Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்த்திபன் , அபே சிறுவர்கள் உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபன் அபே உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் சாதனை

Published on June 1, 2013-8:03 pm   ·   No Comments

 

 உலகலாவிய‌ ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை  Smart Phone and Tablets  போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

நவீன உற்பத்தி முறைகளினால் மூளைசாலிக் கருவிகளின் விலையில் வீழ்ச்சி, அதே நேரம் அவற்றின் இயக்க வேகம் அதிகரிக்க, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இளம் சந்ததியின் கைகளில் இணைபிரியா நன்பனாக இவை போய்ச் சேர்ந்துள்ளன.

 

இத்தகைய சூழ்நிலையில் இந்தக் கருவிகளில் இயங்கும் விளையாட்டு மென்பொருட்களின் சந்தை நிச்சயமாக ஒரு வளரும் சந்தையாகும்.

 

பல பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த தொழிற்துறையில் நம்மவரின் பங்களிப்பு எந்த அளவில் உள்ளது ? நம் இளம் சந்ததி இந்த மென்பொருட்களைத் தயாரிப்பதில் போதிய அறிவூட்டலைப் பெற்றுள்ளதா ? அல்லது நம் சமுதாயம் தொழில்நுட்பம் வளர்ந்து எட்டாத்தொலைவை அடையும் வரைத் தயங்கி நிற்கப் போகிறதா ? இந்தக் கேள்விகள் நிச்சயம் கேட்கப் பட வேண்டியவை.

 

வர்த்தக மென்பொருட்கள் போலல்லாது விளையாட்டு மென்பொருட்கள் தொழில்நுட்ப ரீதியில் சிக்கல் நிறைந்தவை. அவற்றின் எல்லைகள் வரையறைக்கு உட்பட்டவை அல்ல. விளையாட்டு மென்பொருட்களில் பயன்படும் பல தொழில்நுட்பங்களும் தந்திரோபாயங்களும் இன்று அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் டலிபான்களை மடக்க பயன்படுத்துகின்றது. இத்தகைய மென்பொருட்களை வடிவமைப்பவர்களின் திறமைக்கு இது ஒரு சான்று.

இந்தவகையில் ஜேர்மனியில் வளர்ந்துவரும் 16 வயதுடைய சிறுவர்களான ஈழத்துச் சிறுவன் பார்த்திபன் ரமேஷ் வவுனியனும் இந்தியா ஜெய்ப்பூரைச் சேர்ந்த அபே பன்சால் இருவரும் இணைந்து கூகிள் அன்ட்ரொய்ட்டில் இயங்கும் விளையாட்டு மென்பொருளை உருவாக்கி சாதித்துள்ளார்கள். இவர்களுடைய சாதனை நம் இளம் சந்ததியை அடைந்து அவர்களுக்கு ஓர் ஆர்வத்தையும் அவர்களின் அறிவியல் வாசலையும் திறந்து வைக்க வேண்டும்.

420262_366223170065182_1435021814_n_zpsd

இன்று சிறந்து விளங்கும் மென்பொருள் தொழிநுட்பவியலார்கள் ஏதோ ஒரு கட்டத்தில் விளையாட்டு மென்பொருட்களை உருவாக்கியவர்களாகவே இருப்பார்கள். விளையாடு மென்பொருளை உருவாக்கும்போது அவர்களுக்கு ஆர்வத்தோடு தொழில்நுட்ப அறிவும், மூளையோடு சேர்ந்த நுண் அறிவும் கூடவே வளர்கின்றது.

abhay_zps11942c3b.jpg

அபே பன்சாலின் பெற்றோர்களான ரமேஷ் அகர்வால் , சீமா அகர்வால் இந்தியா ஜெய்பூரைச் சேர்ந்தவர்கள். பார்த்திபன் ரமேஷ் வவுனியனின் பெற்றோர்களான ரமேஷ் வவுனியன் ,சாந்தி ஈழத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இன்னும் பல சாதனைகளைப் படைக்க பார்த்திபன் ரமேஷ் அபே பன்சால் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

P6010128_zps54eb67da.jpg

 

பார்த்திபன் ரமேஷ் , அபே பன்சால் உருவாக்கிய பரஷூட் பையன் விளையாட்டை தரவிறக்கம் செய்ய.. https://play.google.com/store/apps/details?id=com.pagames.parachuteboy

 

http://www.thinakkathir.com/?p=50464

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்மென்பொருள் பற்றிய செய்தியை எழுதி தந்து உதவிய கள உறவு ஈசனுக்கு மிக்க நன்றிகள்.

