Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்னக் குயில் சித்ரா மகள் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

post-5124-0-32305700-1302780555_thumb.gi

பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது.

இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர்.

துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார். சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார்.

இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து சித்ரா கதறி அழுதார்

நன்றி மாலை மலர் .

Edited by நிலாமதி

அடப்பாவமே. சித்ரா தன குழந்தைக்காக பாடுவதை கூட குறைத்திருந்தார்.

ஆண்டவன் தான் அவருக்கும் அந்த குடும்பத்துக்கும் ஆறுதல் அளிக்கவேண்டும்.

சிலவேளைகளில் சில ஏன் களுக்கு விடையில்லை.15 வருடங்களுக்கு பின்பு பிறந்த பிள்ளை, சித்திராவிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தனது இனிமையான குரல்வளத்தாலும்

பணிவான பழக்கவழக்கத்தாலும் எம்மை கவர்ந்த இந்தக்குயிலுக்கு இத்தனை சோகமா?

ஆண்டவரே

அவருடன் இரும்

  • கருத்துக்கள உறவுகள்
dc-631.jpg :(

எனக்கு மிக மிக பிடித்த பாடகி சகோதரி சித்திரா அவர்கள். சிரிக்கும் போது தெரியும் அவரின் குழந்தை முகத்தை பார்க்கும் எவருக்கும் அவர் மேல் அன்பு வரும். 15 வருடம் காத்திருந்து கிடைத்த குழந்தையை இழப்பது என்பது எத்தனை துயரமான விடயம்

எல்லாரையும் தன் பாடலால் மகிழ்விக்கும் ஒருவருக்கு ஏற்பட்ட இந்த துயரத்தினை கேட்கும் போது உலக இயக்க நியதி மேலேயே வெறுப்பு வருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் சொல்வது கடவுளுக்கு கண் இல்லை என்று...சித்ரா அம்மாவின் மகளது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்...அத்தோடு அவருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மகளை இழந்த பாடகி சித்திராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

மகளை இழந்த பாடகி சித்திராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :(

:o:( :( :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து வருடங்களின் பின் பெற்ற குழந்தை!!!

இழப்பு வார்த்தைகளுக்குள் அடங்காது.

சித்திராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

ஏன் என் மனம் மட்டும் இப்படிச் சிந்திக்கிறது? சித்ரா தன் குழந்தையை எண்ணிக் கதறியழுததைச் செய்தியாகப் படிக்கின்ற போது மனதின் ஒரு மூலையில் துயரம் எழத் தான் செய்கிறது. ஆனால் என் மனம் மட்டும் தான் பெற்றெடுத்த கல்வியிற் சிறந்த மகனைப் பறிகொடுத்து விட்டுக் கதறியழும் திருகோணமலை வைத்தியரையும் இந்த இடத்தில் எதற்காக இணைத்துப் பார்க்கிறது.

சித்ரா மலையாளத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் வெறுக்கவில்லை. ஆனால் ஒரு மலையாளியின் அதிகார வெறி (நாராயணன்) எத்தனை தமிழ் குழந்தைகளை அநியாயமாகப் பலியெடுத்திருக்கிறது என்பதை ஏன் என் மனம் இப்போது நினைக்கிறது.

ஒரு இசைக் கலைஞராகவே எமக்கு அறிமுகமான சித்ராவைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. ஆனால் என்மண்ணில் பிறந்து என் மண்ணிற்காகவே வாழ்ந்த பாடகி, நடிகை, ஒலிபரப்பாளர் செய்தியாளர் எனப் பல பரிமாணங்களையும் தொட்ட சகோதரி சிங்களக் காமுகர்களால் சித்திரவதை செய்யப்பட்டபோது கதறியழுதார் என்ற செய்தியை இப்போது என் மனம் ஏன் நினைக்கிறது.

இந்த உலகில் பிறந்து தவறு செய்யாமல் வாழ்கின்ற எவருக்கும் துன்பம் வரக் கூடாது. அவர்கள் எவருமே புத்திர சோகத்தாலோ வேறு எந்தவொரு காரணத்தாலோ கதறி அழக் கூடாது.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் இதையெல்லாம் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடும். ஆனால் நாங்கள் தான் அந்த அளவிற்கு அதிஸ்டம் செய்திருக்கவில்லையே!

சித்ரா மலையாளத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் வெறுக்கவில்லை. ஆனால் ஒரு மலையாளியின் அதிகார வெறி (நாராயணன்) எத்தனை தமிழ் குழந்தைகளை அநியாயமாகப் பலியெடுத்திருக்கிறது என்பதை ஏன் என் மனம் இப்போது நினைக்கிறது.

டக்கிலஸ் எனும் யாழ் மண்ணை சேர்ந்தவரால் எத்தனை குழந்தைகள் பலியாடப் பட்டன?

