Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மம்ம்ம்மா;

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மம்மா!

மண்ணில் இருந்து விண்ணுக்கு

நீ எதையும் எடுத்துச் செல்லவில்லை

என்னுள் சில விதைகளை விதைத்துச்

சென்றுவிட்டாய்!

இதோ உன் நினைவு மலரில்

நம் உறவுச் செடி

வேர் ஊன்றுகிறது

மெது மெதுவாக!

மறக்க முடியவில்லை!

மின்னலாய் தோன்றி மறைந்த

நம் 24 வருட உறவை!

நடந்தவையெல்லாம்

கனவாக இருக்கக் கூடாதா!

கிள்ளிப்பார்த்தேன்....

வலிக்கிறது அம்மம்மா!

அம்மம்மா என்னும் ஆடையை

உனக்குடுத்தி

பேத்தி என்னும் சட்டையை

எனக்குடுத்தி

காலன் தைத்த உறவில்

நாம் வாழ்ந்த வாழ்க்கை என்ன!

அம்மம்மா உன் அன்பை

ஆழ்ந்து அனுபவித்த

முதல் பாக்கியசாலி நான்!

வெளிமனம் அறியாது

உன் அருமைகளை!

உள்மனம் மறவாது

நீ அருளிய வரங்களை!

உன் குழந்தைகளை குணவதிகளாக நீ

வளர்த்தாய் அதில் அன்று என் தாய்

என்னைப் பெற்றுப்

பேணுவதறியாமல் தவிக்கையிலே

உடனிருந்து, உதவிபுரிந்து அறிவுரை கூறி

நல்லதொரு தாயாகவும் வளர்த்து விட்டாய்!

அவள் இன்றும் என்னை வளர்க்கிறாள்....

வளர்ப்பாள்.... பேரன்புடன்!

படிப்பில் மதிப்பெண்கள் குறைகையிலே

விளையாட்டு விபரீதமாகையிலே

என்னைத் திருத்த முயலுவோர்

எடுப்பார் பிரம்பு

எடுப்பேன் ஓட்டம்!

உன்னை மட்டும் தேடி

அம்மம்மா என்று நான் கத்த

எங்கிருந்தாலும் என்முன்

எப்படித்தான் தோன்றுவாயோ

அடுத்த கணமே!

இறைவனுக்கு கூட அந்த சக்தியில்லையே!

நீ தைக்க எடுக்கும் துணிகளில் எல்லாம்

என் பங்கும் எட்டிப் பாக்கும்!

நீ ஆக்கும் கொஞ்ச உணவில்கூட

என் பசி முழுசாய்த் தீரும்!

மறக்க முடியாது - அன்று

நான் வேலைக்கு இறங்கையிலே

துவண்டு கிடந்த உன்னைக் காண வந்தேன்!

உன் அருகில் என்னை அமர்த்தி

என் மடியில் தலை வைத்து

இரு கையால் என்னை அனைத்துக் கிடந்தாய்!

மெதுவாக தடவிக் கொடுத்தேன்

உன் முதுகை, என் சிறு வயதில்

நீ எனக்குச் செய்தது போல்...

நர்மதன் கூட ஆச்சரியப்பட்டான்

அதைக்கண்டு!

மறக்க முடியாது,

ஒரு மாதத்துக்கு முதல் நீ சொன்னாய்

அம்மாவிடம் என்னை கூட்டிச் செல் என்று

என் அம்மாவிடம் என்று நான் நினைக்க

நீ உன் அம்மாவை யல்லவா

தேடிச் சென்று விட்டாய்

யாரிடமும் சொல்லாமல் !

மறக்க முடியாது,

மருத்துவ மனை செல்கையிலே

இறுதியாக நீ சொன்னாய்

குளிருதேன்று!

பெரிய போர்வை தேடி நவே செல்ல

இருந்த போர்வையால் உன்னைப்

போர்த்தி விட்டேன்!

இனி என்றும் உன்னைப் போற்றி நிப்பேன்!

