Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாந்தி.....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வந்தனா கொஞ்சம் நில்லுங்கோ, இன்று எனக்கொரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்கோ. நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்குறீங்கள் சந்திரன். பிள்ளைகள் பள்ளிகூடத்தால வந்திருப்பினம், இனித்தான் நான் போய் சமைக்க வேண்டும். வந்தனா எத்தனை நாட்கள் நாங்கள் இந்தக் கந்தோரில இரவுப் பணியாற்றி இருக்கிறோம். என்னுடைய ஆசையை நான் கூறிவிட்டேன் , நீங்கள்தான் பிடிகொடுக்காமல் நழுவுறீங்கள். 

என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கோ சந்திரன். தெரியும் வந்தனா, உங்களுக்கு இந்த வேலைகூட நான்தானே வாங்கித் தந்தனான். வாறகிழமை 30ம் தேதி விடுமுறையும் கூட ஒருமுறை என்ன சொல்லுங்கோ. என்னால் வரமுடியாது சந்திரன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம்.  என்ன என்ன  உதவி, ஆசையாய் இருக்கு கெதியாய் சொல்லுங்கோ. சும்மா பறக்காதையுங்கோ சொல்லுறன்.

அன்று மாலை நாலு மணிக்கு பூங்கா வீதிக்கு  வாங்கோ.நான் எனது சினேகிதியை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுறன். பிறகு என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது சரியா. சற்று நேரம் யோசித்த சந்திரன் சரி என்று விட்டு கண்ணடித்துக் கொண்டே செல்கிறான்.

30ம் தேதி மாலை 3:58:40 க்கு சந்திரன் காரில் வந்து இறங்கி வாரான். அவனுக்கு முன்னதாகவே வந்தனா வந்து காத்திருக்கின்றாள். அருகில் ஒருத்தர் வண்டிலில் இளநி வித்துக் கொண்டு இருக்கின்றார். சந்திரன் இளநி குடிப்பமா என்று கேட்க்கிறான். வந்தனாவும் ம்... என்று சொல்லிவிட்டு காசை எடுக்க அவன் மறுத்துவிட்டு இரண்டு இளநி வாங்கி இருவரும் குடித்தனர். எங்கே அவ இன்னும் வரவில்லையா...! இல்லை இப்ப வந்திடுவா, இன்று வேலை கூட போலிருக்கு. 

அருகே ஒரு வாடகை வண்டி வந்து நின்றது. அதில் இருந்து நாகரிக யுவதி இறங்கி வந்தாள். வா சினேகா உனக்காகத்தான் காத்திருக்கிறோம். அவள் சந்திரன் அருகே வந்து நிக்க  கண்களில் நீளமாய் கீறிய மையும், கன்னத்தில் சற்று தூக்கலாய் பூசிய பவுடரும், உதட்டில் அடர்த்தியான சிகப்பு சாயமும் அவளது வேலைக்கு விளம்பரமாய் இருந்தன.அத்துடன் அவளிடம் இருந்து வீசிய மட்டமான  நறுமணம் அவனது நாசிக்குள் புகுந்து இளநியுடன் இதழ்பதிக்க வயிற்றில் இருந்த இளநி வாய்க்கு மீண்டு வாந்தியாய் வெளியேறவும் இவள் அவள்தான் என மூளை அறிவுறுத்தவும் சரியாய் இருந்தது.

வந்தனா நீ என்னை அவமானப் படுத்தி விட்டாய். ஏன் இந்தப் பிள்ளைக்கு என்ன குறை, நிறமாகவும், அழகாகவும், அலங்காரமாகத்தானே இருக்கிறாள்.நீ கூப்பிடும் இடத்துக்கு உன்னோடு அவள் வருவாள். நீ பணம் கூட குடுக்க வேண்டாம். நான் குடுத்து விட்டேன். என்ன சொல்லுறாய் நீ .மனசுக்கு பிடிக்காத ஒன்றை எப்படி ஏற்பது. வாந்தி வந்ததை பார்த்தனிதானே.

