Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த சுனாமி பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/314131

Posted

ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nunavilan said:

ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலிகள்.

வருடங்கள் கடக்கிறது வலிகளை கடக்க முடியவில்லை 

நினைவஞ்சலிகள் உறவுகளே ( தம்பி , மாமிகள் , குழந்தைகள், நண்பர்கள் ) எங்கள் குடும்ப உறவுகள் மற்றும் அத்தனை உறவுகளுக்கும் நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இருபது ஆண்டுகளாயிற்று.2004 - 2024.🙏

 

 
Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழிப்பேரலையால்  உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனாமி அனர்த்தத்தின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

Published By: VISHNU   26 DEC, 2024 | 07:21 AM

image

இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு நாளை 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன.

சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்த 50 ஆம் இலக்க என்ஜினுடனான தொடருந்து ஒன்றும் வழமைபோல பெரேலியவை சென்றடையவுள்ளதோடு ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குழுவொன்றும் அந்த தொடரூந்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக, இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதுடன் சுமார் 35,000 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/202159

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயற்கை காவு கொண்ட அனைத்து ஆன்மாக்களும் அமைதியில் இளைப்பாறுக, அவர்களின் எதிர்பாரா இழப்பால் துயருற்று வலிகளோடு வாழும் அனைத்து உறவுகளுக்கும் ஆறுதல் கிடைப்பதாக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம். 

இயற்கை அழிவுகள் தவிர்க்க முடியாதவை. அவற்றிற்காக வருந்தி அஞ்சலி செலுத்தும் இதே அரசுகள் தம்மால் வேண்டும் என்றே பலியெடுக்கப்பட்ட மக்களுக்காக வருந்துவதில்லை. அஞ்சலிப்பதில்லை.😭 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கா நினைவுகளுடன் 20 வருடங்களை கடக்கும் சுனாமி!

1057641171.jpeg

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

டிசம்பர் 26, 2004 அன்று சுமாத்ரா பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எனும் இராட்சத அலைகளை உருவாக்கியது.

இந்த அலைகள் தான் எம் உறவுகளை காவுக்கொள்ளப்போகிறது என்பது தெரியாமலேயே அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் கடலில் நிகழ்ந்த மாற்றத்தை காண கரையோரங்களில் ஏராளமான மக்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

அது வரை கண்டிராத அந்த அரிய நிகழ்வை என்வென்று தெரியாமலேயே பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு கால பைரவர் போல் காட்சிக்கொடுத்தது சுனாமி என்னும் ஆழிப்பேரலை. கண்ணிமைக்கும் நொடிக்குள் எல்லாம் அழிந்து போனது.

உயரிழந்து, உடமையிழந்து ஏராளமான மக்கள் நிர்கதியாகினர்.

அதுவரை மானுட பெருமானங்கள் பார்த்து பார்த்து கட்டிவைத்த மாடமாளிகைகள், சொகுசு விடுதிகள், நட்சத்திர பங்களாக்கள் என ஏழை, பணக்கார பாகுபாடு இன்றி அழித்து சென்றது சுனாமி என்னும் இராட்சத அலை.

இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 5000 பேர் காணாமல் போயினர்.

இந்நிலையில் சுனாமி பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களையும், காணாமல்போனவர்களையும் நினைவுக்கூறும் நிகழ்வு டிசம்பர் 26 ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்கப்படுகின்றது.

2012 முதல் இன்றைய தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலகவாழ் மக்களால் மறந்துவிட முடியாது.

நத்தாருக்கு மறுதினம் அனைவரும் தங்களது அன்றாட கடமைகளுக்காக தயாரான நிலையில் காலை 6.58 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்சீற்றத்தினால் ஆசியாவின் 14 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

காலி மாவட்டத்தின் பெரலிய என்ற இடத்தில் பயணித்த ரயிலிருந்த 1,700 பேருடன் சேர்த்து எமது நாட்டில் 35,000 மக்கள் வரை உயிரிழந்தனர்.

