Jump to content

விவாகரத்தின் முக்கியத்துவம்


Recommended Posts

பதியப்பட்டது

ஆண் பெண்ணை தினமும் தூசணங்களால் அர்ச்சிப்பதும், அடி உதை கொடுத்து துன்புறுத்துவதும், பயமுறுத்துவதும்..

பெண் ஆணை தினமும் தூசணங்களால் வசைபாடுவதும், பயமுறுத்துவதும், மன உளைச்சலை கொடுப்பதும்..

ஒருவருடன் இன்னொருவர் ஒரே வீட்டுக்குள் போட்டி போட்டு ஒருவரில் இன்னொருவர் குற்றம் காண்பதும்..

சமூகத்திற்கு ஒரு போலி வேடத்தை காட்டுவதற்காக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து பாசாங்கு செய்வதும்..

இன்னொருவரை மனதில் நினைத்துக்கொண்டு வேறொருவருடன் வாழ்வதும்..

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் படுத்து எழும்புவதும்..

காவல்துறை வீட்டுக்குள் வருவதும்..

திருமணம் ஒருவரை இன்னொருவர் உத்தியோகபூர்வமாக துன்புறுத்துவதற்கும், தமது கீழ்த்தனங்களை காட்டுவதற்கும் அரசாங்கத்திடம் இருந்து கொடுக்கப்படும் லைசன்ஸ் இல்லை. 

திருமணம் முடித்தபின் ஒன்றாக வாழ்வது பிடிக்காவிட்டால் கேவலப்பட்டுக்கொண்டும், கஸ்டப்பட்டுக்கொண்டும் இராமல் கழற்றிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம்/உடன்படிக்கை. இது நிரந்தரமாக முடிந்த முடிபு விதி இல்லை.

வாழ்க்கை ஒன்றே ஒன்று. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு திருமண ஒப்பந்தம் தடையாக இருக்குமானால் விவாகரத்து ஓர் சிறப்பான முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, கரும்பு said:

திருமணம் ஒருவரை இன்னொருவர் உத்தியோகபூர்வமாக துன்புறுத்துவதற்கும், தமது கீழ்த்தனங்களை காட்டுவதற்கும் அரசாங்கத்திடம் இருந்து கொடுக்கப்படும் லைசன்ஸ் இல்லை. 

தம்பி கரும்பு என்னாச்சு? 

இரண்டாவது திருமணத்தின் பின் விவாகரத்து எடுப்பவர்கள் குறைவு.
அங்கலாய்க்கும் மனம் எங்கே போனாலும் இதுதான் என்று தெளிவடைகிறார்கள்.

Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பி கரும்பு என்னாச்சு? 

இரண்டாவது திருமணத்தின் பின் விவாகரத்து எடுப்பவர்கள் குறைவு.
அங்கலாய்க்கும் மனம் எங்கே போனாலும் இதுதான் என்று தெளிவடைகிறார்கள்.

இரண்டாவது திருமணம் பொருத்தமானதாக அமையலாம், பொருத்தம் இல்லாமலும் அமையலாம். திருமணம், விவாகரத்து இரண்டுமே நேரம், பணம், சக்தி இவற்றை உறிஞ்சி எடுக்கும். திருமணம் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. திருமணம் செய்யாமலும் ஒன்றாக வாழலாம். அவரவர் நிலமையை பொறுத்தது. 

தனிநபரின் நிம்மதி, மகிழ்ச்சி முக்கியம். சமூகத்திற்கு வேடம் காட்டுவதற்கு தனிநபர் இவற்றை இழக்கவேண்டிய தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாகத் திருமணம் செய்யும் ஆணையும் பெண்ணையும்...அவர்கள் பாட்டில் விட்டு விட்டால்...அவர்களது பெரும்பாலான பிரச்சனைகளை அவர்களே தங்களுக்குள் தீர்த்துக் கொள்வார்கள்!

அதிகளவிலான பிரச்சனைகள்.....மாமா....மாமி...மற்றும் நெருங்கிய உறவுகள், நண்பர்களாலேயே எற்படுகின்றன என்பது எனது கருத்து! 

தூசணம் பேசுவதென்பது......மிகவும் கெட்ட பழக்கம்! எமது கலாச்சாரத்துக்குள் இது ஆழ ஊடுருவி இருப்பது எமது....இனத்தின் சாபக்கேடு என்று தான்நினைக்கிறேன்!

அது நண்பர்கள் கூட்டமாக இருக்கட்டும்.....அல்லது சின்னக் கடையாக இருக்கட்டும்.....இந்தத் தூசண வார்த்தைகளைக் காது கொண்டு கேட்க முடியாது! 

பலர் தங்கள் இயலாமையைத் தான்.....இந்தக் கெட்ட வார்த்தைகளினால் காட்டிக் கொள்கிறார்கள் என்றே கருதுகிறேன்!

பழைய தலைமுறையுடன்.....முடிந்து விடும் என்று நாங்கள் நினைக்க முடியாது!

ஏனெனில்.....இளைய தலைமுறையும்....அதே பாதையிலேயே தொடர்வது மட்டுமன்றி....இன்னும் இரண்டடி  கூடப் பாய்கிறது...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, புங்கையூரன் said:

பொதுவாகத் திருமணம் செய்யும் ஆணையும் பெண்ணையும்...அவர்கள் பாட்டில் விட்டு விட்டால்...அவர்களது பெரும்பாலான பிரச்சனைகளை அவர்களே தங்களுக்குள் தீர்த்துக் கொள்வார்கள்!

அதிகளவிலான பிரச்சனைகள்.....மாமா....மாமி...மற்றும் நெருங்கிய உறவுகள், நண்பர்களாலேயே எற்படுகின்றன என்பது எனது கருத்து! 

...

பெரும்பாலும் இதுதான் உண்மையும் கூட.