அன்று நீ என்னை அழைத்ததும் எனக்கும் அப்பிடித்தான் வாந்தி வந்தது. அடக்கிக் கொண்டேன். நான் இரு பிள்ளைகளுக்கு தாய். அன்பான கணவன்.எங்களை பற்றி தெரிந்தும் நீங்கள் அப்படிக் கேட்டது தப்பில்லையா.மன்னித்து விடுங்கோ வந்தனா.சந்திரன் அட்டமியாய் குறுகி நிக்க , இது எதுவும் புரியாத அந்தப் பெண் வாடகைக்கு காரின் கதவைத் திறந்துவிட்டு முன்னால ஏறுறீங்களா, பின்னால ஏறுறீங்களா என்றாள் அப்பாவியாய்.

ஒரு நிமிஷம் திகைத்த இருவரும் அடுத்தநொடி எல்லாவற்றையும் மறந்து சிரித்துக் கொண்டார்கள்.....!  tw_blush:

இது ஒரு சுய ஆக்கம். இதுக்கு காப்புரிமை, மோதிரஉரிமை எதுவும் கிடையாது. 

ஒரு அரும்பெரும் இலக்கியம் மலரக்  காரணமான, உந்துசக்தியான நண்பர் இராசவன்னியனுக்கு சமர்ப்பணம்.

இங்கே சொந்த 'ஆக்கங்கள்', 'ஆக்கங்கள்' என குறிப்பிடுவது, கவிதைகளையா.. இது ராசவன்னியனின் கேள்வி....!

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா,கொசிப் ஒன்று கேள்விப்பட்டு அதை கதையாக்கிட்டார்...நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கோ சுவியண்ணா:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு சிறுகதை, சுவியர்!

எனினும் காமம் என்பது...கரையில்லாதது,கண்ணில்லாதது!

இரத்த வாடையும், வேர்வையும் நிறைந்த போர்ச் சூழல்களிலும் கூட ..காமம் அருவருப்பைக் கணக்கிலெடுப்பதில்லை!

குற்றுயிராய்...குலயுயிராய்க் கிடந்த அபலைகளைக் கூடக் காமம் விட்டு வைப்பதில்லை!

உங்கட கதாநாயகன்  சந்திரன்... கொஞ்சம்..வசதியாய் வளர்ந்தவர் போல கிடக்குது!

கவனிப்பாரற்றுக்க கிடந்த கதை கதையாம் பகுதியை உசுப்பி  விட்டீர்கள்! தொடருங்கள்!

அவரவர் சுய ஆக்கங்கள் குறைகின்றது என்று விவாதித்துக் கொண்டு இருக்க, சுவி அண்ணா..."இந்தா பிடியுங்கோ நான்  தாறன்" என்று கொண்டு வந்து விட்டார்

அது சரி அந்த வாடகை கார் எந்த கம்பெனி?

4 hours ago, suvy said:

இங்கே சொந்த 'ஆக்கங்கள்', 'ஆக்கங்கள்' என குறிப்பிடுவது, கவிதைகளையா.. இது ராசவன்னியனின் கேள்வி....!

ரயில் கடவையும் சிகரெட்டும் 

7854.png

இன்று எனது நண்பனுடன் ஒரு ஐம்பது கிலோமீட்டராவது மோட்டார் சைக்கிளில் பயணித்திருப்பேன். வீட்டிற்கு கிட்ட வந்ததும் ஒரு ரயில் கடவை. அதுவும் அந்தநேரம் பார்த்து டிங் டிங் எண்டு பூட்டுது. நானோ இறங்கி விட்டேன். நான் இறங்கியதை அறியாத நண்பனும் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மோட்டார்சைக்கிளுடன் நெளிந்து குனிந்து அடுத்தப்பக்கம் போட்டான். அவன் போகும்போது என்னவோ கதைத்துக்கொண்டே போனான். மறுபக்கம் போனவன் திரும்பி பார்த்திருக்கிறான் போல. என்னை பின்னால காணாது வெலவெளுத்துப்போய் திரும்பி பார்க்கையில் நான் மறு பக்கத்தில். 

ட்ரெயின் இப்ப வராது வா எண்டான் - நானும் இல்லை ட்ரைனை பாத்திட்டு வாறன் எண்டுட்டு ஒரு சிகரெட்டை பத்தினேன்..

மெயில் ட்ரெயின் சட புட எண்டே கடந்தது.

மற்ற பக்கம் போன என்னை பாத்து ஒரு கேள்வி கேட்டான்

"டேய் உனக்கு வீடு பக்கத்திலதானே இருக்கு அங்கே போய் சிகரெட் பிடிக்கவேண்டியதுதானே, எதுக்கு நடுவழியில் குதிச்சனி"

சிகரெட்டுக்கு நன்றி சொல்லியபடி மோட்டார் சைக்கிளில் மறுபடியும் குந்தினேன்.

