Jump to content

ஆவிகள் உண்மையா??


Recommended Posts

பேய் பிசாசு என்பவற்றை நம்பாத ஆள் நான்..! :rolleyes: ஆனால் அண்மைக்காலமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து வருகிறேன்..! இதில் ஒரு இரவு முழுக்க பேய் வீடுகளில் தங்கி ஆராய்ச்சி செய்கிறார்கள் மூவர்..! :unsure:

இந்த முயற்சிக்கு சிலவகையான மின்னியல் உபகரணங்களைக் காவிச் செல்கிறார்கள்..! மனிதனின் காதுகளுக்கு கேளாத அதிர்வலையில் உள்ள ஒலிகளைப் பதிவு செய்கிறார்கள்..! இது ஆவிகளின் உரையாடலாக இருக்கலாம் என்கிறார்கள்..! :huh:

நீங்களும் கண்டு களியுங்கள்..! :D

http://www.youtube.com/watch?v=pe3hQVgAACY

எனக்குள்ள கேள்விகள் இவை..

  1. சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது..! அது உண்மையானால் அகால மரணம் அடைபவர்களின் உடலில் உள்ள சக்தி என்னவாகும்? :rolleyes:
  2. மறுபிறப்பு பற்றி பல இனங்களிலும் நம்பிக்கைகள் உள்ளன..! இறப்பவர்களின் ஆன்மா மீண்டும் பிறக்கும் என்கிற கருத்தியலில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? :rolleyes:
Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

winchester mystery house க்கு அருகில் தான் பல வருடங்கள் வசித்தேன்.ஒரு முறையும் உள்ளே சென்று பார்க்கவில்லை. :) :)

Link to comment
Share on other sites

மேற்குலக நாடுகளில் செத்த உடல்களில் மீண்டும் உயிர் (Zombie) வருவதைப்பற்றி பல நூறு படங்கள் / தொலைக்காட்சி படங்கள் உள்ளன. இப்போதும் கூட வாக்கிங் டெட் என்ற தொடர் பிரபல்யமானது.

இசை,

உங்கள் கேள்விகளுக்கு நெடுக்ஸ் நிச்சயம் நல்ல பதில்கள் தருவார், காத்திருப்போம் :D

Link to comment
Share on other sites

பேய் பிசாசு என்பவற்றை நம்பாத ஆள் நான்..! :rolleyes: ஆனால் அண்மைக்காலமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து வருகிறேன்..! இதில் ஒரு இரவு முழுக்க பேய் வீடுகளில் தங்கி ஆராய்ச்சி செய்கிறார்கள் மூவர்..! :unsure:

இந்த முயற்சிக்கு சிலவகையான மின்னியல் உபகரணங்களைக் காவிச் செல்கிறார்கள்..! மனிதனின் காதுகளுக்கு கேளாத அதிர்வலையில் உள்ள ஒலிகளைப் பதிவு செய்கிறார்கள்..! இது ஆவிகளின் உரையாடலாக இருக்கலாம் என்கிறார்கள்..! :huh:

நீங்களும் கண்டு களியுங்கள்..! :D

http://www.youtube.com/watch?v=pe3hQVgAACY

எனக்குள்ள கேள்விகள் இவை..

  1. சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது..! அது உண்மையானால் அகால மரணம் அடைபவர்களின் உடலில் உள்ள சக்தி என்னவாகும்? :rolleyes:
  2. மறுபிறப்பு பற்றி பல இனங்களிலும் நம்பிக்கைகள் உள்ளன..! இறப்பவர்களின் ஆன்மா மீண்டும் பிறக்கும் என்கிற கருத்தியலில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? :rolleyes:

இசை,

உங்களது பதிவை முழுக்க வாசிக்கவில்லை

..ஆனால் கனடாவில், ஒன்றாரியோவில், அதுவும் ரொரன்டோவில் queens parks கட்டிடத்தொகுதியில் பல ஆவிகள் இன்று வரை உலாவுகின்றன என்பது இங்குள்ள அநேக ஊடகங்களால் சொல்லப்படும் ஒரு செய்தி

இரண்டாம் உலக யுத்தத்தின் போது மரணித்தவர்கள் கூட அங்குள்ளனராம்...

கீழே உள்ள செய்தியை பார்க்கவும். இது பலரால் வாசிக்கப்படும் Toronto stat இல் கடந்த வருட இறுதியில் வந்த ஒரு செய்தி'

----------------------------------------------------------------------------------------------------

Getting to know the ghosts of Queen’s Park

A medium claims to feel the spirit of a former sergeant-at-arms, Captain Charles Rutherford, at Queen's Park.

0fbb8ae0421094c8ea76321a262d.jpeg

By Tanya Talaga Queen's Park Bureau

Does the spirit of First World War hero Charles Rutherford still linger in the Legislature at Queen’s Park?

Who is the white-clad woman seen sporadically wailing and moaning on the third floor of the building?

Some sensitive souls have felt the eerie presence of a soldier standing near the sergeant-at-arms desk inside the House where MPPs debate and pass laws.

Others have reported seeing apparitions floating down the grand staircase in the main foyer.

At last count, there were nearly a half-dozen ghosts reportedly haunting the ornate marble hallways in the pink palace, according to Dan Bogart, a communications officer with the Legislative Assembly’s parliamentary protocol office.

Every Halloween, Bogart volunteers to take staff on a historical “spooky” walking tour throughout the various wings of the building, highlighting the spots where some say spirits tread.

“This building represents our past and our future,” he said. “It is an important bridge.”

Bogart, who has an encyclopedic knowledge of the Legislature, reluctantly took the Star on his tour as he doesn’t wish the building to become known as a haunted one. But he wants the public to appreciate the history of the stately building that sits at the top of University Ave.

“Once, we had a medium on the tour,” Bogart said. “We walked around for a bit and then when we went by the chamber he mentioned he saw a spirit in one of the seats, in the sergeant-at-arms chair.”

The medium told Bogart he sensed the spirit’s name was Charles.

