Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற குழுவில் எரிக்சொல்ஹெய்ம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

எரிக் சொக்கெய்மைக் குறை சொல்குவதைத் தவிர்த்து, அந்தாள் மூலமாக ஏதும் செய்ய வழி இருக்கிறதா எனப் பார்ப்பதே புத்திசாலித்தனம். 

அப்படி புத்தி சாலித்தனமாக செயற்படும் அரசியல்வாதிகள் எம்மிடையே உள்ளார்களா ?

சமீபத்தில் திருகோனமலையில் உள்ள நண்பர் போனில் சொன்னார் என்னதான் சம்பந்தனை திட்டினாலும் தேர்தலில் வேறு ஆள் இல்லாமல் சம்பந்தனுக்கே வாக்களித்தேன் என்றார் அப்ப நான் கேட்டேன் சம்பந்தன் இறந்த பின்னும் அவரின் ஆவிக்கா வாக்களிப்பு செய்வீர்கள் .

மேல் உள்ளது போல் கேள்வி  சுமத்திரன் சாணக்கியன் இருவரை தவிர வேறு புத்தி சாலி இல்லை வேறு வழியில்லாமல் அவர்களை ஆதரிக்கிறோம் என்பவர்களுக்கும் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

எரிக் சொக்கெய்மைக் குறை சொல்குவதைத் தவிர்த்து, அந்தாள் மூலமாக ஏதும் செய்ய வழி இருக்கிறதா எனப் பார்ப்பதே புத்திசாலித்தனம். 

அண்ணல் எரிக் இதுவரை செய்த நல்ல விடயங்களை வரிசைப்படுத்தி சொல்லுமாறு வேண்டப்படுகின்றீர்கள்...😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அதுக்கு முதலில் ஆளைத்தெரிந்திருக்கணும் இல்லையா?

எரிக் சொக்கெய்மை இங்கே  நான்  குறை கூறவில்லை

ஆனால் அவர் மீது தமிழினத்துக்கு ஒரு ஆதங்கம்  என்றும்  உள்ளது இருக்கும்

இங்கே  நான்  குறிப்பிடுவது இவற்றை புத்திசாலித்தனமாக எமக்கு  சார்பாக மாற்ற நாதியில்லை  என்பதையே

நீங்கள் கூறவில்லை. ஆனால் எங்களில் அனேகரின் தெரிவு (நான் உட்பட)  பிழை கண்டுபிடிப்பது மட்டும்தான்.

அடுத்து என்ன  என்கின்ற கேள்விக்கு ஒருவரிடமும் பதிலில்லை. அது தொடர்பான அக்கறையும் இல்லை.

இருப்பது ஆதங்கம் மட்டுமே. 

☹️

6 hours ago, குமாரசாமி said:

அண்ணல் எரிக் இதுவரை செய்த நல்ல விடயங்களை வரிசைப்படுத்தி சொல்லுமாறு வேண்டப்படுகின்றீர்கள்...😂

சமஸ்ரி அரசியல் முறைமையை அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால, இன்று எங்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? 

"தக்கன பிழைக்கும்"

அதாவது 

""""கால மாற்றத்திற்கு நாங்கள் இசைவடையாவிட்டால், அந்த மாற்றமே எங்களை அழித்துவிடும்""""

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சமஸ்ரி அரசியல் முறைமையை அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால, இன்று எங்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? 

"தக்கன பிளைக்கும்"

அதாவது 

""""கால மாற்றத்திற்கு நாங்கள் இசைவடையாவிட்டால், அந்த மாற்றமே எங்களை அழித்துவிடும்""""

இந்த நரம்பற்ற நாக்கை???

ஆனால் செயல் என்பது???

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இந்த நரம்பற்ற நாக்கை???

ஆனால் செயல் என்பது???

புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சமஸ்ரி அரசியல் முறைமையை அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால, இன்று எங்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? 

"தக்கன பிழைக்கும்"

அதாவது 

""""கால மாற்றத்திற்கு நாங்கள் இசைவடையாவிட்டால், அந்த மாற்றமே எங்களை அழித்துவிடும்""""

 பணடா செல்வா. ஓப்பந்தம.....டல்லி -செல்வா  ஓப்பந்தம்.......படித்து பாருங்கள்   

13 minutes ago, Kapithan said:

புரியவில்லை.

இலங்கை அரசாங்கம் சொல்வது எதனையும்  செய்வதில்லை    .......அதாவது தொப்பி பிரட்டுவார்கள்.      ஜெனிவாவில்.       பார்க்க இல்லையா?.  😂🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

 பணடா செல்வா. ஓப்பந்தம.....டல்லி -செல்வா  ஓப்பந்தம்.......படித்து பாருங்கள்   

அப்படியென்றால் திரும்பவும் துவக்கு தூக்குவோமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அப்படியென்றால் திரும்பவும் துவக்கு தூக்குவோமா ? 