கருணா எனும் மட்டுவை சேர்ந்தவரால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?

நாராயணன் அதிகார வெறி பிடித்தவர் என்று பார்க்கும் போது, அவர் பிறந்த மண் பற்றி அலசுகின்றோம்

நான் சொன்ன இருவர் மண் பற்றி நினைக்கும் போது யாரை நோவது ?

ஆயிரத்தெட்டு சாதி, பிரேத வாசம் பேசும் எமக்கு மற்றவர் நோக்கி விரல் நீட்ட அருகதை இருக்கா?

ஆழ்ந்த அனுதாபங்கள். மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரின் கவனக்குறைவு.. பாதுகாப்பற்ற நீச்சல் தடாகம்.. இதுவே இக்குழந்தையின் இழப்பிற்கு காரணம். இதில் கடவுளை.. விதியை குற்றம் சொல்லும் மனிதர்களை எங்கே சேர்ப்பது..??! :o:unsure:

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறோம். குடும்பத்தாருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு சில மேட்டுக்குடி நாராயணங்கள் செய்யும் மேட்டுக்குடி அரசியல் விசுவாசச் செயற்பாடுகளுக்காக பலியிடப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு சித்திரா கண்ணீர் விட்டாரோ இல்லையோ.. அவர்களிடம் இல்லாத இயல்பான மனிதாபிமானம் எங்களிடம் உண்டு. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தான் பெற்றெடுத்த கல்வியிற் சிறந்த மகனைப் பறிகொடுத்து விட்டுக் கதறியழும் திருகோணமலை வைத்தியரையும் இந்த இடத்தில் எதற்காக இணைத்துப் பார்க்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்...

டாக்குத்தர் பிரபலம் இல்லையே அதுதான் ஆக்கும் நாங்கள் அவரை கண்டு கொள்ளவில்ல போலும்

டயானா இறந்தவுடன் கண்ணீர் வடித்த மேட்டுக்குடி.,நடுத்தரவர்க்க தமிழர்கள் கனபேரை எனக்கு தெரியும்

பெற்றோரின் கவனக்குறைவு.. பாதுகாப்பற்ற நீச்சல் தடாகம்.. இதுவே இக்குழந்தையின் இழப்பிற்கு காரணம். இதில் கடவுளை.. விதியை குற்றம் சொல்லும் மனிதர்களை எங்கே சேர்ப்பது..??! :o:unsure:

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறோம். குடும்பத்தாருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு சில மேட்டுக்குடி நாராயணங்கள் செய்யும் மேட்டுக்குடி அரசியல் விசுவாசச் செயற்பாடுகளுக்காக பலியிடப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு சித்திரா கண்ணீர் விட்டாரோ இல்லையோ.. அவர்களிடம் இல்லாத இயல்பான மனிதாபிமானம் எங்களிடம் உண்டு. :(

எப்படி மேம்போக்காக சொல்கிறீர்கள். சித்ரா ஈழத்துக்கும் பாடித்தந்துள்ளார்.

மேலும் சித்ரா தன குரலால் எத்தனையோ பேர்களது கவலை, துயரை மறக்க உதவி செய்திருப்பார். அது போக பெற்ற பிள்ளையை இழப்பது எவ்வளவு சோகமானது. அவர் எங்களுக்கு ஒரு கொடுமையும் செய்யவில்லையே. அவரது துயரில் இரங்குவது மனிதாபமானமேயன்றி வேறொன்றும் இல்லை.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

. அவரது துயரில் இரங்குவது மனிதாபமானமேயன்றி வேறொன்றும் இல்லை.

நாங்கள் துலைத்தது அவ்வளவு அதிகமையா

என்ன நெய்வது எந்த சாவீட்டுக்கு போனாலும் நாம் துலைத்தவைதானே முதலில் நெஞ்சுக்குள் வருகின்றன.

நாங்கள் துலைத்தது அவ்வளவு அதிகமையா

என்ன நெய்வது எந்த சாவீட்டுக்கு போனாலும் நாம் துலைத்தவைதானே முதலில் நெஞ்சுக்குள் வருகின்றன.

உண்மை தான். இதில் மாற்றுக்கருத்தில்லை.

மகளின் பிரிவில் துயரும் பெற்றோருக்கு இந்த நேரத்தில் இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்கள் காத்திருந்து பிறந்த குழந்தை எட்டு வயதில் பறிபோவது மிகவும் கொடுமையான நிலை. சித்திரா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நினைத்துப் பார்க்க முடியாத இழப்பு பெற்றோருக்கு.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

பிள்ளைச் செல்வத்தை இழந்து தவிப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காலம் அவர்களின் துயரை நீக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.