Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக எம்மவர் கொண்டாட்டங்கள் இந்த மண்டபத்தில்தான் நடை பெறும்.கலியாணவீடு,பிறந்தநாள் ,மனித சாமிமார்களின் பூஜை,மற்றும் கோவில்கள் கட்டமுதல் சாமியை இங்கு வைத்துதான் பூஜை செய்வார்கள் பின்பு கோவிலுக்கு எடுத்து செல்வார்கள் இப்படி பலவித எம்மவர்களின் சடங்குகள் இந்த மண்டபத்தில் நடை பெறும் நானும் பலதுக்கு சென்று இருக்கிறேன் .இனிமேலும் செல்வேன்.

நன்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் அங்கு நடை பெற்றது .பலர் வந்திருந்தார்கள் அநேகமானவருக்கு அறிமுகம் தேவைப்படவில்லை எல்லோரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள்.

பெண்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் சேர தொடங்கினார்கள் ,ஆண்களும் தண்ணி நன்பர்கள் ஒன்றாக சேரத் தொடங்கினார்கள். இளம் வயதினர் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டனர்.

நான் இருந்த இடத்திற்கு நன்பன் வந்து பார் திறந்திருக்கு வாங்கோ என்று அழைக்க எப்படா கூப்பிடுவான் என்று பார்த்து கொண்டிருந்த எங்களுக்கு அவன் கூப்பிட்டவுடனே எல்லோரும் எழுந்து மதுபானம் இருந்த மேசைக்கு சென்றோம்.

எல்லோரும் தங்களுக்கு தேவையான அளவில் ஊத்தி "கையில கிலாசு கிலாசு ஸ்கொட்ச்சு" என்ற தோரணையில் நின்று அடித்து கொண்டிருந்தார்கள்.

ஒரு காலத்தில் சுரேஸ் போராட்டத்திற்க்கு தன்னை அர்பணித்திருந்தவன் அவன் மீது ஒரு வித மரியாதை இருந்தது.நாங்கள் இப்படி தண்ணி அடிச்சு சந்தோசமாக வாழும் பொழுது மக்களுக்காக போராடியவன் என்ற எண்ணதில் அவனை மனம் புனிதனாக ஏற்று கொண்டுவிட்டிருந்தது.அதே எண்ணத்தில் அவனருகே சென்று,"எப்படிடப்பா இருக்கிறாய் கன காலமாக காணவில்லை"," "ஊருக்கு போய்விட்டு நேற்றுத்தான் வந்தனான் ஊர் அந்த மாதிரியிருக்கு ஒரு பிரச்சனையும் ஆர்மிக்காரன் நிற்கிறான் தான் ஆனாலும் சனத்துக்கு பிரச்சனை இல்லை நீ போரது என்றால் இப்ப போகலாம்".

10 தமிழனுக்கு ஒரு இராணுவம் என்றரீதியில் அங்கு அரச படைகள் இருக்கின்றன,அங்கு பிரச்சனை இல்லை இப்ப போகலாம் என சொல்லுகிறான் இவன் எல்லாம் என்னத்துக்கு ஆயுதம் தூக்கினான் எனக்கு புரியவேயில்லை .ஒரு இனத்தை இன்னொரு இனம் ஆயுதபலத்தோடு ஆளும் பொழுது அது ஒரு சாதாரண சூழ்நிலை என எப்படி இந்த புனித போராளியால் கூறமுடிகிறது.ஆயுதத்திற்க்கு பயந்து மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தால் உண்மையிலயே அது ஏற்றுகொள்ளக்குடியதாக இருந்திருக்கும்.புலத்திலிருந்து நாம் உயிர் ஆபத்தில்லாமல் ஊருக்கு சென்று திரும்பி வந்தால் தாயக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என அர்த்தமில்லை என்பது எப்படி இவனுக்கு புரியப் போகிறது.