இலங்கை ரயில் சேவையில் ஏற்பட்ட விபத்துகளில் அதிகளவான உயிர்களை காவு கொண்ட விபத்து இதுவென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்றைய நாட்களில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிகளவில் பேசப்பட்ட சுனாமி பேபி 81 என்ற குழந்தையையும் நாம் மறந்து விட முடியாது.

யார் இந்த சுனாமி பேபி 81 ?

சுனாமி அன்று கல்முனை ஆதார மருத்துவமனையின் 81ஆம் இலக்க வாட்டில் 2 மாத சிசுவாய் கிடந்தவரே சுனாமி பேபி 81.

இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத குழந்தைக்கு சுனாமி பேபி 81 என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த குழந்தைக்கு 7 தாய்மார்கள் உரிமை கோரினார்கள்.

52 நாட்களின் பின்னர் மரபணு பரிசோதனையின் மூலம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தை சேர்ந்த ஜெயராஜ்இ ஜூனிலதா தம்பதியினரின் குழந்தை அபிலாஷ் என உறுதி செய்யப்பட்டு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

அந்த தருணத்தில் ஆழி பேரலைப் பற்றி அறிந்திராத சுனாமி பேபி 81 என்ற ஜெயராஜ் அபிலாஷ் ஒவ்வொரு வருடமும் தனது வீட்டில் அமைத்துள்ள நினைவுதூபிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்.

இதேவேளை அனைவரையும் எல்லையற்ற சோகத்தில் ஆழ்த்திய ஆழி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சர்வதேச ரீதியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலைப் போன்று மீண்டும் ஒரு முறை இவ்வாறான அனர்த்தம் ஏற்படாதிருக்க எமது செய்திப்பிரிவு பிராத்திக்கின்றது.

அதற்கமைய, சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்பு தினத்திற்கு இணையான பிரதான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதுதவிர, மாவட்ட மட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சுனாமியினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் நினைவுகளில் வசந்தம் செய்திப்பிரிவும் தன்னை இணைத்துக்கொள்கிறது.

 

https://newuthayan.com/article/நீங்கா_நினைவுகளுடன்_20_வருடங்களை_கடக்கும்_சுனாமி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனாமி ஆழிப்பேரலையால் உயிர் நீத்தோரின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் (Photos)

jaffna-tsunaami.jpg

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்த காலங்கள் கடந்துள்ளன.

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி நாட்டில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர்.

கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் உள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரி மலர் தூவி, தீபமேற்றி, உணவுப் பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும் நடைபெற்றன.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் இராஜஜோகினி ஜெயக்குமார், முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் நடராசா தசரத ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20241226-WA0069.jpg

IMG-20241226-WA0079.jpg

IMG-20241226-WA0064.jpg

IMG-20241226-WA0075.jpg

IMG-20241226-WA0054.jpg

IMG-20241226-WA0067.jpg

IMG-20241226-WA0050.jpg

IMG-20241226-WA0048.jpg

IMG-20241226-WA0046.jpg

IMG-20241226-WA0086.jpg

IMG-20241226-WA0034.jpg

IMG-20241226-WA0006.jpg

IMG-20241226-WA0027.jpg

IMG-20241226-WA0036.jpg

வவுனியா

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான 20ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் பிரார்த்தனை நடைபெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நினைவுத்தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட சுனாமி தூபியாகவும் விளங்குகிறது.

தற்போது இந்த நினைவுத்தூபி நகர சபையால் புனர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன்,  செ. திலகநாதன், முத்துமுகமது மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_20241226_091258.jpg

IMG_20241226_091405.jpg

IMG_20241226_091132.jpg

IMG_20241226_091108.jpg

IMG_20241226_091445.jpg

IMG_20241226_091529.jpg

IMG_20241226_092036.jpg

IMG-20241226-WA0024.jpg

IMG_20241226_091213.jpg

 

https://akkinikkunchu.com/?p=304908

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரார்த்தனைகளும், இழந்தவர்களுக்கு ஆறுதலும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தோரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

26 DEC, 2024 | 03:27 PM
image
 

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்த காலங்கள் கடந்துள்ளன. 

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி நாட்டில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர்.

கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. 

