Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்:-

Featured Replies

முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்:-

 

image-1.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

image-2.jpgimage-4.jpgimage-5.jpgimage-1-1.jpgimageimage-3.jpg

 

 

https://globaltamilnews.net/archives/27169

  • தொடங்கியவர்
நினைவேந்தல்....
 
18-05-2017 10:52 AM
Comments - 0       Views - 7

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

article_1495085737-mulli-%281%29.jpg

வடமாகாண சபை ஏற்பாடு செய்த  நினைவேந்தல் நிகழ்வு, இன்று காலை 9.30 மணிக்கு, முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில்  நடைபெற்றது.

article_1495085753-mulli-%282%29.jpg

article_1495085760-mulli-%283%29.jpg

article_1495085767-mulli-%284%29.jpg

article_1495085775-mulli-%285%29.jpg

article_1495085782-mulli-%286%29.jpg

article_1495085789-mulli-%287%29.jpg

article_1495085799-mulli-%288%29.jpg

article_1495085816-mulli-%289%29.jpg

article_1495085824-mulli-%2810%29.jpg

யாழ். பல்கலைக்கழகம்

article_1495086106-jaffna.jpg

(சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன், சண்முகம் தவசீலன்)

- See more at: http://www.tamilmirror.lk/196856/ந-ன-வ-ந-தல-#sthash.V9c8LKJj.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கமும்.tw_bawling:

காட்சிகள் மனதைக் கணக்கச் செய்கின்ற அதேவேளை.. எதிரியோடு கூட நின்று இந்த மக்களைக் கொன்று குவித்தவர்கள் சிலரும்.. ஒப்புக்கு நின்று பூத்தூவுகிறார்கள். எதற்காக.... மன உறுத்தலால் என்றால்.. மன்னிக்கலாம்.  இல்லை காட்டிக்கொடுப்பின் அடுத்த அத்தியாயத்திற்கு என்றால்.. சிந்திக்க வேண்டியது... மக்கள். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலியும் நினைவு நாள் வணக்கங்களும்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள், வீரத் தமிழ் மறவர்களுக்கு வீரவணக்கங்கள்!

அரக்கர்களும் அதர்மமும் அகன்று தர்மம் நிலைபெற நாம் பிரார்த்திப்பதோடு,
வீறுகொண்டெழுந்து அவசியமான முயற்சிகள் அனைத்தையும் முன்னெடுப்போம் என்று
இப்புனித நாளில் நாம் உறுதி பூணுவோம்!

கைக்குழந்தைகள், முதியோர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் அனைவரும் போராளிகளா? இவர்களை போராளிகள் என்று கூற எப்படி மனம் வந்தது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த நாளை இன, மத, மொழி, கட்சி என எந்த பேதமும் இன்றி அனைவரும் சேர்ந்து நினைவுகூரப்பட வேண்டும்.

இன்றைய நாளில் அதாவது 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி உயிரிழந்த உறவுகளுக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கைக்குழந்தைகள், முதியோர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்களை போராளிகள் என்று கூற இவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் என்பது தமிழர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் நாள்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாறியது. அந்த மாற்றத்திற்கு நாமும் முக்கிய காரணம்.

ஆனால் கடந்த மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாளை கடும் பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே முன்னெடுத்தோம்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அப்போது முல்லைத்தீவில் 1500 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அமைந்தது.

இதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.

ஆகவே இந்த நாள் எம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நாளாக மாற வேண்டும் எனவும் மேலும் பல விடயங்களையும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/146093?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலியும் நினைவு நாள் வணக்கங்களும்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீருடன் நினைவஞ்சலிகள்.....! 

  • தொடங்கியவர்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

 

 

வவுனியாவில் இன்று (18) காலை  தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர்  சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

unnamed__1_.jpg

வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியிலுள்ள கல்லாறு பகுதியில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றதுடன், இதில் கலந்து கொண்ட உறவுகளை இழந்த உறவுகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், அப்பகுதியிலுள்ள 5 இ0ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

unnamed__2_.jpg

unnamed.jpg

uuu_pu_p__.JPG

http://www.virakesari.lk/article/20121

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு)

 

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. Image captionமுள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முந்தைய வருடங்களைப் போல் அல்லாமல் இவ்வருடம் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Image captionமுந்தைய வருடங்களைப் போல் அல்லாமல் இவ்வருடம் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். Image captionகடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

 

இரா. சம்பந்தன் Image captionயுத்தம் மீண்டும் ஏற்படாதிருக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் அதற்கமைய ஆட்சிமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் : இரா. சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் Image captionமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் விளைவுகள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் : வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

 

பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்ககளும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். Image captionபெரும் எண்ணிக்கையிலான பொதுமக்ககளும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

சிவப்பு மஞ்சள் நிற கொடிகளுடன் கூடிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. Image captionசிவப்பு மஞ்சள் நிற கொடிகளுடன் கூடிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நந்திக்கடலில் மலர்கள் மிதக்கவிடப்பட்டன. Image captionஇன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நந்திக்கடலில் மலர்கள் மிதக்கவிடப்பட்டன.

