Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான், செய்தது... சரியா... பிழையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für chefsessel gif

எனக்கு.... இன்று  வெள்ளிக் கிழமையும் (07.12.18),  வருகின்ற  திங்கள் கிழமையும் (10.12.18)  விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த  செவ்வாய்க் கிழமை  (04.12.18) விண்ணப்பித்த போது....   

எனது மேல் அதிகாரி... வருட முடிவில்,  வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது,  என்று  கூறி விட்டார். 
இவரிடம் தொடர்ந்து வாதாடினால்.. எனக்குத் தான் நட்டம் வரும்  என்று, தெரிந்து...
நீங்கள் சொல்வது  சரி, என்று சொல்லி விட்டு.. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து விட்டேன்.
அவருக்கும்... நான் சொன்னது சந்தோசமாக இருந்ததை.. அவரின் முக பாவனையில் அறிந்து கொண்டேன்.   

ஆனால்... எனக்கு,  குறிப்பிட்ட நாளில் விடுமுறை தேவை.
இவ்வளவிற்கும்...  நான், கடந்த வருடங்களில்  சேமித்த விடுமுறை நாட்கள்  நாற்பதுக்கு மேல்.
இரண்டு நாள்... லீவு  கேட்க, இவ்வளவு நடப்பு  அடிக்கும்  இவருக்கு, ஒரு பாடம் கொடுக்க வேண்டும் என்று....

இன்று...  எனது  மருத்துவரிடம், இருமிக் கொண்டு சென்று...
ஆறு நாட்கள்.. மருத்துவ விடுமுறை எடுத்து... 
அதனை அவருக்கு... உடனே தொலை பேசியில் அறிவித்து உள்ளேன்.

இரண்டு நாள்...  விடுமுறை கேட்ட எனக்கு, 
இப்போ... மருத்துவர் மூலம்  ஆறு நாள் லீவு கிடைத்தது மட்டுமல்லாது...
எனது  விடுமுறை நாட்களும் சேமிக்கப் பட்டுள்ளது.

எந்த.. உயர் அதிகாரியாக இருந்தாலும், அங்கு.. வேலை செய்யும்.. ஆட்களின் தேவைகளையும், உணர்வுகளையும்  மதிக்கப் பழக வேண்டும்  என்ற படிப்பினையை.. அவருக்கு  கற்பித்ததாக நான் உணர்கின்றேன்.

உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில்,  நீங்கள் எப்படி நடந்து  கொள்வீர்கள்?

Edited by தமிழ் சிறி

  • Replies 54
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில்,  நீங்கள் எப்படி நடந்து  கொள்வீர்கள்?

சிறி எனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லை.வந்த  காலத்திலிருந்தே கூலி. போனால் காசு.எத்தனை மாதம் என்றாலும் எவருக்குமே முன்னறிவித்தல் கொடுக்கத் தேவையில்லை.நாளைக்கு வேணுமென்றால் போகலாம்.அடுத்த நாள் தேவையானால் நிற்கலாம்.24 மணி நேரத்தில் எப்போதும் போகலாம் வரலாம்.என்ன போனால்த் தான் பணம்.

விடுமுறையை குடும்பமாக சந்தோசமாக அனுபவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்தது சரியாக செய்யப்படாத ஒரு பிழை யான செயல்.

அலுவலக நடைமுறையையை சரியாக கணித்தபின் மேல் அதிகாரியின் குணாதிசயத்தை முன்கூட்டியே அறிந்து வைத்து அதன்படி நடப்பவராக இருந்தால்  நீங்கள் நேரடியாகவே வைத்தியரிடம் சென்று காரியத்தைச் சாதித்திருக்கவேண்டும். குறுக்கு வழியில் விடுமுறை பெற்றுக்கொண்ட உங்களின் நடத்தையை நிச்சயம் அதிகாரி புரிந்து கொண்டிருப்பார் அது உங்கள்மேல் அவருக்கு தப்பான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

நீங்கள் சேமிக்கும் விடுமுறைகளை எப்போது எடுப்பதென்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. ஆனால் உங்கள் கோடைவிடுமுறையின் 3 வாரங்களை மட்டும் உங்கள் முதலாளியும் (அதிகாரியும்) நீங்களும் இணைந்து தீர்மானிக்கலாம். சிலவேளைகளில் சேமித்த லீவு நாட்களை வருடமுடிவில் ஒவர்ரைமாக கணக்கிட்டு அதற்குரிய பணத்தை தொழிலாளர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் சில இடங்களில் உண்டு. ஏனெனில் ஒரு வருடத்தில் சேமித்த மேலதிக அல்லது மிகுதியான லீவு நாட்களை அடுத்த வருடத்துpற்கு கொண்டு செல்ல அனுமதியில்லை.