எனக்கு அடித்த வெறியும் சிறிது நேரத்தில் இறங்கிவிட்டது தொடர்ந்து அவனுடன் பேசுவதை தவிர்த்து கொண்டேன் .இன்னுமொரு கிலாஸ் எடுத்து அடிச்சேன் ,பழைய பாடல்கள் ஒலிக்க தொடங்கின,எழுந்து நடக்கவேணும் ,கையை காலை ஆட்ட வேண்டும் என்ற ஒரு உணர்வு வரதொடங்கியது.வேறு சிலர் அந்த உணர்வுக்கு செயல் வடிவம் கொடுத்தார்கள் .நானும் இணைந்து கொண்டேன்.சிலர் உடற்பயிற்சிசெய்த மாதிரி இருந்தது ஆனால் நான் மட்டும் வடிவாக ஆடுற மாதிரி எனக்கு தெரிந்தது.

அடுத்த நாள் அதே மண்டபம் எம்மவர்களின் பஜனை வழிபாடு நடைபெற்றது அதற்கு எனது சிறிய தாயாரை அழைத்து சென்றேன்.அவர் இந்த சாமியாரின் தீவிர ரசிகை,பக்தை,, எப்படியாவது எடுத்துக்கொள்ளலாம்.ஆண்கள்அதிகமானோர் வெள்ளை சேர்ட்,வெள்ளை காற்சட்டை அணிந்திருந்தார்கள் .நான் கறுத்த காற்சட்டை ,சாம்பல் நிற டிசேர்ட்டும் அணிந்து சென்றிருந்தேன்.

வாசலில் எல்லொரும் பாத அணியை கழற்றி வைத்திருந்தார்கள்.நானும் கழற்றி வைத்துவிட்டு சின்னம்மாவின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர்த்தி விட்டு அவரின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.உடனே வெள்ளை சேர்ட் அணிந்திருந்த முதியவர் என்னை பார்த்து மற்ற பகுதியில் இருக்கும்படி சைகை காட்டினர்.பிறகுதான் புரிந்தது நான் இருந்த பகுதி பெண்கள் பகுதியாம் மற்றது ஆண்கள் பகுதியாம்.ஆண்கள் பகுதியிலிருந்து அந்த முதியவரை நோட்டம் விட்டேன்.அவர் பெண்கள் பகுதியை கவனித்து கொண்டிருந்தார் ஆனால் வாய் பஜனை பாடிக்கொண்டிருந்தது.

மண்டபத்திலிருந்த கதிரைக்கு முதல்மரியாதை கொடுக்கப்பட்டிருந்தது.பட்டால் போர்த்து பூவால் அலங்கரித்து தீபம் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இதே மண்டபத்தில் பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பாதணிகளுடன் உள்ளே வந்து தண்ணி அடித்து சினிமா பாட்டு பாடி குத்தடித்தோம்.ஆனால் இன்று அதே இடம் புனிதமாக அறிவித்து பலதடைகளை வித்தித்தார்கள்.இக்குழுவினரின் புனித பிரதேசத்தில் புனிதமில்லாத நானும் ஒரு அங்கத்துவனாக பஜனைபாடி ,பிரசாதம் உண்டு வெளியேறினேன்.அந்த பக்தர்களில் எத்தனை பேர் புனிதர்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்குதான் வெளிச்சம்.

இன்னோரு நாள் அதே மண்டபத்தில் கலியாண வைபவம் நடை பெற்றது மனைவியுடன் சமுகம்ளித்திருந்தேன்.வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது,வாசலின் இரு பக்கமும் சிறுமிகள் சந்தனம்,குங்குமம்,கற்கண்டு தட்டுகளுடன் வரவேற்றார்கள்.

சந்தனமும், குங்குமமும் நெற்றியை அழங்கரிக்க,கற்கண்டு வாய்க்கு ருசி அளிக்க ராஜ நடைநடந்து உள்ளே சென்றேன் .மேடையில் மணவறை பூக்களால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இந்து சடங்குகள் நடைபெறுவதற்கு ஏற்ற முறையில் புனித பிரதேசமாக இருந்தது.

மணவறையிலிருந்த மாப்பிள்ளையை எங்கேயோ கண்டமாதிரி இருந்தது ,உடனே யார் என அடையாளம் காணமுடியாமல் மனிசியிடம் கேட்டேன் .மனிசியும் தெரியாது எனதலையாட்டினாள்.

