Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10,000 பதிவுகளை கடந்த பயில்வான் கிருபனுக்கு வாழ்த்துக்கள்

Featured Replies

இன்று தன் 10,000 ஆவது பதிவை எட்டிய கிருபனுக்கு வாழ்த்துக்கள். கிருபனின் இணைப்புகள் பல பரந்த வாசிப்புக்குட்பட்டவையாகவும் பதில்கள் பல ஆழமானதாகவும் இருப்பன. ஆளும் கொஞ்சம் ஆழமான ஆள் தான்.

 

வாழ்த்துக்கள் கிரு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

10000.png

வாழ்த்துக்கள் கிருபன் ஜீ..... tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா.. மென்மேலும் ஆக்க பூர்வமான திரிகளில் தொடரலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எப்போதுமே பயில் வான் தான்.வாழ்த்துக்கள் ஜி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருபன்...!

10000 என்பது உங்களின் தன்னடக்கம். நியாயமாய் பார்த்தால் உங்களின் கட்டுரைகளை மும்மூன்று பகுதிகளாகப் போட்டிருந்தால் 30000 பதிவுகள் வந்திருக்க வேண்டும்...!  tw_blush:

வாழ்த்துக்கள் கிருபன்

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருபன் ஐயா

தொடருங்கோ....

வாழ்த்துக்கள் கிருபன்

வாழ்த்துக்கள் கிருபன். யாழ் களத்திலே நடுநிலையான கருத்தாளன் மட்டுமல்ல, உங்கள் கருத்துகளின் ஆழம், சிலவரிகளிலேயே கருத்தை வேரூன்றி பதிக்கும் விதம், உங்களிடம் நான் நிறைய கற்றுகொள்ள வேண்டும் என்று எண்ணத்தோன்றும்.

உங்களின் ஆழமான வாசிப்பு திறனுக்கும் தேடலுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.  

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம் என்ன .... மென்மேலும் பல ஆயிரங்கள் பதிந்திட வாழ்த்துக்கள் கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் 10000 பதிவுகளை இட்டார் என நம்ப முடியாமல் உள்ளது.3000 கருத்துகள் அவரது கருத்துக்களாக இருக்க மிச்சமெல்லாம் அவர் தேடி இணைத்த பதிவுகளாக இருக்கும்.எது எப்படி இருந்தாலும் பல் வேறுபட்ட இணைப்புக்களை தேடி இணைப்பதற்காக வாழ்த்துக்களும்,நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நீங்கள் ஒரு சகல கலா வல்லுனர் !

பாராட்டுக்களும், நன்றிகளும்!

யாழ் நங்கைக்கு... இருபத்திரண்டு வயதாகும் போது  நீங்கள் இருபதினாயிரம் பதிவுகளைத் தாண்ட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் கிருபன் சார்! 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக் கூறியவர்களுக்கும், திரியைத் தொடங்கிய நிழலிக்கும் நன்றிகள்.

10 000 என்பது வெறும் இலக்கம் என்றாலும், யாழில் கடந்த பன்னிரண்டு வருடங்களாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்துள்ளேன் என்றுதான் சொல்கின்றது.

கருணாவின் பிரிவோடு யாழில் பயணிக்கத் தொடங்கி, 2009 இன் ஆரம்பத்தில் போராட்டத்தின் வீழ்ச்சியடையப் போவதை உணர்ந்து எதுவும் எழுதப் பிடிக்காமல் பல மாதங்கள் ஒதுங்கியிருந்தாலும், வாழ்வின் ஒரு அங்கமாகப் போய்விட்ட யாழில் இருந்து விலகியிருக்க முடியவில்லை. யாழ் இருக்கும் வரை தொடர்ந்தும் இணைந்திருப்பேன் என்று நம்புகின்றேன்.

பல சமூக வலைத்தளங்கள், வலைப் பதிவுகளில் எல்லாம் அரசியல், இலக்கிய உரையாடல்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கள் உள்ள இன்றைய காலத்தில் நான் யாழில் மட்டுமே கருத்தாடல்களைச் செய்துவருகின்றேன். முகநூலில் ஒரு சிலரோடு நட்பு வட்டத்தில் இணைந்திருந்தாலும், அரசியல், இலக்கிய கருத்துக்கள் இடுவதேயில்லை.

