Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கருத்துக்களம் 2020 - ஒரு மீள்பார்வை

Featured Replies

வணக்கம்,

யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. 

இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பாரிய நெருக்கடிக்கு ஆளாகிய வேளையில்,  வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் கருத்துக்களத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றது.

இந்த வகையில் 2020 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம்.

குறிப்பு: 01-01-2020 முதல் 26-12-2020 வரையான தரவுகளின் அடிப்படையில் இப்பட்டியல் உள்ளது.

2020 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் பார்வைகள் கொண்டவை

2020 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் கருத்துக்கள் பதியப்பட்டவை

2020 இல் இணைந்து அதிகம் கருத்துக்கள் பதிந்த உறவுகள்

2020 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்ற உறவுகள்

2020 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் வழங்கிய உறவுகள்

நன்றி

யாழ் நிர்வாகம்
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ரதி மட்டும் சிகப்பில மிண்ணுறா  🤔

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கண்ணாடியை மாட்டுமாறு அறிவிக்கிரம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, நியானி said:

2020 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் வழங்கிய உறவுகள்

 தந்த சந்தர்ப்பத்தை ஒழுங்காய் பயன் படுத்தேல்லை எண்ட கவலை எனக்கு இருக்கு..😟

ஆனால் வீம்புக்கு எழுதுற சனத்தின்ரை ஒரு பெயர் கூட இல்லை.பாவங்கள்..🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 தந்த சந்தர்ப்பத்தை ஒழுங்காய் பயன் படுத்தேல்லை எண்ட கவலை எனக்கு இருக்கு..😟

ஆனால் வீம்புக்கு எழுதுற சனத்தின்ரை ஒரு பெயர் கூட இல்லை.பாவங்கள்..🤪

ஓமோம் அப்படியே சீமானின் திரிகள்தான் கூட ரன்னிங் பண்ணியிருக்கு .😆

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி அக்காவின் மருத்துவ ஆலோசனைகள் இடையில் நிற்காமல் ஓடவேண்டும்👍🏾

சுமே ஆன்ரியின் திரிகளில் அரட்டைகள் வழமைதானே. அதுதான் அவாவின் பல திரிகள் ஓடி இருக்கு😃

பச்சைப் புள்ளிகள் எடுத்தவர்களும், கொடுத்தவர்களையும் பார்த்தால் எழுதாமல் இருக்கிற பலர் பச்சைகூட குத்துவதில்லை என்ற மாதிரி இருக்கு. 🤔

2020 அறிவு பூர்வமான மனித வாழ்விற்கு  பயனுள்ள  பல ஆக்கங்களை எமக்கு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்ததுக்களும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

2020 மீள் பார்வையை.... நல்ல முறையில், ஒழுங்கமைத்த நியானிக்கும், 👍🏼

களத்தில் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. ❤️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

பச்சைப் புள்ளிகள் எடுத்தவர்களும், கொடுத்தவர்களையும் பார்த்தால் எழுதாமல் இருக்கிற பலர் பச்சைகூட குத்துவதில்லை என்ற மாதிரி இருக்கு. 🤔

இஞ்சை பாருங்கோ.....:cool:
நீங்களும் உந்த விசயத்திலை சரியான கசவாரம் எண்டது நல்லவடியாய் தெரியுது.😂
புள்ளிகள் வாங்கினதாய் தெரியுது.குடுத்ததாய் நான் ஒரு இடமும் காணேல்லை. ஒரு வேளை வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது எண்ட கொள்கை உடையவரோ🤠

  • கருத்துக்கள உறவுகள்

2020ஐ யாழில் ஒரு திருப்புமுனையான ஆண்டாகவே நான் பார்கிறேன்.

Enough is enough என்று முடிவெடுத்து யாழ் நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகள் என்னையும் பாதித்தாலும், அதன் நீண்டகால நன்மைகளை நாம் இப்போதே காணத்தொடங்கி விட்டோம்.

இதை வரும் ஆண்டிலும் தொடரவும்.

எதிர்பார்த்த திரிகள்தான் முன்னிலை பெற்றுள்ளன. 

