Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாங்கள் யாழ்ப்பாண‌த்தார் (we are from Jaffna)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம் .சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய் அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ் பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம் கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான் விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்க வேண்டும் பிறகு நேரம் கிடைக்காது இப்ப வாங்கோ என்று அதிகாரம்கலந்த பாசத்தோடு அழைத்தான்.போங்கோ பிள்ளை அப்பா கூப்பிடும் பொழுது போய் படியுங்கோ அப்பதான் சாய்பிரியாவை விட அதிக புள்ளி எடுக்கலாம் . போனமுறை சாய்பிரியா கேடயம் எடுத்தவ இந்த முறை நீங்கள் எடுக்க வேணும் என அம்மா வேறு அவளை நச்சரித்தாள் .சாய்பிரியாவின் அம்மாவும் இவளின் அம்மாவும் ஒன்றாக யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள்
பெரியவளுக்கு அந்த வயசில் போட்டிகள் கேடயங்கள் எதைப்பற்றியும் தெரியாது.

அப்பாவும் அம்மாவும் தன்னை படிக்க வற்புறுத்துகிறார்கள் என்று எண்ணியபடியே கேள்விகொத்தொடு வந்தாள் .,வரும் பொழுதே “தங்கச்சி மட்டும் விளையாடுகிறா நான் மட்டும் படிக்க வேண்டும் கோல் கெர் டு(call her too) ” என்ற படியே வந்து அமர்ந்தாள்.சரி சின்னா நீங்களும் வாங்கோ அடுத்த வருடம் நீங்கள் இந்த போட்டிக்கு போக வேணும் தானே இப்பவே படிச்சால் நல்லம் என்று சொல்லி இருவருக்கும் சுரேஸ் படிப்பித்தான்


சுரேஸ்: 1.கோவிலுக்கு போகும் பொழுது எப்படி போக வேணும்?
சிறுசு:காரில் போகவேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! குளித்து சுத்தமான ஆடை அணிந்து செல்ல வேண்டும்..

சுரேஸ்:2.உணவு உண்ணமுதல் என்ன செய்ய வேண்டும்?
சிறுசு:கை கழுவ வேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! இறைவனை வணங்கிய பின்பு உண்ண வேண்டும்


அப்பா தங்கச்சி சொன்னது எல்லாம் சரிதானே பிறகு ஏன் நீங்கள் வேறு பதில் கொன்னீங்கள்..
தங்கச்சி சொன்னது சரிதான் ஆனால் சமய போட்டியில இந்த கேள்வி கேட்டால் நீங்கள் புத்தகத்தில் இருக்கும் பதிலை சொல்ல வேணும் சரிதானே.
பிள்ளைகள் இருவரும் ஒம் அப்பா என்று போட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.
போட்டி முடிவடைந்து முடிவுகள் அறிவித்தார்கள் .பெரியவளுக்கு கேடயம் கிடைத்தது .பெற்றோர்கள் சந்தோசப்பட்டார்கள் .சாய்பிரியாவுக்கு என்ன கிடைச்சதாம் என்று பெரியவளிடம் தாய் கேட்டார்.”எனக்கு தெரியாது அம்மா”.தாய்காரியின் முகத்தை பார்த்தியளே உம் என்று வைச்சிருந்தா ,அவளின்ட மகளுக்கு கேடயம் கிடைக்கவில்லை எண்ட ஆத்திரம்தான்.

"சீ சீ அப்படியிருக்காது"
"உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் எதிராக சொல்லாவிட்டால் நித்திரை வராதே"

"சரி சரி உதை விடும்"

