Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் சோழியன் அண்ணா காலமானார்

Featured Replies

மிகவும் துயரமான செய்தி. பல்கலை ஆற்றல்கள் கொண்டவர்.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

குடும்பத்தினரின் துயரில் யாழ் குடும்பத்துடன் இணைந்து பங்குகொள்கின்றேன்.  

+++

மோகன், முகப்பில் சோழியன் அண்ணாவின் அஞ்சலியை இணைத்தமைக்கு நன்றி!

  • Replies 120
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல் வேலையாக விடிகாலையில்...யாழைத் திறப்பது தான் எனது வழக்கம்!

இன்றைய செய்தி இடியைப் போல இறங்கியது!

முகநூல் மூலமும், யாழ் மூலமும் மிகவும் நெருங்கியவர்!

அண்மையில் கூட ஊருக்குப் போய் வந்து..திருவிழாப் படங்களைப் பெருமையுடன் இணைத்திருந்தார்!

 

கோஷான் கூறியது போன்று...இந்த உலகம் நல்லவர்களை நீண்ட காலம் விட்டு வைப்பதில்லை!

 

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்!

 

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆழ்ந்த அனுதாபஙகள்

Edited by unarvu

எழுத்துலகில் தனக்கான இருக்கையையும் தன்னோடு சார்ந்தவர்களிற்கான இருக்கையையும் உருவாக்கி தந்த வழிகாட்டி சோழியன் அண்ணா.  என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த ஆசான். இழப்பறிந்து துடிக்கிறது மனது. வயது வித்தியாசமின்றி பழகிய அன்பான நண்பன்.

வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை காலம் காட்டி சென்றாலும் ஒரு சிலரே மனதோடு நெருக்கமாகின்றனர். என் எழுத்தை இணையத்தில் ஏற்ற தொடங்கிய காலம் தொடக்கம் நேற்றுவரை கரம் கொடுத்து தூக்கிய அன்பு நண்பர் இன்று எம்மோடு இல்லை.

எழுத்துக்கள் வாழும் காலம் வரை உன் பெயர் நிலைக்கும் அண்ணா. 

ஆழ்ந்த அனுதாபஙகள்

என்றும் உங்கள் ஆசியோடு

கரவை பரணீ



 

மிகவும் கவலையான செய்தி. சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரபல தமிழ் எழுத்தாளரும்,
சோழியான் என்ற புனைபெயரில்
தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும்,
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும்,
பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப்
பிறப்பிடமாகக் கொண்டவரும்
ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான
திரு. இராஜன் முருகவேல் அவர்கள்
15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னாரது இறுதிக்கிரியைகள்
30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.

கிரியைகள் நடைபெறும் இடம்:
GE BE IN Bestattungsinstitut,
Korn Strasse. 217,
28201 Bremen

நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை

உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:
செல்லிடப் பேசி.
மகன் - 0049 176 20102799

'பிரபல தமிழ் எழுத்தாளரும், சோழியான் என்ற புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும், கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும், பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான திரு. இராஜன் முருகவேல் அவர்கள் 15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்  அன்னாரது இறுதிக்கிரியைகள் 30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.  கிரியைகள் நடைபெறும் இடம்: GE BE IN Bestattungsinstitut, Korn Strasse. 217, 28201 Bremen  நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை  உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  தொடர்புகளுக்கு: செல்லிடப் பேசி. மகன்    -    0049 176 20102799'

15039740_1532486073434670_2632119017718903866_o.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் மறைவை  மறுக்கிறது மனது. பழக இனிமையானவர். எனது யாழ் பயணத் திரியின் பின்னர் எப்படியோ எனது முகப் புத்தகத்தை மோப்பம் பிடித்து நண்பராக இணைத்திருந்தார். எனது முகப்புத்தகம் கடும் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அந்த நட்பு அழைப்பை அப்படியே விட்டுவிட்டேன்.

அண்ணா,  உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக, அத்துடன் அவரின் மனைவி, பிள்ளைகள் நண்பர்களின் துயரில் நானும் பங்கு கொள்ளுகிறேன்.