சுமே அன்ரியும், சீமானும் entertainment value இல் ஆளையாள் விஞ்சியவர்கள் இல்லை என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. ஆனால் அந்த திரிகளின் அரட்டைக்கு அப்பால் actual value என்று பார்த்தால் சுமே அன்ரியின் திரியில் அதிகமாக இருக்கும் என்பதே என் கணிப்பு.

புதிய கருத்தாளர்கள் வரிசையில் அதிகம் கருத்து வைத்தவர்கள் பலர் வழமையான பல்லவியை பாடுபவர்கள் இல்லை என்பது நிம்மதியான செய்தி. யாழ் பரந்துபட்ட தமிழ் சமுகத்தின் கண்ணாடி என்பதால், அங்கே ஏற்படும் மாற்றம் இங்கேயும் தெரிகிறது. இந்த trend தொடரும், தொடர வேண்டும்.

புதிய கருத்தாளர் பலர் தாயகத்தில் இருந்து எழுதுவது மிகவும் ஆரோக்கியமான போக்கு. தாயக்கதில் இருந்து எழுதும் பலரும் (தனி போன்ற சீனியர் உறுப்பினர் கூட) பழைய பல்லவியை பாடுவதில்லை என்பது சொல்லி நிற்கும் செய்தி மிக பெரியது.

பச்சை லிஸ்டை நான் அதிகம் கனம் பண்ணுவதில்லை என்பது தெரிந்ததே. 

புள்ளிகள் எடுத்தோருக்கு வாழ்துகள்.

வழமை போலவே பல நல்ல கருத்தாளர்கள் பச்சை லிஸ்டில் மிஸ்சிங். ஆனால் இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. எப்போதும் வாசிகசாலையில் கூட்டம் குறைவாகவும், டாஸ்மார்க் கடையில் கூடவாகவும் இருப்பது வழமைதானே. தவிர பல நல்ல கருதாளர்கள் கூட்டு குடும்பம் போல சொல்லி வைத்து மாறி மாறி பச்சை குத்துவதும் இல்லை. ஆகவே இதை வைத்து அலட்டி கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை.

இந்த லிஸ்டில் நான் வந்தது கொஞ்சம் அதிர்சிதான். கால ஓட்டத்தில் நானும் பழைய பல்லவியில் ஓர் அங்கமாய் மாறி விடுவேனோ என்ற பயம் தொற்றி கொண்டுள்ளது.

எல்லாருக்கும் வாழ்துகள். 

யாழ் தொடர்ந்தும் பீடு நடை போடட்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, goshan_che said:

பல நல்ல கருதாளர்கள் கூட்டு குடும்பம் போல சொல்லி வைத்து மாறி மாறி பச்சை குத்துவதும் இல்லை.

என்ன கோசான் அண்மைக்காலமாக நீங்களும்  உங்கள் கூட்டுகளும் அதைத்தானே செய்கின்றீர்கள். சும்மா திட்டி நக்கல் அடித்து எழுதியவற்றுக்கும் விருப்பு புள்ளிகள் போட்டி ஜமாய்க்கின்றீர்களே?😁

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ.....:cool:
நீங்களும் உந்த விசயத்திலை சரியான கசவாரம் எண்டது நல்லவடியாய் தெரியுது.😂
புள்ளிகள் வாங்கினதாய் தெரியுது.குடுத்ததாய் நான் ஒரு இடமும் காணேல்லை. ஒரு வேளை வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது எண்ட கொள்கை உடையவரோ🤠

என்ரை வருமதி, கொடுக்குமதி எல்லாம் வடிவாப் பார்க்கலாம்!

https://yarl.com/forum3/profile/321-கிருபன்/reputation/

பணச்சடங்குகளில், கொண்டாட்டங்களில் வாங்கிய அளவுக்கு கொடுக்கிற மாதிரி பச்சைப் புள்ளிகளை நான் பாவிப்பதில்லை!😃  ஆனாலும் ஒவ்வொருநாளும் குத்தவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

இதைப் பற்றி முன்னமும் உங்களுக்கு ஒரு விளக்கம் தந்தனான். கவனிக்கவில்லையாக்கும்!

பச்சை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என்று குத்துவதில்லை. கருத்து நல்லா இருந்தால், கதை கவிதை எழுதினால் மட்டும்தான் குத்துவது. 