இந்தச் செடியையும் மற்றப் பேரச் செடிகளையும்

என்றும் ஆசீர்வதித்து

பயனுள்ள, பலர் போற்றும் விதமாக

நன்கு வளர்த்து விடுங்கள் அம்மம்மா!!!

பிரியமான பேத்தி!

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

என் அம்மாவிடம் தள்ளி நிற்கும் என் மக்கள்

அவர்களது அம்மம்மாவுடன்ஒட்டி நிற்பார்கள்

அதுவும் இயற்கையின் நியதி போலும்

நன்றாக இருக்கிறது

நன்றி பதிவுக்கு

பேர்த்தி என்பது சரியாகத்தெரியவில்லை பேத்தி என்பது தானே சரி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தோழர் சுவி <_<

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் உணர்வுகளைச் சொல்லியது..! நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பேத்தியின் ஆசைகள் அனுபவங்களை கவிவடிவில் தந்த சுவி உங்களை பாராடுகின்றேன்.

பேத்திக்கும் என் ஆறுதல் களைசொல்லி விடுங்கள்.

குருஜி, வாரிசு உங்கள் போலவே நன்றாக கவி படைத்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! இந்தக் கவிதை என்னுடையதல்ல. முழுக்க முழுக்க எனது மகளுடையது. நான் எனது மாமியின் 31 ம் நாள் நினைவு மலரை தயாரித்து மகளிடம் அச்சகத்தில் கொடுக்கச் சொல்லி விட்டேன். அவவும் என்ன நினைத்தாவோ இப்படி ஒன்றை எழுதி தனியாக கல்வெட்டுடன் இணைத்திருந்தா. பிறகுதான் அது எனக்குத் தெரியும். வாசித்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது. அதிலிருந்து ஒரு எழுத்துக் கூட நான் மாற்றவில்லை. பேத்தியுடனான அவளது அனுபவத்தையும், உணர்வுகளையும் கலந்து அழுதழுது எழுதியிருக்கிறாள். அதுதான் அதில் எதோ இருப்பது மாதிரித் தெரிந்து யாழில் இணைத்தேன்.

நான் லாசப்பலில் நண்பர் விசுகுவை சந்திக்கும்போது அவவும் அருகிலிருந்து விசுகுவிடம் அறிமுகப் படுத்தினேன்.

நன்றி குருஜி! வாசித்து கருத்தெழுதும் டன்,PTT , விசுகு எல்லோருக்கும் நன்றிகள்!!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதைதந்த உங்கள் மகளுக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை மட்டும் தேடி

அம்மம்மா என்று நான் கத்த

எங்கிருந்தாலும் என்முன்

எப்படித்தான் தோன்றுவாயோ

அடுத்த கணமே!

இறைவனுக்கு கூட அந்த சக்தியில்லையே!

இந்த வரிகளை வாசித்த போது....

கண்களில் இருந்து நீர்த்துளிகள்.

அம்மம்மா...... என்றும் உங்களுடன் வாழும் தெய்வம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ( அண்ணா) இந்தக் கவிவரிகள் உங்கள் மகள் எழுதியதையிட்டு ,

ஒரு தமிழ்தாயாக் பெருமை படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகள் நன்றாக எழுதியுள்ளார் சுவி...எனது பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை. பேத்தியை இழந்த உங்கள் மகளுக்கு ஆறுதல் கூறுங்கள், சுவி அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவி அண்ணா,நன்கு அனுபவித்து எழுதி இருக்கிறா

பேத்திமீது வைத்த ஆத்மார்த்தமான உணர்வு நன்கு கவிதையில் இழையோடுகிறது. உங்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மாவின் பாசத்தை அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்.

உங்கள் அம்மம்மாவின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்குக் கிடைக்கும்.

