Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியாக இருந்த போதே சிறீலங்காவிற்கு வந்தார்

மீராக்கா 

இவ்வளவு நாழும் எங்க போயிருந்தனியள், ஆளக் காணேல்ல..

😀

  • Replies 52
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் மாறுகின்றது எனக் கூறும் நாங்கள் யாரும் மாறப்போவதில்லை
அவர்கள் எங்களுக்கு உதவிக்கரம்   கொடுக்கவில்லை என்பதற்காக
நாங்கள் அவர்களை எதிர்க்க வேண்டியதில்லை.
வேடிக்கையும் பார்க்கத் தேவையில்லை.

இப்படியான கருத்துக்கள் தான் எங்கள் நிலமையை இன்று வரை யாரும் கண்டுகொள்ளாத நிலைக்கு அழைத்த வந்திருக்கின்றது
இன்று ஈழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்  திடலுக்கு கூடச் செல்ல அனுமதியில்லை   
 
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

மீராக்கா 

இவ்வளவு நாழும் எங்க போயிருந்தனியள், ஆளக் காணேல்ல..

😀

இங்கதான் இடைக்கிடை எட்டிப்பார்த்தபடி....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டில் குடியேறிய முஸ்லிம் அரபிகள் பலஸ்தீனர்களு ஆதரவு என்று சொல்லி மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

ஆம் இது தான் இப்போது ஜேர்மனியில் நடக்கின்றது.
சிரிய மக்களை பாவம் பார்த்து அகதிகளாக சொந்த காசில் அழைத்து அழகு பார்த்ததிற்கான தண்டனையை ஜேர்மன் அரசு அனுபவிக்கின்றது. பாவம் பார்த்து லெபனான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்த ஜேர்மன் மக்களே அஞ்சும் வகையில் கேடிகளாகவும் மாஃபியாக்களாகவும் உலாவருகின்றார்கள்.

தஞ்சம் கொடுத்த மக்களையே பன்றிகள் என திட்டிக்கொண்டு திரிகின்றார்கள். 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kapithan said:

மீராக்கா 

இவ்வளவு நாழும் எங்க போயிருந்தனியள், ஆளக் காணேல்ல..

😀

யோவ் அது அக்கா இல்லை. அண்ணை 😁

உங்களை மாதிரித்தான் நானும் கொஞ்சக்காலம்.........வேண்டாம் அந்த  கதையை விடுவம். 🙃 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

பேர்ளினில்  2009 இதே நேரம் மிகப்பெரிய ஆர்பாட்டம் நடத்தது  ..மறத்துவிட்டீர்களா? விசுகுயண்ணை பிரான்ஸ்சிலிருந்து  ஒரு அமைச்சரையும். நாதம்ஸ் யு.கே இருந்து ஒரு அமைச்சரையும்  கோத்தாவுடன்  பேச அனுப்பியிருத்தர்கள்.   ...இன்னும். எழுதலாம். இப்ப நேரமில்லை.  

அடேங்கப்பா இவ்வளவு பெரும் புள்ளிகள் எல்லாம் இங்கே எழுதுகிறார்களா? மலைப்பாக இருக்கின்றதே!

அமைச்சர்களை அனுப்பி வைக்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தும் எப்படி இவர்களால் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர்களின் கண்டன ஊர்வலங்கள் தாம் சார்ந்த நாட்டுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் அந்த நாட்டு காவல்துறைக்கும் எவ்வித இடையூறுகளும்  வராமல் பார்த்துக்கொண்டார்கள்.
இப்படியான நிலை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படவில்லை.

Polizisten halten bei einer pro-palästinensische Demonstration auf dem Marienplatz in Stuttgart eine Person am Boden fest.

இது டிஜிட்டல் உலகமையா, மகாவம்சம் மாதிரி கதைவிடக்கூடாது.

1 hour ago, Kapithan said:

மிகப் பெரும்பாலான ஈழத் தமிழர் விடுதலைப் புலிகளின் நேர்மையையும் ஒழுக்கத்தையும் தியாகத்தையும் போற்றுவதே..

 மாற்றுக் குழுக்கள் ஒட்டுமொத்த ஈழத் தமிழரையும் விடுதலைப் புலிகளையும் மிக வன்மத்துடன் எதிர்ப்பதற்குக் காரணமாகும். 