//அவர் கவிதைகளுக்கு தவறாமல்  லைக்குகள் வந்தவண்ணம் இருந்தன. அவனுக்கு அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவன் லைக் போட்ட பின்பே அப்பாவின் பதிவை வாசித்தான். நிறையப் பேர் அப்படிச் செய்தும் இருக்கலாம். அதில் அப்பாவை ரசித்தவர்கள் பெயர்களை அவன் பார்த்தான். பத்து இருபது லைக்குகள். நன்றிக்கடனாக அவர்களது பதிவுகளை அவன் போய்ப் பார்த்தபோது அங்கே ஏற்கனவே அப்பா வந்து போயிருந்தார். லைக் விழுந்திருந்தது அப்பாவிடம் இருந்து. //

லைக் போடுவதே முதுகு சொறிவது மாதிரியாகிவிட்டது..😂😂😂

கு. சா.  ஐயாவுக்கும் ஆத்ம திருப்தியாக இருக்குமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

என்ன கோசான் அண்மைக்காலமாக நீங்களும்  உங்கள் கூட்டுகளும் அதைத்தானே செய்கின்றீர்கள். சும்மா திட்டி நக்கல் அடித்து எழுதியவற்றுக்கும் விருப்பு புள்ளிகள் போட்டி ஜமாய்க்கின்றீர்களே?😁

சுட்டி காட்டியமைக்கு நன்றி.

என்னை பொறுத்தவரை இங்கே எனக்கு கூட்டு என்று யாரும் இல்லை. நீங்கள் எனது கூட்டு என விபரிக்கும் பலருடன் எனக்கு கருத்து முரண் ஏற்பட்டுள்ளதை காணலாம். 

அவர்களுக்கும் அப்படித்தான் என்பது என் ஊகம்.

யூட், ஜஸ்ரின் போன்றவர்களின் கல்வி தகமையையும், அறிவாற்றலையும் தாண்டி அவர்கள் எனது இனத்துக்காக செய்த பல நல்ல விடயங்களையும் கேள்விபட்ட போது அவர்கள் மீது ஒரு மதிப்பு வருவது இயற்கையானது. அவர்களின் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிவது கூடுதல் காரணம்.

இதே போலத்தான் கிருபன் மீதும். அவரின் கடந்தகால செயல்பாடுகளை யாழ் கள உறவுகள் சொல்லி கேட்ட போது ஒரு மதிப்பு வருவது இயல்புதானே.

ஆனால் இதே போல் ஒரு மதிப்பு விசுகு, தமிழ் சிறி அண்ணாக்கள் மீதும் உண்டு காரணம் யாழுக்கு வெளியான அவர்களின் செயல்பாடுகள் பற்றி, யாழில் எழுத முன்பே அறிந்து வைத்துள்ளமையால்.

ஆனால் விபரம் தெரியாதவர்களை துச்சமாக நினைப்பதில்லை. 

முன்பே எழுதியுள்ளேன், குழு நிலை மனப்பாங்கு ஆக கூடாது என்பதற்காக பல தடவை துல்பெனுக்கும், விளங்கநினைபவனுக்கும் புள்ளி இடாமல் கூட கடந்து சென்றுள்ளேன்.

இன்னும் சில சமயங்களில் குழுவாக சேர்ந்து இவர்கள் மீது அநாகரிக வசவுகளை அள்ளி வீசும் போது கூட, குழு மனோநிலையாக மாறக்கூடாது என்பதற்காக, அநீதி என்று மனம் கூறியும், ஒதுங்கி போயுள்ளேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் நடக்கும் அநியாயத்தை பார்த்து கொண்டு சகித்து போக முடியாமல் குரல் கொடுக்கப் போய் குழு நிலைவாதம் என்ற சகதிக்குள் சிக்க நேர்கிறது.

இதை சொல்வதால் நான் அவர்களின் வக்கீல் என்பதல்ல அர்த்தம். அவர்கள் தம்மை தாமே என்னை விட அழகாக தற்காத்து கொள்ள வல்லவர்கள். 

ஆனால் ஒரு நியாயமான கருத்தை ஒருவர் முன்வைக்கும் போது, அவர்கள் மீது குழாமாக பாய்ந்து, பிராண்டி, குரல்வளையை நெரிக்கும் போது, அதை எதிர்ப்பதை என் தார்மீக கடமையாக கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, கிருபன் said:

என்ரை வருமதி, கொடுக்குமதி எல்லாம் வடிவாப் பார்க்கலாம்!

