல்ல) யாராவது இப்படி கதைவிட்டிருந்தால் சிலசமயம் சிலருக்கு ஏற்பட்டிருக்ககூடும்.

புத்தன், முகஸுதிக்காக கருத்து கூறமுடியாது. கதை ஓர் வித்தியாசமான பாணியில் உள்ளது என்பதை மட்டும் உங்கள் பதிவுகளை நீண்டகாலமாக பார்த்து வருவதால் உணரமுடிகின்றது.

நெடுக்ஸ், நீங்கள் ஒரு சுழியன் இல்லையோ... நல்லது. :blink:

சொல்ல வேண்டிய செய்தியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் புத்தன். :unsure:

உங்களுக்கு ஒரு பச்சை குத்தியிருக்கிறேன்.அதற்கு நன்றிக்கடனாக நீங்களும் எனக்கு ஒரு பச்சை குத்தவிரும்பினால் குத்தவும் :wub:

உங்கள் சிறிய வேண்டுதலை நாம் செவிசாய்த்தோம். :huh:

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. இப்படிப் பல சூழியர்களை சிட்னியில் காணலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்களது நேரத்துக்கும் எழுத்துக்கும்

தங்களது கருத்துக்கும் நன்றிகள்

சிவாவைப்போல என்னையும்தாண்டி கனக்கப்பே; நொண்டிக்கொண்டு போறவையள் ஆனால் நான் கண்டுகொள்வதில்லை காரணம் இவையளை போராடச்சொல்லி யார் சொன்னவை எண்டுகேக்கும் தமிழர்களுடன் நானும் சேர்ந்திட்டன் இல்லையெண்டால் விடமாட்டான்கள்.

எல்லா இனத்தவனும் அப்படித்தான் தமிழன் மட்டுமல்ல

யாழுக்குள்ளும் பல சுழியர்கள் இன்னமும் சுழித்துக்கொண்டிருக்கினம்.

உண்மையை சொன்னதற்கு நன்றி.

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்

எதிர்க்காற்றிலை எச்சில் துப்புவது போல இருக்கு புத்தன் அண்ணா

:(

துடைச்சிப்போட்டு திருப்பியும் துப்புவோமல்ல....நன்றிகள் ஜீவா

கதையை வாசிக்க குற்ற உணர்வு தான் கூடுது :( :(

நன்றிகள் யாழ்கவி ...

அதிலும் ஒரு காலத்தில் புலிக்கு ஆதரவாக எழுதின என்ற இடம் இன்னுமு; சுவாரஸ்யம் நான் ரசித்தேன் நீங்களும் ரசித்திருப்பீர்கள்!

வாசித்தமைக்கு நன்றிகள் மருது

நல்லதொரு உண்மையை முகத்தில் அடித்த மாதிரி எழுதி உள்ளீர்கள் ஆனால் எப்படி எழுதினாலும் எங்களுக்கு உறைக்காது.

நன்றிகள் ரதி

இப்பத்திய நிலையில் புலிகளை தாக்க வேண்டும், தொடர்ந்து குற்றம் குறை புதுசு புதுசா கண்டு பிடிக்க வேணும், முகாமில இருகிற சனத்தில அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேணும், சிறிலங்காவுக்கு நமோ நமோ பாட வேணும் அவயள்தான் இப்ப நல்ல சுளியன்கள், :lol::lol::lol:

:D நீங்கள் ஒரு சுழியன் :D

புத்தன்,

எல்லா விசயத்திலையும் சுழிச்சுக் கொண்டு வந்து கடைசியிலை குடும்பம் எண்ட கடலுக்குள் விழுந்து விட்டீர்கள்.

அதிலையும் நீங்கள் தப்பி விடுவீர்கள்.ஏனெண்டால் நீங்கள் உண்மையிலேயே சுழியன்.

வாத்தியார்

***********

நன்றிகள் வாத்தியார்.....நான் சுழிச்சு போடுவனல்ல :D

:D

கதை சிம்பிள்.. சூப்பர்.

பல பேருக்குள் குற்ற உணர்வை தூண்டி இருக்கும்.

நன்றிகள் நெடுக்ஸ்....துண்டினாலும் கண்டுக்கமட்டமல்ல :D

நச்சென்று குத்துகிறது கதை.பாராட்டுக்கள்.

நன்றிகள் புலவரே

சுழியன் பிடித்து கொண்டது.எமது தோல்விக்கு இந்த சுழியன்களும் ஒரு காரணம். யாழுக்கு மே 19 ற்கு பிறகு வந்து புலிகளை பற்றி விமர்சிக்க வேணும், எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என்று பம்மாத்து விடுபவர்களுக்கு இக்கதை சமர்பணமாகட்டும்.

நன்றிகள் நுனாவிலான்

"சுழியன்" கதைக்கு ஏற்ற பொருத்தமான தலைப்பு.

அதுதானே சுழியங்களின் விளையாட்டு நன்றி சிறி

போராடாமல் தப்பித்ததை பெருமையாக சொல்ல ஒன்றும் இல்லை... உங்களை விட உங்கள் நண்பர் சிவா தான் மனதில் நெளிகிறார். அடிமையாய் வாழ முடிவெடுத்த பிறகு புலிகள் என்ன பெற்ற அன்னையே சொன்னாலும் உங்களுக்கு சிங்களவன் தெய்வம் தான்... உங்கள் குடும்ப சகிதமாய் அரோகரா பாடுங்கள் ராஜபக்ஷேவுக்கு.

தமிழன் என்று சொல்லடா...தலை குனிந்து நில்லட....

பொருத்தமான நேரத்தில் பொருத்தமான ஆட்களுக்கு அரோகரா பாடுபவன் தான் சுழியன் ...நன்றிகள்

நன்றிகள் புத்தன். பெரும்பான்மையான தமிழர்களின் சுய சரிதையை எழுதியதிற்கு. இந்த சுளிப் புத்திதான் எங்கட இனத்தையே சுழிச்சி நாசமாக்கியது.

அதையும் சுழிச்சு முன்னுக்கு வந்திடுவோமல்ல நன்றிகள் தப்பிலி

சரி சுழிச்சதுதான் சுழிச்சாச்சு இனியாவது ஊருக்கு போகும் போது சும்மா பிலிம் காட்டுறதுக்கு காசை செலவளிக்காமல் சிவா மாதிரி ஆக்களுக்கு உதவி பியாசித்தம் தேடலாம்.

இதுதான் நாம் உண்மயிலயே செய்யக்கூடிய பிராய சித்தம் ...நன்றிகள் சஜீவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.