Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eBay Kleinanzeigen ist jetzt Kleinanzeigen.
அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏
 
எனது இதயத்தை இயக்குவதில் பிரதான பங்குவகிக்கும் இரத்தக் குழாய்யொன்று இயங்கமறுத்து என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர முயன்றதைக் கண்டறிந்த வைத்தியர் எனது நெஞ்சை வெட்டிப்பிளந்து  அந்தக் குழாய்வழியை மாற்றியமைக்க 5 மணித்தியாலங்கள் சென்றதாம், அதன்பின்பு இருதயம் தடையின்றி இயங்குவதற்காக நெஞ்சில் ‘மின்கலம் ஒன்றைப் பொருத்தும்போது இன்னொரு குழாயில் இரத்தம் கசிவது கண்டு அதனைச் சரிசெய்யாது விட்டால் இவருடைய வாழ்க்கை இன்னமும் 11நாட்களே என்று வைத்தியர் தெரிவித்ததால் வெட்டித் தைத்த இடத்தை மீண்டும் வெட்டி மேலும் 4 மணித்தியாலங்கள் சிகிச்சை நடைபெற்றதாம். கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. 
“செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து  சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால்  வந்தநிலை இது.

கள உறவுகளில் ஒருவரான திரு குமாரசாமி அவர்களைச் சந்திக்க வழிசமைத்த என் நண்பர் தமிழ்சிறீ அவர்களுக்கு என்நன்றிகள்.🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள்   Panch . மறுவாழ்வு எடுத்துள்ளீர்கள். உங்கள் சந்திப்பு பற்றி நீங்களும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா!  உங்களை மீண்டும் யாழ்கள மேடையில் சந்திப்பதில் அலைகடல் போல் மிக்க மகிழ்சி அடைகின்றேன் ஐயா

கருத்துக்கள் எழுதாவிட்டாலும் யாழ் களத்தோடு இணைந்திருங்கள். அதுவே எமக்கு பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்+

தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்

வணக்கம் பாஞ்ச்.

நீண்ட காலத்துக்குப் பின் உங்களைக் காண்பது மிகவும் சந்தோசம்.

தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏

நீண்ட காலத்துக்கு பின் கண்டதில் சந்தோசம் .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாஞ்ச்…! மீண்டும் கண்டது மிகவும் மகிழ்ச்சி..! தொடர்ந்தும் எம்முடன் பயணியுங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ பாஞ்ச் ஐயா, தொடருங்கோ தொடர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, மீண்டும் யாழ் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி

பாஞ்ச், மீண்டும் நலமுடன் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-willkommen-welcome-bild-0054.  animiertes-willkommen-welcome-bild-0131.   animiertes-willkommen-welcome-bild-0151.

அண்ணளவாக.... இரண்டு வருடத்தின் பின், 
@Paanch அண்ணையை animiertes-gefuehl-smilies-bild-0001.gif யாழ்களத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி. ❤️

அவருடன்  வாரத்தில்... குறைந்தது  இரண்டு முறையாவது வேறுவழிகளில் தொடர்பில் இருந்த போதும்....  யாழ்களத்தில் அவரின் எழுத்தை வாசித்த போது உண்மையிலேயே ஆனந்த பரவசம் அடைந்தேன். 😍

அவரை எப்படியும் அடுத்த சில நாட்களில் யாழிற்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன் என வேறு ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தேன். அதன்  படி அவர் மீண்டும் வந்தது இனம் புரியாத உச்ச மகிழ்ச்சி. 🥰

பாஞ்ச் அண்ணை மீண்டும் யாழ்.களத்தில் இணைவதற்கு  சில சிரமங்களும், தடங்கல்களும் இருந்த போது அதனை நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்கிய  @மோகன் அண்ணா, @இணையவன், @நிழலி,  @ஈழப்பிரியன், @குமாரசாமி  அண்ணா  ஆகியோருக்கும்... அவரை மீண்டும் காண ஆவலுடன் இருந்த யாழ். உறவுகளுக்கும் மிக்க நன்றி. 🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாஞ்ச் .......என்றும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்........!

தொடர்ந்தும் யாழில் இணைந்திருங்கள்........ மிகவும் முயற்சி எடுத்து உங்களை இங்கு அழைத்து வந்த சிறியருக்கும் நன்றி........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் ஐயாவை மீண்டும் யாழில் காண்பது சந்தோஷம்😀

அட்டகாசமான எழுத்து / மொழி நடையுடன் மீண்டும் வருகை தந்த பாஞ்ச் அண்ணாவை மனசார வாழ்த்தி வரவேற்கின்றேன்.


தொடர்ந்து இணைந்து இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்..

போர்க்களம் மாறலாம் போர்களதான் மாறுமா…?

சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பீனிக்ஸ்போல எழுந்து வந்திருக்கும் பாஞ் அண்ணா என்றும் இதே வைத்தியர்கள் தந்த மறு ஆரோக்கியத்தை பேணி காக்கவேண்டும்.. நீடுழி நலமுடன் வாழ சந்தோசமாக வாழ்த்துகிறேன்.. யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாஞ்ச் ஐயா அவர்கள் சமூகநல விடயங்களில் மூத்தவர்.
நான்  அவர்களை ஒரு கொண்டாட்டத்தில் நேரில் சந்தித்த போது அங்கிருந்த சபையின் பலர் தேடிவந்து சுகம் விசாரித்து மரியாதை கொடுத்தார்கள். அங்கே அவரைப்பற்றி விசாரித்த போது....அவரின் சமூக நல விடயங்கள் சொல்லிலடங்காது என ஊகித்துக்கொண்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாஞ் அண்ணா 

உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட சிகிச்சையில் மூலம் நீங்கள் சுகம் பெற்றதும், உங்களை கண்டதும் மகிழ்ச்சி.

On 29/5/2024 at 23:37, Paanch said:

என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை.

கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி

😄 இரசித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

இன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏

மீண்டும் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. யாழுக்கு   வந்தால் பாதி   வருத்தம் போய்விடும். டாகடர் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து நீண்டகாலம்   வாழ இறைவனை வேண்டுகிறேன் தொடர்ந்து இணைந்து இருங்கள்  .

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. 
“செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து  சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால்  வந்தநிலை இது.

இது யாராலும் முடியாதது.....உயிராபத்து வேதனையிலும் ..உங்கள் உணர்வை பல கோடிமுறை மதிக்கின்றேன்...காலன் ஒருமுறை வந்து நல்ம் விசாரித்துவிட்டுச் சென்று விட்டான்.. இனி அச்சமின்றி வாழுங்கள்... உங்கள் பக்கமே இறைவன் இருப்பான்..வாருங்கள் .. யாழை மீட்டுங்கள் .. அனைவரும் சந்தோசமாக இருப்போம்..

 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டு வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.🙏

தங்களை நேரில் சந்தித்ததில் பல மடங்கு மகிழ்ச்சி.

கடல் கடந்த தேசத்தில் இனிய உறவாக, அண்ணனாக தங்களை கிடைக்க வழி சமைத்த யாழ்களத்திற்கும் நன்றி.😍

தாங்கள் என்றும் நலமுடன் நீடூழி வாழ வேண்டுதல்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்  அண்ணா மீண்டுவந்தது பெருமகிழ்ச்சி.🙏

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாஞ்ச் ஐயா.

நலமுடன் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி.

இணைந்திருங்கள்🙏.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.