நமக்கு அடுத்தவர் வீட்டை எட்டிப்பார்க்கும் பழக்கம் கிடையாது.😂

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

என்ரை வருமதி, கொடுக்குமதி எல்லாம் வடிவாப் பார்க்கலாம்!

https://yarl.com/forum3/profile/321-கிருபன்/reputation/

பணச்சடங்குகளில், கொண்டாட்டங்களில் வாங்கிய அளவுக்கு கொடுக்கிற மாதிரி பச்சைப் புள்ளிகளை நான் பாவிப்பதில்லை!😃  ஆனாலும் ஒவ்வொருநாளும் குத்தவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

இதைப் பற்றி முன்னமும் உங்களுக்கு ஒரு விளக்கம் தந்தனான். கவனிக்கவில்லையாக்கும்!

பச்சை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என்று குத்துவதில்லை. கருத்து நல்லா இருந்தால், கதை கவிதை எழுதினால் மட்டும்தான் குத்துவது. 

//அவர் கவிதைகளுக்கு தவறாமல்  லைக்குகள் வந்தவண்ணம் இருந்தன. அவனுக்கு அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவன் லைக் போட்ட பின்பே அப்பாவின் பதிவை வாசித்தான். நிறையப் பேர் அப்படிச் செய்தும் இருக்கலாம். அதில் அப்பாவை ரசித்தவர்கள் பெயர்களை அவன் பார்த்தான். பத்து இருபது லைக்குகள். நன்றிக்கடனாக அவர்களது பதிவுகளை அவன் போய்ப் பார்த்தபோது அங்கே ஏற்கனவே அப்பா வந்து போயிருந்தார். லைக் விழுந்திருந்தது அப்பாவிடம் இருந்து. //

லைக் போடுவதே முதுகு சொறிவது மாதிரியாகிவிட்டது..😂😂😂

கு. சா.  ஐயாவுக்கும் ஆத்ம திருப்தியாக இருக்குமே.

உண்மையில் எமக்கு பிடித்த கருத்துகள் அல்லது சிரிப்பு, கவலை, நன்றி குறியீடுகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைகிறேன். 

இருக்கு என்பதற்காக அள்ளி கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அட.. வேலை வீட்டு வேலை எண்டு இந்த நேரமில்லாத உலகில் மட்டுக்கள் அதிகம் என்கருத்துக்களை வெட்டுவதால் எதுக்கு மினக்கெட்டு எழுதுவான் எண்டு கருத்தெழுத தோன்றியும் கருத்தெழுதாமல் விட்டதுதான் அதிகம் இருந்தும் புதிதாக இணைந்து கருத்துவைத்தவர்களில் நான் அஞ்சாவதாக வந்திருக்கிறேன்.. அதிசயம்தான்.. மகிழ்ச்சி..

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

நமக்கு அடுத்தவர் வீட்டை எட்டிப்பார்க்கும் பழக்கம் கிடையாது

நான் மரமேறிப் பழகினதே வீடுகளை எட்டிப் பார்க்கத்தான்.😜 அதிலும் நீங்கள் இணைத்த வீடியோவில் உள்ள நாய்ப்பிள்ளையர் மாதிரி இரண்டு மரங்களில் இடக்காலையும் வலக்காலையும் வைத்து அரைப்பனை உயரம் ஏறுவது வழமையான எக்செர்சைஸ்😂😂

நீங்கள் பெரிய ஆசாரவாதி என்று தெரியுமே கு.சா. ஐயா!😁 அதனால் இப்படியெல்லாம் எட்டியெல்லாம் பார்க்கமாட்டீர்கள்! ஆனால் என்ன இருக்கும் என்று தவித்து  மண்டையைக் குடைந்துகொண்டு இருப்பீர்கள்🤣🤣

“ஆசாரவாதம் எதற்கும் மரபு தேடும், மரபை அப்படியே கடைப்பிடிக்க முயலும். மரபை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும்மரபே உயர்ந்தது என்று நம்பிக்கொண்டிருக்கும். எதற்கும் முன்னோர்சொற்களும் நூல்மேற்கோளும் தேடும். அவற்றுக்கு விளக்கமும் தொன்மையிலிருந்தே வரவேண்டுமென நினைக்கும். எல்லாவகையான புதியசிந்தனைகளுக்கும் எதிரானதாக திகழும்”

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 இருந்தும் புதிதாக இணைந்து கருத்துவைத்தவர்களில் நான் அஞ்சாவதாக வந்திருக்கிறேன்.. அதிசயம்தான்.. மகிழ்ச்சி..