Posted

சந்தோசம் நிம்மதி அமைதி திருப்தி என்பதெல்லாம் கணவன் மனைவி சேர்ந்து உருவாக்கும் விசயங்கள்.  இதை விடுத்து மனைவி  கணவனிடமோ கணவன் மனைவியிடமோ  எதிர்பார்க்கும் விசயங்கள் இல்லை. எதிர்பார்க்கும் போது அங்கே சுயநலமும் சுரண்டலும் ஏமாற்றமும் ஏமாறுதலும் ஏற்படும். அவை பல்வேறு விரக்தி நிலையை ஏற்படுத்தும். அடிப்படையில் தியாக மனப்பான்மை விட்டுக்கொடுக்கும் தன்மை மனிதநேய உணர்வு போன்ற பண்புகள் இல்லாத கணவன் மனைவியிடத்தில் உருவாக்கும் திறனும் இருக்காது. இத் திறன் இல்லாத பட்சத்தில் பிரிவதே ஆரோக்கிமானது. 

Posted
3 hours ago, புங்கையூரன் said:

பொதுவாகத் திருமணம் செய்யும் ஆணையும் பெண்ணையும்...அவர்கள் பாட்டில் விட்டு விட்டால்...அவர்களது பெரும்பாலான பிரச்சனைகளை அவர்களே தங்களுக்குள் தீர்த்துக் கொள்வார்கள்!

அதிகளவிலான பிரச்சனைகள்.....மாமா....மாமி...மற்றும் நெருங்கிய உறவுகள், நண்பர்களாலேயே எற்படுகின்றன என்பது எனது கருத்து! 

தூசணம் பேசுவதென்பது......மிகவும் கெட்ட பழக்கம்! எமது கலாச்சாரத்துக்குள் இது ஆழ ஊடுருவி இருப்பது எமது....இனத்தின் சாபக்கேடு என்று தான்நினைக்கிறேன்!

அது நண்பர்கள் கூட்டமாக இருக்கட்டும்.....அல்லது சின்னக் கடையாக இருக்கட்டும்.....இந்தத் தூசண வார்த்தைகளைக் காது கொண்டு கேட்க முடியாது! 

பலர் தங்கள் இயலாமையைத் தான்.....இந்தக் கெட்ட வார்த்தைகளினால் காட்டிக் கொள்கிறார்கள் என்றே கருதுகிறேன்!

பழைய தலைமுறையுடன்.....முடிந்து விடும் என்று நாங்கள் நினைக்க முடியாது!

ஏனெனில்.....இளைய தலைமுறையும்....அதே பாதையிலேயே தொடர்வது மட்டுமன்றி....இன்னும் இரண்டடி  கூடப் பாய்கிறது...!

தூசணம் சொல்லி மற்றைய  உயிரை சிறுமை அடையச்செய்வது பாவத்திலும் பாவம். அடித்து துன்புறுத்துவது கொடுமை. இவற்றுக்கு கணவனின் தாழ்வு மனப்பான்மை, சந்தேக புத்தி, மனைவி தன்னைவிட மேலோங்கி விடுவாளோ என்கின்ற எண்ணங்கள் காரணமாக அமையலாம்.

14 minutes ago, ராசவன்னியன் said:

பெரும்பாலும் இதுதான் உண்மையும் கூட.

வெளியாரின் தலையீடு இல்லாதபடி பார்த்துக்கொண்டு மனைவியை அடித்து, வெருட்டி, துன்புறுத்தும் கணவர்கள் இருக்கின்றார்களே. வெளியாரின் பார்வை இல்லாவிட்டால் வீட்டினுள் நடக்கின்ற கொடுமைகள் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, சண்டமாருதன் said:

...அடிப்படையில் தியாக மனப்பான்மை விட்டுக்கொடுக்கும் தன்மை மனிதநேய உணர்வு போன்ற பண்புகள் இல்லாத கணவன் மனைவியிடத்தில் உருவாக்கும் திறனும் இருக்காது...

இங்கேதான் பிரச்சினையே.

'நான் ஆண், என் விருப்பப்படி, என் குடும்பத்தார் விருப்பப்படிதான் அனைத்தும் நடக்க வேண்டும், நீ பெண் அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போகவேண்டும், உனக்கென சுய விருப்பு, வெறுப்புகள் இருக்கக்கூடாது' என ஆண்கள் எதிர்பார்ப்பதால், ஆணாதிக்க சிந்தனையால் வரும் குழப்பங்களே குடும்பத்தில் மிக அதிகம்.

Posted

திருமணம் செய்வதிலும் பார்க்க விவாகரத்து எடுப்பது என்பது அதிக மன உழைச்சல், பணச்செலவு,நேரச்செலவு என மிகுந்த கஸ்டங்கள் உள்ளன. இருவருக்கும் மனம் ஒத்து போகாதவிடத்து விவாகரத்து நல்ல தெரிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருவரும் புரிந்துணர்வுடன் வாழமுடியும் என்றால் வாழலாம் இல்லையென்றால் ....விவாகர்த்து...செய்யலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

இங்கேதான் பிரச்சினையே.

'நான் ஆண், என் விருப்பப்படி, என் குடும்பத்தார் விருப்பப்படிதான் அனைத்தும் நடக்க வேண்டும், நீ பெண் அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போகவேண்டும், உனக்கென சுய விருப்பு, வெறுப்புகள் இருக்கக்கூடாது' என ஆண்கள் எதிர்பார்ப்பதால், ஆணாதிக்க சிந்தனையால் வரும் குழப்பங்களே குடும்பத்தில் மிக அதிகம்.

அதெல்லாம், பொருளாதார ரீதியில் பெண்கள், ஆண்களில் தங்கியிருக்கும் நம்மூரில் தான் அந்த நிலை.

இங்கே தலைகீழ்.  

