Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 20ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Recommended Posts

பதியப்பட்டது

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

எதிர்வரும் 30.03.2018 அன்று யாழ் இணையம் தனது 20ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 20 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 20ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 20 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். களத்துக்கு.... 20 வயசு.:love:
 நம்ப முடியாத, வேகமான வளர்ச்சி.

எனக்கும்.... எழு,த வேண்டும் போல்....  உள்ளது.
இரண்டு மாத, இடைவெளி உள்ளதால்... தலைப்பிற்கு,  "பஞ்சம்"   இருக்காது.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்துக்கு.... 20 வயசு.:love:
 நம்ப முடியாத, வேகமான வளர்ச்சி.

எனக்கும்.... எழு,த வேண்டும் போல்....  உள்ளது.
இரண்டு மாத, இடைவெளி உள்ளதால்... தலைப்பிற்கு,  "பஞ்சம்"   இருக்காது.:)

என்ன கசமுசா எழுதினாலும் நாங்க வாசிப்பம் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வருடம் வேகமாக ஓடிவிட்டது!

இந்தமுறை சொந்தமாக எழுதமுடியுமா தெரியவில்லை. ஆனால் வாசிக்க ரெடி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் முயற்சித்து பார்க்கத்தான் இருக்கு.....!

குறைந்தபட்சம்  கவிதையாவது கொட்டிட வேண்டும்....!  tw_blush:

எங்கு கொட்டுவது ப்ளீஸ்.....!  tw_blush:

Posted

வணக்கம்,

யாழ் களம் அகவை 20 சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

https://www.yarl.com/forum3/forum/205-யாழ்-20-அகவை-சுய-ஆக்கங்கள்/

கள உறுப்பினர்கள் சுய ஆக்கங்களை இணைத்து அகவை 20 ஐ சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

xzsGpjOs3odYPX_sx8hiaBM25jAMZs_6jXqqzhGg

இம்முறை நான் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துவிட்டேனே....

Posted

சிறப்புப் பகுதியில் யாழ் கள உறவுகளால் இதுவரை பதியப்பட்ட 8 ஆக்கங்களில் 5 ஆக்கங்கள் பெண் உறுப்பினர்களால் பதியப்பட்டதில் யாழுக்கும் பெருமை.

Posted

வணக்கம்,

இதுவரை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

  • 2 weeks later...

ஆக்கங்களை இணைத்து யாழ் 20 அகவையை சிறப்பித்தோருக்கு நன்றிகள்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Posted

வணக்கம்,

யாழ் அகவை 20 இனுள் காலடி எடுத்து வைக்க இன்னும் பத்து தினங்களே உள்ள நிலையில் "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

ஆக்கங்களை இணைத்து யாழ் 20 அகவையை சிறப்பித்தோருக்கு நன்றிகள்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரி யாழின் 20 தாவது சுய ஆக்கங்களுக்குள் அடக்கலாமா?

ஆம் என்றால் அடக்கிவிடவும்.

இல்லை என்றால் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

நன்றி

Posted

வணக்கம்,

யாழ் அகவை 20 இனுள் காலடி எடுத்து வைத்துள்ள இன்றைய தினம்வரை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

ஆக்கங்களை இணைத்து யாழ் 20 அகவையை சிறப்பித்தோருக்கு நன்றிகள்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30.3.2018 at 4:37 PM, நியானி said:

வணக்கம்,

யாழ் அகவை 20 இனுள் காலடி எடுத்து வைத்துள்ள இன்றைய தினம்வரை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

ஆக்கங்களை இணைத்து யாழ் 20 அகவையை சிறப்பித்தோருக்கு நன்றிகள்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

அழகான பட்டியலை  வெளியிட்டமை, நன்றாக இருந்தாலும்,
அதன் ஆக்கங்களை... எழுதியவர்களின் பெயர்களை, அதன் அருகில் அடைப்புக் குறிக்குள் எழுதியிருந்தால், 
அவரை.... கௌரவிக்கும் முகமாக  இருந்திருக்கும்.  
இதில்  பெரும் பகுதி, ஒருவரே...  எழுதியது. (கவி அருணாசலம்)

இன்னுமொரு  விடயத்தை.... இங்கு குறிப்பிடலாம் என விரும்புகின்றேன்.
கதை கதையாம் பகுதியில்.... முற்றத்து மல்லிகை / தோட்டத்து மல்லிகை என்று  இரு பகுதிகள் இருந்தாலும்,
யாழ். கள  உறவுகளின்,  "சுய ஆக்கங்கங்கள்" எனும் பகுதியை...  அறிமுகப் படுத்தினால்.
அதன் மூலம் பலரும்... தொடர்ந்து எழுதிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

கோவில் திருவிழா மாதிரி,   குறிப்பிட்ட  காலப்  பகுதியில்... எல்லோருக்கும் வர சந்தர்ப்பம் சூழ்நிலை கிடைக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. 