 

கண்ணீர் சொரிந்து வாய்விட்டு அழுது அரற்றிய தாய்மாரின் சோக வெளிப்பாடு இந்த அஞ்சலி நிகழ்வின் சோகத்தை அதிகமாக்கியிருந்தது. Image captionகண்ணீர் சொரிந்து வாய்விட்டு அழுது அரற்றிய தாய்மாரின் சோக வெளிப்பாடு இந்த அஞ்சலி நிகழ்வின் சோகத்தை அதிகமாக்கியிருந்தது.

 

இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நந்திக்கடலில் மலர்கள் மிதக்கவிடப்பட்டன. கண்ணீர் சொரிந்து வாய்விட்டு அழுது அரற்றிய தாய்மாரின் சோக வெளிப்பாடு இந்த அஞ்சலி நிகழ்வின் சோகத்தை அதிகமாக்கியிருந்தது. Image captionகண்ணீர் விட்டு அழுத பெண்களின் துயரம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. Image captionமுள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

 பிபிசி தமிழ் :

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கமும்.

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் இறந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் வீர வணக்கங்களும் கண்ணீர் அஞ்சலியும்.

  • தொடங்கியவர்

மன்னார் அடம்பனில் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை :

 

DSC_0023.jpg

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடை பெற்று இன்று வியாழக்கிழமையுடன்  8 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த கொடிய யுத்தத்தில் உயிர் நீத்த தமிழ் உறவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.

-அதற்கமைவாக மன்னாரில் இன்று வியாழக்கிழமை காலை தமிழினப் படுகொலை நினைவு நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் அடம்பன் பகுதியில் நினைவு கூறப்பட்டது.

இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பொதுச் சுடரை  முள்ளிவாய்க்காலில் தனது குடும்ப உறவுகள் 5 பேரை பறி கொடுத்த மேரி என்ன தாய் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து வருகை தந்த பிரமுகர்கள் மாலை அணிவத்து,மலர் தூவி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமாத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் முன்னால் பிரதிநிதிகள், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க்,மூத்த பத்திரிக்கையாளர் மக்கள் காதர்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள்,யுத்தத்தின் போது தமது உறவுகளை  இழந்த உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

DSC_0028.jpgDSC_0032.jpgDSC_0033.jpgDSC_0037.jpgDSC_0039.jpgDSC_0071.jpgDSC_0072.jpgDSC_0079.jpgDSC_0084.jpgDSC_0062.jpgDSC_0065.jpg

 

https://globaltamilnews.net/archives/27214

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களைம் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு காலமும் வராத வேடதாரிகள்  வந்திருப்பது இந்த எழுச்சியை மழுங்கடிப்பதற்காகவா என்ற கேள்வி எழுகிறது.கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி விசாரணைக்கு கால அவகாசம் வழங்கி விட்டு இங்கே வந்து முதலைக் கண்ணீர்.  வடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காலை மணி 9.30 சாலையோரம் வாகனத்தை நிறுத்தி, இனவழிப்பில் அழிக்கப்பட்ட பொதுமக்கள் போராளிகளென எங்கள் உறவுகளுக்கு  அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது. :100_pray:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரினால் இறந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் வீர வணக்கங்களும் கண்ணீர் அஞ்சலியும்.

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் இறந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலியும்

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் மறவாத இந்த நாள்  இந் நாளில்  மரணித்த  மக்களுக்கும்  போராளிகளுக்கும்  கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும் 

  • கருத்துக்கள உறவுகள்

அனாதரவாக்கப்பட்டு அடையாளமின்றி அழிக்கப்பட மக்களுக்கும் 
கொண்ட கொள்கை தளரவிடாது போராடி ஆஃகு தீயாகிய எங்கள் காவல் தெய்வங்கள் அனைத்துக்கும் 
கண்ணீர் அஞ்சலிகள்...

8 வருடங்களுக்கு முன்னர்...

இதேமாதிரியான ஒரு நாளில் 
டொரோண்டோ நகர வீதிகளில் 
நாளும் பொழுதுமாய், நடைப்பிணமாய் ,

மனசு  பேதலிக்க, கையாலாகாதவராய்,
அனைத்தும் இழந்து,  நிர்கதியாய் தொலைந்து போனோமே...