நீண்ட ஆராச்சியின் பின் அவர் வேலை செய்யும் இடம் தெரிய வந்தது, எனது சந்தேகத்துக்கு விடை கிடைத்தது.பலதடவை இவரை வேறு ஒரு பெண்னுடன் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்ததை கண்டது ஞாபகத்தில் வந்தது.அந்த முத்ததின் கவர்ச்சியால் அவர்கள் இருவரும் எனது மனதில் இடம்பிடித்திருந்தார்கள்.

நல்ல காதலர்கள் என எண்ணியதுண்டு. ஆனால் இன்று வேறு பெண்னுடன் கலியாண மேடையில்,அன்றைய அவர்களின் அந்த முத்தம் நிச்சம் அவர்களை அந்தரங்கம் வரை எடுத்து சென்றிருக்கும் இன்று வேறு பெண்னுடன் புனிதனாக மாப்பிள்ளை கோலத்தில் .....

அர்ச்சகர் சமஸ்கிருத்தத்தில் மந்திரங்கள் சொல்லிகொண்டிருக்க இன்னுமொரு அர்ச்சகர் உதவி புரிந்துகொண்டிருந்தார்.அந்த அர்ச்சகரை பார்த்த கந்தர்

"உவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கு"

"அட எனக்கு இன்றைக்குத்தான் தெரியும்"

சிறிது நேரத்தின் பின்பு மணமக்கள் அர்ச்சகர் இருவரின் காலிலும் விழுந்து வணங்கினார்கள். போனகிழமையும் இந்தாளின்ட காலில் சிலர் விழுந்து கும்பிட்டதை கண்டனான் .அநேகருக்கு அர்ச்சகர் என்றால் புனிதர்கள் என்ற நினைப்பு அவர்களும் மனிதர்கள் தப்பு தண்டவாளங்கள் செய்வார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

கலியாண சாப்பாட்டை ஒரு பிடிபிடித்துவிட்டு மணமக்களை வாழ்த்தி அன்பளிப்பு செய்து வீட்டை வெளிகிட்டேன்.

வானொலியில் பெண் அறிப்பாளர் நிகழ்ச்சி நடத்தினார்.சில பக்தி பாடல்கள் ஒலிபரப்பி குடும்ப வாழ்வு பற்றிய கட்டுரைகள் ,கணவன் மனைவிக்கு இடையில் அன்பு எப்படி உருவாகும் போன்ற நல்லவிடயங்களை தான் படித்த புத்தகத்திலிருந்து வாசித்து கொண்டிருந்தார்.இந்த பிள்ளை நல்ல கருத்துகள் சொல்லுது என்ற படியே வானோலியின் வோலியுமை கூட்டினேன்.ஒழுங்காக புருசனுடன் குடும்ப நடத்தாமல் வேறு ஒருத்தனுடன் ஒடிப்போட்டு இப்ப எங்களுக்கு அறிவுரை சொல்லுறாள் நீங்களும் அவளின்ட கருத்து நல்லம் என்று கேட்கிறீயள் ,நிற்பாட்டுங்கோ றேடியோவை கத்தினாள் என்ட மனிசி.

ஏன் ஒடினவள் என கேட்க வேணும் போல இருந்தது ஆனால் கேட்வில்லை வீண்வம்பு என்னத்துக்கு என தவிர்த்துவிட்டேன்.

"யாழ்களத்தில புனிதம் என்று ஒரு கிறுக்கள் புத்தன் என்ற ஒருத்தர் கிறுக்கியிருக்கார் .கிறுக்களை பார்த்தால் அந்த மனுசன் நல்லவர் போல இருக்கு நீங்களும் வாசியுங்கோ"

"அது நான் தான் நேற்று கிறுக்கினான்"

"அட சீ..................நாசமறுப்பு"

யாவும் கற்பனையே.....மீண்டும் சொல்லுகிறேன் இது கதையல்ல சும்மா எண்ணங்களின் கிறுக்கலே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கறுத்த காற்சட்டை ,சாம்பல் நிற டிசேர்ட்டும் அணிந்து சென்றிருந்தேன்.

புத்தருக்கு கிட்டடியிலை இருட்டடி இருக்கு.

நான் மட்டும் வடிவாக ஆடுற மாதிரி எனக்கு தெரிந்தது.

