Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் உடனடியாக மூடும் திட்டம் பிற்போட்டமைக்கு நன்றிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் உடனடியாக மூடும் திட்டம் பிற்போட்டமைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா.

வெறும் நன்றி சொல்லுதலோடு நிற்காமல்.. யாழை ஒரு லாபகரமான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வலைத்தளமாக மாற்றி அமைக்க மோகன் அண்ணாவிற்கு ஆலோசனைகள் உதவிகள் வழங்கினால் அது யாழ் களத்தின் ஆயுளை நீடிக்க உதவும் என்று நினைக்கிறேன்.

பலர் பல கல்வி மற்றும் அனுபவ திறமைகளோடு இங்கே இருப்பீர்கள். முகாமைத்துவம்.. தகவல் தொழில்நுட்பம்.. வலைத்தள வடிவமைப்பு.. மென்பொருள் வடிவமைப்பு.. system design and management.. இணைய வழி வாணிபம்.. இணைய வழி கவர்ச்சிகர பொருட்கள் சேவைகள் விளம்பரம் (games for advertisement - சிறிய கணணி விளையாட்டுக்களூடு பொருட்கள் சேவைகளை விளம்பரப்படுத்தல்..).. இணைய வழி சேவைகள் பொருட்களுக்கான விளம்பரம் செய்வதற்கான மக்கள் தொடர்பு பேணல்.. மக்களை யாழில் விளம்பரம் செய்வதை ஊக்குவித்தல் (மக்கள் தொடர்பாடல்).. போன்ற இன்னோரென்ன பணிகளை ஆற்ற முடியும்.

யாழ் தகவல் தொழில்நுட்ப ரீதியில் பெறுமதி மிக்க ஒன்று. அதனை சரியான வகையில் பயன்படுத்த மோகன் அண்ணாவோடு ஒத்துழைத்து இயங்க எல்லோரும் தாமாக முன் வர வேண்டும். நான் என்னாலான உதவிகளை செய்வேன்.

இப்போது IT and business strategic development and management தொடர்பாக எனது கல்வி அறிவூட்டல் இருப்பதால்.. கணணி மற்றும் வலைத்தள வடிவமைப்பு சார்ந்த தொழில்நுட்ப அறிவுக்கு அப்பால் வர்த்தக ரீதியில் ஒரு வலைத்தளம் ஆற்றக் கூடிய பயன் என்பது இன்று பெரிதும் ஆராயப்படும் விடயம்.

வணிக ரீதியிலும் சரி சேவைகள் ரீயிலும் சரி.. தகவல் தொழில்நுட்பம்.. ஒரு இன்றியமையாதது. குறிப்பாக amazon.. ebay.. போன்ற வணிக ரீதியான தளங்களும்.. Google... Yahoo.. போன்ற பல் சேவை தளங்களும் வர்த்தக ரீதியில் இன்று புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இத்தனை வாடிக்கையாளர்களை (கருத்தாளர்களை பார்வையாளர்களை) வளமாகக் கொண்டிருக்கும் யாழையும் எமது இனத்துக்கான தகவல் தொழில்நுட்ப வர்த்தக அளவில் பிரபல்யப்படுத்தின்.. யாழிற்கு வளர்ச்சியும் இருக்கும்.. இனத்திற்கும் சேவை வழங்கலாக இருக்கும்.. இன உணர்வும் ஊட்டப்படுவதாக அமையும்.

ஒரு ஆராய்ச்சி ரீதியாக யாழை ஒரு தகவல்தொழில் நுட்ப வளமாக கருதி.. அதற்கொரு recovery plan மற்றும் strategic plan வரைந்து கொடுத்தால் அது மோகன் அண்ணாவிற்கு செயற்பாடுகளை ஒரு கட்டமைப்புக்கு உட்படுத்திய வகையில் முகாமைத்துவ வர்த்தக காரணிகளை இலகுவாக புகுத்தி செயற்பட வைக்கக் கூடிய வகையில் கொண்டு செல்ல உதவும். பெரிய scale இல் இல்லாமல் மத்திம அல்லது சிறிய அளவிலான முதலீட்டோடு இதனை செய்ய ஒரு வரைபை சமர்ப்பித்தால் நன்றாக இருக்கும்.

