Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனியில் தமிழர்கள் நிகழ்வுகளை. நடத்துவதர்க்காக ஒரு மண்டபத்தை திறக்க இருக்கும் சபேசன் அண்ணாவை வாழ்த்துவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமது நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாக ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் ஒரு மண்டபத்தை திறக்கின்றேன். 150 பேர் வரை அமரக்கூடிய இடத்தினைக் கொண்ட மண்டபம் அது.

டோட்முண்டில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான றைனீச ஸ்ராஸ (Rheinische Str) ஒரு தமிழர் பகுதியாக மாறிக் கொண்டு வருகின்றது. 30இற்கும் மேற்பட்ட தமிழர் நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அது. அதில்தான் 'தமிழர் அரங்கு' என்று பெயரிடப்பட இருக்கும் இந்த மண்டபமும் அமைந்திருக்கிறது.

கலை நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், மொழி வகுப்புகள், கலை வகுப்புக்கள் போன்ற பல விடயங்களை இந்த மண்டபத்தில் நடத்திக் கொள்ளலாம்.

பல தமிழர்கள் வந்து செல்கின்ற வீதியில் அமைந்திருப்பதால், ஒரு நூல்நிலையத்தை இந்த மண்டபத்தில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

மண்டப முகவரி:

Rheinische Str 76

44137 Dortmund

08.10.2014 புதன்கிழமை 11 மணியிலிருந்து இந்த மண்டபம் திறக்கப்படுகிறது. வரக்கூடிய தொலைவில் வசிப்பவர்கள் அன்றைய நாள் வந்து மண்டபத்தை பார்வையிட்டு, தமது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

FB

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன். மாவீரர் நிகழ்வு நடத்தக்கூடிய மண்டபத்தை நீங்கள் அமைக்கும் நிலை வர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன். வேலைநாள் ஆனபடியால் நேரில் வரமுடியாது. இன்னொரு நாள் உங்கள் மண்டபத்திற்கு வருவேன் குடும்ப சகிதம். உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலவசமா

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற  வாழ்த்துக்கள்...

 

தமிழர் எவராயினும் சுய  தொழிலில் ஈடுபடவேண்டும் என எங்கும் சொல்பவன்

இங்கும் தொடர்ந்து எழுதிவருபவன்....

 

நல்லதொரு செய்தி எனக்கு..

 

மேலும் மேலும் வளர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள்  அமரக்கூடிய  வசதிகளுடன் வளர வாழ்த்துகின்றேன்.

 

இந்த மண்டப தொழிழில் நண்பர்கள் சிலர் ஏற்கனவே இருப்பதால் ஒரு விடயத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன்

மண்டபத்துடன் நின்றுவிடாது

மண்டப அலங்காரம்

ஒலி ஒளி  அமைப்பு

படப்பிடிப்பு

வாகன சேவை   மற்றும் வாகன தரிப்பிடம்

சிற்றூண்டிகள் சாப்பாடு மற்றும்  குளிர்பானங்கள்

மண்டப துப்பரவு..........

 

இவற்றையும் சேர்த்து செய்வதே  லாபகரமானது....

 


அத்துடன் யாழுக்கும் ஒரு விளம்பரம் கொடுத்துவிடுங்கள்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி சபேசன் வாழ்த்துக்கள்.இந்துக்களது திருமணத்திற்கு மண்டபத்தை வாடகைக்கு கொடுப்பாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி சபேசன் வாழ்த்துக்கள்.இந்துக்களது திருமணத்திற்கு மண்டபத்தை வாடகைக்கு கொடுப்பாரா?

 

ஆசை தோசை அப்பளம் வடை.....

  • கருத்துக்கள உறவுகள்
சிறு துளி பெருவெள்ளம். 150 இருக்கைகள் 1500ஆகி 3000தொட்டு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!! :rolleyes:  
 
அத்துடன் எங்களுடைய சில அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவது நல்லது. மண்டபத்தை இலகுவாகவும், துரிதமாகவும் சுத்தம் செய்யக்கூடிய வகையில் இருக்கைகளை அமைத்துக் கொள்ளவும்.  :icon_idea:
 
இனிப்புச் சுற்றிய காகிதங்களையும், கச்சான் கடலை வடை காவிய பைகளையும், மீளளிப்புப் பெறமுடியாத பானக புட்டிகளையும் சில வேளைகளில் பிள்ளைகளின் சந்தணம் தீர்த்தம் நிரம்பிய பொதிகளையும் யேர்மன்காரனது மண்டபத்தில் வீசி எறிவதற்கு மனம் சற்றே கூச்சமடைந்து நாங்கள் சிலர் கவலைகொள்வோம்.  :(
 
தமிழனுடைய மண்டபம் ஆகா.....! எங்கள் மண்ணின் மைந்தனது மண்டபம்...!! ஆனந்தமாக எதையும் எங்கும் வீசி எறியலாம்...!!!.  :D  :lol:  :wub:
 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..!

