Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியுடன் தொடர்புகொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாக லண்டனில் உள்ள ஒரு செல்வாக்குள்ள புலம்பெயர் தமிழ் குழுவொன்று தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை என உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அந்தக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களை அழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் அதை தாம் வரவேற்பதாகவும் உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இருப்பினும், ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2021இல், உலகளாவிய தமிழ் மன்றம் போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளை அரசாங்கம் வர்த்தமானியாக  வெளியிட்ட நிலையில், ஜனாதிபதியின் திடீர் மனமாற்றம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் தாங்கள் இலங்கை மக்களுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும் அண்மையில்கூட, பல மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாது முழு நாட்டிற்கும் வழங்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே,  இலங்கையின் அனைத்து மக்களின் குறைகளையும் தீர்க்க, தாங்கள் யாருடனும் பேசத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பேச விரும்பும் உள்நாட்டு வழிமுறைகளைப் பொறுத்தவரை, நீதித்துறை அல்லாத செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1240564

  • Replies 59
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  வர்த்தமானியில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதா அல்லது இவர்களும் கோத்தாவின் பினாமிகளா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் அதை தாம் வரவேற்பதாகவும் உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.

நரியை நம்பிச்சென்ற நண்டுகளின் கதையை நாங்கள் அரிவரியிலேயே படித்துள்ளோம்.

95125505_108612347503557_7313599401165848576_n.jpg?_nc_cat=109&ccb=1-5&_nc_sid=6e5ad9&_nc_ohc=arzG0rbyNJEAX-ySXYq&_nc_ht=scontent-muc2-1.xx&oh=92dc7293e8d5760839850f4c8ca119ab&oe=61724D28

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் கட்சி தாவி பல காலம்…

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

சுரேன் கட்சி தாவி பல காலம்…

அவசரமாக விடும் போதே  தெரிந்தது தானே???

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பேச்சு வார்த்தை நடத்தும் குறுப்பை எந்த குழுவில் சேர்ப்பார்கள்.🙄🙄

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

நா.க.அரசாங்கத்தை விட வெளிநாடுகளில் முகவரி அற்ற அறிவிப்புகள் விடாத வேறெந்த அமைப்புகள் உள்ளன ? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

இணையவன் இதை clipboard இல் copy பண்ணி வைத்திருக்கிறார்போல இருக்கு? வேறு எங்கோ பார்த்த ஞாபகம்??

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதியின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் , உலக தமிழர் பேரவை கேள்வி?

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டுள்ளதை வரவேற்றுள்ள உலகதமிழர் பேரவை ஜனாதிபதியின் மனமாற்றத்திற்கு காரணம் என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் இலங்கையில் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான வேண்டுகோள்களை விடுக்கும்போது அவை தாமதிக்கப்படுகின்றன வலுவற்ற காரணங்களை தெரிவித்து நிராகரிக்கப்படுகின்றன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
gtf-1.jpg
ஆறுமாதத்திற்கு முன்னர் – மார்ச்மாதத்தில்-உலக தமிழர் பேரவை போன்ற அமைப்புகளையும் என்னையும் வேறு பலரையும் பயங்கரவாதிகள் என தெரிவித்தும் இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்த நிலையி;ல் ஏன் தற்போது மனமாற்றம் எனவும் உலக தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
தனது வாக்காளர்களின் நிலைப்பாடுகளிற்கு மாறாக பாரிய நிலைப்பாட்டு மாற்றத்தை அறிவித்துள்ள ஜனாதிபதி தனது நடவடிக்கைகளை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டிய நிலையேற்படும் அதுவே அவர் இந்த விடயத்தில் எதிர்கொள்ளப்போகும் முதல்சவால் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
மிகவும் சமீபத்தில் கூட வடக்குகிழக்கிற்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்கும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கான மருத்துவ உபகரணங்களை நாங்கள் வழங்கியிருந்தோம் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரையும் மற்றும் அமைப்புகளையும் அரசாங்கம் தடை செய்துள்ளதால் அதற்கு வருடாந்த இழப்பு 300மில்லியன் டொலர்கள் என எமது கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி எங்களை இரண்டு தடவை லண்டனிலும் ஜேர்மனியிலும் சந்தித்தார்.
எங்கள் மக்களின் துயரங்கள் குறித்து – இலங்கை மக்களின் துயரங்கள் குறித்து நாங்கள் எவருடனும் பேச தயாராக உள்ளோம் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
Gotabaya-Rajapaksa-2-768x384-1-300x150.j
ஜனாதிபதி எங்களுடன் நிலைமாற்றுக்கால நீதிபொறிமுறையின் உள்நாட்டு பொறிமுறை குறித்து பேச விரும்புகின்றார்- நீதி மற்றும் நீதிசாரத நடைமுறைகளும் பொறிமுறைகளும் உள்ளன என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
நீதிசார செயற்பாடுகள் மற்றும் உள்ளக பொறிமுறை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை ஆனால் நீதிதுறை பொறிமுறையை பொறுத்தவரை என்ன செய்யவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவை தீர்மானம் தெளிவாக தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/138862