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்நாளில் உயிர் பறிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் மீதியுள்ள தமிழர்களின் கண்ணீர் அஞ்சலிகள்

சிங்கள-பௌத்த மற்றும் ஹிந்திய அரச பயங்கரவாதங்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கங்களும்!

  • தொடங்கியவர்

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்

p17-2dc210187ca219034fa605fd43883c0e7cfbfc32.jpg

 

உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச்சுடரேற்றி மக்கள் அஞ்சலி

(முள்­ளி­வாய்க்­கா­லி­லி­ருந்து ஆர்.ராம்)

ஆயி­ர­மா­யிரம் அல­றல்­க­ளையும், கத­றல்­க­ளையும் ஆறாய் ஓடிய குரு­தி­யையும் அலை­ய­லையாய் வந்த குண்­டு­க­ளையும் பெரும் பொறு­மை­யுடன் தாங்­கிய புனித பூமி­யான முள்­ளி­வாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து பெரும் தொகையான மக்கள் நேற்று ஒன்றுகூடி ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது உறவுகளை நினைவு கூர்ந்து கதறியழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தியமையால் முள்ளிவாய்க்கால் பிரதேசம் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. குரு­தியை உறைய­வைக்கும் உற­வு­களின் கண்­ணீ­ரு­ட­னான கத­றல்கள் அனை­வ­ரி­னதும் மன­தையும் நெகி­ழச்­செய்­த­தோடு மட்­டு­மன்றி நடந்த சம்­ப­வங்­களை மீட்டும் வகையில் கூறிய ஆதங்க வார்த்­தை­களும் குரு­தியை உறையச்­செய்­தது. 

இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையிலான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று வட­மா­கா­ண­ச­பையின் ஏற்­பாட்டில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பெரும் தொகையான மக்கள் கலந்துகொண்டு கண்ணீர்மல்க தமது அஞ்சலியை தெரிவித்தனர்.

உணர்­வுடன் ஒன்­று­கூ­டிய பல­த­ரப்­புக்கள்

இந்த நிகழ்வில் இன, மத, மொழி, கட்சி பேத­மின்றி பல்­வேறு தரப்­பி­னரும் பங்­கேற்­றி­ருந்­தமை முக்­கி­ய­வி­ட­ய­மாகும். நினை­வேந்தல் நிகழ்­வுக்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யா­கி­யி­ருந்த நிலையில் நேற்று வியா­ழக்­கி­ழமை காலை எட்டு மணி முதல் தமிழர் தாய­க­மாக வடக்கு, கிழக்கின் பல பாகங்­க­ளி­லி­ருந்து தனிப்­பட்ட முறை­யிலும், ஏற்­பாடு செய்­யப்­பட்ட போக்­கு­வ­ரத்து சேவையூடா­கவும் பெரும் தொகையானோர் வருகைதர ஆரம்­பித்­தனர்.

காலை ஒன்­பது மணி­ய­ளவில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், அமைச்­சர்­க­ளான ஐங்­க­ர­நேசன், குரு­கு­ல­ராஜா, சத்­தி­ய­லிங்கம் உட்­பட மாகாண சபையின் உறுப்­பி­னர்கள் தலை­மையில் உற­வுகள் ஒன்­று­கூடின.

அதே­போன்று வடக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சேனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­திரன், எஸ்.ஸ்ரீ­தரன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், சர­வ­ண­பவன், சிவ­சக்தி ஆனந்தன், சித்­தார்த்தன், சிவ­மோகன், சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, செல்வம் அடைக்­க­ல­நாதன், கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன் ஆகி­யோரும் பிர­சன்­ன­மா­கினர்.

சர்வ மத தலை­வர்­களும் சிவில் அமைப்பு பிர­தி­நி­தி­களும் 

அத்­துடன் நிகழ்வுக்கு இந்து, பௌத்த, இஸ்­லா­மிய, கத்­தோ­லிக்க மத­கு­ரு­மார்கள், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள், சிவில் சமுக செயற்­பாட்­டா­ளர்கள், பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­தி­களும் வருகை தந்­தனர்.