சொந்தமாக நிறைய எழுதவேண்டும் என்று நினைத்தாலும், அவசரமான உலகத்தில் அமைதியான நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான் வாசிப்பவற்றை மற்றவர்களுடன் பகிர யாழில் ஒட்டிக்கொண்டிருக்கின்றேன் :)

யாழில் இருந்து அறிமுகமான சிலரை நேரடியாகக் சந்தித்திருந்தாலும், ஐரோப்பாவில் இருக்கும் பலரைச் இன்னமும் சந்திக்கவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் வரக்கூடும் என்று நினைக்கின்றேன்.

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வாழ்த்துக் கூறியவர்களுக்கும், திரியைத் தொடங்கிய நிழலிக்கும் நன்றிகள்.

யாழில் இருந்து அறிமுகமான சிலரை நேரடியாகக் சந்தித்திருந்தாலும், ஐரோப்பாவில் இருக்கும் பலரைச் இன்னமும் சந்திக்கவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் வரக்கூடும் என்று நினைக்கின்றேன்.

 

வரும்

வாங்க ராசா.....

 

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்க வளமுடன்

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா

வாழ்த்துக்கள் கிருபன், யாழின் பல சிறந்த பதிவுகளின் பதிவாளர் நீங்கள் , உங்கள் தரமான பதிவுகளுக்கு நன்றிகள் பல. தொடர்ந்து பதியுங்கள்........

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! :)

யாழை மீட்டுவதற்கு அமைதியான நேரமும் வேண்டும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!! :):)

On 4/1/2016 at 4:15 AM, கிருபன் said:

வாழ்த்துக் கூறியவர்களுக்கும், திரியைத் தொடங்கிய நிழலிக்கும் நன்றிகள்.

10 000 என்பது வெறும் இலக்கம் என்றாலும், யாழில் கடந்த பன்னிரண்டு வருடங்களாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்துள்ளேன் என்றுதான் சொல்கின்றது.

கருணாவின் பிரிவோடு யாழில் பயணிக்கத் தொடங்கி, 2009 இன் ஆரம்பத்தில் போராட்டத்தின் வீழ்ச்சியடையப் போவதை உணர்ந்து எதுவும் எழுதப் பிடிக்காமல் பல மாதங்கள் ஒதுங்கியிருந்தாலும், வாழ்வின் ஒரு அங்கமாகப் போய்விட்ட யாழில் இருந்து விலகியிருக்க முடியவில்லை. யாழ் இருக்கும் வரை தொடர்ந்தும் இணைந்திருப்பேன் என்று நம்புகின்றேன்.

பல சமூக வலைத்தளங்கள், வலைப் பதிவுகளில் எல்லாம் அரசியல், இலக்கிய உரையாடல்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கள் உள்ள இன்றைய காலத்தில் நான் யாழில் மட்டுமே கருத்தாடல்களைச் செய்துவருகின்றேன். முகநூலில் ஒரு சிலரோடு நட்பு வட்டத்தில் இணைந்திருந்தாலும், அரசியல், இலக்கிய கருத்துக்கள் இடுவதேயில்லை.

சொந்தமாக நிறைய எழுதவேண்டும் என்று நினைத்தாலும், அவசரமான உலகத்தில் அமைதியான நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான் வாசிப்பவற்றை மற்றவர்களுடன் பகிர யாழில் ஒட்டிக்கொண்டிருக்கின்றேன் :)

யாழில் இருந்து அறிமுகமான சிலரை நேரடியாகக் சந்தித்திருந்தாலும், ஐரோப்பாவில் இருக்கும் பலரைச் இன்னமும் சந்திக்கவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் வரக்கூடும் என்று நினைக்கின்றேன்.

 

வாழ்த்துக்கள் கிருபன்! நீங்கள் பத்தாயிரம் கருத்துக்களை இங்கே பதிவிட்டு இருந்தால் அதை நேரக்கணக்காய் பார்த்தால் ஒரு பதிவுக்கு ஐந்து நிமிடங்கள் செலவளிக்கின்றீர்கள் என்று பார்த்தால் கூட (இணைப்பது, எழுதுவது, வாசிப்பது), அத்துடன் ஏனைய உதிரி நேரங்களையும் கணக்குபார்த்தால் எப்படியும் 10000 * 5/ 60 * 24 ----> கிட்டத்தட்ட உங்கள் வாழ்வில் முழுமையாக ஆகக்குறைந்தது ஒரு மாதமாவது இங்கே கழிந்துள்ளது. எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் யாழ் இணையத்தை மறப்பது முடியாத காரியம். 