☹️😏

நீங்கள் பிழையாக விளங்கியுள்ளீர்கள். பலஸ்தீன மக்களால் மேற்குலக நாடுகளில் நடத்தப்படும் போராட்டங்களை கொசைப்படுத்தியதுக்காகவே அந்த எதிர்வினை.  2009 மே இல் எல்லோரும் கைவிட்ட நிலையில் ஊன்றி உறக்கமின்றி ஒண்டாரியோ நரக வீதிகளில் நின்ற ஒருவன் என்ற ரீதியில் எனக்கு தெரியும் பலஸ்தீன மக்களின் வலிகள், வேதனைகள்.

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, zuma said:

இது டிஜிட்டல் உலகமையா, மகாவம்சம் மாதிரி கதைவிடக்கூடாது.

எங்களுக்கு மோனொவிலையும் விடிவில்லை. ஸ்ரியோவிலையும் விடிவில்லை.டிஜிட்டல்லையும் விடிவில்லை.நீங்க போய் சொம்பு தூக்குற வேலையை பாருங்க 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இப்படியே உன்னிப்பாய்  அவதானித்து  எதுவும் மாறப்போவதில்லை...எனவே. ஒரு  சிறு. உண்ணவிரதமாகிலும் இருக்க முயற்ச்சிக்கவும்..அதை அறித்து இஸரேல் போரை நிறுத்துவார்கள்..

வாற... ரம்லானுக்கு, இடையில்.... “தீர்வுப் பொதி”  ஒன்று வந்து விடும் என்று சொல்கிறார்கள்.

அதுக்குப் பிறகு... நீங்கள் சொன்ன மாதிரி செய்வம்.

  • கருத்துக்கள உறவுகள்

21 minutes ago, தமிழ் சிறி said:

வாற... ரம்லானுக்கு, இடையில்.... “தீர்வுப் பொதி”  ஒன்று வந்து விடும் என்று சொல்கிறார்கள்.

அதுக்குப் பிறகு... நீங்கள் சொன்ன மாதிரி செய்வம்.

சரியான ஒரு முடிவு. ஆகவே அடுத்த வருடம் ரம்லான் வரைக்கும் உன்னிப்பாக நிலைமைகளை அவதானித்து கொண்டிருப்பதே நல்லது.

அதுக்குப் பிறகு ஸ்டாலின் அப்பா உண்ணாவிரதம் இருந்த மாதிரி இருப்பதற்கு ஆலோசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தன்யாகுவை கூப்பிட்டு ஒருக்கால் தலீவரின் உண்ணாவிரத வீடியோவை போட்டுக்காட்டி சில குறிப்புகளும் கொடுத்துவிட்டால் அப்புறம் ஒட்டு மொத்த இஸ்ரேலே  நெத்தன்யாகுவின் பரம்பரைவசம்தான் 
டெசோ போல பெசோ என்று ஒன்றை  போட்டு பயபுள்ளை  பின்னி எடுத்துருவாப்ல, 
நமக்கு ராமன் ஆண்டாலும் சரி ராவணன் ஆண்டாலும் சரி உழைத்தால் தான் சோறு, ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் கருவறுக்கப்படவேண்டும்      

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நெத்தன்யாகுவால், ஒரு நிலையான அரசைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமைக்க முடியாமல் போனதால், இந்தப் புத்த சாசன விளையாட்டு ஆரம்பித்தது என்று ஒரு கதை....!

இந்த மனிதாபிமான அழிவின் பின்னர் அவர் காட்டில் இனி '"அடை மழை 'தான்...!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்த்தீனர்களின் வாழ்தலுக்கான போராட்டம் உண்மையானது. ஆனால் அவர்களின் அவலங்களைக் காரணம் காட்டி இஸ்ரேலை அழித்துவிடும் நோக்கில் சுற்றியிருக்கும் அரேபிய நாடுகள் செயற்பட்டு வருவதாலேயே இந்தப் பிரச்சினை இப்போது உலகலாவிய பிரச்சினையாக மாறியுள்ளது.

1967 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளில் சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை முற்றாக அழித்துவிட எடுத்த முயற்சிகள் இஸ்ரேலை மேலும் மேலும் வலுவாக்கியுள்ளதோடு, இன்றுவரை ஆக்கிரமிப்புச் செய்வதால் மட்டுமே தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்கிற நிலைக்கு இஸ்ரேலை சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகள் தள்ளியிருக்கின்றன. அதுவும் தனது ஆக்கிரமிப்பை "பாதுகாப்பு" எனும் போர்வையில் தொடர்ந்து நடத்துகிறது.