எனக்கும் உந்த வருத்தம் இருக்கு.

கதை வாசிச்ச குற்றத்துக்கு ஒரு பச்சைப்புள்ளி. :)

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்கள் போலி என்று தெரிந்தும் நாம் அவற்றை ஆதரித்தோ அனுசரித்துக்கொண்டேதான் வாழ்வை கடத்துகிறோம். உங்கள் கிறுக்கலை படித்து நீங்கள் நல்லவர் என்று நம்பி ஒரு பச்சை குத்துறன். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி புத்தன் இதை எழுதின நீங்கள் ரொம்ப புனிதமானவரோ :):lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கிறுக்கல் புத்தன் அண்ணா.. முரண்பாடுகளாலேயே முடிச்சு போட்ட இனக்குழுமங்களில்

இவை எல்லாம் சாதாரணமே..

ஆனாலும் எங்களுக்கு மற்றவன்ரை விடுப்பு நோண்டலை என்றால் திருப்தி வராதே??? <_<:lol:

பாவம் அந்த மண்டபம் தன் சுயசரிதையை சொன்னால்.. இப்படி எத்தனை ஆயிரம் கிறுக்கல்கள்??? :o:icon_idea:

(4வது பச்சை என்ரையாக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பக்கம் கண்களால் மேய்ந்த பெரியவர், உதட்டுமுத்தம் கொடுத்த மாப்பிளைப்பெடியன், மந்திரம் சொன்ன ஐயர், பத்தாதற்கு ஒலிபரப்பாளர்....புத்தனுக்கு எல்லார் மேலேயும் சரியான பொறாமை...அதை வேற இங்க கிறுக்கி அந்தக்கிறுக்கலைப்பார்த்து எங்களுக்கும் கிறுக்குப் பிடிக்க வைத்து பச்சைகளை கொள்ளையடிச்சு....எப்ப பிடிச்சுச் சொல்றன் ஆராவது இந்தாளுந்த பேரை மாத்துங்கோ :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புனிதம் என்றும் எதுவுமில்லை, குளித்து முழுகிய உடம்பைத் தவிர!

சுவாரஸ்யமாகக் கிறுக்கிய புத்தனுக்குப் பாராட்டுக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நீங்கள் புத்தன் யாவும் கற்பனை என குறிப்பிட்டாலும் பல விடயங்கள் நானும் பார்த்திருக்கின்றேன் மிகவும் அருமையான கிறுக்கல் நன்றி புத்தன்

ஏழாவது பச்சையை நான் குத்தியுள்ளேன்

எத்தனை பேர் புனிதர்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்குதான் வெளிச்சம்.

கிறுக்கலிலும் நேர்த்தியான கிறுக்கல் புத்தனுக்கு ஒரு வாழ்த்து :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக இவர் கிறுக்கினால் அதில் பலருக்கு குட்டு இருக்கும்

இதிலும் அதுவே.

ஆனாலும் கல் என்றால் கல்

கடவுள் என்றால் கடவுள்

நன்றி கிறுக்கலுக்கு புத்தா.

எட்டாவது பச்சை என்னுடையது

கிருபன் சொன்னது மாதிரி... "புனிதம்" என்று ஒன்றுமில்லை. அதாவது... ஒன்றுமே இல்லை என்று என்னால் சொல்ல இயலவில்லை. இருக்கு. ஆனால் இங்கு அந்த புனிதர்களைப் பற்றி கதைக்க நான் விரும்பவில்லை.

இதுவரை என் மனச்சாட்சிக்கு நான் கூட புனிதமாய் இருக்கவில்லை எனும்போது, மற்றவரெல்லாம் புனிதமாய் இருக்கவேண்டுமென நான் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

ஆனாலும்.... ஆகக் குறைந்தது, மனச்சாட்சியுள்ள நேர்மையுள்ள மனிதனாய்த்தன்னும் வாழ முயற்சிக்கின்றேன்.

புத்தா...! கிறுக்கல் இல்லை இது! இப்பிடியான விடயங்களை எழுதுங்கள் தொடர்ந்தும்! எம்மை சிந்திக்கப் பண்ணும் கொஞ்சமாவது.

