Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்கள் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் 

  • Replies 82
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் அக்கா..... 
ஈழ மண்ணின் போராட்ட வரலாற்றில் வீர மங்கையாக நீங்கள் நிரந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை...,

கால தேவன் வென்று விட்டான்,

கயவன் அவன்..!

வெறும் தூல உடலைத் தானே,

அவனால் தொட முடிந்தது?

உனது உயிர்ப்பூவும்,

உன்னத நினைவுகளும்,

எம் மண்ணோடும்,,.

எம் இதயங்களோடும்,

என்றும் வாழ்ந்திருக்கும்!

மறக்குடியில் உதித்தவளே..,

விழுப்புண் ஏந்திய,

வீர காவியம் உன்னது...!

வீர வணக்கங்கள்..!,

 

 

கண்ணீர் அஞ்சலிகள் ...!!!

  • கருத்துக்கள உறவுகள்

தர்மத்தின் வழி உரிமைக்காக இறுதி வரை உறுதியோடு போராடிய போராளிகள் எவரும்.. சாவதில்லை. அவர்களின் உடல்கள் விதைக்கப்பட்டாலும்.. நினைவுகள் என்றும் மக்கள் மனங்களில் வாழும்.

வீரவணக்கமும் கண்ணீரஞ்சலியும் அக்கா. 

Edited by nedukkalapoovan

தமிழினி ... பலதுகளை இங்கு எழுத விரும்பவில்லை ...

ஆனால் ..

.. தமிழினியும் புற்றுநோயினால் இறந்ததாக செய்தி!! ... இவைகள் எமக்கு முள்ளிவாய்க்கால் மனிதகுல அழிவிற்கு முன்னர் ... ஏற்பட்ட யுத்தநிறுத்தம் தந்த பரிசு!! .. புற்றுநோய், இதயக்கோளாறு, மட்டுமல்ல வேறு சில வருத்தங்களும்!! 

உலக வரலாறும் சொல்கிறது ... யாசீர் அரபாத் உட்பட பலர் 

எம்மில் .. எம்மாசான் பாலசிங்கம், புறநாறுற்று வீரர்களை வென்ற தளபதி பால்ராஜ் உடபட பலர்!! தமிழினி மட்டுமல்ல இன்னும் பல போராளிகள் பாதிக்கப்பட்டுள்ளனராம்!

... யாரை நோவது?

வீர வணக்கங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தானாக வந்த நோயல்ல என்பதுவே எனது எண்ணமும்.!

தனது வாழ்வை இன விடுதலைக்கு அர்ப்பணித்து உயிர்துறந்த மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கு அக வணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராளியாக வாழ்வது என்பது அர்ப்பணிப்பான வாழ்வை வரிந்துகட்டிக்கொள்ளுதல் என்பதாகும், இது எவருக்கும் ஒத்துவருவதில்லை, காரணம் சூழல் அவர்களை மாற்றியமைத்துவிடும், 

தமிழினி என் தங்கையே நீ அந்த ரகமில்லை, எப்போது எமது ஒரு சிறு உதவியையும் ஏற்காது எமது பச்சாதாபங்களையெல்லாம் உதறித்தள்ளினாயோ அன்றே நீ விண்ணுயர உயர்ந்துவிட்டாய், இதிலிருந்து ஒரு செய்தியையும் எமக்குச் சொல்லியுள்ளாய் கண்ணீர்விட்டல்ல செந்நீர் விட்டு வளர்த்த விடுதலைபயிரைக் கானலுக்கு இரையாக்கிய சமூகத்தின் சின்ன உதவியும் எனக்குத்தேவையெல்லை என,

உன் அருகிருந்து சமராடிய வீரன் ஒருவன் என் தேசத்தில் இப்போது ஆட்டொ ஓட்டுகிறான், அவன் என்னைக் கேட்டான் இந்தப் பாழ்பட்ட தமிழ்ச்சமுதாயத்துக்காகவா நான் களமாடினேன் ஆயிரமாயிரம் போராளிகள் களச்சவடைந்தார்கள் எண்ணுகிறேன் என்கிறான், 

நீ உன் நீண்ட மௌனத்தால் அதைச்சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாய். ஆனால் அப்போதும் ஒரு போராளியாக, 

இன்னமும் காலமிருக்கு இவைகள் அனைத்தும் கடந்து நீ எழுதிய கவி வரிகள்போல் எம்வாழ்வில் வசந்தம்வரும் அப்போது நீ வா அதுவரை பொறுத்திரு 

இப்போது போய்.

வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

'பதிவுகளி'ன் கண்ணீர் அஞ்சலி: தமிழினி மறைவு!

நண்பர் கற்சுறா முகநூலில் அனுப்பியிருந்த தமிழினியின் மறைவு பற்றி அனுப்பியிருந்த தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சிறிது நாள்களுக்கு முன்னர் கூட எழுத்தாளர் தாமரைச்செல்வி பற்றி நான் எழுதிய முகநூல் பதிவினைத்தனது முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன்  பின்வருமாறும் எழுதியிருந்தார்:

"அக்காவின் எழுத்துக்களை சிறு வயதிலிருந்தே நான் ஆர்வத்துடனும். ஆசையுடனும் வாசிப்பதுண்டு. வளர்ந்த பின்பும் அக்காவின் வன்னி மண்ணினதும் அதன் மக்களின் இயல்புகளையும் பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியவை அக்காவின் எழுத்துக்கள் தான். அவை பற்றி அருமையான குறிப்பொன்றைத் தந்தமைக்கு சகோதரன் கிரிதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி."

தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். பதிவுகள் இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். பதிவுகள் இணைய இதழ் மேல் மிகுந்த மதிப்பு கொண்டிருந்ததோடு அல்லாமல் தன் முகநூல் பக்கத்தில் பதிவுகளில் அவரது படைப்புகள் பற்றி வெளியாகியுள்ள குறிப்புகளை பிரசுரிப்பதுடன் அதற்காக நன்றியும் கூறியிருப்பார். அவர் நோய் வாய்ப்பட்டிருந்த விடயம் அவரது மறைவின் பின்னர்தான் தெரிந்தது.

அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்திருக்கின்றது. ஆனால் அவர் எழுதிய அனைத்துமே தமிழ் இலக்கியப்பரப்பில் முக்கியமானவையாக விளங்கப்போகின்றன என்பது மட்டும் நிச்சயம். பதிவுகளுக்கு அவர் தனது படைப்புகளை அனுப்புவது சம்பந்தமாக என்னுடன் முகநூல் வழியாகத்தொடர்ப்பு கொண்டிருந்தபோது ஒரு முறை 'வணக்கம் தமிழினி, உங்கள் படைப்புகளை 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரம் செய்வதையிட்டு தங்களுக்கு ஆட்சேபணையேதுமுண்டா?'  என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் 'வணக்கம் கிரிதரன் அண்ணா எனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. உங்களது விமர்சனங்கள் எனக்கு உற்சாகமளிப்பவை நன்றி.' என்று பதிலிறுத்திருந்தார். அதற்கு நான் 'நன்றி தமிழினி. உங்கள் எழுத்தில் சிறப்புண்டு. தொடர்ந்து எழுதுங்கள்; வாசிக்கக்காத்திருக்கின்றோம்.' என்று எழுதியபோது அவர் 'மிகவும் நன்றி, நிறைய விடயங்களை எழுதுவதற்கு விருப்பமுண்டு, உடல்நிலையும் காலமும் இடமளித்தால் நிச்சயம் எழுதுவேன்.' என்று எழுதியிருந்தார். அப்பொழுது கூட அவர் தன் உடல் நிலை பற்றி எழுதியதைப்பொதுவாக எழுதியதாகக் கருதிப் பெரிதாகக் கவனத்திலெடுக்கவில்லை. ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது அதன் பின்னாலிருந்த யதார்த்தம்.

அவரது திடீர் மறைவு 'பதிவுகள்' இதழைப்பொறுத்தவரையில் துயரகரமானது. அண்மைக்காலமாகப் 'பதிவுகள்' இதழில் தன் படைப்புகளால் வளம் சேர்த்த படைப்பாளிகளிலொருவர் அவர். அந்த வகையில் பதிவுகள் தன் படைப்பாளிகளிலொருவரை இழந்து விட்டதால் ஏற்பட்ட துயரம் அது. தனிப்பட்டரீதியில் என்னைத்தன் சகோதரனாகக்கருதி , அண்ணா என்று பாசமுடன் விளித்த சகோதரியொருவரின் இழப்பு. அந்த வகையில் தனிப்பட்ட இழப்பாகவும் கருதுகின்றேன். அடுத்தது அவரது எழுத்துகள் என்னைக் கவர்ந்தவை. தன் அனுபவங்களை எந்தவிதப் பிரச்சாரங்களுமற்றுப் பதிவு செய்யும் அவரது எழுத்து நடை என்னைக் கவர்ந்தது. அந்த வகையில் எனக்குப் பிடித்த சக எழுத்தாளர் ஒருவரின் இழப்பு.

