Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவுகளும் கறுப்பியும்

Featured Replies

11-January 06 அன்று தொட்டு இன்றுவரை உறவாடிய உறவுகள்...

கருத்துக்களம் ஒன்றினை ஆரம்பித்து, உறவுப்பாலமாய் அனைவரையும் கரம் இணைத்த பெருமைக்குறியவர் மோகன். தனக்குள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லாமலே அனைத்தையும் தன் சிரம் தாங்கி நிற்கிறார். கருத்துகள் எதனையுமே முன்வைக்காமால், கருத்துகளால் ஏற்படும் முரண்பாடுகளுக்குள் தன்னை ஐக்கியப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்.

சொல்லில் அடங்கா இன்னல்களுக்கு மத்தியிலும் வீறுநடைபோடும் அவர் உடல் நலமும், மனதுக்கு வலிமையும் தர இறைவனை மன்றாடிக் கொள்கிறேன்.

மோகன் - கை கொடுக்கும் கை

யாழ்களத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்திருக்கும் யாழ்கள உறவுகளையும் எண்ணிப்பார்க்கிறேன்.

யாழ்களம் இல்லாமல் உறவுகளும் இல்லை.

உறவுகள் இல்லாமல் யாழ்களமும் இல்லை.

என்னுடன் கலந்துரையாடிய உறவுகள் வரிசையில்...........தற்போது களத்தில் உள்ள உறவுகளுடன் சில துளிகள்

நுணாவிலான் -

ஆரம்பத்தில் இவருடன் கருத்துகளை முன்வைக்கும்போது பெயரை குறிப்பிட்டு எழுத கொஞ்சம் சிரமப்படுவேன் ஒரு சுழி ன வா ரெண்டு சுழி ணா என்றும் லாவிலும் இதே பிரச்சனை. தமிழில் நான் கொஞ்சம் விக். பிழையா எழுதிவிடக்கூடாதே என்று பழையவற்றை எல்லாம் தேடிப்பார்ப்பேன், இப்போ எல்லாம் இவர் பெயர் அத்துப்படி. இவர் இணைப்பவற்றில் என்னைக்கவர்ந்தது. தென்னங்கீற்று.

மறைந்திருக்கும் எம்மவர் படைப்புகளை வெளிக்கொணர்ந்தது பிடிக்கும். உதாரணமாக

கிச்சா, பாவம், தவிப்பு போன்ற குறும்படங்கள்

தமிழீழ பாடல்கள், நீ தான் என் சுவாசம் போன்ற பாடல்கள்.

மேலும் நுணாவின் பங்களிப்புகள்.... மேலும் சிறக்க வாழ்த்தியபடியே*

யமுனா

ஜம்முபேபியாய் களத்தில் வலம் வந்தவர். கண் இமைக்கும் நேரத்தில் பதிவுகளை இடுபவர். களத்தை கலகலப்பாக்கியவர்.

காதலர் தின போட்டிக்காக நான் எழுதிய வாசகம், படம் அவரின் பதிவுகளில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!

கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

75784976jx5.gif

காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!

பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...

இடையிடையே வந்துபோகும் அவர் தொடர்ந்து வரவேண்டும் என்று வேண்டியபடியே*

தமிழ்சிறி.

மனதில் உள்ளதை தயங்காமல் நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தக்கூடியவர்.

இவரின் பஞ்ச் டயலாக். நிறையவே பிடிக்கும். மற்றும் உலக நடப்பு செய்திகளையும் வாசிக்க பிடிக்கும். நகைச்சுவை உணர்வுடன் களத்தில் மிளிர் வேண்டியபடியே *

நெடுக்கு

நெடுக்கையும் பிடிக்கும். நெடுக்கு தரும் கருத்துகளையும் பிடிக்கும். விவாதிக்கும் தருணங்களில் தன்னுடைய கருத்தில் இருந்து மாறுபடாமல் விவாதிக்கும் திறமை படைத்தவர். சரியோ தப்போ அது அவர் வாதத்திறமையில் அடங்கியது. காதல் கிறுக்கன் என்ற தலைப்பில் நிறைய பாடல்களை தந்திருக்கிறார். அவருக்கு போட்டியாக நானும் காதல் கிறுக்கிகள் என்ற தலைப்பில் தொடங்கலாமா என்று யோசித்தேன் ஆனால் செயற்படுத்த் முடியாமல் போய்விட்டது.

பெண்ணால் பாதிக்கப்பட்டிருப்பாரோ என்று அடிக்கடி நினைப்பதுண்டு. சே சே அப்படி எல்லாம் இருக்காது என்று நானே சமாதானபடுத்திக்கொள்வேன். ஆனால் அவரிடமும் ஒரு கதையிருக்கும் என்று என் மனசு சொல்கிறது.

நெடுக்கோடுடன் வந்து

சுறுசுறுப்பாய் சுழன்றே

கடுகடுப்பே இல்லாமல்

மிடுக்கோடு வரும் பதிப்பு

அடுக்கடுக்காய் வர வேண்டும்

என்று வேண்டியபடியே*

வெண்ணிலா-

வெள்ளைமனம் மனம் கொண்ட வெண்ணிலாவின் கவிதைகள் வானத்தில் பறப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும். அவவின் வரவை எதிர்பார்த்தபடியே *

தயா -

அரசியல் விடயங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். தலை என்றுதான் விளிப்பது அதிகம். தயாவுக்கும் தலைக்கும் என்ன தொடர்பு என்றுதான் தெரியவில்லை. அவரையும் நினைவுகூர்ந்தபடியே*

கந்தப்பு -

தன் வாழ்விட செய்திகளை மிக ஆர்வமாய் இணைப்பார். அவரின் அவாட்டர் படம் அழகு. யதார்த்தமாய் இருக்கிறது.

அரசியல் அலசலுக்காக ஆக்கம் கேட்டவுடன் எழுதித் தந்தமையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தபடியே*

அரவிந்தன் -

போட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது நம்ம அரவிந்தன் சார் தான். அத்தனை லாவகமாக மிக சிறப்பாய் வழி நடத்துகிற பாங்கு...........மிக மிக........ அழகு.

பரிசு கிடைக்கவேண்டும் என்பதற்காக் அல்ல.....சரியான பதில் சொல்லவேண்டும் என்ற ஆவலில் பங்கு பற்றுவதுண்டு. அத்தோடு பயணக்கட்டுரைகளும் அருமை.

