Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நினைவுகளே......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே. நான் யாழிலே சுய ஆக்கங்கள் எதையுமே படைத்ததில்லை ஆனால் எனது முகநூலிலும், வலைப் பூவிலும் சில காலங்களாக எழுதிக்கொண்டிருந்தேன். எனது முக நூலிலே இருந்த சில ஆக்கங்களை பகுதி பகுதியாக இணைக்கலாம் என யோசித்திருக்கிறேன். இவற்றில் பல ஆக்கங்கள் எழுதி இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து போய் விட்டது. தற்போது எழுதுவதற்கான நேரமும் இல்லை, மன நிலையும் இல்லை. இவற்றில் பல எனது பதின்ம வயதுகள், ஹாட்லியில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்புக்கள். முதலாவதாக

[size=5]நினைவுகளே......[/size] Sunday, 13 June 2010 at 14:36

குளிர்காலம் ஆரம்பமாகி, வாகங்களின் மேல் வெண்பனி படரத் தொடங்கி விட்டது. வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்து எல்லாரும் வீடுகளிலும் ஷாப்பிங் சென்டர்களிலும் முடங்கத் தொடங்கி விட்டனர். அலுவகங்களிலும் பொருளாதார வருட இறுதி (end of financial year) நெருங்குவதால் சிலர் முமுரமாக வேலை செய்ய சிலர் தமது குளிர்கால விடுமுறையை எங்கே கழிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

எங்களுக்கும் இந்தவாரம், நீண்டவார விடுமுறை. அதற்கு நான் இங்கிலாந்து மகாராணிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவரின் 84 ஆவது பிறந்தநாளுக்கு எங்களுக்கு கிடைத்த பரிசுதான் இந்த ஒருநாள் பொது விடுமுறை. இந்த விடுமுறை பற்றி நான் இவ்வளவு அலட்டுவதற்குக் காரணம் இங்கு அவை அபூர்வமானவை. ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வருபவை. இந்த விடுமுறை சாக்கில் ஏதாவது எழுதுவம் எண்டால், எனத்த எழுதுவது எண்டு பிரச்சனை. தனி மடலிலும், ஸ்கைப்பிலும் சிலர் இதை எழுது, அதை எழுது எண்டு கேட்டிருந்தார்கள். நானும் "மணிரத்தினம் ஸ்டைலில்" எதையாவது "வித்தியாசமாய்" எழுதலாம் எண்டு எனது மடிக்கணணியில் தட்டத் தொடங்கினேன்.....

95/96 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வலிகாமத்தில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வடமராச்சியில் தங்கி இருந்த காலம். பாடசாலைகள் இன்றி நாங்களும் வாழ்க்கையை அனுபவித்த அருமையான காலம். எங்களின் வீட்டிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு குடும்பம் தங்கியிருந்தார்கள். மொத்தமாக 12 பேர். இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றது, பட்ட சீசன், கடல் குளிப்பு என்று பலவும் நடந்ததன் மத்தியில் தான் எனக்கும் அந்தப் பிரபல கல்லூரியில் அனுமதி கிடைத்தது.

