Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2014 ஆம் ஆண்டு பிடிச்சவை எவை / எப்படி இருந்தது?

Featured Replies

2014 இன் ஓர விளிம்பில் நின்று கொண்டு இந்த வருடம் எப்படி இருந்தது, எவையெவை பிடிச்சு இருந்தன, எந்த எந்த விடயங்கள் சரியாக நடந்தன் என்று பார்ப்பமா?  

 

 

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

2. பிடித்த பாடல்கள் எவை?

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

 

பகிர முடிகின்றவற்றை பகிரவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

1. பிடித்த திரைப்படங்கள் எவை?
 

நான்... எந்த, திரைப்படமும்...  விரும்பி பார்ப்பதில்லை.
கடைசியாக.... ஜேர்மன் திரையரங்கில், பார்த்த படம்.... "தளபதி"

 

2. பிடித்த பாடல்கள் எவை?

 

"பழைய வானொலி, பாடல்கள்"

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?
 

10677819_923794597648210_923793727648297

 

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

 

கனக்க இருக்கு. திட்டமிடாமல், வாழ்க்கை இல்லை.

 

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

 

மகளுக்கு, உலகப் புகழ் பெற்ற "ஆட்டோ மொபைல் நிறுவனத்தில்" படிக்க இடம் கிடைத்தது.

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

 

ஜெனொலியாவுக்கு.... ஒரு "கிஸ்" தன்னும்...  கொடுக்க முடியவில்லையே.... என்ற ஏக்கம்.

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?
 

கனக்க... வாசிக்க, வேண்டும் போல் உள்ளது. நேரம் தான் இல்லை.

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

 

ஜனாதிபதி தேர்தல், தை 8´ம் திகதி என்ற பின்...

கூட்டமைப்பு, தை 5´ம் திகதி நள்ளிரவு.... தனது முடிவை... அறிவிக்கும் என்று, சொன்ன செய்தி.

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

 

தமிழகத்தை... விஞ்சின, நல்ல தமாசாய்... இருக்கு.

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?
 

கூட்டமைப்பின்.... கள்ள மௌனத்தின் பின், தமிழர்கள் அதனை நிராகரிக்க தொடங்குவார்கள்.

அதற்கப்புறம்..... புலிகள் வருவார்கள்.
அது... நினைக்க, முடியாத... பேரதிர்ச்சியை... புதிய ஜனாதிபதி மைத்திரிக்கு கொடுக்கும்.
மகிந்த வெலிக்கடை சிறையில்..... கம்பி எண்ணிக் கொண்டிருப்பார். :)

Edited by தமிழ் சிறி

இந்த ஆண்டு எனக்கு பெரிய சவால் நிறைந்த ஆண்டாக அமைந்தது ............. :D 
 
கால் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் ,தடைகளும் ,சவால்களும் ,பொறாமையும் ,எரிச்சலும் ,கொண்ட முகங்களை சந்திக்க வேண்டியதாய் இருந்தது . :(  
 
என்றுமே வாழ்வில் காணாத பல அனுபவங்களையும் ,புதுமையான மனிதர்களையும் காண வழி தந்த ஓர் ஆண்டாக கூட அமைந்தது .ஆனாலும் நிறைய விடயங்களை சாதிக்க துணை நின்ற ஒரு ஆண்டாக கூட அமைந்தது எனலாம் . :rolleyes:  
 
பல இனிமையான ,உண்மையான நண்பர்கள் நண்பிகளை என்னுடன் இணைத்த ஓர் ஆண்டு .ஆனாலும் சில நண்பர்களையும் ,உறவினர்களையும் பிரிந்த ஆண்டாக கூட அமைந்திருந்தது  :) 
 
பல சிறந்த கலைஞர்களை என்னுடன் இணைத்த ஓர் ஆண்டு .அத்துடன் என்னுடன் கூட இருந்து  குழி தோண்ட நினைத்த பல உயர்ந்த உள்ளம் கொண்ட  கலைஞர்களை இனம் காணக்கூடிய ஓர் ஆண்டாக கூட இருந்தது . :o  
 
மனதில் இருக்கும்,உறுத்திக்கொண்டிருக்கும்  ஏக்கம்.......... நான் உறுதி அளித்தது போல அந்த திட்டம் இந்த ஆண்டில் நிறைவேறாமல் போய்விட்டது ..........பல காயங்களுடன் . :( 
 
அரசியலைப்பொறுத்தவரை மாற்றம் எதுவும் உணர்ந்தவனாய் தெரியவில்லை .ஆனால் பல முயற்சிகளில் பங்குகொண்டேன் . :icon_idea:
 
ஒட்டு மொத்தத்தில் கூட்டி கழிச்சிப்பார்க்கும் போது.என்றுமே காணாத பல அனுபவங்களைத்தந்த ஓர் ஆண்டு .அனுபவமே சிறந்த ஆசான் என்ற எண்ணத்தை உள்வாங்கி மலர இருக்கும் புத்தாண்டில் வெற்றிகரமாக பயணிக்க முடிவு எடுத்துள்ளேன் . :)  
 

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மகிழ்ச்சியான ஆண்டு 2014

 

நினைத்த பல திட்டங்கள் செயல் படுத்தியுள்ளேன்

 

பிள்ளைகளும் நன்றாக படிக்கின்றார்கள்

 

அடுத்த ஆண்டும் நன்றாகவே அமையும், நேற்றே அதற்கான திட்டமிடல்களை செய்துவிட்டேன்.

 

நன்றி நிழலி திரி தொடங்கியதிற்கு. அரசியல் & சினியா - 0 knowledge :D

  • கருத்துக்கள உறவுகள்

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

2. பிடித்த பாடல்கள் எவை?

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

தெகிடி, பிசாசு.

2. பிடித்த பாடல்கள் எவை?

புத்தம்புது காலை பொன்னிற வேளை..(New version)

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

எனது பேரனின் '..ம்மா..' என்ற முதல் மழலை.. :lol:

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

மகனின் கல்வி.

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

இல்வாழ்க்கை - குடும்பத்தில் சிறுசிறு ஊடல்கள்.

நட்பு - யாழில் ஒரு பெரியவரின் நட்பு, ஒவ்வொரு வருடமும் கலந்துகொள்ளும் எம் கல்லூரி தோழர்களின் ஒன்றுகூடல். :)

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

வீட்டு வேலைகள், புதிய மனை வாங்கும் திட்டம்.

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

புத்தகங்கள், நாவல்கள் எதுவும் படிக்கவில்லை. :huh:

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

இன்றும் தொடரும் தமிழர்களின் ஒற்றுமையின்மை,இலங்கையின் நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்கள்.