மிகவும் துக்கம் தரும் செய்தி.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக.

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

அனைவருடனும் இனிமையகநட்பாக பழகும் சோழியன் அண்ணாவின் இழப்பு கவலையை தருகிறது.

அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் அண்ணாவின் மரணத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மனம் நம்ம மறுக்கின்றது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கெல்லாமோ அலைந்து ...யாழ்களம் எனும் வீட்டில் முகமறியாமலே சகோதரபாசத்துடன் பழகிய எம் சோழியன் அண்ணாவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை..இது பொய்யாக இருக்கக்கூடாதா என் மனம் தத்தளிக்கின்றது.
சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி....அவரின் பிரிவின் துயரால் மூழ்கியிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சுப் பார்க்கவே முடியல்ல. மிகவும் அதிர்ச்சியான செய்தி மட்டுமன்றி ஒரு அன்பான குடும்ப உறவை இழந்த சோகம். இப்போது தான் இந்தச் செய்தியே கிட்டியது.

மாள முடியாத சோகம். இன்னும் எவ்வளவோ சாதிப்பார் என்று எதிர்பார்த்திருந்த போதில்......................................

வெறும் கண்ணீரஞ்சலியால் அடங்கிவிட முடியாது.. இந்தச் சோகத்தை. 

நம்பவே கஸ்டமா உள்ளது. 

சோழியன் அண்ணா,

மிகவும் துயரமாக இருக்கிறது 

எத்தனை எத்தனை  தடவைகள் அன்பும் ஆறுதலும் பாராட்டும்,

சந்திக்ககூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சந்திக்காமல் போனதை இப்ப நினைத்து வருந்துகிறேன்... 

நீங்கள் நேசித்த இறைவனிடத்தில் அமைதி கொள்ளுங்கள் அண்ணா.

நீங்கள் எனக்கு அனுப்பிய கதைகளையும் வில்லிசை நிகழ்வுகளையும் இனியாவது பார்த்துவிடுகிறேன்... tw_cold_sweat:

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மதியம்  இந்த செய்தியை பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும் கவைலையாகவும் இருந்தது.  நம்ப முடியவில்லை :( யாழில் இணைந்த காலத்தில் இருந்து மிகவும் நடப்பாகவும் இனிமையாகவும் பழகிய நண்பர்.  பின்னர் முகப்புத்தகத்தில் நண்பர்களாகி farmville இல் இருவரும் நேரம் கழித்தோம்.  அவரது ஆக்கங்கள் வில்லுபாட்டுகளை பகிர்வார்.  பின்னர் சில காலங்கள் தொடர்பற்று போக, முகப்புத்தகத்தில் சில கட்டுப்பாடுகளை செய்தபோது அவர் முகப்புத்தக நடப்பு அறுந்து விட்ட்து. :(
சோழியான் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

எங்கள் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய சோழியன் அண்ணாவின் திடீர் மறைவு நீங்க முடியாத சோகத்தையும் வேதனை அளிக்கிறது. இந்த வேளையில் அவரின் மறைவால் துயரிற்றிருக்கும் அவர் தம் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் யாழ் கள மற்றும் முகநூல் நண்பர்கள் உட்பட எல்லோரோடும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

குருவிகள் மற்றும் நண்பர்கள். 

யாழின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து களத்திற்கு தனது படைப்புகளால் மெருகேற்றி ஏனைய அங்கத்தவர்களையும் எழுதுவதற்கு உற்சாகப்படுத்திய கள உறவான சோழியான் அண்ணாவின் மறைவுச் செய்தி கவலை தருகிறது. 

அவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர் உறவினர் நண்பர்கள்  அனைவருக்கும் ஆழ்ந்த  அனுதாபங்களைப் பதிவு செய்கிறேன்.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

செத்தும் கொடுத்தான் சீதக்காதி !


மறைந்தும் கொடுத்தார் எங்கள் யாழுறவு சோழியன் !!


தான் மறைந்துவிட்டபோதும், மறைந்திருந்த பல யாழ் உறவுகளை மீண்டும் களத்தில் காணவைத்த பெருமை சோழியன் அவர்களையே சாரும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.