ஹமாஸ் மற்றும் இஸ்புள்ளா போன்ற தீவிரவாத அமைப்புக்கள் பாலஸ்த்தீனர்களுக்காகக்ப் போராடுகிறோம் என்று கூறினாலும் ஈரானினதும், சிரியாவினதும் அரசியல் நிரலுக்கேற்பவே அவை இன்றுவரை செயற்பட்டு வருகின்றன. ஆகவேதான் இக்குழுக்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு வருவதோடு, மேற்குநாடுகளினதும் ஆதரவினை இழந்திருக்கின்றன. 

இவை எல்லாவற்றையும் விட உரிமைகளுக்காகவும், நாட்டிற்காகவும் போராடும் பாலஸ்த்தீனம் தம்மைப்போன்றே ஆக்கிரமிப்பிற்கெதிராகப் போராடிவரும் ஈழத்தமிழினத்தை எதிர்த்தும் சிங்கள் ஆக்கிரமிப்பாளர்களை ஆதரித்தும் இன்றுவரை செயற்பட்டுவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

விசுகுயண்ணை நீங்கள் எப்படித்தான் கருத்தை வையுங்கள் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.   1972 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து ...சிறுபான்மையினருக்கு ஆதரவாயிருந்த ஒரே சட்டவிதியை ...சோல்பரி..29..மாற்றும்போது  தமிழ்தலைமைகள் ஒன்றும் செய்யவில்லை. இப்போ என்ன செய்ய முடியும் ?அன்றுயுள்ள  எண்ணிக்கையில் தான் இன்றும் தமிழ்ப்பிரதிநிதிகள் ...(எமபிகள்).  சிங்களவர் அன்றுள்ளதைவிட்இனறு மூன்று மடங்கு அதிகம். (எம்பிகள்)

எனது நிலைப்பாடு என்பது ஒரு சாதாரண மனிதனின் அக்கறை அல்லது முயற்சி மட்டுமே.

ஒரு புளு பூச்சி கூட தனக்கு ஆபத்து என்று வருகின்றபோது தன்னால் முடிந்த அளவு எதிர்ப்பை காட்டும்

ஏன் எமது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட படிப்பதற்கு வேலை எடுப்பதற்கு வேலையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கு என்று எல்லாவற்றிற்கும் நாம் போராட வேண்டி இருக்கிறது. பலத்த போட்டி அல்லது ஆபத்து இருக்கிறது என்பதற்காக நாம் பேசாதிருந்து விடுவதில்லையே? 

அப்படி இருக்கும் போது எனது இனத்தின் இருப்பையே முழுமையாக துடைத்தெறிய நடக்கும் ஒரு பேராபத்தை எவ்வாறு நான் கண்டும் காணாமலும் இருக்கமுடியும்????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கற்பத்தார்! நீங்கள் நிக்கிற கிணறு இப்பிடி இருக்குமோ? :grin:
எதுக்கும் கெதியாய் வெளியிலை வரப்பாருங்கோ. உலகம் வலு கெதியாய் மாறிக்கொண்டு போகுது.:cool:

Well (கிணறு) | Mapio.net

நீங்கள் வேற சாமியார், உப்பிடியான கிணறுக்குள் இருந்திருந்தால் எப்போதோ வெளியில் வந்திருப்பார். அவர் விழுந்திருப்பது நிலாவரை கிணறுமாதிரி 500 அடி ஆழமான கிணறு. அதிலிருந்து வெளியே வருவது நடக்கக்கூடிய காரியமா? மாரித்தவக்கை மாதிரி கத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