இணைப்பிற்கு நன்றி சுவி அண்ணா

வாத்தியார்

**********

அருமை ... எனக்கெல்லாம் இந்த அம்மம்மாவின் ... கிடைக்கவில்லை .. நான் பிறந்த சில காலங்களிலேயே போய் விட்டார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதீர்கள் நெல்லையன்! என்னையும் என்னுடைய அம்மம்மாதான் வளர்த்தவர். நான் தாயின் கருவறையில் 8 மாதத்தில் இருக்கும்போதே எனது தந்தையார் காலமாகிவிட்டார். பின் அம்மம்மாதான் என்னை நன்றாக வளர்த்தெடுத்ததுடன் யாழ் இந்துவிலும் படிக்க வைத்தவர். நான் களவெடுத்து கீரை வடை வாங்கித் தின்பதற்காகவே அடுக்குப் பெட்டியில் சில்லறைகளை போட்டு வைத்துவிட்டு தெரியாத மாதிரி இருந்து விடுவார். பின்பு நான் உழைத்து குடும்பத்தை நன்றாகப் பார்த்தேன். அதிகாலை 4 மணிக்கே எழுந்து தலையில் குளித்து (தோய்ந்து) தவறாமல் சூரியனுக்கு பூப் போட்டு கும்பிடும் சிறந்த பக்தை. நோயில் கிடந்தது பாயில் படுக்கவில்லை. இறக்கும்போதும் கடைசியாக நான் வரும்வரை காத்திருந்து எனது கையால் பால் பருக்க குடித்துவிட்டு சிறிது நேரத்தில் காலமாகி விட்டா!

  • கருத்துக்கள உறவுகள்

சுவி உங்கள் மகள் கொடுத்து வைத்தவள். அம்மம்மாவின் அரவணைப்பை முழுமையாக அனுபவித்து இருக்கிறாள். இந்த விடயத்தில் நான் பொறாமைக்காரி நான் அம்மம்மா என்ற உறவை அறிந்ததே இல்லை. என்போல் என் பிள்ளைகளுக்கும் அந்த உறவின் அணைப்பு புலம்பெயர்வால் கிடைக்கவில்லை. தாயைவிடப் பேத்தியின் உறவு இனிமையானது என்பது எவ்வளவு உண்மையானது என்று என்னுடைய நண்பர்களின் பேத்தியரால் உணர்ந்திருக்கிறேன். இப்போது உங்கள் மகளின் எழுத்துக்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்திலும் உணர்கிறேன். உங்கள் மகள் என்னைப்போன்று சிலருக்குக் கிடைக்காத பெரும் பாக்கியத்தைப் பெற்றவள் என்று அவளுக்குக்கூறுங்கள்.

சுவி உங்கள் மகளின் கவிதை நன்றாக உள்ளது. இழப்பின் துயர் தெரிகிறது.

எனது ஆச்சியை (அம்மம்மா) பற்றிய நினைவுகளை கிளறிவிட்டது .

துணிச்சல்காரி.

வெத்திலை பாக்கு இடிக்கையிலே எனக்கு வாழ்க்கையை விளக்கியவள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மம்மம்மா!

மண்ணில் இருந்து விண்ணுக்கு

நீ எதையும் எடுத்துச் செல்லவில்லை

என்னுள் சில விதைகளை விதைத்துச்

சென்றுவிட்டாய்!

இதோ உன் நினைவு மலரில்

நம் உறவுச் செடி

வேர் ஊன்றுகிறது

மெது மெதுவாக!

மறக்க முடியவில்லை!

மின்னலாய் தோன்றி மறைந்த

நம் 24 வருட உறவை!

நடந்தவையெல்லாம்

கனவாக இருக்கக் கூடாதா!

கிள்ளிப்பார்த்தேன்....

வலிக்கிறது அம்மம்மா!

அம்மம்மா என்னும் ஆடையை

உனக்குடுத்தி

பேத்தி என்னும் சட்டையை

எனக்குடுத்தி

காலன் தைத்த உறவில்

நாம் வாழ்ந்த வாழ்க்கை என்ன!

அம்மம்மா உன் அன்பை

ஆழ்ந்து அனுபவித்த

முதல் பாக்கியசாலி நான்!