Bogart did some research into who this could be and he was astonished at what he found.

Capt. Charles Rutherford served as the sergeant-at-arms from 1934 to 1940 in former premier Mitchell Hepburn’s Liberal government.

He was also one of Canada’s, if not the Commonwealth’s, most distinguished veterans of World War I.

Rutherford was a Presbyterian farmer from Haldimand Township. When the war came he joined the 5th Canadian Mounted Rifles and was immediately sent to the muddy fields of Ypres, Belgium.

Soon after, Rutherford marched into the Somme, a horrific scene for Canadian soldiers. Rutherford was wounded in the Regina Trench, known as the “ditch of evil memory.” Canada suffered 24,029 casualties throughout the ongoing Battle of the Somme.

Remarkably, after recovering in England, Rutherford returned to France in time to take part in the Battle of Vimy Ridge.

While on patrol in northern France, on Aug. 26, 1918, Lieutenant Rutherford found himself alone, separated from his command when he wandered into a battalion of 45 Germans. Bluffing to save his life, he boldly told them they were his prisoners and that they were surrounded by Canadian soldiers.

The Germans surrendered and Rutherford was awarded the Victoria Cross for bravery.

He died on June 11, 1989. He was the last surviving Canadian soldier to receive the medal of valour for the Great War.

While there is no definitive proof of a soldier’s ghost, Bogart is moved to think of the depth of Rutherford’s service. “I was personally touched by this story,” he said. “To think this is part of the atmosphere here.”

The female ghosts at the park are all believed to be former patients of the lunatic asylum that stood on the grounds prior to the building of the Legislature.

Limestone taken from the demolished asylum provides the foundation of Queen’s Park. The five-storey building, made of the pink-coloured Credit Valley sandstone and Sackville New Brunswick stone, was completed in 1893.

A “malevolent” female spirit is said to be in the fourth floor attic. “She is a strong presence and apparently a permanent presence — she’s always there,” said Bogart. “She is quite vengeful.”

Then there is the possible ghost of Richard Scott at the end of the east hallway on the first floor, near the current speaker’s office.

A heavy-bearded red head, Scott was an ambitious sort who served as speaker of the Legislature for only two weeks before a better offer came along and he became minister of crown lands, noted Bogart.

“The medium said there is a sense of service, a formal sense of atmosphere that resonates through the building,” he said. “And that really points to the purpose of this building today ... They are still serving us. They are still here.”

The current speaker, Steve Peters, has lived at the speaker’s apartment inside Queen’s Park for the past four years.

While he has kept a file of ghost sightings and the history of strange occurrences at the Park, he has never experienced anything out of the ordinary.

“I’ve lived her in the building for four years now and other than rattling radiators I’ve yet to experience anything unusual,” he said.

Peters noted that some of the ghost stories he’s heard seem to have translated from the old parliament building on Front St.

“Whether the ghosts came up in the member’s desks or portraits, I don’t know,” he said. “But somehow they’ve come from the old buildings to the new.”

http://www.thestar.c...article/1077761

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரமுகி ஆவியை தவிரவேறு ஆவியை நான் நம்புவதில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகளில் நம்பிக்கை உள்ளது.

இன்றும் கோம்பயன் மணல் சுடலைக்கு, தனியப் போனால்... திரும்பி வருவது சந்தேகமே....

Link to comment
Share on other sites

அப்படி பார்க்கப்போனால் முள்ளிவாய்க்கால் பக்கமே யாரும் போக முடியாதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகளில் நம்பிக்கை உள்ளது.

இன்றும் கோம்பயன் மணல் சுடலைக்கு, தனியப் போனால்... திரும்பி வருவது சந்தேகமே....

பல ஆண்டுகளின் முன்பு 'பீட்டர்' என்றொருவர் மக்கள் வங்கியில் ஒரே 'ஓவர் டைம்'.

இரவு பதினோரு மணிக்குப் பிறகு கோம்பையன் மணல், மயானம் தாண்டித் தான் வீட்டுக்குப் போவார்! ஒரு கிழமை, அவர் லீவு போடக், கோம்பையன் மணல் ஆவிகள் எல்லாம், அவரைத் தேடி , வங்கிக்கு வரத் தொடங்கி விட்டன!

பீட்டர், லீவு முடிந்து வரும் வரையும், ஓவர் டைம் நிற்பாட்டப் பட்டிருந்தது!!! :unsure:

Link to comment
Share on other sites

.

பள்ளிக்கூட விடுமுறையில் மாமாவுடன் Exorcist படம் பார்த்த போது 9,10 வயது மட்டில் இருக்கும். எப்படி என்னை உள்ளே அனுமதித்தார்கள் என்று எனக்கு தெரியாது.

ஒரு.. கிட்டத்தட்ட ஒரு வருடமளவாவது இருட்டில் தனியப் போவதென்றால்.. செம பீலிங்.

Link to comment
Share on other sites

நாட்டில் இதுவரை வகை தொகையின்றி கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுவதைக் கண்டதும் இல்லை கேள்விப்படவுமில்லை. ஒரு முறை இராணுவச் சுற்றி வளைப்பின் பொழுது, இரவு பதினோரு மணி மட்டும் மயானத்தில் ஒளிந்திருந்தேன். அமானுஷ்யமாக ஏதும் நடக்கவில்லை.

ஊரில், நள்ளிரவில் குதிரை கனைத்துக் கொண்டு ஓடும் சத்தமும் அதனைத் தொடர்ந்து சங்கிலி இழுபடுவது மாதிரியும் சத்தம் சில வேளை கேட்கும் என்றும் கூறுவார்கள். அந்தச் சத்தம் கேட்கும் தெருவில் ஒருவர் இறப்பார் என்று கூறுவார்கள். தேர்வுக்குப் படிக்கையில் ஒரு நாள் இரவு 1 மணியளவில் அந்தச் சத்தத்தைக் கேட்டேன். பலமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அடுத்த நாள் ஒரு வயது முதிந்த பெண் இறந்தார்.