இது நான் வசிக்கும் நாட்டில் உள்ள நடைமுறை எனினும் இது நாட்டையும் உத்தியோகங்களையும்  தொழில் துறையையும் சார்த்து மாறுபடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லீவு எடுப்பு இன்னொரு விதத்தில் உங்களை பாதிக்காது இருக்கும் வண்ணம் அந்த சர்வ வல்லமை படைத்த இயேசுவை கேட்டுக்கொள்கிறேன்.
 யேசுவே உங்கள் குழந்தைகளின் சிறு தவறுகளை மன்னியும்.

அது சரி இந்த கதிரை படம் எதுக்கு ... ஏதாவது வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ..?

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

யேசுவே உங்கள் குழந்தைகளின் சிறு தவறுகளை மன்னியும்.

பண்டிகை காலத்தில் முழுநேர சேவகனாக ரொம்பவும் பிசியாக இருப்பவரை சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு ஏன் சசி கூப்பிடுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன காரணம் சொல்லி விடுமுறை  கேடடீர்கள் . நேரடியாகவா அல்லது  தொலைபேசி எழுத்து மூலமாகாவா? ... . டாகடர்  மூலம்  விடுமுறையை சாதித்திருக்கிறீர்கள். அதிகாரிக்கு நன்றாக விளங்கி இருக்கும்.  இவன் கம்பெனிக்காக உழைக்க மாடடார் வேலை யில் பயபக்தி இல்லை  என  உங்கள்மீது ஒரு  கருப்பு புள்ளியிருக்க கூடும்.  எதற்கும் வருங் கா லத்தில்கவனமாய் இருக்கோ வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பி போடுவார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்தது சரியான செயல் என சொல்ல இயலாது. இந்த மருத்துவ விடுப்பு ஒர் 'டுபாக்கூர்' விசயம் என நிச்சயம் அதிகாரிக்கு தெரிந்திருக்கும்.

விடுமுறை என்பது உரிமை அல்ல, அது சலுகை. அதை அனுமதிப்பது சூழ்நிலையை பொறுத்தது.

அதிகாரியின் மனநிலையையும், வேலைப்பளுவையும் அனுமானித்து முன்கூட்டியே அவரிடம் சொல்லி வைத்திருக்கலாலாமென்பது எனது கருத்து.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

தவறு சிறி

இந்த  நேரத்தில் விடுமுறை  கிடைக்காது  என 

உங்களுக்கு  அனுபவத்தின்அடிப்படையில் (கன  காலமாக  அங்கு  வேலை செய்வதால்)

தெரிந்திருக்கும்

எனவே  லீவு  கட்டாயம்  உங்களுக்கு  இந்நாளில் தேவை  என்றால்

லீவை  மேலதிகாரியிடம்  கேட்டு  உங்களுக்கு இந்த நாளில் லீவு  தேவை  என்பதை  அவர் உணராதநிலையில்

மருத்துவ லீவை  நீங்கள்  கொடுத்திருக்கணும்

 

இப்பொழுது  நீங்கள் ஒன்று அவரை  மதிக்கவில்லை

இன்னொன்று  பொய் சொல்கிறீர்கள்

அடுத்தது  முக்கியமானது  சட்டத்தை  ஏமாற்றுகிறீர்கள்

 

எனவே  அதை  அவர் மறக்கமாட்டார்

கொஞ்சம்   கவனமாக இருங்கள்

அதிலும் எமது வயதில் (பென்சனை  நெருங்கும்போது)

அதிக அழுத்தங்களை  அல்லது  மன  உழைச்சலை  தந்து வெளியேற்றவே  நிறுவனங்கள் முயல்கின்றன

முயலும்.

  • கருத்துக்கள உறவுகள்

லீவு கேட்டு கிடைக்கவில்லை என்பதால் அதே நாட்களில் சுகவீன லீவில் செல்வது கட்டாயம் மேலதிகாரிக்கு கடுப்பை உருவாக்கும். இதை எப்படியும் வேறு பக்கத்தால் பழிவாங்க முயற்சிப்பார். எனவே இதில் தமிழ் சிறி அண்ணா கெட்டித்தனமாக நடந்ததாகச் சொல்லமுடியாது.

