Jump to content

நானும் ஒரு அகதி தான்! (பகுதி ஒன்றும், பகுதி இரண்டும்!)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

5202616980_5c4567dd93.jpg

அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது!

விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்!

அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்!

ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள்  சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தவன், மூக்கிலிருந்து வெளியே சிந்தத் தயாராகவிருந்த நீர்த்திவலைகள் மூக்கின் நுனியிலேயே உறைந்து போவதை உணர்ந்தான் ! ஒருவாறு கடைக்குள் நுழைந்தவனின் காதில்...ஒரு தமிழ் அக்கா,,அங்கே வேலை செய்யும் புதிதாக வந்த தமிழ் இளைஞர்களை, அதிகாரத் தொனியில் அதட்டிக் கொண்டிருந்தது கேட்டது! அந்த இளைஞர்கள், மருத்துவ...பொறியியல்...மற்றும் கணனியியல் மாணவர்களாகவோ மட்டுமன்றிப் பட்டதாரிகளாகக் கூட இருக்கக் கூடும்! ஏதோ சில காரணங்களுக்காக...அக்காவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க…சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால்….ஒரு தமிழன் இன்னொரு தமிழனை மிதிப்பதில்..ஒரு தனி மகிழ்ச்சி அடைவான் என்பது எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டே ஓமப் பக்கைற்றைத் தேடிக் கொண்டிருந்தவனை, பின்னாலிருந்து 'தம்பி என்னைத் தெரியுதோ' என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது!

அந்தக் குரலுக்குரியவரை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை  எனினும் நீங்கள்..என்று அவன் இழுக்கவும்.. தம்பி.. என்ன ‘கறையான் பிட்டியையும்' மறந்து போட்டியோ எண்டதும்,,,,சோமண்ணையா நீங்கள்,,என்று கேட்டான்!

என்ன மாதிரி,,,இங்க... என்று கேட்க...தம்பி..அதைப்பற்றி ஒரு மகாபாரதமே எழுதலாம் என்று கூறியவர்..தம்பி..அந்தத் தங்கச்சி எங்கட பக்கமே பார்த்துக்  கொண்டிருக்குது போல கிடக்குது! பெரிய வில்லங்கமாய்ப் போயிரும்! உன்ர போன் நம்பரைத் தந்திட்டுப் போ...நான் வேலை முடிய உனக்கு அடிக்கிறன் என்று சொல்லியபடியே..அவனது போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்! குடிநீரைக் குடிச்சுப் போட்டு..நல்ல நித்திரையொண்டு அடிக்கவேணும் என்று நினைத்திருந்தவன் கனவெல்லாம்...கண் முன்னே தவிடு பொடியாவதை உணர்ந்தான்! இந்த ‘அடி' என்ற வார்த்தை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது,,என்று நினைத்த படி...இண்டைக்கு சோமண்ணை வந்த பிறகு...ஒரு முறையான அடி..அடிக்கத் தடிமன் இருந்த இடம் தெரியாமல் போயிரும் என்று தனக்குத் தானே, சமாதானமும் செய்து கொண்டான்!

இரவு எட்டு மணி போல...வீட்டுக்கதவு தட்டப்படவே...யாரென்று கேட்காமலேயே சந்திரன் கதவைத் திறக்கவும்...பேபரில் சுத்திய நெப்போலியன் போத்திலுடன்...சோமண்ணை நின்றிருந்தார்!

தம்பி...வர வர உலகம் சின்னதாகிக் கொண்டே வருகின்றது என்று கூறியவர், நீ வந்து கனகாலமெல்லே ...வலு பெரிய வீட்டில இருப்பாய் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..என்று சொல்லி இழுத்தார்! தமிழனுக்கே எனச் சில தனிக்குணங்கள் உண்டு என்பதும்...அதை இலகுவில் மாற்றமுடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்ததால்...அதை விடுங்கண்ண,, உங்கட கதையைச சொல்லுங்கோ..என்று அவரிடம் சொன்னான்!

தம்பி அதையேன் கேக்கிறாய்….நான் உலகத்திலை கேள்விப்படாத தேசங்களுக்கிள்ளாலை எல்லாம் பூந்து விளையாடியிருக்கிறேன்! சின்ன வயதிலை ஒரு சாத்திரி என்ர சாதகத்தைப் பாத்துப்போட்டு...தம்பி உனக்குப்  பிற தேசம் போற பலனிருக்கெண்டு சொல்ல...அவருக்குப் பிடரியில ஒரு தட்டுத் தட்டிப் போட்டு...இனிமேல் ஒருத்தருக்கும் சாத்திரம் சொல்லக்கூடாது என்றும் சொல்லிப் போட்டு வந்தனான்!