கலியாணம் கட்டிய அடுத்த நாளே, தாலி கட்டிய கணவருடன் நேரே கோட்டலில் இருந்து, அவரது தாய், தந்தை வீட்டுக்கு, வாடகைக்காரில் போய், கணவரை விட்டு, தாலியையும் கழட்டி கொடுத்துவிட்டு, வேற யாராவது கட்டி வையுங்கோ, எனக்கு சரிவராது. டிவோஸ் விசயமா எனது சொலிசிட்டரிடம் பேசுங்க என்று சொல்லி விட்டுப் போன பெண்ணும் இலண்டணில் பார்த்தோமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Nathamuni said:

அதெல்லாம், பொருளாதார ரீதியில் பெண்கள், ஆண்களில் தங்கியிருக்கும் நம்மூரில் தான் அந்த நிலை.

இங்கே தலைகீழ்.  

கலியாணம் கட்டிய அடுத்த நாளே, தாலி கட்டிய கணவருடன் நேரே கோட்டலில் இருந்து, அவரது தாய், தந்தை வீட்டுக்கு, வாடகைக்காரில் போய், கணவரை விட்டு, தாலியையும் கழட்டி கொடுத்துவிட்டு, வேற யாராவது கட்டி வையுங்கோ, எனக்கு சரிவராது. டிவோஸ் விசயமா எனது சொலிசிட்டரிடம் பேசுங்க என்று சொல்லி விட்டுப் போன பெண்ணும் இலண்டணில் பார்த்தோமே.

அட நல்லதுதானே..?  எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? 🤩

உடலும், மனமும் ஆண்களைவிட வலுவில் குறைந்த பெண்கள், எவ்வளவு நாளைக்குதான் அடிகளையும், ஏச்சுக்களையும்  தாங்குவது..? 😋
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாக நான் சொல்வது திருமணம் முடிந்து தம்பதிகளின் ஒத்துப்போதல் ஒவ்வாமை புரிய வரும் போது அவர்களுக்கு ஒன்றிரண்டு பிள்ளைகள் பிறந்துவிடும்.எமது கலாசாரத்தில் பெரும்பாலும் பிள்ளைகளின் நலனை முன்னிறுத்தி வாழபவர்கள்தான் அதிகம். என்ன பிக்கல் பிடுங்கல் என்றாலும் யாராவது ஒருத்தராவது விட்டுக் குடுத்துத்தான் போக வேண்டும். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.முதல் அதிகாரம் செய்யும் கணவனோ மனைவியோ காலப்போக்கில் சரியான பாதைக்கு வந்து விடுவினம். சரி விவாகரத்து செய்து விட்டு போற இடத்திலும் எல்லாம் சரியாய் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம். பிள்ளைகளின் வாழ்க்கையும் சீரழிந்து போய் விடும். உனக்காவது சண்டை பிடிக்க கணவனோ/மனைவியோ இருக்கினம். பணம்,பொருள் இருந்தும் கூட  இதுக்கே வழியின்றி  முதிர்கன்னிகளாக ,கட்ட பிரம்மசாரிகளாக  வாழ்ந்துகொண்டிருக்கினம்.......!  😗

Posted
24 minutes ago, suvy said:

பொதுவாக நான் சொல்வது திருமணம் முடிந்து தம்பதிகளின் ஒத்துப்போதல் ஒவ்வாமை புரிய வரும் போது அவர்களுக்கு ஒன்றிரண்டு பிள்ளைகள் பிறந்துவிடும்.எமது கலாசாரத்தில் பெரும்பாலும் பிள்ளைகளின் நலனை முன்னிறுத்தி வாழபவர்கள்தான் அதிகம். என்ன பிக்கல் பிடுங்கல் என்றாலும் யாராவது ஒருத்தராவது விட்டுக் குடுத்துத்தான் போக வேண்டும். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.முதல் அதிகாரம் செய்யும் கணவனோ மனைவியோ காலப்போக்கில் சரியான பாதைக்கு வந்து விடுவினம். சரி விவாகரத்து செய்து விட்டு போற இடத்திலும் எல்லாம் சரியாய் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம். பிள்ளைகளின் வாழ்க்கையும் சீரழிந்து போய் விடும். உனக்காவது சண்டை பிடிக்க கணவனோ/மனைவியோ இருக்கினம். பணம்,பொருள் இருந்தும் கூட  இதுக்கே வழியின்றி  முதிர்கன்னிகளாக ,கட்ட பிரம்மசாரிகளாக  வாழ்ந்துகொண்டிருக்கினம்.......!  😗

அன்பு, மகிழ்ச்சி, இல்லாத தம்பதி பிள்ளைகளுக்காக ஒன்றாக வாழவேண்டும் என்பது பிள்ளைகளுக்கே தவறான முன்னுதாரணமாக அமையலாம் தந்தை/தாய் அவலங்கள், தூசணங்கள், அடி உதை, குத்து. தாய்/தந்தை மன நோயாளிகளாக வாழ்ந்து ஆரோக்கியமாக பிள்ளைகளை வளர்க்க முடியாது. 

35 minutes ago, Nathamuni said:

அதெல்லாம், பொருளாதார ரீதியில் பெண்கள், ஆண்களில் தங்கியிருக்கும் நம்மூரில் தான் அந்த நிலை.

இங்கே தலைகீழ்.  

கலியாணம் கட்டிய அடுத்த நாளே, தாலி கட்டிய கணவருடன் நேரே கோட்டலில் இருந்து, அவரது தாய், தந்தை வீட்டுக்கு, வாடகைக்காரில் போய், கணவரை விட்டு, தாலியையும் கழட்டி கொடுத்துவிட்டு, வேற யாராவது கட்டி வையுங்கோ, எனக்கு சரிவராது. டிவோஸ் விசயமா எனது சொலிசிட்டரிடம் பேசுங்க என்று சொல்லி விட்டுப் போன பெண்ணும் இலண்டணில் பார்த்தோமே.