9. தாயக(தமிழக ?) அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

எப்பவும் போலதான், ஒரு முன்னேற்றமும் இல்லை. :(

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

முன்னேற்றமும். மாற்றமும் வரும் - நம்பிக்கையே வாழ்க்கை! :icon_idea:

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

மதயானைக்கூட்டம் (25 டிசம்பர் 2013 இல் வெளியானதாயினும் பார்த்தது பெப் 2014 இல்)

காவியத்தலைவன்

மெட்ராஸ்

ஜீவா

 

2. பிடித்த பாடல்கள் எவை?

யாருமில்லா தனியறையில் (காவியத் தலைவன்)

அடியே என்ன ராகம் (ரம்மி)

என்னோரு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன் (ஐ) - 100 தடவையாவது கேட்டு விட்டேன்

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

எங்கள் வீட்டு பின் முற்றத்தில் தினம் தினம் வந்து உணவருந்திப் போகும் அணில்களையும், Blue Jays பறவைகளையும் பார்பதே பரவசம்

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

வீடு வாங்கியது

 

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

விவசாயி விட்டில் யாழ் உறவுகளை சந்தித்தது மற்றும் பொதுவாகவே இவ் வருடம் ஒரு சந்தோசமான வருடம்

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

எதுவும் இல்லை

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

பிடித்தது என்பதை விட பாதித்தது தமிழ் கவி அக்காவின் 'ஊழிக்காலம்'

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தினை களியாட்டமாக கொண்டாடிய நிகழ்வு

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

அசைவற்று

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

மாற்றங்களை உள்வாங்கி அதற்கேற்ப சாதுரியமாக நடக்கக் கூடிய தலைமைத்துவத்திற்கான தேடல் பற்றிய பிரக்ஞ்சை அதிகரிக்கும்.

 

பகிர முடிகின்றவற்றை பகிரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

குறிப்பிடும்படி இல்லை

சினிமா மீதான தொடர்  ஏமாற்றத்தால் அதிக நாட்டமில்லை

 

2. பிடித்த பாடல்கள் எவை?

சொல்லும்படியாக இல்லை

 

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

ஞாபகமில்லை

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

ஊர்ச்சங்கத்தால் ஊருக்கும் தாயகத்துக்கும் 80 லட்சத்துக்கும் அதிகமாக செய்திருக்கின்றோம்

 

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

மகனது படிப்பு முடித்த வேலைக்கு போனது

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

இன்னொரு தொழில்

தடைகளாகவே இருக்கு..

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

கனக்க  வாங்கி  வைத்திருக்கின்றேன்

வல்வை சகாராவுனுடையது உட்பட

படிக்கத்தான் நேரமில்லை

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

மோடியின் தனிப்பலத்துடனான  ஆட்சி

 

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

அங்காங்கே சிறு நகர்வுகள் தெரிந்தாலும் 

சொல்லும்படியாக இல்லை

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

சிங்களத்தின் முகங்கள் மாறலாம்

கொடூரம் மாறப்போவதில்லை....

புலம் பெயர் தமிழர் ஒற்றுமையாகஉழைக்கணும்..

 

  • கருத்துக்கள உறவுகள்

  

 

 

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

 

வீரம் , கோலிசோடா, மட்ராஸ், நீஎங்கே என் அன்பே, வே. இ. பட்டதாரி, இரும்புக்குதிரை, கும்கி.

 

2. பிடித்த பாடல்கள் எவை?

 

உன்னைப்பத்தி நினைச்சாலே (காடு), சொய்,சொய் (கும்கி), ஏக் தோ தீன்(அஞ்சான்), உனக்காகப் பிறந்தேனே( பண்னையாரும் பத்மினியும்).

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

 

பேரனின் குறும்பும், பேத்தியின் சிரிப்பும்.

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

 

இதுவரை திட்டம் எதுவும் போடுவதில்லை, அந்தந்த நேரத்தில் வருவதை எதிர் கொள்வது.

 

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

 

எனது மகன் சென்ற மாதம் பொறியியல் துறையில் டிப்பிளோமும் கூடவே மாஸ்ட்ரோ பட்டமும் பெற்றது. ப்ல்லாயிரக் கணக்கானோர் வீற்றிருந்த அந்த அழகிய மண்டபத்தில் சில நூறுபேர் மட்டும் பட்டம் பெற்றனர். அதில் இரு பட்டங்களையும் ஒருசேரப் பெற்ற ஒருசிலரில் இவரும் ஒருவர். அடுத்தடுத்த நாளில் ஒரு பெரிய கம்பனி அவருக்கு நல்ல பதவியுடன் கூடிய வேலையும் கொடுத்து விட்டது.

 

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

 

திட்டமில்லாமலே முடியாமல் போனது சில உண்டு.

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

 

ஜென் தியான முறைகள், இப்ப படிப்பது மலமூட் எழுதிய செவ்விந்தியரின் நீண்ட பயணம் தமிழில் சா. தேவதாஸ். (அருமையான புத்தகம், நாங்கள் இப்ப சந்திக்கும் அழிவுகளை அவர்கள் அப்பவே சந்தித்து இப்பவும் ஓடிக்கொண்டிருப்பது.)

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

 

அம்மாவின் பிரிவு, இன்னும் முழுசாய் மீளவில்லை.

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

 

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நல்லதையே செய்கிறார்கள். அங்கு நிலவும் ரானுவ வேலிக்கும் ,மரண அச்சுறுத்தலுக்கும் நடுவே....!

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

 

நடக்கக் கூடாது ஆனால் நடந்திடுமோ என பயம், மகிந்தாவின் மீள் வரவு.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

1. பிடித்த திரைப்படங்கள் எவை - காவியத் தலைவன், சைவம், ஜிகிர் தண்டா

 

2. பிடித்த பாடல்கள் எவை - காவியத்தலைவன் ( பாடல்களும்), பூக்களே சற்று ஓய்வெடுங்கள், &i 
அழகே அழகு எல்லாம் அழகு (சைவம்)

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது - Book Of Mormon -  Broadway show (ஆங்கில இசை, நாட்டிய நாடகம்)

 

4. கசப்பான உண்மை... பொக்கிஷமான நிறைய நேரத்தை வேஸ்ட்டு பண்ணிட்டேன், பாலுமகேந்திரா, கே.பாலச்சந்தர், T .M சௌந்தர ராஜன், இப்படி பலரின் இழப்பு.