இப்ப பார்...பிரான்சுக்கில்லாள பூந்து லண்டனுக்கிள்ளை நிக்கிறன்!

அண்ணை...உங்கட பக்கம் அவ்வளவு பிரச்சனை இருக்கேல்லைத்தானே என்று கேட்கவும்...இஞ்ச பார்...நான் சொல்லுறதைக் கவனமாய்க் கேள்!

கம்பசுக்கு முன்னால ஒரு பஸ்ஸில வந்த நம்ம பெடியனை..பஸ்ஸை விட்டு இறக்கி ஆமிக்காரன் சுட்டவனெல்லே! நீயும் அப்ப அங்க தானே இருந்தனி? அந்த நேரம் நானும்...யோகர் கடைக்கு முன்னால நிண்டு சிகரட் பத்திக்கொண்டு நிண்டனான்! வெடிச்சத்தம் கேட்டவுடனேயே..யோகற்றை பின்வளவுகுள்ள ஒளிச்சுப்போட்டன்!  கொஞ்ச நேரத்தால வெளியால வரவும் ஆமிக்காரர் பஸ்ஸுக்குள்ள இருந்ததைக் கவனிக்காமல் வெளியால வந்திட்டன்! அப்ப ஒருத்தர் என்னைப்பிடிச்சு..என்ன நடந்தது எண்டு விவரமாய் விசாரிக்க...நானும் மளமளவெண்டு...நான் கண்டதைச் சொல்ல வெளிக்கிட...இதைக்கண்ட ஒரு ஆமிக்காரன் துவக்கிக் கொண்டு வந்து என்ற நெஞ்சில வைச்சிட்டான்! என்னையறியாமலே கையைத் தூக்கிட்டன்! எனக்குத் தெரிஞ்ச சிங்களத்தில ஏதொ சொல்ல..அவனும் ...யன்ன..யன்ன..எண்டு என்னைக் கலைச்சு விட்டிட்டான்! அண்டைக்குத் தான் முருகனில எனக்கு முதன் முதலா நம்பிக்கை வந்திட்டுது! அடுத்த நாள்,வழக்கம் போல யோகர் கடைக்கு வந்தால்...எல்லாரும் என்னைப் பார்த்த படி..! நானும் பின்னால திரும்பிப் பாத்தன்...ஒருத்தரையும் காணேல்ல! சரி...இண்டைக்கு என்ன இழவோ தெரியாது எண்டு நினைத்தபடியே..ஒரு சிகரட்டைப் பத்த வைச்ச படி நடந்தன்! கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ரபடம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..!   

அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது!

ஐயா பெரிய படிப்புப் படிச்சுப் பட்டம் வாங்கிக்கொண்டு வந்திட்டார்! அது தான் பேப்பரில படம் வந்திருக்குது!

வழக்கமாய்..அவள் பேசுற போது...வலக்காதால வாங்கி இடக்காதால விட்டிருவன்!

நான் கணக்கிலேயே எடுக்கிறதே இல்லை! ஆனால் அண்டைக்குப் பேசின பேச்சு...என்ர வேட்டியைக் கழட்டித் தலையில கட்டின மாதிரி இருந்திச்சுது!

அது சன்னதமாடினால்...சன்னதம் முடியிற நேரம் வரைக்கும் நானே வாயே திறக்கிறது கிடையாது!

சன்னதம் முடிஞ்சுது எண்டதை அறிவிக்கக் கடைசியாய் ஒரு வசனம் வரும்!

'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?'

அண்டையான் பேச்சு...என்னை நல்லாச் சுட்டுப்போட்டுது! 

(இன்னும் கொஞ்சமிருக்கு! )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருந்தாலும் சோமண்ணைக்கு அர்ச்சனை கொஞ்சம் கம்மிதான்.... தொடருங்கள்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கை லண்டனா சிட்னியா?
சோமண்ணையைப் பார்த்தா லண்டன் மாதிரி தெரியுது!

Posted
7 hours ago, புங்கையூரன் said:

'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?'

Bilderesultat for vadivelu

தொடருங்கள் புங்கை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, புங்கையூரன் said:

கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ற படம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..!   

அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது!

சோமண்ணை... தன்ரை,  மனிசியின்ரை  குணம் தெரிஞ்சும்....
அந்த வீரகேசரி பேப்பரை, ஏன் மனிசியிட் டை  காட்டினவர் ?
நல்லா வேணும்.... வேண்டிக் கட்டட்டும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் புங்கையூரன்
மேலுள்ள படம் அல்பேர்ட்டன் ஈலிங் ரோடு  இல் இருக்கும் சாக்கோணி உணவுக்கடை, மரக்கறி கடையும் உண்டு . குஜராத்தியின் கடை,  எங்கடை ஆக்கள் பலர் அதில் வேலை செய்திருக்கிறார்கள். வந்த காலத்தில் சம்பளம்  £1.50 ஒரு மணித்தியாலத்திற்கு என்று கேள்விப் பட்டுள்ளேன். புழிஞ்சு எடுத்து போட்டுத்தான் விடுவார்கள். நாரியை பிடித்திக் கொண்டு ஒரு நொண்டலுடன் நடந்தால் கேப்பார்கள், " தம்பி நீயும் பட்டேலிடம் வேலை செய்யிறியோ எண்டு". சாக்கோணி உணவுக் கடையும், மரக்கறி கடையும் தமிழர்களுக்கு சிலை கட்டிட வேண்டும், உழைச்சுக் கொடுத்ததுக்கு.

