Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க்கடை

Featured Replies

சனிக்கிழமை காலையில் மற்றும் பொங்கலிற்கு முதல் நாள் தமிழ் மளிகைக்கடைக்குப் போவது எனக்கு மிகப்பிடிக்கும். அது என்ன மாயமோ மந்திரமோ, தமிழ் கடையில் காணும் எங்கள் மக்கள் எல்லோர் மீதும் ஒரு அதிகரித்த ஈர்ப்பை உணருகிறேன். ஒரு ஆச்சியைக் கண்டால் கையைப் பிடிச்சுக் கூட்டிப்போகவேணும் போல, ஒரு அப்புவைக் கண்டால் அவர் தன்னைப் பெரிய மனிதர் என்று மீண்டும் உணரும் வகை அவரிடம் ஏதாவது கேட்கவேணும் போல, ஒரு அண்ணையைக் கண்டால் எப்பிடிச் சகோதரம் சுகம் எண்டு கேட்கவேண்டும் போல, வடிவான பொம்பிளைப் பிள்ளையள் ஆரைப் பாத்தாலும் முகவரி பட ஜோதிகாவைப் பாத்தது போல—எங்கட பிள்ளையள் எண்ட உரிமையோட—ஒரே உணர்வுப் பிரவாகம். இது மனிதரில் மட்டுமல்ல, கருணைக் கிழங்கில, கத்தரிக்காயிலை என்று பல பரிமாண உணர்வுப் பிரவாகம். கறுப்பினத்தவர்களிற்கு சிகையலங்கார நிலையம் போல தமிழ்க்கடை எங்களிற்குள் ஆகிவிட்டிருக்கிறது போலும். பழக்கப்பட்ட வண்டில் மாடு தானா இடத்தைச் சென்றடைவதைப் போல, கால் என்னை இறைச்சி மீன் கடைக்குள் நிறுத்தியிருந்தது. அடுக்கிவைத்திக்கப்பட்ட மீன்களில் பெரியதொன்றின் திறந்த கண்களிற்கூடாக ஒரு பிளாஷ்பக் என்னுள் ஓடத் தொடங்கியது.

இருபத்தியிரண்டு வருடங்களின் முன்னர் கனடாவில் கொத்துரொட்டி சாப்பிட விரும்பினால் அதுக்கு என்று ஒரு முயற்சி தேவைப்படும். கார்வைத்திருப்பவர்கள் ஆரையேனும் கண்டுபிடித்துக் கொத்துரொட்டிக் கடைக்குச் செல்லவேண்டும். அப்பிடி ஒரு நாள் ரொறன்ரோ மத்தியில் இருக்கும் ஒரு கொத்துரொட்டிக் கடைக்குச் சென்று உண்டு திரும்புகையில் பரட்டைத் தலையோடு தனக்குத் தான் சிரித்தபடி ஒரு தமிழ் இளைஞன் சென்றுகொண்டிருந்தான். தனது குடும்பத்தினர் யாரையோ கனடா அழைப்பதற்காக அவன் கொடுத்த காசை மூன்றாவது தடவையாகவும முகவர் சுத்தியதால் மனம் பிறழ்ந்துபோனதாகச் சொன்னார்கள். ஏனோ அன்று அந்த இளைஞனின் கண்ணை உற்றுப் பார்க்கத்தோன்றியது. இந்த மீனின் கண் அந்தக்கண்களை நினைவு படுத்தின. நான் மீன் வாங்காது கடைக்குள் வேறு பொருட்கள் நோக்கி நகர்ந்தேன்.

தமிழ் கடையின் வியாபார மூலதனமே ஞாபக வியாபாரம் தான். ஊரில் இருந்ததைப் போல என்ற விதத்தில் தான் பொருட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும். யாழ்ப்பாண முறையில் தாயரித்த தூள் தொடங்கி எல்லாம் அந்த நிலாக்காலத்தை திரும்பப் பாக்கிற ஆசையைத் தான் காசாக்கிக் கொண்டிருக்கின்றன. நெக்ரோ குடிப்பவர்களைப் பாhக்கையில் எனது உடல் பருமன் அதிகரிப்பது போல் எனக்கு நிகைக்கத்தோன்றுவதுண்டு. ஆனால் ஞாபக வியாபாரத்தில் நெற்றோ ஒரு மைல்கல். இப்பிடியே என்ர பாட்டில மண்டைக்குள்ள விடயங்கள் விரிந்துகொண்டிருக்க நடந்துகொண்டிருந்த நான் கருவேப்பிலையை நல்லதாய் எடுப்பதற்காக கவனத்தைக் கருவேப்பிலையில் குவித்தபடி நிக்கேக்க ஆரோ தோளில தட்டத் திரும்பிப் பார்த்தால், ஏறத்தாள பதினைந்து வருடங்கள் காணாத ஒரு முகம், துளியளவும் மாற்றமின்றி நான் இறுதியாகக் கண்ட அதே வடிவத்தில் முகம் முழுவதுமாகச் சிரித்தபடி நின்றிருந்தது. கனடாவில் தான் அறிமுகமான முகம் அது. நன்கு பரிட்சமான முகம் மட்டுமல்ல அந்த முகத்தோடு தொடர்புடைய, ஒரு குறு சம்பாசனை நிகழ்த்துவதற்குப் போதுமான அத்தனை தரவுகளையும் மூளை உடனடியாகத் தந்தது, பெயரைத் தவிர.