2 minutes ago, Eppothum Thamizhan said:

இணையவன் இதை clipboard இல் copy பண்ணி வைத்திருக்கிறார்போல இருக்கு? வேறு எங்கோ பார்த்த ஞாபகம்??

அமைச்சர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். அதை முயன்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன்.

இங்கே அந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சுரேன் என்பவர் எப்படி என்று தெரியாது. இதிலும் துரோகி முத்திரை குத்த முயல்பவர்கள் அதற்கு ஈடாக வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

8 minutes ago, கிருபன் said:
நீதிசார செயற்பாடுகள் மற்றும் உள்ளக பொறிமுறை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை ஆனால் நீதிதுறை பொறிமுறையை பொறுத்தவரை என்ன செய்யவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவை தீர்மானம் தெளிவாக தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, இணையவன் said:

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

மிகவும் நல்லதொருமுயற்சி ...
கோத்தாவின் கண்டீஷன் : பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டி வரும், எப்படியும் ஒருவருடத்திற்கு ஒன்று என்று  மினிமம் 10 வருஷம் இழுத்தாலும் போதும், அதற்க்கு முதல் உங்களால் 
எவ்வளவு முடியுமோ அவ்வளவு இலங்கையில் முதலீடு செய்யவேண்டும், பேச்சுவார்த்தையெல்லாம் நாங்கள் வெளிநாட்டில் தான் நடத்துவோம், எங்கடை பரிவாரங்களோடு வாறது முதல் திங்குறது ப்ரேசிடன்ஸியல் சூட்டில் தங்குறது மீண்டும் திரும்பி போவது வரை உங்களோட செலவு, உங்களுடைய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க பேச்சின் சுற்றுக்களும் அதிகரிக்கும் ,விஜயன் கள்ளத்தோணியில் வந்து இறங்கினதில் இருந்து நிறைய விஷயம் பேசவேண்டி இருக்கு
(இப்பிடித்தான் வலையை நாங்க விரிப்போம் , வெளிநாடுகளில் நிறைய கொழுத்த ஆடுகள் எங்க தலையை விடலாம் என்று திரியுது, கொண்டுவந்து தலையை விடட்டும் ஒரே அடியாக போட்டு பிரியாணி பண்ணிவிடவேண்டியதுதான்  வந்தவரைக்கும் இலாபம்)    

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தே. கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை என்று அழைப்பு விடுத்தார், பின் தட்டிக்கழித்தார். புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தார், இப்போ பேச்சுக்கழைக்கிறார். இதிலிருந்து தெரியேல்லை..... எல்லாம் புலம் பெயர்ந்தவர்களால்  தனக்கு ஒரு பிரச்சனையுமில்லாமல், பேரப்பிள்ளையையும் பார்த்துவிட்டு  சுகமாக  கட்டுநாயக்காவை வந்தடைவதற்கு பிளான் பண்ணியே போயிருப்பார் போல. அண்ணன்காரன் லண்டனில் இருந்து ஒழித்து ஓடிவந்த அனுபவம் தெரியுந்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக கையாளப்படணும்

புலத்தில்  சிங்களம்  பலமாக  கால்  பதித்து  விட்டுத்தான்  இக்கோரிக்கையை  விடுக்கின்றான்😢

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி போகவும் முடியாது.

நம்பாமல் போகாமலிருக்கவும் முடியாது.

அனுப்ப நம்பிக்கயான ஆக்களும் இல்லை.