 

5. மிகவும் சந்தோசம் தந்த விடயம் - என் இரண்டாவது மகனின் (கல்வி, உரையாடல்) போன்ற துறைகளில் காணப்படும் தொடர்ச்சியான முன்னேற்றம்.

 

6. திட்டமிட்டும் முடிக்கமுடியாமல் போனது ஏராளம் - யாழில் இசைப் புதிர், வேங்கையன் பூங்கொடி குறித்த என் பார்வை, காலையில் நேரத்திற்கு எழும்பும்  திட்டம், கிழமைக்கு 2 முறை என் கிட்டாரை வாசிப்பதாக எடுத்த திட்டம் ...

 

7. புத்தகம் - முழுமையாக வாசித்து "நாரதர் ~ பாலகுமாரன்", "புலுகுனிக் குஞ்சுகளும்... ~ புதுவை ஐய்யா இன்னும் சில புத்தகங்கள் நடுவிலே 40 பக்கத்தில் ....

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு -  கனேடிய பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்.

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது - ம்ம்ம்  ஒண்ணு இருந்திச்சா என்ன?  கேள்வி பிழை சார்..

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும் - பேச்சுக்கள் நடாத்தப்படும் ... பேச்சுக்கள் நடாத்தப்படும் .. பேச்சுக்கள் நடாத்தப்படும் ... பேச்சுக்கள் நடாத்தப்படும் ...பேச்சுக்கள் நடாத்தப்படும்... ( கழுதை தேஞ்சி கட்டேறும்பா ஆச்சி)

 

 

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

 

20 தமிழ்ப் படங்களாவது பார்த்திருப்பேன். பெயர்களும் கதைகளும் ஞாபகமில்லை. அனைத்துமே பொழுது போக்குக்கு நன்றாக இருந்தது. ஆங்கிலப் படங்களுள் ஞாபகம் இருப்பது Divergent , Oblivion

 

 

2. பிடித்த பாடல்கள் எவை?

 

படம் பார்க்கும் போது பாடல்களை skip  பண்ணுவதால் தெரியவில்லை. 

 

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

 

மகள் கீ போர்ட்டில்  Barbie in Swan lake பாடலை வாசிக்கும் போது பிடிக்கும்

 

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

 

 

திட்டமிட்ட சில விடயங்களில் ஒன்று தான் நிறைவேறி உள்ளது. சில தோல்விகள். சில இன்னும் முடியவில்லை. 

 

 

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

 

 

கவலையான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கிறது. சந்தோசமான சந்தர்ப்பங்களும் உள்ளது. மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என்று ஞாபகமில்லை.

 

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

 

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

 

வாசிப்பதைக் கைவிட்டது நான் தானா என்று நம்பமுடியாமல் இருக்கிறது. நேரமின்மை, பொறுமையின்மை, ஆர்வமின்மை..
 
 

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

 

மஹிந்தவுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே போட்டி வேட்பாளர் உருவானது. மஹிந்தவும் அவ* சந்ததியும் அசைக்கமுடியாதபடி இன்னும் ஒரு தசாப்தமாவது ஆளப்போகிறார்கள் என்ற அச்சம் நீங்கியது. 

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

 

சில நம்பிக்கை நட்சத்திரங்கள் தெரிகின்றன.

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

 

ஓரளவு முன்னேற்றம் இருக்கும். ரணில், சந்திரிக்கா செல்வாக்குச் செலுத்தக் கூடிய தலமை இலங்கைக்கு கிடைக்குமானால் வட கிழக்கு இணைந்த மாகாண சபை கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.
 
 
 
 
 
https://www.youtube.com/watch?v=1ea90L91eZk
 
.

Edited by ஈசன்

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

சொல்லிற அளவுக்கு எதுவும் பிடிக்கலை ஆனா வேலையில்லா பட்டதாரி பரவாயில்லை .

2. பிடித்த பாடல்கள் எவை?

கூடை மேல கூடை வைச்சு(ரம்மி). (முதலில் குமரனின் நாதஸ்வர இசையில் கேட்டது அப்பிடியே பிடிச்சு போச்சு)

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம்

ஆத்துக்காரர் காதலிக்கும் காலத்தில் தந்த கடிதத்தை பிள்ளைகளுக்கு வாசிச்சு காட்டி ஆத்துக்காரரை கடுப்பேத்தி ரசிச்சதுண்டு

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

எனது படிப்பு

எனது ராஜினாம கடிதத்தை வேலையில் எப்படி குடுக்கிறது என்று திண்டாடிட்டு இருந்தன் ஆனா ஒரு வழியா போன கிழமை குடுத்திட்டன்.

5. மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

தங்கையின் திருமணம்

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

திட்டம் எதுவும் இல்லை ஆனா போன புது வருடம் அன்று கோப்பி கடையில்(timhortan ) drive thru இல் $12 இற்கு வாங்கினான் . ஆனா காசை குடுக்கு யன்னலுக்கு போனா எனக்கு முன்னுக்கு நின்ற கார் எனக்கும் சேர்த்து குடுத்திட்டு போயிட்டுது . காரின் நிறமும் இலக்கமும் தான் தெரியும் ஆளை கண்டு பிடிக்க முடியாமலே போயிட்டுது இது வரைக்கும்.

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

எனது நண்பி தந்த ஒரே ஒரு ஆங்கில நாவல் தான் வருடம் முழுதும்( 50 shades .......)☺️

பிடிச்சதென்று சொல்லமாட்டன்

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

எல்லாமே தான்

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

சிறையில் இருக்கும் நம் உறவுகளை விடுவிக்க இந்த தேர்தலை பாவிச்சிருக்கலாம்

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

Edited by செவ்வந்தி

  • கருத்துக்கள உறவுகள்

2014 இன் ஓர விளிம்பில் நின்று கொண்டு இந்த வருடம் எப்படி இருந்தது, எவையெவை பிடிச்சு இருந்தன, எந்த எந்த விடயங்கள் சரியாக நடந்தன் என்று பார்ப்பமா?  

 

 

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

 

கும்கி, வேலை இல்லா பட்டதாரி

 

 

2. பிடித்த பாடல்கள் எவை?

 

 All of Me, எனை சாய்த்தாளே,வெரசா போகையிலே,மோனா கசோலினா,கோரமான மரணம் ஒன்று

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

சில நண்பர்களை தேடிப்பிடித்து சந்தித்து பாடசாலை வாழ்க்கையை இரை மீட்டது மகிழ்ச்சிகரமானது.

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

இலங்கை சென்று பெற்றோருடன் சில காலம் நின்றது..

