Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழித்த எமக்கு கொரானோ ஒரு சவால் அல்ல.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

hehaliya.jpg

“பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.”

– இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.

‘கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.

இந்த வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இலங்கைப் பிரஜை ஒருவர் மட்டுமே இங்கு கொரோனா நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் எடுத்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றிய காரணத்தால்தான் கொரோனா வைரஸ் இங்கு ஆட்கொள்ளவில்லை. தற்போது இங்கு ஒருவர் மட்டுமே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் விரைவில் சுகமடைவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணைக் குணமாக்கி அவரை நாம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

எனவே, இந்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை” – என்று கூறியுள்ளார்.

http://www.vanakkamlondon.com/hehaliya-12-03-2020/

டிஸ்கி

article-2642994-1E4EDA1D00000578-571_634

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.

கொரோனா மனிதர்களிடையே வேற்றுமை பார்த்து அழிப்பதில்லை. நாங்கள் கொரோனாவைவிடக் கொடியவர்கள். இனம் மொழி பார்த்துத்தான் அழிப்போம், அழித்தும் உள்ளோம்.- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெகலிய ரம்புக்வெல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

“பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.”

இந்த வாய்கொழுப்புத்தான் கூடாது என்கிறது புலியை அழித்த  உங்களால் இறையாண்மையை தக்கவைக்க முடியலை புலிஅழிப்பு என்பதன் மூலமாய் தென்பகுதிக்குள்ளால் சைனா காரன் வருவதை தடுக்க முடியலை தென்பகுதியில் அநேக ஹொட்டல்களில் ஆங்கிலமும்  சைனிஸிலும்  மட்டுமே அறிவிப்புகள்  கிடைக்கும் அவலம் உங்கள் சிங்களம் எங்கு போச்சு காணமல் போய் விட்டது இப்படி வெட்டிக்கதை விட்டு நடக்க வேண்டிய  கதையை பாருங்க .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

உதைச் சொல்லி சொல்லி மக்களை முட்டாளாக்கி சுகம் கண்டு பழகிப்போச்சு. மாற்றி பேசவோ, சிந்திக்கவோ  முடியவில்லை இவர்களால்.  இதுவே மாறி இவர்களை தாக்கும் நாள் வரும்வரை இந்தப் பல்லவி மாறாது  தொடர்ந்து கொண்டேயிருக்கும் நாடு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுது வீரக்கதைகளுக்கு குறையில்லை.       

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.:

யுத்த காலத்தில் முற்றாக பாடசாலைகளை மூடிய ஞாபகம் உண்டா?

பின் குறிப்பு : வழமை போல உலக நாடுகளிடம் உதவிகளை வேண்டிய எதையும் வெல்லத்தான் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

பின் குறிப்பு : வழமை போல உலக நாடுகளிடம் உதவிகளை வேண்டிய எதையும் வெல்லத்தான் தெரியும். 

இனி ஒரு யுத்தம் எங்கடை வாழ்வில் வரப்போவதில்லை உங்கடை வெட்டி பேச்சுகளால் வரும்காலத்தில் ஒருத்தன் உருவாகினால்  பிரபாகரன் எனும் நேர்மையான மனிதருடன் உங்கள் இனம் சண்டை போட்டது போல் யுத்தம் நடக்காது என்பது மாத்திரம் உறுதி .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இனி ஒரு யுத்தம் எங்கடை வாழ்வில் வரப்போவதில்லை உங்கடை வெட்டி பேச்சுகளால் வரும்காலத்தில் ஒருத்தன் உருவாகினால்  பிரபாகரன் எனும் நேர்மையான மனிதருடன் உங்கள் இனம் சண்டை போட்டது போல் யுத்தம் நடக்காது என்பது மாத்திரம் உறுதி .

அதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் இந்தியனுக்கும் சீனனுக்கும் கச்சை தீவில் சண்டை தொடங்கினாலும் சொல்வதற்கில்லை.

