Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... வரவர சாத்து விருதுகளை வாங்கிக் குவிக்க நினைச்சிட்டார் போல.... எதுக்கும் இப்பவே வாழ்த்தி வைப்பம். பிறகு இந்தாள் எங்களை கண்டு கொள்ளவே மாட்டார்.. :lol: வாழ்த்துக்கள் சாத்து..

சிறப்பாக நகர்கிறது உங்களின் தற்போதைய எழுத்துக்கள் சாத்து :rolleyes:

  • Replies 303
  • Views 61k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகள் இல்லை அண்ணா....!

  • கருத்துக்கள உறவுகள்

தவறுகளை நாங்களாக உணர்ந்து கொண்டால்

சமூகத்தில் பிரச்சனை இல்லை.

ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும்

எங்கள் வீட்டுச் சமஸ்தானத்தில் இடம் இருந்தது

இனியும் இருக்கும்.

நன்றி சாத்திரியார்

நட்பு

அவள்பெயர் மல்லிகா(உண்மைப்பெயர்தான்)சிறியைவிட அவளிற்கு இரண்டுவயது குறைவு தலைக்கு எண்ணெய்வைத்து வழித்து இழுத்து பின்னப்பட்ட இரட்டைப்பின்னல். கறுப்பாக இருந்தாலும் களையான முகம். சிறியின் வீட்டிற்கு மாலை நேரத்தில் புல்லுக்கட்டு தலையில் சுமந்து வரும் அவளது தாயின் பின்னால் கையில் ஒரு தடியை வைத்து மரம் செடிகளிற்கு அடித்து அவைகளை உறுக்கி வெருட்டி குழப்படி செய்யக்கூடாது ஒழுங்கா படிக்கவேணும் என்று அவைகளோடு விழையாடியபடியே வருவாள்.அவளின் தாயார் வீடுகளிற்கு போய் மாவிடிப்பது கூட்டிபெருக்குவது வயல்களில் கூலிவேலை செய்வது இதுதான் அவரது தொழில். தந்தை அதிகம் படிக்காதவர். ஆனால் வாக்கு வேட்டைக்காக சிறிலங்கா சுததந்திரக்கட்சியின் வேட்பாளர் வினோதனின் புண்ணியத்தில் அவரிற்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வாசல் காவலாளி வேலை. லீவுநாள்களில் ஊரில் உள்ளவர்களின் வீடுகளிற்கு வேலியடைப்பது குளைவெட்டுவது என்கிற வேலைகளை செய்வார் மல்லிகா ஒரேயொரு மகள்தான் அவரது இலட்சியமெல்லாம் தானும் தன்னுடைய சமூகமும் அதிகளவு படிப்பறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள் எனவே மல்லிகாவை எப்படியாவது பெரிய படிப்பு படிப்பித்து பெரியாளாக்குவது மட்டுமே அவரது இலட்சியம்.அவர்கள் கோயில் காணியில் ஒரு குடிசைபோட்டு வசித்துவந்தனர்.அவனின் வீட்டிற்கு வேலைக்காக வரும் காலங்களில் அவர்களிற்கு தேனீர் குடிப்பதற்கென்றே தனியாக சில கிளாசுகள் வீட்டின் பின்பக்கம் வைக்கப்பட்டிருக்கும் அதனை அவர்களே எடுத் கழுவி நீட்டினால்தான் அதில் தேனீர் கொடுக்கப்படும். தாயர் வேலை செய்யும பொழுது மல்லிகா அவளுடைய புத்தகங்களை கொண்டுவந்து படித்துக்கொண்டிருப்பாள். ஒருநாள் அவள் சிறியிடம் எனக்கு நெல்லிக்காய் பிடுங்கி தாறியளோ என்றதும் நெல்லி மரத்தில் பாய்ந்து ஏறியவன் அதன் கிளைகளை பிடித்துஉலுப்ப கீழே விழுந்த நெல்லிக்காய்களை ஓடியோடி மல்லிகா பொறுக்கி சேர்த்தாள். மரத்தைவிட்டு கீழே இறங்கியவனிடம் உங்களுக்கு வேணுமோ என ஒரு நெல்லிக்காயை நீட்ட அவனும் அதைவாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்க அதை கவனித்த அவனது அம்மம்மா அவசரமாக வீட்டிற்குள்ளே கூப்பிட்டவர்

அவன் காதில் பிடித்து முறுக்கியபடி

உனக்கு எத்தினை நாள் சொல்லியிருக்கிறன் அவளோடை சேராதையெண்டு கேக்கமாட்டியா?? வீட்டிலைதானே நெல்லிமரம் நிக்கிது அவளிட்டையா வாங்கி தின்னவேணும்.??

ஏன் அவளிட்டை வாங்கி திண்டால் என்ன??

அவங்களிட்டை ஒண்டும் வாங்கி தின்னக்கூடாது அவங்கள் வேறை சாதி நாங்கள் வேறை சாதி.

நெல்லிக்காய் எங்கடைதானே

வாய்க்குவாய் கதையாதை அவளோடை நீ இனி சேந்ததை கண்டால் இனி அடிதான் கவனம்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை வீட்டிற்கு தெரியாமலேயே வயல்களில் அவளோடு சேர்ந்து வெள்ளரி பிஞ்சுகளை களவெடுத்து தின்பது பட்டம்விடுவது . காய்ந்து கிடக்கும் வழுக்கையாற்று மணலில் விழையாடுவது மழைக்காலங்களில் வால்பேத்தை பிடிப்பது அவ்வப்பொழுது அவளுடன் அவனை அவனது உறவுகள் யாராவது கண்டால் திட்டு அல்லது ஓரிரண்டு குட்டுவிழும்.