பெரியவள் மூன்றாம் வகுப்பு படிக்க தொடங்கியவுடனே சுரேஸும் மனைவியும் அவளது படிப்பில் அதிக அக்கறையுடன் ஈடுபடத்டொடங்கிவிட்டார்கள்.படிப்பு மட்டுமல்ல நீச்சல்,பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வலை பந்தாட்டம்,போன்ற துறைகளிலும் அவளை ஈடுபடுத்தினார்கள்.அவளும் நன்றாக பாடங்களில் சித்தியடைந்தாள் . அக்கா எல்லாப்பாடங்களில் "எ" எடுத்திருக்கிறார் நீங்களும் அடுத்த வருசம் எல்லா பாடத்திலயும் "எ" எடுக்க வேணும் என்றனர் பெற்றோர்.சிறுசும் ஒம் என்று தலை அசைத்தாள்.இருவரும் நன்றாக படித்துகொண்டிருந்தனர்.அதே நேரம் எனைய துறைகளிலும் இருவரும் தங்களால் இயன்றளவில் பிரகாசித்துக்கொண்டிருந்தனர். தங்கச்சியின் குரலை பார்த்தியா நல்லாய் இருக்கு நீயும் அவளை போல பாட வேணும் என தாயார் சொன்னார்.இன்னொரு நாள் அக்கா நல்லா பரதம் ஆடுகிறாள் அவளை பார்த்து நீ வடிவாய் ஆடவேணும் என்றாள்.
"வை யு பிப்பில் ஆர் கொம்பயர் இச் அதர்(why do you people compare us to each other ) "என்றனர் சிறுவர்கள் இருவரும்.

"அம்மாவுக்கு வாய் காட்டாமல் அவ சொன்னதை செய்யவும்"என்றான் அதிகாரத்துடன் சுரேஸ் .

சிறுவர்களின் அந்த கேள்விக்கு பின்பு சகோதரர்களிடையே ஒப்பிடுவதை தவிர்த்து கொண்டனர்.ஆனாலும் அயலவர்களுடன் ஒப்பிடுவதை விடவில்லை.

உயர் வகுப்பு பாடசாலை தேர்வில் சாய்பிரியா அதிக புள்ளி கிடைத்து வேறு பாடசாலைக்கு சென்று விட்டாள் .இதனால் சுரேஸும் அவனது மனைவி யும்பெரும் கவலையடைந்திருந்தனர்.ஆனால் பிள்ளைகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.காரணம் இவர்கள் செல்லும் பாடசாலைக்கும் சாய்பிரியா செல்லும் பாடசாலைக்கும் பெரிதாக தராதர வித்தியாசம் இல்லை.தராதர வரிசையில் சாய்பிரியாவின் பாடசாலை முதலாவது ,இவர்களது இரண்டாவது.

பிள்ளைகள் இப்ப உயர் வகுப்பு படிப்பதால் எதிர்கருத்து வைப்பதற்கு துணிந்து விட்டார்கள் பெற்றோரும் அதை மெளனமாகவும் சில நேரங்களில் சிரித்தும் சமாளித்து விடுவார்கள்.தாயாரை விட சுரேஸ்தான் பலே கில்லாடி சிரித்து சமாளிப்பதில்.
" பெரிசு ,சாய்பிரியா எத்தனை மாக்ஸ் எடுத்தவ இந்த முறை டெஸ்டில்"
"எனக்கு தெரியாது ,மற்ற ஆட்களின்ட மாக்ஸ்சை (marks)கேட்கிறது நொட் நைஸ்(not nice),மற்றது அவ வேற ஸ்கூல்"

"நீ டெலிபோன் பண்ணி கேட்டிருக்கலாம் நான் படிக்கிற காலத்தில என்ட மாக்ஸ்சை பார்க்க முதல் மற்றவனின்ட மாக்ஸ்சைதான் பார்ப்பேன்"என சொல்லி சிரித்தான் சுரேஸ்.
"யூ பிப்பில் ஆர் சொ ரூட்(you people are so rude) "
"தங்கச்சி இன்றைக்கு பலே ஆட்டத்தில கிறிஸ்டினா நல்லா செய்திருந்தா அவவுக்குதான் முதல் பரிசு கிடைச்சது"
"ஒம் அக்கா நானும் பார்த்தேன் சுப்பேர்ப்(superb)"

" பிள்ளைகள், அவள் நல்லாய் செய்தாள் என்று சொல்லுறீயள் ஏன் உங்களால் செய்யமுடியாமலும்,முதல் பரிசு எடுக்க முடியாமல் போய்விட்டது. அவள் படிக்கிற இடத்தில்தானே நீங்களும் படிக்கிறீயள்"
"கேர் பெரண்ட்ஸ் ஆர் ரஸ்யன்(her parents are Russians) "
"சொ வட் .மனம் இருந்தால் இடம் உண்டு"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"இருவரும் ஒன்றாக செய்தனர்.