ஆனால் அழிவு தமிழனுக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கொரானாவுக்கு எதிராக சொறீலங்கா இராணுவத்தை பாவிப்பதும்.. தமிழர் தாயகத்தில் கொரானோ தடுப்பு முகாம் அமைப்பதும்... சிங்களத்தின் கோழை மனப்பான்மையிலும்.. பகமை தான் அதிகம் வெளிப்படுகிறது. 

சுனாமியின் போது பன்னாட்டு இராணுவங்களின் நேரடி உதவியை சொறீலங்கா பெற்ற போதும்.. புலிகள் அதனை நிராகரித்து.. தங்களின் சொந்த முயற்சியால்.. மீட்புக்களை செய்து முடித்தார்கள்.

யுத்த காலத்தில் தமிழர் தாயகம் எயிட்ஸ் நோயற்ற பிரதேசமாக இருந்தது  வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சிலர் காவி வந்ததை தவிர.  புலிகள் எயிட்ஸ் நோய்க்கெதிரான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்து சமூகத்தின் எல்லா தளங்களிலும் கொண்டு சென்றனர். ஆனால்.. சிங்கள ஆக்கிரமிப்பின் பின்.. இன்று தமிழர் தாயகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 

சொறீலங்காவில்.. கொரானா தொற்று மோசமானால்.. தமிழர் தாயகத்தை சிங்களம் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் பார்க்கும் என்பதை ஹெகலியவின் இந்த அர்த்தமற்ற முட்டாள் தனமான கொக்கரிப்பு உறுதி செய்கிறது. 

எனவே தமிழர் தாயகம் கொரானாவுக்கு எதிரான சரியான விழிப்புணர்வையும் அதன் பரவலை தொற்றை தடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதோடு.. தொற்றுக்கண்டோர் விரைந்து குணமடையும் வகைக்கு சரியான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியம். 

Edited by nedukkalapoovan

10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

மல்டிபரல் வைத்து ஏர்போர்ட், துறைமுகங்களை கண்மூடித்தனமா தாக்கினா வைரஸ் வராது என்டு கண்டுபிடிச்சிருக்கிறார் சிங்கள அறிவாளி.

சொறிலங்கன் என்டா சும்மாவா?

Quote

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

மீண்டும் ஒரு முள்ளிவாய்கால்..??
கொரோனா பாதித்தவர்கள், தாக்கியதாக சந்தேகம் உள்ளவர்கள் எல்லாரையும் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தி மனிதாபிமான படுகொலை செய்து புதைத்துவிடத்திட்டமா!!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

வெட்டிக்கதை விட்டு நடக்க வேண்டிய  கதையை பாருங்க .

B1-AAC4-F5-3-A16-4341-AACD-AC46-EFD7-EC5

  • கருத்துக்கள உறவுகள்

#உண்மைதான் ஆனால்
#37வருசம் வேணும்
#07ஜனதிபதிகள் வேணும்
#100க்குமேற்பட்ட புதிய பதிய இரானுவ தளபதிகள் வேணும்
#27வெளிநாடுகள் முண்டுகொடுக்க வேணும்
#பலதுரோகிகள் வேணும்
#லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட வேண்டும்.
#தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்க வேண்டு.
#அடி தாங்க முடியாம மண்டியிட்டு பல சுற்று சமாதான பேச்சுக்கு #உலகம் சுற்ற வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையில் சொன்னதை எல்லாம் மீறவேண்டும் பலரை விலைபேசவேண்டும்.
#இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கிடையில்
#இலங்கையை கொரோனா நக்கிபோடும்.

நன்றி முக புத்தகம் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

கொரானாவுக்கு எதிராக சொறீலங்கா இராணுவத்தை பாவிப்பதும்.. தமிழர் தாயகத்தில் கொரானோ தடுப்பு முகாம் அமைப்பதும்... சிங்களத்தின் கோழை மனப்பான்மையிலும்.. பகமை தான் அதிகம் வெளிப்படுகிறது. 