 

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

 

அம்மா சமைத்த உணவுகள்.

 

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

இலங்கை சென்றும் வன்னிக்கு செல்ல முடியாமல் போனது.

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

 வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. சில பக்கங்கள் வாசித்த படி உள்ளன.

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

 

ஜெயலலிதாவை வெளியில் விட்டது.

தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் திருமாவின் உரை.

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

 கூட்டமைப்பின் அரசியல் பேரம் பேசும் உக்கிரம் போதாது.

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

அரசியல் கொலைகள் நடைபெறலாம். தமிழருக்கு எதுவும் சாதகமாக நடைபெறும் என்று சொல்ல முடியாது.

 

.

 

Edited by nunavilan

  • தொடங்கியவர்

2014 எப்படி இருந்ததென்று பதில் இட்ட தமிழ் சிறி, தமிழ் சூரியன், உடையார், ராசவன்னியன்,  விசுகு,சுவி, சசிவர்ணம்,  ஈசன், செவ்வந்தி (நெடு நாட்களுக்குப் பிறகு காண்கின்றோம் - அடிக்கடி வாருங்கள்) , நுணா ஆகியோருக்கும் எம் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

2014

 

பிடித்த திரைப்படங்கள்

அதிக திரைப்படங்கள் பார்க்காத காரணத்தால் இதற்கு பதில் கிடையாது பார்த்தவற்றுக்குள் மனதை கவர்ந்ததாக எதுவும் இல்லை

 

பிடித்த பாடல்கள்

மூங்கில் காடு மூலிகை வாசம் (கடல்) 2014ஆ 2013 என்று தெரியாது

ஆனந்த யாழை மீட்டுகிறாள் (தங்க மீன்கள்)

கையளவு மனசுக்குள்ளே சொய் சொய்  (கும்கி)

புதியஉலகை புதிய உலகைத் தேடிப்போகிறேன் (என்னமோ ஏதோ)

இன்னும் சில இருக்கின்றன உடனடியாக ஞாபகத்தில் வரவில்லை

 

ரசித்த விடயம்

கேரள நாட்டின் வனப்பு, படகு வீடு, தஞ்சாவூர் பெரியகோவில்

 

திட்டமிட்டு செய்து முடித்தவிடயம்

என்னுடைய வேங்கையன் பூங்கொடியை நூல் வடிவில் உருவாக்கியது

 

மிகவும் மகிழ்ச்சியைத் தந்த விடயம்

நூல் வெளியீடுகள் (தமிழகம் மற்றும் கனடா) (நினைத்தே பார்த்திராத பெரியவர்களின் சந்திப்பு)

 

திட்டமிட்டு முடிக்காமல் போனவிடயம்

சிறுகதைத் தொகுதியை வெளிக் கொணராமை, கற்கை தொடர்பான விடயங்கள்

 

வாசித்ததில் பிடித்த நூல்

வாசிப்பே குறைந்துவிட்ட நிலையில் வாசித்த நூல்கள் என்றால் காவலூர்கண்மணியின் புத்தகங்கள்தான் முழுமையாக இவ்வருடத்தில் வாசித்தது அதனால் வேறு சொய்ஸ் கிடையாது

 

பாதித்த அரசியல் விடயம்

எதுவும் இல்லை

 

தாயக அரசியலின் போக்கு

மற்றவர்களேயே நம்பி வாழப் பழகிக் கொண்டதால் கூறுவதற்கு ஒன்றும் இல்லை

 

தாயக அரசியல் 2015 இல் எப்படி இருக்கும்

ஏமாற்றம் மட்டுமே தமிழருக்கு சொந்தமாக இருக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

2014 இன் ஓர விளிம்பில் நின்று கொண்டு இந்த வருடம் எப்படி இருந்தது, எவையெவை பிடிச்சு இருந்தன, எந்த எந்த விடயங்கள் சரியாக நடந்தன் என்று பார்ப்பமா?  

 

 

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

 

ஆங்கிலம் படம் எதுவும் பார்க்கக் கிடைக்கேல்ல. ஆன்லைனில் பார்த்த தமிழ்படங்களும் பப்படங்கள். சொல்லிக்கொள்ளுற மாதிரி ஒன்னும் அமையல்ல.

 

2. பிடித்த பாடல்கள் எவை?

 

கத்தி.. selfie புள்ள.. இசைக்காக.

 

http://youtu.be/fSYzIJubuXg

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

 

பிகருங்க தான். அதுக்கு எண்ணுக் கணக்கு வைக்கிறதில்ல.

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

 

திட்டமிட்டது என்று இல்ல.. எதிர்பாராமல் நிறைவேறியது உண்டு.

 

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

 

எங்க இயற்கை மின்னணுப்படம்.. முக்கிய அறிவியல் ஏட்டில் ஏறியமை.

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

 

பெரியவா..எல்லாரும் கேட்கிறாங்களே.. அவங்களுக்காக என்றாலும்..பதில் சொல்ல..கலியாணம் ஒன்றைக் கட்டிப்பார்ப்பம் என்று நினைச்சம் ஆனால் நடக்கல்ல.  (மனசுக்க நினைச்சம் நடக்கக் கூடாதுன்னு. பெரியவங்க விட்டால் தானே.)

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

 

நாவல் எல்லாம் வாசிக்கிற பழக்கமில்லை. இருந்தாலும்.. ஆதியின் வெளியீடு ஒன்று அரைகுறையா வாசிச்சதோட கிடக்குது.

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

 

2009 மே க்குப் பின் எந்த அரசியல் நிகழ்வும் மனசை பாதிக்கிறதில்ல. பாதிப்பின் உச்சத்தை கண்டு மனசு இசைவாக்கம் அடைச்சிட்டுது.

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

 

போகிற போக்கில போகட்டும் என்று விட்டாச்சு. 2009  மே க்குப் நூலறுத்த பட்டம் போல ஆயிடுச்சு அது.

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

 

சிங்களவருக்கு தேவையான மாற்றம் இருக்கும். வழமை போல..தமிழருக்கு ஒரு விமோசனமும் இருக்காது.

 

பகிர முடிகின்றவற்றை பகிரவும்.