பி கு : ரயில் கடவையை கடக்கையில் பின்னால் இருப்பவனையே மறந்து விடுகிறோமென்றால் - நாம் நம் நிலையில் இல்லை.
            
                   ரயில் போகட்டும் நாம் அப்புறம் போகலாம் 
                   இல்லை நாமும் ரயிலுடன் சேர்ந்தே (மேல) போகலாம் 

இந்த பதிவு சுவியரின் திரியில் மூக்கை நுழைப்பதற்காக இல்லை. எத்தனையோ முறை எழுதுங்கள் என்றாலும் எழுத மாட்டேன் என்று அடம்பிடித்த சுவியருக்கு ஒரு உறுதுணையாக எனது இன்றைய அனுபவப் பதிவு ஒன்று.
 
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

.. ஒரு அரும்பெரும் இலக்கியம் மலரக்  காரணமான, உந்துசக்தியான நண்பர் இராசவன்னியனுக்கு சமர்ப்பணம்.

இங்கே சொந்த 'ஆக்கங்கள்', 'ஆக்கங்கள்' என குறிப்பிடுவது, கவிதைகளையா.. இது ராசவன்னியனின் கேள்வி....!

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..! heureux071.gif

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

----

அருகே ஒரு வாடகை வண்டி வந்து நின்றது. அதில் இருந்து நாகரிக யுவதி இறங்கி வந்தாள். வா சினேகா உனக்காகத்தான் காத்திருக்கிறோம். அவள் சந்திரன் அருகே வந்து நிக்க  கண்களில் நீளமாய் கீறிய மையும், கன்னத்தில் சற்று தூக்கலாய் பூசிய பவுடரும், உதட்டில் அடர்த்தியான சிகப்பு சாயமும் அவளது வேலைக்கு விளம்பரமாய் இருந்தன.அத்துடன் அவளிடம் இருந்து வீசிய மட்டமான  நறுமணம் அவனது நாசிக்குள் புகுந்து இளநியுடன் இதழ்பதிக்க வயிற்றில் இருந்த இளநி வாய்க்கு மீண்டு வாந்தியாய் வெளியேறவும் இவள் அவள்தான் என மூளை அறிவுறுத்தவும் சரியாய் இருந்தது.

------

ஒரு நிமிஷம் திகைத்த இருவரும் அடுத்தநொடி எல்லாவற்றையும் மறந்து சிரித்துக் கொண்டார்கள்.....!  tw_blush:

இது ஒரு சுய ஆக்கம். இதுக்கு காப்புரிமை, மோதிரஉரிமை எதுவும் கிடையாது. 

ஒரு அரும்பெரும் இலக்கியம் மலரக்  காரணமான, உந்துசக்தியான நண்பர் இராசவன்னியனுக்கு சமர்ப்பணம்.

நன்றாக அவதானித்து... கற்பனையை கலந்து, எழுதியுள்ளீர்கள் சுவி.
கடைசியில் எழுதிய காப்புரிமை, மோதிர உரிமையை வாசித்து, சிரிப்பை அடக்க முடியவில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கறுத்த விரல்லுக்கு எனது கருத்தை காணிக்கையாக்குகிறேன் பல  தனி நபர்களின் சுய ஆக்கங்களுக்கு  ஒரு கருத்து அது ஏற்று கொள்ள கூடியதாகட்டும் , அல்லது மாற்றுக்கருத்தாகட்டும் எதையாவது எழுதினால்  தான் அடுத்த ஆக்கத்தில்  அதைமாற்றி இன்னும் சிறப்பான தாக எழுத முடியும் ஆனால் அது அற்று போனது பல ஆண்டுகளாக 

பல சுய ஆக்கங்கள் எழுதுபவர்கள் தாங்கள் விடும் பிழயை மற்றவர் குத்திக்காட்டுவதால் என்னவோ மனஸ்தாபங்கள் வருவதால் என்னவோ யாழில் எழுத விரும்புவதில்லை  அனைவருக்கும் ஒன்று குத்திக்காட்ட வேண்டாம் சுட்டிக்காடுங்கள் நன்றி  ஆனால் ஒரு சிலர் அதை ஏற்றுக்கொள்வதாயில்லை  என்னையும் நீ பிழை பிடிக்கிறாயா என்ற நிலைப்பாடு என்பதை விட ஒரு கர்வம் தோன்றுவதால் எழுத முடியவில்லை சிலரால் உதாரணம் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது  .........................................