22 minutes ago, விசுகு said:

கவனமாக கையாளப்படணும்

புலத்தில்  சிங்களம்  பலமாக  கால்  பதித்து  விட்டுத்தான்  இக்கோரிக்கையை  விடுக்கின்றான்😢

  • கருத்துக்கள உறவுகள்

பேரம்பேசும் சக்தியை இழந்துவிட்ட தமிழினம் இனிமேல் இலங்கை தீவில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளர்களாவது தமிழர்களுக்கு தீர்வு தருவார்கள் என்று நம்பினால் அவர்கள் முதலில் பேச்சு நடத்த வேண்டியது ஆட்சியாளர்களுடன் அல்ல  பிக்குகளுடன்தான்.

எந்த ஆட்சியாளர்கள் என்ன தீர்வு தர முயன்றாலும் பெளத்த பிக்குகளின் அனுமதியின்றி ஒருபோதும் அதை அமுல்படுத்த முடியாது. அமுல்படுத்தவும் விடமாட்டார்கள்.

அடுத்து நேர்த்தியான ஒரு தலைமைத்துவத்தை கொண்டிராத புலம்பெயர் அமைப்புக்கள் பல இருக்கும் சூழலில் ஒரு அமைப்புடன் பேச்சு நடத்தினால், தமக்கு  முக்கியத்துவம் தரவில்லை என்ற ஒரு காரணத்தை வைத்து போட்டி போட்டுக்கொண்டு மற்றைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அதை சீர் குலைப்பார்கள்.

மொத்தத்தில் சிங்களவனிடமும் தமிழனிடமும் சரியான தலைமைத்துவம் இல்லை, நல்லது நடந்தால் மகிழ்ச்சியே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நம்பி போகவும் முடியாது.

நம்பாமல் போகாமலிருக்கவும் முடியாது.

அனுப்ப நம்பிக்கயான ஆக்களும் இல்லை.

முள்ளிவாய்க்காலுக்கு  முன்பே இதற்கான ஆயுத்தங்களை  சிங்களம் செய்யத்தொடங்கி விட்டது

தோல்வியால் நாம் துவண்டுவிட

தோல்வி  எம்மை கூறுபோட

தோல்வியால் எம்மவர் எதிரியிடம் பிடிபட

தோல்வி எம்மை பலவீனமாக்க.........

என்  போன்றவர்கள் பல முறை  பல  இடங்களில் அழுதும் புரிந்து  கொள்ளாமல்

இருந்த  அமைப்புக்களையெல்லாம் பலவீனமாக்கி..........

மறுகரையில்  சிங்களத்துக்கு ஒரு  கல்லில் பல மாங்காய்கள்.....😭

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்பின் அறிக்கை (தினக்குரலில் தெளிவான தமிழில் இருப்பதன் படி) அடிபணிந்து பேசப் போவதாகச் சொல்லவில்லை. இருக்கும் சவால்களையும், குறைபாடுகளையும் சுட்டிக் காட்டி விட்டு, யாருடனும் நாம் பேசத் தயார் என்கிறது. 

இதை விலைபோனவர்/கட்சி மாறியவர் அறிக்கை என்று குறிப்பிடுவோர்  யாரிடம் உலகத்தின் எந்தப் பிரதேசத்திலிருக்கும் தமிழர் பேச வேண்டுமென்றும் குறிப்பிட்டுச் சொன்னால் சிறப்பாக இந்த திரியைக் கொன்டு செல்லலாம்! 

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

இரண்டாவது கேள்வி: உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் பேச வேண்டும்?

ready, set, GO! 😎 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சரி பேசுவோம் சகோ.

எல்லாம் பலவீனமாக இருக்கு என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் யார் உங்கள் தெரிவு??

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சுரேன் சுரேந்திரன் ரூட் ரவியருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பதையும், இமானுவல் அடிகளாரது சரணாகதிக்குக்காரணம் என்ன என்பதையும் விளக்கவும், அண்மையில் யாழ் களத்தில் ஒரு உறவு இவர்களது தகிடுத்தித்தங்களையிட்டு ஒரு ஆக்கத்தை இணைத்திருந்தார். அதை யாராவது முடிந்தால் மூழவும் இணைக்கவும் அது இனியொரு இணையத்தளத்தில் வந்ததாக நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சரி பேசுவோம் சகோ.

எல்லாம் பலவீனமாக இருக்கு என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் யார் உங்கள் தெரிவு??