முன்னெச்சரிக்கை நல்லதுதானே. நம்ப நட நம்பி நடவாதே. இந்தக்காலத்தில் பழையகாலம்போல் கண்ணீர் வடித்து வாழ்க்கையை நாசமாக்கவேண்டிய அவசியம் இல்லை. 

Posted
10 hours ago, கரும்பு said:

வாழ்க்கை ஒன்றே ஒன்று. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு திருமண ஒப்பந்தம் தடையாக இருக்குமானால் விவாகரத்து ஓர் சிறப்பான முடிவு.

கள உறவு ரகுநாதன் அவர்கள் ஆரம்பித்த இதே போல ஒரு திரியில் நான் பகிர்ந்ததை இங்கும் மீளப்பதிதல் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்:

புலம் பெயர்ந்து பல்வேறு சமுதாய அமைப்புக்களுக்கு இசைபாக்கமடைந்த / அடைய முயற்சிக்கும் ஓர் நிலைமையில் நமது சமூகம் உள்ளது.

என்ன தான் நம்மில் பலர் நம் கலாசார விழுமியங்களைப் பேண வேண்டும் என்று விரும்பினாலும் வெளிச் சூழலின் அழுத்தம் நமது குணவியவல்புகளை, விருப்பு வெறுப்புக்களை மாற்றிக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளுகின்றது. உதாரணத்துக்கு நாம் உண்ணும் உணவு, செய்யும் வேலை, வாழ்க்கை முறை, கொண்டாட்டங்கள் எனச் சில அம்சங்களைக் கூறலாம்.

எனவே சமூகம் சார்ந்த புறக்காரணிகள் பல இருந்தாலும் இறுதியில் ஓர் திருமண பந்தத்தை பெறுமதியாக்குவதும், இல்லாமல் செய்வதும் அதில் இணைந்துள்ள ஆண், பெண் இருவரின் பார்வையில், செயல்களில் தான் உள்ளது. அவர்கள் விலைமதிப்பற்றதாகக் கருதுவது திருமண பந்தமா, மன நிம்மதியா அல்லது சொத்து, சுகம் மற்றும் பிற வசதிகளா, சமூக அந்தஸ்தா என்பதைப் பொறுத்து அவர்கள் பார்வை மாறுபடும். 

எனினும் என்னைப் பொறுத்தவரை, ஒருவரது மன நிம்மதியை / மகிழ்ச்சியை வாழ்க்கை முழுவதும் தீவிரமாகப் பாதிக்கும் என்று நன்கு தெரிந்தால் அந்தத் திருமண பந்தத்தை உதறிவிடுதல் தவறில்லை. நல்ல படியாகப் பிரிந்து இன்னோர் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

ஆனாலும், எனது பார்வையில் திருமண வாழ்வு என்பது மேன்மையான பண்பு. சரியான சோடிகள் அமையும்போது திருமணம் என்பது மணமக்கள் இருவருக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இருவர் குடும்பத்தினருக்கமே குதூகலம் தானே! தாய்மண்ணில் இருக்கும் போது அந்த மகிழ்ச்சியை உணர்ந்திருப்போம். இதுபோல் நல்ல குடும்ப அங்கத்தவர்களின் அன்பும், ஆதரவும்,  முதியோரின் வழிகாட்டலும் பல இளம்சோடிகளுக்கு உறுதுணையாக இருந்து அனாவசியமான விவாகரத்துக்களைத் தவிர்த்தது. (ஆதரவாக இருக்க வேண்டியோரே சில சமயங்களில் குழப்பத்தை உண்டுபண்ணிய கதைகளையும் கேட்டிருப்போம்.)

எனவே, திருமண பந்தத்தில் இருப்போர் அவர்களது விருப்பு வெறுப்புக்களை மனம்விட்டுப் பேசி, அவர்ளுக்கு எது பெறுமதியென அறிந்து, தேவையான உதவிகள், ஆலோசனைகளை நண்பர்கள், உறவினர்கள், உளவியல் நிபுணர்கள் (marriage counselling) மூலம் பெற்று நல்லதோர் முடிவை எடுக்கலாம்! 

மீண்டும், மீண்டும் சொல்ல விரும்புவது: நல்ல நண்பர்கள், உறவினர்களது, மூத்தோரது ஆதரவு தொடர்ச்சியாக இருக்குமிடத்தே அனாவசியமான விவாகரத்துக்கள் தவிர்க்கப்படலாம். எல்லோருக்கும் தனித்து வாழ உரிமை உண்டு. ஆனால், நல்லதோர் சமூகவலை அமைப்பு (social network) நலமுற வாழ அவசியமானது. ஏன் திருமணம் கூட இவ்வாறான ஓர் ஒழுங்கு தானே! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விவாகம்.... விவாகரத்து.. இரண்டும் கடதாசி ஒப்பந்தம் சார்ந்து இருந்தால்.. அதைக் கிழித்தெறிவது அவரவர் இஸ்டம். இதே இரண்டு மனிதர்களின் நெருக்கம்.. உறவு.. மன நெருக்கம்.. அன்பு.. நினைவுகள்.. இப்படி இன்னொரென்ன.. தொடாக்காரணிகள் நிறைந்திருந்தால்.. அவ்வளவு இலகுவாக இதை முறிக்க முடியாது.