0000000000000000

வருசாவருசம் கோயில் திருவிழா தொடங்க முதல் கோயிலின் சட்ட விழக்குகள் அனைத்தும் கழற்றி எண்ணெய் கழிம்புகளை துடைத்து சுத்தம் செய்வது வழைமை ஒரு சட்டவிளக்கில் 108 விளக்குகள் இருக்கும் . அப்படி ஒவ்வொரு வாசலிற்கும் ஒவ்வொரு சட்டவிளக்கு பொருத்தியிருந்தார்களை அவைகளை சுத்தம் செய்வது பெரியவேலை நாள்கணக்கில் துப்பரவு வேலை நடக்கும். அப்படித்தான் அந்த வருடமும் சிறியும் அவனது சித்தப்பாவோடு அவனது நண்பன் ஒருவருமாக சட்டவிளக்குகளை துடைத்துக்கொண்டிருந்தபொழுது தேனீர் எடுத்துவருவதற்காக சித்தப்பா வீட்டிற்கு போயிருந்தார். அந்த நேரம் கோயிலில் வெளியே வந்த மல்லிகா கற்பூரம் கொழுத்தி கும்பிட்டுவிட்டு விபூதி குடுவையில் கையை விட்டாள் விபூதி இல்லை அங்கிருந்தபடியே சிறியிடம் உள்ளே விபூதி எடுத்துத் தரும்படி கேட்டாள் சிறி தனது கைகளைகாட்டி கையெல்லாம் எண்ணெய் நீயே உள்ளை வந்து எடு என்றான் உள்ளே வந்தவள் விபூயை எடுத்து தான்பூசிவிட்டு கையில் கொஞ்சத்தை எடுத்தவள் அம்மாக்கு காச்சல் அதுதான் கற்பூரம் கொளுத்தின்னான் விபூதி கொண்டு போய் பூசிவிடப்போறன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேனீருடன் வந்த சித்தப்பா அவளை கண்டதுமே ஏனடி உள்ளை வந்தனி என்று கத்தியபடி அவளை விரட்ட கையில் பொத்திப் பிடித்த விபூதியுடன் அவன் ஓடித்தப்பிவிட்டாள்.

முச்சுவாங்கியபடி வந்த சித்தப்பா அவளை ஏன் உள்ளை விட்டனீங்கடளா என்று அவர்களை பாத்து கத்த சிறியின் நண்பன் இவன்தான் அவளை உள்ளை கூப்பிட்டவன் என்று போட்டுக்கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். சித்தப்பாவின் கோபம் பல பூவரசந் தடிகளை முறியவைத்தது. கோயிலில் இருந்து வீடுவரை கலைத்து கலைத்து அடித்து ஓய்ந்தார்.மல்லிகா அவரது கண்களில் படாமல் ஒழித்துத் திரிந்தாள்.

அப்படியான ஒரு நாளில்.மாரிக்காலம் .மழை வெள்ளம் வரும் காலங்களில் குடிசைகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து அங்குள்ள தேவாலயத்திலோ அல்லது பாடசாலையிலோ குடிபெயர்வது வழைமை. அந்த வருடமும் பெருவெள்ளத்தில் இடம் பெயர்ந்தவர்களில் மல்லிகாவின் குடும்பமும் ஒன்று. மாரிக்காலம் முடிந்து பாடசாலை தொடங்கும் போது மல்லிகாவின் பாடசாலை சீருடை வீட்டில் புகுந்த வெள்ளத்தில் பழுதாகிப் போய்விட்டதால் சாதாரண சட்டையுடன் பாடசாலைக்கு போன மல்லிகாவை சீருடை போடாமல் பாடசாலைக்கு வரவேண்டாமென அவளது வகுப்பு ஆசிரியை திட்டி அனுப்பியிருந்தார்.புது துணிவாங்கி சீருடை தைத்து வரும்வரை பாடசாலை போகமுடியாதென மல்லிகா அவனிடம் சொல்லி கவலைப்படவே அவனிற்கு ஒரு யோசனை தோன்றியது நேராக தன்னுடைய வீட்டிற்கு போனவன் அவனது தங்கைகளின் சீருடைகளில் ஒன்றை களவாய் எடுத்துக்கொண்டு போய் மல்லிகாவிடம் கொடுத்துவிட்டான். ஆனால் அவனது தங்கைகள் படித்தது மானிப்பாய் மகளிர் கல்லூரி மல்லிக படித்தது சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயம்.மானிப்பாய் மகளிர் கல்லூரி சீருடைகளில் மானிப்பாய் மகளிர் கல்லூரி என்கிற சுருக்கம் MLC என சிறியதாய் ஒரு பட்டி வைத்து தைக்கப்பட்டிருக்கும்.அதைப்பற்றி அவனும் யோசிக்கவில்லை மல்லிகவிற்கும் அதைப்பற்றி சிந்திக்கின்ற வயது இல்லை.

அவள் அந்த சீருடையுடன் பாடசாலைக்கு போனதும் வகுப்பு ஆசிரியை சீருடையை கவனித்துவிட்டு யாரிட்டை களவெடுத்தாயென கேட்டு அவளிற்கு அடிக்கவே அவளும் நடந்த விடையத்தை சொல்லியிருக்கிறாள். அந்த ஆசிரியை அவனிற்கு உறவுக்காரர்வேறு பிறகென்ன ஏதோ இழவு செய்திபோல அவனது உறவுக்காரர்கள் எல்லாரிற்கும் செய்தி பரவியது.அன்று மாலையே அவனது அம்மம்மா வீட்டில் கண்டன கூட்டம் கூடியிருந்தது.அக்கம் பக்கத்து வீட்டு வேலிகளிலும் தலைகள் முளைத்திருந்தது.மல்லிகாவின் தாயும் தந்தையும் கைகளை கட்டியபடி வீட்டு முற்றத்தில் பவ்வியமாக தலையை குனிந்தபடி நின்றிருந்தனர். அவரகளிற்கு பின்னால் மிரண்ட விழிகளுடன் மல்லிகா மறைந்து நின்றிருந்தாள்.சிறியின் குடும்பத்தினர் அனேகமானவர்களுடன் அந்த ஆசிரியையும் வந்திருந்தார். பஞ்சாயத்தை தாத்தா தொடக்கினார்.

ஏனடா நடந்தது உனக்கு தெரியாதே??

இல்லை ஜயா நடந்தது சத்தியமா எனக்கு தெரியாது நான் வேலைக்கு போட்டன் இவளும் புத்தியில்லாமல் சட்டையை போட்டு பிள்ளையை பள்ளிக்கூடத்தக்கு அனுப்பிப் போட்டாள்.

தாத்தா மல்லிகாவின் பக்கம் பார்வையை திருப்பினார்.

ஜயா வழக்கமா நீங்கள் பழைய உடுப்புக்கள் தாறனீங்கள் தானே. தம்பி அப்பிடித்தான் இதையும் தாறார் எண்டு நான் நினைச்சிட்டன் சட்டை தோச்சு எடுத்துக்கொண்டந்திருக்கிறன் இந்தாங்கோ .

