Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் ஈழத்துக் கலைஞரும் யாழ்கள உறுப்பினருமான பொயட் என்கிற கவிஞர் ஜெயபாலன் அவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் விருது கிடைத்திருக்கின்றது. அவருக்குப் பாராட்டுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2011 - தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!

58-வது தேசிய திரைப்பட விருதுகள்(2010-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களுக்கானது) இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.

'ஆடுகளம்' படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.

அதேபோல 'தென் மேற்குப் பருவக் காற்று' படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

சிறந்த இயக்குநருக்கான விருது 'ஆடுகளம்' தமிழ்ப் படத்தை இயக்கிய வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார்.

சிறந்த திரைக்கதைக்கான விருதையும் 'ஆடுகளம்' படத்திற்காக வெற்றிமாறனே தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ளது. காமெடியனாக, இயக்குநராக அறியப்பட்ட தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் 'மைனா'. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. 'நம் கிராமம்' என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. 'தென் மேற்குப் பருவக் காற்று' படத்துக்காக இந்த விருது அவரைத் தேடி வந்துள்ளது. ஏற்கெனவே இதுவரை 5 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமுத்து தற்போது 6-வது முறையாக இந்த விருதை தட்டிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார். எந்த ஒரு தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் இதுவரை செய்யாத சாதனை இது.

இதற்கு முன்பு 'முதல் மரியாதை', 'ரோஜா', 'கருத்தம்மா', 'சங்கமம்' மற்றும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தார் வைரமுத்து.

தமிழில் சிறந்த படமாக 'தென் மேற்குப் பருவக் காற்று' திரைப்படம் தேர்வாகியுள்ளது.

'ஆடுகளம்' படத்தின் நடன இயக்குநர் தினேஷ், சிறந்த நடன இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

சிறந்த படத் தொகுப்புக்கான விருதும் 'ஆடுகளம்' படத்திற்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது.

'ஆடுகளம்' படத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் வ.ஜெ.ச. ஜெயபாலனுக்கு சிறப்பு சான்றிதழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.

சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.

'ஆடுகளம்' திரைப்படம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடன வடிவமைப்பு, சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது ஆகியவை 'ஆடுகளம்' படத்துக்குக் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் 'புட்டக்கண்ணா ஹைவே' என்ற திரைப்படம் சிறந்த கன்னடத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தைத் தயாரித்திருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் பெறும் 5-வது தேசிய விருது இதுவாகும்..!

58-வது தேசிய திரைப்பட விருதுகள் பற்றிய முழுத் தகவல்களும் இங்கே உங்களுக்காக :

http://truetamilans.blogspot.com/2011/05/2011_19.html

  • கருத்துக்கள உறவுகள்

'ஆடுகளம்' படத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் வ.ஜெ.ச. ஜெயபாலனுக்கு சிறப்பு சான்றிதழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் சான்றிதழ் பெறும், யாழ் கள உறுப்பினர் ஜெயபாலனுக்கு பாராட்டுக்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புச் சான்றிதழ் பெரும் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு மனம் திறந்த வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞருக்கு எனது இதையம் கனிந்த வாழ்த்துக்கள்