நாங்கள் யாரு, பாஸ்போட்டைக் கிளித்தெறியாமல் ஆனால் பாஸ்போட்டில் விசாவில்லாமல் கனடாவில இறங்கின ஆக்கள். எனக்கு அவரது பெயர் ஞாபகமில்லை, அவரிற்கு எனது பெயர் ஞாபகமில்லை, இருவரிற்கும் இது தெரிந்தபோதும் தெரியவில்லை எனக் கற்பனை செய்தபடி சம்பாசனை நிகழ்த்தி முடித்து விலத்திச் சென்றோம்.

யாழ்ப்பாணத்தில சைக்கிள் ஓடுவதில் பெடியங்களிற்கும் பெட்டையளிற்கும் என முத்திரை பதிக்கப்பட்ட ஸ்ரைல் உண்டு (இப்ப எப்பிடியோ தெரியாது). கடையில் ஒரு பெண் யாழ்ப்பாணத்தில சைக்கில் ஒடும் பள்ளி மாணவி போல் நடந்து வருவது கண்ணில் பட்டது. சிசு;சுவேசன் சாங்ஸ் சிலது மனதில விரிந்த பிறகு மனம் யாழ்ப்பாணத்திற்குப் போய்விட்து. உடல் மளிகைப் பொருட்களை ஒரு இயந்திரனாக வாங்க்கிக் கொண்டிருந்தது. எத்தினை சைக்கிள் கதைகள். ஓன்றா இரண்டா. எத்தினையை நான் இரைமீட்டிப் பாப்பது, எங்கிருந்து நான் தொடங்குவது. முதலில் ஞாபகத்தி;ற்கு வந்தது, யாழ்நகரை அண்டிய ஒரு தெருவில் மிகவும் அழகான ஒரு மாணவி. எங்களிற்கு அவர் வயதில் மூத்தவர் என்றபோதும், வடிவான விசயங்களிற்கெல்லாம் வயது ஒரு பொருட்டே இல்லை. இந்தப் பெண்ணைச் சுத்தி அண்ணைமார் இல்லாத நேரமிருக்காது. ஆனால், அழகியவள் என்பதற்காக பதுமை மென்மை பயம் போன்ற பீலாக்கள் பம்மாத்துக்கள் காட்டும் சாதாரண யாழ் நகர மாணவி இல்லை அவள். ஒரு முறை ஒரு அண்ணைக்கு அந்தப் பிள்ளை சொன்ன ஒரு வசனம் எத்தினையோ சுவர்களில் எதைஎதையோ வாசித்த பல அனுபவம் உள்ள எங்களிற்கே முழங்கால் கூசச் செய்தது. கொஞ்சம் ஓட்டோகிறாப் ஆழமா ஒடினதில படம் எடுக்க மறந்துபொயிருந்தேன். காசாளரிடம் வந்தபோது தான் நினைவிற்கு வர, பொருட்களை வைத்து விட்டுப் படக் கடைக்குப் போனேன்.

ஏதாவது புதுப்படம் வந்ததா அண்ணை என்றேன். ஏழாம் அறிவு இருக்குக் கொண்டுபோங்கோவன் என்றார். நீங்களே வைத்திருங்கோ என்று விட்டுக் காசாளரிடம் மீண்டு காசைக் கொடுத்து வெளியேற முயன்ற போது, காசாளர் ஏதோ சொல்ல வேண்டும் என்று கண்களால் சைகை செய்தார். காதைக் கொடுத்தபோது, '****னை இயக்கம் தான் கொன்றதாம்' என்றார். எப்படிக் காரில் ஏறினேன் என்று தெரியவில்லை. காரின் சாவியைப் போட்டபோது தான் பதினைந்து வருடத்தின் பின்னர் சந்தித்த அந்த முகத்தின் பெயர் ஞாபகம் வந்தது. கார் வீடு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தமிழ் ஞாபகம் வேண்டும் என்று தமிழ் பண்ணiலை வானொலியைப் போட்டால் மரக்கறி விலைப் பட்டியல் வாசித்துக் கொண்டிருந்தார்கள். 96.3 F.M க்கு மாத்தி ஆங்கிலேயே கிளாசிக் பாடல்களைக் கேட்டபடித் தமிழ்க் கனேடியன் பயணித்துக்கொண்டிருந்தேன்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவம்தான்.. தாயகத்தில் முன்னேற்றங்கள் வந்தாலும் புலம்பெயர் தமிழர் தாங்கள் வந்த காலத்தில் இருந்த தாயக நிலைமைகளை அப்படியே உறை நிலையில் புலம் பெயர் நாடுகளில் வைத்திருக்கத்தான் விரும்புகின்றார்கள். இல்லாவிட்டால் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு மனநிலை பிறழ்ந்துதான் விடும்.. இப்படியான உறைநிலையில் உள்ள தமிழர்களின் பிள்ளைகள்கூட 12 - 13 வயதிற்கு அப்புறம் தமது பெற்றோருடன் மனம் திறந்த உரையாடலை நிகழ்த்துவதில்லை.