என்று சட்டையை முன்னால் நீட்டவே .கோபமாக யாருக்கடி வேணும் இந்த சட்டை என்று அதை பறித்து முற்றத்தில் எறிந்த அவனின் தாயார். என்ன திமிர் இருந்தால் அவள் போட்ட சட்டையை என்ரை மகளுக்கு போடச்சொல்லி திரும்ப கொண்டுவருவாய் என்று ஒரு அறையும் மல்லிகாவின் தாயார் கன்னத்தில் விழுந்தது.

பிழை முழுக்க இவனிலை அதுகளிலை கோவிச்சு பிரயோசனம் இல்லை முதல்லை உன்ரை மகனை திருத்து என்று தாத்தா மகளை சாந்தப் படுத்தினார்.

என்னட்டையும் உந்த வயசிலை இரண்டு பெட்டையள் இருக்க உவன் ஏனோ தெரியாது உந்த நளத்திக்கு பின்னாலைதான் திரியிறான். என்று தன்னுடைய எதிர்கால கவலையை மாமி வெளிட்டார்.

மாமியை அவன் முறைத்து பார்க்கவே .இஞ்வை பாருங்கோ என்னையே முறைக்கிறான் என்று மாமாவை உருப்பேத்த . மாமாவின் கையில் பூவரசந்தடி. உடனேயே அவனது அப்பாவிற்கு கௌரவப்பிரச்சனையானது மாமாவின் தடியை வாங்கி அவரே மாமிட்டை மன்னிப்பு கேளடா என்றபடி அவனில் அடித்து முறித்தார். அவன் அழக்ககூட இல்லை அசையாமல் நின்றிருந்தான். அப்பொழுதுதான் அங்கு வந்த சித்தப்பா நேராக மல்லிகாவிடம் போனவர் அவளது தலைமயிரை பிடித்து இழுத்து கன்னத்தில் ஒரு அறைவிட்டவர். அண்டைக்கு தப்பிஓடிட்டாய் நாயே இண்டைக்கு உன்னை விடமாட்டன் என்றபடி அவளை நிலத்தில் போட்டு கையாலும் காலாலும் அடிக்க அவளது தாய் மல்லிகாமீது விழுந்து தடுக்க ஒரே கூச்சல். அவன் எதுவும் செய்ய முடியவில்லை அப்பொழுதுதான் அவனிற்கு அழுகை வந்தது.

அதற்கிடையில் அவனது அம்மம்மா விலக்குபிடித்து மல்லிகா குடும்பத்தை அனுப்பிவிட்டதோடு இனி அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவேண்டாம் எனவும். அதனையும் மீறி அவன் மல்லிகாவுடன் கதைத்தால் அவனை பாடசாலை விடுதியில் சேர்த்துவிடுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அழுதபடியே இரத்தம் கலந்த எச்சிலை துப்பியபடி மல்லிகா அவனை திரும்பி திரும்பி பார்த்படி போய்க்கொண்டிருந்தாள்.

00000000000000000000

1984 ம் ஆண்டு அதே சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில் திருவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தமுறை திருவிழாவிலை பெடியள் எல்லாரையும் உள்ளை விடப்போறாங்களாம்..

இப்பிடித்தான் பத்து வருசத்துக்கு முதலும் சிலபேர் உள்ளை போகவெளிக்கிட்டு வெட்டு குத்திலை முடிஞ்சு ஒரு கொலையும் விழுந்து மூண்டு வருசமா திருவிழாவும் இல்லாமல் இருந்தது. திரும்பவும் அந்தநிலைதான் வரும் போலை.

இந்தமுறை பெடியளல்லோ முன்னுக்கு நிக்கிறாங்கள் அவங்களிட்டை துவக்கல்லோ இருக்கு இவையின்ரை வாளுகள் பொல்லுகளாலை ஒண்டும் செய்யேலாது கட்டாயம் அவங்கள் உள்ளை விடத்தான் போறாங்கள். இப்படி ஊரில் கதை நடந்துகொண்டிருந்தது.

திருவிழாவிற்கு முதல்நாள் இரவு கோயிலின் தேர்முட்டியில் இளைஞர்கள் குழுவும் கோயிலின் உள்ளே கோயில் நிருவாகக் குழுவும் ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தார்கள். சிறியும் அவனது நண்பன் நந்தனும் தங்கள் நண்பர்களிற்கு அடுத்தநாள் திட்டத்தை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேணுமெண்டால் எங்கடையாக்களையும் (புளொட்)வரச்சொல்லுறன் எண்டான் காந்தன். எங்கடை தோழர்களையும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கூப்பிடவா எண்டான் மதி. யாராவது எதிர்த்து கதைச்சா போட்டு தள்ளிட்டு அடுத்த வேலையை பாப்பம்;எண்டான் யோகராஜன்(ரெலோ).வேண்டாம் நாங்கள் சார்ந்த இயக்கங்களை இதுக்கை இழுக்காமல் முடிந்தளவு நாங்கள் இந்த ஊர்காரர் எண்ட அளவிலையே பிரச்சனையை முடிப்பம் இதுவே சிறியினதும் நந்தனுடையதும் முடிவாக இருந்தது.

அப்பொழுது கோயில் நிருவாக சபையில் இருந்த வயதானவரான ஆனால் எல்லாராலும் மதிக்கப்படுபவரான பழைய சிங்கப்பூர் பெஞ்சனியர் அமுதராசா அங்கு வந்தார். அவர் இளையவர்களின் செயற்பாடுகளிற்கு ஆதரவு கொடுப்பவர். அதனாலேயே கொயில் நிருவாகம் அவரை பெடியளுடன் கதைக்க அனுப்பியிருந்தது. அங்கு வந்தவர் தம்பியவை நான் இருந்தசிங்கபூரிலை கோயிலுக்கை எல்லாரும் போகலாம். ஆனால் இஞ்சை அப்பிடியில்லை அவங்கள் சுத்தபத்தம் இல்லாமல் தண்ணியடிச்சிட்டு வருவாங்கள் அதாலைதான் உள்ளை விடேலாது மற்றபடி வேறை பிரச்சனை ஒண்டும் இல்லை. எதுக்கும் யோசியுங்கோ எண்டார். ஜயா எல்லாரும் குளிச்சு சுத்தமாய் வேட்டியோடைதான் வருவினம். தண்ணியடிச்சிட்டு யாராவது வந்தால் நாங்களே உள்ளை விடமாட்டம் நாளைக்கு பிரச்சனை பண்ணாமல் பேசாமல் இருக்கச் சொல்லுங்கோ . பிரச்சனை பண்ணினால் பிறகு நாங்கள் வாயாலை கதைக்கமாட்டம் எண்டதை மட்டும் அவையிட்டை சொல்லிவிடுங்கோ.