"நீச்சலில் முன்வீட்டு சன்டினாவுக்கு பாடசாலையில் முதல் இடம் கிடைச்சிருக்கு ஏன் உனக்கு கிடைக்கவில்லை பிள்ளை"

"சி இஸ் ஒசி கெர்ல்"
"சொ வட், நீயும் இங்கதானே பிறந்தனீ...ஏன் உனக்கு எடுக்க ஏலாமல் போய்விட்டது..."


"!!!!!!!ம்ம்ம்ம் ஐ வில் ரை நெக்ஸ்ட் டைம்(I will try next time)"
"இந்த முறை முயுசிக் கொம்பிடிசன் வருகிறது இரண்டு பேரும் டான்ஸ்க்கும்,முயுசிக்கும் போடவேணும் ,இந்தியன் பெட்டைகள் அனுஸ்காவும் கம்சிகாவும் தான் இந்த முறையும் முதலாவதாக வரப் பார்ப்பாள்லவையள் ஆனால் நீங்கள் தான் இந்த முறை முதலாவதாக வரவேணும்"

" ஒ கொட்(oh god)....ஏன் அம்மா நீங்கள் எல்லாத்தையும் கொம்பிடிசனாக பார்க்கிறீங்கள் ,ட்ரை பண்ணுவோம் இவ் வி கெட் ......."

யார் அம்மாவுக்கு வாய்காட்டிகொண்டு எதிர்த்து கதைக்கிறது என்று கேட்டபடியே சுரேஸ் அங்கு வந்தான்.
"அப்பா ,அம்மா எல்லாத்தையும் கொம்பிடிசனாகத்தான்(competition) பார்க்கிறா ஏன் இப்படி செய்கிறா என்று தெரியவில்லை"

அம்மா மட்டுமல்ல நானும் அப்படித்தான் பிகோஸ் வி ஆர் வ்ரோம் யவ்னா (because we are from Jaffna).எதிலும் ஒரு போட்டியிருக்க வேணும் அப்பதான் முன்னுக்கு வரலாம்.

"நீங்கள் சின்ன வயசில எடுத்த மெடல்கள் ஒன்றையும் இங்க காணவில்லையே அப்பா"
சுரேஸுக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் போனாலும் சாமாளித்துவிட்டான் ,ஆர்மிக்காரனின் தலையில் பழியை போட்டு தப்பித்துகொண்டான்.மெடல்களை அவன் தொட்டே பார்க்கவில்லை என்பது அவனுக்கே தெரிந்த உண்மை.
"அது எல்லாத்தையும் ஆர்மிகாரன் உடைச்சுப்போட்டான்,அவன்கள் மெடல்களை மட்டுமா உடைச்சாங்கள் எங்களுடைய கல்வியையும் பாழாக்கி போட்டாங்கள் ,ஆனாலும் எங்கன்ட சனத்தின்ட விடாமுயற்சியும் போட்டி மனப்பாங்கும் தான் அழித்தாலும் மீண்டும் முளை விடுகிறார்கள்....அவங்களை"
அப்பா டென்சன்(tension) ஆகிவிட்டார் லெட்ஸ் கொ( lets go),என கூறியவாறு பிள்ளைகள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே சமுகத்தில் நடைபெருபவற்றை தயங்காது வெள்ளிக்கொண்டுவருவதில் புத்ஸ் அண்ணா கில்லாடி பாராட்டுக்கள்

We r different from other Tamils we r tamil

Australians :D

எமது தமிழ் சமூகத்தினரிடையே மிகவும் புரையோடிப் போயுள்ள ஒரு விடயத்தை வெளிக்கொண்டுவந்திருக்கும் புத்தனுக்குப் பாராட்டுக்கள். இதனுடன் சம்பந்தப்பட்ட ஒரு பதிவை நானும் எழுதி வருகிறேன். அரைவாசியில் நிற்கிறது. ஆனாலும் இது யாழ்ப்பாணச் சமூகத்தினை மட்டும் குறித்ததான பிரச்சினை அல்ல. பல பாகங்களில் வாழ்பவர்களிடமும் இருக்கத்தான் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்குப் பாராட்டுக்கள்,  இது எல்லா இடமுமிருக்கும் ஒரு கிருமி, யாழ் பின் அதற்குள் வடா, இந்து, கொக்குவில், மானிப்பாய்.....