எனது 16வயது மகனும் அவனது நண்பனும் இணைந்து உருவாக்கிய பரஷூட் பையன் விளையாட்டு மென்பொருளைப் பற்றிய செய்தியை முதலில் கள உறவுகளான  நிழலி, நெடுக்ஸ் ஆகியோருக்கு  தெரிவித்ததும் தங்கள் வரவேற்பை தந்தார்கள். நிழலியே ஈசனே இவ்விடயம் பற்றிய அறிதல் மிக்கவர் என்பதனை எனக்கு மடலிட்டிருந்ததோடு தனது முகப்புத்தகத்திலும் பகிர்ந்து கொண்டார்.

இந்த விளையாட்டு மென்பொருள் பற்றிய தகவலை சரியாக புரிந்து செய்தியாக  என்னால் வழங்க முடியாதிருந்தது. மற்றும் இதன் நுட்ப அறிவும் என்னிடம் இல்லை.

விடயத்தை தெரிவித்ததும்  உடன் பிள்ளைகளுக்கான பாராட்டினையும் தெரிவித்து செய்தியாக்கித் தந்த ஈசனுக்கு மீண்டும் நன்றிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபனுக்கு வாழ்த்துகள்

 

அவர் மேன்மேலும் இது போன்ற கண்டுபிடிப்புக்களைச் செய்து பல சாதனைகள்

படைக்கட்டும்  

 

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் எனது பராட்டுக்கள்.மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

 

மேலும் வளர்க! :D

எதிர்கால தமிழீழ முத்துக்களுக்கு என் வாழ்த்துக்கள் ..........இவர்கள் மென்மேலும் பல சாதனைகளை படைத்து ,தமிழுக்கும் ,இவர்கள் நாளை வாழப்போகும் தமிழீழத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு மென்பொருளைத் தயாரித்தவர்களுக்குப் பாராட்டுக்கள். இன்னும் அதிக செயலிகளை உருவாக்கி வெற்றி பெறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் வாழ்த்துக்கள் 

 

அக்குழந்தைகளுக்கு எனது பாராட்டுக்கள்.   தொடர்ந்தும் சாதனையாளர்களாக இருக்க எனது வாழ்த்துக்கள். 

வா ழ் த்துகள் ! இவர்கள் இன்னு ம் சாதிப்  பார்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபன், அபே ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
மென்பொருள் உருவாக்கத்தில் அதிக ஆர்வமுள்ள இருவரும், எதிர்காலத்தில்.... பல சாதனைகளைப் படைக்க வேண்டுகின்றேன். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. இளைஞர்களுக்கு என்றுமே வானமே எல்லை.. பார்த்திபன், அபய் மேலும் பல சாதனைகள் படைக்கட்டும்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள், உங்கள் முயற்சி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கட்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் நல்வாழ்த்துக்கள். உங்கள் தனிமடலுக்கு இன்னும் பதில் எழுதாததற்கு மன்னிக்கவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபன், அபே ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

தரவிரக்கி 5 star புள்ளியும் குடுத்தாயிற்று அன்றேயிட்டில் நன்றாக உள்ளது.

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபன், அபே ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
மென்பொருள் உருவாக்கத்தில் அதிக ஆர்வமுள்ள இருவரும், எதிர்காலத்தில்.... பல சாதனைகளைப் படைக்க வேண்டுகின்றேன்.

 

 வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இருவருக்கும் .....

 

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும்  வாழ்த்துகள்.

 

 

பார்த்திபன் ,அபே இருவருக்கும் வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் .அவர்களுக்கு 
ஒத்துழைப்பு வழங்கிய யாழ்கள உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்

 

வாழ்த்துக்கள், வாழ்க வளர்க.

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

 

https://play.google.com/store/apps/details?id=com.pagames.parachuteboy

 

இதுவரை..4.5 ஸ்ரார் வாங்கி இருக்கிறார்கள்.  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்வதில் இன்னும் இன்னும்..வெற்றி தங்கியுள்ளது. அதிலும்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

பாவனையாளர்களின் குறிப்புகளை அவதானித்து.. குறைகளை.. நிவர்த்தித்து.. மெருகூட்டிக் கொண்டே போவதும்.. இந்தத் துறையில் வெற்றிக்கு மிக அவசியம்..!

 

இது தொடர்பான ஒரு செய்திக்குறிப்பை எழுத சாந்தி அக்கா உதவி கேட்டிருந்தாங்க. இன்றைய பொழுதுகளில் அதற்காக நேர அவகாசம் கிடைக்கப் பெறாமைக்கு.. வருந்துகிறோம். ஈசனின்  பணிக்கும் வாழ்த்துக்கள்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பார்த்தீபன், அபே இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

SC_1.png

 

 

SC_2.jpg

 

 

 

 

 

 

 

 

 

இருவருக்கும் வாழ்த்துக்கள். இறக்கி ஐஞ்சு நச்சத்திரமும். என்னதான் பரசூட்ட வெட்டி வெட்டி ஓடினாலும் குறுக்கால போன எலியனில அடிபடுகுது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.