சுனாமியின் போது பன்னாட்டு இராணுவங்களின் நேரடி உதவியை சொறீலங்கா பெற்ற போதும்.. புலிகள் அதனை நிராகரித்து.. தங்களின் சொந்த முயற்சியால்.. மீட்புக்களை செய்து முடித்தார்கள்.

யுத்த காலத்தில் தமிழர் தாயகம் எயிட்ஸ் நோயற்ற பிரதேசமாக இருந்தது  வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சிலர் காவி வந்ததை தவிர.  புலிகள் எயிட்ஸ் நோய்க்கெதிரான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்து சமூகத்தின் எல்லா தளங்களிலும் கொண்டு சென்றனர். ஆனால்.. சிங்கள ஆக்கிரமிப்பின் பின்.. இன்று தமிழர் தாயகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 

சொறீலங்காவில்.. கொரானா தொற்று மோசமானால்.. தமிழர் தாயகத்தை சிங்களம் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் பார்க்கும் என்பதை ஹெகலியவின் இந்த அர்த்தமற்ற முட்டாள் தனமான கொக்கரிப்பு உறுதி செய்கிறது. 

எனவே தமிழர் தாயகம் கொரானாவுக்கு எதிரான சரியான விழிப்புணர்வையும் அதன் பரவலை தொற்றை தடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதோடு.. தொற்றுக்கண்டோர் விரைந்து குணமடையும் வகைக்கு சரியான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியம். 

தமிழர் பகுதியில் தமிழருக்கு வருத்தம் வந்தால், சிங்களப் பகுதியில் கொண்டு போய் வைத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?

நான் நினைகிறேன் ஹெகலிய ரம்புகவெல வீட்டில் பொண்டாட்டிட்ட அடி வாங்கிலாலும்   புலிகளை அழித்த எனக்கு நீ ஒன்றும் பெரிய இவா இல்லை என்று தான் சொல்லுவார் என்று. 

Edited by tulpen

18 hours ago, Ahasthiyan said:

#உண்மைதான் ஆனால்
#37வருசம் வேணும்
#07ஜனதிபதிகள் வேணும்
#100க்குமேற்பட்ட புதிய பதிய இரானுவ தளபதிகள் வேணும்
#27வெளிநாடுகள் முண்டுகொடுக்க வேணும்
#பலதுரோகிகள் வேணும்
#லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட வேண்டும்.
#தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்க வேண்டு.
#அடி தாங்க முடியாம மண்டியிட்டு பல சுற்று சமாதான பேச்சுக்கு #உலகம் சுற்ற வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையில் சொன்னதை எல்லாம் மீறவேண்டும் பலரை விலைபேசவேண்டும்.
#இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கிடையில்
#இலங்கையை கொரோனா நக்கிபோடும்.

நன்றி முக புத்தகம் 

அருமையான பதிவு!

On 3/13/2020 at 11:10 AM, Kavi arunasalam said:

B1-AAC4-F5-3-A16-4341-AACD-AC46-EFD7-EC5

அருமையான பதிவு!

On 3/13/2020 at 4:19 AM, Kapithan said:

அதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் இந்தியனுக்கும் சீனனுக்கும் கச்சை தீவில் சண்டை தொடங்கினாலும் சொல்வதற்கில்லை.

ஆனால் அழிவு தமிழனுக்குத்தான்.

இந்தியனுக்கும், சீனனுக்கும் நிச்சயமாக கச்சத்தீவில் சண்டை தொடங்காது। அது முழுவது இலங்கை ராணுவத்தின் முழு கட்டுப்பாடில் இருக்கிறது।

இப்போது இலங்கையில் சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது। நிச்சயமாக ஒரு நாளைக்கு ஆயுதப்போர் இலங்கையில் தொடங்கும்।

இருந்தாலும் ரம்புக்வெல்ல சொல்வது போல போரை முடித்தவர்கள் இவர்கள் இல்லை। இந்தியாவே தொடக்கி , இந்தியாவே முடித்து வைத்தது। எல்லாம் தாங்கள் சுயநலத்துக்காகத்தான்।

  • கருத்துக்கள உறவுகள்

பின் பக்கம் அடிச்சா பல்லு போனதாம். அத மாதி ஈக்கு வா ஒங்கட கத. ஒங்களவலால் மாதி ஜாதி மோட சூன்ங்கள் ஈக்க‌ வரைக்கும் நாடு நகீஸ்லவா ஈக்கும்.