வெளிமனம் அறியாது

உன் அருமைகளை!

உள்மனம் மறவாது

நீ அருளிய வரங்களை!

உன் குழந்தைகளை குணவதிகளாக நீ

வளர்த்தாய் அதில் அன்று என் தாய்

என்னைப் பெற்றுப்

பேணுவதறியாமல் தவிக்கையிலே

உடனிருந்து, உதவிபுரிந்து அறிவுரை கூறி

நல்லதொரு தாயாகவும் வளர்த்து விட்டாய்!

அவள் இன்றும் என்னை வளர்க்கிறாள்....

வளர்ப்பாள்.... பேரன்புடன்!

படிப்பில் மதிப்பெண்கள் குறைகையிலே

விளையாட்டு விபரீதமாகையிலே

என்னைத் திருத்த முயலுவோர்

எடுப்பார் பிரம்பு

எடுப்பேன் ஓட்டம்!

உன்னை மட்டும் தேடி

அம்மம்மா என்று நான் கத்த

எங்கிருந்தாலும் என்முன்

எப்படித்தான் தோன்றுவாயோ

அடுத்த கணமே!

இறைவனுக்கு கூட அந்த சக்தியில்லையே!

நீ தைக்க எடுக்கும் துணிகளில் எல்லாம்

என் பங்கும் எட்டிப் பாக்கும்!

நீ ஆக்கும் கொஞ்ச உணவில்கூட

என் பசி முழுசாய்த் தீரும்!

மறக்க முடியாது - அன்று

நான் வேலைக்கு இறங்கையிலே

துவண்டு கிடந்த உன்னைக் காண வந்தேன்!

உன் அருகில் என்னை அமர்த்தி

என் மடியில் தலை வைத்து

இரு கையால் என்னை அனைத்துக் கிடந்தாய்!

மெதுவாக தடவிக் கொடுத்தேன்

உன் முதுகை, என் சிறு வயதில்

நீ எனக்குச் செய்தது போல்...

நர்மதன் கூட ஆச்சரியப்பட்டான்

அதைக்கண்டு!

மறக்க முடியாது,

ஒரு மாதத்துக்கு முதல் நீ சொன்னாய்

அம்மாவிடம் என்னை கூட்டிச் செல் என்று

என் அம்மாவிடம் என்று நான் நினைக்க

நீ உன் அம்மாவை யல்லவா

தேடிச் சென்று விட்டாய்

யாரிடமும் சொல்லாமல் !

மறக்க முடியாது,

மருத்துவ மனை செல்கையிலே

இறுதியாக நீ சொன்னாய்

குளிருதேன்று!

பெரிய போர்வை தேடி நவே செல்ல

இருந்த போர்வையால் உன்னைப்

போர்த்தி விட்டேன்!

இனி என்றும் உன்னைப் போற்றி நிப்பேன்!

இந்தச் செடியையும் மற்றப் பேரச் செடிகளையும்

என்றும் ஆசீர்வதித்து

பயனுள்ள, பலர் போற்றும் விதமாக

நன்கு வளர்த்து விடுங்கள் அம்மம்மா!!!

பிரியமான பேத்தி!

suvy

மிகவும் பாசம் வைத்த உறவொன்றைப் பிரியும் போது உள்ளத்திலேற்படும் உணர்வலைகளை வரிகளாய வடித்த உங்கள் மகளின் வரிகள் என்னையும் என் கடந்தகாலத்துக்கு கொண்டு சென்றுவிட்டது... காரணம் என் அம்மம்மாவின் பிரிவுக்கு என் பேனாதான் உங்கள் மகளைப் போல வரி(லி)களை எழுதியது. அந்த வரிகளில் கவிதைக்குரிய இலக்கணங்கள் இருந்திருக்கவில்லை, மாறாக உணர்வான வரிகளே நிறைந்திருந்தன...அதுதான் என் முதல் எழுத்து...