அது கிடைத்த விதத்தையும் குறிப்பிட வேண்டும். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை மட்டுமே அங்கு உள்வாங்குவது வழமை. என்னுடைய குடும்பத்தில்,அப்பா அவரின் சகோதரங்கள், அண்ணா எண்டு எல்லாரும் அங்கு படித்தவர்கள். அப்பா நான் சின்னனா இருக்கும்போதே சொல்லுவது "தம்பி, கட்டாயம் ஹாட்லியில தான் படிக்கோணும் கவனமாப் படியுங்கோ" எண்டு. எங்களுடைய ஆண்டு சண்டை மும்முரமா நடந்ததால், புலமைப் பரீட்சை பிற்போடப்பட்டு முடிவுகளும் வரத் தாமதமாகின. இதால, ஹாட்லி வழமைப்படி ஒரு அனுமதித் தேர்வு வச்சு மாணவர்களை எடுப்பார்கள். நானும் ஒருநாள் போய் அனுமதிதேர்வ எழுதிப் போட்டு வந்தன். ஒருநாள் மத்தியானம் ரோட்டில பட்டமேத்திக் கொண்டிருகேக்க அரவிந்தன் (பிற்காலத்தில் சிங்கம் - அவனுக்குக் கொஞ்சமும் பொருந்தாத பட்டப் பெயர வச்சது A.N.R ரமணன் தான் ஏன் எண்டு அவனைத்தான் கேக்கோணும்!) ரோட்டால வந்தான். "டேய் நான் அட்மிசன் பாஸ்டா, நீ என்ன மாதிரி?" "உனக்கு யாரடா சொன்னது?" இங்கபார் எண்டு சொல்லி ஒரு கடிதத்தையும் நீட்டினான். எனக்கெண்டா வயித்தைக் கலக்கத் தொடங்கியது ஏனென்டா சோதினைக்கு முதல் நாளும் அம்மா கத்தக் கத்த பின்னேரம் முழுக்க பட்டமேத்தி இரவு 9 மணி மட்டும் ஊர்ப் பெடியளோட அலட்டிக்கொண்டிருந்தனான். நான் மட்டும் பெயில் எண்டா வீடுக்க போக ஏலாது. நானும் படலத்த ஏத்திக் கட்டிப் போட்டு உள்ளுக்க போய் "நான் ஒண்டு சொல்லுவன், ஒருத்தரும் பேசக் கூடாது எண்டு" நைசாத் தொடங்கினன். நான் எலாத்தையும் சொல்லி முடிக்கவும் அம்மா தொடங்கினா "அப்பவும் படி படி எண்டு எத்தினை தரம் சொன்னனான்? இப்ப என்ன செய்யப் போறாய். அப்பா, நீங்களும் இவருக்கு நல்லா இடம் குடுங்கோ அவர் உங்கட தலையில ஏறி இருந்து ஆடட்டும்". என்னால அப்பருக்கும் பேச்சு. அப்பா ஒரு நாள் கூட என்னப் படிக்கச் சொன்னது கிடையாது. என்னில அசையாத நம்பிக்கை அவருக்கு. பிற் காலத்தில் சில இடங்களில் அந்த நம்பிகையை நான் காப்பாத்தாதது எனுடைய தவறு. அப்பா பொறுமையானவர். நிதானமாகத்தான் யோசிப்பார், பேசுவார். "நாங்கள் உங்கட வேற சினேகிதப் பெடியளிட்ட போய் கேட்டுப் பாப்பம்" எண்டார், நானும் அம்மாட்ட இருந்தும் அவவிண்ட பூவரசம் கம்பில இருந்தும் தப்பிறதுக்கும் நல்ல சான்ஸ் எண்டு சொல்லி மோட்ட சைக்கிளின் பின்னால எறிக் குந்தினன். குட்டி, நிமல், கிரி எண்டு நான் ரோட்டில கண்ட எல்லாருக்கும் கடிதம் வந்திருந்தது. எல்லாரும் யூனி அட்மிசன் கிடைச்ச கணக்கில கதைச்சாங்கள். நானும் சிவப் பிரகாசத்தில (நான் 5 ஆம் ஆண்டு மட்டும் படிச்ச இடம்.) தான் தொடர்ந்து படிக்கொணுமோ எண்டு யோசிச்சன். அப்பாண்ட யோசினைப் படி நாங்கள் ஹாட்லிக்கு போய்ப் பாப்பம் எண்டுறது முடிவாகியது. அங்க போனா நோடீஸ் போட்ட சுத்தி ஒரே சனம். அதில தான் பாஸ் பண்ண ஆக்கள் எல்லாரிண்ட பேரும் போட்டிருந்திச்சினம். அகர வரிசையில் நான் முன்னம் இருப்பதால் என்ட பேரைக் கண்டு பிடிக்கிறது அவ்வளவு கஷ்டமாய் இருக்கேல்ல. எனக்கெண்டா பயங்கர சந்தோசம். இது இப்பிடி இருக்க, அப்பாவோடு ஒண்டா அந்தக் காலத்தில படிச்ச ராஜஸ்கந்தன் வாத்தியும் (பெடியளுக்கு இவரை R.K எண்டால் தான் தெரியும். இனி அடிக்கடி வந்து போகும் என் வில்லன்

இவர்) "என்னடா மச்சான் இந்தப் பக்கம்" எண்டு தண்ட கெல்மட் தலையை தடவியபடியே வந்தார். அப்பாவும் விசயத்த சொல்ல, "ஓமடா நானும் ஏன் வீணாத் தவாலில அனுப்போனும் எண்டு போட்டு உண்ட மூத்தவனிட்டக் குடுத்து விட்டன்" என்ன வில்லத்தனம், கொஞ்சமெண்டா என்ட தலையே போயிருக்குமே எண்டு யோசித்தபடி வீட்ட வரவும், பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்த அண்ணா கடித்த நீட்டினான்...

