Jump to content

அடுத்த சம்பளம் வரட்டும்....!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

guide1_2441666g.jpg

அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்!

பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை!

சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்  அம்மா!

அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்!  அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது  சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம் வீங்கித் தான் தனது இரண்டு பையன்களையும், தனது ஒரே மகளையும்..யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில்,,,விடுதிகளின் வைத்துப் படிப்பித்து வருகிறார்! காலையில் பள்ளிக்கூடம் போபவர்...மாலையில் நாலு மணிக்குச் சைக்கிளில் ஏறித் தனது மிளகாய்த் தோட்டத்துக்குப் போய் விடுவார்! பிறகு வீட்டுக்கு வர...பின்னேரம் ஏழு மணியாகும்!

இரண்டு பிள்ளைகள் ஒரே இடத்தில் படிப்பதால்….எவருடைய வசதிக் கட்டணத்தை எப்போது கட்டியது என்பது அவருக்கு நினைவில் இல்லை! இருந்தாலும் அதே கல்லூரியில் படிப்பிக்கும்...தன்னுடன் ஆசிரிய கலாசாலையில் ஒன்றாகப் படித்த பொன்னம்பலம் மாஸ்ரரிடம் பணத்தைக் கொடுத்ததாக அவருக்கு நினைவுண்டு! அதனால் தான் அவருக்கு அந்த எரிச்சல் வந்திருக்க வேண்டும்!

அப்பா..அம்மாவுடன்...அளவளாவுவது...அவனுக்குக் கேட்டது!

பின்னர் அம்மா...அப்பாவுக்குத் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்த தனது சேமிப்பிலிருந்து ….நூறு ரூபாவை எடுத்து என்னிடம் தந்து...தம்பி..ஒருத்தரிட்டையும் குடுக்காமல்...நீயே நேர போய்க் கவுண்டரில கட்டிப்போட்டு, றிசீட்டை வாங்க்கி கொண்டு வரவேணும் எண்டு கடுமையான கட்டளையும் போட்டு விட்டுச் சென்று விட்டார்!

கொடுத்த காசைப் பொன்னம்பலம் கட்டாமல் விட்டது ..அப்பாவுக்குப் பெரிய கவலையாகப் போய் விட்டது! வாத்திச் சீவியம் என்றால் இப்படித் தானே! அவனுக்கும் என்ன பிரச்சனையோ என்று நினைத்தவாறே….தம்பி 'துலாவைக் கொஞ்சம் எட்டி மிதி அப்பு 'என்று துலா மிதிக்கும் மூத்த மகனுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்!

அம்மாவும் அப்பாவைப் போலத் தான்! வளவுக்குள் இருபது தென்னை மரங்களும், சில பனை மரங்களும் உண்டு! பள்ளிக்கூடத்தால் வந்த பிறகு...அம்மா...என்றுமே பகல் நித்திரை கொண்டதை ...அவன் கண்டதில்லை! அப்பா முதல் நாள்...நனைத்துப்  பிழந்து போட்ட தென்னோலைகளைப் பின்னுவதும், பனையோலைகளின் நாரிலிருந்து வெங்காயக் கூடை, மற்றும் பனையோலையில் இருந்து பாய் போன்றவை பின்னுவதும் அம்மாவின் பின்னேர வேலைகளாக இருந்தது!

சனி ஞாயிறுகளில்  பிள்ளைகளும் இந்த வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுமுண்டு! இப்படியான வேலைகளிலிருந்து அம்மாவுக்கு வரும் பணத்தை ...அப்பா கண்டு கொள்வதில்லை! அதற்காக அம்மாவும் தேவையில்லாமல் செலவழிப்பதுமில்லை! இந்தப் பணத்தை வைத்து...அம்மா பல வேளைகளில்...எங்கள் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறாள்!

