Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த யாழ் சேகர்….?

Featured Replies

யார் இந்த யாழ் சேகர்….?

சேகர் அண்ணா (தமிழ்ச்சூரியன்.) பற்றி ஜேர்மனியிலிருந்து வெளிவந்துள்ள பதிவொன்று

 
 

1399192_180193978849511_191566318_o-300x

இசை :யாழ் சேகர் இவர் இன்று கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவருகிறார் 10149750_237669976435244_1189256042_o-30இவர் ஓர் கிற்றார் வாத்தியக் கலைஞராக மிளிர்ந்து நின்றவர் இப்போது ஒர் சிறந்த இசையமைப்பாளராக கலைப்பணி தொடர்கிறார். பலவிதமானபாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர் இசையமைப்பில் உருவான

 

பாடல் : தமிழ் வந்து நிறைகின்ற குவியம்
வரிகள் :வேலணையூர் தாஸ்
குரல் :ராஜீவ்
இசை :யாழ் சேகர்
வெளியீடு :யாழ் இலக்கியக்குவியத்தின் படைப்பு

இதில்வருகின்ற வரிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தது எழுத்துக்கள் சார்ந்தது நல்ல சிறந்த இசையமைப்பு நல்ல பாடல் வரிகள். பாடியகுரல், பாவங்கள் என்று எத்தனையே சொல்லிக்கொண்டுபோகலாம் .அதைவிட முழுமைய இது முழுமையான எம்மவர் படைப்பு என்பது கலையின் வளங்களை துலைக்காமல் நம்மவர் கலை இலக்கிய இசைத்துறையில் மிளிர நாம் நம்மவர் என்ற சிறப்பு இருக்க நாம் நம்மவருக்காய் களம் அமைப்போம்
அவர்கள் படைப்புக்களை கேட்டு இன்புற்று வாழ்து அழிப்போம் வளரும் உலகம் போற்றும் நம்மவர்கலை தலைவன் இருந்து வளர்த்தகலை தாயகம்.புலம் எல்லாம் என்றும் ஒலித்தகலை தடைகள் உடைத்து நிமிர்ந்தகலை தமிழ் ஈழத்தலைவன் காத்தகலை கலையில் அல்ல கவிஞன் தொடுக்கும் வரிக்கு
இசைக்கலைஞன் தீட்டியபாடலைக் கேட்போம் யாழ் சேகர் கலைவாழ்வில் சிறந்தோங்கி இன்னும் பலசாதனைகள் இசையால் புரிந்து ஈழவர் கலைவளத்துக்கு வளம் சேர்க்க எஸ்.ரி.எஸ் இணையம் வாழ்துக்கள்.>

 

 

 

http://www.stsstudio.com/?p=2111

Edited by Mayuran

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு.... நன்றி மயூரன். :rolleyes:

சேகர் யாழ்கள உறுப்பினர் என்பதில்... எமக்கெல்லாம் பெருமை. :) 
சேகர் யார் என்று... இன்னும் தெரியவில்லையா? அதாம்பா... நம்ம, தமிழ்ச்சூரியன். :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மயூரன்,  சூரியனுக்கு எவ்வளவுதான்  டார்ச் அடிப்பது...! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...! :D

  • தொடங்கியவர்

நன்றி சிறி அண்ணா இப்போது தமிழ்சூரியன் என்று சேர்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.. அசப்பில் இயக்குநர் ரவிக்குமார் மாதிரி இருக்கின்றீர்கள்.

08-ks-ravi-kumar2-300.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன் இணைப்புக்கு நன்றி மயூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் த.சூ.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சேகர், அந்தக்காலத்தில் ஒரு மன்மதக்குஞ்சாக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை! :rolleyes:

 

மிகவும் எளிமையானவராக இருக்கவேண்டும்! 

 

எனது வரிகளை, அடிக்கடி வளைத்தெடுப்பதால், மிகவும் பொறுமை சாலியாகவும் இருக்கவேண்டும்!  :D

 

எனக்கு, யாழ் சேகரைத் தனியொருவராக நினைத்துப்பார்க்க முடியவில்லை.

 

இவரும், ராஜீவும், நாதனும் இணைந்திருக்கும் போதே, இவர்களது பலம் உண்மையாக வெளிக்கொணரப்படுகின்றது என்றே கருதுகின்றேன்!

 

ஆனால் தமிழும், இசையும் இவரது இரண்டு கண்கள் என்று மட்டும் உறுதியாகக் கூறுவேன்!

 

வாழ்த்துக்கள், தமிழ்சூரியன்!

 

காலம் உங்களுக்காகக் காத்திருக்கின்றது! 