முதற்­த­ட­வை­யாக பங்­கேற்ற  எதிர்க்­கட்சித் தலைவர்  

இதே­நேரம் யுத்தம் நிறை­வ­டைந்து நினை­வேந்தல் நிகழ்வு எட்­டா­வது ஆண்­டாக நடை­பெ­று­கின்­றது. முள்­ளி­வாய்க்­காலில் மூன்­றா­வது தட­வை­யாக நடை­பெ­று­கின்ற நிலையில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் முதற்­த­ட­வை­யாக இந்­நி­னை­வேந்தல் நிகழ்வில் பங்­கேற்­ப­தற்­காக பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

வடக்கு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் பங்­கேற்பு

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­விற்கு கட்சி பேத­மின்றி அனைத்து தமிழ் பேசும் சமு­கத்­தி­னையும் ஒன்­றி­ணை­யு­மாறு வடக்கு முதல்வர் கோரிய நிலையில் வடக்கு மாகா­ணத்தின் எதிர்க்­கட்­சித்­த­லைவர் எஸ்.தவ­ரா­ஜாவும் பங்­கேற்­றி­ருந்தார்.

உணர்வு பூர்­வ­மாக ஆரம்­ப­மான நிகழ்வு 

முள்­ளி­வாய்க்கால் திடலில் தமி­ழின இன­வ­ழிப்பு நாள் என்ற பதாகை வைக்­கப்­பட்டு சிவப்பு, மஞ்சள் வர்­ணக்­கொ­டிகள் எங்கும் பறக்க விடப்­பட்டு பிர­தான ஈகைச்­சு­ட­ரேற்றும் நினை­வுச்­சின்னம் தயா­ரான நிலையில் இருக்­கையில் கனத்த மன­துடன் அனை­வரும் ஒன்­று­கூ­டி­யி­ருக்­கையில் நினை­வேந்தல் நிகழ்வின் ஏற்­பாட்­டுக்­குழு உறுப்­பி­ன­ரான வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­கரன் அனை­வ­ரையும் நினை­வேந்தல் நிகழ்வில் ஒரு­மித்து பங்­கேற்­கு­மாறு அழைப்­பொன்றை விடுத்தார்.

மூன்று நிமிட அக­வ­ணக்கம்

தமது இன்னுயிர்­களை ஈகம் செய்த மாண்­பு­மிக்­க­வர்­க­ளுக்­காக மூன்று நிமிட அக­வ­ணக்கம் செலுத்­தப்­பட்­டது. நந்­திக்­க­டலை ஆராத்­த­ழுவி வரும் காற்­றுக்­கூட ஒரு­நொடி நின்­று­விட்­டதா என்­ப­தை­போன்­ற­தொரு மயான அமைதி மூன்று நிமி­டங்­களும் நில­வி­யது.

இரு அஞ்­சலி உரைகள்

அத­னை­ய­டுத்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனும், எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­தனும் அஞ்­சலி உரை­களை சுருக்­க­மாக ஆற்­றி­னார்கள். குறிப்­பாக முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் முதி­ய­வர்­களும், கைக்­கு­ழந்­தை­களும் இறு­தி­யுத்­தத்தில் போரா­ளி­க­ளாக சித்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் போர­ளி­களா? என்ற கருத்தை முன்­வைத்­த­போது அனைத்து தரப்­பி­னரும் அமை­தி­யாக தலை­ய­சைத்து அவ்­வி­னாவின் நியா­யத்­திற்­காக வலுச்­சேர்த்­தி­ருந்­தனர்.

அதே­போன்று எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­தனும் சாட்­சி­ய­மின்றி இந்த மண்ணில் யுத்தம் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற கருத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­போதும் பல­ரி­டத்தில் அதே­வௌிப்­பாடு காணப்­பட்­டது.

ஈகைச்­சுடர்

அத­னைத்­தொ­டர்ந்து இன்னுயிர்­களை தியாகம் செய்த உற­வு­களின் ஆத்­மாக்­க­ளுக்­கான நிரந்­த­ர­மான சாந்­தி­வேண்டி ஈகைச்­சு­ட­ரேற்றி அஞ்­சலி செலுத்தும் பிர­தான நிகழ்வு நடை­பெற்­றது.

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் முதலில் ஈகைச்­சு­ட­ரேற்றி வைத்து அஞ்­சலி செலுத்­தினார். அவ­ரைத்­தொ­டர்ந்து எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் அஞ்­சலி செலுத்­தினார்.

இதன்பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்பில் யுத்­தத்தின் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்டு இன்று மாற்­றுத்­திற­னா­ளிகள் என்ற நாமத்­துடன் நிற்கும் உற­வுகள் கண்ணீர் பெருக ஈகைச்­சுடர் ஏற்­றி­னார்கள்

அத­னை­ய­டுத்து மக்­க­ளோடு மக்­க­ளாக மக்கள் பிர­தி­நி­தி­களும் தமது அஞ்­ச­லி­களை உணர்வு பூர்­வ­மாக செலுத்­தி­னார்கள். சர்­வ­ம­தத்­த­லை­வர்­களும் ஈகைச்­சு­டரை ஏற்­றி­ய­தோடு குறிப்­பாக இந்து, கத்­தோ­லிக்க குரு­மார்கள் தோத்­தி­ரங்­களை கூறி ஆன்­மாக்­களின் சாந்­திக்­காக பிரார்த்­த­னை­யிலும் ஈடு­பட்­டனர்.