ஏன் வேறு வழி இல்லையா?.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kapithan said:

சமஸ்ரி அரசியல் முறைமையை அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால, இன்று எங்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? 

"தக்கன பிளைக்கும்"

அதாவது 

""""கால மாற்றத்திற்கு நாங்கள் இசைவடையாவிட்டால், அந்த மாற்றமே எங்களை அழித்துவிடும்""""

தமிழர்களுக்கு சமஷ்டி கொடுக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால் சிங்கள இனவாதிகளும் புத்த பிக்குகளும் அமைதியாக இருந்திருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

 ஸ்ராலினுக்கு புத்தி எங்கே போனது.

........அவருக்குத்தான்..அது இல்லையே.....கருணாநிதியின் மகனல்லவா

.யூனியன்...பிரதேசமாக வடக்கு கிழக்கு வந்தால்...உதயநிதியை முதலமைச்சராக நியமிக்க இப்பவே அச்சாரம் போடுகிறார்...அதுதான் சொல்கைமை நேரடியாகவே அழைத்து பதவிகொடுத்து..விருப்பமான மசாலாத்தோசையும் கொடுத்து பார்ட்டி வைத்தவர்... சோழியன் குடுமி  சும்மா ஆடுமே...ரணில் எட்டடி பாய்ந்த்தால் ..இசுடாலின் ..தலையை  பிடித்துக்கொண்டு..பதினாறு அடி பாய்வார்..😆

கடுமையாய் விமர்சிக்கூடாதுதானே..அதுதான் ஒரு சின்ன திருத்தம்...தவறு இருந்தால்..பெரியவர்கள்...உரியவர்கள் ..மன்னிக்கவும்....😎எழுத்தில் உணர்ச்சிவசக்கூடாது என்பதை உணர்கின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, alvayan said:

 ஸ்ராலினுக்கு புத்தி எங்கே போனது.

........அவருக்குத்தான்..அது இல்லையே....ஒட்டுத்தலை...வைத்ததே அதை மறைக்கத்தான்.

.யூனியன்...பிரதேசமாக வடக்கு கிழக்கு வந்தால்...உதயநிதியை முதலமைச்சராக நியமிக்க இப்பவே அச்சாரம் போடுகிறார்...அதுதான் சொல்கைமை நேரடியாகவே அழைத்து பதவிகொடுத்து..விருப்பமான மசாலாத்தோசையும் கொடுத்து பார்ட்டி வைத்தவர்... சோழியன் குடுமி (ஓட்டு மயிர் என்றாலும்) சும்மா ஆடுமே...நரி எட்டடி பாய்ந்த்தால் ..இசுடாலின் ..தலையை அமத்திப் பிடித்துக்கொண்டு..பதினாறு அடி பாய்வார்..😆

இது இந்திய ஒன்றிய அரசுக்கு ஆப்பு வைக்கும் செயற்பாடு. 

வடக்கு Kழக்கு + தமிழகம் என்பது ஒன்றிய அரசுக்கான  ஆப்பு. வளர்ந்து வரும் இந்தியாவுக்கு இங்கிருந்துதான் ஆப்பு ஆரம்பிக்கிறது 😀

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்க்க வேண்டியவை பூகோள அரசியல், தனியார் அரசியல்  நலன்கள், பொருளாதார நலன்கள் 

பூகோள  அரசியலில் - அமெரிக்காவின் இந்தோ பசிபிக் மூலோபாயத்தின் ஓர் பக்க அங்கமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

தனிப்பட்ட அரசியல், பொருளாதார நலன்கள் தமிழ்ட்டில் இருக்கிறது. நோர்வே  அல்லது வேறு மேற்கு நாட்டோடு இணைந்து தமிழ்நாட்டில் வர இருக்கும் முதலீட்டின் ஓர் பகுதியாகவும் இருக்கலாம்.    ஏனெனில், நோர்வேயிடம், கடல்,  எண்ணெய் வளம், அதுவும் கடல் படுக்கை கீழ் இருக்கும் என்னை, இயற்கை வாயு, காற்று, மற்றும் நீர் மினுற்றப்பத்தி  திறமை சார் நிபுணத்துவம் இருக்கிறது. 

இதை சொல்ஹெய்மே கோடி காட்டி உள்ளார் தமிழ்நாட்டில் மீள் புதுப்பிக்க தாக்க வளங்கள் உண்டு என்று. 
 