பேஸ்புக்கில் செய்யக்கூடிய விடயங்களை இங்கே செய்வது சரிப்பட்டு வராது, அவ்வாறே இங்கே எழுதி கருத்தாடுவதுபோல் பேஸ்புக்கில் செய்யமுடியாது. முகம் அறிந்தவர்களுடன் தனிப்பட தொடர்புகளை பேணுவதற்கு நீண்ட இடைவெளியின் பின் நானும் மீண்டும் பேஸ்புக்கினுள் நுழைந்துள்ளேன். ஏன் என்றால் இப்போது தொலைபேசியில் பிடிக்க முடியாதவர்களை பேஸ்புக்கினூடுதான் தொடர்புகொள்ள முடிகின்றது. இவ்வாறே யாழுடனும் இடைவெளிகள் விட்டுவிட்டு தொடர்ந்து இணைந்தே இருக்கின்றேன். காரணம், யாழ் கருத்துக்களத்தில் பெறுகின்ற அனுபவம் தனித்துவமானது. பேஸ்புக் மூலம் அல்லது வேறு சமூக வலைத்தளங்கள் மூலம் யாழை ஈடுசெய்யமுடியாது. 

கடந்த பதினைந்து, இருபது வருடங்களின் முன் நான் பேஸ்புக்கிலோ அல்லது யாழ் இணையத்திலோ நின்று மினக்கட்டேனா என்றால் இல்லை. அப்படியானால் இப்போது இவை ஏன் தேவைப்படுகின்றன, இவற்றை விலத்தி வைக்கமுடியாதா என்றும் நான் நினைப்பது உண்டு. மனதை கட்டுப்படுத்தி விலத்தி வைக்கலாம், ஆனால், மீண்டும் கேள்வி எழுகின்றது, விலத்தி வைப்பதன் மூலம் நான் சாதிக்கக்கூடியது என்ன/எவை?

ஒரு விதத்தில் பார்த்தால் இங்கே செலவளிக்கும் நேரத்தை பணம் பார்ப்பதற்கு பயன்படுத்தலாம். அல்லது கற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், மேலதிக பணம், கல்வி இவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகின்றேன் என்றும் பின்பும் கேள்வி எழுகின்றது. பொதுவாக வாழ்க்கையில் நாங்கள் பணத்தை பெருக்குவதையும், அறிவை பெருக்குவதையும் பிரயோசனமான விசயமாக கருதுகின்றோம். மற்றவர்களுடன் உரையாடுவதை/ பொழுதுபோக்குவதை/ அரட்டை அடிப்பதை பிரயோசமான விடயமாக எடுக்காது நேரத்தை வீண் அடிக்கும் விடயமாகவே கொள்கின்றோம். இந்தவகையில் யாழில் மினக்கடுவதை நான் வீண்விரயமாகவும் நினைப்பதுண்டு. மறுபுறமாக பார்த்தால் நுகர்வு, மற்றும் தொடர்பாடல் இல்லையானால் வாழ்க்கையில் வாழ்வது என்பது எங்கே நடைபெறுகின்றது என்று கேள்வி எழுகின்றது. பணம், அறிவு, திறமைகளை அதிகரிக்கும் செயல்முறைகளை மட்டுமே வாழ்தலாக கொள்ளமுடிகின்றதா?

அடிப்படையில் வாழ்க்கை என்பது நினைவுகளும், அனுபவங்களும் என்று எண்ணுகின்றேன். இந்தவகையில் யாழ் கருத்துக்களமும் எங்கள் நினைவுகளிலும், அனுபவங்களிலும் பகிரப்பட்டு வாழ்க்கையில் ஓர் பகுதியாகிவிட்டது. யாழ் இணையத்தில் பழகுபவர்கள் எல்லாருமே நல்லவர்களோ அல்லது வல்லவர்களோ என்று இல்லை. ஆனால், இங்கே கிடைக்கும் அனுபவங்கள், அவை எங்களுக்குள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படுத்துகின்ற வினாக்கள், சிந்தனைகள், தேடல்கள் அளப்பரியன. இது ஒவ்வொரு கள உறவுக்கும் தனித்துவமாய் அமையும். 