தங்கள் பணி தொடர வாழ்த்தியபடியே *

தூயவன் -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்று நிறைந்த கருத்துகள்.

மற்றும் யாழ்களம் வளர்ச்சியில் அக்கரையுடன் கருத்துகளை பகிர்பவர்.

அவரையும் நினைவு கூர்ந்தபடியே

தூயவன் - தூய்மையானவர்* * *

அகூதா

தாயகபோராட்டம் மீது வலுவான நம்பிக்கை, பிடிப்பு கொண்ட பதிவுகள், பணிகள்.

பணி சிறக்க வாழ்த்திக்கொண்டே *

அகூதா -விவேகம் நிறைந்தவர்

கலைஞன் / மாப்பிளை கரும்பு.

வித்தியாசமான தலைப்புகளில் பதிவினை தொடங்குவீர்கள். வாசிக்க..... பங்குபற்ற ஆவலைத் தூண்டும். அவற்றில் ஒன்று.

காதலர் தினம் 2008: யாழ் இணையத்தில் காதல். யாரும் செய்யத்தோன்றாத ஒரு நேரடி போட்டி நிகழ்ச்சி. மிக சிறப்பாக அமைந்திருந்தது. இப்படி ஒன்றை களத்தில் நேரிடையாக செய்த பெருமைக்குறியவர்.

அதன் இணைப்பு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=34095

தங்கள் வரவு யாழ்களத்தை சிறப்பிக்கும் என்று வாழ்த்திக்கொண்டே *

விசுகு -

இயல்பாய் உரையாடுவது பிடிக்கும். தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பவர்.

விசுகு வையும் நினைவுகூர்ந்தபடியே *

விசுகு - வித்தியாசமானவர்

குமாரசாமி -

மனதில் பட்டதை நறுக்கென்று எழுதுவீர்கள். ஆனால் அவை நகைச்சுவையாகவும், மனதை தட்டி எழுப்புவதாயும் அமையும். அது உங்களிமுள்ள தனித்துவம். உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும். தமிழில் அல்ல நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். என்ன என்று தலை பிச்சுக்கொள்ளக்கூடாது என்ன.! 난 널 정말 많이 사랑해 நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று கூறியபடியே * :)

ஈழவன் -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பவர்

அரசியல் அலசலுக்காக கேட்டவுடன் ஆக்கம் எழுதித் தந்தமையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தபடியே *

ரசிகை -

இவரும் களத்தில் உரையாடிய பொழுதுகளில் மனதைக்கவர்ந்தவ.

இவவையும் நினைவுகூர்ந்தபடியே*

தூயா -

முன்பு யாழ்களத்தை கலகலப்பாக்கிய பெருமை இவவுக்கும் உண்டு. தூயாவின் சமையல் பகுதி சூப்பர்.

சமையலையும் ருசித்தபடியே *

இறைவன் -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பவர். தற்போது கருத்துகளை முன்வைக்காவிட்டாலும் களப்பக்கம் வந்து போறவர்.

இவரையும் நினைவுகூர்ந்தபடியே

வசிசுதா -

இருவரின் பெயரில் வரும் ஒருவர். அழகான பதிவுகளை இட்டவர்.

இவரையும் நினைவுகூர்ந்தபடியே*

குறுக்காலபோவான் -

யாழ் திரைகடலோடி, ஊர்புதினம் பகுதியிலும் இவருடைய பதிவுகள் அதிகம்.

இவரையும் நினைவுகூர்ந்தபடியே *

புரட்சிகர தமிழ்தேசியன் -

நீண்டபெயர். அழகான பெயர். இசையின்பால் இவருக்கு ஈடுபாடு அதிகம்.

நீங்கள் தரும் பாடல்களை ரசித்தபடியே *

சின்னப்பு -

நகைச்சுவையான பதிவுகளோடு வெவ்வேறுவிதமான முக அசைவுகளை போட்டு கலாய்ப்பார்.

/கள்ளடிப்போர் வாழ்வர் மற்றதெல்லாம் அடிப்போர் குடலழிந்து சாவர்/ என்ற வாசகத்தோடு வலம் வருவார்.

அவரையும் நினைவுகூர்ந்தபடியே *

விசுகு -

திண்ணையில்தான் இவரை அதிகம் காணமுடிகிறது. அதுவும் அழகே. உங்கள் கருத்துகளும் அழகே. :)

திண்ணையில் உங்கள் எழுத்தினை ரசித்தபடியே.......

Danklas -

டன் என்ற செல்லப்பெயருக்கு சொந்தக்காரர். பங்களிப்பில் ஆர்வம் அதிகம்.

இவரையும் நினைவுகூர்ந்தபடியே *

வினித் -

உரையாடுவதற்கு ஏற்றவர். அவட்டாரில் உதட்டைக் கடிப்பதுதான் என்னவோ பண்ணுவது. :lol:

அவரையும் நினைவுகூர்ந்தபடியே *

நாரதர் -

பெயருக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை.

அரசியல் அலசலுக்காக கேட்டவுடன் ஆக்கம் எழுதித் தந்தமையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தபடியே *

நிலாமதி -

நிகழ்காலநிகழ்வுகளின் நிதர்சனங்கள் கதைகளாக பரிணமிப்பது கதாசிரியை நிலாமதியின் கரங்களுக்குள்ள சிறப்பு. அந்தக்கரங்களா இப்படி எல்லாம் எழுதுகின்றது......என்று ஒருமுறை தொட்டுப் பார்க்க ஆசை. அவவின் கதைகளில் மனதை தொட்டுச்சென்றது.

மெளனமாய் ஒரு காதல்

நித்திலா.... தாயாகிறாள்

மேலும் உங்கள் கதைகள் யாழ்களத்தில் மிளிர வேண்டியபடியே *

பையன்26 -

எல்லா பகுதிகளிலும் இவரின் கருத்து பகிர்விருக்கும். யாழ் களத்துக்கு வருபவர்களை அன்புடன் வரவேற்பார்.

இவரையும் நினைவுகூர்ந்தபடியே *

கிருபன் -

இவரின் கருத்துகள் மிக ஆழமானவை. முன்பொரு சமயம் அரசியல் அலசல் எழுதும்படி கேட்டதற்கு இணங்க உடன் எழுதி தந்தமையை மறப்பதற்கில்லை. இவர் இணைத்தவற்றில் பிடித்தது கவிதைகள்.