தொடரும்......

  • Replies 59
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் நன்றாக உள்ளது, தும்பளையான்!

எங்கட வீட்டிலை, இது நடந்திருந்தா, அம்மா முதலில மருந்தைக் குடிச்சுப் போட்டுத் தான், மற்றதுகளை யோசிச்சிருக்கும்!

தொடர்ந்து பகிருங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து நடை நன்றாக உள்ளது, தும்பளையான். தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தொடர் அருமை.. நேரத்தைக் காரணம் காட்டுவதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் 2007 இல் இணைந்த தும்பளையானை மன்னிக்க முடியாது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தொடர் அருமை.. நேரத்தைக் காரணம் காட்டுவதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் 2007 இல் இணைந்த தும்பளையானை மன்னிக்க முடியாது.. :D

விடுங்கப்பு அவருக்குத்தான் நேரமில்லை எண்டு சொல்லுறார் .ஆம்லேட் போடணும் அதில கச்சப்பால படம் போடணும்

எத்தின வேலையை ஒரு மனுஷன் செய்யுறது :lol::D

நல்லாருக்கு. உங்கள் அனுபவங்களைத் தொடருங்கள்.

விடுங்கப்பு அவருக்குத்தான் நேரமில்லை எண்டு சொல்லுறார் .ஆம்லேட் போடணும் அதில கச்சப்பால படம் போடணும்

எத்தின வேலையை ஒரு மனுஷன் செய்யுறது :lol::D

:lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அனுபவபகிர்வு நல்லாய் இருக்கு ...........மேலும் தொடர்க .[/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றாக உள்ளது[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி உறவுகளே

அனுபவத்தொடர் அருமை.. நேரத்தைக் காரணம் காட்டுவதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் 2007 இல் இணைந்த தும்பளையானை மன்னிக்க முடியாது.. :D

என்ன செய்ய அண்ணா ஏதாவது ஒண்டு எந்த நேரமும் வந்து நேரத்தை விழுங்கி விடுகிறது :unsure: . உண்மையில் 2006 லேயே யாழைப் பார்க்கத் தொடங்கி 2007 ல தான் உறுப்பினராக இணைந்தேன்.

விடுங்கப்பு அவருக்குத்தான் நேரமில்லை எண்டு சொல்லுறார் .ஆம்லேட் போடணும் அதில கச்சப்பால படம் போடணும்

எத்தின வேலையை ஒரு மனுஷன் செய்யுறது :lol::D

நந்தன் அண்ணா இது ஓவர் நக்கல் பாருங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1997 ஆம் ஆண்டு, தை மாசம் என்னுடைய இரண்டாம் நிலை படிப்பு தொடங்கியது. அப்போது எங்கட பாடசாலையின் அரைப்பங்கு இராணுவத்தால் விழுங்கப்பட்டு முகாமாக மாற்றப் பட்டிருந்தது. இதனால் வகுப்பறை, தளபாடம் என எல்லாத்துக்கும் பற்றாக்குறை நிலவியது. திருச்சபைக்குச் சொந்தமான Y.M.C.A hall தான் எங்களுக்கும் வகுப்பாக மாற்றப் பட்டிருந்தது.

18058_281384422327_609717327_3268418_571525_n.jpg

Y.M.C.A hall இன் இன்றைய தோற்றம்

மண்டபத்தின் நாலு மூலையிலும் நாலு வகுப்புகள், வகுப்புகளைப் பிரித்து சாக்கால் அடித்த தடுப்புகள். இந்த மண்டபம் 1878 ஆம் ஆண்டு கட்டப் பட்டது என நினைக்கிறன். யாராவது சரியான விபரம் தெரிந்தால் கூறவும்.

