வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5788 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர். அந்த வகையில் தற்போது கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வ…
-
- 469 replies
- 32.1k views
- 3 followers
-
-
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.தொடர் சுவிசிலை சுரிச்மானிலத்திற்கு பக்கத்தில் ஒரு இடம் டெல்ரி கோன். தமிழ் பெண் ஊரில் சாவகச்சேரி பிறப்பிடம். சுவிஸ்காரரை திருமணம் செய்திருக்கிறார்.இவர் யெகோவாவின் சாட்சிகள் மதத்தின் போதகர். இதென்ன பெரிய விசயம் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்கிது. அவரின் போதனையில் மண்டை கழுவப்பட்டு போன பல அப்பாவி தமிழ்குடும்பங்கள் அந்த மதத்தை உண்மையா நம்பி அவரின் போதனையின்படி பைபிளும்கையுமா செபித்தபடி வீட்டிலை வீட்டிலை சினிமா பாட்டு கேக்கிறேல்லை படம்பாக்கிறேல்லை ஏன் ரீ வி யேவீட்டிலை இல்லை மது புகை பிடிக்கும் பழக்கம் இல்லை (இது நல்ல விடயம்தான்) ஆனா அவையின்ரை வீட்டிலை சினிமா படம்பாப்பினம் பாட்டு கேப்பினம் அந்த பெண்மணி பியர் அடிச்சிட்டு பாட்டுக்கு ஆடுவா. வெள…
-
- 468 replies
- 73.3k views
-
-
டொராண்டோவில் இன்று இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday ) இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன் விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து
-
- 427 replies
- 47.9k views
-
-
கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். ஒண்டியாக டீ ஆத்த விடாமல் அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம். நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள…
-
- 346 replies
- 27k views
-
-
பல இணைப்புகள் தொடர்ச்சியாக இணைக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் மிகச் சில பிந்திய இணைப்புகள்: 1.இங்கும் பதியுங்கள் இது கனடிய / ரொரண்டோ பத்திரிகை. ஏன் தமிழ் மக்கள் இங்கு கவனயீர்ப்பு செய்ய வேண்டும் எனவும், கனடா ஏன் இதில் தலையிட வேண்டும் எனவும் பலர் பதில் கேள்வி கேட்கின்றனர். புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தான் கனடா அவர்களை தடை செய்தது என்றும் அதனால் தான் இலங்கை பயங்கரவாத அரசு பேச்சுவார்த்தையையும் யுத்த நிறுத்ததினையும் கைவிட்டு போரிற்கு சென்றது என்றும் நாம் அவர்களுக்கு பதில் எழுத வேண்டும். கனடாவின் கைகளிலும் தமிழ் மக்களின் இரத்ததின் கறை உள்ளது என்பதை தெளிவு படுத்துவோம் 1. Where are the images of horror from Sri Lanka? அழுத்துக …
-
- 338 replies
- 46k views
-
-
இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இம்ம
-
- 278 replies
- 40.9k views
-
-
எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும் குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர. நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும். பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிகமாக வருமே ........ ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!
-
- 277 replies
- 41.5k views
- 2 followers
-
-
டொரன்டோ: இசைஞானி இளையராஜா கனடாவில் நடத்தவிருக்கும் கச்சேரியைப் புறக்கணிக்குமாறு கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை: எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே! தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம். எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதா…
-
- 248 replies
- 19.9k views
-
-
-
http://www.nitharsanam.com/?art=15470 நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது" சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை. ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதை…
-
- 222 replies
- 42.7k views
-
-
எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன். சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்து…
-
- 219 replies
- 16.6k views
-
-
"தேவன் வரப் போகின்றார், "தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", ";இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்று தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம். சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி ச…
-
- 217 replies
- 23.3k views
-
-
-
