Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமகன் இன்று காலமாகி விட்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and text that says 'அஞ்சலி நடு இணைய சஞ்சிகை ஆசிரியர் கோமகன் (தியாகராஜா ராஜராஜன்) T7 ஒநடு .adouD'
 
நடு நாயகமாக நின்ற கோமகன்.
கோமகன்.
எல்லோருக்குமாய் சேர்த்து இயங்கிய ஒரு செயற்பாட்டாளர். இனி இல்லை.
அவரது தனிக்கதை என்ற தொகுப்பு முதல் முரண் கதைத்தொகுப்பு வரை பலவிடயங்களை உரையாடியிருக்கிறோம். என்னதான் இடக்கு முடக்காக கதைத்தாலும் அவரது நேசிப்பில் குறைவிழுந்ததில்லை. யாழ் இணையத்தில் எழுதிய காலத்திலிருந்து உருவாகிய நட்பு. அவரை முதன் முதலாக சந்தித்ததும் அதனூடாகத்தான்.
 
ஊருக்கு போவதற்கு சில நாட்கள் முன் தான் சந்தித்திருந்தேன். ஏற்கனவே ஒரு சத்திர சிகிச்சை செய்திருந்த நிலையில், உடல் நிலை குறித்து மிக அவதானமாகவே இருந்தார். மனிதர் ஒரு கடும் கோப்பிப் பிரியர். கோப்பி அருந்தியபடி நிறையவே பேசினார். நாவல் ஒன்று எழுதுவதாகவும் சில அத்தியாயங்கள் முடித்துவிட்டதாகவும் சொல்லியிருந்தார். என்ன அவசரம் ஊருக்கு எனக் கேட்டபோது, காரணத்தை சொல்லியவர், கூடவே சில நூல் வெளியீடுகளை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். பின்னர் தர்மினி அக்கா வீட்டுக்கு சென்றோம். கோ. நாதனின் தொகுப்பை தந்தார், அதற்கு ஒரு இரசனைக்குறிப்பாவது எழுதிதரவேண்டும் என கட்டளையிட்டார்.
இறுதி இதழுக்கு ஏதாவது எழுதித்தாருங்கள் எனக் கேட்டபோது, இப்ப எழுதுவற்கான மனநிலை இல்லையண்ணை எனப் பதில் எழுதினேன். இனி எழுதுகிறேன் என்று சொல்வதற்கு கோமகன் இல்லை.
 
நினைவுகளில்
ஏதாவதொரு நிகழ்வுகளில்
எங்காவதொரு பொழுதுகளில்
ஞாபகங்களில் மீட்டுக்கொள்வோம்.
துயரத்தின் சாயல் சிறிதுமில்லாத புன்னகையை.
அப்போதெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்துவைத்துக்கொள்வோம்.
தவறவிட்ட,
உங்கள் இருப்பை அதில் தேடிக்கண்டுகொள்வோம்.
சென்று வாருங்கள் கோமகன்.
  • Replies 73
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்🙏

  • கருத்துக்கள உறவுகள்

 இன்று 22.04.2022 காலை 11.00 மணிக்கு  இறுதிச் சடங்குகள் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'நடு நிலப்பாணன் கோமகன் நடு மின்னிதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான கோமகன் அவர்களின் நினைவு ஆற்றுகை கோமகனுடனான நினைவுகளை நண்பர்கள் இணைய வழியில் பகிர்ந்துகொள்கிறார்கள். சனிக்கிழமை ஒருங்கிணைப்பு ஒரு ப.தெய்வீகன் ஒழுங்கமைப்பு கோமகனின் நண் கள் இலங்கை ஐரோப்பா ஆஸ்திரேலியா கனடா meeting ID 896 818 2754 zoom passcode 1965'