நான் இத்துறையில் இப்போதுதான் நுழைந்திருக்கிறேன். அதுவும் அறிவைப் பெறும் அளவில். என்னுடைய நோக்கம் இணையத்தளம் நடத்துவதல்ல. மருத்துவ சேவைகள் சார்ந்து தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம்.. மற்றும் பயன்பாட்டை வினைத்திறனாக அதிகரிப்பதும் இலாபத்தை காண்பதும் என்பதாக இருக்கிறது. அதனால் என்னை விட பலர் இணையத்தள வாணிபம் (e-commerce).. மற்றும் வர்த்தகம் ( e-business) சாந்து ஆழமான அறிவும் அனுபவமும் வைத்திருப்பீர்கள். உங்களின் ஆற்றலை யாழின் வளர்ச்சிக்காக அளித்து மோகன் அண்ணாவின் ஆற்றலோடு ஒருங்கிணைத்தீர்கள் என்றால் யாழ் களத்தையும் இணையத்தையும் எப்போதும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

யாழை தகவல் தொழில்நுட்ப ரீதியில் (IT) ஒரு சிறிய அளவிலான நிறுவன (enterprise) மயப்படுத்தி இயங்க வைப்பது குறித்தும் ஆராயுங்கள். ஆலோசனைகளை வழங்குங்கள்.

நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் மோகன் ....கள உறுப்பினர்களிடம் இருந்து சந்தா பணம் வாங்கலாம் ஒருவருடத்திற்க்கு ஒரு தொகையை அறவிடலாம் தானே?

மீண்டும் ஆயிரம் கோடி நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி அண்ணா.எத்தகைய உதவி வேணுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம்

நன்றி மோகன், நீங்கள் உங்கள் நேரத்தை யாழ் களத்திற்காக செலவிடுகிறீர்கள். இலவசமாக எதுவும் நீண்ட காலத்திற்கு செய்யமுடியாது. உறுப்பினர்களிடம் வருட சந்தா அறவிடுதல், விளம்பரங்கள், நெடுக்காலபோவான் கூறிய மாதிரி இத்தளத்தை ஒரு லாபகரமான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வலைத்தளமாக இயக்கலாம்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மோகன், நீங்கள் உங்கள் நேரத்தை யாழ் களத்திற்காக செலவிடுகிறீர்கள். இலவசமாக எதுவும் நீண்ட காலத்திற்கு செய்யமுடியாது. உறுப்பினர்களிடம் வருட சந்தா அறவிடுதல், விளம்பரங்கள், நெடுக்காலபோவான் கூறிய மாதிரி இத்தளத்தை ஒரு லாபகரமான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வலைத்தளமாக இயக்கலாம்தானே?

நன்றி மோகன் அண்ணா.

இதுவே எனது கருத்தும்

மோகன் அண்ணா.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

களத்திற்கும், கள நண்பர்களுக்கும் புத்துயிர் தந்ததற்கு நன்றி.

யாழில் தகவல் தொழிற்நுட்பம், திட்ட மேலான்மை சார்ந்த விடயங்களை தரலாம். இதில் சிறிய நெருடல் என்னவெனில் இவையனைத்துமே ஆங்கிலத்தில் இருப்பதால் சரியான தமிழ் பதங்களை தேடி மொழிமாற்றம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன. இவற்றிற்காக ஆங்கிலப் பகுதி ஆரம்பிக்க இயலுமா? அதை உறுப்பினர்கள் வரவேற்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன்! நானும் என்னால் முடிந்த உதவியை செய்யலாம்! நன்றி! :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு சந்தா அறவிடுங்கள்..! கூடவே வியாபாரமயமாக்கலைச் சிந்திக்கலாம்..!

இப்போதைக்கு சந்தா அறவிடுங்கள்..! கூடவே வியாபாரமயமாக்கலைச் சிந்திக்கலாம்..!

எல்லாரும் பணம் குடுக்க வேண்டும் எண்டு கேட்ப்பது சரியாக இருக்குமோ எனக்கு தெரியவில்லை.... விரும்புபவர்கள் கொடுக்கலாம் ... !

அதோடு...

யாழின் தேவைக்கு பொருளாதார உதவிகள் செய்பவர்கள் யாழில் உறுப்பினராக இருப்பது விரும்பதக்கதாக இல்லை, அதனால் பிரச்சினைகள் வரும் எண்று மோகன் அண்ணா நினைத்தால் நான் பொருள் உதவியோடு விலகவும் தயாராக இருக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவின் முடிவு கண்டு மகிழ்ச்சி. நேற்று சில உறவுகள் (திண்ணையில்) சொன்னது போல் முழு பொறுப்பையும் நீங்கள் எடுக்காமல் கொஞ்ச சுமையை கள உறவுகளை பகிரும்படி கேட்கலாம்.சந்தா பணமாக அறவிட உங்களுக்கு விருப்பமில்லை என்றது போல் சொன்னீர்கள்.விருப்பத்துடன் தரும்(gift) பணத்தை , உதவியை ஏற்கலாம் தானே.

