Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் அமளியில் நாடு – மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம் :

Featured Replies

தேர்தல் அமளியில் நாடு – மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம் :

ltte-death.jpg?resize=600%2C800
குளோபல் தமிழ் செய்தியாளர்

நாடு தேர்தல் அமளியில் காணப்படுகின்ற நிலையில் வன்னியில் விசுவமடுவில் முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வனின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று 8ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்திருப்பது அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

http://globaltamilnews.net/2018/65909/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்

..........சரி,இந்த பிள்ளைகளுக்கு எப்படி உதவ முடியும் என்று பார்க்க தொடங்குவம். எம்மில் மூவரோ அல்லது எம் புலம் பெயர் சமூகத்தில் இருக்கும் மூவரோ ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு மாதமும் அடுத்த 10 அல்லது 12 வருடங்க்களுக்காயினும் ஐயாயிரம் ரூபாயாவது அனுப்பி உதவ முடிந்தால் இறந்த இப் போராளிக்கு நாம் செய்யும் மிகப் பெரும் அஞ்சலியாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் தாயாருக்கு நிரந்தர வருமானம் ஒன்று இல்லை எனில் சுயதொழில் ஒன்றை உருவாக்கி கொடுக்க முடிந்தால் அதுவும் பெரும் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

4 hours ago, நிழலி said:

வணக்கம், நிழலி...!

பத்து அல்லது பதினைந்து வருடங்கள் என்பது மனித வாழ்க்கையில்..மிகவும் நீண்ட காலம்!

எதிர்காலங்களில்..எமது வாழ்வு எந்தப் போக்கில் ..நகரமோ என்பது எமக்கே தெரியாது! 

எனவே....எம்மால் சாத்தியப்படக் கூடிய..அளவில்..ஒரு சுய தொழில் ஒன்றை...தாயார் செய்வதற்கு...எம்மாலான பங்களிப்புகளைச் செய்வதே சாத்தியமான ஒன்று போல இப்போதைக்கு உள்ளது!

யாழ் களம் ..முன்பும் இவ்வாறான ..பங்களிப்புக்களைச் செய்துள்ளது!

36 minutes ago, புங்கையூரன் said:

ஓம் புங்கை, நீங்கள் சொல்வது சரி.

இக் குடும்பத்துக்குரிய தேவை என்ன, எப்படியான உதவி வழங்கலாம் என்பதை எல்லாம் அறிய ஒரு மார்க்கமும் எம்மிடம் இப்ப இல்லை என்பதுதான் கவலையான விடயம். முன்னர் சாந்தி இப்படியான விடயங்களை முன்னெடுத்து எமக்கு விபரம் தருவதற்கு இருந்தார். இன்று எவரும் இல்லை. எவரையும் நம்பவும் முடியாமலும் இருக்குது. மக்கள் பிரச்சனைகளை  உணருகின்ற உருப்படியான ஒரு எம் பி அல்லது மாகாண சபை உறுப்பினர் இருந்தால் கூட  இந்த விடயத்தில் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் எம்மிடம் அப்படி ஒருவரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

can you give the contact detail of this family.

I cannot sleep peacefully after seeing this photo. I have do something

இந்த குடும்பத்தினருடனான தொடர்பு நான் எடுத்து தருகிறேன் .நீங்கள் எப்படியான  உதவி என்பதை பேசி முடிவெடுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

உங்கள் பங்களிப்பில் என்னையும் சேர்ந்து கொள்ளுங்கள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்..

வீரவணக்கம்!

17 hours ago, நிழலி said:

இக் குடும்பத்துக்குரிய தேவை என்ன, எப்படியான உதவி வழங்கலாம் என்பதை எல்லாம் அறிய ஒரு மார்க்கமும் எம்மிடம் இப்ப இல்லை என்பதுதான் கவலையான விடயம். முன்னர் சாந்தி இப்படியான விடயங்களை முன்னெடுத்து எமக்கு விபரம் தருவதற்கு இருந்தார். இன்று எவரும் இல்லை. எவரையும் நம்பவும் முடியாமலும் இருக்குது. மக்கள் பிரச்சனைகளை  உணருகின்ற உருப்படியான ஒரு எம் பி அல்லது மாகாண சபை உறுப்பினர் இருந்தால் கூட  இந்த விடயத்தில் எவ்வளவோ செய்ய முடியும். ஆனால் எம்மிடம் அப்படி ஒருவரும் இல்லை.

இடையில் எவரையும் புகுத்தாமல் நீங்கள் நேரடியாக உதவி செய்யலாம்!

இவ்வாறு பலர் செய்து வருகின்றனர். ஒருவர் இருவர் அல்ல நூற்றுக் கணக்கானவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்! ஒரு சில வருடங்களாக இல்லை. 10-15 வருடங்களாக செய்து வருபவர்களையும் நானறிவேன்!

