Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பரிமளம் அறிவது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் அண்ணியை நேர காலத்துக்கு கூப்பிடுற வேலையை பாருங்கோ   அண்ணே 

  • Replies 294
  • Views 47.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 4:46 AM, குமாரசாமி said:

அதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.

வெட்டுனா அந்த தல எனக்கு  என்று சொல்லி போடுவம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 3:16 AM, குமாரசாமி said:

... ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன். ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார்...

Kv-5.png

'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..? :innocent:

சிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..! :)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

Kv-5.png

'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..? :innocent:

சிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..! :)

என்னதான் சண்டை வெடிகள் சலசலப்புகள் இருந்தாலும் படிப்பில் கெட்டிக்காரர்கள் நம்ம ஆட்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை இதுவரை 5460 தடவை பார்த்து ரசித்துள்ளார்களென்பது வியப்பாக உள்ளது..!  😋🤗

mok.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் குசா கடிதத்தைப் போடாமல் முகநூலில வாய்பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா?????

On 4/10/2019 at 4:07 AM, ராசவன்னியன் said:

இந்த திரியை இதுவரை 5460 தடவை பார்த்து ரசித்துள்ளார்களென்பது வியப்பாக உள்ளது..!  😋🤗

mok.jpg

எல்லாம் ஊர்த்துழவாரம் அறிவதில் உள்ள ஆர்வம் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணர் ...என்னய்யா இப்படி எழுதுகிறீர்கள்?
மண்டையில் இருந்து யோசித்து எழுதுகிறீர்களா? இல்லை ஏற்கனே நீங்கள் உண்மையில் எழுதிய கடிதத்தின் நகலை இங்கே எழுதி கலாய்க்கிறீர்களா?
எது எப்படியோ, அருமை...இதை ஒரு குட்டி புத்தகமாக கூட வெளியிடலாம் , அவ்வளவு இனிமை.
இதை வாசிக்க செங்கை ஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" மனதில் வந்து போகிறது.
👌

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,ஏன் எழுதாமல் இருக்கிறீங்கள் 😟உடம்பு சரியில்லையா ?
 
2 minutes ago, ரதி said:

அண்ணா,ஏன் எழுதாமல் இருக்கிறீங்கள் 😟உடம்பு சரியில்லையா ?
 
வசந்தி எப்படி "முன்ஸ்டருக்கு" வந்து சேர்ந்தா என்று  விசாரித்துத் திரியிறார் போல. அந்தப் புதினத்தில எழுத மறந்திட்டார்.....🧐

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

சிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.

ஒரு எட்டு பார்த்திருக்கலாம் தானே உந்த மனுசனை 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முருகன் துணை.

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.05.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                          நான் நல்ல சுகம் நீங்களும் சுகமாயிருக்க கடவுளை வேண்டுறன்.

உங்கடை கடிதம் கிடைத்தது.உடன் பதில் போட முடியவில்லை. ஏனெண்டால் இப்ப நான் தான்  ரெஸ்ரோரன்றுக்கு  பொறுப்பு. முதலாளி இத்தாலிக்கு போய்விட்டார். திரும்பிவர இன்னும் ஒரு கிழமை செல்லும். அதாலை நான் தான் எல்லாத்தையும் கவனிக்க வேணும். கடைக்கு போய் சாமன் வாங்கிறதிலையிருந்து வருமான காசை பாங்கிலை போடுறவைக்கும் நான் தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறன் எண்டு சொன்னாப்பிறகு என்னாலையும் ஏலாது எண்டு சொல்லேலாமல் போச்சுது. இப்ப என்னட்டை இருக்கிற திறப்புக்கொத்தே அஞ்சு கிலோ வரும். அவ்வளவுத்துக்கு பொறுப்பு என்னட்டை இருக்கு.

உங்கடை வீட்டிலை எல்லாரும் சுகமோ?  கொண்ணர் என்ன செய்யிறார்? நான் உங்களுக்கு தனிய கடிதம் போடுறதை உங்கை ஒருத்தருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். எங்கடை ஊர்ச்சனங்களைப்பற்றி தெரியும் தானே.சும்மா தேவையில்லாமல் கதைக்குங்கள்.

நீங்கள் கனடாவுக்கு போக விருப்பம் எண்டு எழுதியிருந்தீர்கள். அங்கை உங்களுக்கு ஆர் இருக்கினம்? தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ? ஏனெண்டால் அவசர உதவிக்கு ஆரும் இருந்தால் பிரச்சனை இல்லை.இல்லாட்டில் தனிய இருந்த்து என்னை மாதிரி கஸ்ரப்படவெல்லோ வேணும். நீங்கள் விரும்பினால் பரீஸ் இல்லாட்டி சுவீசுக்கு வாறதுக்கு அலுவல் பாக்கிறன். ஏனெண்டால் ஆத்திர அந்தரத்துக்கு நானாவது பக்கத்து நாட்டிலை இருக்கிற படியாலை பயமில்லை எண்டு நினைக்கிறன். இஞ்சை வந்து லண்டனுக்கும் சனம் போகுது.எதுக்கும் ஒருக்கால் விசாரிச்சு பாக்கிறன்.