பதிவுக்கு நன்றி அம்மாச்சி   ஆசைகளை  அடக்கி வாழவேண்டும் மனிதன்   மிருகங்கள் தான் தாய் எது தந்தையெது என்று தெரியாமல் உடலுறவு கொள்ள நினைக்கும் தற்போது மனிதன் கூட அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் என்பதை  சுருக்கமாக கூறியுள்ள்ளீர்கள் 
பாராட்டுக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இச்சையுடன் பச்சை இட்ட உறவுகளுக்கும், பட்சமுடன் பதிவிட்ட பண்பாளருக்கும் சுவியின் பணிவான நன்றிகள்.....!tw_blush:

எச்சரிக்கை : அப்பப்ப உங்கள் பொறுமையை சோதிப்பதுபோல் ஏடாகூடமாய் எதாவது வரும். தாங்கிக்க தயாராகவும்.....!  :206_cat:

கதை அந்தமாதிரி சுவி அண்ணா..:)

நிழலி கேட்ட கேள்விக்கும் பதிலை சொல்லிவிடுங்கோ..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லதோர் கதை சுவியண்ணா.

சினேகாவை சில வரிகளிலேயே வர்ணித்திருந்தீர்கள், ஆனால் வந்தனாவின் உயரம், நிறம், பருமன் கூடத் தெரியவில்லை. சந்திரன் போன்றவர்கள் எப்படியான ரசனையுள்ளவர்கள் என்பதை நாங்களும் அறியவேண்டுமல்லவா!

ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

காமம் இயற்கையானது. இருந்தும் இயற்கையை விட அதிகமாக சமநிலை தவறக்கூடியது. மனைவி கணவன் குழந்தை அயலவர் பக்கத்துவீட்டார் என்ன நினைப்பார்கள் ஊர் என்ன நினைக்கும் மானம் மரியாதை கொளரவம் பயம் என பல காரணங்களால் சமநிலை பேணப்படுகின்றது. திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ பிறிதொருவருடன் உடல் ரீதியாக தொடர்பு ஏற்படுகையில் அத்தொடர்பில் இருந்து ஒரு போலியான வாழ்வு தொடங்கும். அந்த ரகசியத்தை வாழ்நாள் முழுக்க காப்பாற்ற அதிகமான சக்தி தேவைப்படும். ஒருவருக்கொருவர் உண்மையற்றவர்கள் என்ற நிலையில் வாழ்ந்தாகவேண்டும். நிரந்தரமான ஒரு குற்ற உணர்வுடன் வாழ்வு தொடர நேரிடும். அது வாந்தியை விட மோசமான ஒரு நிலைதான். இருந்து ஒவ்வொருவருடைய வாழக்கைப் பின்னணி மற்றும் மன நிலையை பொறுத்து இவைகளின் தாக்கம் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியண்ணா..?

நாம ஏதாச்சும் எழுதி போட்டால் அந்தப் பக்கமே ஒரு சனமும் வாறதில்ல.நான் எழுதி விட்ட கருத்தோடையே நாட்கணக்காக கிடப்பதை நிறைய விடையங்களில் அவதானித்தபடியால் தொடர்ச்சியாக எதை செய்யும் ஆர்வமும் இல்லாது போய் விட்டது..சில நேரங்களில் நாங்களே பொல்லைக் கொடுத்து அடி வாங்கிறோமோ என்ற எண்ணப்பாடு...?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சுவி, சொந்த ஆக்கங்கள் எப்போதும் ரசிக்க கூடியவை, விதை விதைத்து பயிர் வளர்த்து  அதன் வளர்ச்சியை தினமும் பார்த்து பேருவகை அடைவதுக்கு ஈடாகும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24.2.2017 at 5:50 PM, suvy said:

இது எதுவும் புரியாத அந்தப் பெண் வாடகைக்கு காரின் கதவைத் திறந்துவிட்டு முன்னால ஏறுறீங்களா, பின்னால ஏறுறீங்களா என்றாள் அப்பாவியாய்.