எங்களிடம் ஒரு பழைய ரேடியோ ஒன்று இருந்தது! அதன் பின் பக்கத்தில் பெரிய..பெரிய பல்புகள் மாதிரி வால்வுகள் இருக்கும்! ஒரு இரவில்..அந்த றேடியோவின் பின பக்கத்தைத் திறந்து விட்டால்...அந்த வால்வுகளின் வெளிச்சத்தில்..ஒரு புத்தகம் கூட வாசிக்கலாம்! இவை அதிகம்...பற்றரிகளை உபயோகிப்பதால் நீண்ட நேரம் வானொலி கேட்க முடியாது! காலைச் செய்திகளும்..மாலைச் செய்திகளும் தான் கேட்பதுண்டு! ஐக்கிய தேசியக் கட்சி...அல்லது சுதந்திரக் கட்சி என்று எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ அதற்கேற்ப  யானை வரும் போது ஒலிக்கும் மணிச்சத்தமோ அல்லது..யானை கலைக்கும் போது பறை தட்டும் சத்தமோ மாறி ...மாறி வரும்! ஒரு நாள்.. எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...அடுத்த அறையிலிருந்து சல்லல்லாஹு சலையும் அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து கொண்டிருந்த போது ...வீதியில் ஒரு கல் கிடந்தது! அவர் அதனை ஒரு பக்கம் தூக்கிப் போட்டு விட்டுத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் என்று நபிகளின் போதனை போய்க் கொண்டிருந்தது! ஆனால் எமது ஆஸ்தான ரேடியோ ..தன்ர பாட்டில் 'சிவனே' என்று பேசாமல் குந்திக்கொண்டிருந்தது! அது கடைசியாக வாய் திறந்து கதைத்து.. ஆறுமாதங்கள் முடிந்திருந்தது!

அப் போது தான் எல்லோருக்கும் தெரிந்தது...அம்மா..எங்களுக்குத் தெரியாமல் ஒரு ற்றானசிஸ்ரர் ரேடியோ வாங்கியிருக்கிறாள் எண்டு! அதன் பெயர் 'எலையிற்' என்று இப்போதும் நினைவில் உள்ளது!

சரி...கதையை விட்டுக் கன தூரம் போய் விட்டோம் போல உள்ளது!

மூத்தவனும், அக்காவும் ஒரு மாதிரி அரசாங்க வேலையில் சேர்ந்து..அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கை கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்! ஆனால் அப்பாவும்..இதுவரை தோட்டம் செய்வதை விடவுமில்லை…! அம்மாவும் கிடுகு பின்னுவதை நிறுத்தவுமில்லை! அவை இரண்டும் ..அவர்கள் பணத் தேவைக்காகவன்றி..ஒரு ஆத்ம திருப்திக்காகச் செய்வது போலத் தோன்றியது!

கடைசி மகனால் தான் ....அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கொஞ்சம் பிரச்சனை தோன்றியது! அவனுக்கும் படித்து வேலை செய்யும் நாட்டம் இருக்கவில்லை! அவனது நண்பர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து பணம் அனுப்பத் துவங்கியிருந்தனர்! அவனுக்கும் அந்த ஆசை பிடித்து விட்டது!

அப்பாவும் ...தனது மிளகாய்த் தோட்டத்தைக்..குத்தைகைக்கு விட்டு..அந்த பணத்தை வைத்து அவனை ஒரு ஏஜன்சி மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்! தம்பி...எனக்குக் கலியாண வயசில ஒரு பொம்பிளைப் பிள்ளையிருந்தும்...நான் உன்னைச் செலவழிச்சு அனுப்பிறன்! போற இடத்தில ..ஏதாவது செய்து வாழ்க்கையில முன்னேறப் பார் அப்பு! வேற எதுவும் எங்களுக்கு நீ செய்யவேண்டாம்!

அவனுக்கும்...வெளி நாடு போன பின்னர் தான்..அந்த வாழ்வின் உண்மையான உருவம் தெரிந்தது! தனது நண்பர்கள் அனுப்பிய படங்களையும், அவர்கள் அனுப்பிய ‘பிறை' நையிலோன் சேட்டுக்களையும், வைத்து அவன் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்றும் அவனுக்குப் புரிந்தது! மூன்றே வருடங்களில் அவன் திருப்பி அனுப்பப் பட்டிருந்தான்!

அவன் திரும்பி வந்து...இரண்டு மாதங்க கழித்து..!

"அம்மா...கொழும்பில ஒரு கொம்பியுட்டர் கோர்ஸ் ஒண்டு செய்தால்...நான் இதுவரை படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலை எடுக்கலாமாம்! ஆனால் கொஞ்சம் ...காசு தேவைப்படும்!"

அம்மாவிடம் இருந்து அமைதியாகப் பதில் வந்தது!

அடுத்த பென்ஷன் வரட்டும்!

( யாவும் கற்பனை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த பென்சன் வரும்வரை காத்துகொண்டிருக்காமல் வெளிக்கிடுங்கோ ரிக்கோவுக்கு...:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல நடுத்தர குடும்பங்களில்  இவ்வாறுதான் நடந்தது... அது தான் கோழி  மேச்சல்   என்றாலும் கோர்னமெண்த்தில்    government  வேலைபார்க்கணும் என்பார்கள் ...ஒரு நிலையான வருமானம் இருக்கும்.   அதை நம்பி எத்தனயோ திடடம் போடப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கை
ஏறத்தாள எமது குடும்பத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.