அவசரம் லீவு தேவை என்றால் இயலுமானவரை முன்கூட்டியே அனுமதி பெறுவது நல்லது. கேட்டால் கிடைக்காது என்று சந்தேகம் இருந்தால் லீவு எடுக்கவேண்டிய நாளுக்கு முதல்நாளில் இருந்து குறைந்தது நான்கு நாட்கள் சுகவீன லீவில் போவது நல்லது. 

நான் வருத்தம் என்று சொல்லி வேலையில் இருந்து லீவு எடுப்பது குறைவு. எனது வேலையில் எப்போதும் லீவு எடுக்கலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் லீவு தேவை என்றால்தான் பல மாதங்களுக்கு முன்னரே சொல்லவேண்டும். 

சுகவீன லீவு எடுக்கவேண்டுமென்றால் திங்கள் ஷேவ் செய்யாத முகத்துடன் போய் இடையிடையே இருமிக்கொண்டு இருந்துவிட்டு அடுத்த நாலு நாளும் வருத்தம் என்று சொல்லி போகாமல் விட்டிருக்கின்றேன்!

அதிகாரி உங்கள் விடுமுறையையை நிராகரித்ததுக்கு தனிப்பட்ட வெறுப்பு விருப்பு காரணமாக அமையாவிடின் என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் செய்தது தவறு தமிழ் சிறி. அவருக்கு வலுவான ஒரு காரணம் இருக்கலாம். அத்துடன் உங்கள் விடுமுறைக்கான காரணம் உங்களுக்கு அலுவலகத்தில் இருக்கும் பொறுப்புகளுடன் ஒப்பிடுகையில் வலு குறைந்ததாக இருக்கலாம்.

வேலையில் accountability யும் realiability யும் முக்கியம். உங்கள் செயல் உங்கள் accountability இனையும் உங்கள் மீதான நம்பிக்கையையும் அசைத்து இருக்கும்.

7ஆம் திகதி விடுமுறை வேண்டும் என்று 4 ஆம் திகதி அறிவித்தது சற்று அதிகம்.

பல வருடங்களாக இரவு பகல் அலுப்புப் பாராமல் உங்கள் நிறுவனத்துக்காக நீங்கள் உழைத்தவராகவும் அவசரமாக முக்கியமாகத் தேவையான நேரத்தில் அதிகாரி உங்கள் கோரிக்கையை உதாசீனம் செய்திருந்ததாகவும் எடுத்துக் கொண்டால் நீங்கள் செய்தது திருப்தியான காரியம்.

விடுமுறை முடிந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அதிகாரி முன்னால் போய் நிற்க எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை வேண்டிக் கொள்ளுங்கள். tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

லீவு கட்டாயம் தேவை...... கேடடால், கிடைக்காது என்றால்.... நீங்கள் டாக்குத்தர் தந்த கடிதத்தினை மட்டுமே அனுப்பி இருக்கலாம். அல்லது.... ஐந்து.... ஆறாம் திகதிகளில்..... இருமி நடித்து..... உண்மையில் வருத்தம் தான் என நம்பிற அளவுக்கு buildup கொடுத்து இருக்கலாமே.

இப்போது.... உங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்திருக்கும்.... இதன் விளைவு..... நீண்ட காலமாக அதே உத்தியோக நிலையில் இருக்க நேரிடும்.

உத்தியோக உயர்வு என்பது... உடனடி முகாமையாளர் சிபாரிசில் தான்.... அவருக்கு பதவி உயர்வு கிடைத்தால்....நீங்கள் அவரின் இடத்துக்கு வருவதாயின்.... அவரது சிபாரிசு கருத்தில் எடுக்கப்படும் என்பதால், நீங்கள் செய்தது, தவறு மட்டுமில்ல.... முட்டாள் தனமானது.

முன்னர் ஒரு பதிவில்.... கண்டெடுத்த பேனாவினை... வீட்டில் காட்டிய போது.... உங்கள் தந்தையார்... எடுத்த இடத்தில போட்டு வருமாறு அனுப்பியதாக சொல்லி இருந்தீர்கள்.... தயவு செய்து... இந்த சிக் லீவு அடித்த விசயத்தினை உங்கள் பிள்ளைகளுக்கு பெருமையாக சொல்லி விடாதீர்கள்... தவறான முன்னுதாரணம் ஆகி விடும்.