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் உள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரி மலர் தூவி, தீபமேற்றி, உணவுப் பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். 

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும் நடைபெற்றன.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் இராஜஜோகினி ஜெயக்குமார், முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் நடராசா தசரத ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20241226-WA0069.jpg

IMG-20241226-WA0079.jpg

IMG-20241226-WA0064.jpg

IMG-20241226-WA0075.jpg

IMG-20241226-WA0054.jpg

IMG-20241226-WA0067.jpg

IMG-20241226-WA0050.jpg

IMG-20241226-WA0048.jpg

IMG-20241226-WA0046.jpg

IMG-20241226-WA0086.jpg

IMG-20241226-WA0034.jpg

IMG-20241226-WA0006.jpg

IMG-20241226-WA0027.jpg

IMG-20241226-WA0036.jpg

வவுனியா

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான 20ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. 

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் பிரார்த்தனை நடைபெற்றது.       

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.    

இந்நினைவுத்தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட சுனாமி தூபியாகவும் விளங்குகிறது.   

தற்போது இந்த நினைவுத்தூபி நகர சபையால் புனர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 

நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன்,  செ. திலகநாதன், முத்துமுகமது மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_20241226_091258.jpg

IMG_20241226_091405.jpg

IMG_20241226_091132.jpg

IMG_20241226_091108.jpg

IMG_20241226_091445.jpg

IMG_20241226_091529.jpg

IMG_20241226_092036.jpg

IMG-20241226-WA0024.jpg

IMG_20241226_091213.jpg

திருகோணமலை - குச்சவெளி 

சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன உறவுகளுக்காக இன்று (26) காலை 09.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வானது திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித்தின் ஆலோசனைக்கமைய பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் T.பிரதீப் தலைமையில் குச்சவெளி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுனாமி அனர்த்தம் தொடர்பான விசேட உரையை குச்சவெளி பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் S.தட்சாயினி மற்றும் பேரழிவின் பாதிப்புகள் மற்றும் பிரார்த்தனைகளை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி A.R.பர்சூக்கும் நிகழ்த்தினர்.

20241226_101925.jpg

20241226_101950.jpg

20241226_102011.jpg

மட்டக்களப்பு 

சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பின் பல பகுதிகளிலும்  நடைபெற்றது.

இலங்கையில் மிக உயரமான சுனாமி நினைவுத்தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டதுமான நாவலடி கிராமத்தில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வில் நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றன. 

அதனை தொடர்ந்து சுனாமி நினைவுத்தூபியில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது விசேட ஆத்மசாந்தி பூஜைகளை தொடர்ந்து, உயிர்நீத்த உறவுகளால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, நாவலடி கடற்கரையிலும் உயிர்நீத்தோரின் ஆத்மசாந்திக்காக விசேடபூஜைகள் நடைபெற்றன. 

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜோசப் மேரி, க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் நினைவுத்தூபியிலும் நினைவேந்தல் உணர்வூர்வுமாக முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நாவலடி, புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-12-26_at_10.35.49.jp

WhatsApp_Image_2024-12-26_at_10.35.50.jp

WhatsApp_Image_2024-12-26_at_10.35.50__1

WhatsApp_Image_2024-12-26_at_10.35.50__2

WhatsApp_Image_2024-12-26_at_10.35.51.jp

WhatsApp_Image_2024-12-26_at_10.35.52.jp

WhatsApp_Image_2024-12-26_at_10.35.53__1

WhatsApp_Image_2024-12-26_at_10.35.53.jp

WhatsApp_Image_2024-12-26_at_10.35.54.jp

WhatsApp_Image_2024-12-26_at_10.35.55__1

WhatsApp_Image_2024-12-26_at_10.35.55.jp

பாசிக்குடா 

பாசிக்குடா கடற்கரையில் உள்ள நினைவுத் தூபியில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதன்போது சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டு இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.