எழுத்துக்கு நன்றி! :)9

  • கருத்துக்கள உறவுகள்

விடை தெரியாத கேள்விகளைக் கேட்டதால் !

ஒரு புத்தன் ஞானியாகினான் !

இன்னொரு புத்தன்????

கதை நன்றாக இருக்கின்றது, புத்ஸ்!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

பலவிடயங்களை அவதானிச்சு ஒருங்கிணைச்சு ஒரு கட்டுரைக்குள் உள்ளடக்கி அழகாக சுவாரசியமாக எழுதிய புத்தன் அண்ணாவிற்க்கு எனது விசேட பாராட்டுக்கள்...நன்றாக விடயங்களைத் தொய்வின்றிக் கோர்த்திருக்கிறீர்கள்..அருமை..

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் கிறுக்கினால் அதில் ஒரு "கோலம் " இருக்கும்...........கண் கண்ட கோலம் .......கிறுக்கலை பதிந்தமைக்கு நன்றி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

புனிதம் என்பது இடத்தில் அல்ல

மனிதர்களின் மனத்தில் இருக்க வேண்டும்

எனக் கிறுக்கியிருக்கும் கிறுக்கல் மன்னனுக்கு

வாழ்த்துகள்

புத்தன் !

உங்களால் மட்டும் தான் யதார்த்தத்தை முகத்தில் அடிச்ச மாதிரி சொல்ல முடியும் என்று மீண்டும் ஒருமுறை நிருபித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கிறுக்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு கிட்டடியிலை இருட்டடி இருக்கு.

எனக்கும் உந்த வருத்தம் இருக்கு.

கதை வாசிச்ச குற்றத்துக்கு ஒரு பச்சைப்புள்ளி. :)

இருட்டடிக்கும் பச்சைக்கும் நன்றிகள் கு..சா

பல விடயங்கள் போலி என்று தெரிந்தும் நாம் அவற்றை ஆதரித்தோ அனுசரித்துக்கொண்டேதான் வாழ்வை கடத்துகிறோம். உங்கள் கிறுக்கலை படித்து நீங்கள் நல்லவர் என்று நம்பி ஒரு பச்சை குத்துறன். :lol: :lol:

சில நேரங்களில் எனக்கே சந்தேகம் வரும் நான நல்லவனா கேட்டவனா என்றுநன்றிகள் சாத்திரியார்

அது சரி புத்தன் இதை எழுதின நீங்கள் ரொம்ப புனிதமானவரோ :):lol::D

சத்தியமா புனிதனுமில்லை ..புத்தனுமில்லை நன்றிகள் ரதி

நல்ல கிறுக்கல் புத்தன் அண்ணா.. முரண்பாடுகளாலேயே முடிச்சு போட்ட இனக்குழுமங்களில்

இவை எல்லாம் சாதாரணமே..

ஆனாலும் எங்களுக்கு மற்றவன்ரை விடுப்பு நோண்டலை என்றால் திருப்தி வராதே??? <_<:lol:

பாவம் அந்த மண்டபம் தன் சுயசரிதையை சொன்னால்.. இப்படி எத்தனை ஆயிரம் கிறுக்கல்கள்??? :o:icon_idea:

(4வது பச்சை என்ரையாக்கும்)

நன்றிகள் ஜீவா ஜயோ இந்த மண்டபங்கள் படும்பாடு

பெண்கள் பக்கம் கண்களால் மேய்ந்த பெரியவர், உதட்டுமுத்தம் கொடுத்த மாப்பிளைப்பெடியன், மந்திரம் சொன்ன ஐயர், பத்தாதற்கு ஒலிபரப்பாளர்....புத்தனுக்கு எல்லார் மேலேயும் சரியான பொறாமை...அதை வேற இங்க கிறுக்கி அந்தக்கிறுக்கலைப்பார்த்து எங்களுக்கும் கிறுக்குப் பிடிக்க வைத்து பச்சைகளை கொள்ளையடிச்சு....எப்ப பிடிச்சுச் சொல்றன் ஆராவது இந்தாளுந்த பேரை மாத்துங்கோ

நன்றிகள் வல்வை சகாரா...எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற பொறாமைதான் இந்த கிறுக்கலுக்கு காரணம்...கி கி....