0000000000000000

மறுநாள் திருவிழா தொடங்கிவிட்டிருந்தது ஏதும் பிரச்சனைகள் வந்தால் பாதுகாப்பிற்கென புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் சிலர் ஒரு வானில் வெளிவீதியில் ஆயுதங்களுடன். வானிற்கு உள்ளேயே இருந்தனர். மற்றைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கோயிலின் உள்ளே போய்விட்டிருந்தனர். கோயிலுக்குள்ளை வந்திட்டாங்கள் ஆனால் என்ன நடந்தாலும் உவங்களை சாமிதூக்கவிடுறேல்லை என்று கோயில் நிருவாகத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். திருவிழாவின் இறுதிகட்டம் நெருங்கியது சாமிதூக்கவேண்டும். ஊர் இளைஞர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே தயாராய் நின்றவர்களை விலக்கிவிட்டு ஊர் இளைஞர்களே சாமியை தூக்கினார்கள்.இதை கோயில் நிருவாகம் எதிர்பார்க்கவில்லை காரணம் சாமி தூக்கிய இளைஞர்கள் எல்லாருமே அவர்களது உறவுகள் என்பதால் ஆளையாள் பார்த்தபடி நின்றனர். சாமியை தூக்கியவர்கள் சிறிது தூரம் வந்ததும் தயாராய் நின்றிருந்தவர்களிடம் தோள் மாறியது. அப்பொழுதான் பெடியங்கள் தங்களை சுத்திப்போட்டாங்கள் என்பது அவர்களிற்கு புரிந்தது. அவனது என்ரை பிணத்தை தாண்டித்தான் இண்டைக்கு சாமி போகும் என்றபடி வெறிநாயைப்போல பாய்ந்து வந்தஅவனது சித்தப்பவின் முகத்தில் ஓங்கி அவனது கை அறைந்தது. தட்டுத்தடுமாறி நிமிர்ந்தவரின் பட்டுவேட்டியில் அவரது முக்கிலிருந்து ஒழுகிய இரத்தம் கோலம் போட்டுக்கொண்டிருந்தது. வேறு சிலரும் சாமிதூக்கியவர்கள் மீது பாய இழுபறியில் சாமியை நிலத்தில் வைத்துவிட்டு கைகலப்பு தொடங்கவே நிலைமை மோசமாவதை உணர்ந்த நந்தன் வேகமாக வெளியே வானிற்கு ஓடிப்போனவன் அதிலிருந்த எஸ். எம்.ஜி துப்பாக்கியை எடுத்தவன் வானத்தை நோக்கி சில குண்டுகளை தீர்த்துவிட்டுஇண்டைக்கு சிலபேர் செத்தால்தான் திருவிழாநடக்குமெண்டால் சாக விரும்பிறவன் எல்லாம் வெளியாலை வா ..என்று கத்தினான்.

துப்பாக்கி சத்தத்திற்கு எல்லாரும் பயந்துபோயிருந்தனர்.அங்கு எரிந்துகொண்டிருந்த கற்பூரத்தின் மீது ஆவேசமாக அடித்து இனி செத்தாலும் நான் இந்த கோயில் பக்கம் வரமாட்டன் என்று சத்தியம் செய்த அவனது சித்தப்பா பிள்ளையாரே நீ உண்மையான சாமியாய் இருந்தால் அடுத்த திருவிழாவுக்குள்ளை இவங்களுக்கு நீ யாரெண்டு காட்டு என்று சாபமும் போட்டுவிட்டு சித்தி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார். கோயில் நுளைவின் எதிர்ப்பாளர்களும் பயந்துபோன சில குடும்பத்தவர்களும் அங்கிருந்து போய்விட சாமி ஊர்வலம் வழைமைபோல நடந்து முடிந்தது.இறுதியாக சாமியின் அலங்காரங்களை அகற்றி தீபாராதனை காட்டும்வரை ஒருவர் பஞ்சபுராணம் பாடவேண்டும். வழைமையாக பஞ்சபுராணம் பாடும் பாலுஅண்ணர் முன்னாலைவந்து தலைக்குமேல் கைகளை கூப்பி திரச்சிற்றம்பலம் என்று தொடங்கவும். அவர் அருகில் போன அவன்' அண்ணை இண்டைக்கு உங்களுக்கு வேறை வேலை போய் பஞ்சாமிர்தம் குடுக்கிறவேலையை பாருங்கோ பஞ்சபுராணம் வேறை ஒராள் பாடுவார் ' எண்டதும் அவர் அங்கிருந்து போய்விட அதுவரை உள்ளே வராமல் வெளியிலேயே நின்றிருந்த மல்லிகாகை அவன் அழைத்தான். தயங்கியபடி உள்ளே வந்தவளிடம் கெதியாய் போய் பஞ்சபுராணத்தைபடி ஜயர் காவல் நிக்கிறார் என்றவும். மன்னால் சென்ற மல்லிகா கைகள் கூப்பி கண்களை மூடி திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி கண்களில் நீர் செரிய பஞ்சபுராணங்களை பெருத்த குரலெடுத்து பாடத் தொடங்கினாள்.

000000000000000000000

திருமணமாகி கொலண்டில் இரண்டு பிள்ளைகளிற்கும் தாயாகி வாழ்ந்து வரும் மல்லிகா கடந்த வருடம் ஊரிற்கு போய்விட்டு வந்து அவனிற்கு போனடித்தவள். ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்.