புதிதாகச் சேர்ந்த எங்களுக்கு வகுப்புக்களைப் பிரிக்கும் போது நான் கிறிஸ்தவனாக இருப்பதால் "C" வகுப்பில விடப்பட்டேன். கிறிஸ்தவர்கள் C வகுப்பில் விடப்படுவது எங்கள் கல்லூரி வழமை ஏனெனில் நேர அட்டவணை போல பல விசயங்களுக்கு இது உதவியானது. நான் இருந்ததோ என்னவோ, பிற்காலத்தில் எங்கள் வகுப்பு அதி குழப்படி கூடிய வகுப்பாக மாறியது என்பது மட்டும் உண்மை! மதில் விழுத்தினதில இருந்து ஊறுப்பட்ட விசயங்களில நாங்கள் தான் கில்லாடிகள். இதுகள் பற்றி போகப் போக எழுதுவேன். படிப்பிலும் விளையாட்டிலும் கூட எங்கள் வகுப்பு தான நல்ல நிலையில் இருந்தது. முதல் சில வருடங்களுக்கு "மெரிட்டில்" (நான்கு வகுப்புகளிலும் முதலாவதாக வருபவர்கள்) எங்கட வகுப்பு கட்டாயம் முதலாவதா இருந்திச்சு. கிரிக்கெட்டிலும், கல்லூரி அணியின் தலைவர் உபதலைவர் என இருவரும் எங்கட வகுப்புதான். athletics, track events ல கூட வகுப்பு ரீதியாப் பாத்தாலும் எங்கட வகுப்புதான் முன்னுக்கு நிக்கும். நாடகங்கள், கலை விழாக்களில்யும் எங்கட பெடியள் நிப்பாங்கள். scoutingல கூட கனபேர் வலு ஈடுபாடோட இருந்தவங்கள். இதெல்லாம் நான் எங்கட வகுப்பப் பற்றி புளுகிரதுக்காக சொல்லேல்ல பாருங்கோ. என்னோட படிச்ச பகீர், மகிந்தன், அன்டன், ரூபன் போல கன பெடியள் இருகிறாங்கள். அவங்களிட்ட நீங்கள் கேட்டுப் பாக்கலாம்.

தளவாடப் பற்றாக்குறையை விட இன்னொரு முக்கிய பிரச்சனை, இருக்கிற தளவாடங்களில காகம், புறா போன்றவற்றின் கழிவுகளால் வருவது. விடிய வெள்ளன வெளிக்கிட்டு வரோணும் கதிரை மேசை பிடிக்க. இல்லாட்டில் முன்னுக்கு நிலத்தில இருக்க வேண்டியதுதான். YMCA hall ஐ கன புறாக்கள் வீடாக பாவிக்கிரதால புறா எச்சம் மிச்சமாக நிலம் எங்கும் இருக்கும். கூட்டுமுறை காரருக்குதான் சிக்கல். அதுவும் திங்கள் கூட்டுற ஆக்களுக்கு கடும் வேலை காத்துக் கொண்டிருக்கும். அவரவரின் விளையாட்டுப் போட்டி இல்லப் படி தான் கூட்டுமுறை ஒழுங்கு செய்யுறது. அந்த ஒழுங்க AKPST எண்டுதான் குறிப்பிடுவம். யார் உதக் கண்டு பிடிச்ச்சதோ எனக்குத் தெரியாது. 5 இலங்கள் இருக்கிறதால நல்ல வசதியைப் போய்விட்டது. நான் கணபதிப் பிள்ளை (K) இல்லம் எண்ட படியால செவ்வாய்க்கிழமை கூட்டனும். கூட்டுமுறை காரர் வேளைக்கே வந்து கூட்டிப் போடோணும். இல்லாட்டில் அவனவன் வாத்திமாரிட்ட மூட்டிக் குடுத்துப் போடுவாங்கள். நான் எதுக்குமே நேரத்துக்குப் போறது கிடையாது. இங்க வந்தாப் பிறகு கொஞ்சம் திருத்தம் எண்டுதான் சொல்லோனும். என்னத்துக்கும் கடைசி நிமிஷம் மட்டும் இருந்துபோட்டு விழுந்தடிச்சுக் கொண்டு ஓடக் கரைக்கில்லாலா சைக்கிள வெட்டி வெட்டி ஓடுறது ஒரு திரில்.எண்ட நல்ல காலத்துக்கு எங்கட இல்லத்தில கொஞ்சம் நல்ல பெடியள் இருந்த படியால, நான் ரூபன் போன்ற படு சோம்பேறியல் வடிவாத் தப்பீட்டம். நாங்கள் வகுப்புக்கு செவ்வாய் காலம்பிறை வரேக்க வகுப்பு எல்லாம் கூட்டி வலு நீட்டா இருக்கும். ஹாட்லில இன்னொரு வழமை/பாரம்பரியம் செவ்வாய்க் கிழமைகளில தான் பாடசாலை ஒன்று கூடல் வைக்கிறது. இதுக்காக வெள்ளன வந்து வகுப்ப கூட்டிப் போடுவாங்கள். நாங்கள் கணக்கா வந்து அசெம்பிளியில போய்க் குந்த சரி. அசெம்பிளி முடிஞ்சு வரேக்க தான் வெள்ளன வந்து கூட்டினவன் கத்தத் தொடங்குவான். இண்டைக்கு வாத்தியிட்ட சொல்லப் போறன் அது இது எண்டு. நாங்களும் நடந்து நடந்து வரேக்கையே ஒரு மாதிரி negotiation இக்கு வந்திடுவம். அவனும் சரி போய் குப்பய அள்ளு, அப்பிடி என்டாப் பிரச்சனை இல்லை எண்டுவான். நாங்களும் போய் குப்பையா அள்ளி, கொட்டி கிணத்தில போய் கை கழுவிக்கொண்டு ஆடி ஆடி வர, முதலாம் பாடம் பெரும்பாலும் முடிஞ்சிருக்கும். டாப்பு கூப்பிடேக்க எங்கட bag இருக்கிறதால எப்பிடியும் பேருக்கு நேர இரண்டு கோடு விழும் எண்ட நம்பிக்கை. காலம் போகப் போக வாத்திமாருக்கு உந்த டாப்புக் கூப்பிடுற கஷ்டத்தஎல்லாம் வைக்காமல், நாங்களே போய் அலுவல முடிச்சுப் போடுவம். ஒருநாள் ஒருத்தர் இப்பிடித்தான் டாப்பு கூப்பிட்டு குண்சியிட்ட வளமா அம்பிட்டவர். குண்சியும் என்னுடைய பிறகு எழுதுவேன் "கியூ"வில் ஒருத்தர்.