க.பொ.த. உயர் தரம்வரை ரூபா 5,000/- தேவைப்படாது. மாதம் ரூபா 3,000/- கொடுத்தாலே பேருதவியாக இருக்கும். அதிகப்படியான உதவியால் தாயாரின் உழைப்பு முயற்சியையும் முடக்கிவிடக் கூடாது. ஆரோக்கியமான குடும்பத்துக்கு அவர்களின் சொந்த உழைப்பும் அவசியம். விசுவமடு பகுதியில் விவசாயம் அல்லது விவசாய உதவியாள் வேலை தாராளமாக உள்ளது. தாயார் அங்கு உழைக்கலாம்.

7 minutes ago, போல் said:

போல், நேரடியாகவோ அல்லது இன்னொரு தொடர்பின் மூலமாகவோ உதவி செய்வதற்கு முதல் இக் குடும்பத்தின் தொடர்பும் கிடைக்கப்பெறும் தகவல்கள் சரியா என அறியும் முறையும் அவசியம். இதற்கு அங்கு இருக்கும் நம்பிக்கையான  ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் உதவி தேவை.

உங்களால் இந்த விடயத்தில் ஏதேனும் ஒரு வகையில் எமக்கு உதவ முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2018 at 9:35 AM, நவீனன் said:

ltte-death.jpg?resize=600%2C800

அந்த போராளி முகத்தில், தான் இழந்துபோனவற்றை பற்றியும், பெற்றவர்களை பற்றியும் நினைச்சு மனசுக்குள் அழுகிறார் என்பது தெரிகிறது, அந்த கவலையே, அவரது உடல் வலியைவிட,மன வலியை அதிகமாக்கி அவர் வாழ்வை அஸ்தமனம் ஆக்கியிருக்கும்.

இதுபோன்ற துயரங்களில் பலரது உதவும் பங்களிப்பை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வைத்ததற்கு பல காரணங்கள் உண்டு: 

அதில் ஒன்று , உதவி பெறுபவர்கள் மீண்டும் மீண்டும் உதவி பெறுவதற்காய் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை துஷ்பிரயோகம் செய்து, உதவும் குணம் கொண்டவர்களுக்கு சந்தேகமும், விரக்தியும் கொண்ட மனப்பான்மையை உருவாக்கியது,

இரண்டு : இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கால நேரம், களைப்பு பாராது முன்னின்று  கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவதை ஒருங்கிணத்தவர்களை கேலி செய்து, அவர்களை இதுபோன்ற சமுகத்திற்கு உதவபோய் அவபெயர் சுமக்கும் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க செய்வது....

அதுபோன்ற காரணிகளே , நிழலி இங்கே சொன்னதுபோல  யாரை பிடித்து இவர்களுக்கு உதவி செய்யலாம் எங்கிற மிக பெரிய சோக நிலமை உருவாகிபோனதற்கான காரணம்!

இவர்கள் வேறெந்த வழியிலும் உதவி பெறவில்லையென்று உறுதிப்பட்டிருந்தால்,

அந்த மாவீரனின்  துணைவியார் எதாச்சும் சுய தொழில் ஆரம்பிக்கும் நிலை இருந்தால்,

என் சார்பில் இந்த உதவியை ஒருங்கிணைக்கும் கள உறவின் வங்கி கணக்கிற்கு,உங்களோடு சேர்ந்து

இலங்கை பணத்தில் என் பங்களிப்பாக ஐம்பதினாயிரம் ரூபாய் , என் சக்திக்குட்பட்ட பங்களிப்பாக அனுப்பி வைப்பேன்

என்பதை உறுதி படுத்துகிறேன்!

Edited by valavan

5 minutes ago, நிழலி said:

போல், நேரடியாகவோ அல்லது இன்னொரு தொடர்பின் மூலமாகவோ உதவி செய்வதற்கு முதல் இக் குடும்பத்தின் தொடர்பும் கிடைக்கப்பெறும் தகவல்கள் சரியா என அறியும் முறையும் அவசியம். இதற்கு அங்கு இருக்கும் நம்பிக்கையான  ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் உதவி தேவை.

உங்களால் இந்த விடயத்தில் ஏதேனும் ஒரு வகையில் எமக்கு உதவ முடியுமா?

நிச்சயம் முயற்சிக்கிறேன்! சில தினங்கள் தேவைப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8.2.2018 at 5:59 PM, நிழலி said:

ஆழ்ந்த இரங்கல்கள்

..........சரி,இந்த பிள்ளைகளுக்கு எப்படி உதவ முடியும் என்று பார்க்க தொடங்குவம். எம்மில் மூவரோ அல்லது எம் புலம் பெயர் சமூகத்தில் இருக்கும் மூவரோ ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு மாதமும் அடுத்த 10 அல்லது 12 வருடங்க்களுக்காயினும் ஐயாயிரம் ரூபாயாவது அனுப்பி உதவ முடிந்தால் இறந்த இப் போராளிக்கு நாம் செய்யும் மிகப் பெரும் அஞ்சலியாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் தாயாருக்கு நிரந்தர வருமானம் ஒன்று இல்லை எனில் சுயதொழில் ஒன்றை உருவாக்கி கொடுக்க முடிந்தால் அதுவும் பெரும் உதவியாக இருக்கும்.