  • கருத்துக்கள உறவுகள்

கிட்லர் இவர்களை விட பரவாயில்லை, இந்த நவீன காலத்திலும் இஸ்ரேலியர்கள் மிருகங்களாகவுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சக உறுப்பினர் கிட்லர்  இஸ்ரேலியர்களை விட பரவாயில்லை என்கிறார். அவர் கிட்லரின் Auschwitz வதை முகாம் கொடூரத்தை மட்டும் அறிந்தாலே போதும்.  இது மாதிரியே பலஸ்தீனர்களு ஆதரவு  தெரிவித்து முஸ்லிம் அரபிகள் நடத்திய ஆர்பாட்டத்தை ஆதரித்து தமிழும் பேசிய ஒருவர் எனக்கு பொழிப்புரை சொன்னார்  பலஸ்தீனர்கள் அப்பாவிகள் அவர்களுடைய பிரச்சனையை ஒப்பிடும் போது எங்களுடையது எல்லாம் ஒன்றுமே இல்லை.
நண்பர் ஒருவர் வட்அப்பில் வந்ததாக பலஸ்தீன அதரவு தமிழ் கவிதை  ஒன்று அனுப்பியிருந்தார் அதில் இஸ்ரேலியர்களை ஐநாவின் தயவில் பஞ்சம் பிழைக்க வந்த ******* நயவஞ்சகர்களே என்று ஏசப்படுகிறது. இவ்வளவு தீவிரமாக பலஸ்தீனர்களை தமிழர்கள் ஆதரிக்க காரணம் என்னவாக இருக்கும் அல்லாவே அறிவார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்கள சக உறுப்பினர் கிட்லர்  இஸ்ரேலியர்களை விட பரவாயில்லை என்கிறார். அவர் கிட்லரின் Auschwitz வதை முகாம் கொடூரத்தை மட்டும் அறிந்தாலே போதும்.  இது மாதிரியே பலஸ்தீனர்களு ஆதரவு  தெரிவித்து முஸ்லிம் அரபிகள் நடத்திய ஆர்பாட்டத்தை ஆதரித்து தமிழும் பேசிய ஒருவர் எனக்கு பொழிப்புரை சொன்னார்  பலஸ்தீனர்கள் அப்பாவிகள் அவர்களுடைய பிரச்சனையை ஒப்பிடும் போது எங்களுடையது எல்லாம் ஒன்றுமே இல்லை.
நண்பர் ஒருவர் வட்அப்பில் வந்ததாக பலஸ்தீன அதரவு தமிழ் கவிதை  ஒன்று அனுப்பியிருந்தார் அதில் இஸ்ரேலியர்களை ஐநாவின் தயவில் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளே நயவஞ்சகர்களே என்று ஏசப்படுகிறது. இவ்வளவு தீவிரமாக பலஸ்தீனர்களை தமிழர்கள் ஆதரிக்க காரணம் என்னவாக இருக்கும் அல்லாவே அறிவார் 😂

ஈழத்தமிழர் பலஸ்தீனர் மீது இரக்கம் கொள்ள காரணமானவை:

1. ஈழத்தமிழரின் ஆரம்பகால போராட்டத்தின் போது, தமது போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் என்ற நன்றியுணர்வு.

2. நம்மை போலவே தொடர்ந்தும் தோல்வியையும் அழிவையும் சந்திக்கும் மக்கள் என்ற பொது பலவீனத்தின் ஒருமைப்பாடு.

3. போரின் இழப்புகளை அனுபவித்த காரணத்தால் அவர்களின் வலியும் துன்பமும் நன்கு புரிவதால் உண்டாகும் பச்சாத்தாபம்,

4. இசுரேலியர்களின் உண்மையான வரலாற்றை அறியாத காரணத்தால், அந்த மக்களை அடக்குமுறையாளருடன் அடையாளம் கண்டு உருவாகும் வெறுப்பு.

இசுரேலியர்கள் பலஸ்தீனரால் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு முஸ்லிம்களின் அடிமைகளாக வாழ்ந்து, ஒரு மீட்பருக்காக கனவு கண்டு ஏமாந்து, பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் ஹிட்லர் தலைமையில் கிறீஸ்தவர்களால் கொல்லப்பட்டு, தமக்கு புகலிடம் தந்த அமெரிக்காவுக்கு அணுக்குண்டு செய்து கொடுத்து அதற்கு நன்றியாக தமது நாட்டை பெற்றவர்கள். அந்த புதிய ( யாழ் குடா நாட்டிலும் பார்க்க சிறிய) நாட்டை பலஸ்தீனம் 17 இசுலாமிய அரசுகளின் துணையோடு முற்றைகையிட்டு அழிக்க முனைந்தது. அத்தனை நாடுகளையும் தோற்கடித்து இசுரேல் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றியது. 