ஆடுகளம், பொதுவாகத் நான் திரைப்படங்களை அடுத்தடுத்துப் பார்ப்பதில்லை. இணையங்களில் நல்ல படமென யாராவது கருத்துக்கூறியிருந்தால் பார்ப்பதுண்டு. (ஒரு காலத்தில் சினிமாத் தியேட்டர்களே உலகமென்றிருந்த காலமும் உண்டு) அண்மையில் ஆடுகளம் பார்த்தேன் கவிஞர் மிகவும் கதாபாத்திரத்துடனும் கதைக்கருவுடனும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். உண்மையில் தேசிய விருது கவிஞருக்கே கிடைத்திருக்கவேண்டியது டப்பிங் குரல் காரணமாக தவறிவிட்டது. இலங்கைத்தமிழன் போராடும் குணம்கொண்டவனென அனேகர் கூறுவதுண்டு கவிஞர் இவ்விடையத்தில் தற்துணிவுடனிருந்து சொந்தக்குரலில் பேசுவதற்காக் சம்பந்தப்பட்டவர்களுடன் போராடியிருக்கலாம். எனினும் காலத்தால் அழியாத கவிநயம் மிக்க நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார் என்றால் மிகையல்ல. சந்தன மரத்துடன் சேர்ந்த வேம்பும் மணம்தரும் என்பதுபோல் விருதுக்குழு யாருக்காவது கவிஞருக்குப்பதிலாக விருதுகொடுக்கவேண்டுமெனத் தீர்மானித்து பக்கத்தில நிண்ட தனுசுக்குக் கொடுத்துவிட்டார்கள்போலும். எனினும் ஈழத்தமிழர்களது இனியவாழ்த்துக்களும் அவர்களது இதையத்திலிருந்து வரும் பாராட்டெனும் விருதும் கவிஞருக்குச்சேரும். தற்செயலாக கவிஞர் இக்கருத்தை வாசிக்க முடிந்தால் ஆடுகளம் படத்தில் தாங்கள் கண்கள் இரண்டையும் வெளியாலை விட்டுட்டு ஒரு மாதிரி கோவமும் வெறுப்பும் மிக முகபாவனை செய்வீர்களே அதேபோல் செய்யவும் மானசீகமாக நான் உணர்வேன்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் திரை உலகில் நடித்த முதல் படத்திலேயே ஒரு சிறப்புச் சான்றிதழ் விருதைப் பெறுவதென்பது.. இலகுவான காரியமல்ல. அந்த வகையில் இந்தக் கலைஞரின் திரைப்பட நடிப்புத் திறமை மிகுந்து பாராட்டத்தக்கது. உங்கள் கலைப் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

மென்மேலும் முன்னேறி வெற்றி பெறவேண்டும்.

இந்தியத் திரை உலகில் நடித்த முதல் படத்திலேயே ஒரு சிறப்புச் சான்றிதழ் விருதைப் பெறுவதென்பது.. இலகுவான காரியமல்ல. அந்த வகையில் இந்தக் கலைஞரின் திரைப்பட நடிப்புத் திறமை மிகுந்து பாராட்டத்தக்கது. உங்கள் கலைப் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!

உண்மை தான். வாழ்த்துகள்!

இதுவே தன் சொந்த குரலில் பேசியிருந்தால் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்திருக்குமோ என்னவோ.

இவ்வளவு விருதுகளை வென்ற படத்தை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா..! :D

கவிஞர் ஜெயபாலன் அவர்கள் கலைத்துறையில் மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.

ஜெயபாலனுக்கு வாழ்த்துகள்.

மதுரை மண்ணை அரிவாளில்லாமல் வேறொருகோணத்தில் காட்டிய தமிழ்மாறனுக்கும் அதில் திறம்பட நடித்த தனுசுக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பொயட் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பொயட் :)

நன்றி கந்தப்பு, தமிழ்சிறி. புங்கையூரன், இளஞாஜிறு, நெடுக்கால போவான், திப்பிலி, ஈஸ், இசைப்பிரியன், இணையாள், அர்ஜுன், கவிதயினி வல்வை சாகரா, dipping வாய்ப்புக்காக போராடவில்லையென்று யார் சொன்னது. நடிகர் சங்க தலைவர் ராதாரவி அவர்கள் விதிகளுக்கு அப்பால் எனக்கு ஜூரிகள் சிறப்பு பரிசு வலங்குவார்கள் என்று அடித்துச் சொன்னார். அதுதான் இப்போது நடந்தேறி உள்ளது. டப்பிங் பேசாமல் ஜூரிகள் முடிவில் விசேட தேடிய விருது இதற்க்கு முன்னம் ஒருவருக்குக் கிடைத்ததாக சொன்னார்கள். உதியோக அறிவிப்பு பின்வருமாறு அமைந்திருந்தது.

List of winners: 58th National Film Awards

SPECIAL MENTION: Aadukalam (Tamil)

VIS Jayapalan

Certificate only

With a face carved out of teak and leather, the patriarch of a cock-fighting clan stands like a colossus, even when he feels his power and authority ebbing through his fingers.

என்னுடைய முகநூலில் மேலதிக விபரங்களை வாசிக்கலாம்.