கொஞ்சம் வித்தியாசம் அப்பா பெரிய வாத்தியார்.

அடுத்தது அண்ணனும் நானும் தான்.

இது கதையல்ல புங்கை.எனது பழைய வாழ்வை வருடிச் சென்றது நெஞ்சு கனமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புங்கையூரன் said:

...

அப்பாவும் ...தனது மிளகாய்த் தோட்டத்தைக்..குத்தைகைக்கு விட்டு..அந்த பணத்தை வைத்து அவனை ஒரு ஏஜன்சி மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்! தம்பி...எனக்குக் கலியாண வயசில ஒரு பொம்பிளைப் பிள்ளையிருந்தும்...நான் உன்னைச் செலவழிச்சு அனுப்பிறன்! போற இடத்தில ..ஏதாவது செய்து வாழ்க்கையில முன்னேறப் பார் அப்பு! வேற எதுவும் எங்களுக்கு நீ செய்யவேண்டாம்!

அவனுக்கும்...வெளி நாடு போன பின்னர் தான்..அந்த வாழ்வின் உண்மையான உருவம் தெரிந்தது! தனது நண்பர்கள் அனுப்பிய படங்களையும், அவர்கள் அனுப்பிய ‘பிறை' நையிலோன் சேட்டுக்களையும், வைத்து அவன் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்றும் அவனுக்குப் புரிந்தது! மூன்றே வருடங்களில் அவன் திருப்பி அனுப்பப் பட்டிருந்தான்!

அவன் திரும்பி வந்து...இரண்டு மாதங்க கழித்து..!

...

( யாவும் கற்பனை)

பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கும் நடுத்தரவர்க்க குடும்ப நிலையை அருமையாக சொல்லியுள்ளீர்கள், புங்கை..!

மத்தியக்கிழக்கில் பலரும் ஏஜன்சிகாரர்களால் ஏமாற்றப்பட்டாலும்,கையிலிருப்பது 'டூரிஸ்ட் விசா' என்று தெரிந்தே இங்கே வந்து, களவாக வேலை பார்க்கும் பலரும் உள்ளனர்.. (இந்த "டூரிஸ்ட் விசா"விற்கு எண்பதினாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய்கள் வரை எஜன்ட் கமிசனாம்!)

சமீபத்தில் திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் ஏஜன்ட் கொடுத்த 'டூரிஸ்ட் விசா'வை கையில் வைத்துக்கொண்டு அமீரகம் வருவதற்கான விமானத்திற்காக குடியகல்வு அதிகாரிகளிடம் சோதிக்க செல்லும்போது மாட்டிக்கொண்டார்.. அவரிடம் அதிகாரிகள் "எதற்காக அமீரகம் செல்கிறீர்கள்..?" என வினவியபோது "வேலைக்காக.."! என பதிலளித்துள்ளார்.. அவருக்கு பயண அனுமதி உடனே மறுக்கப்பட்டு திருப்பியனுப்பபட்டார்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டு மோகத்தில் பொருளையும் உயிரையும் இழந்தவர்களை, மறந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்...!  "உவங்கள் உப்படித்தான் எங்களையும் கூப்பிட்டால் நாங்களும் நல்லாய் வந்திடுவம் என்ற பொறாமை"

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

அடுத்த பென்ஷன் வரட்டும்!

8 வயதில் கேட்கத் தொடங்கியது உழைக்கத்தொடங்கும் வரை காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஒவ்வொரு மாதமும் அம்மா பென்ஷன் எடுத்ததும், மறக்காமல் வாங்கி வருவது. இதற்காகவே மாதம் இரண்டு தடவைகள் பென்ஷன் வராதா என்று ஏங்கிய காலம் உண்டு. 

IMG_4590.jpg

புங்கை கண்கலங்க வைத்துவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனேகமாக பெற்றோரின் ஓய்வு கால பணத்தில் படித்தவர்களும் பயன் பெற்றவர்களும் வளர்ந்து பெரியவர்களானதும் பெற்றோரை சற்றும் மதிக்காதவர்களாவே இருப்பார்கள்..ஒன்றில் மூத்தவராக இருப்பார் இல்ல கடசியா இருப்பார்கள். ஏன் பெற்றோருக்காக மீளவும் ஒரு சதம் செலவளிக்காதவர்களாகவே வாழப் பழகியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, புங்கையூரன் said:

காலையில் பள்ளிக்கூடம் போபவர்...மாலையில் நாலு மணிக்குச் சைக்கிளில் ஏறித் தனது மிளகாய்த் தோட்டத்துக்குப் போய் விடுவார்! பிறகு வீட்டுக்கு வர...பின்னேரம் ஏழு மணியாகும்!

