Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 125
  • Views 25.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    மனதை வாட்டும் வலிகள்….! மனதை வாட்டும் வலிகள் மௌனிக்க வைகிறது சில நொடிகள்…………!!!! மனதில் எழும் உணர்வு வரிகள் வார்த்தைகள் தராமல் தவிக்கிறது சில நொடிகள்………!!!! விழிகளை நனைக்கும் நீர்

  • Sasi_varnam
    Sasi_varnam

    கனடா மார்க்கம் (f )யார் கிரவுண்ட்-இல் நடைபெற்ற நேற்றைய மாவீரர் நாளும் அப்படியே தான் இருந்தது. இரவு 10:00 மணியை தாண்டியும் மாவீரர் கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதற்காக சாரி சாரியாக மக்கள் ந

  • இருந்தாலும் இது மகிழ்வினைத் தருகின்றது.  நன்றி நிழலி.... சந்தோசமாக இருக்கிறது இப்போது   

  • கருத்துக்கள உறவுகள்

விதையாகிய வீர வேங்கைகளுக்கு  வீர வணக்கங்கள்......!   💐

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே. 

Maveerar2006.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு  வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதை வாட்டும் வலிகள்….!

மனதை வாட்டும் வலிகள்
மௌனிக்க வைகிறது
சில நொடிகள்…………!!!!

மனதில் எழும் உணர்வு வரிகள்
வார்த்தைகள் தராமல் தவிக்கிறது
சில நொடிகள்………!!!!

விழிகளை நனைக்கும் நீர்கூட
தீயாய்ச் சுடுகிறது
சில நொடிகள்………!!!!

வீர மொழி பேசும் என் பேனா
எழுத மறுக்கிறது
சில நொடிகள்………!!!!

எனினும் உறுதி கொள்கிறேன்
வலிகள் நிரந்தரமல்ல ……!!!!
என் உணர்வு வரிகள்
எம் இனத்தின் உறுதி மொழிகள்…!!

ஈழ நினைவுகளை மனதில்
சுமந்தால்………!!!!
உறைந்த குருதியும்
தணலாய்க் கொதிக்கும்…!!!
விழி நீர் கூட பகையை எரிக்கும்…!!

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எம் மாவீரர்களுக்கு எனது வீரவணக்கம் !

78243719_2229688433804584_39046347067249

 

உயிர் கொடுத்த உறவுகளே! வணங்குகின்றோம்!!! 

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்காக மாண்ட மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வங்களே ...வீர வணக்கங்கள் 
மறவாதிருப்போம்.... :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில் ஜேசுநாதர் சிலுவையில் அறைய முன்னர் கூறியதாக ஒரு வசனம் வருகிறது.  அது இவ்வாறு போகிறது. 

 

"""" என்  பிதாவே,  என் பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர்  """'"

   😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

 

ஆனாலும்.... 

பகவத் கீதையில் கிருஷ்ணனால் கூறப்பட்டுள்ள ஒரு வாக்கியம் பின்வருமாறு போகிறது.. 

 

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது"

நாம் உங்கள்

👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣.....

தொடர்ந்து செல்வோம்....... 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு  வீர வணக்கங்கள்.

தாயக விடுதலை கனவை சுமந்து விடுதலை என்ற இலட்சியத்திற்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !

 

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மார்க்கம் (f )யார் கிரவுண்ட்-இல் நடைபெற்ற நேற்றைய மாவீரர் நாளும் அப்படியே தான் இருந்தது.
இரவு 10:00 மணியை தாண்டியும் மாவீரர் கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதற்காக சாரி சாரியாக மக்கள் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் மிக மிக நேர்த்தியாக தங்கள் கடமைகளை செய்யும் மாணவ தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
  

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு  வீர வணக்கங்கள்.

  • 11 months later...

மாலதி அக்காவே

ஈழத்தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் படுந் துயர் கண்டு இழந்த எம் உரிமை எய்திட நீ துடித்தாய்!!!!