பேசாமல் திங்கள் அன்று.... இருமிக்கொண்டே வேலை போய்..... உண்மையிலேயே வருத்தம்..... ஆனாலும் வந்தேன்....என்று காட்டிக் கொண்டே....நாலு மருந்து பாக்கெட்டுகளை எடுத்துக் ... (வாங்கி பார்க்க மாட்டார் )அவராக....நீ போய் ...ஓய்வெடு என்று சொல்ல வையுங்கோ...  

முக்கியமான ஒரு விசயம்.... யேர்மன் சட்டம், இவ்விசயத்தில் பிரித்தானிய சட்டம் போலவே இருக்கும்..... சிக் லீவ் என்பது உங்களுக்கு உரிமை  அல்ல..... மனிதாபிமான சலுகை.... கம்பெனி உங்களுக்கு அந்த நாளிலும் பணம் தருவதால்..... நீங்கள் உண்மையிலேயே சுகவீனமாக  இருக்கிறீர்களா என முகாமையாளர் செக் பண்ண வீட்டுக்கு வரலாம்.

வீட்டில் இருந்தால் நடிக்கலாம். இல்லாமல் இருந்தால் சிக்கல்.....

வேலை விடயத்தில்.... நேர்முகத்தில் தோல்வி அடைபவர்களுக்கு சொல்வது.... 'இந்த மடம்.... இல்லையெண்டா சந்தை மடம்..... இவனை நம்பியா, நான் பிளேன் ஏறினேன்' என்று அடுத்த நேர்முகத்துக்கு தயாராகுங்கள் என்று...

இது வேலை தரும் முதலாளிக்கும் பொருந்தும்..... 'சிறியரை நம்பி அவன் கொம்பனி நடத்தவில்லை'. 

**************

அதை விடுங்கோ.... யாழ்ப்பாணத்து பகிடி ஒன்று.....

மானிப்பாய் ரோடு.... ஸ்டான்லி ரோடு சந்தியில் ஒரு அச்சகம்......

ஒருவர், நல்ல வேலையாள்.... பின்னேரம் எண்டால்.... தண்ணிக்காரர்.....

இரண்டு கிழமையா சம்பளம் வரேல்ல..... அடுத்த கிழமை சேர்த்து தரலாம்...... கதை.... மூன்றாம் கிழமை...... 'உன்ர வேலை அவ்வளவு சரியில்ல...... அதுதான் விட்டுப் பிடிச்சனான்..... ஒரு மாத்தமும்.... இல்லை.... உதுக்குள காசு வேற கேட்க்கிறாய்'..... கதை விட்டார்... 'முனா'...

நம்மாளு வேகமா வெளிய போனார்..... கப்பு..... கப்பென்று ஏத்திப் போட்டு வந்தார்...

'காலைப் ***யில் இருந்து மாலை **** வரை, வேலைப் *****
சம்பளப் ****யைக் கேடடால், நடப்புப் *****' என்றார் சத்தமாக.....

அதிர்ந்து போன 'முனா'.... பாக்கெட்டினுள் கையை விட்டார்... 

சம்பளம் கிடைத்தது.  ( உண்மை சம்பவம் )

குறிப்பு: உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை * இக்கு பதிலா போட்டு சொல்லிப் பாருங்கோ...

*****

நீங்களும் சிரிச்சு சமாளிச்சு வந்திராம..... கப்புக்... கப்பென்று ஏத்திப்போட்டு...போய்..... நாலு கத்துக்.... கத்தி வெண்டிருக்கலாம்.... பிழை விட்டுப் போட்டியள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பேசாமல் திங்கள் அன்று.... இருமிக்கொண்டே வேலை போய்..... உண்மையிலேயே வருத்தம்..... ஆனாலும் வந்தேன்....என்று காட்டிக் கொண்டே....நாலு மருந்து பாக்கெட்டுகளை எடுத்துக் ... (வாங்கி பார்க்க மாட்டார் )அவராக....நீ போய் ...ஓய்வெடு என்று சொல்ல வையுங்கோ...  

சேவ் எடுக்காமல் நரைத்த தாடியுடன் போய் நின்றால் காணும் வேறு எதுவும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

 நீங்கள் செய்தது, தவறு மட்டுமில்ல.... முட்டாள் தனமானது.