சோமண்ணை படப்போகும் அவலம் இப்பவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, suvy said:

இருந்தாலும் சோமண்ணைக்கு அர்ச்சனை கொஞ்சம் கம்மிதான்.... தொடருங்கள்....!  tw_blush:

ஆரம்பத்தில இருந்த பழக்கப் படுத்துக் கொண்டு வந்தால்....அர்ச்சனை பெரிசாகத் தெரியாது!

பழகினாலும்....சில வேளைகளில் மூன்றாம் திருவிழா அர்ச்சனைக்கும், தேர்த் திருவிழா அர்ச்சனைக்கும் வித்தியாசம் இருக்கும் தானே சுவியர்!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..!

17 hours ago, ஈழப்பிரியன் said:

புங்கை லண்டனா சிட்னியா?
சோமண்ணையைப் பார்த்தா லண்டன் மாதிரி தெரியுது!

மூக்குக்குள்ளை உறைஞ்சு போற அளவுக்கு...சிட்னியில ஒரு நாளும் குளிர் வராது!

ஊரில மாசி மாதத்துக் குளிர் மாதிரி...விடியக் காலமையில போர்த்துக் கொண்டு படுத்திருக்க...அந்த மாதிரி இருக்கும்~

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, ஈழப்பிரியன்!

நீங்கள் வந்த நேரம் அடிச்ச வெயிலுக்குப்...புங்குடுதீவே ...பிச்சை வாங்க வேண்டும்!tw_blush:

16 hours ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for vadivelu

தொடருங்கள் புங்கை 

நன்றி...ஜீவன்!

இதுக்குத்தான் நம் முன்னோர்கள்...பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று ஒழுங்கு பட்த்தியுல்லார்கள்!

கிருகஸ்தம்...ஒருவனை....நிச்சயம்....முனிவனாக்கும்!

நான் சொல்லுறதை நம்பாவிட்டால்...சுவையரை அல்லது குமாரசாமி அண்ணரை...ஒரு முறை கேட்டுப்பார்க்கவும்,!:cool:

பட்டால் தானே தெரிகின்றது...தொட்டால் சுடுவது நெருப்பென்று...! ( கவிஞர் கண்ணதாசன்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழைய புங்கையைக் காணவில்லை. தொடருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கே லண்டனில் நடக்கும் கதை மிச்சத்தை காணோம்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/03/2017 at 4:14 AM, தமிழ் சிறி said:

சோமண்ணை... தன்ரை,  மனிசியின்ரை  குணம் தெரிஞ்சும்....
அந்த வீரகேசரி பேப்பரை, ஏன் மனிசியிட் டை  காட்டினவர் ?
நல்லா வேணும்.... வேண்டிக் கட்டட்டும். :grin:

சோமண்ணை காட்டின காரணம் வேற...!

அதை விளங்கிக்கொள்ளுற அளவுக்கு....மனுசி மார் எல்லோருக்கும் வாய்க்கிறது இல்லை!

மனுசிமார் பேசுறதை எல்லாம் பெரிசு படுத்தக் கூடாது!

அவர்களுக்கு ஒரு நாளும் 'அதிக இரத்த அழுத்தம்' போன்ற நோய்கள் ஒரு நாளும் கிட்ட வராது!

நன்றி...தமிழ்சிறி  ! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் ஒரு அகதி தான்....( இறுதிப்பகுதி)

“உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்…?”

என்ற கேள்விக்குப் பின்னால்...ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பது சோமண்ணைக்கு நன்றாகத்  தெரியும்! எவருடைய கலியாணன வீடு அல்லது சாமத்திய வீடு அல்லது கோவில் திருவிழா போன்றவற்றுக்குப் போக வெளிக்கிடும் போது இந்த அர்ச்சனையும் மறக்காமல் நடக்கும்! அதாவது தன்னிடம் போதிய நகைகள் இல்லை என்பதைத் தான் சோமண்ணனின் மனைவி அடிக்கடி நக்கலாக...அவனது இயலாமையைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்!