அந்தச் சத்தத்திற்கு ஏதும் அறிவியல் காரணங்கள் இருக்குமெனவும் நினைப்பதுண்டு. அன்றுடன் இரவு கண் விழித்துப் படிப்பதை நிறுத்தி விட்டேன்.

நான் பொறியியலாளனாக ஆகாததிற்கு அந்தக் குதிரையும் ஒரு காரணம். :D

பிரித்தானியாவில் பல கட்டிடங்களில் ஆவிகள் உலாவுவதாகக் கூறுகிறார்கள். ஆவிகளைப் பற்றி குழப்பமாக உள்ளது. ஏன் வீண் வம்பு என்று அதனைப் பற்றி நினைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளின் முன்பு 'பீட்டர்' என்றொருவர் மக்கள் வங்கியில் ஒரே 'ஓவர் டைம்'.

இரவு பதினோரு மணிக்குப் பிறகு கோம்பையன் மணல், மயானம் தாண்டித் தான் வீட்டுக்குப் போவார்! ஒரு கிழமை, அவர் லீவு போடக், கோம்பையன் மணல் ஆவிகள் எல்லாம், அவரைத் தேடி , வங்கிக்கு வரத் தொடங்கி விட்டன!

பீட்டர், லீவு முடிந்து வரும் வரையும், ஓவர் டைம் நிற்பாட்டப் பட்டிருந்தது!!! :unsure:

பீட்டர், குறிப்பிட்ட வங்கியின்.... கோம்பயன் மணல் மயானத்து பிரான்ஞ் மனேஜரா புங்கையூரான். :D

அந்தச் சத்தத்திற்கு ஏதும் அறிவியல் காரணங்கள் இருக்குமெனவும் நினைப்பதுண்டு. அன்றுடன் இரவு கண் விழித்துப் படிப்பதை நிறுத்தி விட்டேன்.

நான் பொறியியலாளனாக ஆகாததிற்கு அந்தக் குதிரையும் ஒரு காரணம். :D

ச்சாய்.... அந்தக் குதிரையாலை, ஒரு பொறியியலாளர் உருவாகாமல் போய் விட்டார். :lol:

Link to comment
Share on other sites

பல ஆண்டுகளின் முன்பு 'பீட்டர்' என்றொருவர் மக்கள் வங்கியில் ஒரே 'ஓவர் டைம்'.

இரவு பதினோரு மணிக்குப் பிறகு கோம்பையன் மணல், மயானம் தாண்டித் தான் வீட்டுக்குப் போவார்! ஒரு கிழமை, அவர் லீவு போடக், கோம்பையன் மணல் ஆவிகள் எல்லாம், அவரைத் தேடி , வங்கிக்கு வரத் தொடங்கி விட்டன!

பீட்டர், லீவு முடிந்து வரும் வரையும், ஓவர் டைம் நிற்பாட்டப் பட்டிருந்தது!!! :unsure:

கஷ்டப்பட்ட ஆவிகளாக இருக்கும். கடன் எடுக்க வந்திருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரகாம் கோவூர்

வாழ்க்கைக் குறிப்பு

இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார்.கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார். கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்; இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.

தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார்.

[தொகு]பகுத்தறிவுப் பணி

ஆவி, பிசாசு தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர். ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.[1]

அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார்.[2]

[தொகு]ஒரு இலட்சம் பரிசு

இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார். தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை.

டாக்டர்.கோவூரின் சவால்கள்: 1. முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.

2. ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.

3. கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.

4. நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.

5. மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.

6. தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.

7. பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.

8. யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.

9. யோக சக்தியால் அய்ந்தே மணிதுளி அய்ந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.

10. நீரில் நடந்து காட்டுக.

11. உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.

12. யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.

13. ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.

14. நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.

15. நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.

16. மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.

17.பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்த காட்டுக.

18. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை கண்டுபித்துக் காட்டுக.

19. வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.

20. ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.

[தொகு]கண், உடல் தானம்

“எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை; எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயிலில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்குத் தானமாக அளித்தார்; தன் உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற்சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ஆவி” விஸ்கி, சோடா குடிக்கும் ‘ஆவி’யை படம் பிடிக்கலாம் என்பது மோசடி!

Kovoor.JPG

‘ஆவி நம்பிக்கை மனநோய் தொடர்பானது’ என்று ஒரு மனநல மருத்துவர் என்ற முறையில் தான் சந்தித்த மனநோயாளிகள் பற்றி டாக்டர் கோவூர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதில் இது ஒரு‘ஆவி’யின் கதை

இறந்த மனைவியருடன் பேசியவர்கள்...!

“ஆவிகள் விஸ்கி, சோடா குடிக்கும்.”

“ஆவிகளுக்குப் பாலுணர்வு உண்டு.”

“ஆவி உலகில் உணவு, நீர், மது அனைத்தும் உண்டு.”

“மிருகங்களுக்கு ஆவியாக மாறும் சக்தி யில்லை.”

“ஆவிகள் ஆங்கிலத்தில்தான் பேசும்.”

திரு. கோவூர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திருமதி தோமஸின் ஆவி இப்படித்தான் பதில் கூறியது. ஆனால், திருமதி தோமஸின் ஆவியை கோவூர் கண்களால் பார்க்கவில்லை. அவரது கணவர் திரு.தோமஸ் மூலமாகத்தான் இந்தப் பதில்கள் கோவூருக்குக் கிடைத்தன.