கத­றிய உற­வுகள்

இச்­ச­ம­யத்தில் தமது உற­வு­களை தொலைத்த தாய்­மார்கள், மனைவி, சகோ­த­ரிகள் என அனை­வரும் கூட்­டாக கண்ணீர் பெருக்­கெ­டுத்­தோட கத­றி­ய­ழு­தார்கள். குறிப்­பாக அச்­ச­ம­யத்தில் தாயொ­ருவர், ஒன்­றல்ல இரண்டு அல்ல எனது ஒன்­பது பிள்­ளை­க­ளையும் பறி­கொ­டுத்து இன்று தனி­ம­ரமாய் நிற்­கின்றேன் என்று கூறி கத­றி­ய­ழுதார்.

அதே­போன்று வருவேன் என்ற கூறி சென்­றீர்­களே இன்றும் உங்­க­ளுக்­கா­கவே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். எங்கே போனீர்கள். இந்த மண்ணில் தானே உங்­களை பிரிந்து சென்றோம். இன்றும் எங்­களை ஏக்­கத்­துடன் காக்க வைத்­தி­ருக்­கின்­றீர்­களே என்று குடும்ப பெண்கள் சிலர் கத­றி­ய­ழு­தனர்.

என்­க­ண­வனைக் கொடுத்தேன், என் மக­னைக்­கொ­டுத்தேன். என்­பே­ர­னையும் பறி­கொ­டுத்தேன். இன்று பாவி­யாக இந்த மண்­ணி­லேயே அநா­தை­யாக நிற்­கின்றேன் என்று முதிய தாயொ­ருவர் கத­றி­ய­ழுதார். அதே­போன்று வயோ­தி­பர்­களும், திரு­ம­ண­மான இளம் பெண்­களும் நீண்­ட­நேரம் தமது உற­வு­களை நினைத்து கதறி அழு­தனர்.

அதே­நேரம் யுத்தத்தால் பாதிப்­ப­டைந்த மாற்­றுத்­தி­ற­னா­ளி­யா­க­வி­ருக்கும் ஒருவர் தனது குடும்­பத்தை இழந்து தனி­ம­ர­மாக நிற்­கின்­றேனே. முல்­லைத்­தீவில் இருந்த எல்­லோரும் இவர்­க­ளுக்கு என்ன செய்­தார்கள் என்று ஆதங்­கத்­துடன் தேம்­பி­ய­ழுதார்.

இவ்­வாறு அங்கு குழு­மி­யி­ருந்த அனைத்து பெண்கள், ஆண்கள் என பால்­வே­று­பா­டு­க­ளின்­றியும், வய­தா­ன­வர்கள், இளை­யோர்கள் என்ற வயது வேறு­பா­டு­க­ளின்­றியும் ஈகைச்­சு­டரை ஏற்றி கண்ணீர் மல்­கி­ய­வாறே அஞ்­ச­லி­க­ளையே செய்­தனர்.

பிரதான மேடைக்கு அருகில் நினைவேந்தல் 

இவ்வாறு நினைவேந்தல் நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கையில் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பிரதான அஞ்சலி மேடைக்கு அருகாமையில் பாதாகையொன்றை வைத்து தமது நினைவேந்தலை பிரத்தியேகமாகச் செய்திருந்தனர்.

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்

இறுதி யுத்தத்தின் உக்கிரத்தை நேரடியாக உணர்ந் முல்லை மண்ணின் முள்ளிவாய்க்கால் ரணத்தை சுமந்துகொண்டிருக்கின்றது. இறுதி யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகளாகின்றபோதும் ரணத்தை சுமக்கும் முள்ளிவாய்க்கால் புனித பூமி நேற்று நண்பகல் 12மணிவரையில் நடைபெற்ற உறவுகளின் கண்ணீர் அஞ்சலிகளினால் நனைந்தது.

விசேட ஏற்பாடுகளும்

இம்முறை நினைவேந்தல் நிகழ்வுக்காக தாகசாந்தி நிலையமும், விசேட போக்கு வரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் உறவுகள் எவ்விதமான நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்காது அமைதியான முறையில் நினைவேந்தல் திடலிலிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-19#page-1

 

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.