Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மதமாற்றத்தால், மக்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளும், மதம்மாறிச் சென்றவர்கள், ஏற்கெனவே, கடைபிடித்த மதத்தை நிந்திப்பதனால், வேண்டாத கசப்புணர்வுகள் ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதவழிப்பாட்டிடங்கள் இல்லாத போதிலும், சுனாமி வீட்டுத்திட்டத்தில் வீடொன்றில் வைத்தே, வழிபாடுகள் இடம்பெறுகின்றன. யுத்தம், சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, வறுமையின் கீழ் வாடுகின்ற மக்களை மிக இலாவகமாக, ஏமாற்றி மதத்தை மாற்றிவிடுவதாகவும், ஒரு சிறு குழுவினரே, இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.

யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமையுள்ளது. எனினும், அற்பசொற்ப ஆசைகளைக் கூறியும், பலவந்தமாகவும் மதத்தை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை நிறுத்தவேண்டுமென, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மதமறறததககத-தணடம-சயலகள-நறததவம/73-240035

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது இன்று நேற்றல்ல காலாகாலமாக வெற்றி நடைபோடுகிறது.

மதமாற்றத்தை திணிக்கும் விஷமிகளின் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கது. ஈழப்பிரியன் குறிப்பிட்டதுபோல இது காலங்காலமாக நடந்து வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மதமறறததககத-தணடம-சயலகள-நறததவம/73-240035

இதை கிறிஸ்தவனான நான் சொல்வதால் இங்கே பொறி பறக்கலாம்!

ஆனால், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லத் தான் வேண்டும்: இப்படி தனியார் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த அதிகாரிகளிடமும் அனுமதி தேவை என்று இலங்கையில் சட்டம் இல்லை! அப்படி இருந்தால் இங்கே ஆதாரம் இணையுங்கள்!

7 minutes ago, Justin said:

http://globaltamilnews.net/2019/127747/

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

நான் சொன்னதை உறுதி செய்திருக்கிறீர்கள்: "..கிளை நிலையங்களை நடத்துவதாயின், இடத்திற்கு அனுமதி வேண்டும்" என்று இருக்கிறது! இது வீட்டின் உரிமையாளர் கிளை நிறுவனம் என்று பெயர் பலகை போடாமல் தனது நண்பர்களை, வர விரும்புவோரை வைத்து கூட்டம் நடத்தினால் அனுமதி தேவையில்லை என்பது தான் அர்த்தம்!

இல்லை அதற்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அனுமதி தேவையென்றால் சாயி பஜனைக்கும் கூட அனுமதி பெற வேண்டும்! ஒத்துக் கொள்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறுவது பெற்ற தாயை மாற்றுவதற்கு சமமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம் மாறுவது அவரவர் சொந்தவிடயம். ஆனால் அரிசி பருப்புக்கும், சொத்து சுகங்களுக்காகவும் மதம் மாறுவது கேவலம்.  அது மட்டுமில்லாமல் ஒரு மனிதனின் பலவீனத்தை சாதகமாக்கி மதம் மாற்றுவது சுத்த கேணைத்தனம்.

16 minutes ago, Justin said:

நான் சொன்னதை உறுதி செய்திருக்கிறீர்கள்: "..கிளை நிலையங்களை நடத்துவதாயின், இடத்திற்கு அனுமதி வேண்டும்" என்று இருக்கிறது! இது வீட்டின் உரிமையாளர் கிளை நிறுவனம் என்று பெயர் பலகை போடாமல் தனது நண்பர்களை, வர விரும்புவோரை வைத்து கூட்டம் நடத்தினால் அனுமதி தேவையில்லை என்பது தான் அர்த்தம்!

இல்லை அதற்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அனுமதி தேவையென்றால் சாயி பஜனைக்கும் கூட அனுமதி பெற வேண்டும்! ஒத்துக் கொள்கிறீர்களா? 

“பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது.”

இங்கு நடந்ததும் வீட்டில். “கிளை நிறுவனம்” என பெயர் பலகை போடாமல் தான் நடந்தது.