கால் நூற்றாண்டுக்கு முன்பு யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த திரு. ராஜ்பக்ஸ் என்பவர் தனது மனைவியின் ஆவியுடன் பேசியதாகவும், பல கேள்விகளைக் கேட்டதாகவும் அந்த இளம் மனைவி வாழ்ந்தபோது கூறாத பல முக்கிய விஷயங்களை ஆவியின் உருவில் தன்னிடம் கூறியதாகவும், கோவூரிடம் கூறியதை அடுத்தே கோவூர் தோமஸின் மனைவியின் ஆவியுடன் பேச வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

யாழ்ப்பாணம் கொன்வன்ட் வீதியில் திரு.ராஜபக்ஸ் வசித்து வந்தார். அதே வீதியில்தான் கோவூரும் வசித்து வந்தார். கோவூர் அப்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். கோவூரும், ராஜபக்ஸூவும் நெருங்கிய நண்பர்கள்.

ஒரு நாள், திரு. ராஜபக்ஸூவின் இளம் மனைவி திடீரெனக் காலமானார். கணவன், மனைவியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உலகுக்கு எடுத்துக் காட்டுவதுபோல் அந்நியோன்யமாக வாழ்ந் தவர்கள் ராஜபக்ஸ் தம்பதிகள். திரு. ராஜபக்ஸ் தன் மனைவி மீது அசைக்க முடியாத பாசத்தை வைத்திருந்தார். இவ்வளவு அன்புடன் வாழ்ந்த தன் மனைவி திடீரென இறந்தது திரு.ராஜபக்ஸூவை நிலை குலையச் செய்தது. மனைவியின் பிரிவு காரணமாக வாழ்க்கையில் எவ்விதப் பிடிப்புமின்றி வாழ முற்பட்டார். திடீரென தன் மனைவி உயிருடன் இருப்பது போன்றே அவருக்குத் தோன்றும். சில சமயங்களில் மனைவியின் ஆவியாவது தன்னை வந்து சந்திக்காதா என்ற ஆசை அவருக்கு உதிக்கும். இந்த நப்பாசை அவரிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் ஆவிகள் பற்றி அறிந்து கொள்ள அவர் பெரிதும் ஆர்வம் கொண்டார். இந்த ஆர்வம் நாட்கள் செல்ல செல்ல அதிகரித்தது. யாழ்ப்பாணம் பொது வாசக சாலையில் இருந்த ‘ஆவிகள்’ சம்பந்தமான சகல புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தார். குறிப்பாக “லண்டன் ஆவிகள் ஆராய்ச்சிக் கழகம்” வெளியிட்ட புகத்தங்களை அவர் வாசிக்கத் தவறுவதில்லை.

திருவாளர்கள் மயர்ஸ், சோல், சிஜ்விங், பொட்மோர், ஒலிவர் லொட்ஜ்,அலெக்சாண்டர் கெனன், கொனன் டொயல், ஹரிபிறைஸ்போன்றவர்கள் ஆவிகள் உலவுகின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இவர்களின் புத்தகங்களையெல்லாம் வாசித்த திரு. ராஜபக்ஸ், தனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி காலை திரு.ராஜபக்ஸ், மூச்சு வாங்க, கோவூரின் இல்லத்துக்கு ஓடி வந்தார். “ஏபிரஹாம்... ஏபிரஹாம்” என் கூவியபடி ஓடி வந்த அவரின் முகத்தில் குதூகலமும், அதே நேரத்தில் கலவரமும் குடி கொண்டிருந்தன.

“ஏபிரஹாம்... கடைசியில் என் மனைவியைச் சந்தித்து விட்டேன்”என்று கூவியபடி கோவூரின் வீட்டுக்குள் நுழைந்தார். பலமுறை அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

திரு. ராஜபக்ஸூவின் பேச்சு, கோவூரைப் பெரும் ஆச்சரியத்துக்கும்,அதிர்ச்சிக்கும் ஆளாக்கியது. இச் சமயத்தில் திரு.ராஜபக்ஸ்பொறுப்புள்ள ஒரு நீதிபதிபோல் அல்லாமல், ஒரு சிறு குழந்தை போலவே தோன்றினார்.

“ஏபிஹாம்! என் மனைவி என்னிடம் ஒரு மணி நேரம் பேசினாள். தனது மரணத்துக்கு முன்பு சொல்லத் தவறிய பல விஷயங்களைச் சொன்னாள். இன்னொரு முறைகூட அவளைச் சந்திக்கப் போகிறேன். ‘அப்பாய்ன்ட்மென்ட்’ வைத்துவிட்டு வந்தேன்” இப்படி பரபரப்புடன் கூறினார் ராஜ்பக்ஸ்.

‘என்னையும் அப்போது அழைத்துச் செல்லு கிறீர்களா?’ என்று கோவூர் அவரிடம்கேட்டார்.

“இல்லை. இல்லை ஏபிரஹாம், அடுத்த முறை அவளிடம் நான் பல இரகசியங்களைக் கேட்கப் போகிறேன். என்னுடன் அப்போது யாரும் இருக்கக் கூடாது” என்று கெஞ்சுவதுபோல் பதிலளித்தார் திரு.ராஜபக்ஸ்.

இதைக் கூறி முடித்ததும் அவரின் கண்கள் கலங்கியிருந்தன. மிகவும் களைப்படைந்தும் காணப்பட்டார். இருவரும் காப்பியை அருந்தினர். இதன் பின் ராஜபக்ஸ் சிறிது தெளிவு பெற்றிருந்தார். சிறிது நேரம் மவுனம் நிலவியது. திரு. ராஜபக்ஸ் பேச்சை ஆரம்பித்தார்.

“ஏபிரஹாம்... எனது நண்பர் தோமஸின் உதவியால் தான் எனது மனைவியுடன் பேசினேன். திரு. தோமஸ்தான் ‘மீடியமாக’ இருந்து என்னுடன் என் அன்பு மனைவி பேச வழி செய்து கொடுத்தார்.”

இப்படிக் கூறிய திரு. ராஜபக்ஸ், தாம் தோமஸை சந்தித்த கதையையும், தன் மனைவியுடன் பேசியதையும் விவரமாக விளக்கினார்.