சரி...சோமண்ணை... அண்ணியையும், பிள்ளையளையும் கூப்பிடேல்லையே என்று சந்திரன் கேட்கவும்….ஏன் நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கேல்லியே என்ற பதிலும் சுடச் சுட வந்தது!

தொடர்ந்த உரையாடலில்...தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்...தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

போதாக்குறைக்கு அங்க போடுற பாட்டுக்களே..எங்கட பக்திப் பாட்டுக்கள் தான்! சீர்காழி தொடக்கம் ...பெங்களூர் ரமணியம்மாள் வரைக்கும் பாடுவினம்! ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' எண்ட பாட்டுக்குக் காப்பிலியள் ஆடிற ஆட்டத்தை நீ பாக்க வேணுமே…..! நிச்சயமாய் ஆயிரம் கண் வேண்டும்!

சரியண்ணை...இப்ப என்ன பிளான்?

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

சரி..சந்திரன்...நான் சில வேளைகளில்..அந்த மரக்கறிக் கடையிலும் ‘காசுவலாய்' வேலை செய்யிறனான்!! உன்ர வீட்டில ஒரு அறையை எனக்குத் தாவன்{ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாடகையைத் தந்திடுவன்! எனக்கும் இஞ்ச வேற ஒருத்தரும் இல்லைக்கண்டியோ?

சரி...அண்ணை! இப்ப ஒரு அறை இருக்குது..ஆனால் கொஞ்சம் சின்னன், பரவாயில்லையா?

அட...எனக்கென்னத்துக்குப் பெரிய அறையை? என்று கேட்டவர்,உரத்த குரலில் முருகா என்றார்! தொடர்ந்து சாப்பாட்டையும் நானும் நீயும் சேர்ந்து சமைப்பம் எண்டு சொல்ல...சந்திரனால் மறுத்துச் சொல்ல முடியவில்லை!

ஒரு வருஷம் ஒரு பிரச்சனையுமில்லாமல் தான் போனது!

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்லச் சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

அதன் பின்னர்...சோமண்ணையும் அவனை அழைக்கவில்லை ! அவனும் சோமண்ணையை அழைப்பதற்கு அவனிடம் நம்பரும் இல்லை!

கடனட்டைக் கடிதங்கள் மட்டும் ...முன்பு ,மாதம்...மாதம் வந்தவை...இப்போது கிழமைக்குக் கிழமை என்று வரத் தொடங்கின! அவற்றுள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடிதம் கூடக் கிடந்தது கண்டு...சோமண்ணை மேல் அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது!

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி...மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

நீண்ட நாட்களின் பின்னர் சோமண்ணையிடமிருந்து...ஒரு கடிதம் வந்திருந்தது!

தம்பி..எனக்கு அங்க திரும்ப வாற உத்தேசம் இப்ப இல்லை!

இப்ப இந்தோனேசியாவில நிக்கிறன்!

இப்ப என்ர இலக்கு...அவுஸ்திரேலியா  அல்லது நியூசீலாந்து தான்!

(சுபம்…)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கை சோமண்ணை அவுஸ் வரும் போது மாட்டேன் என்று சொல்லாமல் உங்க வீட்டில ஒரு அறை கொடுக்க வேணும்.

நிஜங்களை மனதில் வைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோமியோ இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடயங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எப்படியும் வாழலாம் என்பதும் அச்சம் அற்றுப்போன தன்மையும் மனிதவாழ்க்கையை எங்கெங்கோ எல்லாம் இழுத்துச் செல்கிறது. அதர்மங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை... தர்மத்தை மட்டுமே துன்பங்கள் சூழ்கின்றன. அநுபவப்பாடங்கள் அசராத துணிவை கொடுக்கின்றன. வல்லவன் வாழ்வான் என்பதே புதுமொழி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படித் துணிச்சலுடன் செய்தாலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாட்டுப் பட்டு விடுவார்கள்....! இது கதையான போதிலும் அங்கங்கு நடப்பவையே.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி வரும் காலங்களில் கொஞ்சம் கடினம் ...........
இப்போதும் பிடிக்க வேண்டும் என்றால் பிடிக்க முடியும் 
அவர்களுக்கு அதில் இஸ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் 

க்ரெடிட் கார்ட் கொம்பனிகள் ....
செலவு என்று ஒரு வருடத்திற்கு இத்தனை மில்லியன் என்று 
ஒவ்வரு வருட தொடக்கத்திலும் ஒரு பட்டியல் போடுவார்கள் 
அவர்கள் பட்ஜட்டுக்குள் சோமண்ணை ஆட்கள் நிற்பதால் .... அவர்களுக்கும் சோமண்ணை 
போன்றவர்களுக்கும்  பிரச்சனை இல்லை.