பாசிக்குடா வலம்புரி விளையாட்டுக் கழகத்தினர் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது ஆழிப்பேரலை நினைவஞ்சலி பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்கள் வெளியிடப்பட்டன. இந்த பாடல்களை கவிஞர்களான பாசியூர் மாரிதாசன், ஆதித்திய தயானந்த சர்மா ஆகியோர் இயற்றியிருந்தனர்.

WhatsApp_Image_2024-12-26_at_10.52.52_AM

WhatsApp_Image_2024-12-26_at_10.52.53_AM

WhatsApp_Image_2024-12-26_at_10.52.53_AM

WhatsApp_Image_2024-12-26_at_10.52.53_AM

WhatsApp_Image_2024-12-26_at_10.52.53_AM

WhatsApp_Image_2024-12-26_at_10.52.53_AM

WhatsApp_Image_2024-12-26_at_11.20.45_AM

WhatsApp_Image_2024-12-26_at_11.20.46_AM

மன்னார் 

சுனாமி  அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேசிய பாதுகாப்பு தினம் இன்று (26) மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளும் அவ்வேளை நடைபெற்றன.

இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

DSC_0431.JPG

DSC_0455.JPG

DSC_0429.JPG

DSC_0413.JPG

DSC_0440.JPG

DSC_0444.JPG

DSC_0417.JPG

DSC_0424.JPG

DSC_0420.JPG

DSC_0468.JPG

புத்தளம் 

சுனாமியினால் உயிர்நீர்த்தவர்களுக்கு புத்தளத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஆத்ம ஷாந்தி வேண்டி பிரார்த்தனையும் நடைபெற்றது.

சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், முப்படையினர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வமதத் தலைவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

IMG-20241226-WA0007.jpg

VideoCapture_20241226-115407.jpg

IMG-20241226-WA0010.jpg

VideoCapture_20241226-115427.jpg

VideoCapture_20241226-115415_1.jpg

VideoCapture_20241226-115433.jpg

VideoCapture_20241226-115357.jpg

IMG-20241226-WA0012.jpg

IMG-20241226-WA0003.jpg

IMG-20241226-WA0002.jpg

IMG-20241226-WA0005.jpg

IMG-20241226-WA0006.jpg

கிளிநொச்சி 

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (26) காலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

தேசியக்கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, இ.அர்ச்சுனா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

07.jpg

02.jpg

08.jpg

09.jpg

15.jpg

17.jpg

06.jpg

03.jpg

கண்டி, அஸ்கிரிய பீடம்

அஸ்கிரிய மகா விகாரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பௌத்த சமய சடங்குகள் இன்று (26) நடைபெற்றன. 

கண்டி மாவட்ட அரச அதிபர் இந்திக உடவத்த, உதவி மாவட்ட செயலாளர் நிலூக்கா புலத்வத்த, கண்டி இடர் முகாமைத்துவப் பணிப்பாளர் இந்திக லனவீர ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். 

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வேண்டறுவே உபாதி தேரர் இந்த சமய நிகழ்வுகளை நடத்திவைத்தார். 

Asgiriya-__3_.jpg

Asgiriya-__2_.jpg

Asgiriya-__1_.jpg

https://www.virakesari.lk/article/202181

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

ஆழிப்பேரலையால்  உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

இயற்கையின் செயற்பாடுகளை நிறுத்தவோ, அழிக்கவோ இறைவனைத் தவிர வேறு எவராலும் முடியாது என்றவாறு அனைத்திற்கும் இறைவனைக் காரணமாக்கிவிட்டு அமைதிகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் மனித இனத்தை ஆறுதல்படுத்த இறைவனும் மனிதர்வடிவில் வருவதை மறுக்க முடியாது. சுனாமியால் இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தி பெறவும், இருப்போரும் அமைதி அடையும் வகையில் இறந்த உடல்களை உரியமுறையில். அடக்கம் செய்வதற்கு, ஈழவிடுதலைப் போராளிகள் வடிவில் இலங்கையில் தோன்றியதும் உண்மை.🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலிகள்.

Quote

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் 'சுனாமி பேபி'

26 DEC, 2024 | 11:59 AM
image

ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு “சுனாமி பேபி” அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (26) அஞ்சலி செலுத்தினார்.

pho_sunami_baby__20_.jpeg

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோலகல்லோலப்பட்டது.