 

ஒரு வளர்ந்த/முதிர்ச்சியடந்த மனிதன் இப்ப‌டியான ஒரு காரியம் செய்து போட்டு, இதற்கு ஒரு திரியும் திறந்து அதற்கு வாசகர்களில் அபிப்பிராயமும் கேட்கப்படுகின்றது. என்னத்தை சொல்ல?

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ... இப்படி நாங்களும் பிழைகளை சரி என்டு நினச்சு செய்து இருக்கிறம் தானே.
தமிழ் சிறி ஒரு கடின உழைப்பாளி ..இந்த ஒரு சம்பவம் பெரிதாக எந்த கெடுதலையும் தொழில் இடத்தில 
ஏற்படுத்தாது என்று தான் நினைக்கிறன்.
ஒரு மேலதிகாரியாக இருப்பவரும் யோசிக்க வேணும்... அடேய் நான் என்னுடைய நல்ல ஒரு தொழிலாளியை அனாவசியமாக பொய் பேச வைத்து அலைக்கழித்து விட்டேனே என்று.
இதுவும் கடந்து போகும் ... இவரை நம்பி அவங்களும் இல்லை... 
அவங்களை நம்பி நம்மவரும் இல்லை. 
ஒரு டீம் லீடாக இருக்கும் நான், நான் மேட்பார்வை பார்க்கும் சக தொழிலாளர்களின் இது போன்ற இக்கட்டான சம்பவங்களை கையாளும் முறையே வேறு.
- விட்டுப்பிடிப்பது 
- அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முக்கியத்தையும் , பெறுமதியையும் அடிக்கடி மெச்சுவது , நன்றியை தெரிவிப்பது .
- தேவை ஏற்பட்டால் அவர்களின் கடமைகளை சற்றேனும் பகிர்ந்து கொள்வது.
- திறந்த மனதுடன் அவர்களுடன் உரையாடுவது. (அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள முடியும்)
- இவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அல்லது அவர்களையே நல்ல முடியை நோக்கி நகர்த்துவது.
** வின் வின் சிட்டுவேஷன் *** 😉

On 12/8/2018 at 2:01 AM, colomban said:

ஒரு வளர்ந்த/முதிர்ச்சியடந்த மனிதன் இப்ப‌டியான ஒரு காரியம் செய்து போட்டு, இதற்கு ஒரு திரியும் திறந்து அதற்கு வாசகர்களில் அபிப்பிராயமும் கேட்கப்படுகின்றது. என்னத்தை சொல்ல?

கொழும்பான் நீங்கள் திறந்து விடும் பல திரிகளை நான் இப்படித்தான் பார்த்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா பாருங்களேன். 😲

  • கருத்துக்கள உறவுகள்

சராசரியாக நீங்கள் செய்தது சரிதான். பொய்யும் நன்மை பயக்கும் என்றால் தாராளமாய் சொல்லலாம் என்று அய்யனே சொல்லியிருக்கின்றார். உங்களுக்கு நன்மை பயந்துட்டுதுதானே பிறகென்ன விட்டுத்தள்ளுங்க......!  😁

இந்தக்குறள் இப்படியெல்லாம் பயன்படும் என்றால் அன்றே அவர் 1329 துடன் நிறுத்தியிருப்பார்.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/7/2018 at 2:54 PM, தமிழ் சிறி said:

எனக்கு.... இன்று  வெள்ளிக் கிழமையும் (07.12.18),  வருகின்ற  திங்கள் கிழமையும் (10.12.18)  விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த  செவ்வாய்க் கிழமை  (04.12.18) விண்ணப்பித்த போது....   

எனது மேல் அதிகாரி... வருட முடிவில்,  வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது,  என்று  கூறி விட்டார். 

திடீர் லீவுகளுக்கு உரிய காரணம் சொல்லவேணும்.....இல்லையெண்டால் லீவுக்கு 1,2 மாதம் முன்னமே விண்ணப்பித்திருக்கலாம். குசும்புக்கு வீம்புக்கு உவருக்கு நான் ஆரெண்டு காட்டுறன் எண்டு நினைச்சால் தொழில் தர்மத்துக்கு கூடாத விளையாட்டு....இல்லாட்டி நீங்கள் செய்யிற வேலையை நிவர்த்தி செய்யக்கூடிய இன்னொரு ஆள் இருந்தாலும்  ஓரளவு ஓகே....