எங்கட பள்ளிக் கூடத்துக்கு கனக்க பாரம்பரியங்கள் இருக்கு. நாங்கள் கொஞ்சம் பழைய ஆக்கள், லேசில எதுக்கும் மாற மாட்டம். பிறகு ஒரு அதிபர் வந்து கன விசயங்கள மாத்திப் போட்டார் எண்டுறது தான் கவலை. இந்த சாட்டில கொஞ்சத்த கீழ குறிப்பிடுறன், வேறை ஞாபகம் வந்தால் சொல்லவும் இணைத்து விடுகிறன்.

* அசெம்பிளி - செவ்வாய் காலை

*மாணவர் மன்றம் - புதன் கடைசிப் பாடம்

*விளையாட்டுப் போட்டி - ஆடி மாதம் வரும் முதல் சனிக்கிழமை

*கல்லூரி தினம் ஆனிமாதம்

*பாடசாலை ஆரம்பிக்கும் போது எல்லோரும் அமைதியாக எழுந்து நிற்றல் (இந்த நேரத்தில் சமயப் பிரார்த்தனைகள் கல்லூரிகீதம் எதுவும் இடம் பெறாது ஆனால், பிற்காலத்தில வந்த ஒரு அதிபர் உப்பிடிக் கனவிசயத்தில கைய வச்சுக் கொஞ்சம் குழப்பியடிச்சவர் -

முதல் சொன்னனே ஒருத்தரப் பற்றி, அவரே தான். அவர் பற்றியும் பின்னர் பார்ப்போம்).

*விளையாட்டுப் போட்டி இறுதியிலே Three hearty cheers சொல்லுவது. பெடியள் உத்துக்காகவே பொறுத்துக் கொண்டிருப்பாங்கள். உது என்ன எண்டு தெரியாத ஆக்களுக்காக. விளையாட்டுப் போட்டி முடிஞ்சு கல்லூரி கீதம் பாட முன்னம் கடைசியா எங்கட கல்லூரி athletic captain வந்து Three hearty cheers சொல்லுவார். முதலாவது - Three hearty cheers for the chief guest

இரண்டாவது - Three hearty cheers for the winning house

மூன்றாவது - Three hearty cheers for the visitors

இந்த ஒழுங்கும் சரியோ எண்டு தெரியாது. இப்பிடி சொல்லும் போது, பெடியள் எல்லாம் கைலேஞ்சியை எடுத்து கையில வச்சு எண்டு மூண்டு முறை hip hip hooray சொல்லுறது. உது சொல்லேக்க கத்துறது பெடியள் எல்லாருக்கும் நல்ல விருப்பம். அதுவும் பாரம்பரியங்களில ஒண்டு போல! வெள்ளக்காரன் அப்ப செஞ்சத இப்பவும் தொடருகிறோம்.