புலவரே,

இதென்ன பெரிய விடயம், ரஜனி விடயத்தில் உங்கள் தீர்கதரிசனத்தை ஊரே மெச்சுகிறது, போய் பூரண கும்பம் முதல் மரியாதையை ஏற்கவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ரசனிக்கு சகுனம் சரியில்லை இரத்த அழுத்தம் இறங்கு வரிசை ஏறுவருசையில் நிற்பதால் அரசியலுக்கு வர மாட்டார்.போன மருத்துவமனையில் ஏதோ நடந்துட்டு.....😆

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை இணைத்த  கருத்துக்களை வைத்த அனைவரது நேரத்துக்கும் நன்றிகளும் பாராட்டுகளும். 2020இல் அதிகமாக எழுத முடியவில்லை. அதை நிவர்த்தி செய்த புது உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உண்மையில் எமக்கு பிடித்த கருத்துகள் அல்லது சிரிப்பு, கவலை, நன்றி குறியீடுகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைகிறேன். 

இருக்கு என்பதற்காக அள்ளி கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 

சேம் இரத்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

வழமை போலவே பல நல்ல கருத்தாளர்கள் பச்சை லிஸ்டில் மிஸ்சிங். ஆனால் இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. எப்போதும் வாசிகசாலையில் கூட்டம் குறைவாகவும், டாஸ்மார்க் கடையில் கூடவாகவும் இருப்பது வழமைதானே. தவிர பல நல்ல கருதாளர்கள் கூட்டு குடும்பம் போல சொல்லி வைத்து மாறி மாறி பச்சை குத்துவதும் இல்லை. ஆகவே இதை வைத்து அலட்டி கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை.

இங்கே நல்ல கருத்தாளர்கள் என யாரை எப்படி வகைப்படுத்துகின்றீர்கள்?

கெட்ட வார்த்தைகள் இல்லாமல் மற்றவர்களை மட்டம் தட்டிய  உங்கள் கருத்துக்களை நீங்களே ஒரு தடவை வாசியுங்கள்.

நான் நல்ல கருத்துக்களை வைப்பவன் இல்லை என நான் யாழ்களத்தில் இணையும் போதே சொல்லிவிட்டேன்.இன்றும் அதையே சொல்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இங்கே நல்ல கருத்தாளர்கள் என யாரை எப்படி வகைப்படுத்துகின்றீர்கள்?

கெட்ட வார்த்தைகள் இல்லாமல் மற்றவர்களை மட்டம் தட்டிய  உங்கள் கருத்துக்களை நீங்களே ஒரு தடவை வாசியுங்கள்.

நான் நல்ல கருத்துக்களை வைப்பவன் இல்லை என நான் யாழ்களத்தில் இணையும் போதே சொல்லிவிட்டேன்.இன்றும் அதையே சொல்கின்றேன்.

அண்ணை,

என்னை தவிர மிச்ச எல்லாரும் நல்ல கருத்தாளர் என்பதுதான் நான் கருதுவது.

நான் உந்த பச்சை புள்ளி யாசகர்களை இண்டைக்கு நேற்றே மட்டம் தட்டுறன்? தமக்குதாமே குத்திய பலரை முகத்துக்கு நேரா சொல்லியும் இருக்கிறன்.

எனக்கு இந்த யாழ்களத்தில் சிலர் பச்சை புள்ளிக்கு கொடுக்கும் முக்கியதுவத்தையும், அதை எடுத்ததும் அடையும் பூரிப்பையும் பார்த்தால் உண்மையிலே தாங்க முடியாத சிரிப்புத்தான் வாறது.

இதில் “மற்ற கோஸ்டிக்கு பச்சை புள்ளி லிஸ்டில இடம் இல்லை” எண்டு சந்தோசபடுறது அடுத்த லெவல்.