நாளை சனிக்கிழமை... கோமகன் நினைவுகளை, 
நண்பர்கள்.. பகிர்ந்து கொள்கின்றார்கள்.
நீங்களும் விரும்பினால், கலந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சியன செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்த நாளில் இருந்து சொல்லவும் எழுதவும் வார்த்தைகள் இல்லாமல் பேரதிர்ச்சியாக இருக்கிறது.. எழுத ஆயிரம் நினைவுகள் இருக்கிறது.. தனிமையையும் வெறுமையையும் போக்க அவருக்கு நண்பர்கள் எல்லாம் எழுத்தின் மூலம் கிடைத்தவர்களே.. அந்த எழுத்து உலகும் யாழின் மூலமே அவருக்கு அறிமுகமானது.. யாழ் ஒவ்வொரு காலப்பகுதியில் ஒவ்வொரு விதமானதாக கருத்தாளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும்.. நெடுக்ஸ் கூறியதுபோல் அவர் யாழில் எழுதிய காலங்கள் சுய ஆக்கங்களின் பொற்காலம்.. அவருக்கு முன்னாடியே சென்றுவிட்ட தமிழ் இலக்கிய உறவுகளிடம் சென்று சேர்ந்து நிம்மதியாக இருப்பார் என்று நம்புகிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

  • தொடங்கியவர்
5 minutes ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் 

இக்கட்டான நேரத்திலும் நேரம் ஒதுக்கி சென்று அஞ்சலி செலுத்தியதும் இல்லாமல் யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்தமைக்கு மிக்க நன்றி வாத்தியார்.

7 minutes ago, வாத்தியார் said:

காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் மாமாவின் இழப்பின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

ஓ சோ சாட்..ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, வாத்தியார் said:

எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது

உங்கள் மாமனாரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் மிகவும் சிறப்பாக செயலாற்றியிருக்கிறீர்கள்........உங்களின் மாமனாரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்......! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்களின் மாமனாரின் இழப்பினால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

நன்றி செயலும்  நேரமும் பெரும்  ஆத்ம  திருப்தி தருகிறது

நன்றி சகோ

உங்கள் மாமாவின் இழப்பின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாமனார் மறைவின் கவலையும், காரியங்களும் மிகுந்திருந்த வேளையிலும் யாழ்கள உறவான கோமகனுக்கு  இணையம் சார்பாகவும் இணையத்தின்  உறவுகள் சார்பாகவும் மலர்வளையம் வைத்து எங்கள் மனங்களுக்கும் ஆறுதல் அளித்த வாத்தியாருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.!!🙏

உங்கள் மாமனாரின் ஆத்மாவும் சாந்தியடைய ஆண்டவனை வணங்கி வேண்டுகிறேன்.💐 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் துயரத்திலும்… நேரம் ஒதுக்கி, கோமகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு…
யாழ்.களம் சார்பாக, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியமை…
மிகப் பெரிய ஒரு செயல்.
உங்கள் மாமனாருக்கும்.. எமது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

வாத்தியார் உங்கள் மாமனாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கோமகனின் இறுதி ஊர்வலத்தில் யாழ்களம் சார்பாக பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோவின் இழப்பு பெரியது. யாழ் இணையத்துடன் முரண்பாடுகள் இருந்தாலும் தன்னை ஆளாக்கியது யாழ் இணையம் தான் என்று பல இடங்களில் கூறியுள்ளார்.  யாழ்  இணையத்தின் ஊடாக அவருக்கு அறிமுகமான தமிழ்ப் பெடியன் ஒஸ்ரேலியாவிலிருந்து வந்த அன்றே கோவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவந்து "அண்ணை உங்களை உயிருடன் ஒருமுறைகூடப் பார்க்க முடியவில்லையே" என்று  கலங்கி அழுததாக சுசீலா கூறினார். வாத்தியாரும் யாழ் இணையசார்பில் மலர்வளையம் வைத்ததையும் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2022 at 15:41, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

அனுதாபங்கள் அண்ணா.

நம்சார்பாக அஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்கள் மாமனாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கோமகனின் இறுதி ஊர்வலத்தில் யாழ்களம் சார்பாக பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.