இரண்டு மாதமும் ஒரு வாரமும் நிறைந்த குழந்தையாக “சுனாமி பேபி 81” எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக ஜெயராசா அபிலாஷ் விளங்கினார்.

pho_sunami_baby__22_.jpeg

“இந்தக் குழந்தை என்னுடையது”  என  ஒன்பது தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது.

இந்நிலையில், ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனையடுத்து, 52 நாட்களின் பின்னர், ஜெயராசா - யுனித்தலா தம்பதியினரின் புதல்வனே அபிலாஷ் என்பது நிரூபணமாகியது. 

பின்னர் அந்த குழந்தை ஜெயராசா - யுனித்தலா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.

தற்போது 20 வயதுடைய “சுனாமி பேபி” என அறியப்படும் அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக பெற்றோருடன் அஞ்சலி செலுத்தினார்.

pho_sunami_baby__8_.jpeg

https://www.virakesari.lk/article/202187

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூதூரில் சுனாமி நினைவேந்தலும் நினைவுத்தூபி திறப்பும் 

26 DEC, 2024 | 02:32 PM
image

20ஆவது ஆண்டு சுனாமி நினைவுகூரலை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று (26) காலை 9 மணியளவில் மூதூர் இறங்குதுறைமுக வாசலில் சுனாமி நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டது. 

நினைவுத்தூபி திறப்பு நிகழ்வில் 2004.12.26 அன்று இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையினால் மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயிரிழந்தவர்களுக்கான நினைவாஞ்சலியும் மற்றும் சமய அனுஷ்டானங்களும் நடைபெற்றன. 

மேலும், இதன்போது இரத்ததான முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நினைவேந்தலுக்கு முதன்மை அழைப்பாளராக மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டார். 

அத்துடன் அரச நிறுவன பணிப்பாளர்கள், சமூக நிறுவன உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்திருந்தனர். 

மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்கின் புத்தாக்கமான சமூகவியல் செயற்பாடுகள் கவனிக்கத்தக்கது. 

குறிப்பாக இலக்கியம், சமூக அபிவிருத்தி மற்றும் சகவாழ்வு தொடர்பாக மக்களை மையப்படுத்திய வேலைத்திட்டங்களை சமூக நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தி அரச நிறுவனத்தினது சமூகம் சார்ந்த இயங்கியலை உறுதி செய்து வருகிறார். 

20241226_111705.jpg

20241226_111746.jpg

20241226_111718.jpg

20241226_111728.jpg

20241226_111803.jpg

https://www.virakesari.lk/article/202196

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கு கிழக்கில் சுனாமி அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான பணிகளைச் செயல்படுத்த, அரசாங்கமும் விபு இயக்கமும்  Post-Tsunami Operational Management Structure (P-TOMS) என்கின்ற பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டிருந்தனர்.

இந்த  நிர்வாகக் கட்டமைப்புக்கு  அரசியல் அதிகாரம் இருக்கவில்லை . அதே போல P-TOMS  உருப்படியான எந்த நிர்வாக வலிமையும் கொண்டிருக்கவில்லை 

மாறாக, இது மிக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட மிக ஒரு தற்காலிக மனிதாபிமான ஒழுங்கமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது 

ஆழி பேரலையில் உயிர், உடைமைகள், வீடு வாசல்கள், தொழில் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகி நின்ற அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வளிக்கவே 
P-TOMS உருவாக்கப்பட்டது 

ஆனால் ஜேவிபி மேற்படி பொது இணக்கப்பாட்டை தனிநாடு நோக்கிய வரைபடமாக சித்தரித்தது 

நாடு பூராகவும் பெருமெடுப்பில் போராட்டங்களை நடத்தியது 

ஜேவிபியின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் 

குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை இன்றைய அமைச்சர் திரு சுனில் ஹந்துநெத்தி அவர்களே ஒழுங்கமைத்தார் 

ஜேவிபியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு கிளிநொச்சியில் இயங்க தடை விதித்தது 

