Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமகன் இன்று காலமாகி விட்டார்.

Featured Replies

ஆழ்ந்த இரங்கல்கள் 😟

  • Replies 73
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சியன செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

large.6F2265F1-D1D9-4426-8134-FE2781F36DA4.webp.0ae1bc6586d36d1ed4d4382ef3123aa2.webp

 

கோமகன் மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. 

கோமகன் யாழ் களமூடாக அறிமுகமாகியவர். அவர் யாழ் களத்தில்தான் தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தார் என நினைக்கின்றேன். கதை, கவிதை, பட்டிமன்றம், தமிழ் இலக்கியம், இலக்கணம் என்று மட்டும் இல்லாமல் கள உறுப்பினர்களுடனான அலப்பறைகளுக்கும் குறைவில்லை. தமிழ்த்தேசிய அரசியலின் மீதான மாற்றுப் பார்வையால் முரண்பட்ட கருத்துக்களை வைத்து யாழ்களத்தை சில காலம் கொதிநிலையிலும் வைத்திருந்தார்.

யாழ் களத்தில் தனிமடலிலும், அதன் பின்னர் முகநூல் உள்பெட்டியினூடாகவும் மிகவும் பண்பாகவும், இனிமையாகவும், தனக்கேயுரிய பகிடிகளுடனும் உரையாடியவர். 

முகநூலில் சுறுக்கரின் பகிடிகள் மட்டுமில்லாமல், இலக்கிய உரையாடல்களும், விமர்சனக் குறிப்புக்களும், அரசியல் அவதானங்களும் என்று சுறுசுறுப்பாகவே இருப்பார்.

அவரது சிறுகதைகள், நேர்காணல்கள் “நடு” இணைய இதழில் வெளிவரும்போதெல்லாம் அபிப்பிராயங்களைக் கேட்பார். அவரது ஆக்கங்களை யாழில் இணைத்து “வாசக நயப்பை” சில வரிகளில் கொடுப்பதுண்டு.

அண்மையில் தாயகத்திலிருந்து அவர் தோட்டத்தில் களையெடுத்த படத்தைப் போட்டபோது “மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறு யார்?” என்று கலாய்த்திருந்தேன். ஆனால் அவர் விடுமுறை முடிந்து திரும்ப பிரான்ஸ் வரமுன்னரே இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் என்பதை மனம் நம்ப மறுக்கின்றது.

நண்பர் கோமகனின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

C9989-EFA-02-B4-4-FEE-800-B-0462746-D144

தனதுநடுஇணைய சஞ்சிகைக்கு என்னிடம் இருந்து கோமகன் ஓவியங்களைப் பெற்றிருந்தார். என்னை நடு இதழுக்குள் உள்வாங்கவும் அவர் விருப்பம் கொண்டிருந்தார். தமிழ்கார்டியன், பொங்குதமிழ் இரண்டிற்கும் அப்பொழுது எனது பங்களிப்பு௧ள் இருந்ததால் அவர் கேட்ட பொழுது என்னால் முடியாமல் போயிற்று.

பொதுவாக படைப்பாளிகளுக்குள்நான், நீஎன்ற சச்சரவுகள் இருக்கும். ஆனால் கோமகன் வேறுபட்டவர். எல்லோரிடமும் சுமூகமான நல்லுறவை வைத்திருந்தார்.

ஆழ்ந்த இரங்கல்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சூடாக விவாதித்தாலும்  படைப்புகளில்  நல்லதொரு எழுத்துநடை இருக்கும்.  நம்பமுடியவில்லை.    அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளோடு  ஆழந்த இரங்கலைப் பகிர்வதோடு இயற்கையுள் சங்கமித்துவிட்ட கோமகனவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களகளத்தில் கற்றுக்குட்டியாக நுளைந்த வேளை எனது கிறுக்கல்களையும் கருத்துக்களாக ஏற்று ஊக்கம்தந்த உறவுகளில் ஒருவர்தான் கோமகன். அவரை என்றாவது ஒருநாள் சந்திக்கவேண்டும் என்ற எனது ஆசையை நிராசையாக்கிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கோமகன் அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுவதோடு அவர் குடும்பத்தவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களால் மாறுபட்டிருந்தாலும் தமிழால் இவர் யாழில் இணைந்திருந்த காலங்கள் இப்பவும் பசுமையாக.

அன்னாருக்கு கண்ணீரஞ்சலியும் குடும்பத்தார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Paanch said:

அவரை என்றாவது ஒருநாள் சந்திக்கவேண்டும் என்ற எனது ஆசையை நிராசையாக்கிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

நானும் இவரும் பல தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளோம்.யாழ்களத்தை தவிர வேறு எந்த விடயங்களும் எமக்குள் பகிர்ந்து கொண்டதில்லை. ஏனெனில் அவர் கொள்கை வேறு என் கொள்கை வேறு. ஆனால் யாழ்களத்தை பொறுத்தவரை இருவரும் சம நிலையை பேணினோம்.அரசியலும் பேசியதில்லை.நாட்டு நிலவரங்களும் பேசியதில்லை.

யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்க ஒரு திரி ஆரம்பிக்கப்பட்டது.அதில் நானும் கோமகனும் சேர்ந்து சில நிகழ்ச்சி நிரல்களை தயாரித்து தொடர்ந்த போது அது அரசியலாக்கப்பட்டு நானும் பலரது வெறுப்புகளுக்கு உள்ளாகினேன்.அந்த திரியை பலர் பகிஸ்கரித்தார்கள்.வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டும்.ஆனால் அந்த திரி யாழ்களத்திற்கானது என்பது மட்டும் எனக்கு தெரியும்.இது சம்பந்தமாக நான் நள்ளிரவு வேலையால் வரும்  வரைக்கும் காத்திருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாதிப்பார்.பல இடங்களில் என் தொனியை கூட்டி கதைக்கும் போது அப்படியெல்லாம் கதைக்கக்கூடது என்பார்.

முகநூலிலும் பல கலாய்ப்புகளுடன் எமக்குள்ளான உறவு இருந்தது.இருந்தாலும் ஏனோ தெரியவில்லை எதுவுமேயில்லாமல் கருத்துபரிமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டு விட்டது.யாழ்கள மூத்த உறவு சாத்திரியும் அவரது நெருங்கிய நண்பர். அவருக்கும் இந்த அவலச்செய்தி அதிர்சியை கொடுத்திருக்கும். ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மைத்ரேயின் கைப்பக்குவம் எனும் சமையல் திரியும் அவருடையது என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவால் வாடும் உறவுகளுக்கு என் அனுதாபங்கள்.

யாழின் அறுசுவைகளில் ஒன்று அன்றே அகன்றது. இன்றோ அது அணைந்தே விட்டது.

எனக்கு இவரை வாசகனாக மட்டுமே தெரியும். எல்லாரைபோலவும் இவருடனும் கருத்து ஒற்றுமை, வேற்றுமை இருந்தது.

ஆத்மசாந்திக்கு பிரார்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் பிரிவால் துயருற்று இருக்கும், குடும்பத்தினருக்கும்…
உற்றார் உறவினருக்கும், ஆழ்ந்த அனுதாங்கள்.பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அநுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுவதோடு அவர் குடும்பத்தவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பூதவுடல் சொந்த ஊரான கோப்பாயில் நடைபெற இருப்பதாக அறிந்தேன்.

மிகவும் கொடுத்து வைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சியான செய்தி. யாழ் மூலமாகத்தான் கோம்ஸை (என்னை தும்ஸ் எண்டு மனிசன் கூப்பிடும்) எனக்குத் தெரியும். நேரிலே சந்திக்க வேண்டும் எண்டு நினைத்த உறவுகளில் ஒருவர். ஒரு கையில் கோப்பியுடனும் மறுகையில் சிகரெட்டுடனும் தனது பால்கனியில் இருந்து விடுப்பு பார்ப்பது அவரது தெரபி. அருமையான, பழக இனிய மனிசன். எல்லாருடைய எழுத்துக்களையும் ஊக்கப்படுத்துவார். எனது சில கிறுக்கல்களையும் முகநூலில் பகிர்ந்திருக்கிறார். நடுவுக்கு ஏதாவது ஆக்கம் கேட்டிருந்தார். எனக்கு எழுதப்பஞ்சி/நேரப்பிரச்சினை. கொஞ்சநாளா ஆளை வெட்டி விளையாடிக்கொண்டிருந்தேன். மனிசனும், உந்த கேஸ் உருப்படாது எண்டு பேசாமல் விட்டிட்டார். இலக்கியப் பரப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இலங்கை, புலம்பெயர் நாடுகள் தவிர தமிழகத்திலும், கிழக்கிலங்கை இஸ்லாமிய இலக்கிய வட்டத்திலும் பல நண்பர்களை கொண்டிருந்தார்.  

போய் வாருங்கள் அண்ணை, ஆழ்ந்த இரங்கல்கள் அக்கா.     

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்! 

ஆழ்ந்த அநுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்ம சாந்திக்கு பிரார்திக்கிறேன்

அன்னாருக்கு அஞ்சலிகள் .  அவரை பிரிந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and indoor
 
யாழ் கருத்துக்களத்தில் சந்தித்த மறக்க முடியாத உறவுகளில் ஓன்று இன்று எம்மை விட்டு பிரிந்தது.
ஆழமான சிந்தனையாளன் அவருக்கும் எனக்கும் இருவேறு அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் எந்தவித சமரசமும் இல்லாமல் தனது சார்பு போராட்ட இயக்கத்தையும் அரசியல் எதிர் கருத்தையும் துணிந்து பொது வெளியில் வைத்தவர் அதனால் நிறைய சண்டையும் பிடித்திருக்கிறோம் இருவரும் கருத்துக்களால் தான் முரண் பட்டோமே தவிர அதை தாண்டிய அன்பும் அக்கறையும் அவரிடம் இருந்தது
 
கோமகன் அண்ணா எழுதும் கதைகளும் சரி 2010 களின் ஆரம்பத்தில் அப்பொழுது யாழ் கருத்துக்களத்தில் அவர் எழுதிய ஊருக்கு போயிட்டு வந்த பயண தொடரும் ( நெருடிய நெருஞ்சி ) வாரா வாரம் எப்பொழுது வரும் என்று காத்திருந்து படித்தது நினைவுகளில் வந்து போகிறது அவ்வளவு சுவாரசியமா அதை எழுதி இருந்தார்
சென்று வாருங்கள் கோமகன் அண்ணா
 
நீங்கள் எழுதிய கதைகளும் உங்கள் கருத்தாடல்களும் உங்களுடன் போட்டுக்கொண்ட அரசியல் சண்டைகளும் நினைவில் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.