அனைத்தையும் நுகர்ந்தபடியே *

கிருபன் - மனதில் கிரிடம் தரித்தவர்

புத்தன்

புத்தனின் கதைகள், கவிதைகள் பிடிக்கும். சும்மா சொல்லக்கூடாது. சும்மா கிறுக்கல் என்றுதான் சொல்லுவார். ஆனால் கரு பொதிந்து இருக்கும். அருமை. அவற்றில் பிடித்தது

கவிதை நமோ நமோ மாதா நம்மட மாதா, நான் இவையாவும் சேர்ந்த கலவை

கதை வொப்

மேலும் தொடர வாழ்த்தியபடியே*

புத்தன் - திறமைமிக்கவர்

இசைக்கலைஞன்

இசையையும் பிடிக்கும். இசைக்கலைஞனையும் பிடிக்கும். இவர் இணைக்கும் இளையராஜாவின் பாடல்களை கேட்டு மெய் மறப்பதுண்டு. இளையராஜாவையே கண்முன்கொண்டு வந்து நிறுத்துவார்.

நீங்கள் தந்த இசைவெள்ளத்தில் நனைந்தபடியே*

நெல்லையன் -

யாழ்களத்தை அதிகம் நேசிப்பவர்.

நேசிப்பு வாசிப்பில் அடங்குவதாலோ என்னவோ குழம்பித் தவிக்கிறரோ தெரியவில்லை.

இவர் வரவினையும் வரவேற்றபடியே *

குளக்காட்டான் -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பவர். இவரின் சிந்தாமணி கடலை உருண்டை கறி ரொம்ப நல்லாயிருக்கும்.

இவரையும் நினைத்தபடியே *

சஜீவன் -

இவரின் கருத்துகளை விரும்பிப்படிப்பேன். சமூகச் சாளரம் பகுதியில் பெண் பருவமடைந்தால் மற்றும் என்ன கதைப்பார்கள் பற்றிய தலைப்புகள் மிக அருமையாக விவாதிக்கப்பட்டவை. மேலும் மேலும் தொடர வாழ்த்தியபடி...

நிழலி -

வேலைத்தளத்திலிருந்தபடியே களத்தையும் மேற்பார்வை செய்பவர். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானா!|

நிழலி எழுதியவற்றில் பிடித்தது.

மழைத்துளிகளாய் வரும் நிழலியின் கிறுக்கல்களை ரசித்தபடியே.............

நிழலி -நிழலாய் இருப்பவர்

ஹரி -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பவர். அதிக ஆங்கிலபதிவுகளையும் இணைத்தவர்.

பணி தொடர வாழ்த்தியபடியே.***

சுவி(suvy)

பல்வேறு பகுதிகளிலும் இவரின் பதிவுகள் மிளிரும். அழகாய் சுருக்கமாய் கருத்துகள். அதுவே அழகு.

தொடர்ந்து தர வேண்டியபடியே*

ரகுநாதன் -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பதோடு செய்திகளையும் இணைப்பவர்.

இவரையும் நினைவுகூர்ந்தபடியே*

சூறாவளி -

பெயரில் தான் சூறாவளியே தவிர அமைதியானவர் :) . தங்களையும் நினைவு கூர்ந்தபடியே***

அஜீவன் -

கலைநயமிக்கவர். காட்சிகளை மட்டுமில்லை நிகழ்வுகளையும் நாடகங்களையும் கமராவுக்குள் சிறைபடுத்துபவர்.

அவரையும் நினைவுகூர்ந்தபடியே*

ரமா -

பல்வேறு பகுதிகளிலும் இவரின் பதிவுகள் மிளிரும். இவவையும் நினைவுகூர்ந்ததபடியே*

சாத்திரி -

உண்மையில் இவர் ஒரு சாத்திரியாரோ என்று நினைத்தேன். அதையும் மிஞ்சி இவரின் யதார்த்தமான சிந்தனைகள்.

நடைமுறை வாழ்க்கைமுறையோடு ஒன்றிப்போன சில சம்பவங்களை துணிச்சலோடு வெளிக்கொணர்ந்த பெருமைக்கூறியவர்.

பிடித்தது - தேவதைகளின் தீட்டுத்துணி, பயணம்.

அவர் கரங்களையும் பற்றி இந்தக்கரங்களா இப்படி எல்லாம் எழுதுகிறது என்று கேட்கவேண்டும் போலிருக்கு. அடி விழாதுதானே! :D

உங்கள் கதைகளையும் நுகர்ந்தபடியே*

குட்டி.

பல்வேறு பகுதிகளிலும் இவரின் பதிவுகளை காணலாம். கடுப்பேத்தும் செயல்கள்... நிறையவே பிடிக்கும். :) அண்மையில் இணைத்த நகுமோ நீ சுகமோ பாடல் எனக்கும் நிறைய பிடிக்கும்.

அந்த பாடலை ரசித்தபடியே.......

இன்னிசை -

பெயரிலே இனிமை யும் இருக்கிறது. இசையும் இருக்கிறது. இவரையும் நினைவுகூர்ந்தபடி...

ரதி -

ரதியுடன் உரையாட பிடிக்கும். உரையாடிக்கொண்டே ஜொள்ளுவிட பிடிக்கும். :lol: ரதியையும் பிடிக்கும். ரதியின் கலகலப்பு பிடிக்கும். உங்கள் காது இரைச்சல் எப்படி? உங்கள் நலத்தை யாசித்தபடியே*

ரதி - ரம்மியம்.

விகடகவி -

மாலைவெய்யிலின் மழைத்தூரலில் நனைந்து சென்றால் எப்படி இருக்கும் அப்படி இருக்கும் தினசரி தூரல்களும் அப்படித்தான் இருக்கும். விகடகவியையும் பிடிக்கும். அவரின் கவிவரிகளையும் பிடிக்கும். மழையில் நனையவும் பிடிக்கும். :)

அவரின் கவிதைகளில் என்னை வெகுவாகக் கவர்ந்தது. தாய்மடியே...

என்ற கவிதை. அம்மாவை நினைக்கும் போதேல்லாம் இந்தக்கவிதையும் என் நினைவில் வந்து போகும்.

