Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர்.

DSCN0824-300x225.jpg

2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது துணைவியாரையும் இந்நேரம் நினைவு கொள்கிறோம்.

நிழலியின் உதவியில் கழுவங்கேணி 1குடும்பலநல உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட போசாக்கு குறைந்த குழந்தைகளை நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது ஒருங்கிணைத்து உணவு வழங்கலோடு உளவள கருத்தரங்கினையும் நடத்தியிருந்தது.

கழுவங்கேணி கிராமமானது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்துள்ளது. இக் கிராமானது மட்டக்களப்பு நகரை அண்டிய ஒரு கிராமமாகும். 1300குடும்பங்களைக் கொண்ட இக்கிராமமானது மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டது. மிகவும் பின்தங்கிய இக்கிராமத்தில் 5சத வீதத்துக்குள்ளேயே கல்வித்தரம் இருக்கிறது.

அரபு நாடுகளுக்கு செல்லும் தாய்மார் அதிகமாக இக்கிராமத்தில் இருக்கிறார்கள். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்தும் கனவோடு அரபு நாடுகளுக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகள் எதிர்நோக்கும் சிக்கல்களும் பாதிப்புகள் அதிகம். இங்கு அதிகளவிலான பெண்பிள்ளைகள் 15,16வயதுகளில் திருமணம் செய்துவிடும் அவலம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கிறது.

திருமண வயதுக் கட்டுப்பாடு நாடெங்கிலும் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதுபோன்ற கிராமங்களில் இன்னும் மீறப்பட்டே வருகிறது. சுயபொருளாதார உயர்வு , கல்வியறிவு குறைந்த இத்தகைய கிராமங்களுக்கான நிரந்தர உளவள உயர்வு மேம்படுத்தப்பட வேண்டும்.

தங்களைத் தாங்களே சிந்திக்கவும் தங்களை வழிநடத்தவும் இவர்களுக்கு தற்போது வேண்டியது உளவள மேம்பாடு. தேன்சிட்டு உளவள அமைப்பின் செயற்பாட்டுக் குழுவினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உளவள மேம்பாட்டு பயிற்சிகளுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றால் இக்கிராமத்தையும் மேம்படுத்த முடியும்.

இக்கிராமத்தின் முதல் கருத்தரங்கை நடத்தவும் போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கான உணவையும் தந்து முதல் மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்கள மட்டுறுத்தினர் நிழலி அவர்களுக்கு எமது சிறப்பான நன்றிகள்.

DSCN0785-150x150.jpg DSCN0788-150x150.jpg DSCN0791-150x150.jpg

DSCN0797-150x150.jpg DSCN0809-150x150.jpg DSCN0813-150x150.jpg

DSCN0817-150x150.jpg DSCN0819-150x150.jpg DSCN0823-150x150.jpg

DSCN0824-150x150.jpg DSCN0825-150x150.jpg DSCN0828-150x150.jpg

DSCN0830-150x150.jpg DSCN0834-150x150.jpg DSCN0835-150x150.jpg

DSCN0840-150x150.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://nesakkaram.org/ta/nesakkaram.3753.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  களத்தில் இப்படியான முன்னுதரணமாகத் திகழும் உறவுகளில் நிழலியும் ஒருவர்.

தனது பிறந்த தினத்தை ஏழைகளின் மன நிறைவோடு பகிர்ந்துகொண்ட நிழலிக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மிக உன்னதமான செயல். இவர்களின் வாழ்த்துக்கள் போன்று வேறெதுவும் அமையாது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உன்னதமான செயல், வாழ்த்துக்கள் நிழலி...!

நல்லதொரு முன்னுதாரணமான செயலை செய்திருக்கும் நிழலி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!

இப்படி ஒரு குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாள் செலவை ஒவ்வொரு வருடமும் நாம் செய்தாலே பல குழந்தைகளுக்கு

தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறந்தநாட்களில் மட்டுமல்லாது இறந்தவர்களின் நினைவுநாட்களில் கூட இப்படியான தர்மங்கள் செய்தால் இறந்தவர்களின் ஆத்மா மகிழ்வடையும்.