 

* குறிப்பு: கலியாண மாட்டர் சும்மா. உங்களை குசிப்படுத்த. பெரியவா கேட்டா தான்.. நமக்கு இன்னும் அதுக்கு மனசு தயார் இல்ல. பயப்பிடுது.. மாட்டிவிட்டிடுவாங்களோன்னு.! :D

 

இப்ப சந்தோசமா. :)

 

  • கருத்துக்கள உறவுகள்

2014 கப்பியாக சொல்லும்படியாக எதுவும் அமைய இல்ல..நெடுகலும் ஏன் எல்லாத்தையும் சொல்லி உறவுகளின் மனதையும் கவலைப்படுத்துவான்....சிவனே என்று திரியத் தொடங்கியாச்சு...:(

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

 

    Apocalipto , Hunger Games - Mockingjay Part 1, The Maze Runner

 

2. பிடித்த பாடல்கள் எவை?

 

    காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

 

  என் வீட்டுத் தோட்டம்

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

   

    எனது நூல் வெளியீடு

 

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

 

    இரு மகள்களும் மாஸ்டர் செய்வதும் ஒருவருக்கு  UCL இல் இடம் கிடைத்ததும்

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

   

    முகநூலை முடக்குவது

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

   

    பிடித்தது என்று எதுவும் இல்லை

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

   

    எந்த அரசியலும் என்னைப் பாதிக்காது

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

   

   அதை ஆர் கவனிச்சது

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

   

    எனக்குத் தெரியவில்லை

 

பகிர முடிகின்றவற்றை பகிரவும்.

 

2014 ம் நானும் 
 
பிடிச்ச சினிமா 
 
பிசாசு 
pk (ஹிந்தி )
interstellar
ஜீவா  
மெட்ராஸ்
பெங்களூர் days (மலையாளம் )
சதுரங்க  வேட்டை 
 ஜிகிர்தண்டா 
மனம் (தெலுங்கு )
The last ship (session 1)Tv  series
 
மேகா படமும் வசனம்களிற்காக பிடித்து இருந்தது 
 
 
2. பிடித்த பாடல்கள் 
 
பிசாசு படத்தில் இடம்பெற்ற அந்த ஒரே ஒரு பாடல் அதும் அந்த சோலோ வயலின் இசைக்காக திரும்ப திரும்ப கேட்கலாம்  
 
மேகா   படத்தில் இடம்பெற்ற  இந்த பாட்டு  
 
இடம் பொருள் ஏவலில் இடம்பெற்ற  ஈர காற்றே  நீ வீசு ,
 
 
 
 
மற்றும் ஐ பட பாட்டும் காவிய தலைவன் படத்தில் ஒரு பாட்டும் , இன்னும் சிலவும் 
 
 3) சினிமா அல்லாது ரசிச்ச விடயம்
 
twitter  மற்றும் முகநூலில்  இல் இடம்பெற்ற  சுவாரசிய சண்டைகள் 
முகநூலில் இடம்பெற்ற மனசை ஈர்த்த பதிவுகள் சில  
 
 
 4) மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?
  எனது  நண்பன் சிறையிலிருந்து விடுதலையானது 
  
5) வாசித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்? 
 
      ராஜு முருகனின் வட்டியும் முதலும் முன்னர் விகடனில் தொடராக வந்த போது சில பகுதிகள் படித்து               இருந்தேன் இப்போது ஈ  புக் ஆக வந்திருக்கிறது ,
 
    காதல் மந்திரம் மலையாள மொழி பெயர்ப்பு  (பிடித்திருந்தது என்றில்லை இந்த வருடம் படித்ததில் ஒன்று இதுவும் ஈ புக் தான்) 
 
 6) தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது? 
 
 
வடமாகாண சபை அமைச்சர்கள் அதும் குறிப்பாக ஐங்கர நேசனின் செயற்பாடுகள் குறிப்பிட்டளவு கவன த்தை ஈர்க்க கூடியதாக இருந்தது  
 
 
 
  7) தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?
தேர்தல் ஆண்டாக இருப்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூட தான் இருக்கிறது பார்க்கலாம் 
 
 
8) 2014 ம் யாழ் ம்    
 
 
 
ஆதவன் இணைக்கின்ற  இணைப்புகள் மிக நன்றாக  இருந்தன  அத்துடன் கிருபன் அண்ணா  இணைக்கிற அரசியல் கட்டுரைகளும்,கதைகளும் , பெருமாளின் அறிவியல் செய்தி இணைப்புகளும் நன்றாக இருந்தன 
 
கவிதை பகுதியில் அன்சரனின் மகனதிகரமும், சசி வர்ணத்தின் மரணத்தின் வாசம்  என்னும் கவிதையும்  புங்கையூரான்  அண்ணாவின்,  நினைவுகளில் விளக்கேற்றுவோம் கவிதையும்  ராஜன் விஸ்வாவின்  விடியலின் ஒளியும் 
சுமே அக்காவின் மனவெளியின் மயக்கம் கவிதையும் பிடித்திருந்தது 
 
புத்தனின் கிறுக்கல்கள் எப்போதுமே பிடிக்கும்  அர்ஜுன் அண்ணா வின்  சென்னை கனவு 
இசை அண்ணாவின் அமெரிக்க தீர்மானம் அனுபவ தொடர்  புங்கையூரான் அண்ணா எழுத்தி முற்று பெறாத வசந்த மண்டபத்து தெய்வங்கள் , சுமே அக்காவின்  பெண்ணின் மனது  மற்றும் இன்னும் சில கதைகள் பிடித்து இருந்தன சகாராஅக்காவின் வா என்னை வருடு :D முதலில் படிக்கும் போது விளங்கா விட்டாலும்  பிடித்திருந்தது  
 
இதில் எனது பார்வையில் எனக்கு பிடித்தவை மட்டுமே இவற்றில் உங்களிற்கு உடன்பாடுஇல்லாமல் இருக்கலாம்  இங்கு இணைக்கப்படும் எல்லாவற்றையும் நான் படித்திருக்கவும் மாட்டேன் சில நல்ல இணைப்புகள் ஆக்கம்கள்  என் கண்களிளிருந்து தவறியிருக்கலாம்  அதற்க்கு சம்பந்த பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் 
 
2014இல்எனக்கு பிடித்த கருத்துகள் /கருத்தாளர்களில்  தேர்தல் சம்பந்தபட்ட கருத்துகளில் jude எழுதிய கருத்துகளும்  மற்றும் மற்றைய பகுதிகளில்  கோசன் சே, ஈசன் அண்ணா ரகுநாதன் அண்ணா கிருபன் அண்ணா ,நாரதர் நாதமுனி  ரதி அக்கா , அஞ்சரன் ஆகியோரின் கருத்துகளும் பிடித்திருந்தன 
 
 
 
 

 

 மீள்வாசித்தல் போல கடந்த வருட வாழ்க்கையை மீள் பார்வையிட வைத்த நிழலிக்கு நன்றி .
 