இதையெல்லாம் புன்சிரிப்பை உதிர்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்த கோவூர், திரு. ராஜ பக்ஸ்வுக்கு ‘மீடியமாக’ இருந்த திரு. தோமஸின் விலாசத்தைப் பெற்றுக் கொண்டார். திரு. ராஜபக்ஸ் விடைபெற்றுச் சென்ற சிறிது நேரத்தில் தம் கைப்படவே தோமஸூக்கு கடிதம் எழுதினார் கோவூர். ஒரு வாரம் கடந்தது, தோமஸிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

ஒரு நாள் காலை திடீரெனக் கோவூரின் இல்லத்துக்குள் நுழைந்தார் தோமஸ். இச்சமயம் கோவூர், வரவேற்பறையில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் நுழைந்து கோவூரைப் பார்த்ததுதான் தாமதம், “அதோ உங்கள் தலைக்குப் பின்னால் தெய்வீகமான ஒரு மஞ்சள் சக்கரம் சுழலுவதைக் காண்கிறேன்”என்றார் தோமஸ்.

தோமஸை வரவேற்ற கோவூர், அவரை அமரச் செய்தார். தெய்வீக சக்கரம் பற்றிக் கூறியபடியே அமர்ந்த தோமஸ், தொடர்ந்து தம்மைப் பற்றிய விவரங்களைச் சொல்ல முற்பட்டார். திரு. தோமஸ் தீவிர மதப்பற்றுள்ள ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். தீவிரமான மத நம்பிக்கை யுடன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கிறிஸ்தவ கல்லூரியில் கல்வி பயின்றார். கிறிஸ்தவ இயக்க மொன்றினால் சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இளம் பிராயத்தை எட்டியதும் திரு. தோமஸ் மத குருவாகிவிட விரும்பினார். ஆனால், அவரின் மற்றொரு சகோதரர் மதகுருவாகிவிடவே, திரு. தோமஸ் குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்.

மனைவியோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது தான்1926 ஆம் ஆண்டு அவரது மனைவி திடீரென இறந்தாள். மனைவி இறந்துவிட்டாலும், அவளின் நினைவு அகலவே இல்லை. காலப்போக்கில் இரண்டாவது திருமணமும் செய்தார். அப்பொழுதும் முதல் மனைவியின் நினைவுதான் ஆட்சி புரிந்து கொண் டிருந்தது.

தோமஸூம் ஆவிகள் பற்றி நம்பிக்கைக் கொண்டவர். ஆவிகள் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்திருந்தார். தனது முதல் மனைவியின் ஆவியும் வாழ்வதாக நம்பினார்.

1934 ஆம் ஆண்டு தான், தனது மனைவியின் ஆவியுடன் முதல்முறையாகத் தொடர்பு கொண் டதாகத் தெரிவித்தார். அதன் பிறகு அடிக்கடி அந்த ஆவியுடன் தொடர்பு கொள்ளலானார்.

இச்சமயம் லண்டனில் ஆவிகளைப் பட மெடுக்கும் பல அற்புத நிபுணர்கள் இருந்தனர். அங்கு தன் மாமனாரினதும், மனைவியினதும் அடை யாளங்களை எழுதி, அவர்களுடைய ஆவிகளின் படங்களை வரவழைத்தார்.

மாமனாரின் படத்தில் தோமஸூக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் மனைவியினுடைய ஆவியின் படம் சரியாகவே இருந்ததாகவே நம்பினார். நினைத்த பொழுதெல்லாம் தன் மனைவியின் ஆவியைச் சந்தித்துப் பேசும் சக்தி அவருக்கு ஏற்பட்டது.

தனது மகளின் திருமணத்தைக்கூட ஆவியைச் சந்தித்துப் பேசிய பின்னரே ஏற்பாடு செய்தார்.

தனது மனைவியோடு மட்டுமன்றி வேறு சில ஆவிகளுடன் பேச‘மீடியமாக’ அவரே இருந்தார். இதில் ஒன்றுதான் திரு. ராஜபக்ஸ்,தனது மனைவி யின் ஆவியுடன் பேச ‘மீடியாமாக’ இருந்தது.

இப்படி தன் கதையைச் சொல்லி முடித்த தோமஸ், லண்டனிலிருந்து வரவழைத்த ஆவிகளின் படங்களையும் காட்டினார். படங்களில், மாமனாரின் ஆவி சூட்டுடன் தொப்பி அணிந்திருந்தது. மனைவியின் ஆவி வெள்ளைக் கவுன் அணிந்திருந்தது. தோமஸ் பேசி முடித்த பின்னர், அவர் காட்டிய ஆவியின் படங்களை ஆராய்ந்த கோவூர், “உங்கள் மனைவியின் ஆவியுடன் இப்பொழுது தொடர்பு கொள்ள முடியுமா?” என்று கேட்டார்

“முடியும்! ஒரு தனி அறைக்குள் அழைத்துச் செல்லுங்கள்” என்றார் தோமஸ்

உடனே தோமஸூடன் எழுந்த கோவூர், அவரைத் தனது வாசக சாலைக்குள்அழைத்துச் சென்றார். அங்குச் சென்றதும் ஒரு நாற்காலியில் அமர்ந்து “ஜன்னல்களை எல்லாம் மூடுங்கள்” என்றார் தோமஸ்.

ஜன்னல் அனைத்தும் மூடப்பட்டன. தனக்கு நேரெதிராக இருந்த சுவரை உற்று நோக்கினார் தோமஸ். சில வினாடிகள் கழிந்தன.

“அதோ! அதோ!! அவள் நிற்கிறாள். என்னைப் பார்க்கிறாள்” என்று கூறினார் தோமஸ்.

அவர் காண்பித்த திசையைக் கோவூர் நோக்கிய போது, அங்கே தனது தந்தையின் படம் தொங்குவதைக் கண்டு, அதனருகில் நெருங்கி அதைத் தொட்டுப் பார்க்க முயன்றார்.

“தொடாதீர்கள்... தொடாதீர்கள்” என்று குரல் எழுப்பிய தோமஸ், “ஆவிகளைப் புனிதமில்லாத மனிதர்கள் தொடக் கூடாது” என்று அதட்டி எச்சரித்தார்.