( இறந்தவர்களின் நினைவு நாட்களில் (வெளிநாட்டில் உள்ளவர்கள்) ஊரை கூட்டி விருந்தளிப்பதிலும் பார்க்க 10 பிள்ளைகளுக்காவது உணவளிப்பது எவ்வளவோ மேல்)

 

அந்த குழந்தைகளின் மனம் நிறைந்த வாழ்த்து நிழலி அண்ணா குடும்பத்திற்கு மகிழ்வான வாழ்வை என்றும் கொடுக்கும்!!

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நினைக்க பெருமையா இருக்கு அண்ணா...........

நிழலி உங்கள் முன்னுதாரணம் நிச்சயமாக பாராட்டபடவேண்டியது. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது அடுத்த பிறந்த நாளுக்கு, இப்படியான ஒன்றைச் செய்யும் உத்தேசம் உள்ளது!

 

நன்றிகள், நிழலி!

 

உங்கள் முன்னுதாரணம் நிச்சயமாக என்னை வருங்காலத்தில் நெறிப்படுத்தும்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி

சிறப்பான பணி காலத்தின் தேவையுங்கூட.. 

 

வாழ்த்துக்கள் நிழலி அண்ணைக்கும் , உதவிகளை ஒருங்கிணைத்த சாந்தி அக்காவுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0824-300x225.jpg
 

படங்களைப் பார்க்க, எம்மையறியாமலே... ஆனந்தக் கண்ணீர் வருகின்றது.
உங்களை நினைக்க... பெருமையாக உள்ளது நிழலி.
இதனை உரியவர்களிடம், சேர்ப்பித்த சாந்திக்கு... பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி.

பாராட்டிய, வாழ்த்திய, பதிவுக்கு பச்சை குத்தி ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் என் அன்பான நன்றி.

 

நான் உணவு கொடுத்தது 365 நாட்களில் ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நேரத்திற்கு மட்டுமே. உதவிகள் கிடைக்காவிடின் மிகுதி 364 நாட்கள் இச் சிறுவர்கள் போசாக்கற்ற உணவுடன் தான் வாழப் போகின்றனர். இவர்களைப் போன்று தாயகத்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் போசாக்குள்ள நிறையுணவு இன்றி வளர்ந்து எதிர்காலத்தின் சவால்களை சந்திக்க போகின்றனர். தாயகத்தில் போரின் பின் ஒரு பலகீனமான சமுதாயமாக எம் சிறுவர்கள் வளரப் போகின்றனர்.

 

இதை சிங்கள அரசு நிவர்த்தி செய்ய போவதில்லை. அயல் தேசமும் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. சர்வதேசமும் இது பற்றி அக்கறை கொள்ளப் போவதில்லை.

 

ஆனால் எமக்கு இதை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் தார்மீக கடமை இருக்கின்றது. நாமும் கைவிட்டு விட்டால் இவர்களை எவரும் திரும்பிப்பார்க்கப் போவதில்லை.

 

சிறு துளி பெரு வெள்ளம்

 

தமிழினி குறிப்பிட்டுள்ளது போன்று ஒவ்வொரு குடும்பமும் தம் பிள்ளைகளின் ஒருவரின் பிறந்த நாள் அல்லது இறந்த ஒருவரின் நினைவு நாளன்று இவ்வாறான உதவிகளை செய்ய முன்வருவார்களாயின் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

 

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பர். இவ்வாறான உதவிகளை விளம்பரம் செய்வது தவறும் என்பர். ஆனால் இதை வெளியில் சொல்வதால் இவ்வாறான உதவிகளை செய்ய விரும்பி ஆனால் எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இவ்வாறான தகவல்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும். அத்துடன் இதைப் பார்க்கின்றவர்களுக்கு தாமும் செய்ய தூண்டுதலாகவும் இருக்கும்.

 

போன வருடமோ அல்லது அதற்கு முதல் வருடமோ உடையார் இப்படியான ஒரு விடயத்தினை செய்தார் என்று அறிந்தது எனக்கு ஒரு சிறு  தீப் பொறியாக மாறியது. நான் செய்த இவ் விடயமும் ஒரு சிலருக்கு தீப்பொறியாக மாறி பல சிறுவர்கள் / பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறு விளக்கைத் தானும் ஏற்றி வைக்கும் என்று நம்புகின்றேன்.