ஒவ்வொருவரும் தாம் தாம் குடிபெயர்ந்த நாடுகளிற்கு ஏற்ப இசைவாக்கம் அடையாமல், பல்தேசியத்தை வளர்க்கின்றோம் என்ற கோஷத்துடன் இருந்தால் எந்தப் பெரிய நகரத்திலும் தனித்தீவில் இருந்தமாதிரித்தான் இருக்கவேண்டிவரும்..

இன்னுமொருவன் பழையதிற்கும் புதியதிற்கும் பாலம் போட்டிருக்கின்றீர்கள் . முடிவெட்டும் கடையிலும் , தமிழ்கடையிலுமே விண்ணாணங்கள் தலைகால் முளைத்து ஊற்றெடுக்கும். அதன் விளைவுகளை ஏனோ விண்ணாணம் பறைபவர்கள் உணருவதில்லை . இதனால் எனக்கு இப்படிப்பட்ட இடங்களில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுவதுண்டு . பாராட்டுக்கள் இன்னுமொருவன் . தொடருங்கள் உங்கள் கதைகளை இடைவிடாது . எனது சிறியகாணிக்கை முதலாவது பச்சை :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

,நினைவுகளை மீட்கும் நல்ல ஒரு கதை!

தமிழ்க் கடைகளுக்குப் போகும் போது தெரிந்த முகங்களைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்!

ஆனாலும், இந்தக் கடைகளில் விற்கும் பொருட்களின் விலைகளைப் பார்க்கும் போது 'ஆத்திரம்' மட்டுமே மிஞ்சும்!

'தண்ணீர் பில்லைப் பார்க்கும் போது வருகின்ற கோபம் மாதிரி!

வரியும் கட்டுவதில்லை. வேலை செய்பவர்களுக்குக் கருவாடுச் சம்பளம்! மனிதாபிமானம் இவர்களிடம் மருந்துக்கும் கிடையாது.

சாமிப் படங்களுக்கு மட்டும் மாலைகளுக்கும், சந்தனக் குச்சிகளுக்கும் குறைவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொன்னால் முன்பு தமிழ் கடைகளுக்கு வாரா வாரம் செல்வேன். மீன், தூள், மரக்கறி இவற்றுடன் தமிழ் பத்திரிகைகள் என பல தரப்பட்ட எமது சாமான்களை வாங்குவேன். இப்போ இங்குள்ள மீன்களும், மரக்கறிகளும் எனக்கும் மனுசிக்கும் பிள்ளைகளுக்கும் பழகி விட்டது. இங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் சூடை (sprat ) , ஒட்டி (Sea Bream ) கொடுவாய் (Sea Bass ) சூரை (Tuna ) சாளை (Sardine )

விலாங்கு (Eel ) கொய் (Herring ) கும்ளா (Mackeral ) சிங்கிரால் (Lobster ) போன்ற உடன் மீன்கள் கிடைக்கும். அன்றாடம் வேண்டி சமைக்கலாம். மலிவும் சுத்தம் செய்தும் தருவார்கள். மரக்கறிகள் இப்போது எங்கும் தாரளமாக கிடைக்கிறது. நான் இருக்கும் இடம் லண்டனுக்கு வெளியே உள்ளது. இங்கு ஒரு வெள்ளைக்காரன் மரக்கறி கடை வைத்திருக்கின்றர் அதில் முருங்கைகாயில் இருந்து கறிவேப்பிலை வரை வேண்டலாம். இப்போ யாழ்ப்பான முறையில் தயாரிக்கபட்ட தூள்தான் தமிழ்கடையில் வாங்க வேண்டும். பொங்கல் திவசம் நவராத்திரி போன்றவற்றுக்கு சாமான் வேண்ட தமிழ் கடைகளுக்கு செல்வேன். சில கடைகளில் விலை அடிக்கும் பொது கவனமாக இருக்க வேண்டும், ஒரு சாமானுக்கு இரு முறை அடிப்பார்கள் அல்லது இல்லாத சாமனுக்கு விலை அடிப்பார்கள், இது எனது சொந்த அனுபவம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் கடைக்கு போய் நம் சொந்தங்களை, நண்பர்களை சந்திப்பது ஊருக்கு போய் வந்த மாதிரி தான்.