1. பிடித்த திரைப்படங்கள் எவை?
     இந்த வருடம் ஒரு தடவைக்கு மேல் பார்த்த ரசித்த படம் ஒன்றே ஒன்றுதான். அது "குறையொன்றுமில்லை". அதில்        சொல்லப்பட்ட விடயமும், மெல்லிய காதலும் என்னை மிகவும்   ஈர்த்துவிட்டது.
 
2. பிடித்த பாடல்கள் எவை?
    மனசுல சூரக் காத்தே & ஆகாசத்த நான் (குக்கூ)
   "தேவ தேவதை" அமர காவியம்
 
3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?
   ரொம்ப ரசிச்ச விடயம் என்றால் தமிழ் இலக்கியங்கள் தான். குற்றால குறவஞ்சியும், கூளப்ப நாயக்கன் காதலும்.  நீண்ட நாள் தேடலுக்குப் பின் சென்சார் செய்யப்படாத கூளப்ப நாயக்கன் காதல் புத்தகம் இந்த வருடம் தான் வாசிக்க கிடைத்தது. நிழலி உங்களக்கு இந்த புத்தகங்களை பரிந்துரைக்கிறேன் :)
 
4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?
    கம்போடியப் பயணம்
 
5. மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?
    பெரிய இடம் வாங்கி தோப்பு வைக்கனும்னு நினைச்சது இந்த வருடம் நிறைவேறிவிட்டது..
 
6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?
    மத்திய கிழக்கில் ஓட்டுனர் உரிமம் வாங்க முயற்சி செய்து கடைசியில் அது ஒரு ஐந்து ஆண்டு திட்டமா மாறிப்போச்சு.
 
7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?    
    காவல் கோட்டம் வாசிக்க தொடக்கி பாதியுடன் நிற்கிறது.. வாசித்த வரைக்கும் நன்றாக இருந்தது.
 
8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?
    பெரிசா எதுவும் இல்ல...
 
  • கருத்துக்கள உறவுகள்

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?
 

பெரிதாக எதுவுமில்லை
எதிர் நீச்சல் ஓரளவு பிடித்தது


2. பிடித்த பாடல்கள் எவை?
 

ஊதாக்கலரு :lol:

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

 

பாரிசில் நடந்த எம்மவர்களின் ஒரு கலை நிகழ்விலும்
லண்டனில் நடந்த எம்மவர்களின் ஒரு விளையாட்டு நிகழ்விலும்

கலந்து கொண்டு எனது பழைய நண்பர்கள் பலரையும் ஒரே நேரத்தில் சந்தித்துப் பழைய

நினைவுகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்ட
சம்பவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

திட்டம் எல்லாம் போடுவதில்லை. நடப்பதெல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து செல்வதே எனது இயல்பு

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

 

பல நூறு மைல்களுக்கு அப்பால் பெரும் பணச் செலவுடன்  உயர்கல்வி கற்ற  எனது மகளுக்கு
அவரின்  முயற்சியாலும் நம்பிக்கையாலும் சில நூறு மைல்கள் தூரத்தில் பணச் செலவின்றிக்  கல்வி கற்க இடம் கிடைத்தது நிம்மதியைத் தந்தது  :)


6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

 

அது தான் மேலேயே கூறிவிட்டேனே திட்டம் எல்லாம் போடுவதில்லை
திரும்பவும் எதற்குத் திட்டம், கேள்வி நன்றாக இல்லை

:D:lol:

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

 

யாழில் வரும் சிறு  கதைகள் எல்லாம் பிடிக்கும்
தேவையானவற்றைச் சரியாகக் கோர்த்து ஒழுங்கமைத்தால்
பல நாவல்களை உருவாக்கலாம்.


8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

 

சம்பந்தர் அவர்கள் த தே கூட்டமைப்பின் தலைவராகவும்
மாவை அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும்
இறுக்கமாகக் கதிரையில் அமர்ந்திருக்கும் போக்கு


9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

 

மக்கள் திறமைக்கு மதிப்பளிக்காமல் சின்னத்திற்கே வாக்களிக்கும் நிலைமை

இன்னும் இருந்தால் இன்றைய நிலையை விட இன்னும் மோசமாகப் போகப் போகின்றது.

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

 

அது மக்களின்  விழிப்புணர்வில் தங்கியுள்ளது.
 

  • கருத்துக்கள உறவுகள்

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

வேலையில்லாப் பட்டதாரி, மெட்ராஸ் பார்த்தாலும் "தமிழ்ப்படம்"தான் ரசித்துப் பார்த்தது. :D

2. பிடித்த பாடல்கள் எவை?

இந்த மின்மினிக்கு கண்னில் ஒரு மின்னல் வந்தது.. (இப்பத்தான் 1980க்கு வந்திருக்கிறம். :lol: )

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (Survivorman, Gold Rush, Pawn Stars, American Pickers..)

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

திட்டமிடுவதில்லை.

5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

வங்கிக்கடனில் முக்கால்வாசியை அடைத்தது. :unsure:

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

அப்படி எதுவும் இல்லை.

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

புத்தகங்கள் படிப்பதில்லை. வேலைவிடயமாக ஆய்வுக்கட்டுரைகளை படிப்பேன்.

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

காணோமல்போனோரின் ஆணைக்குழு என்கிற பெயரில் பாதிக்கப்பட்டவர்களை மேலும் கலங்கவைத்த நிகழ்வுகள்.

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

எதிர்பார்த்தபடியே இருந்தது.. எந்த முன்னேற்றமும் இல்லாமல்.

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

முன்னேற்றம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

2014 இல்

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

தமிழில் நல்ல படங்கள் அதிகமாக வராததாலும், தெளிவற்ற படங்களை கணணியில் பார்க்க விருப்பமில்லாததாலும் தமிழ்ப்படங்கள் பார்ப்பது குறைவு. பார்த்த ஒரேயொரு தமிழ்ப் படம் "கத்தி"!

ஆங்கிலத்தில் பல படங்கள் பார்த்திருக்கின்றேன்.

பிடித்த படங்கள்: 12 Years a Slave, Interstellar

அடுத்ததாகப் பார்க்கவுள்ளது: The Theory of Everything

2. பிடித்த பாடல்கள் எவை?