 

 

...
தமிழனுடைய மண்டபம் ஆகா.....! எங்கள் மண்ணின் மைந்தனது மண்டபம்...!! ஆனந்தமாக எதையும் எங்கும் வீசி எறியலாம்...!!!.  :D  :lol:  :wub:

 

 

குழுச் சண்டை போடுவதானாலும் 'தமிழன்' மண்டபத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம் தானே? :):lol:
 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன்..!

வாழ்த்துக்கள் சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி சபேசன் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது வர்த்தக விளம்பரமா.. சேவை விளம்பரமா..??!

 

எதுஎப்படியோ.. முயற்சிக்கு வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வர்த்தக விளம்பரமா.. சேவை விளம்பரமா..??!

 

எதுஎப்படியோ.. முயற்சிக்கு வாழ்த்துக்கள். :)

 

வர்த்தக சேவை கேள்விப்பட்டதில்ல?  :D

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் வாரவிடுமுறை நாட்களில் சபேசனைச் சந்தித்த போது இப்படியான நிகழ்வு நடக்க இருப்பதாகக் கூறினார். நேரம் இருந்தால் என்னையும் வந்து கலந்துகொள்ளும்படி கூறினார்.

 

அழைப்பிற்கு நன்றி சபேசன். அவசியம் வருவேன்.

பல முறை அவரைக் கண்டாலும் சனிக்கிழமை அவருடன்  சில நிமிடங்கள் கதைத்தேன். என்னை அறிமுகம் செய்து விட்டு நீங்கள் யாழ்ப்பக்கம் இப்போது அடிக்கடி வருவதில்லையே என்றேன்.
முகநூலில் அதிகம் நேரத்தை இழப்பதால் எழுதுவது குறைவு. ஆனாலும் தவறாமல் யாழை வாசிப்பதாகக் கூறினார். பொதுவாக யாழைப்பற்றிக் கதைத்தோம். முன்பு இருந்த மாதிரி இப்போது யாழ்  இல்லை எனக் குறைப்பட்டுக்கொண்டார்.

கதைப்பதற்கும் பழகுவதற்கும் இனிமையானவராக இருந்தார்.
இளம் வயதில் இந்த எழுத்தாற்றல் உங்களிடம் எப்படி வந்தது என வியந்தேன் . யாழில் பல காலமாக இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் கருத்துக்களால் மோதியது போன்று இன்று கருத்தாடுவது மிகவும் கடினமானதாக இருப்பதாக அங்கலாய்த்தார்.

மிகுதி எழுத நேரம் இல்லை ..... :D:lol:



.
 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன். :)

எட்டாம் திகதி  வர முடியாவிட்டாலும், டோட்முண்ட் பக்கம் வரும் போது... நிச்சயம் உங்கள் மண்டபத்திற்கு வருவேன்.
மண்டபத்தை பார்க்கும்... ஆவலை, கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால்... மண்டபத்தின், அஞ்சாறு படங்களை இணைத்து விடவும். :D

மிக்க மகிழ்ச்சி , வாழ்த்துக்கள் சபேசன். 

சுவிஸ் , ஜேர்மன் யாழ் கள உறவுகளின் ஒன்றுகூடல் ஒன்றினை உங்கள் மண்டபத்தில் நடாத்துவோம்

Edited by Athavan CH

நன்றி நண்பர்களே!

நேற்று வாத்தியார் வந்து வாழ்த்தி விட்டு போனார். அவர் சொல்லித்தான் இங்கே யாழ் களத்தில் இப்படி என்னை வாழ்த்துகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். மண்டப வேலையால் யாழ் களப் பக்கம் சில நாட்கள் வரவில்லை.

நேற்று 11 மணியிலிருந்து மாலை 7 மணி வரை பலர் தொடர்ச்சியாக வந்து வாழ்த்தியும் தமது கருத்துக்களை பகிர்ந்தும் சென்றிருந்தார்கள்.

சில படங்கள் எனது முகநூல் பக்கத்தில் இருக்கின்றன.

https://www.facebook.com/shabesanv/media_set?set=a.734848759896956.1073741827.100001155168574&type=1

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன்...!

வாழ்த்துக்கள் சபேசன்...!!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.