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரர்களுக்கு பணக்காரர்களைப் பார்த்துப் பொறாமை வருவதில்லை. தம்மைவிட வசதியான பிச்சைக்காரர்களைப் பார்த்துத்தான் பொறாமைகொள்வார்களாம்.

 

பக்கத்து வீட்டுப் பொண்ணு டொக்ராக வந்தால் நம்ம பொண்ணும் டொக்ராக வேண்டும், பக்கத்து வீட்டுப் பையன் என்ஜினீயர் என்றால் நம்ம பையனும் என்ஜீனியராக வரவேண்டும் என்ற சிந்தனையோடு வளர்ந்தவர்கள். 

 

ஆனால் பிள்ளைகள் அதைப் பின்பற்றி வளரவில்லை என்ற நல்ல விடயத்தைக் காட்டிய புத்தனைப் பாராட்டுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
இந்த போட்டி வெள்ளைகளிலும் இருக்கிறது.வெளிக்காட்ட மாட்டார்கள்.இந்தியர்கள் சொல்லி  வேலையில்லை. சீனாக்காரர் ..... வார்த்தை இல்லை.போட்டி இருப்பதில் தவறில்லை தானே. ஆனால் பொறாமை தான் பொல்லாதது.
 
மீண்டும் ஒரு அழகான பதிவை தந்த புத்தனுக்கு நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தா 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு.. :D பிள்ளைகளின் மரியாதையைச் சம்பாதிப்பதற்குப் பெற்றோர் முயற்சி செய்ய வேணும்..

 

பச்சை முடிஞ்சு போச்சு..

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நான் நினைத்து வைத்திருந்த கரு.எப்படி எழுதுவது என்டு தெரியாமல் முழிச்சுக்கொன்டு இருந்தனான்.எனது எண்ணத்தை நிறைவேற்றியதுக்கு கோடி நன்றிகள்.


சுரேஸ்: 1.கோவிலுக்கு போகும் பொழுது எப்படி போக வேணும்?
சிறுசு:காரில் போகவேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! குளித்து சுத்தமான ஆடை அணிந்து செல்ல வேண்டும்..

சுரேஸ்:2.உணவு உண்ணமுதல் என்ன செய்ய வேண்டும்?
சிறுசு:கை கழுவ வேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! இறைவனை வணங்கிய பின்பு உண்ண வேண்டும்

 

அது புத்தா :lol: :lol: :icon_idea: . உங்களைப்போலை பரியாரியள் எப்பவுமே இந்த சனங்களுக்கு தேள்வை கண்டியளோ :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா, மற்றைய பிள்ளைகளோடு ஒப்பிட்டு எங்கள் பிள்ளைகளை வதைக்கிற கலை ஐரோப்பியத் தமிழர்களிடமும் அதிகமாய் இருக்கிறது. போட்டிகள் கூட பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப நடைபெறுவதில்லை. யதார்த்தத்தை அப்படியே சின்ன நகைச்சுவையோடு சேர்த்து தந்திருக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தரமான பதிவு புத்தன் அண்ணா,

நான் நினைக்கிறேன் அனேகம் இது எல்லார் வீடுகளிலும் நடந்திருக்கும் என்று, நாங்கள் பட்ட அவஸ்தையளை கதையாக்கி இருக்கிறிங்கள்.

நாங்கள் திருப்திப்பட்டுக்கொண்டால் கூட வீட்டுக்காரர் விடமாட்டினம். பாவம் பிள்ளையள் அவுஸ்ரேலியா,ஜரோப்பா என்ற படியால் இப்படியாவது கேட்குதுகள் யவ்னா வா இருந்தால், சொல்லவா வேணும் ..!! :(

 

நன்றி புத்தன் அண்ணா.