புதுச் சூழலில் பழைய வாழ்வை ஞாபக்த்துக்குக் கொண்டுவரும் ஒரு மையம்போல் தமிழ்க்கடைகள் உள்ளது. உங்களின் சிந்தனை பரந்துபட்டுள்ளதால் இந்த மையப்புள்ளியி்ல் இருந்து அதிக தூரத்தை உங்களால் பார்க்க முடிகின்றது என்றும் சொல்லலாம். உங்கள் எழுத்துக்கள் ஊடான சிந்தனையோட்த்துக்கு மேலதிகமாக எழுதமுடியவில்லை ஏனெனில் நான் தமிழ்க்கடைகளுக்கு இதுவரை போனதில்லை. வாசிக்கும் போது போகவேண்டும்போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு வந்தால் மறக்காமல் சலூன், தமிழ் கடை,பந்தடிக்கும் இடம்,கலியாணவீடு , செத்த வீடு , பிறந்த நாள் கொண்டாட்டம் என்று எல்லாவற்றுக்கும் ஆவலாக செல்வதுண்டு. தெரிந்த ஆட்கள், படித்த பெடியள்/பிள்ளைகளுடன் கதைக்கும் போது ஏனோ ஊரில் நின்ற ஞாபகம் தான் வரும்.எமக்கு நாம் வளர்ந்த சூழ்நிலையை நினைவு படுத்துவது போல இலங்கை வரும் வெள்ளையர் மக்டோனால்ட், KFC, பேகர் கிங் என அவர்களும் வருவதை பார்த்து இருக்கிறேன்.

நினைவூட்டலுக்கு நன்றி இன்னுமொருவன்.

பிற்குறிப்பு:ஊரில் உள்ள சனசமூக நிலையம் போல் கனடாவிலும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Edited by nunavilan

தமிழ் கடையினை தேடிப்போய் சாமான்கள் வாங்குபவர்களின் நானும் ஒருவன். NoFrills, Walmart போன்றவற்றினை விட குறைவாக பில் வருவதால் மட்டும் அன்றி (இவற்றுக்கு போனால் வேண்ட நினைத்திராத பொருட்களையும் வாங்க வேண்டி வரும் super market என்பதால் பில் பெரிதாக வரும்), அங்குள்ள பொருட்கள் நான் சிறு வயதுமுதல் பாவித்த பொருட்கள் என்பதாலும் அங்கு போவேன். உடலும் மனசும் பழக்கப்பட்ட பொருட்களைத் தவிர வேறு எதனையும் நாட விரும்பாத காரணத்தினால் தான் தமிழ்கடைக்கு போவதுண்டு; ஆயிரம் பெண்களை பார்த்து இருந்தாலும் ஊர்ப் பெண்களை காணும் போது வரும் ஒரு பிரவாகம் போன்றது இது.

27 வருட இலங்கை வாழ்க்கையில் நான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலம் வெறும் 7 வருடம் மட்டும்தான். சிங்கள ஊரான குருணாகலிலும், பின் கொழும்பிலும் வாழ்ந்த காலமே அதிகம். இன்னுமொருவன், நீங்கள் சொல்வது போல இது வெறும் ஊர் நினைவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் இல்லை. எம் உணவு முறை, சாப்பாட்டு ருசி என்பன சார்ந்தவை என நம்புகின்றேன்

  • தொடங்கியவர்

கிருபன், கோமகன், புங்கையூரான், அகத்தியன், சுகன், நுணாவிலான், நிழலி உங்கள் அனைவரது கருத்திற்கும் நன்றி.

இந்தக் குறிப்பை ஏனோ பகிரவேண்டும் என்று தோன்றியதால். பகிர்ந்தேன். எந்தப் பகுதியில் இணைக்கலாம் என்று தெரியவில்லை, எல்லாக் குறிப்பும் ஒரு கதைதான் என்ற வகையில் கதைகதையாம் பகுதியில் இணைத்துள்ளேன்.