Face Book ID - Jaya Palan

என்னுடைய தீவிரமான தேடுதலும் தொடரும் கற்றலும் எனது மனைவி மக்கள் பணத்தைவிட கலைஞானத்தை மதித்தமையும் கலைஞர்களை கொண்டாடும் தமிழக தமிழர்களது கலை ஆர்வமும்தான் எனது வெற்றிக்குக் காரணம்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் ஐயாவுக்குக் கிடைத்த சிறப்பு சான்றிதழ் விருது எம்மையும் பெருமைகொள்ள வைக்கின்றது.

கவிஞருக்கு உளங்கனிந்த பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்..sir..:)

விருதுகள் எப்போதாவது சாப்பிடும் சாக்லேட் போன்றவை - இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி! .

தமிழ்சினிமா; இன்று தரமான இயக்குனர்களின் களமாகி வருகிறது. தேசியவிருது என்ற ஒன்றை கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாத நிலையில் இருந்த தமிழ்சினிமாவில் இன்று பாலா தொடங்கி வைத்த பாதையில் வெற்றிமாறனும் சாதித்து விட்டு நிற்கிறார். அதுவும் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதாசிரியர் என்று இரண்டு தேசிய விருதுகள்.

ஆனால் “எனது இந்த வெற்றியில் முகம் மட்டும்தான் என்னுடையது. எனக்குப் பின்னிருந்து உழைத்தவர்களுக்கு இந்த விருதில் பங்கிருக்கிறது. முக்கியமாக திரைக்கதைக்கான விருதில் எனது நண்பர்கள் செந்தில்குமார், மணிகண்டன், உட்பட நான்குபேரின் பங்களிப்பு மகத்தானது. இந்த விருது அவர்களையே சாரும்” என்று நேர்மையாக ஒப்புகொள்ளும் வெற்றிமாறன் 4தமிழ் மீடியாவுக்கு பிரத்தியேகமாக அளித்த செவ்வி இது.

ஆடுகளத்துக்கு ஆறு விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

நிச்சயமாக இல்லை. ஆனால் படத்தை முடித்து விட்டுப் போட்டுப் பார்த்தபோது இந்தப்படம் வணிக ரீதியாக மட்டுமில்லாமல் மிடில் சினிமா என்று சொல்லக் கூடிய படமாக இருந்ததால் மேலும் ஃபைன் டுயூன் பண்ண ஆரம்பித்தேன். அப்படித்தான் ஆடுகளம் வணிக ரீதியான படைப்பாக மாறியது. விருதுக்காக படமெடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. அதேநேரம் விருது கொடுக்கும் போது இதுபோன்ற மிடில் சினிமாக்களை எடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். கலைப் படங்களை நான் நேசிக்கிறேன். ஆனால் அவை அதிகமக்களை சென்று அடைவதில்லை. என்னைப் போன்ற ஒரு படைப்பாளி தனது படைப்பு அதிக மக்களை சென்று அடைய வேண்டும் என்று நினைக்கிறான். விருது என்பது என்னைப் பொறுத்த வரை எப்போதாவது சாப்பிடும் சாக்லேட் போன்றது. ரொம்பவே ருசியாக இருக்கும். ஆனால் அதையே சாப்பாடாக சாப்பிட முடியாது அல்லவா?

ஆடுகளம் கதை ரெடியானதும் அந்தக்கதையை முதலில் யாருக்கு பொருத்திப் பார்த்தீர்கள்?

பொல்லாதவன் படத்துக்கான திரைகதையை எழுதிய பிறகே அதற்கு ஏற்ற நடிகர்களை தேடினேன். இறுதியில் தனுஷின் கைகளை வந்ததடைந்தது. ஆனால் பொல்லாதவன் வெற்றிக்குப்பிறகு நம்ம டீம் ஏன் மீண்டும் அப்படியே இன்னொரு படத்திலும் தொடரக்கூடாது என்று கேட்டார். தனுஷின் நட்பையும், விருப்பத்தையும் மனதில் வைத்து உருவானதுதான் ஆடுகளம். படத்தின் தயாரிப்பாளர், தொடங்கி மொத்த டீமும் மீண்டும் இணைந்து செய்தபடம் இது.

தனுஷூக்கு கிடைத்திருக்கும் வெற்றிக்கு என்ன காரணம்?

