Jump to content

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்கள் மரணம்


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

11224835_922753601133488_107857020478747

12120077_922753731133475_793523074736615

12113539_922753654466816_399441315844003

 

நன்றி.. குமாரசாமி அண்ணா !

இறுதி வரையும் வளைந்து கொடுக்காத வரலாறு ஒன்று...விழி மூடி உறங்குகின்றது!

இன்னும் கூட.. அந்தக் கம்பீரத் தோற்றம் .. கொஞ்சம் கூடக் குறைந்து விடவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தேச விடுதலைக்காக பல்லாண்டுகளாக உழைத்து, இராணுவத்தின் தடுப்புமுகாம்களில் பல இன்னல்களைச் சந்தித்து வெளியில் வந்தும் உறுதி குலையாத இலட்சியத்தை தமிழினியின் எழுத்துக்களில் கண்டோம். தமிழர்களின் போராட்ட வரலாற்றை புனைவுகளால் இட்டுக்கட்ட பலர் உள்ள நிலையில் உண்மைகளை வெளிக்கொண்டுவர ஒருவர் உள்ளார் என்ற நம்பிக்கையையும் காலன் புற்றுநோய் என்ற உருவில் வந்து எடுத்துச் சென்றுவிட்டான்.  

வீரவணக்கங்கள் தமிழினி அக்கா!

 

 

Link to comment
Share on other sites

போய்வாருங்கள் தமிழினி. கட்டற்ற கனவுகளுக்கும் சீருடைக் கடமைகளுக்கும் இடையில் நீங்கள் நிமிர்ந்து நின்ற நாட்களில் உங்களை வியந்திருக்கிறேன். "எத்தனை கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் ஒரு தேசபக்தன்" என்று சொல்லுவீர்கள். சிங்கள பெண்ணிய அறிஞரான  கலாநிதி குமாரி ஜெயவர்த்தனாவையே உங்கள் ஆற்றலால் வியக்க வைத்தவரலல்லவா. அழியாத உங்கள் கனவுகளை தாய்நாடு விடுதலையில் மேம்படும் என்ற நம்பிக்கையை விதைத்தே சென்றிருக்கிறீர்கள். தோழி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கிறேன்..- வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

இனித்தமிழ் சாகாதென்றிருந்ததோர் ஈழத்தார்துணை

பனித்துளிக்கு பகலவனாய் பகைவனுக்குவந்துதித்த ஏறு

கனித் தமிழ் துயர் துடைக்க மலர்ந்த ஆறாம்அணி நகை

வழித்துணையின்றி நீ தனி வழி சென்றாயோ தமிழினி.

 

இறபென்ற இழப்பின் உண்மையை உணரவைத்த நங்கை,  தமீழத்தில் உன்வருக்கைக்காக காத்திருப்போம். 

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறையில் கம்பீரமாக பேசக்கூடிய ஒரு சிறந்த பேச்சாளர்களில் தமிழினியும் ஒருவர். இவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரது விடுதலையை துரிதப்படுத்தி விரைவாக அவர் வெளியே வர உதவியது கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.

இந்த உண்மையினை பலரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை இதில் தெரிவிக்கின்றேன்.

கீழ்கண்ட கட்டுரை கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ்மிரர் பத்திரிகையில் வெளிவந்தது. மறக்காது ஒவ்வொருவரும் படியுங்கள்.

போய் வா போர் மகளே!

Link to comment
Share on other sites

தமிழினி அக்கா எனது அக்காவின் நண்பர் (  வெள்ளை சேட் அணிந்து இருப்பவர் மற்றும் கறுப்பு நிற உடை அணிந்துள்ளவர் மேஜர் ஆவர்த்தனா அல்லது சுதர்மினா வற்றாப்பளை முல்லைத்தீவு 2009 இல் வீரச்சாவு)

2vlmc75.jpg

rsrfpt.jpg

Link to comment
Share on other sites

வீர வணக்கம்.....

Link to comment
Share on other sites

வீர வணக்கம் சகோதரி!