கிருபனின் கருத்தோடு தனிப்பட்ட ரிPதியில் எனக்கு பூரண உடன்பாடு, தீவாக வாழ்பவர்களால் அவர்களிற்கு மட்டுமன்றி மற்றையவர்களிற்கும் சிக்கல்கள் உள்ளன. எங்களவர்கள் மாறாது, தமிழர்களாக, தீவாக வாழ்வது நன்மையானதாக எங்களிற்குப் படலாம், ஆனால் ஒவ்வொரு சமூகத்தவரும் தாங்களாகவே மாறாது சிறு சிறு தீவுகளாக வாழத் தலைப்படுகையில் பல அசௌகரியங்கள் தோன்றுகின்றன.

புங்கையூரான் தமிழ்கடைகள் சார்ந்து முன்வைத்துள்ள ஆதங்களிலும் மேற்படி கருத்தின் சாயல்களை அவதானிக்க முடிகிறது.

கோமகன் கூறும் ஊர்வம்பும் உண்மைதான். ஆனால் ஊர்வம்பு என்பது கனடாவில் கடைகளைக் காட்டிலும் தொலைபேசி வழி அதிகம் நடக்கும் என நினைக்கிறேன்.

சுகன் கூறியதைப் போல, தமிழ் கடையை அச்சாக வைச்சு எங்களப் பற்றி நினைச்சுப் பாத்த ஒரு முயற்சி தான். எங்கள் தாயகத்தில் நடந்த நடக்கின்ற சோகங்களின் பிரமாண்டத்திற்கு முன்னால் புலத்தின் ஞாபகங்கள் மிகச்சிறிதாகத் தெரிந்தாலும், இங்கும் எங்களிற்கு நிறையவே கதைகள் இருக்கின்றன. ஒரு மிகச் சிறிய இரைமீட்பு மட்டுமே இது.

நிழலி, நான் தமிழ்க்கடையைக் குறைசொல்லவில்லை. எங்கெல்லாம் சந்தைக்கான அடித்தளங்கள் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் சந்தைகள் வெளிப்படத்தான் செய்யும். ஊர்நினைவு ஊhர்ச்சாப்பாடு என பலமான சந்தை இருக்கவே செய்கின்றது. இதில் சரி தவறு சொல்வதற்காக ஞாபக வியாபாரம் எனக் கூறவில்லை. இது ஒரு அவதானம் மட்டுமே. பூனகரியில் விழைந்த மொட்டைக்கருப்பன் என்று அரிசி விற்கப்படுவது கறுப்பன் அரிசிச் சோறு உண்ணும் உணவுப் பழக்கத்தை மட்டும் சாhந்;ததல்ல—குத்தல் அரிசி எந்த பிறான்டிலும் பல கடைகளில், சில சமயம் தமிழ்கடை விலையைக் காட்டிலும் மலிவாகவும் வாங்கலாம். ஆனால் 'பூனகரியில் விழைந்த' என்ற சொல்லிற்கும் ஒரு தாக்கம் இருக்கவே செய்கின்றது (அது பூனகரியில் விழைந்ததா என்பது வேறு கதை). இது போன்றே யாழ்ப்பாணத் தூள், சிலோன் விளை, தோலோடு வைக்கப்பட்டிருக்கும் பனங்கிழங்கு, தோலகட்டி நெல்லிக்கிரஷ; என்று ஞாபக வியாபாரம் இல்லாமல் இல்லை. இது தவறு எனவில்லை, அனைத்துச் சமூகத்திலும் ஞாபக வியாபாரம் இருக்கவே செய்கிறது. கடந்தகாலத்தை இன்பமயமாக நினைப்பதன் உளவியல் பற்றியு முன்னரும்; பேசியபடியால் திருப்பப் பேசவில்லை.

Edited by Innumoruvan

பல சமயங்களில் இன்னுமொருவனின் எழுத்து விளங்கியும் விளங்காத மாதிரியும் இருக்கும் .தமிழ்கடையும் அதே ரகம் .பள்ளி நாட்களில் புரியாத ஆங்கிலப்படங்களை பார்த்தால் வகுப்பில் வந்து அந்த மாதிரிஎன புழுகி மற்றவர்களையும் போய் ஏமாற வைப்போம் .அப்படித்தான் இன்னுமொருவனின் கதைகளும் எனக்கு இருக்கு .

கிழமையில் எப்படியும் இரண்டுதரம் தமிழ்கடைக்கு போவேன் .எனது வீட்டை சுற்றி எழு.எட்டு தமிழ்கடைகள் இருக்கு ,நேற்று இன்னொன்று திறப்புவிழா ,பெற்றோல் அடிப்பதுபோல் அகப்பட்டதற்குள் புகுந்துவிடுவேன்.