சந்தேகம் இல்லாமல் அவர் ஏற்று நடித்த கருப்பு கதாபாத்திரம்தான் காரணம். தனுஷ் என்ற ஸ்டார்டம்மை கழற்றி வைத்து விட்டு வரவேண்டும் தயாரா என்றேன். அதற்காகத்தானே கத்துக்கொண்டிருகிரேன் என்றார். ஒவ்வோரு கட்ட படப்பிடிப்பையும் முடித்து விட்டு காட்சிகளை ரஷ் போட்டு பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். கருப்பு என்ற ஒரு இளைஞன் உயிரோடு இருப்பதாகவே எனக்குப் பட்டது. இப்படி பட்டதற்கு தனுஷின் பாத்திர ஆளுமைதான் காரணம்.

வ.ஐ. ஜெயபாலனுக்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்திருகிறேதே? அவரை எப்படிப்பிடித்தீர்கள்?

நான்கு வருடங்களுக்கு முன்பு எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ஹசீன்தான், கவிஞர் வஐச ஜெயபாலனை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருமுறை அவரைப் பாருங்கள். நாம் தேடுகிற கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்று சொன்னார். அவரைப் பார்த்ததும் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. பேட்டைக்காரன் காதாபாத்திரம் பற்றிச் சொன்னேன். என்னை உங்களால் கட்டி மேய்க்க முடியுமா என்று கேட்டார். அவரைக் கையாழ்வது கொஞ்சமல்ல நிறையவே சிரமாக இருந்தது. ஆனால் அற்புதமாக தன்னை தகவமைத்துக் கொண்டார். சிறந்த துணை நடிகருக்கான விருதை விட சிறப்பு ஜூரி விருது உயர்ந்தது என்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது.

உங்கள் குரு பாலுமகேந்திரா என்ன சொன்னார்?

என மனம் மீண்டும் ஒருமுறை நிறைந்திருக்கிறது மாறா என்றார். இந்த விருதை மட்டுமல்ல.. இனி என் வாழ்நாளில் நான் பெறப்போகும் எல்லா விருதுகளையும் அவருக்கே சமர்பனம் செய்வேன். அவர் தரமான திரைக்கலைஞர் மட்டுமல்ல. சினிமா என்பது மக்கள் ஊடகம் என்பதை சொல்லித்தந்த ஆசான். அவர் இல்லாமல் நான் இல்லை. இந்த விருதும் இல்லை.

பாலுமகேந்திராவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன என்பதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?

எங்களிடம் இருப்பது பாலுமகேந்திரா கற்றுக்கொடுத்த சினிமாதான். ஆனால் அதை எங்களுடைய எண்ணத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து வேறுபடவேண்டும் என்பதற்காகவே எந்த சினிமாவையும் எடுக்கவில்லை. அப்பாவும் நாமும் ஒன்றுதான் என்றாலும் ரேகைகள் மட்டும் வேறுபடும். ரத்தவகை ஒன்றாகவே இருக்கும். ஆனால் நமக்கு என்ன வருமோ அதுதான் பிரதிபலிக்கும். வளர்ப்புமுறை, சிறுபிராயத்தில் பார்த்த சினிமாக்கள், உள் மனம் எல்லாமும் சினிமா மொழியை, நாம் இயக்கும் படத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. அவருடைய உயரத்துக்கு வர முடியாது. சின்ன அளவில்தான் அவரை நாங்கள் பின்தொடர்கிறோம். நம்முடைய இயல்பு என்னவோ அதுதான் படத்தில் கதையாக வருகிறது. பாலுமகேந்திரா ஒரு கலைகூடம். அதில் ஆயுள்முழுக்க கற்றுக்கொண்டே இருக்கலாம்.

உங்களுடைய குடும்பப்பின்னனி பற்றி சொல்ல முடியுமா? உங்களுக்கு சினிமா ஆர்வம் எப்போது வந்தது?