00000000000000000000

இந்தியப்படை முல்லைத்தீவு அலம்பில் காட்டுபகுதியில் புலிகளின் தலைமையை குறிவைத்து முற்றுகையிட்டபொழுது அதனை உடைப்பதற்காக ஒரு குழுவிற்கு தலைமைதாங்கி போரிட்டு நந்தன். கப்ரன் நந்தனாக வீரச்சாவடைந்துவிட்டான் .சிறுவயது நண்பனின் நினைவுகளுடன் இந்த பதிவை எழுதியிருந்தேன் . அடுத்த வாரம் அடுத்த பதிவில் சந்திப்போம்.

அருமையாக இருக்கிறது பதிவு... நன்றி சாத்து

சிறுபிள்ளைகள் மீதான பாலியல் வதை தொடர்பான பதிவுகளையும் இப்பதான் வாசித்தேன். சின்ன வயதிலேயே 'ரவுடி' என்ற செல்லப் பெயர் எனக்கு இருந்ததால், இப்படியான வதைகளை நேரடியாக எதிர்கொள்ளவில்லை. ஆனால் என் நெருங்கிய உறவுகளை சேர்ந்த ஒருவனை அவனது 7,8 வயதுகளில் தாயின் சகோதரியே (சித்தி; அதுவும் இரட்டைப் பிறப்புகளாக பிறந்த சகோதரிகளில் ஒருவர்) தன் பாலியல் தேவைக்கு அவனை 12 வயது வரை பயன்படுத்தி வந்ததும் பின் அதே சித்தியின் மகள் அவன் 13 வயது வந்தபின் தன் பாலியல் தேவைக்கு பயன்படுத்தியதையும் அவன் மூலமே ஒரு நாள் அறிந்து கொண்டு தாய் தந்தையரின் கவனத்துக்கு கொண்டு வந்து இருந்தேன். இது பற்றி நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் விரிவாக எழுதுகின்றேன். மிகவும் கட்டுப்பாடான, உறவுகளுக்கிடையில் நெருக்கமான சமூகமாக வெளியே தெரியும் எம் சமூகத்தில் தான் இது நடந்தது

ஆள் பேய்க்காய் போலதான் கிடக்கு .எதற்கும் கொஞ்சம் விலத்தியிருப்பம்.வேட்டியில மூக்கால இரத்தம் ஒழுகின்ற அளவிற்கு தாங்காது.

கோவிலில் எல்லோரையும் உள்ளே விடச்சொல்லி மாவிட்டபுரத்தில் தான் முதன்முதலில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது .கோவிலே சிலகாலம் பூட்டியிருந்தது.உள்ளுக்க விட அனுமதி மறுத்ததில் முக்கியமானவர் அடங்கா தமிழன் சுந்தரலிங்கம்,விடச்சொல்லி போராட்டம் நடாத்தி வெற்றியும் பெற்றதில் முக்கியமானவர் சொன்னா நம்பவா போறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்

புலிகளுக்கு கிடைத்த வெற்றியில் இது மாபெரும் வெற்றி....சாத்து தொடருங்கோ ..சாத்திபோடதையுங்கோ.....

ஆள் பேய்க்காய் போலதான் கிடக்கு .எதற்கும் கொஞ்சம் விலத்தியிருப்பம்.வேட்டியில மூக்கால இரத்தம் ஒழுகின்ற அளவிற்கு தாங்காது.

கோவிலில் எல்லோரையும் உள்ளே விடச்சொல்லி மாவிட்டபுரத்தில் தான் முதன்முதலில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது .கோவிலே சிலகாலம் பூட்டியிருந்தது.உள்ளுக்க விட அனுமதி மறுத்ததில் முக்கியமானவர் அடங்கா தமிழன் சுந்தரலிங்கம்,விடச்சொல்லி போராட்டம் நடாத்தி வெற்றியும் பெற்றதில் முக்கியமானவர் சொன்னா நம்பவா போறீர்கள்.

ஏன் எழுத தயக்கம்....அவர் சார்ந்த இயக்கம்(புலிகள்) உண்மையானது என்பது பெரும்பான்மைதமிழர்கள் ஏற்றுகொள்கிறார்கள் என்பது உங்களது இந்த தயக்கத்தில் இருந்து தெரிகிறது......

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா.. நெஞ்சைத் தொட்டுட்டீங்கள்..! போரின்மூலம் இடப்பெயர்வில் வெளிநாட்டுக்கு வந்ததிலும் ஒரு நன்மை இருக்கு..! இல்லாவிட்டால் எங்களுக்கும் இதையே திணித்திருப்பார்கள்..! :unsure:

சாத்தர் நல்ல சாத்து வேண்டியிருப்பார் பிறகு சாத்திய மாதிரிக் கதை விடுறார்!

வாழ்த்துக்கள் சாத்! (சாத்து வேண்டியதிற்கில்லை கதை எழுதியதிற்கு)

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டத்தின்போது கூட மிரட்டிப் பார்த்தும் மசியாத ஊர்க்கோவில் ஒன்று அப்போதும், இப்போதும், எப்போதுமே எல்லாச் சாதியினரையும் உள்ளேவிடாமல் இருப்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் இருக்கின்றது!

1975 அல்லது 77 என நினைக்கிறேன். சுழிபுரம் பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களில் சந்ததியார் முன்னிலையில் பிரவேசம் நடந்தது. ஊரில் நிற்கும் நாட்களில் பெரும்பகுதி அப்போது சந்ததியாருடன் கழிந்ததால் நானும் அங்கே நின்றேன். கத்தியின்றி இரத்தமின்றி என்பதுபோல அது நிகழ்ந்தது.

ஆனால் என்ன..?!!!

மறுநாளே ஆலயங்களை பூட்டினாங்கள்.. கொடிக் கம்பம் வரையும் கம்பியால் எல்லைபோட்டு அதனுள் அந்தணரைத் தவிர எவருக்கும் அனுமதி இல்லை என்றார்கள்.. புதிதாக ஆலயங்களுக்கு தொண்டர் சபையை உருவாக்கி (இது ஏற்கெனவே நல்லூரில் இருந்தது) அந்த சபையில் உள்ளவர்கள்தான் சாமி தூக்கலாம் என்றார்கள்.. பிறகு புதிதாக கும்பாபிசேகத்துடன் ஆலயங்களை திறந்தாங்கள்.. இப்பவரையும் எல்லாருக்கும் திறந்துதான் இருக்கு..