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் அவர்களது மதிப்புக்குரிய ஒருவர் அவர். அவரது முகநூல் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களைப்பார்த்தால் அது தெரியும். அந்த வகையில் அனைவருக்குமே தமிழினியின் இழப்பு எதிர்பாராதது. துயரம் தருவது.

ஒரு பதிவுக்காக முகநூலில் அவர் தனது படைப்புகள் சம்பந்தமாக என்னுடன் தொடர்பு கொண்டபோது பரிமாறிக்கொண்ட கருத்துகளை, தனது முகநூல் பக்கத்தில் பிரசுரித்திருந்த கருத்துகளைக்கீழே தருகின்றேன்:

1. அண்மையில் தலைப்பில்லாமல் எழுதியிருந்த அவரது கவிதைக்கு 'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்...' என்று தலைப்பிட்டுப் பிரசுரித்திருந்தேன். அதற்காகத்தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்த நன்றியே கீழுள்ளது.

Thamilini Jayakumaran September 20 at 10:34am : எனது கவிதைக்கு நல்லதொரு தலைப்பைத் தந்த பதிவுகள் ஆசிரியர் திரு, வ,ந,கிரிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

இது போல் அவரது 'மழைக்கால இரவு' என்னும் சிறுகதையினைப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்து எழுதிய விமர்சனக்குறிப்புகள் பற்றித்தனது முகநூல் பக்கத்தில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருந்தார்:

Thamilini Jayakumaran shared your photo. May 30 : ‘மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார். உண்மையில் பாடசாலை நாட்களிலிருந்தே எனக்கு கதை எழுதுவது விருப்பமானது. கடந்த காலங்களிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய கதைகளை வெவ்வேறு பெயர்களில் எழுதியிருக்கிறேன். இப்போது அவை பதிவாக இல்லை. எப்படியிருப்பினும் ஒரு அடை மழைக்கால இரவில் நடந்த யுத்தம் பற்றிய கதையை ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தது மட்டுமன்றி, சிறந்த விமர்சனத்தையும் முன் வைத்த அவரது இலக்கிய பற்றுக்கும் சேவைக்கும், புதிய படைப்பாளிகளை உருவாக்குவதில் காட்டும் ஆர்வத்திற்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றி.

மேலும் பதிவுகளில் வெளியான சிறுகதைக்குரிய இணைப்பினைத் தனது முகநூல் பக்கத்தில் பிரசுரித்துப்பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:

Thamilini Jayakumaran May 21: ‘மழைக்கால இரவு‘ என்ற எனது சிறுகதையை நல்லதொரு அறிமுகத்துடன் பதிவுகள் இணைய இதழில் பிரசுரம் செய்த ஆசிரியர் வ.ந. கிரிதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். அத்துடன் இந்த சிறுகதை பற்றிய கருத்துக்களையும் நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2932%3A2015-10-18-04-36-17&catid=2%3A2011-02-25-12-52-49&Itemid=19

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி அக்கா அவர்களுக்கு  வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்...

தமிழீழம் என்றும் உங்களை மறவாது....

புலம்பெயர் தேசங்களுக்கு வந்த போது   உங்கள் பணியை மெச்சினோம், தலைவர்   காட்டலில் கைதேர்ந்த    அரசியல் வித்தகி, தமிழ்ச்செல்வன் அண்ணாவோடு   நிகராக மதிக்கப்பட்ட அன்புச்சகோதரி.

உங்கள் இடுப்பு பட்டியும் ,உயரமும்,   இராணுவ மிடுக்கும் தமிழ்ப்பெண்களை  இப்படியும் எங்களுக்குள் இருக்கிறார்களா என்று   வியக்க வைத்தது.

வீர வணக்கம் சகோதரி  . வீராங்கனையாக வாழ்கின்றாய்.

Edited by நேசன்

வீர வணக்கம் சகோதரி

எனக்கு, தமிழீழ போராட்டத்தின் மகளிர் போராளிகள் என்றால் முதலில் ஞாபகம் வருவது தமிழினிதான்.

May 2005 இல், சகோதரியை மிக அருகில் கண்டிருக்கிறேன்; கடந்த 6 வருடங்களில் சகோதரியை பற்றி பலமுறை நினைத்து/தேடி பார்த்ததுண்டு.

நான் என்றும் உங்களை மறவேன் ..   

வீர வணக்கம் சகோதரி

 

உனை நீ அறி

 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

தங்கையே! உனது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.