களத்தை நடாத்துவதற்கு உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை உறுப்பினர்க்ளுடன் பகிரலாம்.இதன் மூலம் நிறைய உதவிகள் செய்ய பலர் முன்வருவார்கள்.நன்றி.

யாழின் ஆயுள் தற்காலிகமாகவேனும் நீடிப்பது மகிழ்ச்சி. யாழை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு எப்படியான உதவிகள் தேவைப்படும் என்று கூறினால் முடியுமானவற்றை செய்வதற்கு தயாராக இருக்கின்றேன். யாழ் முகநூல் குழுமத்தில் இளைஞன் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க அதன் நிருவாகத்தில் இருந்து யாழின் பயனுள்ள, சுவாரசியமான தொடுப்புக்களை முகநூலில் இணைத்து வந்தேன். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களினால் அதிலிருந்து விலகினேன். வேண்டுமானால் தொடர்ந்து யாழ் முகநூல் குழுமத்தை உயிர்ப்பாக்க உதவி செய்கின்றேன்.

நாங்கள் பலரும் யாழில் எழுதுவதையே விரும்பினோம். இதனால் எமது தனிப்பட்ட தளங்களை நிருவல் செய்வதை இயலுமான அளவு தவிர்த்து வந்தோம். ஆனால், தற்போது நாங்கள் யாழ் உறவுகள் ஒவ்வொருவரும் யாழ் களத்தில் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் அதேசமயம் நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனி வலைத்தளங்களையும் வைத்திருக்க வேண்டியது அவசியமானது என கருதுகின்றேன். யாழ் இணையத்தில் நாங்கள் பெற்ற அனுபவங்கள் எமது பிரத்தியேக தளங்களை சிறப்பான முறையில் கொண்டு செல்வதற்கு உறுதுணையாகும்.

நான் கரும்பு வலைத்தளம் ஆரம்பிப்பதற்கு யாழ் இணையமே வடிகாலாக அமைந்தது. கரும்பு வலைத்தளத்தை ஓர் Back up support ஆகத்தான் ஆரம்பித்தேன். அங்கு நான் எழுதுவது இல்லை. தற்போது யாழில் நான் பதிந்த பயனுள்ள பதிவுகளை கரும்பு கருத்துக்களத்தில் பிரதிபண்ணத் தொடங்கி உள்ளேன். யாழ் இணையம் உயிர்ப்புடன் உள்ளவரை தொடர்ந்து இங்கு பதிவுகளை இடுவேன். அது சாத்தியப்படாத சமயத்தில் என்ன செய்வது என்று இன்னமும் யோசிக்கவில்லை.

யாழின் ஆயுளுக்கு உத்தரவாதம் தந்தமைக்கு மோகனுக்கு நன்றிகள்.

மிகவும் சந்தோஷமான முடிவு... இரண்டு நாட்களாக மனசில் இருந்த ஒரு பாரம் இலேசானதாகி விட்டது. யாழ் வெறும் செய்தி / புதினம் பார்க்கும் தளத்துக்கும் அப்பால் அது எம் மனதோடு மிக நெருங்கியதாக, ஒரு தோழியாக (நெடுக்ஸ் இற்கு மட்டும் தோழனாக) இருந்து வருகின்றது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகின்றது

எல்லாம் சரி.. மோகன் களத்தை பூட்டப் போறார் என்றவுடன், என் மற்ற அவதாரத்தின் பெயரை பப்பரபே என்று போட்டு உடைத்து போட்டன்.. இனி வேறு ஒன்றில் வரவேண்டும் (.."உவர் மட்டும் வேற பேர்ல வரலாம் .. நான் வரக்கூடாதா" என்று சிலர் கேட்பது புரிகின்றது) :)

.

நன்றிகள் மோகன்.

யாழை வர்த்தகமயப் படுத்த வேண்டும் என்றால், யாழ் அரசியல் நடுநிலமை பேணுதல் மிக அவசியம். நாட்டு / சர்வதேச சட்டங்கள் மீறப்படாமல் கவனமாக பேணப்படல் வேண்டும். புலியின் வரிகள் இங்கில்லை என்னும் கருத்து இங்கு வரும் வாசகர்களுக்கு ஆழமாகப் பதிதல் வேண்டும். அரசியலும் வர்த்தகமும் ஒன்றுடன் ஒன்று கலக்காது.