தொடரும்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தும்பளையான்! தொடருங்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ தும்பளையான்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் உங்கள் தும்ப்ஸ்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு தும்பளையான்...நல்ல எழுத்தாற்றல் உங்களுக்கு தொடருங்கோ...மனைவியை காதலித்து கட்டின கதையும் இதில் வருமோ :D

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடருங்கோ தும்பளையான்
    நல்ல எழுத்தாற்றல் உள்ளது :icon_idea:
  • பூட்டி வைக்காதீர்களப்பா :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தும்ப்ஸு..

அப்ப நாங்க ஒரே பச் தான். :rolleyes: குமணன்,,பெஞ்சி(அமல்ராஜ்),ராஜ்,கிரி,கார்த்தி,சிவபாலன் எல்லாரும் உன்ரை வகுப்பா??

அமாவாசையட்டை படிச்சதாலை எல்லாரையும் தெரியும். இதே கதையளைத்தான் அவங்களும் சொல்லுவாங்கள்.

நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கோ.. :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தும்ஸ் உங்கட பழைய கதைகளை தொடருங்கோ :lol:

அந்த நாள் ஞாபகங்களை மீண்டும் கண்முன்னே கொண்டுவருவதற்கு நன்றிகள் தும்பளையான். தொடர்ந்து எழுதுங்கள்.

வணக்கம் தும்ஸ் . உங்களிடம் இதைத்தான் எதிர்பாக்கின்றேன் . அலட்டல் இல்லாத இயல்பான சொல்லாட்சி , காட்சி விபரிப்பு என்று தூக்கி சாப்பிடுகின்றீர்கள் . இடைக்கிடை தெளிக்காது அடிக்கடி தெளியுங்கள் . படைப்புகளை ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி உறவுகளே, தொடர்ந்து இணைந்திருங்கள். இந்த நினைவுகள் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியது, இப்போது வாசிக்கும் பொது பல எழுத்துப் பிழைகள் தெரிகின்றன அத்துடன் சில மாற்றங்களும் செய்ய கை துரு துருக்கின்றது ஆனால் எதுவித மாற்றங்களும் செய்யாமல் இணைத்திருக்கிறேன். எழுத்துப் பிழைகளை கூடியவரை திருத்த முயற்சி செய்கிறேன். எனது நண்பர் வட்டாரத்தையே கருத்தில் கொண்டு எழுதியிருந்ததால் சில பகுதிகள் வித்தியாசமாக இருக்கும்.

நல்லாயிருக்கு தும்பளையான்...நல்ல எழுத்தாற்றல் உங்களுக்கு தொடருங்கோ...மனைவியை காதலித்து கட்டின கதையும் இதில் வருமோ :D

வரும்ம்ம்ம்ம் ஆனால் வராது ரதியக்கா...... :icon_mrgreen:

தும்ப்ஸு..

அப்ப நாங்க ஒரே பச் தான். :rolleyes: குமணன்,,பெஞ்சி(அமல்ராஜ்),ராஜ்,கிரி,கார்த்தி,சிவபாலன் எல்லாரும் உன்ரை வகுப்பா??

அமாவாசையட்டை படிச்சதாலை எல்லாரையும் தெரியும். இதே கதையளைத்தான் அவங்களும் சொல்லுவாங்கள்.

நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கோ.. :)

இல்லை மச்சான், அவங்கள் 04 A/L நான் 05 A/L. என்னை யார் எண்டு பிடிப்பது இலகு, சத்தம் போடாமல் இருக்கோணும் பொஸ். சச்சி டொக்டர் ஸ்கூட்டரில மகளை வந்து இறக்கிறதை பாப்பா கடைக்கு முன்னுக்கு நிண்டு லுக்கிற நாங்கள். குமணன், பெஞ்சி, ஏன் உங்கட கூட்டு குண்டு அரவிந்தனையும் வடிவாத் தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14.02.2005