வேலையிடத்து சண்டித்தனங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை வரைக்கும் செல்லும். பெற்றோர்களின் நற்பெயர்தான் பிள்ளைகளின் வாழ்க்கைகும் உதவும்.:)

நீங்கள் செய்தது சரி பிழைகளுக்கப்பால்........

செய்யும் தொழிலே தெய்வம் என நினைத்து முதலாளி முதல் மேலதிகாரி வரைக்கும் அன்னியோன்யமாக நடப்பீர்களேயானால் அந்த இடத்தில் நீங்களும் முதலாளி போல் இருக்கலாம். நினைத்த நேரத்தில் லீவு எடுப்பது முதல்.......:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நான், செய்தது... சரியா... பிழையா?

சகோ சில பெரியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

* பாதை வகுத்த பின்னே பயந்தென்ன        லாபம் பயணம் நடத்திவிடு                       மறைந்திடும் பாவம்.

*எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

*காலம் போடும் வேலிகளைக் கால்கள் தாண்டிப் போவதில்லை.

*கடந்துபோகும் பாதையிலே நமது கையில் ஏதுமில்லை.

*இதுவும் கடந்துபோகும்.

*எதுவும் இங்கு சரியுமில்லை,தப்புமில்லை.

  முடிவாக முதலாளி அனுபவசாலியாக இருப்பவர் உங்களை நினைத்து உள்ளூர சிரித்துக்கொண்டிருப்பார்.ஒரு சொக்லேட் பெட்டியை வாங்கிக்கொண்டுபோய் ஹப்பி கிருஸ்மஸ் சொல்லி நீட்டுங்கள்.இப்போது என்யோய் யுவ விடுமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி ஒரு அனுபவ பழம் என்று பார்த்தால் இப்படி  வேலையிலே சொதப்பி இருக்கிறீர்கள். 

வெள்ளிக்கிழமை லீவு என்ற உடனேயே  மேலதிகாரிக்கு டக்கென்று  கிளிக் பண்ணி இருக்கும்.:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

சரி சரி ... இப்படி நாங்களும் பிழைகளை சரி என்டு நினச்சு செய்து இருக்கிறம் தானே.
தமிழ் சிறி ஒரு கடின உழைப்பாளி ..இந்த ஒரு சம்பவம் பெரிதாக எந்த கெடுதலையும் தொழில் இடத்தில 
ஏற்படுத்தாது என்று தான் நினைக்கிறன்.
ஒரு மேலதிகாரியாக இருப்பவரும் யோசிக்க வேணும்... அடேய் நான் என்னுடைய நல்ல ஒரு தொழிலாளியை அனாவசியமாக பொய் பேச வைத்து அலைக்கழித்து விட்டேனே என்று.
இதுவும் கடந்து போகும் ... இவரை நம்பி அவங்களும் இல்லை... 
அவங்களை நம்பி நம்மவரும் இல்லை. 
ஒரு டீம் லீடாக இருக்கும் நான், நான் மேட்பார்வை பார்க்கும் சக தொழிலாளர்களின் இது போன்ற இக்கட்டான சம்பவங்களை கையாளும் முறையே வேறு.
- விட்டுப்பிடிப்பது 
- அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முக்கியத்தையும் , பெறுமதியையும் அடிக்கடி மெச்சுவது , நன்றியை தெரிவிப்பது .
- தேவை ஏற்பட்டால் அவர்களின் கடமைகளை சற்றேனும் பகிர்ந்து கொள்வது.
- திறந்த மனதுடன் அவர்களுடன் உரையாடுவது. (அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள முடியும்)
- இவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அல்லது அவர்களையே நல்ல முடியை நோக்கி நகர்த்துவது.
** வின் வின் சிட்டுவேஷன் *** 😉

கொழும்பான் நீங்கள் திறந்து விடும் பல திரிகளை நான் இப்படித்தான் பார்த்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா பாருங்களேன். 😲

புதிய வருடம் வருகின்றது. மன்னிப்போம், மறப்போம், மாறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட ஆட்கள் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என பழமொழி மட்டும் ரைமுக்கு ரைமிங்கா சொல்லுவாங்கள் ஏதும் பிழையொன்றை செய்து விட்டு சமாளித்து விடுவார்கள் அதையே இன்னொருத்தர் செய்தால் பிழையென்று வாதாடுவார்கள் இதில் தமிழர்கள் சளைத்தவர்கள்  அல்ல 