விடுதலைப்புலிகளும் இசுரேல் போல வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற பயம் இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர்கள் மத்தியில் இருந்ததை தனிப்பட்ட முறையில் நேரடியாக அவர்களில் இருவர் என்னிடம் கூறியிருந்தார்கள்.... அது அந்தக்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் செய்வதறியாது ஓலமிட்டபோது எண்னைத் திரும்பிக்கூடப் பார்க்காத உலகம் எக்கேடு கெட்டால்தான் எனக்கென்ன.. 😏

😡

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி.

16 hours ago, கற்பகதரு said:

இசுரேலியர்கள் பலஸ்தீனரால் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு முஸ்லிம்களின் அடிமைகளாக வாழ்ந்து, ஒரு மீட்பருக்காக கனவு கண்டு ஏமாந்து, பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் ஹிட்லர் தலைமையில் கிறீஸ்தவர்களால் கொல்லப்பட்டு,

முகமதுவின் போதனைகளை பின்பற்றுபவர்களின் அடிமைகளாக வாழ்வது என்பது எவ்வளவு கொடூரமான வதையாக  இருந்திருக்கும் என்பது உலகத்திற்கே தெளிவானது. அதன் பின்பு ஹிட்லரின் வதை. அப்படி கொடுமைகளை அனுபவித்த இஸ்ரேலியர்களை வரலாறு தெரியாமல் அகதியாக பிழைக்க வந்த ****** பலஸ்தீனர்கள் உபசரித்தார்கள் என்று சொல்லி ஏசுவது நியாயம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர் பலஸ்தீனர் மீது இரக்கம் கொள்ள காரணமானவை:

1. ஈழத்தமிழரின் ஆரம்பகால போராட்டத்தின் போது, தமது போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் என்ற நன்றியுணர்வு.

2. நம்மை போலவே தொடர்ந்தும் தோல்வியையும் அழிவையும் சந்திக்கும் மக்கள் என்ற பொது பலவீனத்தின் ஒருமைப்பாடு.

3. போரின் இழப்புகளை அனுபவித்த காரணத்தால் அவர்களின் வலியும் துன்பமும் நன்கு புரிவதால் உண்டாகும் பச்சாத்தாபம்,

4. இசுரேலியர்களின் உண்மையான வரலாற்றை அறியாத காரணத்தால், அந்த மக்களை அடக்குமுறையாளருடன் அடையாளம் கண்டு உருவாகும் வெறுப்பு.

இசுரேலியர்கள் பலஸ்தீனரால் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு முஸ்லிம்களின் அடிமைகளாக வாழ்ந்து, ஒரு மீட்பருக்காக கனவு கண்டு ஏமாந்து, பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் ஹிட்லர் தலைமையில் கிறீஸ்தவர்களால் கொல்லப்பட்டு, தமக்கு புகலிடம் தந்த அமெரிக்காவுக்கு அணுக்குண்டு செய்து கொடுத்து அதற்கு நன்றியாக தமது நாட்டை பெற்றவர்கள். அந்த புதிய ( யாழ் குடா நாட்டிலும் பார்க்க சிறிய) நாட்டை பலஸ்தீனம் 17 இசுலாமிய அரசுகளின் துணையோடு முற்றைகையிட்டு அழிக்க முனைந்தது. அத்தனை நாடுகளையும் தோற்கடித்து இசுரேல் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றியது. 

விடுதலைப்புலிகளும் இசுரேல் போல வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற பயம் இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர்கள் மத்தியில் இருந்ததை தனிப்பட்ட முறையில் நேரடியாக அவர்களில் இருவர் என்னிடம் கூறியிருந்தார்கள்.... அது அந்தக்காலம்.

ஜேசுவை காட்டி கொடுத்தார்கள் என 2000 வருசத்துக்கு முன்னர் அடித்து துரத்தப்பட்ட யூதர்கள், மீண்டு வந்து தமது பூர்வீக நிலத்தினை எடுத்துக்கொண்டார்கள். 

அவர்கள் துரத்தப்பட்டது இஸ்லாமியர்களால் அல்ல. அதுக்கு 500 ஆண்டுகள் பின்னர் தான் முகமதுவும், இஸ்லாமும் வந்தன.

அவர்களை துரத்தியது ரோமர்கள். அதாவது, ஒரு ரோம அரசின் எதிரியாக கருதப்பட்ட ஒருவர் போதனைகள், பின்னர் ரோம அரசாட்சியினை கிறிஸ்த்துவமாக கவர்ந்த போது, பின்னே வந்த ரோம அரசுகளினால், ஜேசுவை காட்டி கொடுத்து கொலை செய்ய வைத்த இனம் என்று, பாவசித்தமாக  பிராயச்சித்தமாக, யூதர்கள் வதைக்கப்படார்கள். இவ்வளவுக்கும் ஜேசுவே ஒரு யூதர் தான்.