அதாவது, சீனாவின் கச்சத்தீவு காற்று மினுற்றப்பத்தி மற்றும் சீனாவின் பொதுவான கடல் சார் திட்டங்களை கிடப்பில் போட்டு, நிரந்தரமாக சீனாவை  கைவிட வைக்கும் ஹிந்தியை திட்டத்தின் ஓர் பகுதியாகவும் வாய்ப்பு இருக்கிறது. இதிலே, இந்த நியமனம்  பூகோள அரசியலின் ஓர் பக்கமாக உருவாகும் வாய்ப்புகள். 

நோர்வேயை, சொல்ஹெய்மை புலிகளை தற்கலிகமாக தரித்து வைப்பதத்திற்கு வைப்பதற்கு இழுத்து வந்தது கிந்தியா. 

இதை கிந்தியா,  ஐநா. மனித்த உரிமை பேரவை  சொறி சிங்களம் மீதான தீர்மானங்களை நிறுத்தி வைப்பதத்திற்கான முதல் அடி ஆகவும் இருக்கலாம்.  
  
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

இன்னும் எத்தனை காலத்திற்கு எரிக் சொல்கெய்மை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்போம்?

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையின் பங்காளியான (2002 -2009) எரிக்சொல்கைம் தனது துரோகத்துக்கு நீதியைக்காணும் வரை... முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட உயிர்களுக்கான முடிவைக்கூறும்வரை....

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nochchi said:

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமையின் பங்காளியான (2002 -2009) எரிக்சொல்கைம் தனது துரோகத்துக்கு நீதியைக்காணும் வரை... முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட உயிர்களுக்கான முடிவைக்கூறும்வரை....

தMழருக்கான நீதி என்பது உலக்கை தேய்த்து உளிப்பிடியான கதையாக, முள்ளிவாய்க்காலுக்கான நீதியாக வந்து நிற்கிறதோ ?

 எம் மக்களுக்கான அரசியலை வென்றெடுப்பதுதான் எமக்கான நீதி. இதில் கோபதாபத்திற்கும், பழிவாங்கும் உணர்வுக்கும் இடமேயில்லை. காலத்துடன் ஒத்தோடுதல்தான் இதற்கான ஒரே மார்க்கம். 

(அரசியலில் + உலக பொருள்மயமாக்கலில் நீதியும் நேர்மையம் ஒரு பொருளற்ற, தேவைக்கு மட்டும் பாVக்கப்படும் use and throw  சொற்களாகி அதிக காலமாகிவிட்டது)

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2022 at 10:24, nochchi said:

என்னிடமும் கருத்தறிய விரும்பியமைக்குத் தமிழ்சிறியவர்களுக்கு முதலில் நன்றி. நானொன்றும் அவளவு அரசியலறிந்தவனல்ல. எனக்குத் தோன்றியதைப் பகிர்கின்றேன்,

முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கிய நகர்வில் எரிக்சொல்கைம் - ரணில் கூட்டு. முதற்பாகம் தமிழரது படைவலுவை இல்லாமற் செய்ததில் வெற்றி. இரண்டாம் பாகத்திற் தமிழரது அரசியற் கோட்பாட்டு வலுவைச் செயலிழக்கச் செய்யும் நகர்வு. முன்னையதில் தந்தையின் உதவி தேவைப்பட்டது. தற்போது மகனின் உதவியைநாடி பொன்னாடை போர்த்தப்படுகிறது. 

வ‌ண‌க்க‌ம் நொச்சி அண்ணா உங்க‌ளை யாழில் மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி

உங்க‌ளின் க‌ருத்து தான் என் க‌ருத்தும் , இவ‌ன் ஒரு க‌ருத்த‌ ஆடு , இவ‌ன் ம‌ற்றும் ஜ‌ப்பான் நாட்டை சேர்ந்த‌ ஜ‌க்காச்சி வ‌ன்னி தமையுட‌ன் வ‌ந்து ச‌மாதான‌ம் போல் க‌தைச்சு அவ‌ர்க‌ளுட‌ன் பொழுதை க‌ழித்து க‌ட‌சியில் இவ‌ர்க‌ளின் க‌ண் முன்னே எம் இன‌ம் அழியும் போது வேடிக்கை பார்த்த‌வ‌ங்க‌ள் , 

2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்த்த‌து இல்லை ,

ஜ‌ப்பான் நாட்டை சேர்ந்த‌ ஜ‌க்காச்சி த‌லைவ‌ரை 2005 கால‌ப் ப‌குதியில் மீண்டும் ச‌ந்திக்க‌ கேட்க்க‌ த‌லைவ‌ர் ம‌றுத்து விட்டார் ,

இவ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் வேவு பார்க்கும் குள்ள‌ ந‌ரிக‌ள்

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தMழருக்கான நீதி என்பது உலக்கை தேய்த்து உளிப்பிடியான கதையாக, முள்ளிவாய்க்காலுக்கான நீதியாக வந்து நிற்கிறதோ ?