உங்கள் கவிப்பணி தொடர வாழ்த்தியபடியே*

புங்கையுரான் -

உங்கள் கவிதைகள் நிறைய பிடிக்கும். உங்கள் கவிதைகள் யாழ்களத்தில் இன்னொருவரை ஞாபகப்படுத்தும் சொல்லத்தான் முடியவில்லை.

உங்கள் கவிகள் தொடர்ந்திட வேண்டியபடியே*

சோழியன் -

கவிநயமிக்க சோழியனின் கவிதைகள், கதைகள் வாசிக்க பிடிக்கும். மேலும் அவர் படைப்புகளை எதிர்பார்த்தபடியே*

ராஜவன்னியன் -

கம்பிரமான பதிவுகள் பிடிக்கும். :)

தங்களையும் வாழ்த்தியபடி*

வல்வை லிங்கம் -

இலக்கணாவத்தை என தான் பிறந்த ஊர் பற்றி அறியத்தந்தவர். இப்படி ஓர் ஊர் இருப்பதையே அறியாமல் இருந்திருக்கிறேன்.

தங்களையும் நினைவு கூர்ந்தபடியே*

ஆராவமுதன் -

தங்கள் கருத்துகளையும் விரும்பிபடிப்பேன். தங்களையும் நினைவு கூர்ந்தபடியே......

ஆராவமுதன் - ஆர்வமுள்ளவர்

மருதன்கேணி -

இவரின் கருத்துகளை மிக ஆர்வமாக படிப்பதுண்டு.

மேலும் தொடர்ந்திட***

உமை -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பதோடு தனது இணையதள செய்திகளையும் இணைப்பவர்.

மேலும் தொடர்ந்திட...

உமை - விவேகமானவர்

முனிவர் ஜீ

இன்றைய விளம்பரங்களால் அதிகம் ஏமாற்றபடுவர்கள் என்ற தலைப்போடு உரையாடியவர். பூட்டிய மன கதவுகள்

மனதை தொட்ட கதை.

மேலும் தங்கள் படைப்புகள் மலர வாழ்த்தியபடியே.*

இணையவன் -

யாழ்களத்தில் இணைந்து செயற்படுபவர். அரசியல் அலசல்களில் தங்களின் விமர்சனம் அழகாய் இருக்கும். எழுத வேண்டும் என்ற ஆவலைதூண்டியது தங்கள் விமர்சனம்.

போட்டோஷோப் இடையில் நிற்பது கவலை.

அதனையும் தொடரும்படி வேண்டியபடியே***

ஈழபிரியன் -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பவர்.

YES WE CAN,YES WE CAN - நம்பிக்கை தரும் வாசகதுடன் வலம்வரும் தங்களையும் நினைவு கூர்ந்தபடியே*

தமிழ் அரசு

செய்திகள் இணைப்பதில் வல்லவர். பணிகள் தொடர்ந்திட வாழ்த்தியபடி***

தமிழ் அரசு - விவேகம் நிறைந்தவர்

பனங்காய் -

உடனே நினைவுக்கு வருவது. அண்மையில் இணைத்த மீன்தொட்டி பதிவு. அதைப்பார்த்தவுடன் எனக்கும் மீன் வளர்க்க ஆசை வந்துவிட்டது. அதை ஒருக்கா காட்ட வேண்டும் என்று முயற்சி செய்தேன் முடியாமல் போய்விட்டது.

http://www.youtube.com/watch?v=hvXVGkSXArw&feature=player_embedded#t=7s

உங்களையும் வாழ்த்தியபடியே*

சுகன் -

தாயக மக்கள், போராட்டம் மீது மிகுந்த பற்றுடன் கருத்துகளை முன்வைப்பவர். கவிதை வடிப்பதிலும் நாட்டம் நிறைந்தவர்.

அரசியல் அலசலுக்காக கேட்டவுடன் ஆக்கம் எழுதித் தந்தமையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தபடியே**

சின்னக்குட்டி:

இவரின் வலைப்பூ அழகானது. அவை தவறாமல் யாழ்களத்தில் மிளிர்வதும் அழகு. தங்கள் எழுத்துப்பணி சிறப்படைய வாழ்த்தியபடியே..*

கோமகன் -

கோமகனின் நெருடிய நெருஞ்சி மனதை தொட்டுச் செல்கிறது. இணைக்கும் படங்களும் அழகு.

தொடர்ந்து எழுதுங்கள்

தொடர்ந்து வாசித்தபடியே......

வளவை சாகரா

கவிதைகள் கவித்துவமிக்கவையாக அமைந்திருக்கும். மேக்கப் எல்லாம் மற்றவையளுக்கு போட்டு விடுவியலாம். என்னையும் வெள்ளையாக்குவியளா?

உங்கள் கவிதைகள் களத்தை மேலும் அலங்கரித்தபடியே........

சாந்தி

கவிதைகள். கதைகள் வடிப்பதில் திறமையானவர். பொதுப்பணிகளில் மேலும் சிறக்க வாழ்த்தியபடியே........

கவிதை -

அண்மையில் இணைந்தவர்.

பெயரும் கவிதை

தருவதும் கவிதை

கேட்டதும் கவிதை

தந்ததும் கவிதை

மலர்ந்தது கவிதை அந்தாதி

மகிழ்ந்தது மனது

பகிர்வது நன்றி

கவிப்பணி தொடர வாழ்த்தியபடியே....

சுஜி

ஏனோ தெரியவில்லை சுஜியின் கருத்துகளைவிட சுஜியை நிறைய பிடிக்கும். நகைச்சுவையாக் யார் எழுதினாலும் தனக்குள் ரசித்து, வாய்விட்டு சிரிப்பா.

வாய்விட்டு சிரிச்சா

நோய்விட்டு போகும்

சுஜி சிரிச்சா நாமும்

ஒருமுறை சிரிப்போம்

அந்த சிரிப்பு நிலைத்தபடியே...........

காரணிகன் -

இவரின் பதிவுகளும் அழகு. ஊர்புதினம். உலகநடப்பு, நலமோடு நலம் வாழ பகுதிகளில் பதிப்புகள் பிரயோசனமானது.

உங்களையும் நினைவுகூர்ந்தபடியே

வாத்தியார் -

உங்கள் பதிவுகளும் அழகு. இறுதியாக எனது பதிவில் கருத்து எனக்கே இந்த நிலைஎன்றால் என்று ஆதங்கமாக உங்கள் பதில் அமைந்திருந்தது.