அதே போல P-TOMS திட்டங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் தடை விதித்தது 

P-TOMS நிதியம் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது 

இதுமாத்திரமின்றி திட்ட முகாமைத்துவ குழு செயற்படவும் அனுமதி மறுக்கப்பட்டது 

இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் P-TOMS முழுமையாக நீர்த்து போக செய்யப்பட்டது 

இயற்கை பேரழிவில் ஒரே நாளில் 6,000 உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களுக்கான மறுவாழ்வு பொறிமுறை முற்றாக முடக்கப்பட்டது 

தீர்ப்பு வெளியாகிய வேளையில், நீதிமன்ற வாயிலில் இன்றைய அமைச்சர்களான திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துநெத்தி, திரு சந்திரசேகரர் உள்ளிட்டோர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஜேவிபி நேர்மையாக அணுகும் என எதிர்பார்க்கும் சில தரப்புகள், இன்றைய ஆழிப்பேரலை நினைவு நாளிலாவது, அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்கு எதிராக ஜேவிபி ஆடிய சன்னதங்கள் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம்.

வரலாறே உண்மையான வழிகாட்டி.

IMG-3016.jpg


நன்றி - முகநூல்

  • Like 1
  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • "தீர்ப்பு"     இந்தியப் பெருங்கடலின் நீலமான அலைகள் மற்றும் இலங்கையின் செழிப்பான பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரமான காலியில், பிரகாசமான கண்களை தன்னகத்தே கொண்ட லோசனி என்ற இளம் பெண்ணும் மற்றும் இரக்கமும் அழகுமுடைய அன்பழகன் என்ற வாலிபனும் ஆழமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களின் காதல் குளிரான கடற்கரை காற்றில், நிலாவின் மங்கலான ஒளியில், பண்டைய காலி கோட்டையின் எதிரொலிக்கும் சுவர்களுக்குள் மலர்ந்தது.   லோசனி ஒரு சிங்கள பெண், அவளது சிரிப்பு பாறைக் கரையில் மோதும் அலைகளைப் போல இனிமையாக இருக்கும். அதில் சிலைத்து சிதைந்து விழுந்தவன் தான் தமிழ் வாலிபன் அன்பழகன். அவளது மழலை பேச்சும், வெண்ணிற வானில் கருநிற நிலவாய் எட்டு திசையும் அசைந்து கவரும் அவளது மையிட்ட கண்களும், பட்டம்பூச்சியின் சிறகுகள் போல கண்ணிமைகள் படபடத்து அவனை அழைக்க, அவனது நெஞ்சம் தன்னை அவளிடம் பறிகொடுத்தது ஒன்றும் புதுமை இல்லை. அமைதியான அவனின் இதயத்தில் இதமான தேவதையாக அவள் குடியேறினாள். பல மாதங்களாக, அவர்களின் காதல் இன எல்லைகளைத் தாண்டி, வளமாக வளர்ந்து வந்தது.   ஆனால், சூரியன் மேற்கில் மறைவது போல, நீண்ட நிழல்களை வீசுவது போல, அவர்களின் வாழ்க்கையின் மீது இருண்ட நிழலைப் போடும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் ஆழமான இன வெறியை கக்கும் பதட்டங்களைத் தூண்டியது. திடீரென்று, அவர்களின் காதல் கதை அரசியல் முரண்பாடு மற்றும் சமூக அமைதியின்மையின் சூறாவளியில் சிக்கியது.   உண்மையில் பக்க சார்பு அற்று தீர்வைத் தருவது - தீர்ப்பு! பொதுவாக ஒரு பிரச்சினை, சிக்கல் முதலியவற்றை தீர்க்கும் வகையில் அதனை ஆராய்ந்து - முடிவு காணும் வகையில் அமையும் நீதியான வழிமுறை - தீர்ப்பு!! என்றாலும் "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" என்ற 1983 இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனாவின் தீர்ப்பு அதற்கு முரணாக ஏற்கனவே எரியும் நிலக்கரியில், இரும்பு காலணிகள் கொண்டு வரப்பட்டு, அவற்றை இடுக்கிகளால் பிடித்து, சிவப்பு-சூடான காலணிகளை தமிழருக்கு முன்னால் வைக்கப்பட்டது போல அது மாறி விட்டது. உயர் வல்லமையான ஜனாதிபதியின் இந்த தீர்ப்பு இப்படி இருக்கும் பட்சத்தில், மற்ற அரச இயந்திரங்களின் செயல்கள், தீர்ப்புக்கள் எப்படி இருந்து இருக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.   