நிச்சய்மாக ..என்னுடைய அப்பா சித்திரவேல், கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர். அம்மா மேகலா சித்திரவேல், எழுத்தாளர். அக்கா டாக்டர். எனக்கு பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ராஜநாயகம் கொடுத்தார். 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசினார். இந்தப் பயணத்திற்கு அவர்தான் தொடக்கம். அவரே என்னை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். 1997 முதல் 2005 அதுவொரு கனாக் காலம் வரை அவரிடம் பணியாற்றினேன். 2004 ஆகஸ்டில் தனுஷ் படம் செய்யலாம் என்று சொன்னார். பொல்லாதவன் வெளியான ஆண்டு 2007 நவம்பர். அதற்கு முன் ஏழு ஆண்டுகள் காதலித்தேன். ஒரு படம் இயக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஆனால் பையன் இப்போதைக்கு படம் பண்ணப் போறதில்ல ..கல்யானத்தை முதல்ல முடிச்சிறலாம் என்று வீட்டில் திருமண தேதியெல்லாம் குறித்துவிட்டார்கள். எனது முதல் படம் தள்ளிப்போனது, திருமணம் மட்டும் நடந்தது. இப்போது ஆடுகளம் எடுத்துக்க்கொண்டிருந்தபோது என் மனைவி கற்பமாக இருந்தாள். நான் அவளோடு இருக்க வேண்டிய காலத்தை எனக்கு விட்டுக்கொடுத்தாள். இது அவளுக்கான பரிசும் கூட. மேலும் அம்மா நான் டெல்லி சென்று விருது வாங்குவதை பார்க்க வேண்டும் என்றார். அது அவருக்கு நனவாகி விட்டது.

அறிமுக இயக்குனர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஆக்ஷன், கட் சொல்வதால் மட்டும் இயக்குநராகி விடமுடியாது. ஒரு முழுமையான விழிப்புணர்ச்சி நிலையை அடைந்து, ஒரு நல்ல படத்தை எடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு பயணத்தில் இருப்பதாகவே நான் உணர்கிறேன். புதியவர்களுக்கு நான் சொல்வது உங்கள் பயணத்தில் ஓய்வு எடுக்காதீர்கள்.

இலக்கிய வாசிப்பு உங்கள் திரைக்கதைக்கு உதவுகிறதா?

பிறகு!? இருபத்தைந்து வயதில் ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கி விட்டேன். ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முயற்சித்தாலும் சில நேரங்களில் அது இயலாமல் போய்விடுகிறது. ஒரு முப்பது ஆண்டு அனுபவத்தை வைத்துக்கொண்டு, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு எப்படி கதைகள் எழுத முடியும். இரண்டு, புத்தகங்கள் என் மனப்போக்கை மாற்றியமைத்தன என்று சொல்லலாம். மங்கோலிய நாடோடிகளின் வாழ்க்கையைச் சொன்ன ஜியாங் ராங்கின் 'உல்ஃப் டோட்டம்'என்ற 600 பக்க நாவல், இருபது ஆண்டுகால வாழ்க்கையை சாறாகக் கொடுத்தது. இலக்கிய வாசிப்பு மூலம் அந்த எழுத்தாளரின் பல ஆண்டு அனுபவங்களை பத்து நாட்களில் புரிந்துகொள்கிறோம். மாணவப் பருவத்தில் படித்த அலெக்ஸ் ஹேலியின் ஃப்ரூட்ட்ஸ் என்ற நாவல். என் வாழ்க்கையை புரட்டிபோட்டது. ஓர் ஆப்பிரிக்க குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் வலியைச் சொன்ன நூல் அது. ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறான் என்பது புரிந்தது. புத்தகங்கள்தான் உலகத்தைப் பற்றிய முழுமையை நமக்குக் கொடுக்கின்றன. சினிமாக்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை. நல்ல புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன. நாங்கள் ஒரு கதையை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் இருப்பதால், சுவைக்காக படிப்பதற்குப் பதிலாக உள்ளடக்கத்திற்காக படிக்கும் கட்டாயம் வந்துவிட்டது. உதவி இயக்குனர்கள் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி தமிழ்சினிமா உலக சினிமாவுக்கு வழிகாட்டும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

அடுத்த களம் வடசென்னையா?

இன்னும் தீர்மானிக்கவில்லை. கிளவுட் நைன் நிறுவனத்திற்காக அடுத்த படத்தை இயக்குகிறேன். என்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதால், ஏற்கெனவே எழுதிவைத்திருந்த கதைக்களன்களை மாற்றலாம் என்றிருக்கிறேன். விரைவில் உங்களுக்கு அறிவிப்பேன். இந்த இனிநேரத்தில் என்னை அங்கீகரித்த தமிழ்ரசிகளை வனங்குகிறேன்.