விசாரணையின் போது வெளியிலிருந்து வந்து மதபோதனை நடத்தினார்கள் என்பதால் சபைக்குரிய அனுமதி இருந்தாலும் பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்த அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வீடொன்றில் வைத்து மதவழிபாடு செய்வது வேறு. மதமாற்றும் நோக்கில் மதபோதனை செய்வது வேறு. இத்திரி இரண்டாவதை குறிப்பதால் மதச்செயற்பாட்டிற்கு அனுமதி தேவை.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்😆😆😆😆😆

  • தொடங்கியவர்
4 hours ago, ampanai said:

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அடிப்படையில், வறுமையில் உள்ள மக்களிடம் பண, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்புக்கள், அரசியல் வசதிகள் படைத்தவர்கள் தங்கள் பலத்தை பிரயோகிக்கிறார்கள். இதற்கு அவர்கள் மதமும் இடம் கொடுக்கின்றது. அதற்கு அவர்கள் மதத்தில் வசதி, பலம் படைத்தவர்களும் உதவுகிறார்கள்.

ஆம், இது நீண்ட காலமாக நடந்து  வருகின்றது. நாம், காணி; மொழி; அதிகாரம் என்பனவற்றுடன் மதத்தையும் நீண்டகாலமாக இழந்தே வருகின்றோம்.

ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, இந்த நிலைமை தொடரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, MEERA said:

அவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்😆😆😆😆😆

ஆனால்  எங்கள் மூதாதையர் கண்டுபிடித்து விட்டுச்சென்ற இலை குழை , தைலங்கள் பற்றிய மருத்துவங்களை சொன்னால் ஆதாரம் கேட்பார்கள்.😂

1 hour ago, MEERA said:

அவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்😆😆😆😆😆

51 minutes ago, குமாரசாமி said:

ஆனால்  எங்கள் மூதாதையர் கண்டுபிடித்து விட்டுச்சென்ற இலை குழை , தைலங்கள் பற்றிய மருத்துவங்களை சொன்னால் ஆதாரம் கேட்பார்கள்.😂

உலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின்  மூதாதயரில்  சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர்.  இவையெல்லாம் அறிவியலே.

ஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல் குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது  மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை பரியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய  பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இது இன்று நேற்றல்ல காலாகாலமாக வெற்றி நடைபோடுகிறது.

உந்த பருப்பு எல்லா இடங்களிலையும் அவியாது. ஒட்ட அறுத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

“பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது.”

இங்கு நடந்ததும் வீட்டில். “கிளை நிறுவனம்” என பெயர் பலகை போடாமல் தான் நடந்தது.

விசாரணையின் போது வெளியிலிருந்து வந்து மதபோதனை நடத்தினார்கள் என்பதால் சபைக்குரிய அனுமதி இருந்தாலும் பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்த அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வீடொன்றில் வைத்து மதவழிபாடு செய்வது வேறு. மதமாற்றும் நோக்கில் மதபோதனை செய்வது வேறு. இத்திரி இரண்டாவதை குறிப்பதால் மதச்செயற்பாட்டிற்கு அனுமதி தேவை.

அப்படியா? இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம்! காட்டுவீர்களா? இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை!

ஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது! ஏன்? மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவில்லை.  ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை! அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை! கட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.

உங்கள் வாதம் " தமிழ் சைவம் இந்து"  என்ற வாதக் குணங்களால் எழுவதேயொழிய அதில் தனிமனித சுதந்திரம், நாட்டின் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை! இத்தகைய வாதங்களால் ஒரு பயனும் இல்லை! மாறுபவன் மாறிக் கொண்டு தான் இருப்பான்!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

உலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின்  மூதாதயரில்  சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர்.  இவையெல்லாம் அறிவியலே.

ஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல் குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது  மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை பரியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய  பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே. 

ஆடி அமாவாசை ஆரதானை ஜெபகூட்டம் என்றும் ஏமாற்றுகிறார்கள் 

14 minutes ago, Justin said:

அப்படியா? இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம்! காட்டுவீர்களா? இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை!

நான் தந்த இணைப்பில் கூறப்பட்டிருப்பதை வைத்தே விளக்கம் தந்தேன்.