புனர்வாழ்வு என்ற பெயரில் , திட்டமிட்டு கதிர்வீச்சுக்குள்ளாக்க பட்டுள்ளதாகவே தோணுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மை, ஆனால் எமது இளையோரிடமோ அல்லது எம்போன்றோரிடமோ கொண்டு சென்று சேர்த்தல் இலகுவானதல்ல. தமிழகக் கதாநாயகக் கவர்ச்சிச்  திரைப்பட நுகர்வுகளுள் அமிழ்ந்துவிட்ட சூழலில் இதுபோன்ற முயற்சிகளைத் தமிழ்ப்பரப்பிலே நிறுவனப்பட்ட அமைப்புகள் ஊடாக விழிப்புநிலையேற்படுத்துதல் தேவைப்படுகிறது. அதற்கு யாழிலும் புலத்திலுமாகப் பல அண்மைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. இணைப்புக்கு நன்றி!  
    • பாசிக்குடா கடற்கரையில் அநீதியான முறையில் பணம் அறவீடு Vhg மே 11, 2024 மட்டக்களப்பு  பாசிக்குடா கடற்கரை வளாகத்தில் அநீதியான முறையில் கட்டணம் அறவிடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா  கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளாகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கவும் மற்றும் குளிக்கவும் என பல்வேறு விடயங்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் தமது விடுமுறை நாட்களில் வருகை தருகின்றனர். இருப்பினும், குறித்த கடற்கரையை அடைவதற்கு இடிபாடுள்ள, குழியும் பள்ளமும் நிறைந்த, கரடுமுரடான பாதையொன்றே காணப்படுகின்றது.  மேலும், கடற்கரையை சென்றடைவதற்குள் நான்கு மர்ம நபர்கள், பற்றுச்சீட்டு ஒன்றை வலுக்கட்டாயமாக கொடுத்து சுற்றுலாப் பயணிகள் இடமிருந்து பணம் பெறுவதாக கூறப்படுகின்றது.   அதேநேரம், பற்றுச்சீட்டில் திகதி, வாகன இலக்கம் என எதுவும் இருக்காது எனவும் குறைந்த பட்சம் அதனை யார் தருகிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வ சீல் கையொப்பம் கூட இருக்காது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  இருப்பினும் குறித்த பற்றுச்சீட்டில் மேலேயும், கீழேயும் "கோறளைப்பற்று பிரதேச சபை" என எழுதப்பட்டிருப்பதாகவும் வாகன பாதுகாப்போ, வாகன நிறுத்துமிட ஒழுங்கமைப்போ அல்லது வாகனத்தை எடுப்பதற்கான எவ்வித ஒத்துழைப்போ கட்டணம் அறவிடுபவர்களிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைப்பதில்லை. இந்நிலையில், குறித்த பற்றுச்சீட்டை வழங்குவது யார்?  குறித்த கட்டணத்தை பயணிகளிடம் அறவிடுவற்கு இவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியது யார்? அறவிடப்படும் பணம் எங்கே செல்கின்றது?  தனியார் ஒருவர் குறித்த பற்றுச்சீட்டை வழங்குவாராயின் குறித்த பிரதேச சபையின் பெயரினை எவ்வாறு பற்றுச்சீட்டில் பயன்படுத்த முடியும்? போன்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.  அதேவேளை, இயற்கையை இரசிக்க வருபவர்களிடம் அநீதியான முறையில் பணத்தை பெறும் பிரதேச சபை, கடற்கரைக்கு செல்லும் பாதையை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் ஏன் மக்களுக்காக புணரமைத்து அபிவிருத்தி செய்து தரமுடியாது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். ராசிக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாழைச்சேனை பிரதேச சபை இந்த விடயத்தில் பராமுகமாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.   https://www.battinatham.com/2024/05/blog-post_18.html
    • யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்! adminMay 12, 2024 யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. முன்னதாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகை சுடரும் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் , வீதியில் சென்ற மக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி ஆரம்பமானது. குறித்த ஊர்திப் பவனி ஆனது, நாளை திங்கட் கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும். முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.   https://globaltamilnews.net/2024/202759/
    • மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை! adminMay 12, 2024 பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.05.24)  காலை சிவசேனையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்டவர்களுடன் சிவசேனை அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   https://globaltamilnews.net/2024/202755/
    • ரஷ்யா – உக்ரேன் போரில்  17 இலங்கையர்கள் பலி! adminMay 12, 2024 ரஷ்யா – உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, சனிக்கிழமை (11.05.24) ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பதவிய பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தன, ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக பெப்ரவரி 12 அன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டார். மார்ச் 29 அன்று அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாக தொடர்பு கொண்டார், அதன்பிறகு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறே, ஓய்வுபெற்ற அதிகாரியான மதவாச்சியை சேர்ந்த பிரதீப் சந்தனவும் பெப்ரவரி 12ஆம் திகதி ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மார்ச் 29ஆம் திகதி அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாகத் தொடர்பு கொண்டார் எனவும் அதன்பிறகு எந்த அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.   https://globaltamilnews.net/2024/202751/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.