2 hours ago, Vankalayan said:

இப்போது இலங்கையில் சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது। நிச்சயமாக ஒரு நாளைக்கு ஆயுதப்போர் இலங்கையில் தொடங்கும்।

சீனா காரணுடன் இந்தியா போருக்கு போகாது; சீனாவின் இராணுவ பலமும் அர்ப்பணிப்பும் எங்கே.....???? ஊழலில் மூழ்கி போய் இருக்கும் இந்தியா எங்கே.... அமெரிக்காவால் கூட சீனாவுடன் போட்டி போட முடியாது.

அதை விட இந்தியாகாரன் சீனாவின் காலில் விழுந்து பல காலம்; இந்தியாவின் கைத் தொலைபேசி சந்தை முழுமையாக சீனாவின் oppo,vivo,redmi,one plus& huwei  போன்ற நிறுவனங்களின் கையில்; அதே போல் பல metro rail சேவைகளுக்கு ரயில்களௌ உற்பத்தி செய்வதும் சீனா தான்.

எங்கட புலம்பெயர் ஈழ வாதிகள் மட்டும் தான் சீன இந்திய போர் நடக்கும் போது தமிழ் ஈழம் பிடிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தியற்றவர்கள்...எங்கு என்ன கதைப்பதென்பதே தெரியாத முட்டாள் பேச்சாளர்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/12/2020 at 4:02 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு மண்டையடிபட விழுந்தது இப்பதான் ஒழுங்காய் வேலை செய்யுது..😎

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு மண்டையடிபட விழுந்தது

நஷ்ட ஈடும் பெற்றதாம் என்று சொல்கிறார்கள்.

அப்பிடித்தான் கோரோனோவும் என்று நினைச்சு கதை விடுகிறார். அடிபட்டவன் ஏழை சிங்களவனும், வெளிநாட்டுக்காரனும். இவர் வெற்றிப்பேச்சு பேசுறார். இழப்பும், வலியும் தெரிந்த பொறுப்புள்ள அரசியல்வாதி இப்படிப் பொறுப்பற்ற விதமாய்ப் பேசமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 11:02 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

புலிகளை அழிக்க உதவி செய்த நாடுகளால்கூட கொரோனா சவாலை எதிர்கொள்ள முடியவில்லை, அவர்களிடம் உதவிபெற்ற நீங்கள் எப்படி சவாலை எதிர்கொள்வீர்கள்.

அதுக்கும், அவர்களிடம்தானே போய் நிற்கணும், அவர்களே கிடந்து அல்லாடுகிறார்கள்.

புலிகள் எதிரியை கண்டு ஓடி ஒளியாத  கண்ணுக்கு தெரிந்த எதிரி என்பதனால்  கடன் வாங்கின ஆயுதங்களால் அழித்தீர்கள் ,

கொரோனா என்ன மணி அடிச்சுக்கொண்டா உங்களை தேடிவரும் கூமுட்டை ரம்புக்கல?

யார் செய்த புண்ணியமோ வறியநாடுகளை கொரோனா இன்னும் பாரிய அளவில் தாக்கவில்லை. அப்படியொரு நிலமை வந்தால் அவர்கள் கொண்டிருக்கும் தொழில்நுட்ப பொருளாதார வசதிகளுக்கு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிய பின்னரே அது ஓய்வெடுக்கும். அந்த ஒரு நிலமை வராமல் தடுத்த தெய்வங்களில் ஒருவரான  ரம்புகல வணங்கும் புத்தருக்கும் நான் நன்றி சொல்லுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

90205081_2250933408544792_38144230762007

உந்த ஹெகெலியவை ஏதாவது ஒரு தடுப்பு கொரோனா முகாமுக்குள்ள இறக்கி விடோணும்!

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.