Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ஈழ தேசியத் தலைவருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா'

தமிழினத்தின் அடையாளம். எப்பவும்... எம் நெஞ்சங்களில், வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ❤️

Edited by தமிழ் சிறி

எம் தலைவனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

ஈழத் தமிழரை உலகம் அறியவைத்த தேவன்.🙏🙏🙏

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SS4B3IbRDNI/AAAAAAAAA8s/HJOyTmI6zVc/s320/Untitled-4.jpg

எம் இனத்தின் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......!  🙏

கார்த்திகையில் பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ! | எரிமலை

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and indoor

எம் இனத்தின் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தானை தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றும் நேசிக்கும் முதல் மனிதன் தேசியத்தலைவர் அவர்களுக்கு இனிய 67வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசியத்தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!💐🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

 தமிழின தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியதலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவரை இகழ்ந்து வசைபாடும் கூட்டம் உள்ள யாழ் களத்தில் உள்ளபோது, தெசியத்தலைவரது கொள்கைகள் மற்றும் தியாகம், கொண்டகொள்கையில் பிடிப்பு ஆகியவற்றைத் தூரக்கடாசிவிட்டு தடி எடுத்தனனெல்லாம் தண்டல்காரனாகவும் போலித் தமிழ்தேசியவாதிகளுக்குத் துதிபாடும்போது 

எப்படிப்பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லமுடியும் என்னால்.
 

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, Elugnajiru said:

 

எப்படிப்பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லமுடியும் என்னால்.
 

சிங்களமும் சிங்களத்தின் கைக்கூலிகளும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். 

தமிழீழ நிலம் விடிய என் உயிரையும் தருவேன் என
வெற்றுமொழி பேசாது வேங்கையென வாழ்ந்த திரு
ஆற்றலின் ஊற்றே  ஆழ்ந்த சிந்தனையே 
வேற்றவரும் போற்றும் வீரத்திரு நதியே
நின் புகழென்றும் புதைந்திடாது வாழும்!
வாழிய தலைவா வாழியவே! 
வரலாறாய் என்றும் வாழியவே!

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் இறைவன் பிறந்தநாள் இன்று.
 
கடவுளுக்கு அடித்தால்
மக்களுக்கு வலிக்கும் கேட்டதுண்டு
எம்மைத்தொட்டால் உனக்கு வலிக்கும் பார்த்ததுண்டு
 
பேச்சை மூச்சாகக் கொண்டோர் முன் செயலை மூச்சாக்கி காட்டியவன் நீ
அதனால் இன்று அதிகம் தேவைப்படுபவனும்
தேடப்படுபவனும் நீ
 
எதற்கும் மாற்றீடு இல்லாமல் இல்லை உன்னை தவிர.
 
உன் காலத்தில்
நானும் வாழ்ந்தேன் என்பதே இப்பிறவியில் பெருமை எனக்கு.
 
எங்கிருந்தாலும் வாழ்க இறையே.
  • கருத்துக்கள உறவுகள்

தலைவா
எங்கிருந்தாலும் வாழ்க.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனத்தின் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 என்றும் எம் மனதில் இறவாத தலைவன். விடியலுக்காய் பிறந்த விடுதலை வீரனுக்கு என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கர்மவீரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின்மேல்
காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.
 

எந்த அன்னியருக்கும் நிலை இல்லை
எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு
கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

திசகாட்டியையும் சுக்கானையும்
பறிகொடுத்த மாலுமி நான்
நீர்ப் பாலைகளில்
கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி

நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர
எதனைக் கொண்டுநான்
மனம் ஆற என் ஆச்சி..
.🙏

-வ.ஜ.ச

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரலாறுகளிலும் கண்ட தமிழனத்தின் வீரத்தை தற்காலத்திலும் காட்டி யாதுமாகி நின்றவனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்

தமிழ் உள்ளவரை வாழட்டும் நின் புகழ்.
 
 
#######   #######  #######  #######   #######  ####### 
 
 

May be an image of 1 person and standing

தமிழுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்.

இரா சேகர்

 

#######   #######  #######  #######   #######  ####### 

 

May be an image of 1 person, standing and fire

எங்கள் இனத்துக்கான தலைவா உமது பிறந்த நாளில் உம்மை வணங்குகிறோம்.

Anbu Raj

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தோ வந்து
நம் தெருவோர மரக்கிளையில் குந்தி
தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த
அந்தக் குருவியைப் போல்
காணாமல் போனதடி காலங்கள்

அந் நாளில்
பண்டார வன்னியனின்
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்

இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு

புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்… 

இனிச் சோழர்காலம் திரும்பாதுதான்
எனினும்.. 
வரலாற்றின் பாதையில்
கரைமாறும் கடல்மாறும்
காலங்களும் மாறுமடி...

 -வ.ஜ.ச

  • கருத்துக்கள உறவுகள்

பாலி ஆறு நகர்கிறது
அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.

ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி

ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்

அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்

அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி

ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்

எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்

ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து

சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது

அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்

இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு

புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்

அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.

பால்பத்திர ஓணாண்டி அவர்களுக்கு நன்றி
மீண்டும் இக்கவிதையை நினைவூட்டியதற்கு.

சில கவிஞர்களின் வரிகள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது, ஜெயா இதை எழுதியது தனது இளமைப்பிராயத்தில் எதிர்காலத்தில் ஈகவிதை இன்னுமொரு வரலாற்றுடன் பொருந்திப்போகும் என அவர் எழுதும்போது கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்.

இதே போல புதுவையரும் ஒரு முக்கியமான பாடலில் ஒரு வரியைச் சேர்த்திருப்பார் அது எதுவெனில்

"உருவாக்கி எம்மை வழிகாட்டும் தலவரின் வரலாறுமீதினில் உறுதி" என

இன்றைய நாளில் இவ்விரு  கவிதை வரிகளையும் தொட்டுப்பொவது உகந்ததே.

முதலாவது கண்களை நனைக்கும்

இரண்டாவது புதுவையரின் வரிகள் எம்மை உறுதிகொள்ளவைக்கும். 

அறம்சார்ந்து நாம் எந்தவிடயத்தையும் தன்னலமில்லாது செய்யத்துணிந்தால் தலைவரது சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கலாம். 

அதுவே அந்தக் காலப்பெருநதிக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.

அண்ணர் நீங்கள் எப்போதும் என்னருகில் இருப்பதுபோல் உணருவதால் என்னால் அறத்துக்கு மாறாகச் சிந்திக்க முடியாதுள்ளது என்பதை எவர் உணருகிறாரோ அவரால், அண்ணர் விட்டுச்சென்ற செயல் முடிக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.