[size=4]பல்வேறு எதிர்ப்புக்கள் இருந்தாலும் இசைஞானி இளையராஜா கனடா வந்து சேர்ந்துள்ளார், அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.[/size] [size=4]ஒரு ரசிகன் இருந்தாலே போதும் நான் எனது முழு இசை நிகழ்ச்சியையும் நடாத்துவேன் என்று கூறியுள்ளார்.[/size] [size=4]கனடா ஊடகங்களுக்காக ஒரு ஊடக சந்திப்பையும் அவர் நடாத்தியுள்ளார், அத்தருணம் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே திருப்பத் திருப்ப பலரும் கேட்பதைக் காண முடிந்தது.[/size] [size=4]எல்லா துன்பங்களுக்கும் தீர்வாக இருக்கும் இசை என்னிடம் உண்டு என்று அவர் கூறினார்.[/size] [size=4]http://www.alaikal.com/news/?p=116181[/size]
-
- 189 replies
- 15.8k views
-
-
காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட என்னுடைய அனுபவப்பகிர்வுகளை சின்னச் சின்ன கற்பனையூட்டி உங்களுடன் பகிர்கின்றேன். சில சமயங்களில் வெளிப்படையாக எழுத விளையும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் அல்லது பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல் அமைந்துவிடும். இணையவெளியில் இறங்கியிருக்கிறேன். எழுதும் ஆளுமையும்…
-
- 187 replies
- 22k views
-
-
இது தேவையா? புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியச் சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஞ்ஞான யுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சுூழ்நிலையில் இந்தச் சாமத்தியச் சடங்குகள் அவசியந் தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்ற தான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறை…
-
- 184 replies
- 17.5k views
-
-
-
பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை. இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது. இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இரு…
-
-
- 179 replies
- 8.3k views
- 1 follower
-
-
நான் இலங்கையில் இருக்கும் போது, என் உறவினன் ஒருவன் UK ல் பெட்ரோல் செட் மேனேஜர் ஆக இருக்கிறான் என கேக்கும்போது அவனை உடனே என் மனம் இலங்கையில் உள்ள ஒரு வங்கி மேனேஜர் உடன் ஒப்பிட்டு பார்த்து அவன் மீது ஒரு வகை பொறுமை கொள்கிறேன். நான் அப்போது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு இருந்தேன். அவனுக்கு இரண்டு வயது தான் கூட. அவன் இலங்கையில் இருக்கும் போது படிப்பில் ஒரு மட்டமானவன் தான். எனக்கு வியப்பு. எப்படி இவனால் ஒரு மேனேஜர் ஆக முடிந்தது. இவன் தான் காதலித்த ஒரு பெண்ணை லவ் பண்ணி கலியாணம் கட்டியும் விட்டான். அவள் அவனை இலங்கையில் திரும்பியும் பார்க்கவில்லை. அவள் அவனை விட படிக்க கூடியவள். அவள் படித்து பல்கலைக்கழகம் போக அவன் ஏஜென்ட் மூலம் UK போட்டான். அங்க கிரேடுட் காட் போட்டு ஒரு பெ…
-
- 175 replies
- 18.6k views
-
-
விடைபெறக் காத்திருக்கிறேன்! - புஷ்பராஜா நன்றி: ஆனந்த விகடன் எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும் இளம்பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புஷ்பராஜா. ஈ…
-
- 173 replies
- 19.1k views
-
-
-
எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான். எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே. ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????
-
- 168 replies
- 21.8k views
- 1 follower
-
-
பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப…
-
- 167 replies
- 22.2k views
-
-
சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும் நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா? திரும்பும் மனநிலையில் அவர்கள் இல்லை.ஐரோப்பிய கனேடிய வாழ்க்கை தரும் செளகரியங்கள் ஈழத்தில் கிடைக்காது. வாழ்க்கை செளகரியம் மட்டுமல்ல! அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பா மற்றும் கனடாவில் அரசியல் ஜனநாயகம் பெண்ணுரிமை போன்ற அருமையான சூழல் நிலவுகிறது. ஈழத்திலோ தமிழகத்திலோ அவையெல்லாம் இன்னும் ஏட்டளவில் கூட வரவில்ல…
-
- 165 replies
- 14.1k views
-
-
வணக்க(ம்) உறவுகளே 🙏 நாம் எல்லாம் தமிழீழ மண்ணில் பிறந்து புலம் பெயர் நாட்டில் வாழுகிறோம் , இப்படி ஒரு திரி யாழ் கள உறவுகள் இதற்கு முதல் திறந்தினம்மோ தெரியாது , நேரம் இருக்கும் போதெல்லாம் யாழ் கள உறவுகள் எழுதும் ஆக்கங்களை வாசிப்பேன் , 12வருடத்துக்கு முதல் பழைய யாழ் கள உறவுகள் எழுதினதுகளையும் வாசிப்பேன் 💪🙏 சின்னனில் எம் முன்னோர்கள் எமக்கு சொல்லி தந்த பல நூறு நல்ல விடையங்களை மற்றும் எம் கண்ணால் கண்ட நல்ல நிகழ்வுகளை நாம் ஒரு போதும் மறக்கப் போரதும் இல்ல , தமிழீழத்தில் திருமண நிகழ்வில் இருந்து சாமத்திய வீடு பிறந்த நாள் நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு இருப்போம் , சிறு வயதில் நான் கண…
-
- 161 replies
- 13.2k views
- 2 followers
-