தமிழர்கள் போலவே, அவர்களும் அனுபவித்த கொடுமை அதிகம். ரோமர்களினால், இஸ்லாமியர்களிடமும், நாசிகளிடமும் அவர்கள் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை. நாஸிகளினால் வதை அனுபவித்தது, அவர்களது பொருளாதார வளர்ச்சியின் மீதான பொறாமையால்.

தமிழர் போலவே உலகம் முழுவதுமே அகதிகளாக சென்றார்கள்.

இலங்கைக்கு கூட அகதிகளாக சென்று வாழ்ந்தனர். ஒரு பிரதம நீதி அரசராக ஒரு யூதர் இருந்து இருக்கிறார்.

கேரளாவில், பம்பாயில் ஆர்ஜென்டினா என்று ஓடி இருக்கிறார்கள்.

இன்று அவர்களது பணமே, அவர்களை மேல் நாட்டு அரசியல் வாதிகளை அவர்கள் சார்பாக்கி உள்ளது.

பாலத்தீனியர்கள் நிலத்தினை அவர்கள் எடுக்கவில்லை. அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலத்தில், அவர்கள் மீண்டும் வந்து, பணம் கொடுத்து வாங்கினார்கள். 

பழைய வரலாறை பார்க்காது, அண்மைய நிகழ்வுகளை மட்டுமே பார்த்தால், ஏதோ பாலத்தீனியர்கள் பக்கம் மட்டுமே நியாயம் உள்ளதாக தோன்றும். 

எனது  ஆதரவு யூதர்களுக்கே.... ஏனெனில் அந்த அவலம்.... மிக மோசமானது, நாம் அனுபவித்து, அனுபவிப்பது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர் பலஸ்தீனர் மீது இரக்கம் கொள்ள காரணமானவை:

1. ஈழத்தமிழரின் ஆரம்பகால போராட்டத்தின் போது, தமது போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் என்ற நன்றியுணர்வு.

2. நம்மை போலவே தொடர்ந்தும் தோல்வியையும் அழிவையும் சந்திக்கும் மக்கள் என்ற பொது பலவீனத்தின் ஒருமைப்பாடு.

3. போரின் இழப்புகளை அனுபவித்த காரணத்தால் அவர்களின் வலியும் துன்பமும் நன்கு புரிவதால் உண்டாகும் பச்சாத்தாபம்,

4. இசுரேலியர்களின் உண்மையான வரலாற்றை அறியாத காரணத்தால், அந்த மக்களை அடக்குமுறையாளருடன் அடையாளம் கண்டு உருவாகும் வெறுப்பு.

இசுரேலியர்கள் பலஸ்தீனரால் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு முஸ்லிம்களின் அடிமைகளாக வாழ்ந்து, ஒரு மீட்பருக்காக கனவு கண்டு ஏமாந்து, பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் ஹிட்லர் தலைமையில் கிறீஸ்தவர்களால் கொல்லப்பட்டு, தமக்கு புகலிடம் தந்த அமெரிக்காவுக்கு அணுக்குண்டு செய்து கொடுத்து அதற்கு நன்றியாக தமது நாட்டை பெற்றவர்கள். அந்த புதிய ( யாழ் குடா நாட்டிலும் பார்க்க சிறிய) நாட்டை பலஸ்தீனம் 17 இசுலாமிய அரசுகளின் துணையோடு முற்றைகையிட்டு அழிக்க முனைந்தது. அத்தனை நாடுகளையும் தோற்கடித்து இசுரேல் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றியது. 

விடுதலைப்புலிகளும் இசுரேல் போல வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற பயம் இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர்கள் மத்தியில் இருந்ததை தனிப்பட்ட முறையில் நேரடியாக அவர்களில் இருவர் என்னிடம் கூறியிருந்தார்கள்.... அது அந்தக்காலம்.

1 hour ago, Nathamuni said:

ஜேசுவை காட்டி கொடுத்தார்கள் என 2000 வருசத்துக்கு முன்னர் அடித்து துரத்தப்பட்ட யூதர்கள், மீண்டு வந்து தமது பூர்வீக நிலத்தினை எடுத்துக்கொண்டார்கள். 