சுவியர்! தான் ஒரு பேய்க்காய் எண்டதை அமசடக்காய் நிரூபிச்சிட்டார் tw_thumbsup:

உங்கடை எழுத்துக்களை இன்னும் எதிர்பார்க்கிறன்.:)

  • கருத்துக்கள உறவுகள்
On 24/02/2017 at 4:50 PM, suvy said:

பெண் வாடகைக்கு காரின் கதவைத் திறந்துவிட்டு முன்னால ஏறுறீங்களா, பின்னால ஏறுறீங்களா என்றாள் அப்பாவியாய்.

ஏதோ ஒரு பக்கம் ஏறினால் சரிதானே:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சண்டமாருதன் said:

ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

காமம் இயற்கையானது. இருந்தும் இயற்கையை விட அதிகமாக சமநிலை தவறக்கூடியது. மனைவி கணவன் குழந்தை அயலவர் பக்கத்துவீட்டார் என்ன நினைப்பார்கள் ஊர் என்ன நினைக்கும் மானம் மரியாதை கொளரவம் பயம் என பல காரணங்களால் சமநிலை பேணப்படுகின்றது. திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ பிறிதொருவருடன் உடல் ரீதியாக தொடர்பு ஏற்படுகையில் அத்தொடர்பில் இருந்து ஒரு போலியான வாழ்வு தொடங்கும். அந்த ரகசியத்தை வாழ்நாள் முழுக்க காப்பாற்ற அதிகமான சக்தி தேவைப்படும். ஒருவருக்கொருவர் உண்மையற்றவர்கள் என்ற நிலையில் வாழ்ந்தாகவேண்டும். நிரந்தரமான ஒரு குற்ற உணர்வுடன் வாழ்வு தொடர நேரிடும். அது வாந்தியை விட மோசமான ஒரு நிலைதான். இருந்து ஒவ்வொருவருடைய வாழக்கைப் பின்னணி மற்றும் மன நிலையை பொறுத்து இவைகளின் தாக்கம் இருக்கும். 

பச்சை முடிச்சு போயிட்டே.....

2 hours ago, நந்தன் said:

ஏதோ ஒரு பக்கம் ஏறினால் சரிதானே:grin:

பின்னால் ஏறினால் விசயத்தை காரில ஸ்டார் பண்ணலாம் ,ரூம் காசு மிச்சம் என்று நினைத்திருக்கலாம் அந்த தொழிலாளி....

15 hours ago, suvy said:

இச்சையுடன் பச்சை இட்ட உறவுகளுக்கும், பட்சமுடன் பதிவிட்ட பண்பாளருக்கும் சுவியின் பணிவான நன்றிகள்.....!tw_blush:

எச்சரிக்கை : அப்பப்ப உங்கள் பொறுமையை சோதிப்பதுபோல் ஏடாகூடமாய் எதாவது வரும். தாங்கிக்க தயாராகவும்.....!  :206_cat:

சுவி கதை அந்தமாதிரி தூக்கலாயிருக்கு....உங்களிடமிருந்து மேலும் பல ஆக்கங்களை எதிர் பார்க்கின்றோம்....பச்சை கலாஸ்(முடிந்துவிட்டது)

  • கருத்துக்கள உறவுகள்

மணி ரத்தினத்தின் படம் இரு தடவைகள் பார்த்தா தான் புரியும்.

அதே மாதிரி தான் சுவியரின் கதையும் இரண்டாம் தரம் வாசிக்கும் போது தான் புரிந்தது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா வாவ் இவ்வளவு இலகுவாக எளிமையாக பெரிய விடயத்தை சொல்லிவிட்டீர்கள். எங்கேய்யா இப்படியான திறமைகளை மறைத்து வைத்திருக்கிறீர்கள்?..... நல்ல சரக்கு .....ஊப்ஸ்  மேல உள்ள கதையை வாசித்த பாதிப்பு கண்டு கொள்ளாதேங்கோ...., கதையெழுத நல்ல திறமை இருக்கிறது வீணாக்கிப்போடாதேங்கோ. தொடர்ந்து எழுதுங்கள்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/02/2017 at 7:01 PM, ரதி said:

சுவியண்ணா,கொசிப் ஒன்று கேள்விப்பட்டு அதை கதையாக்கிட்டார்...நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கோ சுவியண்ணா:rolleyes:

வருகைக்கு நன்றி சகோதரி, இது கதையென்று நினைத்து எழுதவில்லை. நண்பரின் கேள்விக்கு ஜாலியாய் எழுதியது.....!  tw_blush:

On 24/02/2017 at 9:11 PM, ஜீவன் சிவா said:

:grin::grin::grin:

1ka9de.jpg

அவ்வளவு அதிகமில்லை ஜீவன். சுமார் இருபத்தைந்து இருக்கும். சுனாமி தாக்கியது மாதிரி இருக்கு....! tw_blush:

On 24/02/2017 at 10:11 PM, புங்கையூரன் said:

அருமையான ஒரு சிறுகதை, சுவியர்!