நீதி நேர்மையோடு இருக்கிற எங்களை போன்றவர்கள் ஒருநாள் பிந்தினாலும் 
ஒரு $35 வாங்கி அதை நிறுவி கொள்வார்கள். 
எங்களுக்கும் அவர்களுக்கும்தான் பிரச்சனை.
காரணம் 
லாபம் ஈட்டிக்கொடுக்கும் பட்ஜெட்டை நிரப்ப வேண்டிய ஒரு 
தார்மீக கடமை எமக்கு உண்டு . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, புங்கையூரன் said:

நானும் ஒரு அகதி தான்....( இறுதிப்பகுதி)

“உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்…?”

என்ற கேள்விக்குப் பின்னால்...ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பது சோமண்ணைக்கு நன்றாகத்  தெரியும்! எவருடைய கலியாணன வீடு அல்லது சாமத்திய வீடு அல்லது கோவில் திருவிழா போன்றவற்றுக்குப் போக வெளிக்கிடும் போது இந்த அர்ச்சனையும் மறக்காமல் நடக்கும்! அதாவது தன்னிடம் போதிய நகைகள் இல்லை என்பதைத் தான் சோமண்ணனின் மனைவி அடிக்கடி நக்கலாக...அவனது இயலாமையைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்!

சரி...சோமண்ணை... அண்ணியையும், பிள்ளையளையும் கூப்பிடேல்லையே என்று சந்திரன் கேட்கவும்….ஏன் நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கேல்லியே என்ற பதிலும் சுடச் சுட வந்தது!

தொடர்ந்த உரையாடலில்...தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்...தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

போதாக்குறைக்கு அங்க போடுற பாட்டுக்களே..எங்கட பக்திப் பாட்டுக்கள் தான்! சீர்காழி தொடக்கம் ...பெங்களூர் ரமணியம்மாள் வரைக்கும் பாடுவினம்! ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' எண்ட பாட்டுக்குக் காப்பிலியள் ஆடிற ஆட்டத்தை நீ பாக்க வேணுமே…..! நிச்சயமாய் ஆயிரம் கண் வேண்டும்!

சரியண்ணை...இப்ப என்ன பிளான்?

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

சரி..சந்திரன்...நான் சில வேளைகளில்..அந்த மரக்கறிக் கடையிலும் ‘காசுவலாய்' வேலை செய்யிறனான்!! உன்ர வீட்டில ஒரு அறையை எனக்குத் தாவன்{ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாடகையைத் தந்திடுவன்! எனக்கும் இஞ்ச வேற ஒருத்தரும் இல்லைக்கண்டியோ?

சரி...அண்ணை! இப்ப ஒரு அறை இருக்குது..ஆனால் கொஞ்சம் சின்னன், பரவாயில்லையா?

அட...எனக்கென்னத்துக்குப் பெரிய அறையை? என்று கேட்டவர்,உரத்த குரலில் முருகா என்றார்! தொடர்ந்து சாப்பாட்டையும் நானும் நீயும் சேர்ந்து சமைப்பம் எண்டு சொல்ல...சந்திரனால் மறுத்துச் சொல்ல முடியவில்லை!

ஒரு வருஷம் ஒரு பிரச்சனையுமில்லாமல் தான் போனது!

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்லச் சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

அதன் பின்னர்...சோமண்ணையும் அவனை அழைக்கவில்லை ! அவனும் சோமண்ணையை அழைப்பதற்கு அவனிடம் நம்பரும் இல்லை!

கடனட்டைக் கடிதங்கள் மட்டும் ...முன்பு ,மாதம்...மாதம் வந்தவை...இப்போது கிழமைக்குக் கிழமை என்று வரத் தொடங்கின! அவற்றுள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடிதம் கூடக் கிடந்தது கண்டு...சோமண்ணை மேல் அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது!

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி...மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

நீண்ட நாட்களின் பின்னர் சோமண்ணையிடமிருந்து...ஒரு கடிதம் வந்திருந்தது!

தம்பி..எனக்கு அங்க திரும்ப வாற உத்தேசம் இப்ப இல்லை!

இப்ப இந்தோனேசியாவில நிக்கிறன்!

இப்ப என்ர இலக்கு...அவுஸ்திரேலியா  அல்லது நியூசீலாந்து தான்!

(சுபம்…)

நன்றாக இருக்கு அண்ணா ஆனால் கடைசிப் பகுதியை அவசரத்தில் எழுதி முடிச்ச ஒரு பிரமை.