அவர்கள் துரத்தப்பட்டது இஸ்லாமியர்களால் அல்ல. அதுக்கு 500 ஆண்டுகள் பின்னர் தான் முகமதுவும், இஸ்லாமும் வந்தன.

அவர்களை துரத்தியது ரோமர்கள். அதாவது, ஒரு ரோம அரசின் எதிரியாக கருதப்பட்ட ஒருவர் போதனைகள், பின்னர் ரோம அரசாட்சியினை கிறிஸ்த்துவமாக கவர்ந்த போது, பின்னே வந்த ரோம அரசுகளினால், ஜேசுவை காட்டி கொடுத்து கொலை செய்ய வைத்த இனம் என்று, பாவசித்தமாக, யூதர்கள் வதைக்கப்படார்கள். இவ்வளவுக்கும் ஜேசுவே ஒரு யூதர் தான்.

தமிழர்கள் போலவே, அவர்களும் அனுபவித்த கொடுமை அதிகம். ரோமர்களினால், இஸ்லாமியர்களிடமும், நாசிகளிடமும் அவர்கள் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை. நாஸிகளினால் வதை அனுபவித்தது, அவர்களது பொருளாதார வளர்ச்சியின் மீதான பொறாமையால்.

தமிழர் போலவே உலகம் முழுவதுமே அகதிகளாக சென்றார்கள்.

இலங்கைக்கு கூட அகதிகளாக சென்று வாழ்ந்தனர். ஒரு பிரதம நீதி அரசராக ஒரு யூதர் இருந்து இருக்கிறார்.

கேரளாவில், பம்பாயில் ஆர்ஜென்டினா என்று ஓடி இருக்கிறார்கள்.

இன்று அவர்களது பணமே, அவர்களை மேல் நாட்டு அரசியல் வாதிகளை அவர்கள் சார்பாக்கி உள்ளது.

பாலத்தீனியர்கள் நிலத்தினை அவர்கள் எடுக்கவில்லை. அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலத்தில், அவர்கள் மீண்டும் வந்து, பணம் கொடுத்து வாங்கினார்கள். 

பழைய வரலாறை பார்க்காது, அண்மைய நிகழ்வுகளை மட்டுமே பார்த்தால், ஏதோ பாலத்தீனியர்கள் பக்கம் மட்டுமே நியாயம் உள்ளதாக தோன்றும். 

எனது  ஆதரவு யூதர்களுக்கே.... ஏனெனில் அந்த அவலம்.... மிக மோசமானது, நாம் அனுபவித்து, அனுபவிப்பது. 

நியாயத்துக்கும்  அநியாயத்துக்கும்  இடையில் நின்று தொங்க 
அறிவற்ற நிலை தவிர்த்து வேறு  ஒன்றுமே இல்லை 

2000 ஆண்டுக்கு முன் நடந்த ஒரு அவலத்தை கொண்டுவந்து 
இன்று கண் முன்னே நடக்கும் ஒரு மனித அவலத்தை நியாய  படுத்துவது 
என்பது மிக கேவலமான ஒன்று 

இப்போதைய பிரித்தானிய காலனித்துவ கால எல்லைகளை கூட 
இனி திரும்பி பெற முடியாது இனி அவை வெறும் வரலாறு மட்டுமே 

2000 ஆண்டு முன்பு என்றால் .... இந்தியாவை அவ்வப்போது படையெடுத்து வந்து 
ஆண்டவர்கள் மொகாலிய அரசுகளும்  சீன மொங்கோலிய மன்னர்களும் 
அவர்களிடம் இந்தியாவை கொடுத்துவிட்டு இந்தியர்கள் அகதி முகாம்களுக்குள் 
முடங்குவதுதான் நியாயமா? 

செவ்விந்தியர்களிடம் அமெரிக்காவையும் கனடாவையும் கொடுத்துவிட்டு 
இப்போது அமெரிக்காவில் வாழும் கற்பகத்தரு அவர்கள் ஏன் தாமாகவே வெளியேற கூடாது 
அவர்கள் வந்து கொலை செய்து ஏன் வீண் கொலை பழியை அவர்கள் சுமக்க வேண்டும்?