மனதை வலிக்கும்.... வேதனையான செய்தி. 
அந்தப் போராளியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நான் அவர்களின், குடும்பத்தினருக்கு...  இப்போது 100 ஐரோ கொடுக்க  ஆவலாக உள்ளேன்.
பின்வரும் காலங்களில்... அவர்களுக்கு  மேலதிக உதவி தேவைப் பட்டால்... 
யாழ். களத்தின்  மூலமாக, நிச்சயம்..  எனது உதவியும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கால்களை இழந்தவர்களுக்கு இலவச செயற்கைக்கால்!

போரினால் கால்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கைக் கால் பொருத்தும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்த் நேற்று வவூனியா நிவார ணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.வவூனியா ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்திலுள்ள இந்திய மருத்துவ மனையில் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் பொருத்தும் நிபுணர்கள் குழுவினர் தங்கியூள்ளனர்.

சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவூம் இங்கு விஜயம் செய்திருந்தார்.

19 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினர் செயற்கைக்கால் பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 1000 பேருக்கு இலவசமாக கால்களை பொருத்துவதற்கு திட்ட மிட்டுள்ளன.நேற்று வரை 32பேருக்கு இலவசமாக கால்கள் பொருத்தப்பட்டுள்ளன என குழுவின் தலைவர் ஆனந்த சர்மா தெரிவித்தார்.அத்துடன் இதுவரை தங்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமாநோருக்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவூம் அவர்தெரிவித்தார்.

இலங்கை-இந்திய நட்புறவூ திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு நடைபெறுகிறது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தர்.
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
மேலுள்ள செய்தி உண்மையாயின் போரில் கால்களை இழந்த இந்தப் போராளிக்கு செயற்கைக் கால் ஏன் பொருத்தப்படவில்லை? யாருக்காவது தெரியுமா? 
  • 2 weeks later...
On 2/9/2018 at 9:38 PM, நிழலி said:

போல், நேரடியாகவோ அல்லது இன்னொரு தொடர்பின் மூலமாகவோ உதவி செய்வதற்கு முதல் இக் குடும்பத்தின் தொடர்பும் கிடைக்கப்பெறும் தகவல்கள் சரியா என அறியும் முறையும் அவசியம். இதற்கு அங்கு இருக்கும் நம்பிக்கையான  ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் உதவி தேவை.

உங்களால் இந்த விடயத்தில் ஏதேனும் ஒரு வகையில் எமக்கு உதவ முடியுமா?

On 2/9/2018 at 9:45 PM, போல் said:

நிச்சயம் முயற்சிக்கிறேன்! சில தினங்கள் தேவைப்படும்.

வீரப்பன் சந்திரச்செல்வன் குடும்பம் பற்றிய தேவையான அடிப்படைத் தகவல்கள் நேரடியாக பெறப்பட்டு நிழலிக்கு தனிமடலில் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் நேரம் கிடைக்கும்போது மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என நம்புகிறேன்! 

  • தொடங்கியவர்

சாதாரண காய்ச்சல் வந்தே இறந்தார்! முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மனைவி!

சாதாரண காய்ச்சல் வந்த நிலையிலேயே முன்னாள் போராளி சந்திரச்செல்வன் இறந்ததாக அவரது மனைவி திரேஸ்ராணி சந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக முன்னாள் போராளிகள் திடீர் மரணங்களை தழுவும் நிலையில், சந்திரச்செல்வனும் திடீர் மரணத்தை தழுவியதாக அவரது மனைவி திரேஸ்ராணி குறிப்பிடுகின்றார்.
 
இம் மாதம் எட்டாம் திகதி வன்னியின் விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த முன்னாள் போராளி சந்திரச்செல்வன் மரணமடைந்தார். வீரப்பன் என்று அழைக்கப்படும்  இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.  
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார்.
 
சந்திரச்செல்வன் அங்கவீனமுற்றபோதும் அவருக்கு எந்த விதமான தொற்று நோய்களோ, தொற்றா நோய்களோ காணப்படவில்லை என்று அவரது மனைவி திரேஸ்ராணி சந்திரச்செல்வன் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கூறுகிறார். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவரை வைத்தியசாலையில் தான் அனுமதித்தாகவும் அவர் கூறினார்.
 
சாதாரண காய்ச்சல் மாறிவிடும், விரைவில் வீடு திரும்பி விடுவார் என்று தான் நம்பியதாகவும் மரணிக்கும் தறுவாய் வரை நன்றாக சந்திரச்செல்வன் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறிய திரேஸ்ராணி அவரது திடீர் மரணத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தன்னையும் பிள்ளைகளையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கணவன் இழந்து வெகு சில நாட்கள் ஆகின்றபோதும் தன்னுடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் சந்திரச்செல்வன் முன்னெடுத்த வந்த தோட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு, தன் குழந்தைகளுக்கான வாழ்வை நம்பிக்கையுடன் திரேஸ்ராணி சந்திரச்செல்வன் தொடர்வதாக குறிப்பிடுகிறார் வன்னிப் பிராந்தியத்திற்கான எமது செய்தியாளர்.
 
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

http://globaltamilnews.net/2018/65909/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.