வெற்றிநாயகனாக மிளிரும் வெற்றி மாறனுக்கு, 4தமிழ்மீடியா குழுமம், மற்றும் வாசகர்கள் சார்பில் இனிய வாழ்த்துக்களை இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்!

4tamilmedia.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞருக்கு இனிய நல்வாழ்த்துக்கள். மேலும் கலைத்துறையில் பலவற்றை சாதிக்க வேண்டும்.

காலம் சென்ற நடிகை ஸோபா விருது பெற்ற போது(படம்:பசி) சொந்த குரலில் பேசவில்லை என்று எங்கோ கேள்விப்பட்டதாக ஞாபகம். யாராவது உறுதிப்படுத்துங்கள். :unsure::unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும்,வாழ்த்துகளும்

வாழ்த்துக்கள் ஐயா..! :rolleyes:

Eezham Tamil poet gets India’s National Film Award for acting

[TamilNet, Monday, 23 May 2011, 07:26 GMT]

Well known Eezham Tamil poet VIS Jayapalan received Special Jury Award (national level) at the 58th National Film Awards of India, held on Thursday, for his performance in the Tamil film Aaduka’lam. The 67-year-old poet and writer acted the role of a cockfight ringleader in the film. The achievement is extraordinary for a debut actor, film critics said. “With a face carved out of teak and leather the patriarch of a cock-fighting clan stands like a colossus, even when he feels his power and authority ebbing through his fingers,” reads the citation he received at the film award. Born in a family of Uduvil and Delft connections at Uduvil in Jaffna, and graduated from the University of Jaffna, Shanmugampillai Jayapalan presently lives in Norway as a member of the Eezham Tamil diaspora.

Aaduka’lam, the film he acted fetched the “Golden Lotus” Best Director national-level award and Best Screenplay Writer award for its director Vetrimaaran, Best Actor award for Dhanush, the main character in the film, Best Editor award for Kishore Te and Best Choreography award for Dinesh Kumar.

Jayapalan’s poetry and short novels are among prescribed textbooks in the universities and colleges of Tamil Nadu. He received the best immigrant writer award from the Norwegian Writers Association in 1995 for a short novel written by him. His poetry, translated into English, was a part of a recent publication from the Toronto University of Canada too.

Jayapalan was student union president of the University of Jaffna in 1977.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33985

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் திரைப்படம் பற்றிய பின்னைய புடங்குப்பாடுகள் ஜெயபாலனிற்கு நடந்த திட்டமிட்ட புறககணிப்புக்கள் அவரிற்கு விருது கிடைக்காது என்றே முதலில் நான் நினைத்தேன். சிறப்பு சான்றிதழாவது கொடுத்தது நிம்மதி. சிலநேரம் ஆட்சி மாற்றமும் காரணமாக இருக்கலாம் என்றாலும் வாழ்த்துக்கள் அண்ணாச்சி ^_^

கவிஞருக்கு இனிய நல்வாழ்த்துக்கள். மேலும் கலைத்துறையில் பலவற்றை சாதிக்க வேண்டும்.

காலம் சென்ற நடிகை ஸோபா விருது பெற்ற போது(படம்:பசி) சொந்த குரலில் பேசவில்லை என்று எங்கோ கேள்விப்பட்டதாக ஞாபகம். யாராவது உறுதிப்படுத்துங்கள். :unsure::unsure::unsure:

ஷோபாவை பற்றி தெரியவில்லை. முதல் மரியாதையில் ராதாவுக்கு ராதிகா குரல் கொடுத்திருந்தார். அதனால் தான் ராதாவுக்கு விருது கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் புயட்டுக்கு வாழ்த்துக்கள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் ஐயா! ஒரு ஒற்றையடிப் பாதையை திறந்து விட்டிருக்கின்றீர்கள் , அவ்வொழுங்கில் மென்மேலும் நம்மவர்கள் சென்று வெற்றிவாகை சூட வேண்டும்! :)

வாழ்த்துக்கள் poet.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.