நம்ம கறுப்பிக்கே இந்த நிலமையென்றால் நாங்கள் கொஞ்சம் அவதானமாகத் தான் இருக்க வேண்டும்

உங்களுக்கு அந்த நிலைமை வராது.

உங்களை அன்புடன் நினைவுகூர்ந்தபடியே***

என்னுடன் கருத்தாடல் செய்தவர்களை எல்லாம் பற்றி கொஞ்சம் எழுத ஆசை. எல்லாவற்றையும் எப்படியும் எழுதி முடிக்கவேண்டும் என்ற ஆவலில் எழுதத்தொடங்கினேன். ம்..... முடியவில்லை. தொடர்ந்துகொண்டே போகுது. கையும் நோகுது. இதற்காக இணைத்துக்கொள்ளமுடியாமல் போன உறவுகளிடம் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறேன்.

இதுவரை காலமும் என்னுடன் கருத்தாடலில் ஈடுபட்ட அத்தனை உறவுகளுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள். என் எழுத்து யார் மனதையும் காயப்படுத்தியிருந்தாலும் மன்னிபை வேண்டியபடியே***.............. விடை பெற்றுக்கொள்கிறேன்.

தடை செய்யப்பட்டேன் இப்படியும்

தடை செய்யப்படுவேன் என்று

நினைத்தும் பார்த்தது இல்லை

புதிய பெயர் ஊடாக

எங்கும் அனுமதியில்லை

விலகு என்றால்

விரும்பியே விலகிப்போயிருப்பேன்

வில்லங்கமாய் இருந்திருக்கமாட்டேன்

வலிகிறது மனசு

வலிகள் தாங்கிய மனசு

வலிக்காமல் வாழ்க்கையில்லை

எம்மவர்பட்ட வலிகளை விடவா

மிஞ்சிவிடப் போகிறது இவ்வலி

யாழ்கள உறவுகளை மறக்காமல் இருப்பதற்காக இந்தப்பதிவு.

விருந்தினராய் வானவில்லாய் வந்துபோவேன்.

நன்றி இனிய வணக்கங்கள்.

  • Replies 74
  • Views 6.2k
  • Created
  • Last Reply

என்னையும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி!

யாழோடுதான் இருக்கிறேன். யாழுக்காகவாவது ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது கறுப்பி எதற்காக உங்களை தடை செய்தார்கள்?...எதாவது தப்பு செய்தீர்களா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு தடையா? யாழ் இணையத்தில் தடைசெய்யப்பட்ட இணையத்தள செய்திகளை தொடர்ந்து இணைத்தீர்களா?? ஒன்றும் புரியவில்லை.சரி இதுக்கெல்லாம் கவலைப்படலாமா?? காலையும் மாலையும் யாழை தரிசனம் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்தேசியன் -

நீண்டபெயர். அழகான பெயர். இசையின்பால் இவருக்கு ஈடுபாடு அதிகம்.

நீங்கள் தரும் பாடல்களை ரசித்தபடியே *

ஆ ஆருயிர் தோழர்/தோழி கறுப்பிக்கு தடையா?ctrl+cctrl v செய்ததில் ஏதாவது கோளாறா? அல்லது பாஸ்வேர்ட் மறந்து போட்டீர்களா அல்லது யாராவது உங்களுக்கு நூல் விட்டு அதற்கு(இவர் ஆணா பெணா என்பதில் இனிக்கு வரைக்கு டவுட்டு உண்டு) பதிலுக்கு வம்படியா பேசி போட்டீர்களா.. ? ctrl+c ctrl +v தான் சிக்கல் எனில் அதுக்கெல்லாம் கவலை தேவையே இல்லை.. என்ன உங்களுக்கு ஜார்ஜ் புஸ் விருது கொடுக்க போகிறாரா?அதீத ஆர்வம். வேற யாருக்கும் நியூஸ் தெரியாது பாருங்க.! வீட்டுல போய் பிள்ளை குட்டிகளை ஸ்கூலில் படிக்க வைக்கிற வழிய பாருங்கப்பூ..

டிஸ்கி:

கருப்பி. கறுப்பி (எந்த ரூ போடுவது என்று இனி இலக்கிய ஆராய்சி செய்யவேணும்) இவர் அப்பாவியா தெரியரார்.. சிங்கள கைக்கூலியாகவும் தெரியவில்லை..அவரை ரிலீஸ் பண்ணுங்கப்பா.. கள போட்டியில் எல்லாம் கல்ந்து கொண்டு நிவாரண உதவி எல்லாம் செய்திருக்கார். அதுக்குமேல தடையென்றால் உங்கட உள்குத்து சமாச்சாரம் உங்களுக்குத்தான் தெரியும் ஐயாம் டோட்டலி கன்பூசன்.. :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

எமது தேசியத்தலைவர் எமக்கெல்லாம் கூறியது போல, ' நாம் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என வாழ்வோம்'.

இந்த யாழ்க்களத்தின் நெற்றிக்கண் ஊர்ப்புதினம், அதன் நட்சத்திரமாக விளங்கி பல நூறு உறவுகளின் 'நண்பி'யானவர் நீங்கள். அண்மையில் தான் எம்மில் பலரும் உங்களின் 20000 பதிவையிட்டு வாழ்த்தி இன்னும் பல பத்தாயிரம் பதிவுகளை வேண்டியிருந்தோம்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்ற வகையில் அதையும் நாம் ஏற்கிறோம்.

ஆனால் உங்கள் சேவையை karuppy - இந்தப்பெயரில் தொடர பணிவுடன்,உரிமையுடன் வேண்டுகிறேன். உங்கள் fans களை ஏமாற்றிவிடாதீர்கள்!

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

விடை தரமுடியாது.. :) ........மீண்டும் வருக. நல்ல ஒரு நண்பி(பன்) பாடல்களை எடுத்துவிடும பண்பானவள்.

என் கிறுக்கல் களும் தங்கள் மனம் தொட்ட்தையிட்டு மகிழ்ச்சி .

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை லிங்கம் -

இலக்கணாவத்தை என தான் பிறந்த ஊர் பற்றி அறியத்தந்தவர். இப்படி ஓர் ஊர் இருப்பதையே அறியாமல் இருந்திருக்கிறேன்.