ஒன்று மீன்,மரக்கறி வாங்க அல்லது சுப்பர் சிங்கர் ,திருமதி செல்வம் சீ.டி எடுக்க .அங்கிருக்கும் முக்கால்வாசி பொருட்கள் பக்கம் போனதில்லை. பல கடைக்காரர்கள் தெரிந்தவர்கள் ஆதலால் சிறிது நேரம் ஊர்வம்பு பேசிவிட்டுத்தான் வருவேன். நான் சிறிது தெரிந்தவர்களுடனும் கலோ என்று உரையாடல் தொடங்கிவிடுவேன்.பலர் ஒருநாள் தெரிந்த மாதிரியும் இன்னொரு நாள் தெரியாத மாதிரியும் இருப்பார்கள் ,எம்மவரின் இந்த குணம் இன்றுவரை எனக்கு பிடிபடவில்லை.ஒன்றுமட்டும் தெரியும் அனேகம் பலர் மண்டை முட்ட பிரச்சனைகளுடன் தான் அலைகின்றார்கள் .புலம் பெயர்ந்த வாழ்வுடன் ஒட்டமுடியாமல் போனதால் என நினைக்கின்றேன்.

அர்ஜூன் பேசாமல் இந்த இடத்தில இடத்தை மாத்துங்கோ , பின்பு பாருங்கோ எப்பிடி பிரகாசிப்பியள் எண்டு :) :) :) .

  • தொடங்கியவர்

பல சமயங்களில் இன்னுமொருவனின் எழுத்து விளங்கியும் விளங்காத மாதிரியும் இருக்கும் .தமிழ்கடையும் அதே ரகம் .பள்ளி நாட்களில் புரியாத ஆங்கிலப்படங்களை பார்த்தால் வகுப்பில் வந்து அந்த மாதிரிஎன புழுகி மற்றவர்களையும் போய் ஏமாற வைப்போம் .அப்படித்தான் இன்னுமொருவனின் கதைகளும் எனக்கு இருக்கு .

விமர்சனமத்திற்கு நன்றி அர்யுன். இயன்றவரை தெளிவாக எழுத வருங்காலங்களில் முயற்சி எடுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ என்ரை பிளைப்பில மண்ணைப்போட்டு விடாதையுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ என்ரை பிளைப்பில மண்ணைப்போட்டு விடாதையுங்கோ. :lol:

நீங்கள் எதற்காக அலட்டிக்கணும் Sagevan

இது வெளியில் இருந்தான விமர்சனம்.

உள்ளே வந்து பார்த்தால்தானே தெரியும் எமது சேவையின் தார்ப்பரியம்.

என்ன சொன்னாலும் எழுதினாலும்சுற்றி சுற்றி சுப்பற்ற கொல்லைக்குள்ளதான்

மிளகாய்த்தூளுக்கும் முருங்கக்காய்க்கும் வரணும்

100 வருடமா இருக்கிற ஆபிரிக்கனும் அடையாரும் திருந்தல. இவர்களா??? :icon_idea: :icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்

தமிழ் வியாபாரிகளைச் சீண்டுவது துளியளவும் எனது நோக்கமாக இருக்கவில்லை. எனினும் பல பின்னூட்டங்களைப் பாhக்கையில எதிர்பாரா விதத்தில் அந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ என்ரை பிளைப்பில மண்ணைப்போட்டு விடாதையுங்கோ. :lol:

சகீவன், உங்கள் மனம் புண்பட்டிருந்தால், மன்னித்துகொள்ளுங்கள்!

நான் எங்கள் உள்ளூர்த் தமிழ்க் கடைகளையே மனதில் வைத்து அவ்வாறு எழுதினேன்!

முருங்கைக் காய்- கிலோ பதினைந்து டாலர் (குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குப்பையாக விளைவது)

தேங்காய் -மூன்றரை டாலர் (இதுவும் குயின்ஸ்லாந்து, டார்வின் பகுதியில் விளைவது)

கருவேப்பிலை ( மூன்று, நாலு காம்புகள்)-ஒரு டாலர். (அவுஸ்திரேலியாவில் இது ஒரு களையாகக் கருதப் படுவது)

இடியப்பங்கள் ஆரம்பத்தில் சம்பல் சொதியோடு , பெரிதாக ஆரவாரமாக வந்தன!

இப்போதெல்லாம் மெலிந்து போய், விலையும் கூடிப் போய் வருகின்றன!

இடியப்பத்துக்காகக் கனடாவுக்கா ஓடிபோக முடியும்!

அந்த வைத்தெரிச்சலைத் தான் எழுதினேன்! எவரையும் புண் படுத்தும் எண்ணமில்லை!

Edited by புங்கையூரன்

தமிழ்க் கடைக்குப் போவது சாமான்கள் வாங்குவதோடு ஊர் ஞாபகங்களை மீட்டிப் பார்க்கவும் என நினைக்கிறேன்.