ஆனாலும் என்ன.. என்னத்தை திறந்து.. என்னத்தை போயி..?! :D

(சாத்ஸ் முதலாவது பகுதிக்கும் கருத்து எழுதணும்.. எழுத பஞ்சியாயிருக்கு சார்.. பிறகு எழுதுறன்.)

நல்லதொரு இரைமீட்பு.. இந்த வாசத்தில் என்னாலும் பலதை இரைமீட்க முடியும் என நம்புகிறேன்.. தொடருங்கள்.. வாழ்த்துகள்!! :)

வாழ்த்துக்கள் சாத்திரி..நெருங்கீட்டம்.. கல்வளை பிள்ளையார் கோவில், சண்டிலிப்பாய் இந்து மகா வித்தியாலயம்.. இந்த சம்பவம் எல்லாம் நடக்கும்போது நான் சின்ன பையன் என்று நினைக்கிறேன்..

ஒன்று மட்டும் மறக்க முடியாமல் ஞாபகம்.. தாடிச்சிறி மாகியப்பிட்டி சந்தியில செய்த அட்டகாசம்..

புலிகளுக்கு கிடைத்த வெற்றியில் இது மாபெரும் வெற்றி....சாத்து தொடருங்கோ ..சாத்திபோடதையுங்கோ.....

ஏன் எழுத தயக்கம்....அவர் சார்ந்த இயக்கம்(புலிகள்) உண்மையானது என்பது பெரும்பான்மைதமிழர்கள் ஏற்றுகொள்கிறார்கள் என்பது உங்களது இந்த தயக்கத்தில் இருந்து தெரிகிறது......

வேறு யார் பின்னாளில் சந்ததியாரை கொன்றவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மூன்றாவது அனுபவம் பழைய காயங்களை, மீண்டும் வலிக்கச் செய்கின்றது!

எமது ஊரில் ஒரு பொதுக் கிணறு ஒன்று இருந்தது! அதனருகில் சிறிதாக இன்னொரு கிணறு!

பெரிய கிணற்றில் தான் ஊரவர்கள் தண்ணீர் அள்ளுவார்கள்! சிறிய கிணறு, சாதி குறைந்தவர்களுக்கு!

ஒரு பிரபல்யமான ஆசிரியர், சிறிய கிணறு விரைவில் வத்திப் போவதால், பெரிய கிணற்றில் சாதி குறைந்தவர்கள் எனக் கருதப் படுபவர்களை, தண்ணீர் அள்ளும்படி சொல்லி ஒரு போராட்டம் நடத்தினார்! அப்போது அவரை இன்னொரு ஆசிரியர் தென்னை மட்டை ஒன்றினால், அவரில் முதுகில் சில தடைவைகள் அடித்தார். அந்தக் காயத்தின் விளைவாக, அந்தப் பிரபல்யமான ஆசிரியர் இறந்து போனார்!

அண்மையில் அந்தக் கிணத்தடிக்குச் சென்றிருந்தேன்! ஒரு காகம் குருவி கூட அங்கு தண்ணீர் அள்ளுவதற்காக இப்போது வருவதில்லை!

'நிலை மாறும் உலகில்' என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது!

உங்கள் அனுபவங்கள், உயிர்த் துடிப்புடன் சம்பவங்களைத் திரும்பவும் கண் முன் கொண்டு வருகின்றன!

தொடர்ந்து எழுதுங்கள் , சாத்திரியார்!!! நன்றிகள்!!!

தொடருங்கள்...

Edited by அபராஜிதன்

சாத்ஸ் அண்ணை!

முதலில் நீங்கள் தொட்ட விடயத்தினை பார்த்தபொழுதே.... எமது சமூகத்திலுள்ள இந்த சாதீயம் சம்மந்தமான விடயங்களையும் நிச்சயம் தொடுவீர்கள் என எதிர்பார்த்தேன்!

ஒரு உண்மையான சம்பவத்தினைவைத்து கதையினை நகர்த்திய விதம்...

ஆழமான,காத்திரமான சில சமூக விடயங்களை அதற்குள் புகுத்திய நளினம்...

சொல்லவந்த விடயத்தினை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வெளிப்படுத்திய வரிகளின்,வார்த்தைகளின் கோர்ப்பு...

என எல்லாமே அருமையாக இருக்கின்றது! :wub:

தொடர்ந்து எழுதுங்கள்....!

வாழ்த்துக்கள்...! :)

எனது பார்வையில்......

விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்... இந்த சாதிப்பாகுபாடுகள் காலத்துக்குக் காலம் குறைந்துகொண்டே வந்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

அதற்கு... போர்க்கால கஷ்டங்கள் மனதளவில் ஏற்படுத்திய மாற்றங்கள்,வசதி,வாய்ப்புக்களில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள், புலம்பெயர்ந்து போய் வாழ்ந்த இடங்களின் பல்கலாச்சாரச் சூழல், காலத்துக்கேற்ற நாகரிக முன்னேற்றங்கள்... என பல்வேறான காரணங்கள் இருந்தாலும்,

சாதிப்பாகுபாடுகளை ஒழிப்பதற்காக எமது இயக்கத்தினால் எடுக்கப்பட்ட முனைப்புக்கள்தான் காலப்போக்கில் எம் சமுதாயத்தினை மாற்றியிருக்கின்றது எனலாம்.

உதாரணத்துக்கு அவர்கள் நடாத்திவைத்த கலப்புத்திருமணங்கள்.....

[[[ எனது பெரியம்மா முறையான ஒருவர் சாதி விடயத்தில் வெறி பிடித்தவர்போலத்தான் நடப்பார்.

ஆனால் அவருடைய மகள் திருமணம் தமிழீழ காவல்துறையின் தலைமையில்தான் நடந்தது.

அதற்குப் பின்னர் அவ சாதிக்கதை கதைப்பதே இல்லை!! :lol:

இப்ப மகள் குடும்பத்தோடு... பேரப்பிள்ளைகளோடு கலகலப்பா இருக்கிறா! :D ]]]

எமது தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் சாதிப்பாகுபாடுகள் என்பது 1970 இல் இருந்ததைவிட 2000ற்குப் பிற்பாடு பாதியாக குறைந்துள்ளது எனலாம்.