மேலும்.. விவாகத்தின் போது மட்டுமல்ல.. சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரையும்.. அது குழந்தையாகலாம்.. சம வயதினராகலாம்.. மூத்தோர் ஆகலாம்.. இவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் தனித்துவத்துக்கு இடமளித்துப் பழகி வந்தால்.. கெட்ட வார்த்தைகளை அடுத்தவர்கள் மீது பிரயோகிக்கனும் என்ற எண்ணம் அவ்வளவு எழிதில் எழாது. மாறாக ஒருவரை ஒருவர் உணர்வுணர்ந்து மதிப்பளிக்கும் பழக்கமே உருவாகும். இது விவாகம் சார்ந்த விடயமல்ல.. ஒரு குழந்தை வாழும் வளரும் சமூகம் சார்ந்தது. 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்ததியைப் பெருக்க வேண்டிய அடிப்படை  இசைவாக்கத்திற்கும் , ஓர் ஒழுங்கு முறையில் இதனை கொண்டு செல்ல வேண்டிய தேவைக்கும் , சூழல் மாற்றங்கள் தனி மனிதரில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்  ஆளுமை மாற்றங்கட்கும்  இடையே பாரம்பரிய திருமண பந்தம் என நாங்கள் வரையறுத்து வைத்திருக்கும் அம்சமானது ஒரு கணிசமானான  மாற்றத்திற்கு உட்பட்டு நிற்கின்றமை வெளிப்படை .  வட்டத்தை விட்டு சற்றே வெளியே வந்து பார்த்தால் , உதாரணத்திற்கு  ஒரு 2500 – 3000  வருடங்கற்கு முன்னர் இருந்த சமூகமும் சில நூறு வருட இடைவெளிகளில் இப்போதைய நிலைமைகட்கு ஒப்பிடக் கூடிய  (அந்த காலக்கட்டத்திற்கு உரிய) செயல்பாடுகளுக்கால் உள்ளிட்டு வெளிப்படுத் தான் இருந்திருப்பார்கள் , என்ன மின்சாரமும் இன்டர்நெட்உம்  இருந்திருக்காது

எனவே இந்த விடயத்தின்  இயறகையான மாற்றத்திற்கு உட்படும் தன்மையை விளங்கி , ஒத்துக்க கொண்டால் , இவற்றை நிர்வகிப்பது இலகுவாக இருக்கக் கூடும்

இந்த நேரம் அண்மையில் படித்த ஒன்று நினைவிற்கு வருகிறது.

 90  வயதுகளில்  உள்ள தம்பதியினர் விவாகரதத்திற்கு விண்ணப்பித்து மன்றில் நின்ற நேரம் நீதிபதி வியப்படைந்து கேட்கிறார் இந்த வயதில் இதற்கு என்ன தேவை தான் இருக்கின்றது என. “ இது 40  வருங்கட்கு முனபே எடுத்த தீர்மானம் , பிள்ளைகள்   இருக்கும் வரை இதனை வெளியே சொல்லி அவர்களின் மனதை புண்படுத்துவதில்லை என முடிவெடுத்திருந்தோம் , கடைசி மகனின் இறுதிக் கிரியைகள் நேற்றுத்தான் நிறைவடைந்தது, இனி ஒரு கணம் கூட பொறுக்க முடியாது”  என பதில் வந்தது

சந்ததியைப் பெருக்கும் எண்ணப்பாட்டிற்கும் (அவர்களை மன உழைவிற்கு ஆட்பட விடாதிருத்தலும் இதில் அடங்கும்) , தனி மனித ஆளுமைகட்கும் இடையே இருந்திருக்கக் கூடிய முரண்பாடுகளுக்கும்  அதன் தீர்வுத் தேர்வுக்கட்கும் இது ஒரு   கிளாசிக்கல் உதாரணமாக இருப்பது போல  தோன்றுகிறது

 

Posted

பொய்கள் கூறி, ஒருவரை ஒருவர் ஏமாற்றி செய்யப்படும் திருமணங்களின் பிற்பாடு நேர்மை, நியாயம், தியாகம் இவற்றை எதிர்பார்க்க முடியுமா?

உலக சனத்தொகை குத்து மதிப்பாக எட்டு பில்லியன்கள் அதாவது எட்டாயிரம் மில்லியன்கள். இங்கே சனத்தொகை பெருக்கத்தையும் கவனத்தில் கொள்ளலாம்?

பழையவர்கள் போல் அடி, உதை, குத்து, தூஷணம் கேட்டு வாழ்க்கையை இழுக்க இப்போது இளம் சமுதாயம் தயாராக இல்லை பல இடங்களில். இது நல்லதொரு மாற்றமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரு மனங்கள் ஒத்து வாழ்வது தான் திருமணம்...குடும்பம் என்றால் சண்டை,சச்சரவு இருக்கும் தான்...மனம் ஒத்த தம்பதிகள் என்றால் இருவரும் ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து வாழ்வர்...ஒருவர் மட்டுமே தொடர்ந்து விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை ஒரு கட்டத்தில்  கசக்கத் தொடங்கும்...பரஸ்பரம் இருவருமே விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்....அப்படி இல்லா விடின் ஒரு வீட்டுக்குள் இருந்து கொண்டு புடுங்குப் பட்டுக் கொண்டு இருக்காமல் விவாகரத்து எடுத்துக் கொண்டு தங்கள் பாடுகளை பார்ப்பது சிறந்தது...ஊருக்காய் சேர்ந்து வாழ்வது,உலகத்திற்காய் நடிப்பது  எல்லாம் மற்றவர்களை ஏமாத்துவதாய் நினைத்து நம்மளை நாமே ஏமாத்துவதற்கு சமன்...இருவருக்குள்ளும் பரஸ் பரம் ,அன்பு,புரிந்துணர்வு இருந்தால் சொந்தங்களால் மட்டும் இல்லை,கடவுளால் கூட பிரிக்க முடியாது...அது இல்லாத விடத்து பிரிந்து போகலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/14/2019 at 12:14 AM, கரும்பு said:

ஆண் பெண்ணை தினமும் தூசணங்களால் அர்ச்சிப்பதும், அடி உதை கொடுத்து துன்புறுத்துவதும், பயமுறுத்துவதும்..

பெண் ஆணை தினமும் தூசணங்களால் வசைபாடுவதும், பயமுறுத்துவதும், மன உளைச்சலை கொடுப்பதும்..