 

ஒரு காலத்தில், மதம், மொழி, இனம், நாடு போன்ற மனிதன் வரைந்த கோடுகளையும் தாண்டி மிளிர்வீர்கள் என்று இப்போதே கூறி வைக்கிறேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் த.சூனா.இணைப்பிற்கு நன்றி மயூரன்

வாழ்த்துக்கள் த.சூ.. :D:icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் என யாழில் அறிமுகமான சேகர் இசையில் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். அவசரம் இசையமைப்பு பாடல் பதிவு என்று கேட்டால் இல்லையென்று சொல்லாமல் தனது பணிகளோடும் சலிக்காமல் ஓடிவந்து உதவும் உறவு. சேகர் பற்றி தனயே ஒரு பதிவு எழுத வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்

வாழ்த்துக்கள் தமிழ் சூரியன் அண்ணா........!

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த யாழ் சேகர்….?

 

என் தம்பி........... :icon_idea:

எனக்கு யாழ் மூலம் அறிமுகமான நண்பர்களில் முக்கியமானவர்களிர் ஒருவர் தமிழ்சூரியன். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் யாழை சமூக வலைத்தளங்களின் மூலம் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முன்னனி வகிப்பவர். நேரத்தினை எப்படி சமாளிப்பது என்பதில் நல்ல தேர்ச்சி பெற்றவர் என நினைக்கின்றேன்.

 

புங்கை சொன்னதில் ஒரு சிறு தவறு இருக்கின்றது. ஆள் அந்தக் காலத்தில் அல்ல, இப்பவும் ஒரு மன்மதக்குஞ்சு தான். :)

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணணை வாழ்த்த நமக்கு வயசு போதாது...ஆயினும் வாழ்த்துக்கள் அண்ணா... 
 
தமிழ் ஈழம் எனும் திரு நாடு வரும் வரை உணர்வுள்ள தமிழன் ஓய்வதும் இல்லை...

இந்த இணையம் சிறுப்பிட்டி எஸ். தேவராஜா அவர்களுடையது என நினைக்கிறேன். அவரும் ஒரு இசை அமைப்பாளர். 'பூவரசின் நிழலினிலே புதுப் பாட்டுக் கேட்கிறது' என்றொரு சீடீயை பல ஆண்டுகளூக்கு முன் பிறேமன் நகரில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த மூத்த இசைக்கலைஞரிடம் வாழ்த்துப்பெற்ற சூரியனை மீண்டும் ஒருதடவை வாழ்த்துவதில் மகிழ்வடைகிறேன்.  :)

 

http://www.yarl.com/forum/index.php?showtopic=859&mode=threaded&pid=16487

Edited by sOliyAn

வாழ்த்துக்கள் தமிழ் சு+ரியன்..

 

இசைப்பயணத்தில் யாருடனும் சமரசம் செய்து  கொள்ளாமல் தான் கொண்ட கொள்கையின் வழி நின்று அதற்காக தனது இசைப் பங்களிப்பையும் வழங்கி வரும் யாழ் உறவின் இசைப்பயணம் மேலும் பொலிவுடன் தொடரட்டும்....

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்
உங்கள் இசைப்பயணம் தொடரட்டும்

என்னையும் ஓர் கலைஞ்சனாக மதித்து பதிவிட்ட எஸ் டி எஸ் இணையத்திற்கு தலை வணங்குகிறேன் .அதை இங்கே கொண்டுவந்து பதிவிட்ட மயூரனுக்கும் தலை வணங்குகின்றேன் .........அன்பை பகிர்ந்த சிறி அண்ணா ,சுவி அண்ணா ,கறுப்பி ,கிருபன் அண்ணா ,சகாரா அக்கா ,இசைக்கலைஞ்சன், புத்தன் ,புங்கை அண்ணா ,நந்தன் அண்ணா ,யாழ் அன்பு ,சாந்தி அக்கா ,கொழும்பான் அண்ணா ,தமிழினி ,விசுகு அண்ணா ,நிழலி ,சுபேஸ் ,சோழியான் அண்ணா ,மணிவாசகன் அண்ணா ,பரியாரி அண்ணா,மருதங்கேணி ,நிலா அக்கா அனைவர்க்கும் தலை சாய்க்கிறேன். 

 

thanks-tamil2.gif

 

Edited by தமிழ்சூரியன்

தங்களின் இசைப்பயணம் மேன்மேலும் வெற்றிப்பாதையில் தொடர எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கிடைக்கும் விமர்சனங்களில் இருந்து சிறு குறைகளை நிவர்த்திசெய்து தங்களை ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி நகர்த்தி இன்னும்பல இனிய படைப்புக்களை எமக்குத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். உங்கள் முயர்சிகளுக்கு என்றும் உறுதுணையாய் இருப்போம்.... வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்! :)

 

நன்றி நண்பரே  கவிதை ...உங்களால் எழுதப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல் மிகவும் உருக்கத்துடன் இசை வடிவம் கொடுத்துக்கொண்டு  இருக்கிறேன் .........நிச்சயமாக உங்கள் வரிகளாலும் ,இசையாலும் எம் இனிய உறவுகளுக்கு ஈகம் செய்வோம் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சூரியன். உங்களின் இசைப்பயணம் தொடர வேண்டும். இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள் . அடுத்த சந்ததி தமிழை தொடர இச்சந்ததி ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.