“அங்கே சுவருமில்லை; படமுமில்லை. நீல நிறமான ஆகாயம் தெரிகிறது. வெள்ளை உடை உடுத்தி என் அழகிய மனைவி நிற்கிறாள்” என்ற பதில் வந்தது. அடுத்த வினாடி, “என் மனைவியின் ஆவி, கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராகிவிட்டது” என்று கூறினார்.

உடனே கோவூர் கேள்விகளைக் கேட்டார்.

கோவூர் கேட்ட சில கேள்விகளுக்குத்தான், “ஆவிகள் விஸ்கி, சோடா குடிக்கும், ஆவிகளுக்குப் பாலுணர்வு உண்டு” என்பன போன்ற பதில்களை தோமஸ் மூலமாக அவர் மனைவியின் ஆவி கூறியது.

இந்தச் சுவையான பதில்கள் அனைத்தும் தோமஸின் வாயிலாகத்தான் வந்தன.

கோவூர் மேலும் கேட்ட சில கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள்:

• கிறிஸ்தவ மதம்தான் உண்மையானது.

• மறுபிறவி என்பதே இல்லை.

• தோமஸ் இறந்தவுடன், நான் ஒரு ஆவியை மணந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப் போகிறேன்.

• வேறு சில கிரகங்களிலும் மனிதர்கள் வாழ் கின்றனர்.

கோவூரின் கேள்விகள் முடிந்த சிறிது நேரத்தில் தோமஸ்சுயநினைவுக்கு வந்தார். இதனையடுத்து இருவருமே அந்த அறையவிட்டு வெளி அறைக்கு வந்தனர். ஆவியுடன் பேசுவதற்கு முன்னும் - பேசும் போதும், பேசிய பின்னும் தோமஸூக்கு ஏற்படும் அனுபவங்கள் பற்றிக் கேட்டார் கோவூர்.

“மனைவியுடன் தொடர்பு கொள்ள நினைத்து, சிந்தனையை அதில் மட்டும் செலுத்தி வெறித்துப் பார்க்க ஆரம்பிப்பேன். அப்பொழுது நான் நோக்குமிடத்தில் வர்ணஜாலம் மிக்க புதுமையான ஒரு ஒளி பிரகாசிக்கும், ஆவி அங்கே தோன்றும், அந்த ஆவியுடன் பேச, அதன் முழு உருவமும் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆவியுடன் பேசி முடிந்ததும் மிகக் களைப்பாகவே இருக்கும். தண்ணீர்த் தாகமெடுக்கும். உடனே நித்திரை வரும்.” இப்படித் தனது அனுபவங்களைக் கூறிய தோமஸ், கண்களை மூடியவாறு ஓய்வெடுத்தார்.

தோமஸின் நடவடிக்கைகளையும், அவரது கதையையும்,அனுபவங்களையும் நன்கு கண்டு, கேட்டு அறிந்த பின்னர் திரு. ராஜபக்ஸ், திரு. தோமஸ் போன்றவர்கள் எவ்வாறு ஆவியுடன் பேசுகிறார்கள் என்பது கோவூருக்கு விளங்கியது.

“ராஜபக்ஸ், தோமஸ் இருவருமே தங்கள் மனைவிமார் மீது தீராத ஆசை வைத்திருந்தனர். ஆனால் இருவருமே இளம் வயதிலேயே மனைவியரைஇழந்துவிட்டனர். அவர்கள்மீது கொண்டிருந்த அளவுக்கு மீறிய அன்பாகப்பட்டது. தங்கள் மனைவியர் ஆவிகளாகவாவது வந்து தங்களுடன் பேச மாட்டார்களா என்ற நப்பாசை பிறந்தது.”

“இதற்கு உறுதுணையாக ஆவிகள் பற்றிய புத்தகங்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டின.”

“தோமஸ் தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தவராதலால்,அவர் தெய்வீகமென்பது உண்மையெனத் தீவிரமாக நம்பினார்.”

“எந்தவொரு பொருளையுமே நீங்கள் உற்று நோக்கியபடி இருந்தால் அந்த இடத்தில் உங்கள் கண்களுக்கு அபூர்வமான ஒளி தென்படும்.”

“அதற்குமேல் எதையும் நீங்கள் கற்பனை செய்தால் நீங்கள் நினைப்பதே உங்கள் கண்முன் நிற்பது போன்று தெரியும்.”

“தோமஸூக்கு, தாடி வளர்த்த எனது தந்தையின் படம் அவர் மனைவியாகக் காட்சியளித்ததும் இப்படித்தான்.”

“மனிதரின் கண்களுக்கும், மூளை நரம்புகளுக்கும் எப்பொழுதுமே ஒரு தொடர்பு உண்டு. கண்கள் பார்ப்பதை மூளை சிந்திக்கும். அதுவும் அந்தக் கண்களுக்குத் தெரிய நீங்கள் பார்க்கும் பொருள்களின் மீது ஒளி விழ வேண்டும்.”

“இப்படித்தான் தோமஸ் தனது மனைவியைக் கற்பனையில் கண்டார்.”

“புளியைச் சாப்பிடுவதாக நினைத்துக் கொண் டால், உங்கள் வாயும்,முகமும் உங்களை அறியாமலே சுருங்கிப் பலவித முக பாவங்களையும் ஏற்படுத்தும்.”

“இதே போன்றுதான் தோமஸ் தனது இறந்த மனைவியை நினைத்துக் கொண்டு, எனது கேள்வி களுக்கு மனைவியின் ஆவி போன்று பதிலளித்தார். அந்த ஆவி, எனது கேள்விகளுக்கு அளித்த பதில் களை ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும்.”

“தோமஸ் ஒரு தீவிர கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரென்பதால்தான், கிறிஸ்தவ மதம் உண்மையானதென்றும்,மிருகங்களுக்கு ஆவியாக உலவும் சக்தி இல்லையென்றும் சொன்னார்.”