தங்களையும் நினைவு கூர்ந்தபடியே

__________

நன்றி கறுப்பி அண்ணா/அக்கா, நல்ல பதிவு...உங்களை இடை நிறுத்தமா? நகைச்சுவையே வேண்ணாமெங்க, நீங்க செய்திப்பிரிவோடையே நில்லுங்க...

யாழ் இணையம் தான் எனக்கு தமிழில் தட்டச்சு செய்யும் பயிற்சியை கொடுத்தது , இதர இணையத்தளங்களில் எனக்கென்றொரு அந்தஸ்தை பெற்றுத்தந்தது, இன்று எந்தவிதமான அட்டகாசமுமில்லாது சமூகத்திலை சில விடயங்களை நகர்த்த வழிகோளி தந்தது, இப்படி பெரிய பட்டியலையே இங்கு இணைக்கலாம், இப்போ வேண்ணாம், வேறொரு சந்தர்ப்பத்திலை வாறனே....

என்னை மறக்காமல் குறிப்பிட்டதுக்கு நன்றிகள்...ஆனால்

தடை செய்யப்பட்டேன் இப்படியும்

தடை செய்யப்படுவேன் என்று

நினைத்தும் பார்த்தது இல்லை

புதிய பெயர் ஊடாக

எங்கும் அனுமதியில்லை

விலகு என்றால்

விரும்பியே விலகிப்போயிருப்பேன்

வில்லங்கமாய் இருந்திருக்கமாட்டேன்

வலிகிறது மனசு

வலிகள் தாங்கிய மனசு

வலிக்காமல் வாழ்க்கையில்லை

எம்மவர்பட்ட வலிகளை விடவா

மிஞ்சிவிடப் போகிறது இவ்வலி

அவசரப் பட்டு முடிவெடுக்க வேண்டாம் கறுப்பி. உங்களை யாரும் தடை செய்யவும் இல்லை, தடுக்கவும் இல்லை. இருபதாயிரத்துக்கு மேற்பட்ட கருத்துகள் எழுதியும் ஒரு எச்சரிக்கை புள்ளி தானும் வாங்காத மிகச் சிறந்த கருத்தாளரை தடை செய்யும் அளவுக்கு யாழ் நிர்வாகத்தில் இருப்பவர்கள் அரக்கர்கள் இல்லை

மோகன் அண்ணா உங்களின் ஐடியை பயன்படுத்தி (நீங்கள் அனுமதி கொடுத்த பின்) தானே எழுதி Test பண்ணிப் பார்த்தும், அவருக்கும் கூட சரி வருகுது இல்லை. எங்கே பிழை இருக்கு என்று தெரியாமல் அவரும் தவிக்கின்றார். உங்களுக்கும் தனி மடல் போட்டார் என நினைக்கின்றேன்

...அத்துடன் இந்தப் பிரச்சனை உங்களுக்கு மட்டுமல்ல. ஆராவமுதன் தொடக்கம் பலருக்கு யாழ் சில நாட்கள் இயங்காமல் விட்டு பின் இயங்க தொடங்கிய பின் ஏற்பட்டு இருக்கு என்பதையும் சொல்ல விரும்புகின்றேன். பலருக்கு எழுத முடியுது இல்லை. பலருக்கு தமிழ் எழுதுவதில் சிக்கல்...எனக்கும் கூட திண்ணையில் தமிழில் எழுதுவதில் பிரச்சனை...

நீங்கள் மீண்டும் இன்னொரு ஐடியில் வந்தபின், உங்கள் பிரச்னையை கவனிக்காமல் விட்டு விட்டோம். பையன் நல்லவன் எம் கஷ்டத்தை புரிந்து கொண்டவன் என்ற நினைப்பில் இருந்து விட்டோம்

எனவே தயவு செய்து இந்தக் காரணத்துக்காக விலக வேண்டாம். உங்கள் முடிவு எம் கள உறவுகளையும் பாதிக்கும். புலம் பெயர் வாழ்வில் கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரத்தில் சிறு பகுதியை செலவழிக்கும் நிர்வாகத்தில் உள்ளவர்களின் மனதையும் பாதிக்கும்

தவறான மனவருத்தத்தில் எடுத்த இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உங்களின்.. விடை பெறும் நேரமிது.. என்ற பதங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 20,000 க்கும் மேற்பட்ட கருத்துக்களை, செய்திகளை தந்தவர் நீங்கள். உங்களின் பழைய கணக்கிற்கு யாழ் களப் பொறுப்பாளரே உணர முடியாத அளவிற்கு ஏதோ ஒரு தொழில்நுட்பத் தவறு நடந்துவிட்டது. அது மனதிற்கு வருத்தம் அளித்தாலும்.. அது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனை. அதற்காக யாழில் இருந்து விடை பெறுவதாக இருந்தால்.. அது மகா தப்பு. இப்போ புதிய கணக்கில் உள்ள உங்களை புதியவராக யாழில் யாரும் பார்ப்பதாகத் தெரியவில்லை. எப்போதும் போலவே நீங்கள் எங்களில் ஒருவராகவே இருக்கிறீர்கள்.

நீங்களே உங்கள் ஆக்கத்தில் கூறி உள்ளது போல.. மோகன் அண்ணாவிற்கு எத்தனை தலையிடியோ. அத்தனைக்குள் அவர் உங்களின் புதிய கணக்குப் பற்றிய விடயத்தை கவனத்தில் கொள்ள கால அவகாசம் இன்றி இருந்திருக்கலாம். அவருக்காக ஒரு நீண்ட சந்தர்ப்பம் அளிப்பது அவரின் நிலையைப் புரிந்து கொண்ட உங்கள் எங்கள் கடமையும் கூட.

நீங்கள் வழமை போல.. யாழிற்கு வரனும்.. செய்திகள் தரனும்... ஒரிரு வரியில் கருத்துக்களை எழுதும் யாழ் கள வள்ளுவன் தாங்கள். அந்த ஒரு வரியில்.. இரு வரியில் தான் எத்தனை அர்த்தங்கள். பலப் பல அர்த்தங்கள்.நகைச்சுவைக்கு நகைச்சுவை.. அரசியலுக்கு அரசியல்.. கதைக்குக் கதை என்று அர்த்தங்கள் தந்தவர் தாங்கள்.