நமக்கே தெரியும் நாம் மாறி, மாறி பச்சை குத்தி கூட்டிய புள்ளிகள்தான் அவை என்று, அதுகுள்ள இதுல ஒரு சந்தோசம், வெற்றி களிப்பு 🤣.

இதை நான் மறைமுகமாக அல்ல நேரடியாகவே சொல்லியுள்ளேன்.

இதே மாரி யாழில் இன்னுமொரு சின்னதனமும் நடக்கும். யாரும் படிச்ச சனம் ஏதாவது நல்ல விடயத்தை எழுதினால் அவர்களுக்கு பதிவு போடுறம் எண்ட சாக்கில, மற்ற ஆக்கள் மாரி இல்லை நீங்கள். படிச்சாலும் தலைக்கனம் இல்லை. அப்படி, இப்படி என்று வால் பிடிப்பு நடக்கும் 😀.

பாவம் அந்த சனமும் முதலில் வெள்ளேந்தியாக பாராட்டை ஏற்றாலும், பிறகு நாட்கள் போக இது நமக்கு பாராட்டல்ல இன்னொரு படித்த மனிசருக்கான மறைமுக ஏச்சு எண்டு தெரிஞ்சதும், வெறுத்து போய் களத்தை விட்டே எஸ் ஆகிவிடுவினம்.

இதனால் பாதிபப்டைவது ஒட்டு மொத்த களமும்தான். 

நான் அவதானித்ததில் இப்படியாக சின்னபிள்ளைதனமாக நடப்பதில் யாழில் வயது முதிர்ந்தோரே முன்னுக்கு நிற்பது இன்னுமொரு வேதனை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள் growing old gracefully என்று, கண்ணியமாக முதுமை அடைதல் என்று, யாழில் வந்து நான் படித்த அனுபவ பாடங்களில் ஒன்று how not to grow old ungracefully என்பது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

நான் உந்த பச்சை புள்ளி யாசகர்களை இண்டைக்கு நேற்றே மட்டம் தட்டுறன்? தமக்குதாமே குத்திய பலரை முகத்துக்கு நேரா சொல்லியும் இருக்கிறன்.

எனக்கு இந்த யாழ்களத்தில் சிலர் பச்சை புள்ளிக்கு கொடுக்கும் முக்கியதுவத்தையும், அதை எடுத்ததும் அடையும் பூரிப்பையும் பார்த்தால் உண்மையிலே தாங்க முடியாத சிரிப்புத்தான் வாறது.

நீங்கள் இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு ஒரு  சீவன் வந்து ஒரு குத்து குத்தியிருக்கெண்டால் பாருங்கோ.....எனக்கு தலை அப்பிடியே ஒரு நிமிசம் சுத்திடிச்சு

திமுகபரிதாபகங்கள் hashtag on Twitter

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

திமுகபரிதாபகங்கள் hashtag on Twitter

என்னைப் பொறுத்த மட்டில் இப்படி ஒரு கணிப்பீடு வேண்டாத ஒன்று எனக்கு தோணுது.சில திரிகளுக்கு எழுதுபவர்களுக்கு பக்க சார்பாகவும் மற்றவர்கள் ஏதோ அரட்டை அடிக்கக வாரறவர்கள் போலவும் தான் தோன்றுது..

சரியோ பிழையோ அவரவர் தங்களுக்கு விருப்ப பட்டதை தான் சொல்ல எழுத முடியும்.எனக்கு யார் மேலும் எந்த விதமான வெறுப்போ விதண்டா வாதமோ கிடையாது ஆனால் சொல்ல வேன்றும் போல் தோன்றியது..மற்றப்படி ஒன்றும் இல்லை..இதை வைத்து யாரும் பக்கம் பக்கமாக எழுதாதீர்கள்...இதனாலயே எழுத வேண்டும் என்று நினைக்கும் விடையங்களைக் கூட எழுதாமல் விட்டுட்டு என் பாட்டுக்கு போவது வழமை.உறுப்பினர்களை ஊக்கபடுத்த வேண்டுமாக இருந்தால் எத்தனையோ வழிகளில் ஊக்கபடுத்தலாம் அதற்கு கணிப்பிடு தான் வழி அல்ல..நன்றி.

இனிமேல் சுத்தாது...றிலாக்ஸ் பிளீஸ்.😄

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.