முன்பு இங்கு ஒரு தமிழ்க் கடை, ஊர்க் கடைகள் மாதிரி இருக்கும். ஒரே பலசரக்கு மணம். மரக்கறிகளை பிரம்புக் கூடையில் வைத்து தண்ணீர் தெளித்து வைத்திருப்பார்கள். ஊர்ச் சந்தை மாதிரி இருக்கும். பெரிய துப்பரவாக இராது. முதலாளியின் நடை உடை பாவனையெல்லாம் ஊர் வியாபாரி மாதிரிதான். வியாபாரமும். அமோகமாக நடந்தது.

புதிய நிர்வாகம் கடையைப் பொறுப்பெடுத்து சுப்பர் மார்கட் மாதிரி கடையை புனருத்தாரணம் செய்தார்கள். அதோடு வியாபாரம் படுத்தது.

சனிக்கிழமைகளில்(காலை ஐந்து மணி) லண்டனில் உள்ள Billingsgate மொத்த மீன் சந்தைக்கு அதிகமாக தமிழர்கள் வருவார்கள். மலிவு விலை என்பதால் மாத்திரம் அல்ல ஊரில் மீன் சந்தைக்கு போன மாதிரி ஒரு உணர்வென்று பலர் சொல்லியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கடைகள் பற்றிய நல்ல பதிவு. அமெரிக்காவின் பனியுறைந்த ஒரு மூலையில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு தமிழ்க்கடைகளின் அருமை நன்கு தெரியும். கனடாவுக்கு முதன் முதலாக வந்த போது ஒரு தமிழ் உணவகத்தில் ("அம்மா" உணவகமோ ஏதோ என்று நினைவு) ஏற்பட்ட அனுபவம் சுவாரசியமானது. இரண்டு மூன்று தடவைகள் இந்த உணவகத்தைக் காரில் கடந்து போன பின்னர், மனைவியின் ஆர்வத்திற்காக உள்ளே போய்ப் பார்க்கலாம் என்று இறங்கினோம். உள்ளே போனதும் இந்த உரையாடல் நடந்தது:

கடைக்காரர்: வாங்கோ! என்ன சாப்பிடுறீங்க?

நான்: என்ன இருக்குது?

கடைக்காரர்: என்ன வேணும் உங்களுக்கு?

இதன் பிறகு ஒரு நீண்ட, இப்போது நினைவில் இல்லாத ஒரு மதிய உணவுப் பட்டியலை பாடல் போல ஒப்புவித்தார். நான் மூச்சடக்கிப் போய் சுதாரித்து ஒரு மதிய உணவுப் பாசல் பல கறிகளுடன் எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டோம். ஆறு டொலர்கள் தான் இருவரும் சாப்பிட்டும் கொஞ்சம் மிச்சமிருந்தது சாப்பாடு. நல்ல ருசியும் கூட!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதற்காக அலட்டிக்கணும் Sagevan

இது வெளியில் இருந்தான விமர்சனம்.

உள்ளே வந்து பார்த்தால்தானே தெரியும் எமது சேவையின் தார்ப்பரியம்.

என்ன சொன்னாலும் எழுதினாலும்சுற்றி சுற்றி சுப்பற்ற கொல்லைக்குள்ளதான்

மிளகாய்த்தூளுக்கும் முருங்கக்காய்க்கும் வரணும்

100 வருடமா இருக்கிற ஆபிரிக்கனும் அடையாரும் திருந்தல. இவர்களா??? :icon_idea: :icon_idea: :icon_idea:

நன்றி விசுகு.நானும் பகிடிக்குத்தான் எழுதினேன்.என்றாலும் உங்கள் அக்கறைக்கு மிக்க நனறி.அத்துடன் இப்ப எனது பிரதான வாடிக்கையாளர்கள் ஆபிரிக்கர்கள்தான் :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வியாபாரிகளைச் சீண்டுவது துளியளவும் எனது நோக்கமாக இருக்கவில்லை. எனினும் பல பின்னூட்டங்களைப் பாhக்கையில எதிர்பாரா விதத்தில் அந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

நானும் உங்கள் பதிவை ரசித்து வாசித்தேன்.நான் கடைக்கு போகும் நுகோர்வராக இருக்கும் போது எனக்கும் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளன.இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு என்று பெரிய வார்த்தையை பயன்படுத்தவேண்டுமா. :rolleyes: தொருங்கங்கள் உங்கள் பதிவுகளை :)

சகீவன், உங்கள் மனம் புண்பட்டிருந்தால், மன்னித்துகொள்ளுங்கள்!

நான் எங்கள் உள்ளூர்த் தமிழ்க் கடைகளையே மனதில் வைத்து அவ்வாறு எழுதினேன்!