மணவறை நாடி மற்றவர் கனவு காண உன் நினைவறை தேடி வந்த ஈழ அன்னையை குடியமர்த்தி சுதந்திர தமிழீழ கனவு நீ கண்டாய்!!!!!

எம்முரிமை களைய வந்த மாற்றானுக்கு பிணவறைப் பயமூட்டி அவன் கனவறையிலும் எம் வீரத் தமிழீழ மறத்திகளின் நினைவில் பதறிக் கலங்கிட நீ செய்தாய்!!!!!

நெஞ்சில் ஈழக்கனவு என்றும் நீங்காத கடமையுணர்வு வீரம் எனும் சொற் குமிழியிடும் சிதையாத நாட்டுணர்வு துஞ்சா இருவிழிகள் தொய்ந்து விழா நற்தோள்கள் அஞ்சுதல் இன்றி வளைக்கரங்களில் துப்பாக்கி ஏந்தி அயர்வின்றி போர்க்களமாடி எம் தமிழ் பெண்டிர்க்கு உணர்வூட்டி கோப்பாயில் பெண் மாவீர முதல் வித்தாய் நீ வீழ்ந்தாய்!!!!!

எஞ்சுகின்ற காலமெல்லாம் விஞ்சுகின்ற உம் ஈழக்கனவை கருக் கொண்டு நஞ்சு மனங்கொண்ட மாற்றான் நடுக்கமுறும் செந்துணிவு எம் மக்கள் கொள்வர் என்றெண்ணி உன்னுயிர் நீ ஈந்தாய்!!!!!

உன் கனவு பலிக்கும் எம் தமிழ் மண் விடுதலை கொள்ளும் எம் தமிழர் மனங்கள் நிறையும் உலகந் தழுவி எம் தமிழ் மக்கள் மனங்களில் என்றும் விடுதலைத் தாயாய் நீ வாழ்வாய்!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

தமிழீழம் எனும் உயரிய இலட்சியத்துடன், தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டில் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் சகல உரிமையோடும் வாழவேண்டும் என்ற நோக்கத்திற்காக தம்மை ஒப்புக்கொடுத்து, அந்த இலட்சியத்திற்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

 

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!! :100_pray::100_pray:

 

  • கருத்துக்கள உறவுகள்
ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கார்த்திகைப் பூவுடன் மாவீரர்களை நினைவுகூரும் ஒளிப்படம்.
தடை அதை உடை!
We remember the heroes who fought for freedom from Sri Lankan state genocide".

128146026_3756893634341830_7341351338949846079_o.jpg?_nc_cat=102&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=MWf_a7rIzBIAX9tK7C0&_nc_ht=scontent.flhr1-2.fna&oh=1d17df5691304096e246d141e77225dd&oe=5FE542E4

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கம்கள்.

நேரலையில் காண
TGTV.TV

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

உயிர் பற்றி எரியும் நினைவுகளுடன்
உங்களைத் தொழுகின்றோம்

விதைக்கப்பட்ட உங்களையும்
உழுது களித்த எதிரி முன்
கையறு நிலையில் நின்று
மீண்டும் அரட்டுகின்றோம்

உங்கள் நினைவுகளை துதிக்கும்
உரிமையையும் மறுக்கும்
'சனனாயக' வாதிகளுடன்
கண்ணீர் மட்டும் கொண்டு
நிராயுதபாணிகளாக
தவிக்கின்றோம்

எமதருமை மாவீரர் செல்வங்களே
உடலையும் உணர்வையும்
ஆகுதியாக்கி யாகம் வளர்த்த தியாகிகளே

கண்ணீருடன் சிந்தவும்
உரிமையற்று
வந்திருக்கின்றோம்
எங்களை மன்னித்து
காப்பீராக

-------------

தமிழீழப் போரில் தம் உயிர்களை தியாகம் செய்த தலைவர் பிரபாகரனுக்கும், புலிப் போராளிகளுக்கும் இதே நோக்கத்திற்காக வீரமரணம் அடைந்த அனைத்து இயக்க போராளிகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலி.

எமைக்காக்க தம்முயிரை கொடுத்த அனைத்து மாவீர்ர்களுக்கும் வீரவணக்கங்கள்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.