எனினும் காமம் என்பது...கரையில்லாதது,கண்ணில்லாதது!

இரத்த வாடையும், வேர்வையும் நிறைந்த போர்ச் சூழல்களிலும் கூட ..காமம் அருவருப்பைக் கணக்கிலெடுப்பதில்லை!

குற்றுயிராய்...குலயுயிராய்க் கிடந்த அபலைகளைக் கூடக் காமம் விட்டு வைப்பதில்லை!

உங்கட கதாநாயகன்  சந்திரன்... கொஞ்சம்..வசதியாய் வளர்ந்தவர் போல கிடக்குது!

கவனிப்பாரற்றுக்க கிடந்த கதை கதையாம் பகுதியை உசுப்பி  விட்டீர்கள்! தொடருங்கள்!

 அதெண்டால் உண்மைதான் புங்கை, இன்றைய யாழ் காளத்தின் வீறு நடையைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கு.....! tw_blush:

On 24/02/2017 at 10:40 PM, நிழலி said:

அவரவர் சுய ஆக்கங்கள் குறைகின்றது என்று விவாதித்துக் கொண்டு இருக்க, சுவி அண்ணா..."இந்தா பிடியுங்கோ நான்  தாறன்" என்று கொண்டு வந்து விட்டார்

அது சரி அந்த வாடகை கார் எந்த கம்பெனி?

சுப்பிரமணியம் பூங்காவின் அருகில் அடிக்கடி வந்து போகுமே நீங்கள் கவனிக்கவில்லையா....!  tw_blush:

On 24/02/2017 at 10:48 PM, ஜீவன் சிவா said:

ரயில் கடவையும் சிகரெட்டும் 

7854.png

இன்று எனது நண்பனுடன் ஒரு ஐம்பது கிலோமீட்டராவது மோட்டார் சைக்கிளில் பயணித்திருப்பேன். வீட்டிற்கு கிட்ட வந்ததும் ஒரு ரயில் கடவை. அதுவும் அந்தநேரம் பார்த்து டிங் டிங் எண்டு பூட்டுது. நானோ இறங்கி விட்டேன். நான் இறங்கியதை அறியாத நண்பனும் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மோட்டார்சைக்கிளுடன் நெளிந்து குனிந்து அடுத்தப்பக்கம் போட்டான். அவன் போகும்போது என்னவோ கதைத்துக்கொண்டே போனான். மறுபக்கம் போனவன் திரும்பி பார்த்திருக்கிறான் போல. என்னை பின்னால காணாது வெலவெளுத்துப்போய் திரும்பி பார்க்கையில் நான் மறு பக்கத்தில். 

ட்ரெயின் இப்ப வராது வா எண்டான் - நானும் இல்லை ட்ரைனை பாத்திட்டு வாறன் எண்டுட்டு ஒரு சிகரெட்டை பத்தினேன்..

மெயில் ட்ரெயின் சட புட எண்டே கடந்தது.

மற்ற பக்கம் போன என்னை பாத்து ஒரு கேள்வி கேட்டான்

"டேய் உனக்கு வீடு பக்கத்திலதானே இருக்கு அங்கே போய் சிகரெட் பிடிக்கவேண்டியதுதானே, எதுக்கு நடுவழியில் குதிச்சனி"

சிகரெட்டுக்கு நன்றி சொல்லியபடி மோட்டார் சைக்கிளில் மறுபடியும் குந்தினேன்.

பி கு : ரயில் கடவையை கடக்கையில் பின்னால் இருப்பவனையே மறந்து விடுகிறோமென்றால் - நாம் நம் நிலையில் இல்லை.
            