அந்த வலண்டைன்ஸ் டே யாழ்ப்பாண ஓட்டத்த மாறக்க ஏலுமோ சிறி? ஒருநாள் குட்டி சொன்னான் "டேய் அண்ணா அனுப்பின செட் (சீடி, கசட் போடக்கூடிய ரேடியோ செட் அப் தான். எங்கட ஆக்களுக்கு இப்பிச் சொன்னாத்தான் விளங்கும்.) வேலை செய்யேலை ஒருக்கா யாழ்ப்பாணம் கொண்டு போகனும் எண்டான்." என்ட அப்பாவும் ஓட்டோவுக்கு சர்வீஸ் போடோணும் எண்டார். இதில ஒருவிசயம் சொலத்தான் வேணும் எங்கட அப்பாவப் பற்றி. அவர் எல்லா வாகனங்களிலையும் வலு கவனம். ஒவ்வொண்டுக்கும் ஒரு file இருக்கும் அதுக்குள்ளதான் அதுகளிண்ட registration, insurance, service history எல்லாம் ஒழுங்கா வச்சிருப்பார். மெக்கானிக் விசயத்திலயும் ஆள் கவனம்.ஆரையும் நம்பினார் எண்டால் அவன் தான் வாகனத்த தொட விடுவார். வேற ஆறும் கைவச்சா அவருக்கு பத்தியப் படாது.

அந்த வகையில எங்கட எந்த மோட்டச்சைக்கிளுக்கும் வருத்தம் எண்டா யாழ்பாணம் தண்ணி டாங்கிக்கு கிட்ட இருந்த "சின்னப் பவுன்" தான் வைத்தியம் பாப்பார் ஓட்டோவுக்கு கொட்டடி "சீலன்"

யாழ்பாணத்தில தான் ஓட்டோவுக்கு சர்வீஸ் என்ட முடிவு எடுத்தாச்சு. இதக் குட்டிக்கு சொல்ல "என்ன மச்சான் வாவேன் யாழ்ப்பாணம் போவம். சிறீக்கும் எதோ அலுவல் இருக்காம்" எண்டான். சிறியிண்ட அலுவல் உண்மையா யாழ்பாணத்தில இல்ல மானிப்பாய் றோட்டில போகோணும் எண்டு வச்சுக் கொள்ளுங்கோவேன்.

அது ஒரு திங்கக்கிழமை. நான், குட்டி, சிறி மூண்டு பெரும் காலங்காத்தாலையே வெளிக்கிட்டாச்சு. ஊரில யாழ்ப்பாணம் போறது எண்டால் பெரிய பிரயாணம் மாதிரித்தானே. எங்கட ஓட்டோ குட்டியிண்ட CBZ எண்டு ரெண்டையும் எடுத்துக்கொண்டு வெள்ளிகிட்டம். நான் என்ட பாட்டில வாகனத்த ஒடிகொண்டிருந்தன். சிறியும் பி சீட்ல இருந்து மொபைலில யாருக்கோ (பிறகு யார் எண்டு கேக்கிறேல்ல தெரிஞ்சாலும் கமுக்கமா அமுக்கிக்கொண்டு இருக்கோணும் கண்டியளோ) கடலை போட்டுக் கொண்டிருந்தான். ஆவரங்கால் தாண்டினாப் பிறகுதான் என்ன நினைச்சானோ தெரியாது "மச்சான், கொஞ்ச நேரத்துக்கு நான் ஒடட்டே?" எண்டு இழுத்தான்.

இதில சிறி பற்றி கண்டிப்பா சொல்லோனும். எங்களுக்கு "அறவிட முடியாக் கடன்" தார ஆக்களில சிறியும் முக்கியமான ஆள். அவன்ட வீடு கேட் எப்பவும் திறந்து தான் இருக்கும். வீட்ட போனால் எப்பவும் எங்கள கூப்பிட்டு இருத்தித்தான் கதைப்பான். அதோட சிறி சரியான சுவாரசியமான பெடியன். நல்ல பம்பலாக் கதைப்பான், நேரம் போறதே தெரியாது. இப்பிடிப் பல காரணங்களால் (அதில இன்னொரு முக்கிய காரணம் அவனின்ட வீட்டு லொக்கேசன். அவனுக்கு அக்கம் பக்கம் நல்ல "வளமான" வீடுகள். இதால "தரிசனத்துக்கும் " சிலர் அங்க போறவயளாக்கும். கிராமக் கோடு தெரிஞ்ச ஆக்களுக்கு உது கட்டாயம் தெரிஞ்சிருக்கும். அப்பிடி தெரியாட்டி சுத்த வேஸ்ட் ஹி ஹி ஹி ..... ) அவனின்ட வீட்டில எப்பவும் ஒரு நாலஞ்சு மோட்டச்சைக்கிலும் பெடியளும் நிப்பாங்கள். இவரிண்ட வண்டவாளங்கள பிறகு ஒருநாளைக்கு அவிழ்த்து விடுவோமில்ல ( சண்டைக்காக ஸ்பெயின் டு அவுஸ் வரமாட்டன் எண்ட நம்பிக்கை)