----தம்பி 'துலாவைக் கொஞ்சம் எட்டி மிதி அப்பு 'என்று துலா மிதிக்கும் மூத்த மகனுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்!

அம்மாவும் அப்பாவைப் போலத் தான்! வளவுக்குள் இருபது தென்னை மரங்களும், சில பனை மரங்களும் உண்டு! பள்ளிக்கூடத்தால் வந்த பிறகு...அம்மா...என்றுமே பகல் நித்திரை கொண்டதை ...அவன் கண்டதில்லை! அப்பா முதல் நாள்...நனைத்துப்  பிழந்து போட்ட தென்னோலைகளைப் பின்னுவதும், பனையோலைகளின் நாரிலிருந்து வெங்காயக் கூடை, மற்றும் பனையோலையில் இருந்து பாய் போன்றவை பின்னுவதும் அம்மாவின் பின்னேர வேலைகளாக இருந்தது!

சனி ஞாயிறுகளில்  பிள்ளைகளும் இந்த வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுமுண்டு! இப்படியான வேலைகளிலிருந்து அம்மாவுக்கு வரும் பணத்தை ...அப்பா கண்டு கொள்வதில்லை! அதற்காக அம்மாவும் தேவையில்லாமல் செலவழிப்பதுமில்லை! இந்தப் பணத்தை வைத்து...அம்மா பல வேளைகளில்...எங்கள் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறாள்!

இலங்கையில்... லஞ்சம் வாங்காத, அரச உத்தியோத்தர்களின் வீட்டு நிலைமை இதுதான்.
அவர்கள் தமது அரச  வேலையையும் செய்து...  மாலையில் வேறு ஒரு வருமானத்துக்கும் தம்மை தயார் படுத்திக் கொண்டால்தான்... 
கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும். 
தமது பிள்ளைகளின் உயர்வுக்காக... தம்மை மெழுகுவர்த்தியாக உருக்கிக்  கொண்ட பெற்றோர்களை...
நினைவுக்கு  கொண்டு வந்த,  சோகமான  பதிவு புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதாவது பரவாயில்லை என் கணவரின் அண்ணன் ஐந்து தடவை வெளிநாடு வந்து திருப்பி அனுப்பப்பட்டார். ஆனாலும் என் மாமியாரும் கணவரும் சளைக்காமல் பணம் கொடுத்தபடிதான் இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்குமேல் இனிப் பணம் தரமாட்டேன் உங்கேயே இருந்து ஏதாவது செய்யப் பாருங்கள் என்று கூறியதன் பின்னர் தான் அவர் ஒரு தொழிலில் நிலைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கதை புங்கை, பல நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். அதுவும் அந்த வானொலியில் யானை வரும்போது மணி அடிப்பதும் , பின் வருபவர்கள் யானையைத் திரத்த பறை அடிப்பதும்  நாசூக்கான வானொலி விளையாட்டுகள். அருமை ரொம்ப ரசித்தேன்.....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனதினுள் புதை ந்த நினைவுகள் அவை வாழ்த்துக்கள் புங்கையூரான்:104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/26/2017 at 9:46 AM, நிலாமதி said:

பல நடுத்தர குடும்பங்களில்  இவ்வாறுதான் நடந்தது... அது தான் கோழி  மேச்சல்   என்றாலும் கோர்னமெண்த்தில்    government  வேலைபார்க்கணும் என்பார்கள் ...ஒரு நிலையான வருமானம் இருக்கும்.   அதை நம்பி எத்தனயோ திடடம் போடப்படும்.

நன்றி...நிலாமதியக்கா!

எமது குடும்பமும்.. இவ்வாறான ஒன்று தான்!

23 hours ago, ஈழப்பிரியன் said:

புங்கை
ஏறத்தாள எமது குடும்பத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.

கொஞ்சம் வித்தியாசம் அப்பா பெரிய வாத்தியார்.

அடுத்தது அண்ணனும் நானும் தான்.

இது கதையல்ல புங்கை.எனது பழைய வாழ்வை வருடிச் சென்றது நெஞ்சு கனமாக உள்ளது.

நன்றி....ஈழப்பிரியன்!