2014 இல் பாடல்கள் எதுவும் தரவிறக்கம் செய்யவில்லை. அடுத்த சில நாட்களில் இதுதான் முழுநேர வேலை :)

எனினும் 2013 இல் அடிக்கடி கேட்ட பழைய பாடல்கள் (காரில் போகும்போதுதான்!):

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக

https://www.youtube.com/watch?v=-gyJT1nQDnM

சமரசம் உலாவும் இடமே

https://www.youtube.com/watch?v=ATBNyaWxTr4

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

ஸ்விற்சலாந்துக்குப் போனபோது அழகிய Interlaken மலைப் பகுதியில் மூன்று நாட்கள் இருந்தேன். அழகிய ஏரியை ஒட்டி வளைந்து நெளிந்து பல குகைக்குள்ளால் செல்லும் பாதையில் காரோடியதும் மலைப்பாதைகளில் நடந்து திரிந்து இயற்கையின் அழகைப் பருகியதும்!!

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

திட்டம் போடுவதே முழுநேரத் தொழில் என்பதால் எதையும் திட்டம்போடாமல் செய்வதில்லை. திடீரெனச் செய்யவேண்டி வந்தாலும் திட்டம் போட்டுத்தான் செய்வதுண்டு!

புதிய வேலையைத் திட்டம் போட்டு பெற்றுக்கொண்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எப்படி என்று நேரம் கிடைக்கும்போது ஒரு பதிவு போடுகின்றேன் :)

5. மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

பல விடயங்கள் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது இந்த வருடம் விமானப் பயணம் செய்யாததுதான்! 98 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்குப் பலமுறை விமானங்களில் பயணித்து வெறுத்துவிட்டிருந்தது. அதனால் ஐரோப்பாவிற்கு இப்போதெல்லாம் காரிலேயேதான் போவதுண்டு.

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

பல வருடங்களாக C++ programming படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தும் இந்த வருடம்தான் அதை முறையாகப் படிக்க திட்டம் போட்டு ஒரு புத்தகத்தையும் வாங்கி Linux development environment ஐயும் தயார் செய்திருந்தேன். ஆனால் புதிய வேலை காரணமாக நேரத்தை ஒதுக்கமுடியாததால் திட்டத்தை 2015க்கு ஒத்தி வைத்தாயிற்று! C தெரிந்தவர்கள் C++ படிப்பது கடினம் என்பதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வம் இன்னமும் மறையவில்லை.

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

இந்த வருடம் பல புத்தகங்களை வாங்கியிருந்தேன். சில நண்பர்களின் உதவியினால் இலவசமாகவும் கிடைத்திருந்தது. எனினும் தமிழில் நாவல்கள் எதனையும் படிக்கவில்லை என்பது ஒரு குறை. பல சிறுகதைத் தொகுப்புக்களைப் படித்திருந்தேன்.

கனடா சென்றிருந்தபோது அர்ஜுனிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடவுளின் மரணம், சாலப்பரிந்து பிடித்திருந்தன.

அத்துடன் பெருமாள் முருகனின் "பீக்கதைகள்" (மலத்தைப் பற்றித்தான்) வித்தியாசமானதாக இருந்தது!

அடுத்த சில நாட்களில் "ஆயுத எழுத்து" வாசிக்கவுள்ளேன் (புத்தகம் இன்னும் கையில் கிடைக்கவில்லை!)

என்னிடம் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் இரு நண்பர்களின் உதவியுடன் சில நாட்களின் முன்னர் பட்டியலிட்டேன். இனி வாசிக்காமல் நிலுவையில் இருப்பவற்றை வாசித்து முடிக்காமல் புதிதாக எதையும் வாங்குவதில்லை என்று யோசித்துள்ளேன்.

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

பாதித்தது என்பதைவிட ஆச்சரியாமாக இருந்தது மைத்திரி ஜனாதிபதி தேர்தலில் நிற்பதுதான். ஆனாலும் தமிழர்களுக்கு இவரால் ஒரு நன்மையும் கிடைக்காது என்பதை தமிழர்கள் புரிந்துகொண்டது மாதிரித் தெரியவில்லை!

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

அண்மையில் Lincoln திரைப்படம் பார்த்திருந்தேன். சாக்கடை அரசியலுக்குள் கறுப்பர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்க தளராது பாடுபட்டு இறுதியில் உயிரையும் கொடுத்த எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கு தனது இலட்சியத்தில் எவ்வளவு நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதையும், அதனை அடைய சகல வழிகளையும் மனம் தளராது முயற்சிக்கவேண்டும் என்பதையும் சிறப்பாக எடுத்திருந்தார்கள்.

இப்படியான தூரநோக்குச் சிந்தனையுள்ள, இலக்கை அடையப் அரசியல் ரீதியில் போராடக் கூடிய, இராஜதந்திரம் மிக்க தலைவர்கள் தாயகத் தமிழர்களிடம் இல்லையென்றே சொல்லலாம். எனவே மக்களை வசீகரிக்கக் கூடியதும், அரசியலில் நெளிவு சுழிவுகளைத் தெரிந்தும், இலட்சியத்தில் உறுதியும் உள்ள தலைவர் ஒருவர் உருவாகும்வரை தமிழர்களுக்கு மீட்சி இல்லை என்றே நினைக்கின்றேன்.

சுமந்திரன் போன்ற ஒருவர் தமிழர்களின் அரசியலை வழிநடாத்தும் நிலையுள்ளதை நினைத்து அச்சம்கொள்கின்றேன்.

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

கூட்டமைப்பு மேலும் கருத்தியல் ரீதியில் பிளவுபடலாம். ஆனால் உடையமாட்டாது என்றுதான் நினைக்கின்றேன். நெல்லிக்காய் மூட்டையாகத் தொடர்வார்கள்.

 
1. பிடித்த திரைப்படங்கள் எவை?
 
திருஷ்யம் ,பண்ணையாரும் பத்மினியும் ,Birdman.
 
2. பிடித்த பாடல்கள் எவை?
 
அழகு ,கூடை மேல கூடை வச்சு,ஜிங்கினமணி
 
3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?
 
இலக்கிய கோஷ்டிகளுடன் திரிவதால் நல்ல நகைச்சுவைகளுக்கு பஞ்சம் இல்லை .கோடைகாலம் காடேற சென்ற போது அவர்கள் போட்ட நகைச்சுவை நாடகங்கள் சொல்லிவேலையில்லை .அதைவிட வேறு மேடை நாடங்களும் இங்கு பார்த்து ரசித்தேன் 
 
4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?
 
அப்படி ஏதும் இல்லை 
 
5.  மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?
 
