Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பிக்கு அஞ்சலிகள். (தமிழினி கண்மணி யின் சகோதரி )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

கண்மணி அக்கா தமிழினி ஆகியோரின் சகோதரியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.   

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா, தமிழினி  உங்கள் துயரில் நாங்களும்பங்குகொள்கின்றோம் உங்களுக்கும் உறவுகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்மணி அக்கா மற்றும் தமிழினி ஆகியோரினது சகோதரியின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்! 💐

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா, தமிழினி  உங்கள் துயரில் நாங்களும்பங்குகொள்கின்றோம் உங்களுக்கும் உறவுகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்💐

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகள் எப்பவுமே துயரமானவை, ஆழ்ந்த அனுதாபங்கள்

சகோதரியின் இழப்பினால் துயருற்றுள்ள கண்மணி அக்காவுக்கும், தமிழினியிற்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

நெருக்கமான உறவுகளில் இடம்பெற்றுள்ள அடுத்தடுத்த மரணங்கள் தரும் கவலையை காலம் ஆற்றும் என நம்புகின்றேன். தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தோழியர் கண்மணி தமிழினிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு சில வருடங்களாக துயர் சூழ்ந்த காலத்தில் மூழ்கி இருப்பதை அறிவேன். பொலிற்றாவிற்கு ஆத்ம சாந்தியையும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனத்திடத்தையும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

  கண்மணி அக்கா, தமிழினி குடும்பத்தினருக்கு எமது  ஆழ்ந்த அனுதாபங்கள். 

மரண அறிவித்தல்
21-616c7ce2a9645.webp
பிறப்பு13 AUG 1956
இறப்பு17 OCT 2021
திருமதி கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன்

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன் அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், சுகிர்தம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மரியதாசன் செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

யுவன், நவீன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

மெலோனி, லிஷ்க்கா ஆகியோரின் அன்புநிறை மாமியும்,

Ayva, Saphirra, Sierra, Nila ஆகியோரின் நேசமிகு அப்பம்மாவும்,

கிளீட்டஸ், ஜெனிற்றா, அருட்சகோதரி பெலிசிற்றா(Good Shepherd), கமிலஸ், குயின்ரஸ், ஜொவிற்றா, விஜிற்றா, மெரிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிளாறட், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஜஸ்ரினா, டீலியா, டொன்பொஸ்கோ, அருள், ராம்நாத் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சறோசா- மரியதாசன், காலஞ்சென்ற ராசமலர் மற்றும் ராஜரட்ணம், ராசபாலன்- யுவான், ராசபுஸ்பம்- ஜெறாட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction
பார்வைக்குGet Direction
திருப்பலிGet Direction
நல்லடக்கம்Get Direction

https://ripbook.com/clarice-hippolita-mariathasan-616c772c73ea5/notice/obituary-616c77c0bf004

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 கண்மணி , தமிழினி குடும்பத்தினருக்கு எமது  ஆழ்ந்த அனுதாபங்கள்.......! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி, தமிழினி துயரிலிருந்து மீண்டு வரும் ஆன்ம பலத்தை நீங்கள் பெற வேண்டும். ஆழ்ந்த இரங்கல். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

எமது சகோதரியின் இழப்பினால் துன்புற்றிருக்கும் இவ் வேளையில் எமக்கு ஆறுதல் வார்க்தைகள் மூலம் தம் அனுதாபங்களை தெரிவித்த அத்தனை அன்புறவுகளுக்கும் எம் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறோம். எமது யாழ்இணையம் சார்பாக சகோதரன் நிழலி இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டது எமக்கு யாழ் இணைய நண்பர்கள் அனைவருமே பங்குபற்றியதான் உணர்வை ஏற்படுத்தியது. நிழலிக்கு விசேடமான நன்றிகள். அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றான்.

58 minutes ago, KavaloorKanmani said:

எமது சகோதரியின் இழப்பினால் துன்புற்றிருக்கும் இவ் வேளையில் எமக்கு ஆறுதல் வார்க்தைகள் மூலம் தம் அனுதாபங்களை தெரிவித்த அத்தனை அன்புறவுகளுக்கும் எம் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறோம். எமது யாழ்இணையம் சார்பாக சகோதரன் நிழலி இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டது எமக்கு யாழ் இணைய நண்பர்கள் அனைவருமே பங்குபற்றியதான் உணர்வை ஏற்படுத்தியது. நிழலிக்கு விசேடமான நன்றிகள். அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றான்.

நன்றி அக்கா. 

சசிவர்ணமும் நான் அங்கு நிற்கும் நேரம் வந்து இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
 

சசிக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றி கூறுகின்றோம். 

  • 2 weeks later...

தமிழினி, கண்மணி அக்கா ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து போகும்…..

 

நீல வானம் நிர்மலமான இரவு ஒளி சிந்தும் நிலவு

மின்மினியாய் நட்சத்திரங்கள் ஓயாத அலையோசை

தேவன் ஆலய மணியோசை இத்தனையும் சிந்தையில் இனித்திருக்க

எம் சொந்தங்கள் மட்டும் தொட்டுவிட முடியாத துரரத்தில்…

எங்கோ தொலைவில் உங்கள் ஆன்ம கீதங்கள் எம் காதுகளில் ரீங்காரமிட்டபடி

பிரிவு என்பது தீராத வலி வலியுடன் வாழ்வதே எமது விதி

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் உங்கள் வாசமும்

கதவிடுக்குகளைக் கடந்து உங்கள் சுவாசமும் எம் மூச்சை முட்டுகிறது

உங்கள் கலகலக்கும் சிரிப்பும் அன்பான உபசரிப்பும்

எம் நினைவுகளில் உரசி நித்தமும் மனம் உருகுகிறது

நீங்கள் எம்முடன் இல்லை என்பது பொய்

என்றும் எம்முடன் இணைந்தே வாழ்கிறீர்கள் என்பது மெய்

இன்று நிஜம் நிழலாகிப் போனது

நிரப்ப முடியாத இடைவெளியுடன் இமைகளில் ஈரமுடன் நெஞ்சினில் பாரமுடன்

இனிவரும் காலங்கள் இதுவும் கடந்திடும் என்றொரு

முத்தான தத்துவத்தின் நினைப்புடன்

என்றென்றும் பொய்யான புன்னகையின் முகத்துடன்

ஓற்றுமையின் பலத்துடன் பாசத்தின் பரிவுடன்

வாழும் காலம் வரை வாழ்த்திட்டால் அது போதும்

காலம் வரும் போது கையசைத்து விடைபெறுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி அக்கா மற்றும் தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரியின் பிரிவால் துயருற்று இருக்கும் சகோதரிக்களுக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

31 நாட்கள் பறந்தோடிவிட்டன. இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. கவிதைக்கு விருப்பிட்ட புங்கையூரன் குமாரசாமி நிழலி விசுகு மோகன் மற்றும் விசுகு தனி இணையவன் அன்புத்தம்பி அனைவருக்கும் நன்றிகள். நிலாமதிக்கும் விசேடமாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.