Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண அறிவித்தல் - கள உறவு வாத்தியாரின் தம்பி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் 

Featured Replies

120550.jpg

ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் 

(ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்)

தோற்றம் : 16 டிசெம்பர் 1967 — மறைவு : 10 சனவரி 2018

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி வீரமங்கை யோகரத்தினம்(ஆங்கில சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), பிறேமதாஸ் குமராசிறி(மானிப்பாய் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற ரஞ்சித்குமாரசிறி(பிரான்ஸ்), வீரமனோகரி ஸ்ராலினினா(ஆசிரியை), காலஞ்சென்ற விஜயராஜசேகரகுமாரசிறி, அருண்முகன் சாயிபாபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரத்தினம்(பொறியியலாளர்), யோகேஸ்வரி, சாந்தி, கோபிச்சந்திரன்(ஆசிரியர்), கலிஸ்ரா(ஜெர்மனி), மணிமலர் குணசுந்தரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ரஜனிகா ரமேஸ்குமார், ரோனி, ஸ்ராலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நோபல், ஜஸ்மினி, விஜயதர்சினி, விஜயடயானா, சயந்திகா, கரோலினா, ஸ்ராலினா, தாரகா, கெவின் ஆகியோரின் சிறிய தந்தையும்,

அபிசேக் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் காரைநகர் நீலிப்பந்தனையில் இறுதிக்கிரியை நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

இளமையான வயதில், காலம் சென்ற பேராசியரின் மரணம், மனதை... உறுத்துகின்றது.
காலம் சென்ற..  ஜோன் மனோகரன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரின் பிரிவால்... துயருறும்... குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 வாத்தியாருக்கு  ஆழ்ந்த  அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் .

அன்னாரின்   ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள் 
 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன் மனோகரன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்னாரின் பிரிவால் துயருறும் வாத்தியாருக்கு  ஆழ்ந்த  அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கு  ஆழ்ந்த  அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் .

அன்னாரின்   ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள் 

  • கருத்துக்கள உறவுகள்

 ஆத்மா சாந்தியடையட்டும்... இன்று இறந்த இந்த மனிதனுக்கு , நாளை இறக்கபோகிறவர்களின் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபஙகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

வாத்தியார் மற்றும் குடும்பத்தாருடன் இரங்கல்களை பகிர்ந்து கொள்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனின் பிரிவால் துயருற்றிருக்கும் வாத்தியார் குடும்பத்தினருக்கும் சகோதரனின் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் வாத்தியாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Edited by யாழ்கவி

அன்னாருக்கு அஞ்சலிகள் .  கள உறவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

ஆழ்ந்த அனுதாபஙகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும், இரங்கல்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். வாத்தியார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனின் பிரிவால் துயருற்றிருக்கும் வாத்தியாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்....!

அன்னாரின் குடும்பத்தினருக்கும், வாத்தியாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாருக்கு அஞ்சலிகள்.
பிரிவால் துயருற்றிருக்கும் கள உறவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள் 

ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்னாரின் இழப்பு வெறும் குடும்பம் ஒன்றிற்கான இழப்பு மட்டுமல்ல, முழுது தமிழ் மக்களுக்குமான ஒரு இழப்பு

//

கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித்திட்;டத்தின் கீழ் எத்தோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் இணைப்பேராசிரியராக இருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் இலங்கை அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பில் தமிழர் மறுமலர்;ச்சிகழகம் போன்ற அரசியல் செயல்பாட்டு அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கலாநிதி கெனடி விஜயரத்தினத்திற்கும் முக்கிய பங்கு உண்டு.//

 

----------

 

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம் - இரா.துரைரத்தினம்.

 

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியருமான விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடி காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

1967 ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி பிறந்த கெனடி அண்மையில் தான் 50வயதை பூர்த்தி செய்திருந்தார். பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த போது அண்ணன் இலங்கையில் சந்திப்போம் என்றவர் என்றும் சந்திக்க முடியாத இடத்திற்கு சென்று விட்டார்.

கெனடியின் இழப்பு என்பது அவரின் குடும்பத்திற்கும் நண்பர்கள் உறவினர்களுக்கு மட்டுமன்றி ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.

கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித்திட்;டத்தின் கீழ் எத்தோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் இணைப்பேராசிரியராக இருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் இலங்கை அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பில் தமிழர் மறுமலர்;ச்சிகழகம் போன்ற அரசியல் செயல்பாட்டு அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கலாநிதி கெனடி விஜயரத்தினத்திற்கும் முக்கிய பங்கு உண்டு.

நான் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த போது அச்சங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றவர். கிழக்கில் நடந்த படுகொலைகளுக்கு நீதி கோரும் வகையில் செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழினப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்தி அந்நிகழ்வை கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்துவதில் முன்னின்று செயற்பட்டவர்.

விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன், ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து 2004ஆம் ஆண்டு நாம் சுவிட்சர்லாந்திற்கு வந்த போது கெனடி இந்தியாவுக்கு சென்று பின்னர் எத்தோப்பிய பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக கடமையாற்றினார்.
சில பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சில காலம் எத்தியோப்பியாவில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. விரைவில் யாழ்ப்பாணத்திற்கு சென்று விடுவேன் என அண்மையில் கூட என்னிடம் கூறியிருந்தார்.

சுவிட்சர்லாந்திற்கு வரும் போதெல்லாம் எனது வீட்டிற்கு வர தவறுவதில்லை. ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் இருவரும் சந்திப்போம் என அண்மையில் பேசிக்கொண்டோம்.
ஆனால் விதியோ வேறு வகையில் அமைந்து விட்டது.

ஒரு இமயம் சரிந்து விட்டதே என ஏங்குவதை தவிர எம்மால் வேறு என்ன செய்ய முடியும்.

உனது உடலைக்கூட காணமுடியாத தூரத்தில் இருக்கும் இந்த நண்பனின் அஞ்சலியை ஏற்றுக்கொள்ளடா,
காரைநகருக்கு மட்டுமல்ல ஈழமாதாவுக்கும் கெனடியின் மறைவு பேரிழப்பு தான்.

https://thinakkathir.com/wp-content/uploads/2016/04/kennady.jpg

 

https://thinakkathir.com/?attachment_id=64863

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனின் பிரிவால் துயருற்றிருக்கும் வாத்தியார் குடும்பத்தினருக்கும் சகோதரனின் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.