இப்ப சொல்லுங்கோ சோமண்ணையை நாங்கள் எப்பிடியுங்கோ உள்ளுக்க விடுறது. பிறகு மனிசன் அவுஸ் பாங்கயெல்லாம் நாஸ்த்தி பண்ணிப்போடுமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, புங்கையூரன் said:

தொடர்ந்த உரையாடலில்... தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்... தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

------

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

-------

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்ல சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

------

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி... மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

Tiger Balm Red (with Cinnamon Oil) 19g   Logo of Virakesari  

சந்திரனுக்கு... தடிமன் வரப்போகுது  என்று அறிகுறி தெரிந்திருந்தால், பேசாமல்  "ரைகர்  பாமை"    மூக்கிலை  தடவிப் போட்டு, குப்புற படுக்கிறதை விட்டுட்டு.... உந்தக் குளிருக்கை,  "ஓமப் பக்கற்" வாங்கப் போனதால்... எவ்வளவு பிரச்சினை வந்ததது என்று சோமண்ணையை கண்ட  பிறகு   புரிந்திருப்பார்.  :grin:

சோமண்ணையை நோக்கி... ஆமிக்காரன் துவக்கை நீட்டிய படம்,  வீரகேசரி பேப்பரில் வந்ததை பார்த்து, அவர் அந்தப் பேப்பரை வாங்கி.. பத்திரப் படுத்திய போதே, அவரின்  "மாஸ்டர் பிளான்" வேலை செய்யத் தொடங்கிதை... அவரின் மனிசி கூட அறிந்திருக்க மாட்டார்.  :D:

அந்த ஒரு படம்,  சோமண்ணையை..... பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, இந்தோனேசியா வரை கொண்டு போய்..
இனி  அவுஸ்திரேலியா,  நியூசீலாந்துக்கும்  கொண்டு போகப் போகுது.
சோமண்ணையின்  அவுஸ்திரேலியா  "புரோகிராம்" முடிந்தவுடன்,  ஜேர்மனிக்கு  ஆளை அனுப்பி வையுங்கோ புங்கை. ஆளைப் பார்க்க..... ஆசையாயிருக்கு.tw_smiley:

-----

புங்கையூரான்.... சிலர்  செய்யும், செயலை வெளிக்கொணர்ந்த  எழுத்துநடை அழகு.
இடையிடையே... அதில் நகைச் சுவையை தூவிய விதம், கதைக்கு  இன்னும்  சிறப்பு.
கதையை அவசர பட்டு முடித்து விடட மாதிரி... ஒரு உணர்வு.
சோமண்ணையின்... இங்கிலாந்து ஜில்மால்களையும், தமிழ்நாட்டில் அவரின் உல்லாசத்தையும் கொஞ்சம்  விரிவாக தொட்டிருக்கலாம்  என்பது, எனது அபிப்பிராயம். 
மொத்தத்தில்..... கதை அருமை புங்கையூரான்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நல்லாயிருக்கு, புங்கை! vil-cligne.gif

இதற்குத்தான் தமிழர்களை தமிழனே நம்புவதும் இல்லை..!!

எனக்குத் தெரிந்து சில நிறுவனங்களில் வேலை செய்தவர்கள், நிறுவனத்தில் சம்பளச் சான்றிதழ் வாங்கி வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்ற பின், சகட்டு மேனிக்கு லோன் போட்டு பணத்தை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு வீடோ, நிலமோ,தொழிலிலோ முதலீடு செய்துவிட்டு, மத்தியக் கிழக்கு நாடுகளிடமிருந்து காணாமல் ஓடி ஒளிந்தவர்கள் மிக அதிகம்.. இதனால் எங்கள் நிறுவனமும் வங்கிகளில் லோன் வாங்க தடை செய்யப்பட்ட பட்டியலில் இன்றும் உள்ளது..

சொந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம், இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து, தொடர்ந்து சென்று அவர்களை பிடித்து பணத்தை வசூலிக்கும் செலவு மிக அதிகமாக இருக்கும், இரு நாட்டு சட்ட சிக்கல்களும், தாமதங்களும் இவர்களுக்கு மிக அனுகூலமாக இருப்பதால், இப்படி லோன் கொடுக்கும் வங்கிகளை ஏமாற்றுகிறார்கள்..

சிலரின் கள்ளத்தனத்தால் மற்றோருக்கு அளெசகரியம் அதிகம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிறைவுப்பகுதி நல்லாய் இருக்குப் புங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையிலேயே பலரது அனுபவங்களை கதையாகப் (....!) பதிவுசெய்து செல்கிறது. பாராட்டுகள். 
லண்டனில், எனது நண்பரொருவர் வாடகைக்கெடுத்த வீட்டிலே முன்பிருந்தவர் செய்தஏமாற்றுச் செயல்கரணியமாக அவர் ஒரு கடனைப்பெறமுடியாத நிலையிருந்ததாகக் கூறியிருந்தார். எத்தனை பேரது தரிசனமோ சோமண்ணை.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/19/2017 at 8:32 AM, Ahasthiyan said:

தொடருங்கள் புங்கையூரன்
மேலுள்ள படம் அல்பேர்ட்டன் ஈலிங் ரோடு  இல் இருக்கும் சாக்கோணி உணவுக்கடை, மரக்கறி கடையும் உண்டு . குஜராத்தியின் கடை,  எங்கடை ஆக்கள் பலர் அதில் வேலை செய்திருக்கிறார்கள். வந்த காலத்தில் சம்பளம்  £1.50 ஒரு மணித்தியாலத்திற்கு என்று கேள்விப் பட்டுள்ளேன். புழிஞ்சு எடுத்து போட்டுத்தான் விடுவார்கள். நாரியை பிடித்திக் கொண்டு ஒரு நொண்டலுடன் நடந்தால் கேப்பார்கள், " தம்பி நீயும் பட்டேலிடம் வேலை செய்யிறியோ எண்டு". சாக்கோணி உணவுக் கடையும், மரக்கறி கடையும் தமிழர்களுக்கு சிலை கட்டிட வேண்டும், உழைச்சுக் கொடுத்ததுக்கு.

சோமண்ணை படப்போகும் அவலம் இப்பவே தெரிகிறது.

வணக்கம், அகஸ்தியன்..!

நான் அங்கு வாழ்ந்த காலத்தில்..சக்கோனி என்று மட்டும் தான் பெயர் இருந்ததாக நினைவு! இப்போது படத்தைத் தேடினால்...சக்கோனிஸ் என்று வருகின்றது! அந்தக்காலத்தில் அவர்கள் கொடுத்த சம்பளம்..மணிக்கு...இரண்டு பவுண்கள்!  ** அக்கா தான் அந்த நேரம்...கடைக்குப் பொறுப்பாக இருந்தா எண்டு நினைக்கிறேன்! 

நான் ஒரு தரம் வெங்காய மூடை வாங்கிய போது...ஒரு தமிழ் முதியவரிடம்..இதைத் தூக்கிக்கொண்டு போய்..ஐயாவின்ர கார் டிக்கியியிலை வையும் என்று அவ கூறவும்...நானும் பரவாயில்லை ..நானே தூக்கிக் கொண்டு போகிறேன் என்று சொல்லிப் பார்த்தும், நீங்கள் தான் இவயைளைப் பழுதாக்கிறீங்கள் எண்டு என்னோடையும் ஏறி விழுந்தா அந்த அக்கா!

இப்பிடித்தான் நம்ம சனம் அந்த நாளையில வேலை செய்தது..!

இப்ப..எல்லாம் மாறியிருக்கும் எண்டு நினைக்கிறேன்!

வரவுக்கும்...கருத்துக்கும் மிக்க நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோமரின்ட படத்தை அனுப்பிவிடுங்கோ அவுஸ் இமிகிரேசன் காரங்களிடம் மாட்டிவிடுவம்...:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழமையாக நடக்கும் ஒர் விடையம் தான் புங்கை. சுவாரசியமாக எழுதிள்ளீர்கள். சோமன்ணை இங்கிலாந்து குளிராகவும் செலவு கூடுதலான நாடு என்றபடியால் அவுசுக்கு வந்திருக்கலாம். அவுஸ் இலங்கையை ஒத்த காலநிலை.

மேலும் புங்கை நீங்கள் ஒர் தமிழாசிரியரா? என்னுடையா வாழ்விலும் இப்படி பல அனுபவபவங்கள் உண்டு புங்கை அனால் 
அவற்றை கட்டுக்கோப்பாக, சுவரசியமாக , உவமான உவமேயங்களுடன் எழுத வருகின்றது இல்லை. நேரம் இருந்தால் ஒரு திரிதிறந்து எப்படி எழுதுவது என்று சில டிப்ஸ் தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கை! கலக்கீட்டியள்.tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, colomban said:

வழமையாக நடக்கும் ஒர் விடையம் தான் புங்கை. சுவாரசியமாக எழுதிள்ளீர்கள். சோமன்ணை இங்கிலாந்து குளிராகவும் செலவு கூடுதலான நாடு என்றபடியால் அவுசுக்கு வந்திருக்கலாம். அவுஸ் இலங்கையை ஒத்த காலநிலை.

மேலும் புங்கை நீங்கள் ஒர் தமிழாசிரியரா? என்னுடையா வாழ்விலும் இப்படி பல அனுபவபவங்கள் உண்டு புங்கை அனால் 
அவற்றை கட்டுக்கோப்பாக, சுவரசியமாக , உவமான உவமேயங்களுடன் எழுத வருகின்றது இல்லை. நேரம் இருந்தால் ஒரு திரிதிறந்து எப்படி எழுதுவது என்று சில டிப்ஸ் தருவீர்களா?

வணக்கம்...கொழும்பான்!

உங்கள் கேள்வி...உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்திய படியால்..அதிகம் ஆறிப் போக விடாமல், உடனே பதிலளிக்க வேண்டிய அவசரம் உள்ளது!