 

என் சலிப்பூட்டும் பல கேள்விகளுக்கும், தொடர் மின்னஞ்சல்களுக்கும் பொறுமையாக பதில் கொடுத்து இவ் நிகழ்வை ஒழுங்கு செய்த சாந்திக்கு என் நன்றி.

 

அத்துடன் யாழ் இணையம் இல்லாதிருந்தால் வழக்கம் போன்று வெறுமனே குடித்து கும்மாளம் மட்டுமே போட்டு இருப்பேன். மோகனுக்கும் நன்றி

 

- நிழலி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான

முன்னுதாரணமானதொரு நல்ல காரியம் செய்த தம்பி  நிழலிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

இவர் போன்ற  தம்பிகளைத்தந்த யாழுக்கு தலை வணங்குகின்றேன்.

 

 

 

 

சிறு துளி பெரு வெள்ளம்

 

தமிழினி குறிப்பிட்டுள்ளது போன்று ஒவ்வொரு குடும்பமும் தம் பிள்ளைகளின் ஒருவரின் பிறந்த நாள் அல்லது இறந்த ஒருவரின் நினைவு நாளன்று இவ்வாறான உதவிகளை செய்ய முன்வருவார்களாயின் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

 

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பர். இவ்வாறான உதவிகளை விளம்பரம் செய்வது தவறும் என்பர். ஆனால் இதை வெளியில் சொல்வதால் இவ்வாறான உதவிகளை செய்ய விரும்பி ஆனால் எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இவ்வாறான தகவல்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும். அத்துடன் இதைப் பார்க்கின்றவர்களுக்கு தாமும் செய்ய தூண்டுதலாகவும் இருக்கும்.

 

போன வருடமோ அல்லது அதற்கு முதல் வருடமோ உடையார் இப்படியான ஒரு விடயத்தினை செய்தார் என்று அறிந்தது எனக்கு ஒரு சிறு  தீப் பொறியாக மாறியது. நான் செய்த இவ் விடயமும் ஒரு சிலருக்கு தீப்பொறியாக மாறி பல சிறுவர்கள் / பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறு விளக்கைத் தானும் ஏற்றி வைக்கும் என்று நம்புகின்றேன்.

 

என் சலிப்பூட்டும் பல கேள்விகளுக்கும், தொடர் மின்னஞ்சல்களுக்கும் பொறுமையாக பதில் கொடுத்து இவ் நிகழ்வை ஒழுங்கு செய்த சாந்திக்கு என் நன்றி.

 

அத்துடன் யாழ் இணையம் இல்லாதிருந்தால் வழக்கம் போன்று வெறுமனே குடித்து கும்மாளம் மட்டுமே போட்டு இருப்பேன். மோகனுக்கும் நன்றி

 

- நிழலி

 

இது சம்பந்தமாக அதிகம் எழுத கூசும் தம்பி  நிழலி 

இவ்வளவு எழுதியுள்ளதே

இன்னொருவராவது செய்யமாட்டார்களா என்ற நம்பிக்கையில் தான்.....

உறவுகளே

மனமிருந்தால் இடமுண்டு...

 

 

நிழலியின் செயலுக்கும், சாந்தியின் சேவைக்கும் சிரம் தாழ்த்திய வந்தனங்கள்

நன்றி நிழலி .

  • கருத்துக்கள உறவுகள்

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

 

இதை முன்னின்று நடத்திய சாந்திக்கும் பண உதவிகள் செய்த நிழலிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிழலியும்.. விஜய்.. சூர்யா ரேஞ்சுக்கு ஒரு நாள் சத்துணவு திட்டம் செய்கிறாரா..??!

 

ஊரில ஒரு தடவை ஒரு பிரண்ட் எல்லாருக்கும் சைவ சாப்பாட்டுப் பார்சல் வாங்கித் தந்தான். என்னடா திடீரென்னு.. பாசமழை கொட்டுதேன்னு.. கேட்டா.. இல்ல மச்சான்.. அம்மம்மாட திவசம்.. அது தான் 10 பிச்சைக்காரங்களுக்கு அம்மா சாப்பாடு வாங்கிக் கொடு என்று சொன்னவ என்றான்.