காலவரைபை கவனிக்கவில்லையென்று நினைக்கின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி
எங்களுக்கு எறிக் சொல்கைமை தெரிந்தால் என்ன ,மேற்குலக ராஜதந்திரிகளை தெரிந்தால் என்ன .... ஏன் ஆண்டவனையே தெரிந்தால் என்ன ? 

சகல செல்வாக்கும் பெற்ற கோத்தாபாஜவுக்கு (மக்கள் பலம்,அதிகார பலம் ,பண பலம் ,வல்லராசுகும் சீனாவின் பலம் ) இவ்வளவும் இருந்தும் அவரது ஆட்சியை முழுமையாக முடிக்க முடியாமல் பண்ணியவர்கள் ....எதுவும் இல்லாத எமக்கு ஏதாவது செய்வார்களா? இல்லை.....ஆனால் தமிழர் பிரதேசம் ஒன்று அங்கு இருக்க வேணும் அது எந்த நேரமும் கொந்தளிப்புடன் இருக்க வேணும் என்பது ....மேற்குலக அரசியல் கொள்கை வகுப்பாளர்களின் 
கொள்கை....

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2022 at 12:33, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் நொச்சி அண்ணா உங்க‌ளை யாழில் மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி

உங்க‌ளின் க‌ருத்து தான் என் க‌ருத்தும் , இவ‌ன் ஒரு க‌ருத்த‌ ஆடு , இவ‌ன் ம‌ற்றும் ஜ‌ப்பான் நாட்டை சேர்ந்த‌ ஜ‌க்காச்சி வ‌ன்னி தமையுட‌ன் வ‌ந்து ச‌மாதான‌ம் போல் க‌தைச்சு அவ‌ர்க‌ளுட‌ன் பொழுதை க‌ழித்து க‌ட‌சியில் இவ‌ர்க‌ளின் க‌ண் முன்னே எம் இன‌ம் அழியும் போது வேடிக்கை பார்த்த‌வ‌ங்க‌ள் , 

2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்த்த‌து இல்லை ,

ஜ‌ப்பான் நாட்டை சேர்ந்த‌ ஜ‌க்காச்சி த‌லைவ‌ரை 2005 கால‌ப் ப‌குதியில் மீண்டும் ச‌ந்திக்க‌ கேட்க்க‌ த‌லைவ‌ர் ம‌றுத்து விட்டார் ,

இவ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் வேவு பார்க்கும் குள்ள‌ ந‌ரிக‌ள்

நன்றி!

விடுதலையோடு அபிவிருத்தியையும் கட்டமைத்துவந்த நடைமுறை அரசை அழித்த, அழிக்கத் துணைபோனவர்களில் இவர்கள் இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களை உறவாடிக் கெடுத்தவர்களாவே கொள்ளமுடியும். தமிழினத்தின் குருதிச்சுவடுகள் இவர்களை ஒருநாள் தண்டிக்கும். இன்றுவரை இந்தச் சமாதானத்தூதுவர் சமாதானத்தின்பால் படுகொலைசெய்யப்பட்ட மக்கள் குறித்து ஏதாவது பேசியிருப்பாரா? யப்பானின் சிறப்புத்தூதுவராவது தமிழின அழிப்புக்குறித்து ஒரு வார்த்தை பேசியதுண்டா? அவர் அமைதிக் காலத்தில் எத்தனை கப்பல் இல்மனைட்டை அள்ளியேற்றலாம் என்ற கணக்கோடு ஓடிந்திரிந்தவராதலால் அவர்களுக்கு தமிழரது உயிர்கள் குறித்துத் தெரியப்போவதில்லை. மனித உடலக்குவியல்களில் இருந்து வழியும் குருதியிலும் இலாபம் தேடும் மனிதாபிமான நாடுகளல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2022 at 15:06, தமிழ் சிறி said:

இந்தச் செய்தியைப் பற்றி….. @nedukkalapoovan, @goshan_che, @ரஞ்சித்
@Nathamuni, @பெருமாள், @விசுகு,  @vasee , @பையன்26 @MEERA ,   @Kadancha @Maruthankerny  @satan, @alvayan @ராசவன்னியன் @வாலி  @suvy @புலவர் 
@Sasi_varnam @பாலபத்ர ஓணாண்டி @Eppothum Thamizhan @புங்கையூரன் @putthan  @nochchi
ஆகியோரின் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளோம்.

maha-prabhu-neenga-ingayum-vanthutingala

சொல்கைம் தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.