யாழ் கள உறவுகளின் சுய முயற்சியால் எழுந்த ஆக்கங்களை சலிப்புக்கு இடமின்றிப் படித்து ஊக்குவிப்பு நல்கியவர் தாங்கள். உங்களின் இந்த ஆக்கம் கூட உங்களின் மேலதிக எழுத்தாற்றலையும் வெளிப்படுத்தி நிற்கிறது. அது மகிழ்ச்சியும் அளிக்கிறது.

உங்களின் கவிதை அந்தாதி.. அந்தாதி என்ற தமிழ் கவி மரபியலுக்கு நவீன வடிவமே தந்திருக்கிறது. அதில் நீங்கள் தந்திருக்கும் கவிகள்.. நீங்கள் இட்ட தலைப்பிற்கு மட்டுமல்ல.. உங்களின் ஆற்றலை மிளிரவும் செய்திருக்கிறது. உங்கள் சுய ஆக்கங்களை எழுத்துக்களை பந்தி பந்தியாக இன்றி.. நீண்ட கவிதைகளில் படித்து ரசித்திருப்போர் ருசித்திருப்போர் பலர்.

இந்தச் சமயத்திலும் சரி எப்போதும் சரி உங்களைப் போன்ற அன்பான.. அமைதியான.. பண்பான கள உறவுகள் யாழ் களத்திலின்றும்.. விடைபெறுவதென்பது எண்ணிப்பார்க்கப்பட முடியாத ஒன்று. எனவே உங்களின் அந்த முடிவுகளுக்கு என்ன காரணங்களை நீங்கள் வைத்திருந்தாலும்.. அவற்றை எல்லாம் எமக்காக.. எமது மக்களுக்காக.. மொழிக்காக.. தேசத்திற்காக.. யாழிற்காக.. மூட்டை கட்டி வைத்துவிட்டு மீண்டும் எங்களோடு எப்போதும் போல.. கலகலப்பான அந்த உங்கள் இயல்போடு இணைந்திருக்க வேண்டும். நீங்களும் நாங்களும் அதன் மூலமே மன அமைதியும் சந்தோசமும் பெற முடியும்.

உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து... திருமணம் அப்படி இப்படி ஏதேனும் நடந்து எம்மை பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தால் கூட.. அந்தப் பிரிவு கூட தற்காலிகமானதாக அமைய வேண்டுகின்றோம்.

மற்றும்படி கள உறவுகளை நினைவூட்டும் இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி. உங்களின் எழுத்தாற்றலும் வியக்க வைக்கிறது.

என்றும் தோழமை நாடி..

நட்புப் பாராட்டிய படி..

நெடுக்ஸ்.

Edited by nedukkalapoovan

நீங்கள் கைத்தொலைபேசியூடாக உள்நுழைவதாக எங்கோ எழுதி வாசித்த ஞாபகம். அடிக்கடி உங்கள் settingsஇலும் மாற்றங்கள் செய்வீர்கள் என நினைக்கின்றேன். அதாவது, இது உங்களுகே நீங்கள் வைத்த சூனியம்போல் உள்ளது. பலரும் தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக கருத்துக்களத்திற்கு உள் நுழையமுடியாத அல்லது எழுதமுடியாத சந்தர்ப்பத்தில் தம்மை நிருவாகம் தடை செய்து உள்ளதோ என சந்தேகம் கொள்வது அல்லது நினைத்துக்கொள்வது வழமை. மோகன் உங்களிற்கு யாழில் தடைபோடுவதற்கு நேரம் கிடைக்குமா என்பதே முதலில் சந்தேகம். புதிய உறுப்பினர்களை மோகன் அல்லது இளைஞனே கருத்துகள உறவுகள் பகுதிக்கு அனுமதிக்க முடியும். இளைஞனை காணவில்லை, மோகனிற்கு நேரம் இல்லை. தவிர, தற்போதைய உங்கள் புதிய உறுப்புரிமையை அனுமதிப்பதைவிட பழையதில் உள்ள சிக்கலை சரிசெய்து தருவதையே மோகன் விரும்புவார் என்றும் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. யாழ் குடும்பத்தை விட்டு போகாமல் உங்கள் தற்காலிக பெயரில் எழுதுங்கள் மோகன் அண்ணா உங்களின் பழைய id ஐ சரி செய்யும் வரை.

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட வேண்டாம்... சில தொழில்நுட்ப காரணங்களால் குழப்பங்கள் நேர்ந்திருக்க வாய்ப்புண்டு. இவ்வளவு நண்பர்கள் குழாமை தவறவிட்டு செல்ல எப்படி மனம் வந்தது...? தனிப்பட்ட காரணங்களாயின் நல்லபடியாக முடித்துவிட்டு மீண்டும் வருக!

பொறுத்தார் பூமியாள்வார், கறுப்பி -.அது காலம் தாமதித்தாலும்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..... கறுப்பி, நீங்கள் நிர்வாகத்தை தவறாக புரிந்து விட்டீர்கள் போல் உள்ளது.

அவர்கள் உங்களை கனவிலும், தடை செய்ய நினைத்திருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

காலையில், எழுந்து கணனியை திறக்கும் போது....... நீங்கள் 7 மணிக்கு முன்பே அன்றைய செய்திகளை தேடி எடுத்துப் இணைக்கும் வேகம் யாருக்கும் இல்லை. அப்படிப் பட்டவர் களத்தை விட்டு ஒதுங்க நினைப்பது வேதனையானது. உங்கள் முடிவை மீளாய்வு செய்து, வழமையான உற்சாகத்துடன் களத்தில் வலம் வாருங்கள்.

நீங்கள் வராத பட்சத்தில்.... சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க யோசித்துள்ளோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் நானும்தான் சாகும்வரை உண்ணா விரதம் இருக்கப்போறன்.ஆனால் யார் சாகும்வரை எண்டுதான் இன்னமும் தீர்மானிக்கேல்லை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் நானும்தான் சாகும்வரை உண்ணா விரதம் இருக்கப்போறன்.ஆனால் யார் சாகும்வரை எண்டுதான் இன்னமும் தீர்மானிக்கேல்லை :wub:

9078933-a-souvenir-miniature-eiffel-tower-in-cast-metal.jpg இங்கு தான் உண்ணாவிரதம் நடத்த இருப்பதால்.... சாத்திரியார் தான் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்க வேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி போகவேண்டாம். உங்கள் setting தான் பிரச்சனையிருக்கும். எனக்கும் முன்பு இருந்தது. நானே திருத்திவிட்டேன்.