 

சரி இப்படியாவது நன்மை நடக்குதேன்னு வாழ்த்தத்தான் வேணும்.

 

ஆனால்.. இந்தச் சத்துணவு திட்டத்தை கொஞ்சம் அகலமாக்கி.. ஒரு சத்துணவு பொடி மா திட்டத்தை கொண்டு வந்தால்.. அதன் மூலம்.. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும்.. பிள்ளைகளுக்கு சத்துணவும் ஆகும். நீண்ட கால ஒழுங்கில் அது பிள்ளைகள் சத்துணவை தமதாக்க..உதவும் இல்ல என்ற ஒரு ஆதங்கம் தான். மற்றும்படி.. நிழலியின் இந்த ஓர் நாள் சத்துணவு திட்டம்.. நடைமுறைப்படுத்தப்பட்டது ஒரு முன்மாதிரி என்பதிலும்.. நல்ல ஒரு வழிகாட்டலுக்கான ஆரம்பம் என்று கொள்வதே நல்லது. :icon_idea::)

 

 

 

 


ஒரு நாள் வாய்க்குருசியா உணவு போட்டிட்டு.. மிச்ச நாட்கள் அதனை எண்ணி பட்டினி போட வைப்பது பாவம் இல்லையா..???! :o:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறந்த செயற்பாட்டை செய்த நிழலியவர்களுக்கும் அதனைத் தாயகத்திலே முன்னெடுத்துப் பதிவிட்ட சாந்தியவர்களுக்கும் பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆனால்.. இந்தச் சத்துணவு திட்டத்தை கொஞ்சம் அகலமாக்கி.. ஒரு சத்துணவு பொடி மா திட்டத்தை கொண்டு வந்தால்.. அதன் மூலம்.. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும்.. பிள்ளைகளுக்கு சத்துணவும் ஆகும். நீண்ட கால ஒழுங்கில் அது பிள்ளைகள் சத்துணவை தமதாக்க..உதவும் இல்ல என்ற ஒரு ஆதங்கம் தான். 

 

ஒரு நாள் வாய்க்குருசியா உணவு போட்டிட்டு.. மிச்ச நாட்கள் அதனை எண்ணி பட்டினி போட வைப்பது பாவம் இல்லையா..???! :o:rolleyes::icon_idea:

 

நீங்க சொல்லவருவது உண்மைதான்

ஆனால் எப்பொழுதுமே சிறு துளிகள் தானே பெருவெள்ளம் ஆகின்றன.

 

நிழலி போல ஒவ்வொருவரும் செய்யும் போது

பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து சிலவற்றை  செய்யலாம்..

 

நான்

இந்த அடுத்த கட்டத்தில் நிற்பதால்  இதை இங்கு குறிப்பிடுகின்றேன்

இது போன்று சிலவிடயங்களைச்செய்தோர் ஒன்றிணைந்து

ஆண்டுக்கு பல லட்சங்களுக்கு பலபேருக்கு செய்யக்கூடியதாக இருக்கு.....

 

முதலில் இவர் போன்ற  இரக்கவாளிகளை அடையாளம் காணவேண்டும்

ஒன்றிணைக்கணும்

அடுத்த கட்டத்துக்கு போகலாம்.......... 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நிழலியின் முன்னுதாரண உதவியை வாசித்து பலர் தங்களது பிறந்தநாள் , உறவுகளின் நினைவுநாட்கள் போன்ற நிகழ்வுகளை சிறார்கள் , வயோதிபர்களின் தேவைகளுக்கு தந்துதவ முன்வந்து சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
 
எல்லா நன்மைளுக்கும் பின்னால் யாராவது ஒருவர் அல்லது சிலரின் எதிர்மறையான கருத்துக்களும் வரும். அதற்கு இந்த திரியும் விதிவிலக்கில்லாமல் ஒருவர் கருத்தெழுதியிருந்தார். ஆனால் பலருக்கு நிழலியின் எண்ணம் உதவியாக இருந்தது மட்டுமன்றி உதவிகளும் கிடைத்துள்ளது. 
 
நன்றிகள் நிழலி மற்றும் நிழலியின் எண்ணத்தை வரவேற்று ஆதரித்து ஊக்குவித்த கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.