எமது அடுத்த தலைமுறைகளுக்கு சாதி என்ற விடயத்தினை வில்லங்கமாக விதைக்காமல் வளர்ப்போமானால் சாதீயம் என்ற அநாவசியமான ஒரு பிரமைக்குள் இருந்து வெளியாகி நமக்குள் ஒற்றுமையை வளர்த்து நம் இனத்தினை ஆரோக்கியமான ஒரு இனமாக உருவாக்க முடியும்.

விடுதலை என்பது முதலில் அவரவர் மனங்களில் இருந்து பெறப்பட வேண்டும்!

அதன்பின் நமக்கான விடுதலை என்பது தானாகக் கிடைக்கும்!!

நல்லாயிருக்கு சாத்திரி.

சிறுவன் சிறிக்கு இருந்த மல்லிகாவுடனான காதல் உணர்வுகளை இன்னும் கூடுதலாக விவரித்து இருக்கலாம். தேவை கருதி தவிர்த்தீர்களோ தெரியாது.

எங்கள் ஊரில், சாதி பார்த்து கோயிலுக்கு விடும் பழக்கம் இருந்ததில்லை. யாரும் போகலாம். ஆனால் கட்டாயம் முழுகியிருக்க வேண்டும். தற்போதும் இந்த நடைமுறை உள்ளதா?

.

பாராட்டாம போகேலாது சாத்திரியார். :)

ஒரு சமுதாயம் நாகரீகத்தில பின்தங்கி உள்ளதை காட்டும் சுட்டிகள் (Indicators) இருக்கின்றன.

1. சாதி

2. பெண்களிற்கு மேற்கல்வி வழங்காமை

3. இளம்பிராயத் திருமணம்

4. சீதனம்

5.

6.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதைக்கு நான் இப்படி பதில் எழுதுகின்றேன்.

எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்

நான் சிறுவனாக இருந்தபோது

எனது வீட்டுக்கு மீன் கொண்டுவர பலர்

தலைமுடி வெட்ட ஒருவர்

உடுப்பு தோய்த்துக்கொண்டுவர ஒருவர்

மா மிளகாய்த்தூள் இடிக்க போன்ற வேலைகளுக்கு ஒருவர்

தளபாட வேலைகளுக்கு சிலர்

கட்டிட வேலைகளுக்கு சிலர்.........

வந்து போவார்கள்

இவர்கள் எல்லோரும் எனது தகப்பனாரை வழியில் கண்டால் தலைப்பாகை கட்டியிருந்தால் அதை அவிட்டு கீழே பிடித்தபடி வணக்கம் சொல்வார்கள். அவர் வரும் வழியால் எதிரே வராது ஒதுங்கியே செல்வார்கள். இதை நான் நேரில் பலமுறை பார்த்திருக்கின்றேன். அவர்களிடம் கேட்டதற்கு எனது தகப்பனாரின் பிறப்பு தகுதி மற்றும் அவர் பிறந்த நேரத்திலிருந்தே இவருக்கு இந்த மதிப்பை கொடுத்துவருவதாக சொல்வார்கள்.

ஆனால் நான் இவர்களுடைய மக்கள் எல்லோருடனும் நண்பனாக பழகினேன். அவர்கள் வீடுகளுக்கும் போயிருக்கின்றேன். இதனால் சில எதிர்ப்புக்கள் வந்தாலும் அந்த வயது அவற்றைக்கண்டுகொண்டதில்லை. இன்றும் அவர்களில் பலர் நண்பர்களாகவே இருக்கின்றனர். இன்று ஒன்றாகவே தங்குகின்றோம் ஒன்றாகவே சாப்பிடுகின்றோம் தூங்குகின்றோம். இன்று இப்படி நான் எழுதுவது கூட சிலருக்கு இங்கு அசிங்கமாகத்தெரியும். அவர்களிடமிருந்து எந்த மரியாதையையும் நான் எதிர்பார்த்தில்லை. கேட்டாலும் கிடைக்கவும் போவதில்லை.

இனி

அடுத்த சந்ததி.

அதன் வளர்ச்சியும் பாய்ச்சலும் எல்லோருக்கும் தெரிந்ததே.

இதில் 2 வகைகளில் அவர்களினால் இந்த மரியாதை கொடுக்கப்பட்டது.

1- சாதி அடிப்படையில்

2 - அவர்களிடம் வேலை செய்து சம்பளம் பெறுபவர் என்ற அடிப்படையில்

சாத்திரியின் கதையிலும் இந்த இரண்டும் உண்டு. அந்தவகையில்தான் இந்த உடுப்பு அதை மீண்டும் போடுதல் என்பன வரும்.

இயக்கம் கூட அடக்கி வாசித்ததாக இங்கு சிலர் குறைப்பட்டார்கள்.

ஆனால் அதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்கு தெரிந்தும் வெறும் இயக்கம் மீதான குற்றச்சாட்டாகவே அது இருந்தது.

காரணம் அனுபவரீதியான படிப்பினையால் இதில் முழுமையாக தாம் இறங்காது அதிலிருந்து விடுபட்டு வரத்தொடங்கியவர்களையே அது ஊக்குவித்தது. பாதுகாத்தது.

புங்கையூரான் குறிப்பிடும் ஆசிரியர் தளையசிங்கம் அவர்கள்.

அவரது மகன் இங்குதான் உள்ளார். பெயரே புதுமை. புதுயுகன்.

  • கருத்துக்கள உறவுகள்

உன்மைகளை சொல்ல வந்த சாத்திரிக்கு :) :) :unsure:

இலங்கையில் இப்பொழுது நடக்கும் அதிகமான சம்பவங்கள் இவையே கையில் தொலைபேசி அதனுள் நீலப்படம் பிறகு என்ன?? பஸ்சினுள் செல்ல முடியவில்லை [பெண்கள்] முன்னுக்கும் பின்னுக்கும் முட்டுகிறார்கள்

நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் யாழ் பாணத்தில் நடந்த சம்பவம்

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... வரவர சாத்து விருதுகளை வாங்கிக் குவிக்க நினைச்சிட்டார் போல.... எதுக்கும் இப்பவே வாழ்த்தி வைப்பம். பிறகு இந்தாள் எங்களை கண்டு கொள்ளவே மாட்டார்.. :lol: வாழ்த்துக்கள் சாத்து..