                   ரயில் போகட்டும் நாம் அப்புறம் போகலாம் 
                   இல்லை நாமும் ரயிலுடன் சேர்ந்தே (மேல) போகலாம் 

இந்த பதிவு சுவியரின் திரியில் மூக்கை நுழைப்பதற்காக இல்லை. எத்தனையோ முறை எழுதுங்கள் என்றாலும் எழுத மாட்டேன் என்று அடம்பிடித்த சுவியருக்கு ஒரு உறுதுணையாக எனது இன்றைய அனுபவப் பதிவு ஒன்று.
 
உங்களின் படங்களும் பதிவுகளுந்தான் கதைக்குத் தோரணமாய் இருக்கு....!  tw_blush:

On 25/02/2017 at 7:51 AM, ராசவன்னியன் said:

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..! heureux071.gif

ஐ யாம் ரெடி வன்னியன்....! உங்கள் வாய்க்கு ஐஸ்கிரீம். ஏற்கனவே மூண்டு இருக்கு. இன்னும் பதின்மூன்றுக்கு  எப்படியாவது ஒரு பதினெட்டைத் தேடவேண்டும்.   tw_blush:  tw_blush:

20 minutes ago, suvy said:

எப்படியாவது ஒரு பதினெட்டைத் தேடவேண்டும்.   tw_blush:  tw_blush:

பதினெட்டு தேவையே இல்லை 

முயற்சி திருவினையாக்கும்.

Bilderesultat for old pregnant woman

65-year-old German woman pregnant with quadruplets

While her colleagues look forward to retirement and a well-earned break from children, one Berlin teacher has another challenge ahead: quadruplets.

Anngret Raunigk, a 65-year-old English and Russian teacher from Berlin, already has 13 children by five different fathers. After undergoing fertility treatment, Anngret is now in her 21st week of pregnancy. She expected a baby in summer but remembers clearly watching the ultrasound screen, where four beating hearts were clearly visible.

“Of course it was a shock for me,” she told the Bild am Sonntag newspaper. “After the doctor established that it was four, I had to think about it at first ... whether to give the children to foster parents or adoption or reduce them.”

Reducing them - aborting one or more of the foetuses - would, doctors said, increase the survival rate of the others.

But the teacher wouldn’t hear of it and has decided to proceed with the quadruplet pregnancy, shadowed by Germany’s largest tabloid Bild and its television equivalent, RTL.

It’s a decade since Anngret had her last baby at 55, which she said happened naturally. Now Leila is nine years old, her mother said, and dearly wanted more brothers and sisters to play with.

And so, 18 months ago, she decided for fertility treatment abroad using donor eggs and sperm. The babies are due in the summer.

“I’m not afraid,” she said, “I simply assume that I will remain fit and healthy.”

Optimistic

Her doctor is similarly optimistic, telling Bild am Sonntag that he can see no physiological difference in this and his other younger patients in a similar situation.

“Quadruplets are always a drain,” said Dr Kai Herwig, warning that a premature birth is likely. “We are doing out best to prevent this as far as possible and to push as far into the later weeks of pregnancy.”

For Dr Herwig, the most important thing is not the mother-to-be’s age but her mental attitude and motivation. And Anngret is nothing if motivated, dismissing expectations of what a woman of 65 should be doing.

“I always find it very aggravating that one has to fulfil certain clichés,” she said. “I think that one has to decide for oneself, stick to one’s opinion and not allow oneself to be influenced too much by others.”

From her last pregnancy a decade ago she has plenty of experience of gossiping neighbours and, now as then, has no plans to let herself be bothered by it.

“If someone one gossips about others I think they mustn’t have a very interesting life,” she said.

And what of the years ahead? The expectant mother said she has no concerns that raising children into her 70s and 80s will be a problem.

“I have enough experience with organisation so that won’t be a problem,” she told the Bild am Sonntag. She has plenty of support at home: 13 children from five different fathers and seven grandchildren.

Of particular support is likely to be her eldest daughter, who’s 44.

http://www.irishtimes.com/news/world/europe/65-year-old-german-woman-pregnant-with-quadruplets-1.2173089

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வை திஸ் கொலைவெறி .... அவ்வளவும் பொறாமை....! :unsure:

3 minutes ago, ஜீவன் சிவா said:

பதினெட்டு தேவையே இல்லை 

முயற்சி திருவினையாக்கும்.

Bilderesultat for old pregnant woman

அடபாவி..:grin:

ஜேர்மன் பத்திரிகை எல்லாம் எடுத்து விடுகிறார்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.