ஆனால் உங்கள் மகளின் வரிகள் அவவின் பார்வையில் தன் மனத்தின் துன்பங்களைச் சொல்லியிருந்தாலும் வெளியில் இருந்து பார்ப்போருக்கு அது உங்கள் மகளின் துன்பத்தின் வெளிப்பாடுமட்டுமல்லாமல் நல்லதொரு கன்னிக் கவிதையாகவும் மனதைத் தொட்டிருக்கிறது. அவளின் சோகத்துக்கு ஆறுதல் சொல்வதுடன் கவிதைக்காக என் பாராட்டுக்களையும தெரிவிக்கிறேன்....

தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துங்கள் நிச்சயம் பெரியாளாக வருவாள்.......வாழ்த்துக்கள்....

சுவி, தங்கள் மகள் தனது பேத்தியின் உண்மையான அரவணைப்பை, பாசத்தை, கண்டிப்பை உணர்ந்து ஒவ்வொரு வரிகளும் எழுதி இருக்கிறார், வாழ்த்துக்கள்! வாசித்து முடித்ததும், நினைவுகள் எனது அம்மம்மாவிடம் சென்று விட்டது... என்னையும் எனது பேரன் பேத்தி தான் சிறுவயயது முதல் பராமரித்தார்கள். பெற்றோரிடம் அறிந்ததை விட பேரன், பேத்தியிடம் தான் அதிகம் வாழ்க்கைப் பாடத்தை அறிந்தேன். அவைகளில் பலது இன்றும் கைகொடுக்கும். அவர்கள் இருவரின் மரணச் சடங்கிலும் பங்கெடுக்க முடியாத துர்பாக்கியசாலி. அதனால் தான் என்னவோ, அவர்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள் என்று ஒரு நினைப்பு என் மனதில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உங்கள் கவிதைக்கு..மனதை தொட்டு சொல்கிறது..வாழ்த்துக்கள்..

தாய்-மகள்- அம்மா-மகள்

தந்தை-மகன் ...அப்பா - மகன்

அண்ணன் -தம்பி...அண்ணா-தம்பி

மாமன்- மருமகன்------மாமா---மருமகன்

பேரன்-பேரன் அல்லது பேத்தி-பேத்தி ....................அம்மம்மா/அப்பம்மா/அப்பப்பா/அம்மப்பா - பேத்தி/பேரன்

ஏன் இங்கே இருபக்கத்தாலும் பேரன் அல்லது பேத்தி என்று சொல்லுகிறோம்..அல்லது வேறு சொற்கள் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மாவிற்கு பேத்தி எழுதிய இரங்கற்பா அருமை. உணர்வுகளை வார்த்தைகளால் வடிப்பது இலகுவாக அமைந்திருக்கின்றது உங்கள் மகளுக்கு சுவியண்ணா.

நீ தைக்க எடுக்கும் துணிகளில் எல்லாம்

என் பங்கும் எட்டிப் பாக்கும்!

நீ ஆக்கும் கொஞ்ச உணவில்கூட

என் பசி முழுசாய்த் தீரும்!

பேச‌ முடிய‌வில்லை.. ஏக்க‌ங்க‌ளின் தாக்க‌ங்க‌ள்..

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சந்தித்தபோது இப்படி ஒரு கவிதையை தன்னுடைய மகள் எழுதியிருப்பதாகவும் அதை இங்கு பதிய இருப்பதாகவும் சுவி அவர்கள் சொல்லியிருந்தார்அதனை நான் ஊக்கப்படுத்தியிருந்தேன்.

ஆனால் அது அவரது மகள்தான் எழுதியது என்பதை அவர் சொல்லும் வரை நான் தவிர்த்திருந்தேன்.

எனவே அவரது கன்னிக்கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.

அத்துடன் இங்கு சுவி அவர்களுக்கு இந்த பெயரை வைத்தவரும் இங்கு சுவி அவர்கள் எழுதுவதற்கான ஊக்கத்தையும் கணணியில் சில ஒழுங்குகளை செய்து கொடுத்தவரும் அவரது மகளே என்பது இன்னும் சிறப்புமிக்க செய்தி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.