“மதம் மாற்றும் சபைகளின் செயற்பாடுகளை மக்கள் விரும்பாவிட்டால் உரிய சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துமாறு காவல்துறை பொறுப்பதிகாரி அறிவுறுத்தினார். கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் போன்றோருக்கு அறிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உரிய அனுமதி இன்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.”

1 hour ago, Justin said:

கட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.

கட்டாய மதமாற்றம் பற்றி இங்கு யார் கதைத்தது?

உங்களுக்கு மதமாற்றம், கட்டாய மதமாற்றத்துக்கு வேறுபாடு தெரியாவிட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.

முன்னைய திரியிலும் இப்படித்தான் இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொண்டு பதிலளித்தீர்கள். 😀

1 hour ago, Justin said:

ஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது! ஏன்? மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவில்லை.  ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை! அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை!

நீங்கள் முன்னர் எந்த வீட்டில் நடந்த மதபோதனைக்கு வக்காலத்து வாங்கி எழுதினீர்களோ, அவர்களுக்கு அனுமதி தேவையில்லை என எழுதினீர்களோ அவ்விடயம் தான் பின்னர் பொலிஸ் வரை சென்று அனுமதி தேவை என பொலிஸ் கூறியிருந்தது. அது பற்றிய இணைப்பே நான் மேலே தந்தது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அப்படியா? இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம்! காட்டுவீர்களா? இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை!

ஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது! ஏன்? மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவில்லை.  ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை! அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை! கட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.

உங்கள் வாதம் " தமிழ் சைவம் இந்து"  என்ற வாதக் குணங்களால் எழுவதேயொழிய அதில் தனிமனித சுதந்திரம், நாட்டின் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை! இத்தகைய வாதங்களால் ஒரு பயனும் இல்லை! மாறுபவன் மாறிக் கொண்டு தான் இருப்பான்!  

http://www.sundaytimes.lk/090222/Plus/sundaytimesplus_08.html

Anti-conversion Bill paving the way to ‘therocracy’

The anti-conversion bill, introduced by the Jathika Hela Urumaya (JHU) in 2004, was approved in January 2009, and the Sri Lanka Parliament is to vote on the Bill in February or March.....................................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vaasi said:

அறிவுக் கொழுந்துகளே, பத்து வரிய நியூஸ் சார். வாசிக்க பஞ்சியோ, இங்கிலீஸ் மட்டு மட்டோ

பாராளுமன்றத்திலே இதை கடாசி குப்பைக்குள் போட்டு கனகாலம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

உலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின்  மூதாதயரில்  சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர்.  இவையெல்லாம் அறிவியலே.

ஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல் குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது  மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை பரியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய  பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே. 

உண்மை...தான்!

இவர்கள் தானே.....யேசுநாதர்....ஒரு மீனையும் , ரொட்டியயையும் வைத்து....எல்லோரது பசியையும் போக்கினார் என்று கூறுகின்ற அறிவியலாளர்கள்...!

ஜெகோவா.....கடலைப் பிளந்து மறுகரைக்குப் போனார் என்னும் போது....வாய்களை....அகலப் பிளந்து...ஆமோதிப்பவர்கள்!

இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது....மற்றைய மதங்களை விமரிசிப்பதற்கு?

யேசு நாதரின்.... பிறப்பே....கிருஷ்ணனிடமிருந்து கடன் வாங்கியது....!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

 வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.

7 hours ago, Justin said:

இதை கிறிஸ்தவனான நான் சொல்வதால் இங்கே பொறி பறக்கலாம்!

ஆனால், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லத் தான் வேண்டும்: இப்படி தனியார் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த அதிகாரிகளிடமும் அனுமதி தேவை என்று இலங்கையில் சட்டம் இல்லை! அப்படி இருந்தால் இங்கே ஆதாரம் இணையுங்கள்!

“வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது.”

அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்துவது சட்டவிரோதம். அதிக சத்தம், அபரீதமான போக்குவரத்து போன்றவை உரிய அங்கீகாரம், முன்னறிவித்தல், சூழ உள்ள சமூகத்தின் விருப்பம் இன்றி இடம் பெறுவது, ஒரு வகையில் ஆதிக்க முயற்சி.