அதனால்...  தான், "சுய ஆக்கங்கள்" என்ற பகுதியை ஆரம்பிக்க  வேண்டுகின்றேன்.     

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, தமிழ் சிறி said:

அதனால்...  தான், "சுய ஆக்கங்கள்" என்ற பகுதியை ஆரம்பிக்க  வேண்டுகின்றேன்.     

இதை நான் ஆமோதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

அழகான பட்டியலை  வெளியிட்டமை, நன்றாக இருந்தாலும்,
அதன் ஆக்கங்களை... எழுதியவர்களின் பெயர்களை, அதன் அருகில் அடைப்புக் குறிக்குள் எழுதியிருந்தால், 
அவரை.... கௌரவிக்கும் முகமாக  இருந்திருக்கும்.  
இதில்  பெரும் பகுதி, ஒருவரே...  எழுதியது. (கவி அருணாசலம்)

இன்னுமொரு  விடயத்தை.... இங்கு குறிப்பிடலாம் என விரும்புகின்றேன்.
கதை கதையாம் பகுதியில்.... முற்றத்து மல்லிகை / தோட்டத்து மல்லிகை என்று  இரு பகுதிகள் இருந்தாலும்,
யாழ். கள  உறவுகளின்,  "சுய ஆக்கங்கங்கள்" எனும் பகுதியை...  அறிமுகப் படுத்தினால்.
அதன் மூலம் பலரும்... தொடர்ந்து எழுதிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

கோவில் திருவிழா மாதிரி,   குறிப்பிட்ட  காலப்  பகுதியில்... எல்லோருக்கும் வர சந்தர்ப்பம் சூழ்நிலை கிடைக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. 

அதனால்...  தான், "சுய ஆக்கங்கள்" என்ற பகுதியை ஆரம்பிக்க  வேண்டுகின்றேன்.     

காய்ஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி எல்லாரும் ஒரே நேரத்திலை எழுதிப்போட்டு போட்டினம். நிர்வாகமும் தாங்ஸ் பண்ணி வரிசைக்கிரமாக்கி  வடிவாக்கி வைச்சிருக்கு....இனி ????????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

....கோவில் திருவிழா மாதிரி,   குறிப்பிட்ட  காலப்  பகுதியில்... எல்லோருக்கும் வர சந்தர்ப்பம் சூழ்நிலை கிடைக்கும் என்று எதிர் பார்க்க முடியாது.

'திருவிழா' என்று ஒன்று இருப்பதால்தான் எல்லோரும் அந்நாளில் கூடி மகிழ்வதால் அதற்கு மதிப்பும், சிறப்பும். அதை நீர்த்துப்போக செய்துவிட்டால் எல்லா நாட்களும் படு சாதாரணமாகிவிடும்.. மனமிருந்தால் எந்நேரமும் யாழுக்கு வரலாம், சந்தர்ப்பம் இல்லை என்பது ஒரு சாட்டு..! vil-bah.gif

'யாழ் அகவை திருவிழா'விற்கு முடிந்தவர்கள் கூடட்டும், அப்படி நேரமில்லாதவர்கள் அடுத்த திருவிழா வரை காத்திருப்பதே சிறந்தது. காத்திருப்பதால் சுவையும் கூடும், சிறப்பாகவும் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

முக்கிய  ஒரு பதிவின்... சில வரிகளை மட்டும்  எடுத்து,  
அதற்கு... அகராதி விளக்கம் கொடுப்பது  சரியல்ல. வன்னியன் சார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

முக்கிய  ஒரு பதிவின்... சில வரிகளை மட்டும்  எடுத்து,  
அதற்கு... அகராதி விளக்கம் கொடுப்பது  சரியல்ல. வன்னியன் சார்.