இரண்டாவது மகனும் பல்கலைக்கழகம் சென்றது ,ஆனால் மூத்தமகன் வீட்டில் இருப்பதே தெரியாது  இரண்டாவது மகன் நேர் எதிர்  .எனக்கு உடம்பு பிடித்துவிடுவதும் அவன்தான் .இப்போ பல்கலைக்கழக விடுதியிலேயே தங்குவதால்  வீடு சோடை இழந்துவிட்டது .
 
6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?
 
இப்படியும் இல்லை .
 
7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?
 
கண்டிவீரன் ,மாதா (இரண்டும் சோபா சக்தியின் சிறு கதைகள் )மகாத்மா காந்தி சுயசரிதை ,வண்ணநிலவன் சிறுகதைகள் தொகுப்பு ,இன்னும்பல .
 
8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?
 
தொடரும் எமது மக்களின் அவலம் ,மத்தியகிழக்கில் தொடரும் கொடூர யுத்தம் .
 
9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?
 
மிக கேவலம் .சிங்கள தமிழ் இரு தலைமைகளும் இதில் அடக்கம் .புலம் பெயர்ந்தவர்களும் விதிவிலக்கு அல்ல .
 
10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?
 
நிட்சயம்  பெரிய மாற்றம் வரும் .தமிழர் வாழ்வில்  மாற்றம் வராது .
 
  • கருத்துக்கள உறவுகள்

2014 இல்

 

1. பிடித்த திரைப்படங்கள் எவை?

 

தமிழ் -  திரைப்படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. அதிகமான documentaries தான் பார்ப்பதுண்டு. ஆனால் பார்த்ததில் முன்டாசுப்பட்டி பிடித்திருந்தது.

ஆங்கிலம் - A Million Ways to Die in the  West பிடித்திருந்தது. எனக்கு பிடித்த Family Guy புகழ் Seth MacFarlane இன் படம். இதுவெல்லாம் படமா என நீங்கள் கேட்பது புரிகிறது. செய்யும் வேலை காரணமாக மன அழுத்தத்தைக் குறைக்க நகைச்சுவை மற்றும் animation படங்களையே அதிகமாகப் பார்ப்பதுண்டு.

 

 

2. பிடித்த பாடல்கள் எவை?

 

Beatles இன் Let it Be தான் பலவருடங்களாகப் பிடித்திருக்கிறது. மோட்டார் சைக்கிளில் தான் வேலைக்குப் போவதால் எனது யமஹா எஞ்சினின் இசை மட்டுமே கேட்பதுண்டு. அதிதூர பயணங்களில் சில இளையராஜா பாட்டுக்கள்.

 

3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது?

 

 பல documentaries, Top Gear, Animation Series (eg Family Guy) எனது RC விளையாட்டு விமானப் பறப்பு, Lego விளையாடுவது (எனது மனைவியின் இந்தவருட நத்தார்ப் பரிசும் Lego தான்!) 

 

4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா?

 

எனது CPA இல் கடினமான Module ஒன்றை வெற்றிகரமாகப் போட்டது. 

 

5. மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா?

 

வேலை மாற்றங்கள், அண்ணாவின் மகன் பிறந்தது

 

 

6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது?

 

மனிசியுடன் அதிகமான நேரத்தை செலவிடுவது

 

 

7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்?

 

The World According to Clarkson - எனக்குப் பிடித்த Top Gear புகழ் Jeremy Clarkson இன் புத்தகம். சீரியசானது அல்ல, சும்மா நகைச்சுவையானது. மற்றும் Readers Digest

 

8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு?

 

இலங்கை அரசியலில் வந்த திடீர் மாற்றம், மத்திய கிழக்கு தீவிரவாதிகளின் அடாவடித்தனம்.

 

9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது?

 

தமிழருக்கு அரசியல் செய்யத் தெரியாது, எனவே மாற்றம் இல்லை.

 

10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்?

 

தமிழருக்கு அரசியல் செய்யத் தெரியாது, எனவே மாற்றம் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

1)2014 பிடித்த திரைப்படங்கள் கோலிசோடா,ஜீவா,நெடுஞ்சாலை,சதுரங்க வேட்டை,காவியத் தலைவன்

2)2014 பிடித்த பாடல்கள் செல்பி புள்ள,ஒவ்வொன்றாய் திருடுகிறாய்[ஜீவா],ஏ மிஸ்டர் மைனர் என்னை பார்க்கிறாய்[காவியத் தலைவன்]...இன்னும் நிறைய பாடல்கள் இருக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை.வந்தால் இடையில் வந்து எழுதுகிறேன்.

3)பார்த்து ரசித்தது எனது நண்பியின் பெண் குழந்தையின் வளர்ச்சி

4)செய்ய திட்டமிட்டு செய்து முடித்த விடயம் என்டால் ஓரளவுக்கு சுயநலமாய் இருக்க பழகினது.

5)மிகவும் சந்தோசம் தந்த விடயம் எதுவுமில்லை

6)புதிதாய் வேலை ஒன்று எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.சரியான திட்டமிடலும்,முயற்சியும் இல்லாததால் சரி வரவில்லை.

7)உண்மையை சொல்ல வேண்டும் என்டால் ஒரு சிறந்த புத்தகம் கூட வாசித்ததாய் ஞாபகமில்லை/வாசிக்கவில்லை. வர,வர எனது வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே போகின்றது.நேரம் இல்லை என்பதை விட சோம்பல் தான் முக்கிய காரணம்.

8)தாயகத்து தமிழ் அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் விதம்,புலம் பெயர் வியாபாரிகள் தலைவரின் பிறந்த நாளை விழாவாக கொண்டாடியது போன்றன மனதை பாதித்தது.இன்னும் கொஞ்ச காலத்தில் அவர்கள் இறந்த நாளையும் விழாவாக கொண்டாடுவார்கள்.

9)தாயக அரசியலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழரை அடிமைகளாகத் தான் வைத்திருக்க போகிறார்கள்.அபிவிருத்தி என்று பார்க்கும் போது பரவாயில்லை.

10)மகிந்தா ஆட்சிக்கு வந்து இன்னும் 5,6 ஆட்சியில் இருந்தால் சிங்கள மக்களே அவருக்கு எதிராக புரட்சி செய்து,உள் நாட்டு கலகங்கள் ஏற்பட்டால் தமிழருக்கு சாதகமாய் இருக்கும் என்பது எனது எதிர் பார்ப்பு.மற்றப்படி தமிழீழ அரசியல் என்பது மிகவும் கேவலமான நிலைக்கு போய்க் கொண்டு இருக்கின்றது என்பது எனது கருத்து.

திரியை ஆரம்பித்த நிழலிக்கு நன்றிகள்

Edited by ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.