உங்கள் பதிவுகளிலிருந்து..உங்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு எடை போட்டு வைத்திருந்தேன்! எனது வாழ்க்கையும் கிட்டத் தட்ட உங்களதைப் போன்றது தான்!

தமிழ் படிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை! சாதாரண தரத்துடன்..தமிழுக்கு விடை கொடுக்க வேண்டி ஏற்பட்டது! நாங்கள் படித்த கல்லூரியில்...விஞ்ஞானப் பிரிவுக்குப் போகாமல்...கலைப்பிரிவுக்குச் செல்வது ஒரு 'சாதிக் குறைவு' மாதிரிப் பார்க்கப்பட்டது! அதே போலவே..கணிதப் பிரிவுக்குப் போகாமல்..உயிரியல் பிரிவுக்குச் செல்வதும் அவ்வாறே பார்க்கப்பட்டது! நீரோட்டத்துக்கு எதிராகப் பயணிக்கும் வலுவோ..அல்லது சுயமாக முடிவெடுக்கும் துணிவோ எம்மிடம் அப்போது இருக்கவில்லை! எனினும்...பிற்காலத்தில்..இதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டதும் உண்டு! பின்னர்..பல்கலைப் படிப்பிலிருந்து .எல்லாமே ஆங்கில  மொழியில் தான்! ஒன்று இழக்கப்படும் போது தான்...அதை அடைய வேண்டும் என்ற ஆவல் அதிகரிப்பதுண்டு!

எனவே...சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம்..திருக்குறள்..கல்கி..ஆனந்த விகடன்..கல்கண்டு..போன்றவற்றையும் மற்றும் எஸ்.பொ. செங்கை ஆழியான், ஆகியோரது நூல்களையும்..மற்றும் 'நிலக்கிழி' ( எழுதியவர் நினைவில் இல்லை), டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை, சிரித்திரன் போன்றவை..தமிழை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! தற்செயலாக ஒரு கவியரங்கில். பங்கு பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டபோது தயங்கிய படியே முதலின் பங்கேற்றேன்! பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் தலைமை தாங்கியதாக நினைவுண்டு!  கவியரங்கு முடிந்ததும்..பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் மேடையிலேயே புகழ்ந்து தள்ளிய போது..ஒரு மூலையிலிருந்து நாணத்தால் நனைத்து போனவர்களின் நானும் ஒருவன்! 

அதன் பின்னர்...உங்களைப் போலவே...ஊர் உலகமெல்லாம் திரிந்த படி...இருக்கிறேன்! சில வேளைகளில்..எழுதவேண்டும் என்ற உந்துதல் வரும் போதெல்லாம்...நேரமின்மை தடுத்துவிடும்! ஆனால் யாழில் எழுதத் தொடங்கிய பினனர்..எழுதும் ஆர்வம் தானாக ஏற்பட்டது! போற்றினாலும்...தூற்றினாலும்...ஒரு உள் வீடு என்ற உணர்வை யாழ் எப்போதுமே எனக்குத் தந்தது! மேலோட்டமாகப் பார்க்கும் போது...யாழின் வாசகர்கள்...இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் போலத் தோன்றினாலும்..அவர்களது தமிழின் மீதான ஆர்வம் மிகவும் ஆழமானது! அந்த ஆர்வமே..அவர்களையும்..எம்மையும்...ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றது!

எது வேணுமானாலும் எழுதுங்கள்! எனக்குத் தெரிந்த அளவில் ஏதாவது...இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கலாம் என நான் கருதினால்...உங்களுக்குத் தனிமடலில் தெரிவிப்பேன்!

மீண்டும் கூறுகின்றேன்! முதலிள் எழுதுங்கள்!

யாழ் எமது வீடு மாதிரி..! 

யாழின் பிறந்த தினத்தை...உங்கள் முதல் அனுபவப் பகிர்வுடன் ..கல கலப்பாகக் கொண்டாடுவோம்!

On 20/03/2017 at 4:42 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழைய புங்கையைக் காணவில்லை. தொடருங்கள் 

எழுத்துக்கள்..பொதுவாக...எழுதும் நேரத்தில்...என்ன மன நிலை இருக்குமோ...அதையே பிரதி பலிக்கும் என்று நினைக்கிறேன், சுமே!

அதே போல....வாசகியின் அல்லது வாசகனின் எதிர்ப்பார்ப்பைப் பொறுத்தே...அவர்களது கருத்துக்களும் மாறுபடும்!

காலம் எங்களைப் புடம் போடுகின்றது!

அதனால்...பழைய புங்கையைத் தேடினால்...ஏமாற்றம் தான் மிஞ்சும்!:rolleyes:

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி..சுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.