புனிதம் என்றும் எதுவுமில்லை, குளித்து முழுகிய உடம்பைத் தவிர!

சுவாரஸ்யமாகக் கிறுக்கிய புத்தனுக்குப் பாராட்டுக்கள்

சரியாக சொன்னீர்கள்...மனசை ஒருத்தனாலும் புனிதமாக வத்திருக்க முடியாது  ஆனால் நடிக்க முடியும் ...நன்றிகள் கிருபன்

இதில் நீங்கள் புத்தன் யாவும் கற்பனை என குறிப்பிட்டாலும் பல விடயங்கள் நானும் பார்த்திருக்கின்றேன் மிகவும் அருமையான கிறுக்கல் நன்றி புத்தன்

ஏழாவது பச்சையை நான் குத்தியுள்ளேன்

ஏழாவது பச்சைக்கு நன்றிகள்

<p>

எத்தனை பேர் புனிதர்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்குதான் வெளிச்சம்.

<span style="color: #008000"><span style='font-size: 18px;'><span style="font-family: tahoma,geneva,sans-serif"><strong>கிறுக்கலிலும் நேர்த்தியான கிறுக்கல் புத்தனுக்கு ஒரு வாழ்த்து >

சாதாரணமாக இவர் கிறுக்கினால் அதில் பலருக்கு குட்டு இருக்கும்

இதிலும் அதுவே.

ஆனாலும் கல் என்றால் கல்

கடவுள் என்றால் கடவுள்

நன்றி கிறுக்கலுக்கு புத்தா.

எட்டாவது பச்சை என்னுடையது

நன்றிகள் விசுகு கருத்து பகிர்ந்தமைக்கு

<strong>கிருபன் சொன்னது மாதிரி... "புனிதம்" என்று ஒன்றுமில்லை. அதாவது... ஒன்றுமே இல்லை என்று என்னால் சொல்ல இயலவில்லை. இருக்கு. ஆனால் இங்கு அந்த புனிதர்களைப் பற்றி கதைக்க நான் விரும்பவில்லை.

இதுவரை என் மனச்சாட்சிக்கு நான் கூட புனிதமாய் இருக்கவில்லை எனும்போது, மற்றவரெல்லாம் புனிதமாய் இருக்கவேண்டுமென நான் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

ஆனாலும்....  ஆகக் குறைந்தது, மனச்சாட்சியுள்ள நேர்மையுள்ள மனிதனாய்த்தன்னும் வாழ முயற்சிக்கின்றேன்.

புத்தா...! கிறுக்கல் இல்லை இது! இப்பிடியான விடயங்களை எழுதுங்கள் தொடர்ந்தும்! எம்மை சிந்திக்கப் பண்ணும் கொஞ்சமாவது.

நன்றிகள் கவிதை மனசாட்சியுள்ள மனிதனாக வாழமுயற்சிப்போம்

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடை தெரியாத கேள்விகளைக் கேட்டதால் !

ஒரு புத்தன் ஞானியாகினான் !

இன்னொரு புத்தன்????

கதை நன்றாக இருக்கின்றது, புத்ஸ்!!! :D

நன்றிகள் புங்கையூரான்.....இந்த புத்ஸ் அந்த புத்தன் மாதிரி வாரதற்கு ஒரு முயற்சிதான்

பலவிடயங்களை அவதானிச்சு ஒருங்கிணைச்சு ஒரு கட்டுரைக்குள் உள்ளடக்கி அழகாக சுவாரசியமாக எழுதிய புத்தன் அண்ணாவிற்க்கு எனது விசேட பாராட்டுக்கள்...நன்றாக விடயங்களைத் தொய்வின்றிக் கோர்த்திருக்கிறீர்கள்..அருமை..

நன்றிகள் சுபேஸ்

புத்தன் கிறுக்கினால் அதில் ஒரு "கோலம் " இருக்கும்...........கண் கண்ட கோலம் .......கிறுக்கலை பதிந்தமைக்கு நன்றி

நன்றிகள் நிலாமதி கருத்துபகிர்ந்தமைக்கு

புனிதம் என்பது இடத்தில் அல்ல

மனிதர்களின் மனத்தில் இருக்க வேண்டும்

எனக் கிறுக்கியிருக்கும் கிறுக்கல் மன்னனுக்கு

வாழ்த்துகள்

வாத்தியார் நன்றிகள்

புத்தன் !