முருங்கைக் காய்- கிலோ பதினைந்து டாலர் (குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குப்பையாக விளைவது)

தேங்காய் -மூன்றரை டாலர் (இதுவும் குயின்ஸ்லாந்து, டார்வின் பகுதியில் விளைவது)

கருவேப்பிலை ( மூன்று, நாலு காம்புகள்)-ஒரு டாலர். (அவுஸ்திரேலியாவில் இது ஒரு களையாகக் கருதப் படுவது)

இடியப்பங்கள் ஆரம்பத்தில் சம்பல் சொதியோடு , பெரிதாக ஆரவாரமாக வந்தன!

இப்போதெல்லாம் மெலிந்து போய், விலையும் கூடிப் போய் வருகின்றன!

இடியப்பத்துக்காகக் கனடாவுக்கா ஓடிபோக முடியும்!

அந்த வைத்தெரிச்சலைத் தான் எழுதினேன்! எவரையும் புண் படுத்தும் எண்ணமில்லை!

நன்பா இதுக்கெல்லாமா மன்னிப்பு :) .நானும் பகிடிக்குதான் எழுதினேன்.பண்பட்ட மனது இலகுவில் புண் படாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை இடத்திலை ஒரு பாண்டிச்சேரிக்காரர் கடை வைச்சிருக்கிறார். அங்கை போனல் தமிழர் யாரையும் காணஏலாது இருந்தால் தானே காணுறத்துக்கு. கறுவல்களும் அரபு ..சீனாக்காரரை காணலாம். பாண்டிச்சேரி காரரோடை பாதி தமிழ் பாதி பிரெஞ்சு கதைச்சு சாமானை வாங்கிக் கொண்டு வந்திடுவன்.

இன்னுமெருவனின் ஆக்கங்களை நான் விரும்பி வாசிப்பேன் சிலது எனக்கு புரியாதது போல் இருக்கும் ஆனாலும் வாசித்து முடித்த பின் அவர் சொல்ல வந்தது புரிந்தது போல் இருக்கும்.......

நெதர்லாந்தில் இருந்த ஒரு பெரிய தமிழ்க்கடையும் நட்டத்தில் போய் இழுத்து பூட்டிவிட்டார்கள். போனவருடம் ஜேர்மனியில் கோபுரா ஞானம் என்ற கடைக்கு போனேன் நல்ல கூட்டம் அங்கை நான் விரும்ப்பி தேடிப்பார்த்த பொருட்கள் ஒன்று சிறுவயதில் ஊரில் சாப்பிட்ட இனிப்புகள் உணவு பண்டங்கள் மற்றது தமிழ் பெண்களையும் அனைவருடனும் பேச வேண்டும் என்ற உணர்வு ஆனால் அங்கு வந்தவர்களுக்கு அந்த ஆர்வம் இருந்தது போல் இருக்கவில்லை இருந்தும் ஒரு சிலர் கூட பேச்சுக் கொடுத்து பார்த்தேன் சிலர் 30 40 தமிழர்கள் வாழும் சிற்றியில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு எங்களை போல 4 5 குடுமபம் இருக்கிற சிற்றி ஆக்களை போல வாய் பார்க்கிற ஆர்வமோ இவை எந்த ஊர் எந்த சாதி ஒரு முறையில் சொந்தமோ என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை...........

வினித், உங்களுக்கு கனடா தான் சரியான இடம். அறுவைக் கப்பல்கள் ஆங்காங்கே ஆவியாக திரிகின்றன. :lol: :lol:

வினித், உங்களுக்கு கனடா தான் சரியான இடம். அறுவைக் கப்பல்கள் ஆங்காங்கே ஆவியாக திரிகின்றன. :lol: :lol:

இளம் வயதில் அர்சுணன் கண்ணுக்கு தெரிந்தது இலக்கு மட்டும் தான் என்பது போல அந்த வயதில் இளம் பெண்களுக்கு போன் நம்பர் கொடுப்பதும், எம் எஸ் என் ஜடி கொடுத்து பேசுறதுமாக காலம் போய்விடும் ஆனால் 30 32 தாண்டியதும் பழைய நிணைவுகளும் ஊர் புதினமும் 35 36 வயது தாண்டிய அன்ரிகளுன் அரவனைப்பு( அன்பு)ம் தான் நாடுது................

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தில் இருந்த ஒரு பெரிய தமிழ்க்கடையும் நட்டத்தில் போய் இழுத்து பூட்டிவிட்டார்கள். போனவருடம் ஜேர்மனியில் கோபுரா ஞானம் என்ற கடைக்கு போனேன் நல்ல கூட்டம் அங்கை

நமீதா வந்த நேரம் பார்த்துப் போயிருக்கின்றிர்களோ வினித் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.