ஒரு காலத்தில் துடிப்பான நகரம் இப்போது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது. சிங்களக் கலாச்சாரத்தில் வேரூன்றிய லோசனியின் குடும்பம், அன்பழகனுடனான தங்கள் மகளின் உறவைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தார்கள். அன்பழகனின் குடும்பமும் அதே போல தங்கள் மகனின் பாதுகாப்புக்கு பயந்து, லோசனியிடமிருந்து தூர விலக்குமாறு வற்புறுத்தினார்கள். கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், எந்த குழப்பமும் தங்கள் காதலை வரையறுக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.   "சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. "   பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும்,பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. இப்படித்தான் அவர்களின் அன்பு இருந்தது. அங்கு நாம் மனிதர், நாம் இலங்கையர் என்ற ஒரு எண்ணமே ஓங்கி இருந்தது.   ஆனால் இனங்களுக்கு இடையான பிரிவுகள் ஆழமாக வளர, கஷ்டங்களும் அதிகரித்தன. நண்பர்கள் எதிரிகளாகவும், சந்தைகள் போர்க் களங்களாகவும் மாறத் தொடங்கின. இதனால் அவர்களின் காதல் கூட இலக்காக மாறியது. இந்த சுழலில் சிக்கிய, லோசனியும் அன்பழகனும் ஒருவருக்கொருவர் என்ன செய்வது என்று, ஆளுக்கு ஆள் ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டாலும், அது அவர்களின் கையில் இருந்து விலகுவதை உணராமலும் இருக்கவில்லை. எனினும் தங்கள் காதல் பிளவுகளைக் குறைக்கக்கூடிய ஒரு எதிர்காலத்தை அவர்கள் கனவு கண்டார்கள், அங்கே தங்கள் குழந்தைகள் ஒரு ஐக்கிய நாட்டில் வளரும் என்று நம்பினார்கள்.   எது என்னவாகியினும் ஒரு இனவாத அரசியல் தலைவரின் தலைமையில் பொய் வதந்திகளால் உந்தப்பட்டு, அதனால் கோபத்தாலும் தப்பெண்ணத்தாலும் ஒரு கும்பல் அன்பழகனின் குடும்பத்தாரின் வீட்டைத் தாக்கிய ஒரு மோசமான நிகழ்வு ஒருநாள் வந்தது. அவர்களின் வீட்டைச் சூழ்ந்த தீப்பிழம்புகள் அவர்களின் கனவுகளை எரித்த நெருப்பாகியது. அன்பழகன் தன் உயிருடன், ஆனால் எரிகாயங்களுடன் தப்பித்துக்கொண்டான், லோசனி உடைந்து போனாள், அன்பழகனின் மீதான காதலுக்கும் அவள் குடும்பத்தின் மீதான பொறுப்புக்கும் இடையே அவளது இதயம் துண்டு துண்டாக கிழிந்தது.   1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக, அரசின் தீர்ப்பாக கொண்டுவந்து ஆரம்பித்த அரசியல் நாடகம், இன்று பல அரசியல் தீர்ப்புக்களை கடந்தும், உண்மையான இலங்கை மக்களுக்கு முடிவு இன்றி , தீர்ப்பு இன்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சிரிப்பால் எதிரொலித்த தெருக்கள் இப்போது வலி மற்றும் அநீதியின் அழுகையால் எதிரொலிக்கின்றன. பிரிவினைகள் மிகவும் ஆழமாக வளர்கின்றன, மிக அழகான பிணைப்புகள் கூட இன்று உடைகின்றன. அதில் லோசனி, அன்பழகனின் காதல் படகு, காகித படகாக மாறும் நிலைக்கு புறசூழல்கள் அதிகரிக்கக் தொடங்கின.   