-
Tell a friend
-
Topics
-
Posts
-
சின்னவயசுல நாம இருந்தபோது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஓய்ஞ்சுபோன அந்தகால பெரிசுங்க நமக்கு அந்த ராணுவ ரகசியம் தெரியாம இருக்கணும்கிறதுக்காக குழந்தைகள் பிறப்பது சாமி கும்பிட்டுத்தான் என்று சொல்லி வைத்தார்கள். நாமும் ஆறாம் வகுப்புவரை அப்படித்தான் எல்லோரும் சாமிகும்பிட்டு கும்பிட்டுத்தான் இறக்குமதியானாங்க எண்டு நம்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பருவ வயதின் எல்லைக்குள் நுழைந்தபோது நம் சொல்வழி கேக்காத மழலை ஒன்று காலம் காத்தாலயே அமெரிக்க ஏவுகணை வானத்தை பார்த்தமாதிரி அதுபாட்டுக்கு தனது கடமையை கவனித்தபோதுதான் , என்னாச்சு இது ஏதோ ஒரு மாற்றம் என்று பள்ளி தோழர்களுடன் விவாதித்தபோது, அனைவரும் படிப்படியாக சிக்கிகொண்ட அந்த அணிவகுப்பு உணர்வுபற்றி, அனைவருடனும் சகஜமா பேசும் சுகாதார ஆசிரியரிடம் பயமறியா ஒரு மாணவன் துணிவா கேட்க மனித உடல்களின் சேர்க்கைதான் இன்னொரு மனிதன், கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்கள் சேர்ந்தும் குழந்தைகள் கிடைக்காவிட்டால் இந்த சமுதாயத்தின் அசிங்கப்படுத்தலிலிருந்து தப்புவதற்கான வேண்டுதல் என்று விளங்கப்படுத்தியபோது, முதலில் அதிர்ச்சியாக இருந்தது, பின்பு நம்ம மம்மி டாடி நீங்களுமா என்ற கேள்வியும் எழுந்தது, பின்னாளில் பாலியல் கல்விமுறையை முறையை ஏதோ பாவம்போல் மறைத்து வைத்து தெரியாமல் பொத்தி வைப்பது எவ்வளவு பெரிய விழிப்புணர்வற்ற தன்மை என்றும் தோன்றியது. முடிவாக 7ம் வகுப்புவரை இச்சு இச்சு இச்சு கொடு என்று இரண்டுபேர் வாழ்ந்தால்தான் குழந்தை பிறக்கும் என்பதை அறியாமல் சாமி கும்பிட்டால் மட்டும்தான் அது எல்லாம் நடக்குமென்று உண்மையென்று நம்பியதை இப்போ நினைச்சாலும் ஒரே அசிங்கமா போச்சு குமாரு நிலமைதான்.
-
அப்படியுமிருக்கலாம். வருட ஆரம்பத்தில் தேசிய நல்லிணக்கம் என்று, கூடி ஆரம்பிப்பார்கள். பிறகு, அவர்களின் கோயிலை இடித்து, வழிபாட்டை தடுத்து, ஆர்ப்பாட்டம் பண்ணி அதுதான் தேசிய நல்லிணக்கம் என்று முடிப்பார்கள். ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் தொடர்பே இருக்காது. இப்போ, இவர்களின் சாசனத்தில் நாற்பத்தி இரண்டாம் மூன்றாம் பிரிவுகளில் மாற்றம் செய்யபோகிறார்களாம். பாப்போம், தேசிய நல்லிணக்கம் தேசிய பிணக்காக மாறாமல் இருந்தால் சரி.
-
By தமிழ் சிறி · Posted
எம்.ஜி.ஆரின் மணிக்கூடு இன்றும் "டிக்டிக்" என்று ஓடும் சத்தம் கேட்பதாக... ஒரு நம்பிக்கை இன்றும் உள்ளது ரசோதரன். 😂 ####### ########### ##### எம்.ஜி.ஆர். இறந்து 31 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-tn-government-to-pay-25-lakhs-to-the-victim-of-anna-university-student-assault-case-1136951 -
By விளங்க நினைப்பவன் · Posted
சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள் 👍 துப்பாக்கி சத்தம் கேட்டதும் தலை தெறிக்க வெளிநாடு ஓடி தப்பியவர்கள் இவர்கள். கருணாநிதி இலங்கை அரசை வெருட்ட கொழும்புக்கு விமானத்தில் சென்ற காலம் 🤔 கொழும்பு றேயல் கல்லுரி விளையாட்டு மைதானத்திலை விளையாடிக்கொண்டிருந்த கால கட்டமாக இருக்க வேண்டும்.
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.