என்னுடைய தெரிவுகள் இவை: 

கேள்வி 1 , பதில்: தாயகத்தில் இருக்கிற தமிழ் பிரதிநிதிகள் தான் பேச்சில் அடக்க வேண்டிய விடயங்களைத் தீர்மானிக்க வேண்டும். மண் ஆக்கிரமிப்புக் குறைப்பு, நீதி விசாரணை, இனப்படுகொலை விசாரணை, நிரந்தரத் தீர்வுக்கான அரசியலமைப்பு மாற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - இப்படியான laundry list விடயங்களுள் எவற்றுக்கு முதன்மை கொடுப்பது என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், இவையெல்லாமே எமக்குக் கிடைக்காது! ஏதாவது கிடைக்கலாம் - ஆனால் எங்கள் bottom line என்ன என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் முதலில். 

(எப்படித் தீர்மானிப்பது? கட்சிகள் சேர்ந்து ஒரு consortium இனை அமையுங்கள். ஈகோ பிரச்சினை, baggage உடைய ஆட்களான சுமந்திரன், விக்கியர், கஜன் போன்றோர் இந்தக் குழுவில் இணைய வேண்டியதில்லை! ஒவ்வொரு கட்சியிலும் தகுதியுடைய, ஒரு middle ground இற்கு வரும் வகையில் உறவைப் பேணக் கூடிய ஒருவரை நியமித்து, பூட்டிய அறையினுள் இருந்து பட்டியலைத் தீர்மானியுங்கள்! பிறகு கட்சிகளின் தலைவர்களை வழிக்குக் கொண்டு வாருங்கள்)

கேள்வி 2, பதில்: இலங்கை அரசு. 

தமிழர் பலம் குறைவு தான், ஆனால் நாம் பலம் பெறும் காலம் வரும் வரை  காத்திருப்பது அலை ஓயும் வரை கடலைத் தவிர்ப்பது போலாகும்! கிடைத்திருக்கும் வாய்ப்பு சிங்களவருக்கு உருவாகியிருக்கும் பொருளாதார பலவீனம் - அதை மட்டுமே இப்போது பாவிக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளுடன்  பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் ஏன் கோத்தா  பேச நினைக்கிறார். அதுவும்  இவ்வளவு காலம் கடந்து.?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

1- நான் பலகாலமாக இதைத்தான் எழுதி  வருகின்றேன். முன்னர் போராடினேன் என்பது  கூட இனிவேண்டாம். மக்களுக்கிடையிலிருந்து தகுதியானவர்கள் அவர்களோடு இன்றும்  நிற்பவர்கள் தமக்கு ஏதாவது  செய்வார்கள்  என  தாயக  மக்கள்  நம்புபவர்கள் முன் கொண்டு  வரப்படவேண்டும்.

2- புலம் பெயர்  தேசத்து  பொருளாதாரமும் அறிவியலுமே இன்று சிங்களவனுக்குள்ள ஒரே  தெரிவு

அதை முதலில் தாயகத்தமிழர் உணரணும்  பயன்படுத்தணும்

நன்றி

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

அமைச்சர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். அதை முயன்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன்.

இங்கே அந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சுரேன் என்பவர் எப்படி என்று தெரியாது. இதிலும் துரோகி முத்திரை குத்த முயல்பவர்கள் அதற்கு ஈடாக வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

ஒரு துரோகி உருவாகிறார்.😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, nunavilan said:

தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளுடன்  பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் ஏன் கோத்தா  பேச நினைக்கிறார். அதுவும்  இவ்வளவு காலம் கடந்து.?

அதைத்தான் நானும் கேக்கிறன்.இலங்கையில் இதற்கென  தமிழ் அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள் எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

பேச்சு வார்த்தையில் எற்படும் உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும்போது..அதற்கு எதிராக செயலாற்றம் எவரும் எந்தவித கருணையும்  பாகுபாடின்றி  சுட்டுக்கொல்லப்படுவர் என்று உறுதி தருபவருடன்

5 hours ago, Justin said:

இரண்டாவது கேள்வி: உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் பேச வேண்டும்?

இந்தியா விரும்பினால் மட்டும் தமிழ்ஈழம் கிடைக்கும்  என்று நம்பும் தமிழருடன். அதேநேரம் இந்தியா விரும்பமையால் தான் புலிகள் தமிழ்ஈழம் பெறவில்லை என்பதையும் உறுதியடன் நம்பவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.