யாழ் இணையத்தில் நான் இணைந்த ஆரம்ப காலத்திலேயே கருத்துக்களை எழுதும் விதம், கருத்துக்களின் பொருளடக்கத்தை வைத்து உங்களை ஓர் அறிவாளியாய் (அல்லது விசயம் உள்ளவராய்) எடைபோட்டேன். உங்கள் வலைப்பதிவையும் அப்போதே பார்வையிட்டு இருக்கின்றேன், பச்சிலர் பார்ட்டி கவிதை நினைவில் நிற்பது. சில வருடங்களின் முன் உங்களை நேரில் சந்திக்க ஓர் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. எதிர்காலத்தில் இங்கு அரசியலிற்கு அப்பால் தத்துவம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட விடயங்களிலும் இறங்கி ஆழம் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,

இணையமும், சமூக வலைத் தளங்களும் மனிதர்களின் தொடர்பாடல்களை மாற்றியமைத்துள்ளன என்பது உண்மைதான். இவை இல்லாமலிருந்த காலத்திலும் தொடர்பாடல்களுக்கு பல்வேறு வழிகள் இருந்தன. ஆனால் நேரடியான தொடர்பாடல் வேண்டும் என்பதால் வெளியே பொது இடங்களிலும், களியாட்ட விடுதிகளிலும் உரையாடல்கள் இருந்தன. இப்போது அவை இருந்தாலும் இளையவர்கள் பலர் வீட்டினுள் இருந்தே உரையாடவும், வேண்டிய விடயங்களை அறிந்துகொள்ளவும் முடிகின்றது. எனவே நேரடித் தொடர்பாடல்களுக்கும், மெய்நிகர் (virtual) தொடர்பாடல்களுக்கும் இடையான கோடு மழுங்கிவருகின்றது. அதனால் இவை இல்லாத வாழ்வு என்பது எண்ணிப்பார்க்கமுடியாதது. இமய மலைக்குப் போனாலும் கருவிகளிலும், உணர்விகளிலும் இருந்து தப்பியோடமுடியாது. எனவே இவற்றையெல்லாம் எம்மை வளப்படுத்த எப்படிப் பாவிக்கலாம் என்று சிந்திப்பதுதான் நல்லது.

யாழ் இணையத்தில் உள்ளவர்களுடன் கருத்தாடல்களில் ஈடுபடும்போது அவர்களின் கருத்துக்களைக் கொண்டு ஒரு பிம்பம் கட்டப்படுகின்றது. இதைப்போல நாமும் எமது கருத்துக்களின் மூலம் ஒரு பிம்பத்தைக் கட்டுகின்றோம். அந்த பிம்பம் நிலைத்திருக்க எதிர்காலத்தில் AI ஐ பாவித்து நாம் உயிரோடில்லாத போதும் தொடர்ந்தும் கருத்தாடல்களைச் செய்ய முடியும் என்று நினைக்கின்றேன். அதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே உருவாகிவிட்டது. 

நான் பல விடயங்களை அறிய விரும்பினாலும் எதிலும் ஆழமான ஈடுபாட்டோடு மினக்கெடுவதில்லை. தொழிலிலும் அப்படித்தான். எதையும் பருந்துப் பார்வையாக பார்த்தே பழகிவிட்டது. நுட்பமான உள்விடயங்களை அதிகம் அறிந்துகொள்ளவும், ஆழங்களைப் புரிந்துகொள்ளவும் நேரம் அதிகம் தேவை. அப்படி நேரத்தைச் செலவழிக்கத் தேவையா என்று என்னை நானே கேட்டுக்கொள்வதுதான் அதிகம். எதிர்காலத்தில் ஆறுதலாக இருக்க நேரம் கிடைத்தால் அதனைப் பிரயோசனமாகப் பயன்படுத்த தொழில்நுட்பங்களை அறியத்தான் முயல்வேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.