பாலஸ்தீனத்தில் இன்று குண்டு மட்டுமே சத்தமாக வெடித்து புகை எழும்புகிறதே தவிர 
இன  அழிப்பு திட்டமிட்டு இரவு பகலாக கடந்த 40 வருடமாக நடந்துகொண்டு இருக்கும்  ஒன்று. 

இந்த மனித அவலத்தை தயவு செய்து 
மீடியாக்களின் அரசுகளின் பிரச்சார மாயைக்குள் வீழ்ந்து 
நியாப்படுத்தாதீர்கள் 

ஆணாதிக்கம் இவ்வளவு காலமும் பெண்களுக்கு செய்த 
அநியாயத்துக்ககாக தற்கொலை செய்ய எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு பகுதியையும் எதிர்க்கவுமில்லை...ஆதரிக்கவுமில்லை..என்னெனில். இவர்கள் எங்களை  ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். மாறாக. இலங்கையரசை  ஆதரிப்பார்கள்.  பாலஸ்தீனம் பூரணவிடுதலை பெற்றாலும். இலங்கையைத்தான். ஆதரிக்கும்  ...கியூபா...எத்திரியா...போல்.  ஆனால். இஸ்ரவேல்.  சும்மாயிருந்தால். பாலஸ்தீனம்  மற்ற அரபுநாடுகளின் உதவியுடன் இஸரேலைத் துடைத்து எறிந்து விடுவார்கள். எனவே  அடிக்கதான்வேண்டும்...பாலஸ்தீனமும்..அடிக்கட்டும். இங்கே இலங்கைத்தமிழரின் ..ஆதரவு ..எதிரப்பு....ஆல் எதுவும் நடத்து விடாது..1960 ஆண்டளவில் இருந்த மக்கள்  தொகையைவிட இன்று. மூன்று  மடங்குக்குமேல். பாலஸ்தீனர்கள் வாழ்கிறார்கள்...அவ்வளவு இனப்பெருக்கம் ...முஸ்லிம்நாடுகளும்  ஐரோப்பியாவும்...அமெரிக்காவும். நிதி வழங்குகிறார்கள்.  எங்கள் தமிழ்மக்கள்தொகை 1948 இலும் குறைவு பாரளுமன்ற உறுப்பினர்களும்  1948இல் இருந்த எண்ணிக்கையே ...சிங்களவனுக்கு 1948 விட இப்போ மூன்று மடங்குக்குமேல் பாரளுமன்ற உறுப்பினர் உண்டு.  பாலஸ்தீனர்களின் எண்ணிக்கைக்கு எற்ப. இஸரவேலரின்எண்ணிக்கை உயரவில்லை. இப்படியே போனால் ஒருகாலத்தில்  பாலஸ்தீனரின் கை ஓங்கலாம்  தமிழ்ஈழம்கூட பூரண சுதந்திரம் கிடைத்தபின் ...மற்றவிடுதலைக்கு போராடும் இனங்களை ஆதரிக்கமாடடாது. இங்குள்ள. யாழ்கள நண்பர்கள் ஆதரிக்கவும்விடமாட்டார்கள். மாறாக...இந்தியா...அமெரிக்கா...சீனா...ரசியா...போன்றநாடுகளின் அணியிலிருப்பார்கள் இதுதான் யதார்த்தம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நியாயம் அநியாயம்

லாபநட்டம்

சரி பிழைகளுக்கப்பால் 

கண்முன்னே நடக்கும் அநியாயங்களை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பாலத்தீனியர்கள் நிலத்தினை அவர்கள் எடுக்கவில்லை. 

பழைய வரலாறை பார்க்காது, அண்மைய நிகழ்வுகளை மட்டுமே பார்த்தால், ஏதோ பாலத்தீனியர்கள் பக்கம் மட்டுமே நியாயம் உள்ளதாக தோன்றும். 

சரியாகச் சொன்னீர்கள்.
தமிழர்கள் பலர் வரலாறு நியாயம் எதையும் பார்க்காது பலஸ்தீனியர்களை ஆதரித்து எழுதினால் முற்போக்கு என்று நம்பி கவிதை கட்டுரை எழுதுகிறார்கள்
தமிழக உறவு தமிழகன் கூட தனது கட்சியில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களுக்காக [அவர்கள் மதத்திற்காக பலஸ்தீனியர்களை ஆதரிக்க வேண்டியது மதகட்டாயம் ]  பலஸ்தீனியர்களை ஆதரிக்க வேண்டும் என்ற நிலையிலே உள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.