“அவர் ஒரு இந்துவாக இருந்திருந்தால் இந்து மதம்தான் சிறந்ததென்றும், மிருகங்களுக்கும் ஆவி யாகும் சக்தி கிடைக்குமென்றும் கூறியிருப்பார்.”

“இதிலிருந்து இவை மதப்பற்றால் கூறப்பட்ட பதில்கள் என்பது தெளிவாகிறது.”

“ஆவிகளின் உலகில் உணவு, நீர், மது உண்டென்றார். உணவு உண்ண முடியுமானால், அது பூவுலகப் பிறவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஆவியாக இருக்க முடியாது.”

“ஆவிகளுக்குப் பாலுணர்வும், உடலமைப்பும் உண்டென்று கூறியதை அவதானிக்கும்போது, மனிதன் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட்ட தும் அவனது உடல் அழிந்து விடுகிறது. பிறகு எப்படி உடலமைப்பும், பாலுணர்வும் இருக்க முடியும்?”

“அதிகமான கிறிஸ்தவர்கள் அக்காலத்தில் பேசியது ஆங்கிலம். அதனால்தான் ஆவிகளின் மொழி ஆங்கிலமென்றும், உடை, சூட்,கவுண் என்றும் பதில் கூறப்பட்டது.”

“இந்தப் பதில்களெல்லாம் கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கையே.”

“ஆவியுலகில் விஸ்கியும், சோடாவும் உண் டென்றால், கசிப்பும் இருக்க வேண்டும்? தோமஸ் கிறிஸ்தவர்களின் அன்றைய முக்கிய மதுபானமான விஸ்கியைத்தான் ஞாபகமாகக் கொண்டு, அந்தப் பதிலைக் கூறியிருக்கிறார்.”

“தோமஸ் எனக்குக் காட்டிய அவரின் மாமனார் மனைவி ஆகியோரின் ஆவிகளின் புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பது பெரும் கேள்வியாக எழலாம்!”

“லண்டனில் இப்படியொரு ஏமாற்றும் கோஷ்டியே பிழைப்பு நடத்தியது. சில காலத்திற்குப் பின்பு இக்கோஷ்டி போலீசாரால் பிடிக்கப்பட்டு பல உண்மைகள் வெளியாகின.”

“இக்கோஷ்டியின் தலைவர்கள் எனக் கருதப்பட்ட திரு.பிரட்பலோ,மேஜர் ரம்ளிங் ரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.”

“ஒரு வேடிக்கை என்னவென்றால், வேட்டி, சட்டை அணிந்து வாழ்ந்த தோமஸின் தந்தையின் ஆவி, சூட்டும் தொப்பியும் அணிந்திருந்ததுதான்.”

“தோமஸூக்கு ‘மோனா மேனியாக்’ என்ற ஒருவித மனோ வியாதியே பீடித்திருந்தது.”

“மதத்தின் மீது கொண்ட நம்பிக்கையால், அவர் ஆவிகள் பற்றிய மூட நம்பிக்கையில் ஈடுபட்டார். ஆவிகள் பற்றிய புத்தகங்களும் அவருக்கு நம்பிக்கையூட்டின.”

லண்டன் ‘ஆவிகள் ஆராய்ச்சிச் சங்கம்’ அன்று வெளியிட்ட புத்தகங்களும் அவரது நம்பிக்கையை வலுப்படுத்தின.

“இன்று இதே சங்கம் வெளியிட்டுள்ள திருவாளர்கள்; அந்தனி புளு,கட்னர், சைமன்ஸ், வட்வட்ரூஷ், ஹென்ஸல், ஸ்பென்ஸர் பிரவுண் ஆகியோரின் புத்தகங்களை இவர் படித்திருந்தால் இப்படியான மூடநம்பிக்கைகளுக்கு இடமே கொடுத்திருக்க மாட்டார்.”

“தோமஸின் மூடநம்பிக்கைகளுக்கு ஒரு பொறுப்புள்ள நீதிபதியும் அடிமைப்பட்டிருக்க மாட்டார்.”

“என்னைப் பார்த்தவுடன் எனது தலைக்குப் பின்னால் தெய்வீக சக்கரம் சுழல்கிறதென்று கூறியதிலிருந்து அவர் ஒரு ‘மோனோ மேனியாக்’ என்பதை நான் உணர்ந்து கொண்ட பின்பே, அவரை ஆராய்ந்து இந்த உண்மைகளை அறிந்தேன்.”

இப்படி விளக்கமளித்த கோவூர், பின்பு ஹிப்னாடிஸ் முறையில் தோமஸ், ராஜபக்ஸ் ஆகியோரின் உள்ளுணர்வுகளுக்கு இந்த மூட நம்பிக்கைகள் பற்றி எடுத்துக் கூறி, அவர்கள் இருவரும் இந்த மனோ வியாதியிலிருந்து விடுபட வழிசெய்தார்.

http://athinila.blog...og-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WhiteGhost.gif

இரவில் உணவு கொண்டு போகும் போது...

ஆவிகள் அதனை, தின்னாமல் இருக்க... கரிக்கட்டியை கொண்டு போனால் ஆவி கிட்ட நெருங்காது.

Link to comment
Share on other sites

அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி..! இத்தனை பேர் சில மணித்தியாலங்களுக்குள் கருத்து எழுதியிருப்பதைப் பார்த்தால் கனபேர் ஆவியால அடிபட்டிருப்பினம் போலை..! :D

கருத்து கந்தசாமி மற்றும் தப்பிலி..