  ஒரு முதலாளி ஒரு தொழிலாளியின் விருப்பத்தை சரி செய்பவராக இருந்தால் மேலதிக விடுமுறை எத்தனை இருக்கு? எத்தனை இதுவரை காலம் எடுத்து இருக்கிறியள் என விசாரித்து விட்டு விடுமுறை வழங்கியிருக்க வேண்டும் அவர் தன் பக்க நியாயங்களை முன் வைத்தாலும் எதிரில் நிற்பவரும் ஓர் தொழிலாளியே  அவரின் நியாமான விருப்பங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் நியாயமான தீர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும் 

 

இஞ்ச பொய் சொல்லி (சிக்) லீவு எடுக்காத ஆட்கள் எத்தனை பேரோ ?

தமிழ் சிறி அண்ண செய்தது சரிதான் அந்த முதலாளி விசாரித்து விடுமுறை வழங்கியிருக்க வேண்டும் 

இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு எத்தனை பேர் லீவு எடுக்கபோறாங்கள் போனவர்கள் ட்திரும்பி வர எத்தனை நாள் எடுக்கும் அவர்கள் வேலை யார் மீது கொடுக்கப்பட இருக்கிறதோ  :unsure:

 

இன்று லீவு போட்டுட்டு ஆள் அப்படி என்னத்தை செய்து இருப்பார்? இதை அறியா விட்டால் தலையே வெடிச்சுடும் போல இருக்கு....ஆள் இன்று யாழ் பக்கமும் வரவில்லை போலிருக்கு.

நான் நினைக்கிறன்......

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நிழலி said:

இன்று லீவு போட்டுட்டு ஆள் அப்படி என்னத்தை செய்து இருப்பார்? இதை அறியா விட்டால் தலையே வெடிச்சுடும் போல இருக்கு....ஆள் இன்று யாழ் பக்கமும் வரவில்லை போலிருக்கு.

நான் நினைக்கிறன்......

நான் நினைக்கிறேன் பிள்ளைகளின் அலுவலாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இன்று லீவு போட்டுட்டு ஆள் அப்படி என்னத்தை செய்து இருப்பார்? இதை அறியா விட்டால் தலையே வெடிச்சுடும் போல இருக்கு....ஆள் இன்று யாழ் பக்கமும் வரவில்லை போலிருக்கு.

நான் நினைக்கிறன்......

நிழலி....   நீங்கள் என்னை... எவ்வளவு மட்டமாக நினைத் திருந்திருந்தாலும்,
அதனை... வெளிப்படையாக சொல்லுங்கள். சத்தியமாக நான்.. கோவிக்க  மாட்டேன். 
சொல்லா.. விட்டால்... என் மண்டை வெடித்து விடும் போல்.. உள்ளது ஐயா. :grin:

இந்தத் திரியில்... எத்தனை பேரிடம்,  பேச்சு  வாங்கி விட்டேன்.  
உங்களின்... பேச்சையும் கேட்காமல்  இருப்பது சரியல்ல.
நண்பர்களிடம்... உரிமையாக... பேச்சு வாங்குவதே... தனி சுகம். ⛑️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நிழலி....   நீங்கள் என்னை... எவ்வளவு மட்டமாக நினைத் திருந்திருந்தாலும்,
அதனை... வெளிப்படையாக சொல்லுங்கள். சத்தியமாக நான்.. கோவிக்க  மாட்டேன். 
சொல்லா.. விட்டால்... என் மண்டை வெடித்து விடும் போல்.. உள்ளது ஐயா. :grin:

இந்தத் திரியில்... எத்தனை பேரிடம்,  பேச்சு  வாங்கி விட்டேன்.  
உங்களின்... பேச்சையும் கேட்காமல்  இருப்பது சரியல்ல.
நண்பர்களிடம்... உரிமையாக... பேச்சு வாங்குவதே... தனி சுகம். ⛑️

என்னத்தை  செய்திருப்பியள் ...

புரட்டாதி மாசத்து விரதம் எல்லாம் இருந்து..... எதாவது புது முயற்சி பண்ணி இருப்பியல்...

ஒரு பத்து மாதத்தில்..... தெரிஞ்சுடும் ....:grin:

அது சரி.... மேனேஜர் என்னவாம் சொல்லுறார்.
கணக்க கதைத்தால் சொல்ல்லுங்கோ...... வந்து நாலு தட்டு போடுறோம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.