எனது குடும்பமும்...உங்களதைப் போன்றது தான்!

அதனால்உ ங்கள் உணர்வுகளை....நூற்றுக்கு நூறு வீதம் புரிந்து கொள்கிறேன்!

தாய்ப்பறவை குஞ்சுகளை வளர்த்து உருவாக்கி விடுகின்றது! எனினும் குஞ்சுகளிடமிருந்து அது எதையும் பிரதிபலனாக எதிர்பார்பதில்லை!

எனவே எமது குழந்தைகளுக்கு...எமது பெற்றோர் செய்ததைப் போல...நாமும் செய்வது தான்...நாம் எம்மை ஈன்றவர்களுக்குச் செய்யக்கூடிய கைம்மாறு என்று கருதுகின்றேன்!

20 hours ago, ராசவன்னியன் said:

பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கும் நடுத்தரவர்க்க குடும்ப நிலையை அருமையாக சொல்லியுள்ளீர்கள், புங்கை..!

மத்தியக்கிழக்கில் பலரும் ஏஜன்சிகாரர்களால் ஏமாற்றப்பட்டாலும்,கையிலிருப்பது 'டூரிஸ்ட் விசா' என்று தெரிந்தே இங்கே வந்து, களவாக வேலை பார்க்கும் பலரும் உள்ளனர்.. (இந்த "டூரிஸ்ட் விசா"விற்கு எண்பதினாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய்கள் வரை எஜன்ட் கமிசனாம்!)

சமீபத்தில் திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் ஏஜன்ட் கொடுத்த 'டூரிஸ்ட் விசா'வை கையில் வைத்துக்கொண்டு அமீரகம் வருவதற்கான விமானத்திற்காக குடியகல்வு அதிகாரிகளிடம் சோதிக்க செல்லும்போது மாட்டிக்கொண்டார்.. அவரிடம் அதிகாரிகள் "எதற்காக அமீரகம் செல்கிறீர்கள்..?" என வினவியபோது "வேலைக்காக.."! என பதிலளித்துள்ளார்.. அவருக்கு பயண அனுமதி உடனே மறுக்கப்பட்டு திருப்பியனுப்பபட்டார்..

நன்றி....வன்னியர்!

சிலரால்....பகிடிக்குக் கூடப் பொய் சொல்ல முடியாது!

அப்படி வலிந்து சொல்லும்போது ..அவர்களின் முகமே காட்டிக்கொ டுத்துவிடும்!

நான் வளர்ந்த சமூகத்தில்...பொய் சொல்லி முன்னேறிக்கொண்டு போனவன்...பெரிய மனிதனாகக் கணிக்கப்படுகிறான்!

கடவுளைக் கூட ...அவனால் விலைக்கு வாங்கி விட முடியும்!

பெரும்பாலான புலத்துப் பணக்காரர்களின் பணம் வந்த விதமும்..இப்படித் தான்!

நதி மூலம்....ரிஷி மூலம் போல.. இவர்களது மூலத்தையும் தேடினால்....வெறும் அசிங்கம் தான் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்ன வயதை ஞாபகமூட்டிவிட்டீ;கள் ரோமியோ.

எனது தந்தை கப்பல் சென்று உழைப்பவர்.... அதிகம் உழைப்பது என்பது குறைவு ஊரில் நிற்கும்போது உழைப்பிற்கு மேலால் ஊதாரித்தனம் செய்வார். அந்தக்காலத்தில் சூதாட்டம் என்ற விளையாட்டுக்கு அடிமையான ஒருவராக இருந்ததால் அபறுமதியாக பொருட்கள் எதுவும் வீட்டில் நிலைப்பது இல்லை. அந்தக் காலத்தில் நான் எனது தாய்வழிப்பேரனுடனேயே அதிகம் ஒட்டாக இருந்துள்ளேன். அச்சமயத்தில் இப்படியான பாடசாலைத் தேவைகளுக்கு பணம் தேவைப்படும்போது அவரிடமே கேட்பேன் அவர் சொல்லுவார் அடுத்த <_<பென்சன் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படி  வந்தவர்கள் தான்  நாமும்

என்ன அவர்கள் சொல்லை மந்திரமாக நினைத்து

கடமைகளை  செய்து நிமிர்ந்தோம்

ஆனால்  இதற்கும் மறுபக்கமுண்டு

தட்டினால் திறக்கும் கதவு என்பதால்

அடிக்கடி

இன்றும்  தட்டப்படுகிறது..

தொடருங்கள்  அண்ணா

  • 11 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.