ஏன் உங்களுக்கு ஜேர்மன் வர விருப்பமில்லையோ? இஞ்சை விசா பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதுவும் வேலை ஒண்டு இருந்திட்டால் பெரிய பிரச்சனை இல்லை.

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான். எதுக்கும் உங்கடை ஐய்யா அம்மாவோடை கதைச்சு முடிவெடுக்கவும். நான் எல்லா உதவியும் செய்வன்.

செல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை  வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.

இப்ப என்ரை ரெலிபோன் நம்பர் எழுதி விடுறன்.ஏதும் அவசரமெண்டால் எடுங்கோ.

0251 83 110

உங்களுக்கு ரெலிபோன் இருந்தால் தரச்சொல்லி எழுதியிருந்தன், அதுக்கு பதிலை காணேல்லை.வேறை ஒண்டுமில்லை உங்கடை குரலை ஒருக்கால் கேக்கலாம் எண்டுதான்.

மற்றும் படி நீங்கள் எனக்கு ரெலிபோன் எடுக்கேக்கை வேறை ஆரும் தூக்கினால் பிளீஸ் செப் குரு எண்டு சொல்லுங்கோ அவங்களுக்கு எல்லாம் விளங்கும்.

உங்கள் பதில்கடிதம் கண்டு தொடர்வேன்
இப்படிக்கு
அன்புடன்
குரு குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில நிக்கிறன் வந்து எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஊரை விட்டு போன பிறகு தான் கனபேருக்கு சண்டித்தனம் அதிகமாக வாரது........ நம்ம சனம் பேஸ்புக்கில் ஈழம் புடிக்கிற மாதிரி இப்ப வரைக்கும்

நீங்களும் சும்மாதானே எழுதி இருக்கிறீர்கள் நீங்கள் ஒரு பச்சை கொழந்தை சாமி அது எனக்கு மட்டும் தெரியும்:)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

முருகன் துணை.

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.05.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                          நான் நல்ல சுகம் நீங்களும் சுகமாயிருக்க கடவுளை வேண்டுறன்.

உங்கடை கடிதம் கிடைத்தது.உடன் பதில் போட முடியவில்லை. ஏனெண்டால் இப்ப நான் தான்  ரெஸ்ரோரன்றுக்கு  பொறுப்பு. முதலாளி இத்தாலிக்கு போய்விட்டார். திரும்பிவர இன்னும் ஒரு கிழமை செல்லும். அதாலை நான் தான் எல்லாத்தையும் கவனிக்க வேணும். கடைக்கு போய் சாமன் வாங்கிறதிலையிருந்து வருமான காசை பாங்கிலை போடுறவைக்கும் நான் தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறன் எண்டு சொன்னாப்பிறகு என்னாலையும் ஏலாது எண்டு சொல்லேலாமல் போச்சுது. இப்ப என்னட்டை இருக்கிற திறப்புக்கொத்தே அஞ்சு கிலோ வரும். அவ்வளவுத்துக்கு பொறுப்பு என்னட்டை இருக்கு.

உங்கடை வீட்டிலை எல்லாரும் சுகமோ?  கொண்ணர் என்ன செய்யிறார்? நான் உங்களுக்கு தனிய கடிதம் போடுறதை உங்கை ஒருத்தருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். எங்கடை ஊர்ச்சனங்களைப்பற்றி தெரியும் தானே.சும்மா தேவையில்லாமல் கதைக்குங்கள்.

நீங்கள் கனடாவுக்கு போக விருப்பம் எண்டு எழுதியிருந்தீர்கள். அங்கை உங்களுக்கு ஆர் இருக்கினம்? தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ? ஏனெண்டால் அவசர உதவிக்கு ஆரும் இருந்தால் பிரச்சனை இல்லை.இல்லாட்டில் தனிய இருந்த்து என்னை மாதிரி கஸ்ரப்படவெல்லோ வேணும். நீங்கள் விரும்பினால் பரீஸ் இல்லாட்டி சுவீசுக்கு வாறதுக்கு அலுவல் பாக்கிறன். ஏனெண்டால் ஆத்திர அந்தரத்துக்கு நானாவது பக்கத்து நாட்டிலை இருக்கிற படியாலை பயமில்லை எண்டு நினைக்கிறன். இஞ்சை வந்து லண்டனுக்கும் சனம் போகுது.எதுக்கும் ஒருக்கால் விசாரிச்சு பாக்கிறன்.