ஒட்டோவத்தானே கேட்டவன், அதுவும் சிறிக்கு குடுக்காம எண்டு சொல்லிப் போட்டு நான் குட்டியிண்ட CBZ இக்கு மாறினன். புத்தூர்ச் சந்தி வரை எல்லாம் நல்லாத்தான் போய்க்கிடிருந்திச்சு. திடீரெண்டு பாத்தா சடார் எண்டு ஒரு சத்தம். கொஞ்சத்தூரம் போய் ஓட்டோவும் நிண்டிச்சு இறங்கி போய்ப் பாத்தா, றோட்டுக்கரையில நிண்ட ஒரு சைக்கிள தட்டிப் போட்டாங்கள். ஒரு சண்டை, accident எண்டா விடுப்புப் பாக்கிறதுக்கு எண்டே ஊர்வழிய ஒரு கும்பல் வேலை வெட்டி இல்லாமல் திரியும். எங்கட கேசிலையும் அப்பிடித்தான் ஒரு ரவுண்டு கட்டிச் சனம். அரைவாசிப் பேருக்கு என்ன நடந்திச்சு எண்டே தெரியாது. இடி வாங்கினது ஒரு லேடீஸ் சைக்கிள். பெரிசா ஒரு சேதமும் இல்லை, செயின் கவர்ல ஒரு சின்னக் கீறு. அவர் (சைக்கிளோட நிண்ட பெடித்தரவழி) சொன்னார் "என்ட girl friend இண்ட (இவருக்கு அது இருக்கும் எண்டு நாங்கள் நினைகேல்ல ஹி ஹி ஹி) சைக்கிள், எனக்கு இப்ப ஒரு புதுச் சைக்கில் வாங்கித் தரோணும்" நீங்களே சொல்லுங்கோ, ஒரு சினக் கீறுக்கு புதுச்சைக்கிள எந்த மடையனாவது கேப்பானோ?? செயின் கவர மாத்தித் தா எண்டு கேட்டிருந்தா கட்டாயம் மாத்திக் குடுத்திருப்பம். மாப்பிள நினைச்சார், வசதியான பெடியள் போல நல்லா வறுகுவம் எண்டு. இதுக்குள்ள இயக்கத்திட்ட போகப் போறன் அது இது எண்டு பெரிய கலர் வேற. ஓட்டோ நம்பர எல்லாம் குறிச்சு எடுத்தார். விஷயம் கொஞ்சம் சூடாகி ஊர்ச்சனம் எல்லாம் எங்கள சுத்தி நிக்கிது. இருந்தாப் போல ஒரு பெரிசு வாயத் திறந்து சொல்லிச்சு "நீங்க போங்கோ தம்பியவை, இந்த விசரன நான் பாக்கிறன் எண்டு." சனங்களும் சொல்லிச்சு "படிக்கிற பெடியள் ஏன் வச்சு மினக்கேடுத்துறியல்" எண்டு. குட்டி வாகனத்த எடுக்க சிறி மோட்டசைக்கிள எடுக்க நாங்களும் அவருக்கு "செந்தமிழில" ஒரு அர்ச்சனை செய்து போட்டு வெளிக்கிட்டம்.

தொடரும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தும்பளையான் கலக்கிறீங்கள்/கலாக்கிறீங்கள்;

இப்படி தெரிந்த ஆட்கள் கனபேர் வரும் என்றால்- நாற்சந்திப்பகுதிக்கு மாற்றலாம்- ஒரு சின்ன ஆலோசனை

ஊர்க்கதை படிப்பதில் ஒரு சுகம் தான் ,நான்றாக போகின்றது தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கால நினைவுகள் எப்போதும் மறக்க முடியாதவை.

தும்பளையான் நீங்கள் எழுதும் விதம் பாடசாலைக்கே கூட்டிச் செல்கின்றது.

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அய்.. நம்மட பள்ளிக்கூடம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.