(பச்சை முடிஞ்சு போச்சு)

  • கருத்துக்கள உறவுகள்

புத்து இந்த copy - cat யாழ்ப்பாண மக்களிடம் மட்டுமில்லை. மேலும் பலரிடம் இருக்கக் காண்கிறோம். மலையாளத்தாரிடம் இவையை விட மோசம். வீடுகளைப் பார்த்தீங்கன்னா.. அப்படியே அச்சடிச்ச மாதிரி ஒருவரை ஒருவர் கொப்பி பண்ணி வைச்சிருக்கிறதைக் கண்டிருக்கிறன். அப்படிப் பார்க்கிறப்போ.. யாழ்ப்பாண மக்கள்.. கொஞ்சம் பறுவாயில்லை. இப்படியாப்பட்ட யாழ்ப்பாண மக்களை கொப்பி பண்ணுற மற்றவையை என்ன சொல்லுறது..??!

 

அதுசரி.. இப்படி "யாழ்ப்பாணத்தார்" என்று பிரதேசவாதம் கதைக்கிறது.. யாழில அனுமதிக்கப்பட்டிருக்கோ..???! இல்ல.. அதுக்கு (பிரதேசவாதம்) தடை என்று சில தினங்களுக்கு முன்னர் யாரோ சொல்லிச்சினமே..??! அல்லது "யாழ்ப்பாணத்தார்" என்று சொல்லுறது பிரதேசவாதம் இல்லை என்று யாழ் சுய கணிப்பு கணிச்சு வைச்சிருக்குதோ..??!

 

அது என்னமோ தெரியல்ல.. யாழ்ப்பாணம் தெருப் பிள்ளையார் போல. எவனும் வந்து தேங்காய் அடிச்சுட்டிப் போகலாம். அது அழுகல் தேங்காயாய் இருந்தால் என்ன கொப்புறான்னா என்ன.. எவரும் கவலைப்பட மாட்டினம். ஆனால்.. இதையே மற்றவைக்குச் செய்திட்டா.. கத்தி.. பொல்லு.. துவக்கு.. துரத்தல்.. தண்டனை என்று கொண்டு வந்திடுவினம். யாழ்ப்பாண மக்கள். வடிவேல் போல.. நல்லா அடிவாங்கிட்டு நல்லவன் என்றான்னு அடங்கிடுவினம் என்று நினைக்கினமோ என்னமோ..?! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தரப்படுத்தலும் ஆமிக்காரரும் இல்லாவிட்டால் நம்மை மாதிரி ஆட்கள் பிள்ளைகளிடமிருந்து தப்பிக்கிறது ரொம்ப கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கத்தை விட‌ தூக்கலான புத்தனது கதை...வழமையை விட‌ ஆங்கில சொற்கள் அதிகம் அவுசில் கதை நட‌க்குது என்பதை காட்டுவதற்காக இருக்குமோ...புத்தன்ட‌ சொந்த அனுபவமாகவும் இருக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதை, மிகவும் அழகு,புத்தன்!

எனக்கென்னவோ, எல்லோரும் ஒரு ஓட்டப் போட்டியில் ஓடிக்கொண்டிருப்பது போலத் தான் தெரிகின்றது!

பொதுவாகத் தனி மனிதர்களின், செயல்கள் தான் சமூகமாக விரிகின்றன!

எமது இனம் மட்டும், வயலை உழுகின்ற மாடுகள் போல, உழுது கொண்டே வாழ்க்கையை முடித்து விடுகின்றது!

உலகம் எவ்வளவு விரிந்து போன ஒரு வெளி!

ஏனோ எமது மாடுகள் மட்டும், ஒரு குறுகிய நிலப்பரப்பிலேயே திரும்பத் திரும்ப உழுது கொண்டு, ஒரே விதமான தானியத்தையே திரும்பத் திரும்ப விதைத்துக் கொண்டிருக்கின்றன!