உங்களால் மட்டும் தான் யதார்த்தத்தை முகத்தில் அடிச்ச மாதிரி சொல்ல முடியும் என்று மீண்டும் ஒருமுறை நிருபித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கிறுக்கல்கள்.

நன்றிகள் அபிராம்...தொடரும் எனது கிறுகல்கள்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சகர் சமஸ்கிருத்தத்தில் மந்திரங்கள் சொல்லிகொண்டிருக்க இன்னுமொரு அர்ச்சகர் உதவி புரிந்துகொண்டிருந்தார்.அந்த அர்ச்சகரை பார்த்த கந்தர் -புத்தன்

-------------------------------------------------------------------

சாத்தியமாக நான் சொல்லவில்லை புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா மண்டபத்தை விட மோசம் மனித வாழ்க்கை.நான் நேர பார்த்த விடையம் ஒன்று இப்ப ஞாபகம் வருது.ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்தவன் அதே பெண்ணின் கலியானத்தில் மாப்பிளைத்தேரழன். :lol: மற்றது 12 ஆவது பச்சை என்னது :)

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமானவருக்கு மனைவி மூலம் மனைவியின் நண்பி அறிமுகமாகிறார்.அவரும் திருமணமானவர்.இரு குடும்பத்துக்கும் பிள்ளைகள் உண்டு.

மனைவியின் நண்பியும் திருமணமானவரும் அடிக்கடி கணவன் மனைவியாக நடந்து கொள்கிறார்கள். :o :o

புத்தனின் சமுதாய சாடலுக்கு நன்றிகள்.

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சகர் சமஸ்கிருத்தத்தில் மந்திரங்கள் சொல்லிகொண்டிருக்க இன்னுமொரு அர்ச்சகர் உதவி புரிந்துகொண்டிருந்தார்.அந்த அர்ச்சகரை பார்த்த கந்தர் -புத்தன்

-------------------------------------------------------------------

சாத்தியமாக நான் சொல்லவில்லை புத்தன்.

சத்தியமாக நீங்கள்தான்

புத்தா மண்டபத்தை விட மோசம் மனித வாழ்க்கை.நான் நேர பார்த்த விடையம் ஒன்று இப்ப ஞாபகம் வருது.ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்தவன் அதே பெண்ணின் கலியானத்தில் மாப்பிளைத்தேரழன். :lol: மற்றது 12 ஆவது பச்சை என்னது :)

ஜயோ உலகம் அழியப்போகுது......கிகிகி...

<p>

புத்தனின் சமுதாய சாடலுக்கு நன்றிகள்.

நன்றிகள் நுனாவிலான் எதோ முடிந்ததை முயற்சிக்கிறேன்

வியாபார நோக்கத்துக்காக மீள் பிரசுரம் செய்யப்படுகிறது...இல்லை இல்லை புகழுக்காக மீள் பிரசுரம் செய்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கிறுக்கல் புத்தன் ஆனால் அந்த மண்டபமே தனது சுய சரிதயை சொல்லவது போல கற்பனை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இதனை படித்தபிறகுதான் எனக்கே ஒரு யோசனை தோன்றியிருக்கிறது இப்படி சிந்தித்து எழுதினால் எப்படியென்று பாக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கிறுக்கல் புத்தன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா மண்டபத்தை விட மோசம் மனித வாழ்க்கை.நான் நேர பார்த்த விடையம் ஒன்று இப்ப ஞாபகம் வருது.ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்தவன் அதே பெண்ணின் கலியானத்தில் மாப்பிளைத்தேரழன். :lol: மற்றது 12 ஆவது பச்சை என்னது :)

உதே விஷயம் நானும் கண்டிருக்கிறன். இருவரும், மாப்பிள்ளையும் தோழனும் எனது நண்பர்கள். தோழன் பயங்கர விளையாட்டுகாரன். மாப்பிள்ளை தான் பாவம் சரியான அப்பாவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.