அழிவின் மத்தியில், லோசனியும் அன்பழகனும் ஒரு சந்தியில் எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் தவித்தனர். ஒரு காலத்தில் அவர்களின் பலமாக இருந்த காதல் இப்போது ஒரு இனம் சார்ந்த மாயையில் அகப்படுவதை கண்டனர். கனத்த இதயத்துடன், தங்களைச் சுற்றியுள்ள உலகம் இன்று மிகவும் மாறிவிட்டது என்பதை உணர்ந்தார்கள், பல இனவாத உயர் தலைமைகளால் தீர்ப்பு வழங்கி, இன்று உடைந்த ஐக்கியத்தை, அவர்களின் அன்பால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்னும் உண்மையை அறிந்து, அவர்கள் பிரிந்து செல்வதற்கான வேதனையான முடிவை எடுத்தார்கள். அது அவர்களின் காதல் பலவீனமடைந்ததால் அல்ல, மாறாக வெறுப்பு மற்றும் தப்பெண்ணத்தின் சக்திகள் வலுவாக பல பல அரசியல் உயர் தலைவர்களின் தீர்ப்புக்களால் வளர்ந்ததால்! அவர்கள் ஒருவரையொருவர் கடைசியாகப் பார்த்தபோது, இன்றைய வெறுப்பு அரசியலின் மீது காதல் வெற்றி பெறும் எதிர்காலம் விரைவில் வரும் என இருவரும் கிசுகிசுத்தனர். லோசனியும் அன்பழகனும் தங்கள் காதலின் நினைவுகளையும், கடந்த கால பாடங்களையும் சுமந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை காலியிலும் யாழ்ப்பாணத்திலும் இன்று நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.   தீர்ப்பின் நிழல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நீண்ட மற்றும் இருண்ட காலத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவர்கள் துன்பங்களை எதிர்கொள்வதில் அன்பின் சக்திக்கு ஒரு சான்றாக இருந்தனர். காலப்போக்கில், ஒரு புதிய தலைமுறை தோன்றும், தங்கள் தேசத்தின் கதையை மீண்டும் எழுதும், பிளவுகளை சரிசெய்யும் , கடந்த காலத்தின் கடுமையான தீர்ப்புகளால் காதல் இனி ஒருபோதும் கெட்டுவிடாது என்பதை உறுதிப்படுத்தும் என்பதில் இருவரும் இன்னும் மனம் தளரவில்லை, உறுதியாக இருக்கின்றனர்.   "நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு"   இதில்தான் - லோசனியும் அன்பழகனும் தெற்கிலும் வடக்கிலும் இப்பொழுது இருந்தாலும் - இன்னும் உறுதியாக இருக்கிறார்கள். எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும். அதனால் அதற்கான சாதாரண மக்கள் மட்டத்தில் அதற்கான ஆரம்ப வேலைகளை தொடங்கிவிட்டார்கள்.   சொல்லின் நடை தெரிந்து ஒருவர் சொல்லவேண்டும் என்று திருக்குறள் தனது பாடல் 712 இல் ஒரு தீர்ப்பு கூறுகிறது   "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்"   சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும் என்று வள்ளுவர் தீர்ப்பு கூறுகிறார். ஆனால், அவையை பொறுப்படுத்தாமல், கூறிய ஜனாதிபதியின் கூற்றுதான் கொந்தளிப்புக்கும் வன்முறைக்கும் முக்கிய காரணம் ஆயிற்று!   வள்ளுவரின் தீர்ப்பை உணர்ந்து இருந்தால் இன்று இலங்கை ஒரு சிங்கப்பூர்! லோசனி- அன்பழகன் ஒரு குடும்பம்!!   நன்றி   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "சிந்தை சிதறுதடி"     "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!"   "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • "நெஞ்சம் பாடும்  வீரவணக்கம்" "நெஞ்சம் பாடும்  வீரவணக்கம் இன்றோ  வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது  கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?" "மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல   குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி  விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த  நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!"                  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.