நல்லூர் தேர் திருவிழாவுக்கு பெருமளவு மக்கள் போகிறார்கள், பெரும் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஆனால் அது ஆதிக்கம் இல்லை - காரணம் சூழ உள்ள இந்துக்கள் மட்டும் அன்றி கிறீஸ்தவர்களும் விரும்பி பங்குபற்றும் தேர் திருவிழா அது. 

மதம் மாற்றுவதற்கு என்டு  உலகையே ஏமாற்றும் கயவர் கும்பல்கள் காலம் காலமா அலைஞ்சு திரியுது.

அற்ப சொற்ப பொருளுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு அந்த கயவர் கும்பல்கள் வலையில வீழ்கின்ற பேராசைக் கும்பல்களும் அங்கையங்கை இருக்கத்தான் செய்யுது.

மதம்மாறி வாலறுந்த நரியான அந்த பேராசைக் கும்பல்களின் கதை இருக்கே, சொல்லிமாளாது. தங்களை வென்ற ஆக்கள் உலகத்திலேயே இல்லை என்ட ரேஞ்சில அரசியல் கிரசியல் எல்லாம் உளறித்திரிவீனம். எங்கையாவது ஏதாவது வீசப்பட்ட அதை பொறுக்கிக்கொண்டு திரிவீனம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

அவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்😆😆😆😆😆

வெள்ளைக்காரன்   பொய்  சொல்ல  மாட்டான் என்று நம்புற ஆட்கள் தான்... 
அதனையும்.. நம்புகிறார்கள்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இயேசு கிறிஸ்துவின் அற்புதமான போதனைகளை / சத்தியங்களை பின்பற்றுகின்றவன் /

இயேசு எந்த மதத்தையும் தாபிக்க வரவில்லை 

இயற்கையே கடவுள் என நம்புகின்றவன்.
 
ஆன ஒரு மனிதனையும் நம்புவதில்லை. போதகர்கள் / பாதிரிகள் /  ஊழியக்காரர்கள் எல்லோரும் திருடர்கள். உழைக்காமல்  இறைவனின் சத்தியத்தை தங்கள் வாசிக்கு எற்ற விதமாக போதித்து வாழும் கயவர்/சோம்பேறி கூட்டம். கோட்டும், சூட்டும், அலங்காரங்களும், விலையுர்ந்த கார்களும் வெளிநாட்டு பயணங்களும் அவர்களது வாழ்க்கை பகட்டானது. தனி மனித பலவீனங்களை தாங்களுக்கு சாதகமாக பாவித்து கொள்வார்கள்.   தாங்களுக்கு தாங்களே Reverent, Bishop, Pastor, Evangelist, Prophet போன்ற பட்டங்களை சூடிகொள்வார்கள்.  

google ஐத‌ட்டிப்பார்த்தால் தெரியும் இவர்கள்து சொத்து மதிப்பு 

பக்கத்து வீட்டில் நோயுற்று / வறுமையில் வாடும் ஒருவரையும் சந்திக்க நேரம் இருக்காது. அனாதைகளை அரவணக்க நேரம் கிடைகாது / பசியால் வாடுபவர்க்ளுக்கு ஒரு நேரம் உணவளிக்க மாட்டார்கள். உன்னை நேசிப்பது போல உன் அயாலனையும் நேசி என்ற அடிப்படை தத்துவத்தையும் மறந்து விடுவார்கள். இந்த ஊத்தை வியாபரிகளினாலேயே சமூகத்தில் இத்தனை பிரச்சினை. 

மனிதன் என்று தன் சகமனிதனை நேசிக்க ஆரம்பிக்கிறானோ அன்று இந்த உலகம் சொர்க்கமாக மாறும். மாறாக நல்லுர் கந்தனுக்கு பாலபிசேகம் செய்வதாலோ அல்லது மக்காவிற்கு சென்று கல் எறிவதாலோ, புத்தங் சரணங் கச்சாமி என்று பனை ஓதுவாதலோ ஒரு மண்ணும் நடக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.