ஒருவருடன் இன்னொருவர் ஒரே வீட்டுக்குள் போட்டி போட்டு ஒருவரில் இன்னொருவர் குற்றம் காண்பதும்..

சமூகத்திற்கு ஒரு போலி வேடத்தை காட்டுவதற்காக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து பாசாங்கு செய்வதும்..

இன்னொருவரை மனதில் நினைத்துக்கொண்டு வேறொருவருடன் வாழ்வதும்..

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் படுத்து எழும்புவதும்..

காவல்துறை வீட்டுக்குள் வருவதும்..

திருமணம் ஒருவரை இன்னொருவர் உத்தியோகபூர்வமாக துன்புறுத்துவதற்கும், தமது கீழ்த்தனங்களை காட்டுவதற்கும் அரசாங்கத்திடம் இருந்து கொடுக்கப்படும் லைசன்ஸ் இல்லை. 

திருமணம் முடித்தபின் ஒன்றாக வாழ்வது பிடிக்காவிட்டால் கேவலப்பட்டுக்கொண்டும், கஸ்டப்பட்டுக்கொண்டும் இராமல் கழற்றிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம்/உடன்படிக்கை. இது நிரந்தரமாக முடிந்த முடிபு விதி இல்லை.

வாழ்க்கை ஒன்றே ஒன்று. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு திருமண ஒப்பந்தம் தடையாக இருக்குமானால் விவாகரத்து ஓர் சிறப்பான முடிவு.

விவாகரத்துக்கு...  நான் எதிரானவன்.
ஆனால்...  தம்பதிகளிடையே, பிரச்சினை முற்றி, கொலையில் முடிந்த செய்திகளை...
தாய் நாட்டிலும்,  புலம் பெயர் நாட்டிலும்  கேள்விப் பட்டிருக்கின்றோம்.
அந்த அளவிற்கு, பிரச்சினைகளை  முற்ற  விடாமலிருக்க, 
விவாகரத்து சிறந்த வழியாக இருக்க முடியும் என கருதுகின்றேன். 

காதல் திருமணத்தில்... ஒருவர், ஒருவரை...  ஓரளவு புரிந்து கொண்டு இருப்பார்கள்.
ஆனால்... நம் ஊர் முறையில், பெற்றோர்... பேசி செய்யப் படும் திருமணங்கள்,
சமயம், சாத்திரம், சாதி, குடும்ப  சூழ்நிலைகளை  பொறுத்தே அமைவது. 

பெற்றோர்... பேசி செய்யப் படும் திருமணங்களில்,  
ஆபத்தான விடயம் என்னவென்றால்...
மணமகளும், மணமகனும்... 25 வருடங்களாக, அவர்களின் பிறப்பில் இருந்து....   
வெவ்வேறு குடும்ப சூழ்நிலை, பழக்க வழக்கத்திலிருந்து வாழ பழகிக் கொண்டவர்கள்.

அவர்கள்.... திருமணம் செய்த பின்,
இருவருக்கும்... பொதுவான நேர் கோட்டில் வர, குறைந்தது மூன்று வருடங்களாவது எடுக்கும்.
அதற்கும்.... பொறுமை காத்தவர்கள் தான், விவாகரத்து பெறாமல்.... 
திருமண வாழ்க்கையில், வெற்றி பெறுகின்றார்கள்.

எமது சமுதாயத்தில்... விவாகரத்து பெற்ற ஆண்கள், எப்படியும் மறு திருமணம் செய்து விடுவார்கள்.
ஆனால்...  விவாகரத்து பெற்ற பெண்கள்.... பணம், பதவி, உறவினரின் ஒத்தாசை இல்லாமல் இருந்தால்....
அந்தப் பெண்ணின் வாழ்க்கை, கேள்விக் குறியாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண் பெண் இருவருக்கும் சகிப்புத்தன்மை வேண்டும்.அது  பெரும்பாலும் இன்றைய சமுதாயத்திடம் இல்லாமல் போய்விட்டது.இணைந்து என்பதற்கு அர்த்தம் தெரியாமல் போய் விட்டது.
விவாரகத்தை ஆதரிப்பவர்கள் திருமணம் மற்றும் பத்திரத்தில் கையொப்பம் இடாமலே சில காலம் அல்லது பலகாலம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு  போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விவாகரத்து என்பதை நான் ஆதரிக்காவிட்டாலும் சிலவேளைகளில் பல கணவர்களிடமிருந்தோ அன்றி சில மனைவியர்களிடமிருந்தோ ஆணும் பெண்ணும் பிரிந்து போனால் இருவருக்கும் நின்மதி என்று நாம் எண்ணினாலும் இந்தப் பிரிவுகளுக்கு பெரும்பாலும் மனம்விட்டு இருவரும் பேசாமல் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்பதனாலேயே பிரிவினை ஏற்படுகிறது. அத்தோடு இருவர் மீதும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமற்போகும் வேளைகளில் அவர்களிடம் ஏற்படும் அவநம்பிக்கையை எவராலும் மீளக் கட்டியெழுப்ப முடியாது போகின்றது. அவர்கள் தினம்தினம் பயந்து பயந்து வாழ்வதை விட பிரிந்து வாழ்வதே மேலென்பேன்.
ஒருவருக்கு ஏற்படும் வன்முறையான தாக்குதல்கள்,  உடல் உறவின் பாலேற்படும் நெருக்குதல்கள், குடிபோதையில் இருக்கும் கணவர்கள் இப்படியானவர்களை எப்போதும் மன்னித்து தொடர்ந்து வாழ்வது முடியாதது. ஆனாலும் பிள்ளைகளுக்காக, குடும்ப மானத்துக்காக பலபெண்கள் இப்படியானவர்களைச் சகித்தபடிதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். என்னதான் நாம் மேற்குலகில் வாழ்ந்தாலும் சாதாரணமாக வாழ்ந்துகொண்டு இரண்டும்கெட்டானாக இருக்கும் எமது வயதை ஒத்தவர்கள் மனநிலை திடீரென மாறிவிடவோ அல்லது விவாகரத்துக்கு போகுமளவோ தாமாக முடிவெடுக்காது.