80 மில்லிய‌ன் த‌மிழ்ச்சாதியில் ஒரு ப‌ங்கை யாழ் த‌ன்னுடைய‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌மாகக் கொள்ளத்தக்கவகையில் வளர்ச்சியடைய அரசியல் நடுநிலமை மிக அவசியம். வாசகர் தொகை அதிகரிக்க யாழின் வர்த்தகப் பெறுமதியும் அதிகரிக்கும்.

அடுத்து, செய்திகளை நேரடியாகவே பெறும் முயற்சியில் இறங்கலாம். புலத்திலும், தாயகத்திலும் செய்திகளை வாசிக்கவே இணையத்திற்கு வருகிறார்கள். இப்படி செய்திகளை யாழ், தானே பெற்று இணைக்குமாயின் வாசகர் வட்டம் பெருகும். யாழ் முன்ணனி நிலைக்கு விரைவாக வந்துவிடும்.

அடுத்து, ஆக்கங்கள்; தரமான ஆக்கங்கள் வாசகர் வரவை அதிகரிக்கும்.

சூழ்நிலைக்கு ஏற்ப‌ சில கொள்கை விட்டுக்கொடுப்புக‌ளையும் நெளிவு சுழிவுகளையும் மேற்கொள்வது எமது இருப்பையும், வளர்ச்சியையும் காக்கும். யாழுக்கும் இது பொருந்தும்.

ஒரு இணையத்தை ஆரம்பிப்பவர் தன் முன்னால் மலையாக நிற்கும் எப்படி இது வெற்றிபெறப் போகிறது என்னும் பயப்பேய் யாழுக்கு இல்லை. இதையெல்லாம் யாழ் தாண்டி வந்தாயிற்று. அடுத்த கட்டமாக தன் சந்தையை எப்படி விரிவடையச் செய்வது,எப்படி வளர்வது போன்ற கேள்விகள் தான் யாழ் நிர்வாகிகள் முன் நிற்கவேண்டுமே தவிர, தற்கொலை செய்வதற்கு முன் எழுதும் கண்ணிரும் கம்பலையுமான கடிதங்கள் அல்ல!!

:)

தமிழக வாசகர் வட்டத்துள் நுழையத்தக்க வகையில் முதற்தர செய்திகள், ஆக்கங்கள் யாழில் வருமாயின்... அதை ஒரு இலக்காகவே கொள்ளலாமே ?

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதை குடைந்த பாரம் நீங்கியது போன்ற உணர்வு. ஆலமரத்தின் காற்று தென்றலாக் வீசட்டும்

அப்பாடா...............

  • கருத்துக்கள உறவுகள்

animation1gifmuisthanks.gif

திரு மோகன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள். தடைகளை களைந்து தமிழரை இணைத்து தமிழ் வளம் காத்திடத் தொடரட்டும் தங்கள்.பணி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் திரும்ப வலம் வருவதையிட்டு எனது மனப் பூர்வமான மகிழ்ச்சியினை மோகன் அண்ணாவுக்கும்,நிர்வாகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்...அது தொட‌ர்ந்தும் நான் உயிரோடு இருக்கும் வரை இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்

.

மகிழ்ச்சியான செய்தி.clap.gifdancing1.gif

நன்றி மோகன் அண்ணா. :)

.

நன்றி மோகன் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மோகன் எல்லா உறவுகளும் கைகொடுக்க உசாரா நிக்கேக்க தடையெதுவெண்டாலும் உடைச்சுக்கொண்டு தொடந்து எழுது தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி என்ற சொல்லுடன் நிற்க முடியாது

தொடர நாம் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்

தருவதை வாங்கலாம் என்பது தமிழனிடம் எடுபடாது

இது நான் கடந்து வந்த அனுபவம் தரும் பாடம்

கருத்துக்களத்தில் எழுதுபவர்கள் காசு கொடுத்தால்

அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற தங்களது சுட்டுதலும் உண்மையே.

அப்படியானவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து நீக்கிவிடலாம்.

கருத்துக்களத்தில் எழுதவேண்டும் என்றால் சந்தா கட்டியிருக்கவேண்டும் என்று கொண்டுவாருங்கள்

விரும்பியவர்கள் அல்லது யாழின்மீதும் தமிழின்மீதும் பற்றுள்ளோர் சந்தா தந்துவிட்டு எழுதட்டும்

இதனால் தங்களுக்கும் வெட்டும்வேலை குறையும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
:) நன்றிகள் பலகோடி மோகன் அண்ணா! :lol:
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன்.

எல்லோரும் உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காமல் இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவின் உதவிக்கு மிகவும் நன்றிகள்...இந்த மன மாற்றம் நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்பதும் எனது அவா.நன்றி அண்ணா. :)

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.