சிறி அண்ணா,

தங்கள் பதிவின் சாரம், சுய ஆக்கங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் எப்பொழுதும் பதிய வசதியிருக்க வேண்டும் என்பதுதானே?

நான் சொல்வது அப்படி செய்தால், யாழ் அகவை கொண்டாட்டத்தின் சிறப்பே போய்விடும், நீர்த்துப்போக செய்ய வேண்டாம் என்பதே..! குறிப்பாக 'அகவை நிறைவை கொண்டாடும் காலத்தில், யாழுக்கு வர இயலாமலிருப்பதற்கு சொல்லும் காரணம் சரியல்ல' என்பதை எடுத்துரைக்கவே குறியிட்டு காட்டினேன், ஐயா.

Posted

வணக்கம்,

யாழ் இணையம் 20 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 41 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

"யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 41 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

  1. அம்மாச்சி மகள்   ( வல்வை சகாறா )
  2. வானவில் ( Kavallur Kanmani )
  3. பீட்டர் மற்றும் வெர்ட்டிக்கோ - சின்ன கதை  ( நிழலி )
  4. பிச்சைக்காறனின் வெட்கம்  ( விசுகு )
  5. வேப்பங் காய்கள் - சிறுகதை  ( மெசொபொத்தேமியா சுமேரியர் )
  6. நான் சிறுத்துப் போனேன்  ( Kavi arunasalam )
  7. வெளி நாட்டுக் காசு  ( நிலாமதி )
  8. ஒரு சோடி செருப்பு  ( மெசொபொத்தேமியா சுமேரியர் )
  9. கடன் வாங்கிக் களியாட்டம்  ( Kavi arunasalam )
  10. இரவின் ஸ்பரிசம்.  (  suvy )
  11. இன்றைக்கு முழுகப்போகிறோம்  ( ஈழப்பிரியன் )
  12. சான்றிதழ்.  (  suvy )
  13. சின்ன ஐயர்  ( மெசொபொத்தேமியா சுமேரியர் )
  14. கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே  ( Kavi arunasalam )
  15. செத்துப்போன கருவாடு  ( Kavi arunasalam )
  16. மூன்று சகோதரிகள்  ( ஈழப்பிரியன் )
  17. அரோஹரா!ஆறுமுகா!  ( Kavi arunasalam )
  18. ஆண் சிங்கம் ஒன்று அழுகின்றது...!  ( புங்கையூரன் )
  19. அக(த்தீ)தி  ( தனிக்காட்டு ராஜா )
  20. பார்க்காதே பார்க்காதே  ( Kavi arunasalam )
  21. துவரங்கேட்டியும் அகப்பை காம்பும்  ( சண்டமாருதன் )
  22. துரோணரும் அருச்சுனனும்  ( பகலவன் )
  23. பிளாக்பாந்தர் (Black Panther)  ( Innumoruvan )
  24. அந்நிய தேசம்  ( மெசொபொத்தேமியா சுமேரியர் )
  25. அவள் மட்டுமா???  ( மெசொபொத்தேமியா சுமேரியர் )
  26. குடை ராட்டினம்  ( Kavallur Kanmani )
  27. விடுப்பு ராணிகள்  (  putthan )
  28. செல்பியும் செல்வியும்  ( தனிக்காட்டு ராஜா )
  29. பெண் பார்க்கப் போறேன்  ( Kavi arunasalam )
  30. செயற்கை அறிவு - AI  ( இணையவன் )
  31. ஓட் எமக்கு தேவை தானா?  ( ஈழப்பிரியன் )
  32. உங்கள், தமிழ் அறிவுக்கு.... ஒரு போட்டி  ( தமிழ் சிறி )
  33. வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள்  ( Kavi arunasalam )
  34. காரும் கதியாலும்.....!  (  suvy )
  35. நானும் யாழும்...  ( nedukkalapoovan )
  36. ஓடிய ஓட்டம் என்ன?  ( Kavi arunasalam )
  37. நானும் என் ஆஸ்மாவும்  ( இணையவன் )
  38. ஆலமரமும் அழியாத ஞாபகமும்  ( shanthy )
  39. கொலிடே போறம்  ( மெசொபொத்தேமியா சுமேரியர் )
  40. முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa  (  putthan )
  41. வாழ்க்கை எப்படிப் போகின்றது?  ( Innumoruvan )

நன்றி

நியானி (யாழ் இணையம் சார்பாக)

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.