நானும் யோசிப்பதுண்டு.. இதுவரையில் கோடிக்கணக்கில் இறந்த மக்களெல்லாம் அப்ப ஆவியாக அலைவார்களா என்று.. இந்தச் சமயத்தில்தான் மறுபிறப்பு என்கிற கொள்கை வந்ததோ?? :rolleyes:

சக்தியை (ஆவியை) அழிக்க முடியாதென்றால் அந்த ஆவி இன்னொரு இடத்தில் கருவாகி உருவாகி வரலாம்தானே? :D பெண்ணின் கருப்பைக்குள் உள்ள முட்டைகளில் உயிர் உள்ளதா? அந்தச் சக்தி அம்மாவின் போசாக்கினால் அதிகரிக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், சில மாதங்களுக்குப் பிறகே இதயம் துடிக்கிறது..! இதயத்தில் ஒரு மின்காந்த சக்தி செயற்படுகிறதல்லவா? அதைக் கொடுத்தவர் எவர்? அல்லது அம்மாவின் தொப்புள்கொடி உணவு அந்த இதயத்துக்கான சக்தியைக் கொடுத்திருக்குமா? ஒரே கன்பியூசன்..! :D

நான் இணைத்த இணைப்பை பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள்..! ஏனென்றால் ஓவர் நீளம்..! ஆனால் Ghost Adventures என்று யூரியூபில் தேடல் செய்தால் சிறு பாகங்கள் கிடைக்கும்..! நேரமில்லாதவர்கள் அதைப் பாருங்கள்..! முடிந்தவர்கள் இங்கே இணைத்துவிடுங்கள்..! :huh:

எல்லாருக்கும் நித்திரையில்லாமல் பண்ணுவதே நம் வேலை..! :lol:

Link to comment
Share on other sites

இசை,

உங்கள் கேள்விகளுக்கு நெடுக்ஸ் நிச்சயம் நல்ல பதில்கள் தருவார், காத்திருப்போம் :D

பெண்ணுருவில் பேய்கள்தான் உலாவுது என்று விளக்கம் தருவார். :D

Link to comment
Share on other sites

ஆவி பேய் ஒன்றும் கிடையாது. அந்தக்காலத்து ஆட்கள் கதைகளை சொல்லி பயமுறுத்தி நம்மை வளர்த்துவிட்டார்கள்.விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட சுத்துமாத்து பண்ணுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

winchester mystery house க்கு அருகில் தான் பல வருடங்கள் வசித்தேன்.ஒரு முறையும் உள்ளே சென்று பார்க்கவில்லை. :) :)

இவர் ஒரு பேயா அல்லது உண்மையான மனிதரா என்டு ஆராய்சி செய்து அறிகை சமர்பிகுமாறு விஞ்சானி நெடுகாலபோவன் கேட்கிறோம் :unsure: :unsure: :o:mellow::blink:

Link to comment
Share on other sites

இதுவரை யாரும் நம்பவில்லைய்யா? நானும் ஒரு ஆவிதான் அதனால் தான் என் படத்தை முகப்பில் இணைக்கவில்லை.புளூ பேட் தமிழில் சுடலைக்குருவி ஆதலால் தான் அந்தப்பேரை தேர்ந்தெடுத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகள் இருக்குது என்பது தான் என் கருத்து...மிகுந்த ஆசைகள் வைத்திருப்பவர் திடீரென இறந்தால் அவர்களுக்குரிய கிரியைகள் ஒழுங்காக செய்யா விட்டால் கட்டாயம் ஆவியாக அலைவார்கள்...ஆவிகள் எல்லோர் கண்ணுக்கும் தெரியாது குறிப்பிட்ட நட்சத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பாகவும்,மற்றவர்களுக்கு அதன் செய்கைககள் மூலமும் தெரியும்.

நான் மட்டக்களப்பில் இருப்பில் இருக்கும் போது புலிகளது முகாம் ஒன்று இருந்தது அந்த முகாமை மற்றவர்களுக்கு தண்டனை வழங்க பயன் படுத்தினார்கள்...அந்த முகாமில் ஒரு பக்கத்தில் இரவில் சென்றியில் இருப்போருக்கு ஆவியால் ஒரே பிரச்சனையாக இருந்தது...அந்த முகாமை அவர்கள் விட்டு எழும்பும் போது அந்த வீட்டுக்கு ஒருவரும் குடி போகவில்லை கடைசியில் கத்தோலிக்க குருமார்தான் 3 மாதம் வரை இரவிரவாக ஜெபத்தின் மேல் ஜெபம் செய்து ஆவிகளை விரட்டினார்கள்.

தப்பிலி பேய்கள் இல்லை என சொன்னது எனக்கு ஆச்சரியமாகவுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு

ஆவி மீதும் நிச்சயமாக நம்பிக்கையிருக்கும்.

அது சரி இசைக்கலைஞன் உங்களுக்கு ஏன் ஆராய்ச்சி :lol::D

Link to comment
Share on other sites

தப்பிலி பேய்கள் இல்லை என சொன்னது எனக்கு ஆச்சரியமாகவுள்ளது

நம்பவும் இல்லை. நம்பாமலும் இல்லை.

எனது அனுபவத்தைக் கூறியுள்ளேன். தேர்வுக்குப் படிக்கும் பொழுது நடுச் சாமத்தில் ஏதோ ஒரு பேய் joy riding போனதால் பயந்து விட்டேன்.

இதைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டால் வீண் பயம். அந்தளவுக்கு ஊரில் இருந்த கிழவிமார் சிறுவயதில் பேய்க் கதைகள் சொல்லி என்னைப் பயமுறுத்தி இருக்கிறார்கள். 'ஆவி அண்ணன்' நல்லவராக இருந்தாலும், பயத்தால் அவரைக் கண்டதும் எனக்கு மரணம் சம்பவிப்பது நிச்சயம். அதனால் தேவையில்லாத ஆராய்ச்சிகளுக்குப் போவதில்லை.

Link to comment
Share on other sites

இதற்கு முன்பு பேய்கள் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தேன் . லிங்கைத் தேடினேன் கிடைக்கவில்லை . எனவே எனது வலைப்பூவை இணைத்துள்ளேன் இசை . எனக்கு இதில் நம்பிக்கை இல்லை , ஆனால் அம்மாச்சி என்னைச் சும்மா விடேல :D:D:lol::lol: .

http://koomagan.blogspot.com/2011/04/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.