...

தடை செய்யப்பட்டேன் இப்படியும்

தடை செய்யப்படுவேன் என்று

நினைத்தும் பார்த்தது இல்லை

புதிய பெயர் ஊடாக

எங்கும் அனுமதியில்லை

விலகு என்றால்

விரும்பியே விலகிப்போயிருப்பேன்

வில்லங்கமாய் இருந்திருக்கமாட்டேன்

வலிகிறது மனசு

வலிகள் தாங்கிய மனசு

வலிக்காமல் வாழ்க்கையில்லை

எம்மவர்பட்ட வலிகளை விடவா

மிஞ்சிவிடப் போகிறது இவ்வலி

யாழ்கள உறவுகளை மறக்காமல் இருப்பதற்காக இந்தப்பதிவு.

விருந்தினராய் வானவில்லாய் வந்துபோவேன்.

நன்றி இனிய வணக்கங்கள்.

...

வணக்கம்,

கறுப்பி அல்லது karuppy ஆகிய பெயர்களுக்கு களத்தில் எந்த ஒரு தடையும் வழங்கப்படவில்லை. அண்மையில் கருத்துக்களம் முற்றாக செயலிழந்ததன் பின்னர் அனைத்தும் மீள புதுப்பிக்கப்பட்டது;. அதன் பின் கறுப்பி தன்னால் எழுத முடியாது எனத் தெரிவித்த போது சில ஆலோசனைகள் வழங்கி பின்னர் அவரிடம் அவரது பாவனைப்பெயர், கடவுச் சொல் பெற்று எவ்வளவே முயற்சித்தும் தவறினைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி தெரிவித்த பின்னரே karuppy என்ன பெயரில் இணைந்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் அனைத்துப் பகுதிகளிலும் எழுதுவதற்கான அனுமதி 06 August 2011 - 07:40 AM அன்றே வழங்கப்பட்டு விட்டது. அனுமதியின் பின்னரும் அவரால் பதிய முடியவில்லை எனில் இன்னமும் ஏதோ பிரச்சனைகள் களத்தில் உள்ளன. இன்று முடிந்தமட்டில் என்ன என்ன பிரச்சனைகள் உள்ளன என தேடி தீர்வுகள் காண முயற்சிக்கின்றேன்.

மிக விரைவில் களம் புதிய பதிப்பிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் போது பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என நம்பியுள்ளேன். ஆனாலும் புதிய பதிப்பிற்கு மாறும்போது புதிதாய் பல பிரச்சனைகள் வரும் என்ற எதிர்பார்ப்பும் நிறைய உள்ளது. :lol: :lol:

" மெல்லெனப் பாயும் ஓடை கல்லையும் உருட்டிப் பாயும் " கறுப்பி. எடுத்தேன் கவுட்டேன் என்று முடிவுகளை எடுக்கக் கூடாது, பொறுமை தேவை .மட்டு நிழலியின் அறிவுரையைக் கேளுங்கள். உங்களை நாங்கள் இழக்கத் தயாரில்லை. உங்கள் தனி வாழ்வில் மாற்றங்கள் வந்தாலும், யாழுடன் கோபிக்கத் தேவையில்லை. ஆற அமர இருந்து யோசியுங்கள் உலகில் மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதம் நாக்கு. அதிலிருந்து புறப்பட்ட எந்த சொற்களையும் திருப்பி எடுக்கமுடியாது. முடிவை மாற்றுங்கள் கறுப்பி. நன்றி.

அன்புடன்

கோமகன்

:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

Karuppy உங்கள் முடிவை பரிசிலனை செய்யவும், நீங்கள் முக்காட்டை எடுத்துவிட்டு விரைவில் தரிசனம் தருவீர்கள் என்று, வேலை வெட்டி செய்யாது Monitor பர்த்துக் கொண்டிப்பம்.

மடை திறந்து தாவும் யாழ் நதியிலை,

நான் வழிமேல் விழி வைத்து காத்திருப்பேன்,

இந்த கருங்குயில் மீண்டும் மனம் திறந்து கூவும் என்று

தொழில்நுட்ப பிரச்சனையாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். நீண்ட நேரம் திரும்பத்திரும்ப yarl.com /forum3 டைப் பண்ணிய பின்பு தான் பல நேரங்களில் எனக்கு அந்தப் பக்கம் வேலை செய்கிறது. தயவு செய்து நீங்களும் தொடர்ந்து முயற்சித்துப் பாருங்கள். எம்மோடு இணைத்திருங்கள் :)

(ரதியுடன் சேர்ந்து தண்ணி அடிக்க ரெடி என்று எழுதி இருந்தீர்கள்... தண்ணியடித்துவிட்டு கடவுச் சொல்லை உளறிய ஞாபகம் ஏதும் வருகிறதா?? சும்மா பகிடிக்கு... :D :D :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அண்ணா...பொம்பிளை விஸ்வாமித்திரரை மறந்துட்டார்..சரி அது போகட்டும். smile.gif

அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் ஒன்றும் நல்ல முடிவுகளாக இருக்காது...ஆகவே உங்களின் யாழ் மீதான பிரிதலை ஏற்றுக் கொள்ள முடியாது..தயவு செய்து அவசரப்படாதீர்கள்.யோசித்து நல்ல ஒரு தீர்மானத்திற்று வருவீர்கள் அதைப் பற்றிய செய்தியை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இத்தோடு முடிக்கிறேன்.நன்றி.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் கறுப்பியண்ணை அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் மோகன் அண்ணா நிலமையை தெளிவாக சொல்லியிருக்கார் சரிவரும் என்று நம்புகின்றேன் மற்றது தமிழ்ல தட்டச்சு செய்வதற்க்கு இலகுவான வழி இருக்கு இணைப்பு தருகின்றேன் அதிலே வழிகாட்டல்கள் இருக்கு அனைவரும் பாருங்கள் அந்த பென்பொருளை நிறுவியே நான் தமிழில் தட்டச்சு செய்கின்றேன் நீங்கள் google வழி சென்று copy & paste செய்யதேவை இல்லை

இணைப்பு- http://software.nhm.in/products/writer

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி!சும்மா பகிடிவிடாமல் மற்ற ஆக்கள் சொல்லுறதை கேளும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.