சுதந்திரமாக, தான் விரும்பிய புல்லை மட்டும் மேய்வதற்கு, அதற்கு அனுமதி கிடைப்பதில்லை! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு பகிர்வு

புத்தன் நீங்கள் கலக்கிட்டீங்கள்    

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது இன்றைய பெற்றோராக இருக்கும் பலரின் குறுகிய மனவெளி. இது யாழ்ப்பாணத்தாருக்கும் மாத்திரமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னொரு பிள்ளையைக் காட்டி தம் பிள்ளைகளை கடிந்து கொள்ளும் பொற்றோரே 90 வீதமானர்வள். தமிழ்சமூகத்தில் அதிகம் இத்தகைய நிலைகள் இன்னும் அதிகமாக இருக்கிறது. எங்களுடைய எண்ணங்களை அவர்களுக்குள் திணிப்பதில் இருந்து நாங்கள் விடுபடும்போது எங்களுக்குள் பிரமிக்கத்தக்க அறிவாளிகள் தோன்றுவார்கள்.

 

நன்றி புத்தன்.

உங்களின் மனநிலைகேற்ற வகையில் கதையை நகத்தியுள்ளீர்கள்.

 

இது எல்லா சமூகத்திலும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கிட்டடியிலை புத்தனுக்கு இருட்டடி இருக்கு :lol: . ஏனெண்டால் இது எங்கடை யாழ்ப்பாண சமூகத்திலை மட்டுமில்லை. உலகத்திலை இருக்கிற எல்லா சமூகத்திலையும் உந்த வியாதி இருக்கு....உந்த வியாதி எங்களுக்கை மட்டுந்தான் இருக்கெண்டு சொல்லிச்சொல்லி எங்களை நாங்களே தாழ்த்திகொள்ளுறம். ஒரு அமெரிக்கன்,ஒரு அவுஸ்ரேலியன்,ஒரு பிரிட்டிஸ்காரன்,ஒரு கனேடியன்,ஒரு பிரான்ஸ்காரன்,ஒரு ஜேர்மனியன் என தாங்கள் மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்தில் நாமோ இன்னும் யாழ்ப்பாணியுடன் நிற்கின்றோம். மேற்குறிப்பிட்ட அத்தனை நவநாகரீக நாடுகளுக்குள்ளும் குறுகியமனப்பான்மையுள்ளவர்கள் நூற்றுக்கு நூறுவீதம் உள்ளனர். :D
 
எண்டாலும் புத்தன்! கதை எழுதுறதுக்கும் ஒரு ரலண்ட் வேணும் அது உங்களிட்டை நிறைய இருக்கு.....உண்மைக்கதையை வாசிச்ச திருப்தியோடை என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :)
  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ்: 1.கோவிலுக்கு போகும் பொழுது எப்படி போக வேணும்?
சிறுசு:காரில் போகவேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! குளித்து சுத்தமான ஆடை அணிந்து செல்ல வேண்டும்..

சுரேஸ்:2.உணவு உண்ணமுதல் என்ன செய்ய வேண்டும்?
சிறுசு:கை கழுவ வேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! இறைவனை வணங்கிய பின்பு உண்ண வேண்டும்


 இதே மாதிரி பல நகைச்சுவைப் பதில்கள் உந்த சமயப் போட்டியில் பிள்ளைகள் பதில் அளித்திருக்கிறார்கள்

கேள்வி : கோயிலுக்கு முன்பே இருப்பது என்ன?
 பதில்1 : கார் பார்க்(வாகன தரிப்பிடம்)
 பதில்2 : செருப்புக்கள், சாப்பத்துக்கள்

Edited by கந்தப்பு

கிட்டடியிலை புத்தனுக்கு இருட்டடி இருக்கு :lol: . ஏனெண்டால் இது எங்கடை யாழ்ப்பாண சமூகத்திலை மட்டுமில்லை. உலகத்திலை இருக்கிற எல்லா சமூகத்திலையும் உந்த வியாதி இருக்கு....உந்த வியாதி எங்களுக்கை மட்டுந்தான் இருக்கெண்டு சொல்லிச்சொல்லி எங்களை நாங்களே தாழ்த்திகொள்ளுறம். ஒரு அமெரிக்கன்,ஒரு அவுஸ்ரேலியன்,ஒரு பிரிட்டிஸ்காரன்,ஒரு கனேடியன்,ஒரு பிரான்ஸ்காரன்,ஒரு ஜேர்மனியன் என தாங்கள் மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்தில் நாமோ இன்னும் யாழ்ப்பாணியுடன் நிற்கின்றோம். மேற்குறிப்பிட்ட அத்தனை நவநாகரீக நாடுகளுக்குள்ளும் குறுகியமனப்பான்மையுள்ளவர்கள் நூற்றுக்கு நூறுவீதம் உள்ளனர். :D
 