ஆனால் எமக்கு அடுத்த தலைமுறையினர் எம்மைப்போல் பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர்களல்ல. பெற்றோர்களுக்காக சிலநேரம் யோசித்தாலும் தம் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து  பெற்றோருக்கே தெரியாமல் விவாகரத்து செய்தும் விடுவார். குழந்தைகள் இல்லாதவர்கள் விவாகரத்துச் செய்வது தவறல்ல. ஆனால் பிள்ளைகள் பெற்றபின்னர் ஆணும் பெண்ணும் தம்மைத் திருத்தி வாழ்வதும் விட்டுக்கொடுத்து வாழ்வதும் முக்கியமானதே தவிர விவாகரத்து குடும்பம் முழுவதையும் சிதறடித்து விடும். முடியாத கட்டத்தில் கணவனும் மனைவியும் பிரிந்தாலும் காழ்ப்புணர்வு இன்றி பிள்ளைகளைத் தன்பக்கம் இழுக்க முயலாது பழகும்போது பிள்ளைகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெற்றோரின்  தலையீடு  / இளம் சோடிகளின் பிரிவு

ஒவ்வொரு  நாளும்  மத்தியானம்  அலுவலகத்தில்  மத்திய  சாப்பாடு  எடுப்பதற்கு  முன்  துணைவியாருக்கு  call   எடுத்து  கதைப்பது  வழமை.    நான்  ஒரு  miss call கொடுப்பேன்;   அவரின்  அந்த  நேரத்து  வசதியைப்  பொறுத்து  1 நிமிடத்தில்  இருந்து  10, 15 நிமிடங்களிற்குள்  பதில்  call வரும்.   அன்றைய  சூழ்நிலைகளை  பொறுத்து  call duration   மாறுபடும்.

இன்றைக்கு  மிஸ்  call   விட்டு  ½ மணித்தியாலத்திற்கு  மேலாகியும்  retun   கோல் ஐக்  காணவில்லை.   பின்னர்  கோல்   வந்த நேரம்   கேட்டேன்  “யாரிடம்  மாட்டுப்பட்டுப்  போனீரப்பா, வலு  பிஸி  போல”   என்று.

“இல்லையப்பா  இவ  கமலா   எல்லோ  எடுத்தவ,  தெரியும்    தானே    கமலா  எண்டால்  எவ்வளவு  நேரம்    போகும்  எண்டு” .

“அது  சரி   கமலா  என்னவாம்”   இது  நான் .

“ஆஃபீஸிலே  வேலை  செய்யிற  நேரம்    இப்படி  கோசிப்  அடிக்கவே  உங்களுக்கு  சம்பளம்  தாறாங்கள்      பின்னேரம்  வாங்கோ  சொல்லுறன்”   

“ இல்லையப்பா  இம்போர்ட்டண்ட்  பொய்ண்ட்ஸை  மட்டும்  சொல்லுமெனப்பா”   

“இல்லையப்பா  ஜெயமும்  சாதனாவும்  எல்லோ  பிரிஞ்சிட்டினமாம்”       

எனக்கு  அடிவயித்தை  என்னமோ  செய்தது    “என்ன  எங்கட  ஜெயமோ” 

“ஒமப்பா  இப்ப  பிரிஞ்சு  போய்  பொடிச்சி  தனியா  அபார்ட்மெண்ட்  ஒண்டு  எடுத்துக்கொண்டு  போய்  இருக்காம்.   பொடிப்பிள்ளை  சமைக்கிறதுக்கு  யாரையோ  arrange   பண்ணி  வேலைக்கு  போய்  வந்து  கொண்டிருக்காம்” 

“என்னடாப்பா இப்ப தான் திண்ணையில் இதுபற்றி பதிவுகள் போய் கொண்டிருக்கு , நமக்குத் தெரிந்த பையனும் எல்லோ இதுக்குள்ள மாட்டுப்பட்டுப் போயிருக்கிறான்”  என நினைத்துக் கொண்டேன்.     

ஜெயம்  ஒரு  professional    28, 29 வயது  இருக்கும்  , சாதனா    ஓரிரு  வயது  குறைவாக  இருக்கும் .

ஜெயத்தின்  சின்னம்மா  எங்கள்  குடும்ப  நண்பர்  ஜெயம்  இந்த  ஊருக்கு  migrate   பண்ணி  வந்த  நேரம்    ( ஒரு  நாலைந்து  வருடங்கட்கு  முன்னர்  )  எங்களுக்கு  அடுத்தடுத்த  sub -urb   இல்  தான்  இருந்தான்.   பையனை    கவனிக்கச்  சொல்லி  சின்னம்மா  எங்களிடம்  சொல்லியிருந்தார். 

நல்ல  பையன்,  வேலையில்  நல்ல  கெட்டிக்க்காரன்.  இளம்  வயதிலேயே  நிறைய  ப்ரோமோஷன்ஸ்  . வீட்டிட்கும்  அடிக்கடி  கூப்பிடுவேன்  . சில  இடங்களில்  அவனுக்கு  பெண்  கூட  பார்த்ததோம்  , ( கமலாவின்  மகள்  உட்பட ).

பின்பு   ஒரு  ப்ரோபோசல்  marriage   இன்னுமொரு  நாட்டில்  அவனுக்கு  சரி  வந்ததது.  கல்யாணம்  முடிந்து  பெண்  இங்கே  இவனுடன்  வந்து  விட்டாள்.    இங்கே  recepition   எல்லாம்  போயிருந்தோம்.