ஏன் உங்களுக்கு ஜேர்மன் வர விருப்பமில்லையோ? இஞ்சை விசா பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதுவும் வேலை ஒண்டு இருந்திட்டால் பெரிய பிரச்சனை இல்லை.

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான். எதுக்கும் உங்கடை ஐய்யா அம்மாவோடை கதைச்சு முடிவெடுக்கவும். நான் எல்லா உதவியும் செய்வன்.

செல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை  வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.

இப்ப என்ரை ரெலிபோன் நம்பர் எழுதி விடுறன்.ஏதும் அவசரமெண்டால் எடுங்கோ.

0251 83 110

உங்களுக்கு ரெலிபோன் இருந்தால் தரச்சொல்லி எழுதியிருந்தன், அதுக்கு பதிலை காணேல்லை.வேறை ஒண்டுமில்லை உங்கடை குரலை ஒருக்கால் கேக்கலாம் எண்டுதான்.

மற்றும் படி நீங்கள் எனக்கு ரெலிபோன் எடுக்கேக்கை வேறை ஆரும் தூக்கினால் பிளீஸ் செப் குரு எண்டு சொல்லுங்கோ அவங்களுக்கு எல்லாம் விளங்கும்.

உங்கள் பதில்கடிதம் கண்டு தொடர்வேன்
இப்படிக்கு
அன்புடன்
குரு குமாரசாமி

வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு  மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்🤔🤔🤔  

3 hours ago, குமாரசாமி said:

முருகன் துணை

இப்ப அண்ணை முருகனைத் துணைக்கு அழைச்சிட்டார். 😀

விளங்குது... விளங்குது...

3 hours ago, குமாரசாமி said:

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான்.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு  மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்🤔🤔🤔  

சின்னண்ணிக்கு நாலு கடிதம் போட்டால் தப்பா.......!  😐

  • கருத்துக்கள உறவுகள்

கடை இப்ப நான் தான் நடத்திறன் என்று பந்தாவை பாருங்கோவன்! கனடாவில துணை இல்லை பக்கத்து நாடுகள் என்றால் அண்ணர் ஓடி போவாராம் எல்லே! கடைசியா ஜேர்மனிக்கே வர சொல்லி வெற்றிலை பாக்கு வைச்சு கூப்பிடுறார்.
இதெல்லாம் அவவுக்கு தெரிஞ்சால் அவ சொன்னதை செய்தாலும் செய்வா?!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் வசந்திக்கு கொக்கி போடுறார். எண்டாலும் அந்தளவு கெதியா பரிமளத்தைக் கைகழுவி விட்டுட்டு....... குரலைக் கேட்கவேணுமாம் எல்லே குரலை. 🙅‍♂️

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளத்தின் கொண்ணர் இவரை சாத்தியதில் தப்பே இல்லை..!

முன்ஸ்ரருக்கு வந்து இன்னமும் நாலு சாத்து சாத்த வேணும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

கடைசீல பரிமளம் ஜெர்மனி வந்து, தூக்கிப் போட்டு மிதிச்ச கதையோட தான் முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/7/2019 at 5:11 AM, ஈழப்பிரியன் said:

உந்த இத்தாலி முதலாளியின் விலாசத்தை எனக்கும் ஒருக்கா தாங்கோ பாப்பம்.

ஏன் என்னத்துக்கு???? பிட்சா சாப்பிடவா? :grin:

On 4/3/2019 at 7:14 AM, தனிக்காட்டு ராஜா said:

சிங்கன் விசாவுக்காக யாருக்கோ வலைவிரிச்ச செய்தி உள்ளால உ லாவுது என்பது தெரிகிறது . 

என்ன அவள் விசாவுக்கு மட்டுமா ?? அல்லது எல்லாவற்றுக்குமா என கேட்டுவிட்டு கதைக்க மறுத்திருப்பா என்பது உண்மையா இருக்குமே என்ன?

அவ என்னோடை கூட மாட வேலைசெய்யிற போலந்து சிங்காரி.......அவதான் எனக்கு வேலை பழக்கினவ...🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/5/2019 at 5:55 PM, ஏராளன் said:

காய்ச்சல் வந்தால் துணைவேணும் என்றது உண்மையோ?!

தனிய இருக்கிறவனுக்கு காய்ச்சல் துன்பம் வந்தால் தேத்தண்ணி போட  ரசம் வைச்சு தர ஆள் வேணுமெல்லோ..😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தனிய இருக்கிறவனுக்கு காய்ச்சல் துன்பம் வந்தால் தேத்தண்ணி போட  ரசம் வைச்சு தர ஆள் வேணுமெல்லோ..😀

அது மனைவியா? துணைவியா? தோழியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.