எண்டாலும் புத்தன்! கதை எழுதுறதுக்கும் ஒரு ரலண்ட் வேணும் அது உங்களிட்டை நிறைய இருக்கு.....உண்மைக்கதையை வாசிச்ச திருப்தியோடை என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :)

 

 இதை உணர்ந்தால் இப்படி குறுகிய பிரதேசவாதத்திற்க்குள் நிற்கமாட்டோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

we r tamil

Australians :D

நன்றிகள் சுணடல்....ஐயோ பிரதேசவாதம் கதைக்ககூடாது...:D

எமது தமிழ் சமூகத்தினரிடையே மிகவும் புரையோடிப் போயுள்ள ஒரு விடயத்தை வெளிக்கொண்டுவந்திருக்கும் புத்தனுக்குப் பாராட்டுக்கள். இதனுடன் சம்பந்தப்பட்ட ஒரு பதிவை நானும் எழுதி வருகிறேன். அரைவாசியில் நிற்கிறது. ஆனாலும் இது யாழ்ப்பாணச் சமூகத்தினை மட்டும் குறித்ததான பிரச்சினை அல்ல. பல பாகங்களில் வாழ்பவர்களிடமும் இருக்கத்தான் செய்கிறது.

நன்றிகள் மணிவாசகன் ...எழுதுங்கள் உங்கள் தொடரையும்.....

புத்தனுக்குப் பாராட்டுக்கள்,  இது எல்லா இடமுமிருக்கும் ஒரு கிருமி, யாழ் பின் அதற்குள் வடா, இந்து, கொக்குவில், மானிப்பாய்.....

நன்றிகள் உடையார்....

பிச்சைக்காரர்களுக்கு பணக்காரர்களைப் பார்த்துப் பொறாமை வருவதில்லை. தம்மைவிட வசதியான பிச்சைக்காரர்களைப் பார்த்துத்தான் பொறாமைகொள்வார்களாம்.

 

பக்கத்து வீட்டுப் பொண்ணு டொக்ராக வந்தால் நம்ம பொண்ணும் டொக்ராக வேண்டும், பக்கத்து வீட்டுப் பையன் என்ஜினீயர் என்றால் நம்ம பையனும் என்ஜீனியராக வரவேண்டும் என்ற சிந்தனையோடு வளர்ந்தவர்கள். 

 

ஆனால் பிள்ளைகள் அதைப் பின்பற்றி வளரவில்லை என்ற நல்ல விடயத்தைக் காட்டிய புத்தனைப் பாராட்டுகின்றேன். 

நன்றிகள் கிருபன்

இந்த போட்டி வெள்ளைகளிலும் இருக்கிறது.வெளிக்காட்ட மாட்டார்கள்.இந்தியர்கள் சொல்லி  வேலையில்லை. சீனாக்காரர் ..... வார்த்தை இல்லை.போட்டி இருப்பதில் தவறில்லை தானே. ஆனால் பொறாமை தான் பொல்லாதது.
 
மீண்டும் ஒரு அழகான பதிவை தந்த புத்தனுக்கு நன்றி.

நன்றிகள் nunavilan

நன்றி புத்தா 

நன்றிகள் நந்தா

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு.. :D பிள்ளைகளின் மரியாதையைச் சம்பாதிப்பதற்குப் பெற்றோர் முயற்சி செய்ய வேணும்..

 

பச்சை முடிஞ்சு போச்சு..

நன்றி இசை .பச்சையை மறக்காமல் நாளைக்கு போடவும் :D

புத்தன் நான் நினைத்து வைத்திருந்த கரு.எப்படி எழுதுவது என்டு தெரியாமல் முழிச்சுக்கொன்டு இருந்தனான்.எனது எண்ணத்தை நிறைவேற்றியதுக்கு கோடி நன்றிகள்.

நன்றிகள் சஜிவன்,மீன்டும் எனது பதிவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி உங்கள் எண்ணத்தையும் கிறுக்குங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.