சாத்து நானும் வாழ்த்துறன் அதோட ஒரு பச்சையும் குத்தியுள்ளேன். :) பின்பு ஒரு நாள் கானும் போது யார் நீ என்டு கேக்கிறதில்லை. :lol:

திருமணமாகி கொலண்டில் இரண்டு பிள்ளைகளிற்கும் தாயாகி வாழ்ந்து வரும் மல்லிகா கடந்த வருடம் ஊரிற்கு போய்விட்டு வந்து அவனிற்கு போனடித்தவள். ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலுக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்.

மனிதம் சாதியில் இல்லை. ஒரு மனிதனின் பிறப்பில் இருக்கிறது.

நல்ல பதிவு சாத்திரி. அப்பவே பலே ஆள் தான் நீங்கள். துணிஞ்ச கட்டை.

சித்தப்பாவுக்கு விட்ட அறை தான் உச்ச கட்ட நிகழ்வு.

அதுசரி, சித்தப்பா இப்ப கதைக்கிறாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்.... வரவர சாத்து விருதுகளை வாங்கிக் குவிக்க நினைச்சிட்டார் போல.... எதுக்கும் இப்பவே வாழ்த்தி வைப்பம். பிறகு இந்தாள் எங்களை கண்டு கொள்ளவே மாட்டார்.. :lol: வாழ்த்துக்கள் சாத்து..

சிறப்பாக நகர்கிறது உங்களின் தற்போதைய எழுத்துக்கள் சாத்து :rolleyes:

name='sagevan' timestamp='1329736941' post='730871']

சாத்து நானும் வாழ்த்துறன் அதோட ஒரு பச்சையும் குத்தியுள்ளேன். :) பின்பு ஒரு நாள் கானும் போது யார் நீ என்டு கேக்கிறதில்லை. :lol:

சகாரா மற்றும் சஜீவன் விருது வாங்குகின்ற மோசமான ஆசையெல்லாம் எனக்கு இல்லை அது மட்டுமில்லை யாராவது என்ரை கதையை படிச்சிட்டு நல்லாயிருக்கு விருது ஏதாவது குடுக்கலாமென நினைச்சு கதையை எழுதியவர் யரென்று பார்த்தால் எழுதியவர் சாத்திரி என்று இருந்தால் விருதை குப்பையிலை எறிஞ்சிட்டு போயிடுவாங்கள். :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டத்தின்போது கூட மிரட்டிப் பார்த்தும் மசியாத ஊர்க்கோவில் ஒன்று அப்போதும், இப்போதும், எப்போதுமே எல்லாச் சாதியினரையும் உள்ளேவிடாமல் இருப்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.. ஆனால் இருக்கின்றது!

எது கரவெட்டி ஆயக்கடைவையா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1975 அல்லது 77 என நினைக்கிறேன். சுழிபுரம் பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களில் சந்ததியார் முன்னிலையில் பிரவேசம் நடந்தது. ஊரில் நிற்கும் நாட்களில் பெரும்பகுதி அப்போது சந்ததியாருடன் கழிந்ததால் நானும் அங்கே நின்றேன். கத்தியின்றி இரத்தமின்றி என்பதுபோல அது நிகழ்ந்தது.

ஆனால் என்ன..?!!!

மறுநாளே ஆலயங்களை பூட்டினாங்கள்.. கொடிக் கம்பம் வரையும் கம்பியால் எல்லைபோட்டு அதனுள் அந்தணரைத் தவிர எவருக்கும் அனுமதி இல்லை என்றார்கள்.. புதிதாக ஆலயங்களுக்கு தொண்டர் சபையை உருவாக்கி (இது ஏற்கெனவே நல்லூரில் இருந்தது) அந்த சபையில் உள்ளவர்கள்தான் சாமி தூக்கலாம் என்றார்கள்.. பிறகு புதிதாக கும்பாபிசேகத்துடன் ஆலயங்களை திறந்தாங்கள்.. இப்பவரையும் எல்லாருக்கும் திறந்துதான் இருக்கு..

ஆனாலும் என்ன.. என்னத்தை திறந்து.. என்னத்தை போயி..?! :D

(சாத்ஸ் முதலாவது பகுதிக்கும் கருத்து எழுதணும்.. எழுத பஞ்சியாயிருக்கு சார்.. பிறகு எழுதுறன்.)

நல்லதொரு இரைமீட்பு.. இந்த வாசத்தில் என்னாலும் பலதை இரைமீட்க முடியும் என நம்புகிறேன்.. தொடருங்கள்.. வாழ்த்துகள்!! :)

சோழியன் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சுழிபுரம் பறாளாய் வினாயகருக்கும் எங்கள் கல்வளை வினாயகரிற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டு கோயில்களுமே சின்னத்தம்பி புலவரால் பாடல் பெற்ற தலங்கள். பறானாய் வினாயகர் பள்ளு..கல்வளை அந்தாதி இவைதான் அவரால் பாடப்பட்டது.

Edited by sathiri

எது கரவெட்டி ஆயக்கடைவையா??

கரவெட்டியில் பல கோவில்கள் இன்றும் பழைய அதிகாரத்துடனே இருக்கிறது.

கோவிற்கடவை

கிழவிதோட்டம்( 10 திருவிழவும் வெள்ளாளருக்கு தான்)\

தச்சந்த்தோப்பு( 4 5 திருவிழா வெள்ளாள்ருக்கு , கோவியருக்கு ஒன்று கரையாருக்கு 1 பாதிதிருவிழா தச்சருக்கும் வன்னாருக்கும்) அதிகாரம் வெள்ளாளரிடம்.

கிழவிதோட்டம் கோவிலில் குடும்ப பிரசனைகாரனமாக திருவிழாக்காரர் 2 பட்டு இருந்தார்கள் ஒரு பகுதி புலிகளிடம் பூகார் செய்தார்கள் அதற்க்கு விசாரனை செய்ய போனது மேஜர் செங்கதிர் அவர் பிரச்சனை தீர்க்க போய் பிரச்சனையை வளர்த்து விட்டார் தன் அதிகாரத்தை காட்ட ப்போய் கோவில் திறப்பை வாங்கிக் கொண்டு வந்து விட்டார் அது அந்த ஊர் மக்களுக்கு வெறுப்பை கூட்டிவிட்டது.. மேஜர் செங்கதிர் புலிகளால் போட்டு விட்டு மாவீரர் என்ரு அறிவிக்கப்பட்ட ஒருவர் என்று கூறுவார்கள்..

Edited by வினித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.