 சாதனா  நல்ல  அழகு , கெட்டிக்காரி.  made for each other என்பார்களே  அந்த  மாதிரி.   பின்பு  அவருடைய  professional   தொழிலை  உள்ளூரில்  செய்ய  அனுபதிப்பதற்கான  பரீட்சைகளையும்         எடுத்து  பாஸ்  பண்ணிய  உள்ளூரிலேயே    நல்ல  வேலை  ஒன்றிலும்  இணைத்து  கொண்டிருந்தாள் .

அவர்கள்  ஒருவருக்கொருவர்  பிரியமாயிருந்த  விதத்தை  சொல்லி  , நாங்களும்  இப்படி  இருந்து  பார்ப்போமா  என  மனைவியிடம்  பல  தடவை  சொல்லியிருக்கிறேன்.   

ஜெயத்தின்  பெற்றோர்  அண்மையில்  ஊரில்  இருந்து  வந்து  ஓரிரு  மாதங்கள்  இவர்களுடன்  தங்கியிருந்தர்ர்கள்.    அந்த  நேரத்தில்,    ஒன்றுக்கு  மேற்பட்ட  தடவைகளில்   இங்கே  நடைபெறும்  கலாசார  நிகழ்ச்சிகளில்  அவர்களை  காண  நேர்ந்த  போது  , அவர்களுடன்  சாதனா  தென்படவில்லை.   ஏதோ  ஒரு  சுருதி  பேதம்  என  மன  மூலையில்  எண்ணம் ஒன்று தோன்றி  மறைந்தது.   

பெற்றோர்  ஊருக்கு  செல்வதற்கு  சில  நாட்களின்  முன்பும்  அவர்களுடன்  கதைத்திருந்தேன்.   ஒரு  வித்தியாசமும்  தென்பட்டிருக்கவில்லை .  

சில  மாதங்களில்  பின்னர்  இந்த சஞ்சலத்திற்குரிய    செய்தி .

பெற்றோரின்  தலையீடு  இவர்களின்  பிரிவில்  ஒரு  முக்கிய  பங்காற்றியிருக்கக்கூடும்  என  என்  உள்ளுணர்வு  சொல்கின்றது.   இளம்  சோடிகள்  தங்களுக்கிடையே  ஒரு  புரிந்துணர்வை   ஏற்படுத்திடுவதற்கான  குறைந்த  பட்ச  கால அவகாசத்தை  பெற்றோர்  அவர்களுக்கு  அளிக்க  வேண்டும்.   

ஜெயத்துடனும்  சாதனாவுடனும்  கதைத்து  அவர்களை  மீண்டும்  ஒன்று  சேர்க்க  முடியுமா  என  முயற்சி  செய்யலாம்  என  யோசித்திருக்கின்றேன்.   

(யாவும் உண்மையே)

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆறு நாட்களுக்கு முன்.... நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால்  தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என வீறாப்பு பேசியவர், இப்ப என்னத்துக்கு நாக்கை தொங்கப்  போட்டுக் கொண்டு மருத்துவர் வைத்திலிங்கத்துடன் மல்லு கட்டுக்கின்றார். இவ்வளவிற்கும்...  மருத்துவர் வைத்திலிங்கம், இவரது சுத்துமாத்து செயல்களுக்கு எல்லாம் பொதுக்குழுவில் இவருக்கு ஆதரவாக இருந்தவர்.   சுமந்திரன் எந்தக் காலத்திலும் எவருடனும் நட்பாக இருந்தது கிடையாது.  தனது காரியம் முடிந்தவுடன் ஆட்களை கழட்டி விட்டு... குழியும் பறிக்கின்ற கெட்ட சிந்தனை உடைய மனிதன்.
    • 15 NOV, 2024 | 03:37 PM   அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நட்புறவை   மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நட்புறவை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198870
    • யாழ் தேர்தல் கணக்கு- O/L இல் சோதனையில் வரவில்லை!   யாழ்ப்பாணம்  325312 செல்லுபடியான வாக்குகள்.  தேசிய மக்கள் சக்தி. 80830  தமிழரசு. 63327  சைக்கிள் 27986  ஊசி 27855 சங்கு 22513 மிச்சம் கணக்கில எடுக்காம நேரடியா 5 % க்கு குறைந்த கழிவுக்கு விடுவம். முன்னிலை வகிக்கும் NPP க்கு 1 போனஸ்.  5% கழிக்க, 16265 கீழ பெற்றோர் கழிந்தனர். முதல் சுற்று,  80830+63327+27986+27855=199998 ஒரு சீற்றுக்கான வாக்குகள் 199998/5 அண்ணளவாக 40000.  இரண்டாம் சுற்றில்  தேசிய மக்கள் சக்தி 80830-80000= 830 (2+போனஸ் 1=3) தமிழரசு 63327-40000=23327(1சீட்) மற்றவர்களுக்கு முதல் சுற்றில் இல்லை,  இரண்டாம் சுற்றில்  தேசிய மக்கள் சக்தி 830  தமிழரசு  23327  சைக்கிள் 27986  ஊசி 27855 சங்கு 22513 மிச்சம் இருக்கிற 2 சீட்.  இரண்டாம் சுற்றில் சைக்கிள் மற்றும் ஊசி முன்னிலை வகிப்பதால், ஆளுக்கு 1 சீட்.  🏛 படிப்பறிவு அதிகமான யாழ்ப்பாணத்தில நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 32767. கிட்டத்தட்ட ஒரு சீட்டுக்கான வோட்.  🏛 ஈசல் போல நிறை பேர் கேட்டதால, 5% வீதத்துக்கு குறைந்த என்று, பயனற்று போன வோட் 125312 வோட்ஸ். இது செல்லுபடியான வோட்டின் 38%  தெரியுமா?💀💀💀ஓமைகாட் OMG 😨
    • இப்போ தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் போக சத்தியலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். இவர் எல்லாம் ஒரு மனிதன், நேரம் ஒரு கதை கதைத்துக்கொண்டு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.